You are on page 1of 4

1.

பெயர்ச்சொல் ;
அ. தன்மை அடிப்படையிலானது ( காரணப்பெயர், இடுகுறிப்பெயர்)
ஆ. பயன்பாட்டுச் சூழல் அடிப்படையிலானது.

அ. சிறப்புப்பெயர் பொதுப்பெயர்

பொருள் : கரித்துண்டு, சிவா புத்தகம் , பையன்


இடம் : சுங்கைப்பட்டாணி பட்டணம்
காலம் : மார்கழி குளிர்காலம்
சினை : வெற்றிலை இலை
குணம் : அழகன் அழகு
தொழில் : விவசாயி விவசாயம்

ஆ. பயன்பாட்டுச் சூழல் அடிப்படையிலானது

i. சுட்டுப்பெயர் - இது, அந்த, அவர்கள்


ii.வினாப்பெயர் - எப்படி, எங்கு, ஏன்
iii. சாதிப்பெயர் - மீ னவர், வேளாளர், ஆசிரியர்
iv.கிளைப்பெயர் - அண்ணன், அத்தை, கன்று
v. அளவுப்பெயர் - எண்ணல் – ஒன்று, இருபது, நூறு
- நீட்டல் - அடி, அங்குலம், மீ ட்டர்
- முகத்தல் – லிட்டர், கேலன், மில்லி லிட்டர்
- எடுத்தல் - கிலோ, பவுண்டு

vi. தொகுதிப்பெயர் - தோட்டம், கூட்டம், படை, மந்தை


vii. தொகுப்புப்பெயர் - சில, பல, கொஞ்சம், அதிகம்

2. வினைச்சொல்:

செயலைக் குறிக்கும் சொல். காலம் காட்டுவதால் காலக்கிளவி எனக் குறிக்கப்படுவதும்


உண்டு.வேற்றுமை உருபு ஏற்காது.

அ. வினைமுற்று - தெரிநிலை வினைமுற்று


- குறிப்பு வினைமுற்று

ஆ. வினை எச்சம் - தெரிநிலை வினை எச்சம்


- குறிப்பு வினை எச்சம்

அ. தெரிநிலை வினைமுற்று
 திணை, பால், எண், இடம், காலம் - காட்டும்
 செய்பவன், கருவி, நிலம் செயல் - காட்டும்.
எ.கா :
வரன்
ீ சிங்கத்தைக் கொன்றான்

திணை – உயர்திணை செய்பவன் - வரன்



பால் - ஆண்பால் கருவி - வில் , அம்பு
இடம் - படர்க்கை நிலம் - வனம்
எண் - ஒருமை செயல் - கொன்றான்
காலம் - இறந்த காலம் செய்பொருள் - சிங்கம்
அ. தெரிநிலை வினைமுற்று வகைகள்

I ஏவல் வினைமுற்று
நீ வா இங்கே , நீ இங்கு வராதே ( எதிர்மறை ஏவல் )

ii. வியங்கோள் வினைமுற்று ( ஏ, ஆ, அ கொண்டு முடியும் )


வாழியவே ! ( ஏ ), ஒழிக ! ( அ )

iii. தன்வினை , பிறவினை, காரணவினை


உண்டான் , ஊட்டினான், உண்பித்தான்

iv. செய்வினை , செயப்பாட்டுவினை


சூறாவளி கிராமத்தைத் தாக்கியது ( செய்வினை )
கிராமம் சூறாவளியால் தாக்கப்பட்டது ( செயப்பாட்டு வினை )

v. உடன்பாட்டு வினை, எதிர்மறைவினை


விருந்தினர் நாளை வருவார்கள் ( உடன்பாடு )
விருந்தினர் நாளை வர மாட்டார்கள் ( எதிர்மறை )

vi. குன்றியவினை , குன்றாவினை


சேவல் காலையில் கூவும். (குன்றிய வினை )
சின்னப்பெண் ஓவியம் வரைந்தாள். ( குன்றா வினை )

vii. குறைவினை .( உண்டு , இல்லை, முடியும், தெரியும் என முடியும் வாக்கியம் )


அவள் வட்டில்
ீ இல்லை
அதன் விடை எனக்குத் தெரியும்

அ. குறிப்பு வினைமுற்று ( சிறப்புத் தன்மைகளை குறிப்பால் உணர்த்துவது )


இது பெயர்ச்சொற்களை மட்டுமே சார்ந்து வரும்

எ.கா. இவன் மலேசியன் ( இடப்பெயர் )


இவள் சிவப்பி ( பண்புப்பெயர் )
அவர்கள் கொள்ளையர்கள் ( தொழில்பெயர் )
இது கோடை ( காலப்பெயர் )

3. எச்சம்

அ. பெயரெச்சம்
 தெரிநிலைப் பெயரெச்சம் – பாடிய பாட்டு ( இறந்த காலம் )
- பாடுகிற பாட்டு ( நிகழ்காலம் )
- பாடும் பாட்டு ( எதிர்காலம் )
- பாடாத பாட்டு ( எதிர்மறைப் பெயரெச்சம் )
- பாடாப் பாட்டு ( ஈறுகெட்ட எ.ம பெ.)
-
 குறிப்புப் பெயரெச்சம் - கரிய பறவை
- பெரிய வீடு
- நல்ல பையன்
ஆ. வினையெச்சம்
 தெரிநிலை வினையெச்சம் - பார்த்து வந்தார் ( இறந்த காலம் )
எடுத்துக் கிழித்தான்
புதைந்து போனது

- செய்யக் கொடுத்தார் ( நிகழ்காலம் )


நடிக்கப் பழகினான்
தேடச் சென்றான்

- கேட்டால் தருவேன் ( எதிர்காலம்)


கூறின் தடுப்பேன்
சொன்னால் அறைவார்

- செய்யாமல் விட்டார் ( எதிர்மறை வினையெச்சம்)


பாராது சென்றாள்
அள்ளாது குறையாது

 குறிப்பு வினையெச்சம் # நன்கு பழகினான்


# இனிது பாடியது

4. அடை

(அ) பெயரடை (ஆ) வினையடை (இ) வல்லடை

(அ) பெயரடை - ஒரு பெயர்ச்சொல்லை அதன் தன்மை, வடிவம், பண்பு சேர்த்து


விவரிப்பது
எ.கா :
இருண்ட வானம்
அழகான ஓவியம்
நீண்ட பாதை
 தனிப் பெயரடை ( பிரிக்க இயலாது ) - இருண்ட வானம், அகன்ற நெற்றி
 கூட்டுப் பெயரடை (பிரிக்க இயலும் ) - அழகுடைய மங்கை (அழகு + உடைய)
அவ்வளவு துணிவு ( அ + துணிவு )

(ஆ) வினையடை – ஒரு வினைச்சொல்லை விவரிக்கும் சொல்

 தனி வினையடை - உள்ளே வந்தான்


மெல்லச் சிரித்தார்
 கூட்டு வினையடை - பலவாறாக எண்ணினேன் ( பல்வேறு + ஆக )
சுவையாய் இருந்தது (சுவை + ஆய் )

(இ) வல்லடை - ஒரு பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லை அதன்தன்மைக்கேற்ப


வன்மையாகவும் மிகைப்படுத்தியும் கூறுவது
5. இடைச்சொல்
ஒரு பெயர்ச்சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையில்
அமைந்து பொருள் தரும்.
 இடைச்சொல் நான்கு வகையாகப் பிரிக்கப்படும்

அ. நுணுக்கமான பொருள் மாறுபாடு காட்டும் இடைச்சொல் : ஓ, ஏ, உம்

யாரோ ஒருவருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் ( ஓ )

என்னிடத்தில் அறை வாங்கியவன் இவனே..! ( ஏ )

கோழைகளுக்கு ஒவ்வொரு நாளும் மரணம்தான். ( உம் )

ஆ. இலக்கணப் பொருள் மாறுபாட்டினை ஏற்படுத்தும் இடைச்சொல்

வேற்றுமை உருபுகள் - போலீஸார் திருடனை வளைத்துப் பிடித்தனர்.


- போலீஸார் திருடனுக்கு வளை விரித்தனர்
- போலீஸாரும் திருடனோடு சேர்ந்து ஓடினர்

காலங்காட்டும் இடைநிலைகள் - பார்த்தான்...பார்க்கிறான்...பார்ப்பான் : த் , க், ப்

இ. கருத்து மாறுபாட்டினை ஏற்படுத்தும் இடைச்சொல்

வினாவெழுத்து – ஆ, ஓ, எ, ஏ, யா

சுட்டெழுத்து _ அ, இ, உ

உவமை _ போல, போன்ற, என, ஆய்

இணைப்புக்கிளவி _ மேலும், அதோடு, தவிர

ஒலிகுறிப்பு _ திடீரென, சலசல,

You might also like