You are on page 1of 3

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தனியன், திருப்பாவை & காயத்ரி


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1.)காயத்ரி மந்த்ரத்தில் “வயம்” என்ற எழுவாய் ஏனில்லை ?
2.)திருப்பாவையில் 2 ஆம் பாசுரத்தில் “நாங்கள்” என்ற எழுவாயினை ஸ்ரீநாச்சியார் விட்டுவிட்டார். ஆனால் 3
ஆம் பாசுரத்தில் மட்டும் விசேஷமாக “நாங்கள் நம்பாவைக்கு” என்று சேர்த்து பாடுகிறாரே ?
3.) கூரேஶர் தனியனான “ஸ்ரீவத்ஸசிஹ்ந” ஸ்லோகத்திலும் “வயம்(நாங்கள்)” என்ற எழுவாய் ஏனில்லை ?
4.)ஸ்ரீமுதலியாண்டான் ஸ்வாமி தனியனான “பாதுகே யதிராஜஸ்ய” ஸ்லோகத்தில் “அஹம்(அடியேன்)”
எனும் எழுவாய் உண்டு. ஆனால் உடையவர் தனியனான “யோநித்ய” ஸ்லோகத்தில் “அஹம்(அடியேன்)” என்ற
எழுவாய் ஏனில்லை ?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அத்யாஸம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1.)ரிக்வேத காலமே மிகவும் பழமையானதா ?
2.) ரிக்வேத காலம், உபநிஷத காலம், புராண காலம் என்று பிரிப்பது சரிதானா ?
3.)ரிக்வேதத்தில் பிரதிபெயர் சொற்கள் இல்லையா ?
4.)ரிக்வேத பாசுரங்கள் மலைவாழ்-காட்டுவாசி காவடி-சிந்து போன்ற பாடல்களா ?
5.)சந்தஸ்(யாப்பு) என்பது தமிழ்-வடமொழி அல்லாத மற்ற மொழிகளில் உண்டா ?
6.)செய்யுள் வடிவங்களில் ப்ரதிபெயர் எழுவாய்கள் தேவையில்லை? ஏன் ?
7.)வேற்றுமை உருபுகள் ஏன் தேவைப்படுகின்றன ?
8)சந்தஸ் பற்றி ஐதரேய உபநிஷதம் தரும் விளக்கம் யாது?
#####################/
நித்ய திருவாராதன காலங்களில் சேவிப்பது “இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம்” என்ற
அயோத்யாகாண்ட ஸ்லோகம் ஆகும். இது -அநுஷ்டுப் சந்தஸ் (அளவடி -4 வரி)
த்ரிகால சந்த்யைகளில் ஜபம் செய்யும் காயத்ரியில் வருவது “பர்கோ தேவஸ்ய தீமஹி”.-காயத்ரி சந்தஸ்(இது
சிந்தடி-3 வரி)
திருமண் தரிக்கும் வேளையில் சேவிக்கும் கூரேஶர் தனியனில் “ஶ்ரீவத்ஸ சிஹ்ன மிஶ்ரேப்ய நம உக்திம்
அதீமஹி”( இது அளவடி-4 வரி) என்று வரும்.

மேற்காணும் ஸ்லோகங்களில் ஒரு ஒற்றுமையை காணலாம். ப்ரதிபெயர் எழுவாய் இருக்காது. ஏன் ?


அவை சந்தஸ்(யாப்பு) என்னும் வகையை சேர்ந்தவை.
அயோத்யாகாண்ட ஸ்லோகத்தில் இச்சாம: (விரும்புகிறோம்) என்ற வினைச்சொல்லிற்கு வயம் (நாங்கள்)
என்பது எழுவாய்.
காயத்ரியில் தீமஹி(தியானிக்கிறோம்) என்ற வினைச்சொல்லிற்கு வயம்(நாங்கள்) என்பது எழுவாய்.
கூரேஶர் தனியனில் தீமஹி(தியானிக்கிறோம்) என்ற வினைச்சொல்லிற்கு வயம்(நாங்கள்) என்பது எழுவாய்.

யாப்பினைக் கருதி இந்த எழுவாய்கள் இடம்பெறாது. மீறி எழுவாய்களும் இடம்பெற்றால் அக்ஷரங்களும்


கூடிவிடும். ஸ்லோகமும் அதன் மந்த்ரசக்தி மற்றும் இசைத்திறம் ஆகியவற்றை இழந்துபோகும். முடிந்தால்
ப்ரதிபெயர் எழுவாய் இடம்பெறலாம். இல்லையெனில் விட்டுவிடலாம். இது கட்டாயம் இல்லை.

மேக்ஸ்முல்லர் என்னும் ஜெர்மானிய துபாஷை ஆங்கிலேயர்கள் வேதத்தை மொழிபெயர்க்க பணித்தார்கள்.


இப்படி பல மேலைநாட்டு வக்கிரர்கள் , மதம் மாற்றிகள், பாதிரிகள் தீய உள்நோக்கத்துடன் வேதங்களின்
மாண்பினை வேண்டுமென்றே கெடுக்கச் சொல்லி ஆங்கிலேய அரசு பணம் கொடுத்து நியமித்தது.
அவர்களும் காரியத்தை கச்சிதமாக முடித்தார்கள்.
அதாவது “சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேதம் எழுதப்பட்டது. அதுவும் ரிக்வேதம் முதலில்
எழுதப்பட்டது. அது ரிக்வேத காலமாகும். பின்னர் யஜுர் ஸாமம், அதர்வண வேதங்கள் எழுதப்பட்டன. பின்னர்
ப்ராஹ்மணங்களும் ஆரண்யகங்களும் எழுதப்பட்டன. பிறகு உபநிஷதங்கள் எழுதப்பட்டன. இறுதியாக
புராணங்களும் இதிஹாஸங்களும் எழுதப்பட்டன.” என்று வடிகட்டிய பொய்யுரை எழுதினர். உலகமும்
அப்படித்தான் நம்புகிறது.
இதற்கு காரணமாக மேக்ஸ்முல்லர் போன்றோர் சொல்வது யாதெனின்
“ரிக்வேதத்தில் தேவையான இடங்களில் பிரதிபெயர் சொற்கள் =எழுவாய் (Subject – Personal Pronomen)
இடம்பெறவில்லை” என்பது தான். ஆதிவாசிகளிமிருந்து மொழி தோன்றியது. அவர்கள் சிறிது சிறிதாக
நாகரீகம் அடைந்தனர். கலாசாரத்தில் படிப்படியாக மேம்பட்டனர். பின்னர் தான் அவர்கள் பயன்படுத்திய
மொழியில் பிரதிபெயர் எழுவாய் உண்டானதாக சொல்கின்றனர்.
ஆனால் உண்மை அதுவல்ல ! ஆங்கிலம்-ஜெர்மானியம்-டச்சு-ஸ்வீடன்-நார்வே என்னும் மொழிகள் சித்தி-
பெரியம்மா குடும்பத்து மொழிகள் (ஓரே பெருங்குடும்பம்). மேலும் பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளில்
உரைநடை-செய்யுள் என்ற சந்தஸ் வகைகள் இல்லை. ஆனால் உலகிலேயே தமிழ்-வடமொழியில் தான்
செய்யுள்-உரைநடை என்று தனித்தனியான சந்தஸ்-யாப்பு லக்ஷணங்கள் உள்ளன.
ரிக்வேதத்தில் பெரும்பாலும் 3 அடி சிந்து பாடல் வகைகள். இதனை காயத்ரி சந்தஸ் என்பர்.
2 அடியை குறளடி என்பர். 3 அடியை சிந்தடி என்பர். 4 அடியினை அளவடி என்பர். காயத்ரி சந்தஸில் Strictly
ஒரு அடிக்கு 8 அக்ஷரங்கள் தான். இதனை மறைத்து அவை என்னமோ பண்பாடில்லாத நாட்டுப்புற சிந்து-
காவடி பாடல்கள் என்கின்றனர். அவ்வகை ரிக்குகள் மலைவாழ்-காட்டுவாசி பாடல்கள் என்று கதைகட்டி
விடுகின்றனர்.

இது உண்மையல்ல. ஒவ்வொரு சந்தஸ் ஒவ்வொரு தேவதைக்கானது. அந்தந்த தேவதைக்கு அந்தந்த


பாசுரங்களை ஓதுவது முறை. சந்தஸ்களை எழுதிய யாஸ்கர் ரிஷி பாணினி மஹரிஷியின் சகோதரர் தான்.
மொத்தம் 200 க்கும் மேற்பட்ட சந்தஸ்கள் சொல்கிறார்.
ரிக்வேதத்தின் ஐதரேய உபநிஷதம் ஒருவிளக்கம் தருகிறது.
கண், காது, வாக்கு, மனம், ப்ராணன் என்பன சம்பத்துக்கள். ப்ராணன் தன்னை ஐந்தாகப் பிரித்து தலையில்
தானே ப்ராணன் என்று அங்கிருக்கும் இந்த்ரியங்களை ஏவல் செய்கிறது. உடலின் கீழ் பாகத்தில் அபானன்
என்று காணப்படுகிறது. ஜாடராக்னி எரியும் வயிற்றில் சமானன். இதயத்தில் வியானன் என்றும் கழுத்திலே
உதானன் என்று பணிபுரிகிறது. இந்த ப்ராணனே காது, கண், வாக்கு, மனம் ஆகியவற்றிற்கு தலைவன்.
எனவே தான் எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் ஆகிறது.
ப்ராணனுக்கு வாக்கு முதலிய நான்கும் கீழ்படிந்தவை. இதற்கு உடலில் இவற்றோடும், தன் தேவதையின்
அதீனமாகி அவற்றின் தேவதைகளோடிம் சம்பந்தமுண்டு. இச்சேர்க்கை சத்தியம். ஸத்தியம் என்பதை ஸத் ,
தி, யம் என்று பிரித்தால் அம்மூன்று சொற்களுக்கும் ப்ராணன், அன்னம், ஆதித்யன் என்பார்
அதிதேவதைகள்.
வாக்கு என்பது புணைக்கயிறு. அதிலுள்ள பூட்டுக்களே வாக்கினால் ஆன பெயர்கள். அவற்றால் உலகில்
அனைத்தும் கட்டப்பட்டிருக்கும். பெயரில்லாத வஸ்து உலகில் இல்லை. இவாக்கில் அடங்கிய சந்தஸ்ஸு
ஒவ்வோர் அங்கமாயிருக்க ப்ருஹதீ என்ற சந்தஸ்ஸானது ப்ராணனாகிறது. ஆக எல்லா பிராணிகளும்
ப்ருஹதியாம் ப்ராணனாலே தரிக்கப்படுகிறது. ஆகவேதான் அந்தந்த தேவதைக்கு அந்தந்த சந்தஸ்ஸிலே
மந்த்ரங்கள் உள்ளன.
மேற்கத்திய மொழிகளில் வேற்றுமை உருபுகள் இல்லை. எனவே வினைச்சொல்லின் முன்பே எழுதுவது
எழுவாய், பின்னர் எழுதுவது பயனிலை என்றபடி ஸ்தானத்தின் முக்கியத்துவம் உண்டு.
பாரதநாட்டு மொழிகளில் தமிழ், வடமொழி இரண்டனுக்கும் உரைநடை, செய்யுள் என்று இரண்டுவிதமாக
மொழிகள் உண்டு. அதற்காக 8 வகையான வேற்றுமை உருபுகள் உண்டு. ஒரு செய்யுளிலோ அல்லது ஒரு
உரைநடையிலோ சொற்களை எப்படி மாற்றி எழுதினாலும் பொருள் மாறாது. ஆனால் மேக்ஸ்முல்லர் குடும்ப
மொழிகளில் வினைச்சொல் இரண்டாவதாக மட்டுமே எழுதவேண்டும். எழுவாய் முதலிலும் பயனிலை
பின்னுமாகத்தான் வரவேண்டும். மாற்றிவிட்டால் பொருளும் மாறிப்போகும்.
Das Kind lernt Deutsch என்றால் சிறுவன் ஜெர்மன் கற்கிறான் என்று பொருள். Deutsch lernt das Kind
என்று சொற்களை இடம் மாற்றினால் ஜெர்மன்மொழி சிறுவனை கற்கிறது என்று பொருளற்றுப்
போகும்[Sanders learn English vs English learn Sanders]. Muller isst Brot ( முல்லர் ரொட்டியை தின்றான்)
என்பதனை மாற்றி Brot isst Muller என்றெழுதினால் ரொட்டி முல்லரை தின்றது என்று கதையே
மாறிப்போகும். [Roberts eat Bread vs Bread eat Roberts] எனவே தான் மேக்ஸ்முல்லர் போன்றோர்
சொன்னதை உலகமும் நம்புகிறது.
நமது மொழிகளிலோ பால: ஸம்ஸ்க்ருதம் படதி [சிறுவன் வடமொழி கற்கிறான்] படதி பால: ஸம்ஸ்க்ருதம்
[கற்கிறான் சிறுவன் வடமொழியை] ஸம்ஸ்க்ருதம் பால: படதி [வடமொழியை சிறுவன் கற்கிறான்]
என்று எப்படி மாற்றினாலும் பொருள் மாறாது. இதுவே செய்யுள் இயற்ற தேவையான இன்றியமையாத
கட்டமைப்பு ஆகும். மேக்ஸ்முல்லர் குடும்ப மொழிகளில் இப்படி செய்யுள் இயற்ற இயலாது. மாக்ஸ்முல்லர்
இந்த முக்கியத்துவத்தினை முல்லர் மேற்கத்திய உலகிலிருந்து வசதியாக மறைத்துவிட்டார்.
இவரது மொழிக் குடும்பத்தில் வேற்றுமை உருபுச் சொற்கள் கிடையாது. ஆங்கிலத்தில் சுத்தமாக இல்லை.
ஜெர்மானியத்திலோ முதல் வேற்றுமை(Nominative Case) , ஆறாம் வேற்றுமைகள்{Genitive Case} மட்டுமே
முழுதாக உள. மற்ற வேற்றுமை உருபுகள் பெரும்பாலும் அறைகுறைதான்(Dative Case).
வடமொழியிலும் தமிழிலும் தான் nominative-முதல் வேற்றுமை, vocative-8 ஆம் விளிவேற்றுமை,
accusative-2 ஆம் வேற்றுமை, instrumental -3 ஆம் வேற்றுமை, dative-4 ஆம் வேற்றுமை, ablative- 5 ஆம்
வேற்றுமை, genitive-6 ஆம் வேற்றுமை, and locative-7 ஆம் வேற்றுமை என்று பூரணமாக உண்டு.
அதுவும் வடமொழியில் Adjective(விசேஷணங்கள்) வேற்றுமை உருபு உண்டு.

ஸ்ரந
ீ ாச்சியார் அருளிய 2 ஆம் திருப்பாவையில் 6 வினைச்சொற்கள் வந்தாலும் ஒரேயொரு நாமும் என்ற
எழுவாய் காண்கிறோம். மற்ற 5 வினைச்சொற்களுக்கும் இந்த “நாமும்” என்ற எழுவாய் அத்யாசம்
செய்துகொண்டு பொருள்கொள்வர்.
இதன் வசதி மேக்ஸ்முல்லர் குடும்ப மொழிகளுக்கு இல்லை. அவர்களுக்கு இது புரிவதும் கடினம் தான்.
உலகிலேயே தங்கள் தாய்மொழியே சிறந்தது என்ற ஈகோவும் காரணமாகலாம்.

You might also like