You are on page 1of 7

பதினெண் மேல்கணக்கு

எட்டுத்தொகை(அகப்பாடல்கள்)
நற்றிணை

-தனிப்பாடலாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது.


- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும்.
- எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம்           பெற்றுத் திகழ்வது
நற்றினை ஆகும் .
-நல் என்ற அடைமொழி பெற்றது .
-இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.
-இந்நூல் 9 அடி முதல் 12 அடி வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டது.
-இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை.
-தொகுப்பித்தவன் :- 'பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி'
-அகப்பொருள் பாடல்கள்.
- பாடியோர்: வண்ணப்புறக் கந்தத்தனார், மலையனார், தனிமகனார்,விழிக்கட் பேதைப்
பெருங்கண்ணனார், தும்பிசேர்க்கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றனார்,மடல் பாடிய மாதங்கீரனார்.
-மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் காணப்படவில்லை.
- காட்டும் வாழ்க்கை :  அக்கால மக்களிடம்  பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை
அறியலாம்
தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவைச் சுவரில்
கோடிட்டுக் காட்டும் வழக்கமும் ,காதலன் வரவைப் பல்லி கூறுவதாக
கருதுவது அம்மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது.
மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறிய
முடிகிறது
மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப்
பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு

குறுந்தொகை

'நல்ல குறுந்தொகை' என சிறப்பித்து உரைக்கப்படுவது


-குறைந்த அரகள் கொண்டவை
-400 பாடல்களின் தொகுப்பு
- இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல்
-  தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

- பேரரசர்கள்சோழன்,பாண்டியன்,குட்டுவன்

- சிற்றரசர்கள்பாரி,நள்ளி,நன்னன்

ஐங்குறுநூறு

- மிகவும் குறுகிய அடி வரையறை உடைய பக்கங்களைப் பெற்றுள்ளது.

- ஐங்குறு நூறு திணை வழியாகப் பக்கங்கள் தொகுக்கப் பெற்றுள்ளன.


- மருதம்,நெய்தல்,குறிஞ்சி,பாலை,முல்லை என்ற அடிப்படையில் திணை வைப்பு முறை
அமைந்துள்ளது.

- இது 3 அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும்

- இதனைத் தொகுத்தவர் ‘புலத்துறை முற்றிய கடலூர் கிழார்’

- தொகுக்க உதவிய மன்னன் யானைக் கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர
மன்னன்

பதிற்றுப்பத்து

- எட்டுத் தொகை நூல்களிலும் சங்க இலக்கிய நூல்களிலும் ஒன்றாகும்

- சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின்
தொகுப்பு

- கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

- கடைச்சங்ககால நூலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

- முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.

பரிபாடல்

- எட்டுத்தொகை நூல்களில் அகமும், புறமும் கலந்து அமைந்த நூல் பரிபாடல் ஆகும்

-பரிபாடல் என்பது யாப்பு வகையால் பெற்ற பெயர்

-இதில் திருமால் ,முருகன், கொற்றவை என்ற தெய்வங்கள் பற்றியும் மதுரை நகர் பற்றியும்
வையையாறுபற்றியும் புகழ்ந்து பேசும் எழுபது பாடல்கள் இருந்தன

-அழிந்தவை போக இப்போது 22 பாடல்களும் சில சிதைந்த உறுப்புகளுமே எஞ்சியுள்ளன

-இதில் உள்ள பாடல்கள் இயற்றியோர் பதின்மூவர்.

-இது திருமால்  பற்றியும் முருகன் பற்றியுமான புராணம் செய்திகள் மிகுதி

-இசை கூத்து ஆகிய கலைகள் பற்றிய நுட்பமான செய்திகள் இதில் உண்டு

-பிற உயிர்கள் கொள்வோர், வெகுளி உடையோர், அறநெறியைப் பின்பற்றாதார், கூடா ஒழுக்கம்


கொண்டோர்,ஆகியோர் முருகன் அருள் பெற மாட்டார்கள் என்று பாட்டுக் கூறுகிறது

கலித்தொகை

-எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும்


- தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பு அம்சங்கள் கொண்டவை
-இந்நூல் 1887 ஆம் ஆண்டில் தாமோதரம்பிள்ளையால் பதிக்கப்பட்டது.

கலித்தொகைப் பாடல்கள்-
1. 149 பாடல்கள்
2. பாலைகலியில்  35
3. குறிஞ்சிகலியில் 29
4. மருதக்கலியில் 35
5. முல்லைகலிதை 17
6.நெய்தற்கலியில் 33

குறிஞ்சிக்கலி
புணர்ந்தாலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி ஆகும்

முல்லைக்கலி
நோக்கம்:-  ஒன்றுபட்டு இல்லாதிருக்கும் தலைவி ஆற்றியிருந்தலைக் கூறுகின்றன

மருதக்கலி
பரத்தையின் காரணமாகத் தலைவன் பிரிவது

நெய்தற்கலி
பிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில்
புலத்தல் போன்றதைக் கூறுகிறது

பாலைகவி
பாலை நிலத்தின் கொடுமை

அகநானூறு

-நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் அகநானூறு

- நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு

- பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு

- அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே

- 13 அடி சிற்றெல்லையும் முதல் 30 அடி பேரலையும் உடைய நானூறு பாடல்களைக் கொண்டது

-களிற்று யானைநிரை
-மணிமிடை பவளம் மூன்று தொகுதிகள்
-நித்திலக்கோவை
-175 புலவர்களின் செய்யுட்கள் உள்ளன

-பண்டைய தமிழரின் அரசியல் வரலாற்றையும் சமூக வரலாற்றை அறிய பெரும் துணை


செய்யவல்லது

புறநானூறு

-கடைச்சங்க காலத்தின் முன்னும் வாழ்ந்த பல புலவர்களால் புறப்பொருளைப் பற்றிப் பாடப்பட்ட


நூல்

-நானூரு அகவற் பக்கங்களையுடைய தொகை நூல்

-பொருளினாலும் நானூறு அளவாலும் பறநானூறு பொருள்

- அக்காலத் தமிழ் மக்களது நாகரிகத்தையும் மற்றும் நீதிகளையும் வெளிப்படுத்தும்.

-சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்தவை


பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை
-நக்கீர புலவரால் இயற்றப்பட்டது
-கடைச் சங்கம் நூல்களில் ஒன்று
-முருகப் பெருமானே பாட்டுத்தலைவனாக கொண்ட நூல்
-317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது
-'ஆற்றுப்படுத்தல்' என்னும் சொல் வழிப்படுத்தல் என்று பொருள்படுகிறது
-'முருகாற்றுப்படை' எனும்போது வீடு பெற்ற ஒருவன் வழிப்படுவது என்று பொருள்படுகிறது .
-மொத்தம் 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர்
பழனி
திருச்செங்கோடு
குன்றுதோறாடல்
பழமுதிர்ச்சோலை

பொருநாராற்றுப்படை
-கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு
இயற்றப்பட்டது
-முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர்
-248 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவாலானது .
-போர்க்காளம் பாடும் பெருநாரைப் பற்றி கூறும் புறத்தினை நூலாகும்

சிறுபாணாற்றுப்படை

-நல்லூர் நத்தத்தனார் பாடியது


-269 அடிகளை இப்பாடல் கொண்டுள்ளது
- ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு
எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட
இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
-இது மன்னனின் நாட்டு வளமும், விருந்தோம்பும் பண்பும், மக்கள் வாழ்வுச் சிறப்பும்
காட்டப்பட்டுள்ளன.
-ஆம்பூர் ,வேலூர், கிடங்கில் இன்னும் ஊர்களின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
-ஆண்களும் பெண்களும் அக்காலத்தில் வறுமையிலும் துன்பத்திலும் போராடியதைப் பற்றிப்
இப்புலவர் அருமையாக எழுதியுள்ளார்
-பாணனுடைய வறுமை நிலை நெஞ்சை உருக்கும் வகையில் விளக்கப்படுகிறது.

பெரும்பாணாற்றுப்படை

- உருத்திரங் கண்ணனார் தொண்டைமான் இளந்திரையனைப் பாடியது


- இவை 500 அடிகளைக் கொண்டுள்ளன
- பேரியாழ் வாசிக்கும் பாணன் ஒருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத்
தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த
ஆற்றுப்படை நூல்
- தொண்டை நாட்டுச் சிறப்பு, ஐந்திணைகளின் இயல்பு, அந்நிய மக்களின்
இயல்பு,விருந்தோம்பல் போன்றவை 4 உணர்தத ் ப் பட்டுள்ளன.
- சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்துள்ளது

முல்லைப்பாட்டு

எழுத்தாளர்: காவிரிப் பூம்படி நந்து பொன் வாணிகர் மகனர். 

முல்லைப்பாட்டின் பொருள்:
முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல் அகப்பொருள் பற்றியது. மழைக் காலத்துக்கு
முன் திரும்பி வருவதாக சொல்லி போருக்கு சென்ற தலைவன் குறித்த காலத்தில்
வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாழாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரம்
அறிய சென்றுவந்த தோழியின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை,
போரில் வெற்றி பெற்று தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதல் அடைந்து இன்பம்
அடைகிறாள்.
மதுரைகாஞ்சி
- பாடியவர்: மாங்குடி மருதனார்
- பாடப்பெற்றவர்: தலையாலங்கானம் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன்
- அடிகள்: 782
- இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் இந்த நூல்தான் மிகவும் நீளமானது
- உருவானதர்கான காரணம்: பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல்
உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது
- பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற
இந்நூல், ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது.
- இப்பாட்டின் தொடக்கத்தில் திரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர், பிறகு தேன்
கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார்.
- இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல.
- வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது.எனவே, நல்லறங்கள் செய்து மலை போல்
என்றும் அழியாப் புகழைத் தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.

நெடுநல்வாடை

பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நீக்கினால் பாண்டியன் நெடுஞ்செழியன்

அடிகள் : 188

திணை : வாகை

காலம் : வாடைக் காலம்

* சங்கத் தமிழ் இலக்கியமான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.


* தலைவனைப் பிரிந்து வாழும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடை யாகும்.
* போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடை யாகும்.
* இது நீண்ட நல்ல என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாக கூறுவர்.
* இப்பாட்டில் இடம்பெறும் கதிர்களை வருணனை ஒன்றே புலவரின் பெருமையை நிலை
நாட்ட உள்ளது.
* வருணனை 70 அடிகளால் அமைகிறது.

குறிஞ்சிப்பாட்டு 

*பாடியவர் கபிலர் .
*261 அடிகள் உள்ளது பிரகத்தன் என்ற ஆரிய அரசனுக்கு தமிழின் சுவையை உணர்த்த
பாடியது *இப்பாடலின் இறுதியில் இரண்டு வெண்பாக்களும் சேர்க்கப்பட்டுள்ளன .
நூல் தோன்ற காரணம் 
*ஆரிய அரசன் பிரகத்தன் தமிழரின் களவு நெறியைத் இது என்றான் இது கற்புநெறியில்
முடியும் இதுவும் நல்லது என்னும் உண்மைகளை தெளிவுபடுத்த எழுதப்பட்டது.
 பாடல் அமைதி 

*காதல் நோயால் தலைவியின் உடலில் மாறுபாடு .


*அவளின் அன்னை பூசைகள் நிகழ்ச்சியும் நிமித்தங்களை கலந்தும் துயர் உருவது கண்ட
தோழி தலைவியின் துயர் அவள் ஒரு மலை நிலத் தலைவனிடம் கொண்ட காதலே
காரணம் என்று வெளிப்படக் கூறும் வகையில் இயற்றப்பட்டுள்ளது .
*அருவியில் நீராடி பெண்கள் பறித்து பாசறையில் குவித்து சூட்டி மகிழ்ந்த மலர்களை
பற்றிய வருணனை .
*கதிரவன் மேற்றிசையில் மழையும் மாலைப்பொழுதின் நிகழ்வுகளை தலைவன் வரும்
வழியில் தோன்றும் பல்வேறு இடையூறுகளையும் தலைவனுடைய ஒருவர் தோற்றத்தையும்
கபிலர் தமக்கே உரிய வகையில் விளக்கியுள்ளார்.

பட்டினப்பாலை

 - எழுதியவர் கடியலூர் .
உருத்திரங்கண்ணனார்
- 301 வரிகளை கொண்டுள்ளது.
- 163 வஞ்சி அடிகள் கொண்டுள்ளன.
- செலவழங்குதல் எனும் துறையே சார்ந்ததாகும்.
-சோழ மண் அதினில் பாயும் காவிரி வணிபம் கரிகாற்பெருவளத்தான் பெருமை எனப்பல
செய்திகள் விளக்கப் பெறுகின்றன.
-நச்சினார்க்கினியர் உரை காணப்படுகின்றது.

மலைபடுகடாம்

~பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று மலைபடுகடாம்.


~இத்தொகுப்பில் இரண்டாவது பெரிய நூல்.
~இப்பாடலில் 583 அடிகள் உள்ளன.
~பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் ஏற்றினார்.
~இந்நூலைக் கூத்தராற்றுப்படை எனக் குறிப்பிடுவர்.
~கதையின் தலைவன் : நவிர மலையின் தலைவன் நன்னன் ஆவான்.
~இப்பாடலின் சாரம் நவிரமலை மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களின்
தலைவனான நன்னனின் கொடைத் திறத்தையும் விளக்குவதாகும்.
~இந்நூலில் தமிழர்களின் இசைக் கருவிகளான நெடுவாங்கியம், மத்தளம்,யாழ் போன்ற
கருவிகளின் குறிப்புகள் உண்டு.  *இதுவே இந்நூலின் சிறப்பாகும்.

You might also like