You are on page 1of 12

மூன்றாம் உலகப்

போர்
அத்தியாயம் 7 & 8
அத்தியாயம் 7

2
சுருக்கம்
விவசாயக் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களில் படித்த பிள்ளைகளுக்கும் படிக்காத
பெற்றோர்களுக்குமிடையே ஏற்படும் விரிசலும் ஒன்றாகும். விவசாயத்தால் ஏற்படும் துன்பங்கள்
அனைத்தும் தன்னுடன் முடிய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு விவசாயி தன்
பிள்ளைகளைப் படிக்க வைக்கிறான். ஆனால், படித்த பிள்ளைகள் பெற்றோர்களை அவமதிக்க
ஆரம்பிக்கின்றனர். அவ்வகையில், கருத்தமாயி - முத்துமணியின் கதையும் இதுவே ஆகும்.
முத்துமணி கருத்தமாயின் மூத்தமகனாவான். முத்துமணி விவரமானவன், திருகுதாளம்
பிடித்தவன், சுயநலவாதி, உடம்பு வளையாதவன் இருப்பினும் புத்தியுடையவன். பொய், திருட்டு
போன்றவற்றில் வல்லவன். முத்துமணியின் திருகுமுருகு ஆறேழு வயதில் சிங்கி விளையாட்டில்
ஆரம்பித்த ஒன்றாகும். இவ்விளையாட்டில் ஒவ்வொரு முறையும் முத்துமணிக்கே வெற்றி
கிட்டும்.

3
சுருக்கம்
ஒருநாள், எழுவனம்பட்டியிலிருந்து சிங்கி விளையாட வந்த ஒருவன் முத்துமணி விளையாட்டில்
செய்யும் சூழ்ச்சியைக் கண்டுபிடித்தான். முன்புபோல் கையில் பணமில்லாததால் வீட்டில் திருட
ஆரம்பித்தான். அம்மா உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தைத் திருடியப்பின் அவ்வுண்டியலை
மணலைக் கொண்டு நிரப்பினான். முத்துமணிக்கு இப்பொழுது பத்துப் பதிமூன்று வயது. ஒரு
நாள், கறிக் கொழம்பு வேண்டுமென்று அம்மாவை நச்சரித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது,
ஈசா ராவுத்தர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்த விருந்தாளிக்கு விருந்தளிக்க எண்ணினார்
கருத்தமாயி. பணம் போதவில்லை என்பதால் முத்துமணியை அழைத்து கசாப்புக் கடையில்
கடனுக்கு வாங்கி வர பணிப்பார். வாங்கிய கறியுடன் முத்துமணி வீடு திரும்பிக்
கொண்டிருந்தான். கறியைக் கண்டவுடன் நாக்கு ஊறியதால் ஈரல்களைப் பொறுக்கி தின்றான்.
மீதமுள்ள எலும்பையும் சிறிது கறியையும் மட்டும் அம்மாவிடம் கொடுத்தான். அதோடு அவன்
நிறுத்திக்கொள்ளவில்லை. கொழம்பு கொதிக்கும் வேளையிலேயே மீதமுள்ள கறியையும்
முத்துமணி தின்றான். இதுதான் முத்துமணி.

4
சுருக்கம்

மறுபக்கம் கருத்தமாயிக்கு விவசாயத்தில் பெரும் நஷ்டம். சோளம், கத்திரி, கரும்பு என


பலவற்றைக் கருத்தமாயி தன் நிலத்தில் நட்டார். ஆனால், எல்லா வெள்ளாமையும்
அடிவாங்கியது. எனவே, பருத்தி நடலாம் என்று கருத்தமாயி எண்ணினார். கடன் வாங்கி உரம்
போட்டார். செழிப்பான விளைச்சல் கிடைத்தது. பருத்தியை எடுத்துக்கொண்டு தேவதானப்பட்டி
காசிநாடார் கடைக்குச் சென்றார் கருத்தமாயி. நல்ல வருமாணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
கருத்தமாயி காத்திருந்தார். ஆனால், மிகவும் குறைந்த பணமே கிடைத்தது. உரம் போட்ட
கடனோடு முத்துமணி வாங்கிச்சென்ற பணத்தையும் சேர்த்து கணக்குக் கழிந்தது; இனிமேல்
பருத்திப் போடப் போட கணக்கைக் கழித்துக்கொள்கிறேன் என்று நாடாரு கூறினார்.
முத்துமணியின் உண்மையான சுயரூபத்தைக் கருத்தமாயி அன்றுதான் உணர்ந்தார்.

5
முத்துமணி
ஏமாற்றும் குணம் உடையவன் சோம்பேறித்தனம்

பொய் கூறுபவன் திருடும் குணம்

பெற்றோரின் கஷ்டங்களைப் புரிந்து நடக்காதவன்

வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை மதிக்காதவன்

உதவும் மனப்பான்மை இல்லாதவன்

6
அத்தியாயம் 8

7
சுருக்கம்
முத்துமணி தன் பட்டப்படிப்பை முடித்து விட்டு வேண்டாத ஆட்களோடு சுற்றி திரிந்தது
கருத்தமாயிக்கு வேதனையைத் தந்தது. மகனின் போக்கைக் கண்டித்து, தான் இரண்டு
கடன்பட்டவன் என்றும் வயதான காலத்தில் அவருக்குக் கை கொடுத்து உதவ வேண்டும்
என்றும் முத்துமனியிடம் கூறினார். மகனைத் திட்டியதால் சிட்டம்மா கருத்தமாயியைச்
சாடையாகத் திட்டும் வேளையிலே, முத்துமணி காட்டுயிலாகாவில் வேலை இருப்பதாகவும்
அதற்கு மூன்று இலட்சம் இலஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்றும் கூறினான். கருத்தமாயி
அவ்வளவு இலஞ்சப் பணத்துக்கு என்ன செய்வது என்று கேட்ட பொழுது, அவன் தங்கையின்
திருமணத்திற்குச் சேர்த்து வைத்த பணத்தைக் கேட்டான். திகைத்துப் போன கருத்தமாயி
முத்துமணியின் மீது கோபம் கொண்டார். பொக்கப்பாண்டி எனும் 'பொற்கைப் பாண்டியன்'
என்ற மாவட்ட செயலாளரை தாய் தந்தையிடம் வாங்கிய பணத்தோடும் கல்லூரி நண்பன்
ராம்குமாரோடும் பார்க்க சென்றான்.

8
சுருக்கம்

முத்துமணி ராம்குமாரிடம் அந்த வேலையை அவனுக்கு வாங்கி தருவதாக அழைத்து சென்று,


அவன் முன்னிலையில் பொக்கபாண்டியிடம் எப்படியாவது வேலை வாங்கி தருமாறு கூறினான்.
பின்பு, ராம்குமாரை சற்று நேரம் வெளியே அனுப்பிவிட்டு முத்துமணி அவனின் பணப்பையை
எடுத்து நீட்டிவிட்டு மிகவும் சிரமப்பட்டு கூட வந்த நண்பனிடம் கடன் வாங்கி
கொடுத்ததாகவும் குடும்ப சூழ்நிலையையும் காரணம் காட்டி கெஞ்சினான். முத்துமணி
நண்பனிடம் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி அவனிடமிருந்து வாங்கிய பணத்தை குடித்து
அழித்தான். ஏழு மாதத்தில் சத்தியமங்கலம் காட்டில் வேலை கிடைத்து. ஒருநாள் வந்து தாய்
தந்தையைச் சோடியாக புகைப்படம் எடுத்துக் கொண்டு அவனைத் திண்டுக்கல் சரகத்துக்கு
வேலை மாற்றத்துக்குப் பயன்படுத்தி கொண்டான்.

9
சுருக்கம்

முத்துமணி வேலை மாற்றலாகி வந்தவுடன் மகளின் கல்யாண பேச்சைப் பேச, தன்


கல்யாணத்தைப் பற்றி பேசவில்லை என்ற கோபம் அவனுக்கு. பின் ஆறு மாதத்தில் தனக்கென
ஆனைமலையான்பட்டியில் பெண் பார்த்தான், பெயர் லச்சுமி. அப்பா கணக்குப்பிள்ளை, அம்மா
ஆசிரியர். நிறைய சொத்துகளோடு பெண் வந்தாலும் அவள் ஏற்கனவே கணவனை இழந்தவள்.
இந்தச் செய்தி கருத்தமாயிக்கும் சிட்டம்மாவுக்கும் கல்யாணம் முடியும் வரை தெரியாது. பின்னர்,
தங்கை கல்யாணத்திற்காக ரூபாய் இருபத்து ஐந்தாரத்தைக் கொடுத்து, இது தான் கொடுக்கும்
கடன் என கூறி கிளம்பினான். கருத்தமாயி மூன்று கடன்பட்டவராய் திகைத்து நின்றார்.

10
முத்துமணி
வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி திரிபவன்

நம்பி வந்தவர்களைத் தன் சுயநலத்திற்காக ஏமாற்றுபவன்

பணத்தை வீணே செலவழிப்பவன்

சுயநலக்காரன்

பெற்றோருக்கே கடன் கொடுத்தவன்

11
நன்றி

You might also like