You are on page 1of 67

ஆனந்தம் தரும் அணுகுமுறை

உலகம் மிக வேகமாக மாறிகொண்டிருக்கிறது.


தாத்தாவுக்கு பிடித்த தியாகராஜ பாகவதர் பாடிய “கிருஷ்ணா…. முகுந்தா…
முராரே…” என்றபாடல் அப்பாவுக்கு போர் அடிக்கிறது. அப்பாவுக்கு பிடித்த
“நான் பேச நினைப்பதெல்லாம்” என்றபாடல் மகனுக்கு எரிச்சலாக வருகிறது.
“இளைய நிலா பொழிகிறதே” என்னும் இனிய பாடல்கூட இளசுகளுக்கு
இனிமை சேர்ப்பதில்லை.
“அரிமா…. அரிமா….” என்று சொன்னால் அத்தனை சின்னஞ்சிறுசுகளும்
அழகாய் சிரிக்கிறது. இதிலிருந்து ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும். தாத்தா
காலத்து திரை இசைப் பாடல்கள் பேரன் காலத்தில் எடுபடவில்லை.
இதற்குக்காரணம் என்ன? தலைமுறைஇடைவெளி தான் (Generation Gap)
இதற்குக்காரணம் என உளவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஒரு தலைமுறையினரின் பழக்க வழக்கங்களை இன்னொரு
தலைமுறையினர் ஏளனமாகப் பார்த்து சிரிக்கின்றனர். கால மாற்றம் பலவித
மன மாற்றங்களை உருவாக்கி வருகிறது.
ஒரு காலகட்டத்தில் “சரியான முடிவு” என தீர்மானிக்கப்பட்ட ஒரு செயல்
இன்னொரு காலகட்டத்தில் “தவறு” என நிரூபிக்கப்படுகிறது. எனவே அந்தந்த
கால சூழலுக்கு ஏற்ப வாழப் பழகிக்கொள்வதன்மூலம் மகிழ்ச்சியுடனும், மன
நிறைவுடனும் வாழ்க்கையில் வலம் வரலாம்.
அவசர அவசரமாக அன்று வட்டுக்கு
ீ வந்தான் சுரேஷ். அவனது முகத்தில்
கோபம் கொப்பளித்தது. பதற்றத்தோடுகூடிய எரிச்சல் அவனிடம்
முழுமையாய் காணப்பட்டது. நேராக தனது அப்பாவிடம் வந்து கத்தினான்.
“அப்பா எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் ஒரே
டென்ஷனாய் இருக்கிறது. சயின்ஸ் பாடம் நடத்தும் டீச்சரைக் கண்டாலே
எரிச்சலாக வருகிறது. அவர் எப்போது பார்த்தாலும் என்னை திட்டுகிறார். இனி
ஸ்கூலுக்கு போகவே மாட்டேன்” என 8 ம் வகுப்பு படிக்கும் சுரேஷ் உரத்த
குரலில் எரிச்சலோடு சொன்னான்.
பொதுவாக இப்படி ஒரு முடிவை எடுத்து 6 -ம் வகுப்பு படிக்கும் சிறுவன்
சொன்னால் அதற்கு, பெற்றோர்கள் வெவ்வேறுவிதமாக பதில் சொல்ல
வாய்ப்புள்ளது.
“நீ ஸ்கூலுக்கு போகவில்லையென்றால் உன்னை ஒரு மளிகைக்
கடையில்தான் சேர்க்கணும்” என கிண்டல் செய்து பெற்றோர்கள் அவனது
முடிவை எதிர்க்கலாம்.
“நீ இப்படியெல்லாம் கோபப்பட்டு முடிவெடுத்தால் உனக்கு சாப்பாடு
தரமாட்டேன். வட்டைவிட்டு
ீ விரட்டி அடிப்பேன்” என பயமுறுத்தி அவனது
முடிவை மாற்றபெற்றோர் முயற்சி செய்யலாம்.
“நீ நல்ல பையன். சிறந்த அறிவாளி. எல்லா விஷயமும் உனக்குத் தெரியும்.
நீயே இப்படி பேச ஆரம்பித்தால் நன்றாகவா இருக்கிறது?
அறிவாளிகளெல்லாம் இப்படி கோபப்படமாட்டார்கள்” என்று புகழ்ந்து பேசி
அவனது கோபத்தை குறைக்கலாம்.
“படிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். நீ இங்கே வா. நாம் டிபன் சாப்பிடுவோம். டிபன்
சாப்பிட்டப்பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று அன்புக்கட்டளை மூலம் அவனை
அமைதிப்படுத்தலாம்”.
“டீச்சர்ஸ் எப்போதுமே சரியாகத்தான் இருப்பாங்க. நீதான் ஏதாவது வம்பு
பண்ணியிருப்பாய். அதற்குத்தான் தண்டனை கொடுத்திருப்பார்கள்” என தனது
மகனை நம்பாமல் குற்றச்சாட்டுகளை அவன்மீ து அள்ளித் தெளிக்கவும்
வாய்ப்பு உள்ளது.
“எந்த டீச்சர்ஸூம் ஒரு மாணவனை பழிவாங்க வேண்டும் என
நினைப்பதில்லை. உன் நன்மையை கருதிதான் ஏதேனும்
சொல்லியிருப்பார்கள். ஆனால் நீ இப்படி கோபப்பட்டு பேசுவது சரியில்லை”
என்று அறிவு பூர்வமான ஆலோசனைகள் சொல்லி அவனை திருத்த முயற்சி
செய்யலாம்.
இப்படி “பள்ளிக்குப் போகமாட்டேன்” என்னும் பிரச்சனைக்கு முடிவுகாண
எத்தனையோ வழிகள் உள்ளன. அதாவது – கிண்டல் செய்வது,
பயமுறுத்துவது, புகழ்ந்து பேசுவது, கட்டளையிடுவது, குற்றஞ்சாட்டுவது,
ஆலோசனைகள் வழங்குவது ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு
அணுகுமுறைகளாக உள்ளன. இதுவே பலவித பதில்களாகவும் மாறுகின்றன.
இந்த அணுகுமுறைகளில் எந்த அணுகுமுறைசரியானது? என்பதில் பல
பெற்றோர்களுக்கு இன்னும் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.
ஏனென்றால் காலம் மிக வேகமாக ஓடுகிறது. சூழல்கள் அதிக வேகத்தில் மாறி
வருகின்றன. மனிதர்களும் மாறத் தொடங்கிவிட்டார்கள்.
“நான் அந்தக் காலத்தில் இப்படித்தான் செய்தேன்”.
“என் அப்பா என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்வேன். ஒரு
வார்த்தைகூட எதிர்த்துப் பேசியது கிடையாது” – என்றெல்லாம் பழங்கதைப்
பேசி முன்னால் நிகழ்வுகளை அசைபோட்டு, அதன் அடிப்படையில் இந்தக்
காலத்தில் தனது மகனை பற்றியோ, மகளை பற்றியோ பெற்றோர்
முடிவெடுத்தால் பல நேரங்களில் குடும்பத்தில் பிரச்சனைகள்தான் வரும்.
தங்கள் பிள்ளைகளிடம் எப்படி அணுகுமுறைகளை வைத்துக்கொள்ள
வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தெளிவாக தெரிந்திருக்க
வேண்டும்.
“எனக்கு நேரமில்லை”.
“எங்கள் ஆபீஸில் டென்ஷன் அதிகம்”.
“என் மனைவியும் வேலைக்குச் செல்கிறாள். பிள்ளையைக் கவனிக்க
ஆளில்லை” – என்று ஏதாவது இதுபோன்றகாரணங்களை முன்நிறுத்தி தன்
பிள்ளைகளைக் கவனிக்க மறுத்த சில பெற்றோர்கள் பின்னாளில்
வருந்துவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதைப்பற்றி
பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
“தங்கள் பிள்ளைகளின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் பெற்றோர்கள்
மதிப்புத் தர வேண்டும். அவர்களிடம் ஓரளவு திறமை இருந்தால்கூட அதனை
சிறப்பு திறமையாக கருதி அதற்கு மதிப்பு வழங்கவேண்டும். நேரம்
கிடைக்கும்போதெல்லாம் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் பாராட்ட
வேண்டும். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசவேண்டும்”
என்பது உளவியல் அறிஞர்களின் கருத்து ஆகும்.
இதனை சில பெற்றோர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள்.
“நீ ஒரு மக்கு”
“அவள் நல்லாதான் படிக்கிறாள் ஆனால் அவளுக்குதான் படித்தது ஒன்றும்
ஞாபகத்தில் இருக்காது”.
“எப்போதும் புத்தகமும் கையுமாக இருந்தால் போதுமா? மார்க்
வரவேண்டாமா?”.
“வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் பள்ளியில் நீ படிப்பதற்காக உனக்கு பீஸ்
கட்டுறேன். பணம் என்ன மரத்திலேயா காய்க்குது?”
“முழிக்கிறமுழியப்பாரு நல்லா சாப்பிட மட்டும் தெரியுது. படிக்கத் தெரியுதா?”
“நீ ஒரு யூஸ்லெஸ். நானும் படிச்சு படிச்சிதான் சொல்றேன் நீ படிக்க
மாட்டேங்கிறே!”
“வரவர உனக்கு கொழுப்பு அதிகம்”
“கொஞ்சமாவது உனக்கு பொறுப்பு இருக்கிறதா?” என்று எத்தனையோ
விதமான “குத்தூசி” வார்த்தைகளால் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை
“அர்ச்சனை” செய்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு உற்சாகம்
வழங்குவதற்காக இப்படிப் பேசுவதாக நினைத்துவிட்டு, பிள்ளைகளின்
நம்பிக்கை வேரில் வெந்நீர் ஊற்றுவதுபோல் பெற்றோர்கள் நடந்து
கொள்ளலாமா?
தங்கள் பிள்ளைகளிடம் இப்படிப் பேசுவதால் பெற்றோர்களுக்கு தங்கள்
பிள்ளைகள்மீ து பாசமே இல்லை என்றமுடிவுக்கு நாம் வந்துவிட முடியாது.
“தங்கள் பிள்ளைகள் நன்றாக வளர வேண்டும்” என்றஎதிர்பார்ப்புதான்
ஒவ்வொரு பெற்றோரின் நெஞ்சிலும் நிழலாடுகிறது. அந்த எதிர்பார்ப்புகள்
நிறைவேறுவதில் கொஞ்சம் தடை ஏற்பட்டால்கூட அந்தப் பெற்றோர்களால்
தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தங்கள் பிள்ளைகளைப்பற்றிய
எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போய்விடுமோ? என்றஅச்சத்தில் பல
பெற்றோர்கள் நிலை தடுமாறுகிறார்கள்.
“என்னைவிட பெரிய நிலைக்கு உயர்ந்து, நம் குடும்பத்தை நல்ல நிலைக்கு
கொண்டு செல்லும் என் குல கொழுந்து நீதான்” என எண்ணி தங்கள்
பிள்ளைகள் பற்றிய ஏராளமான எதிர்பார்ப்புகளைத் தங்கள் உள்ளத்தின்
பள்ளத்தில் பல பெற்றோர்கள் வைத்திருக்கிறார்கள். இதனால்தான் தங்கள்
எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் அவர்கள் கோபப்படுகிறார்கள். எரிச்சல்
அடைகிறார்கள். பதட்டம் அடைந்து பரிதாபநிலை ஏற்பட்டதுபோல
உணருகிறார்கள். இந்த உணர்வுகள்தான் வார்த்தைகளாக வெடிக்கின்றன.
ஆனால் அவற்றையெல்லாம் புரிந்துகொள்ளாத பிள்ளைகள்
வார்த்தைகளுக்குப் பின்னால் நிற்கும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல்
பெற்றோர்களை எதிரியாக நினைக்கிறார்கள்.
“அன்றைக்கு ஒரு வார்த்தை சொன்னார் எங்க அப்பா. அதிலிருந்து அவர்கிட்ட
பேசவே மாட்டேன்”.
“எங்க அம்மா எப்பப் பார்த்தாலும் என்னை திட்டிக்கிட்டே இருக்கும். இப்படி
எனது அம்மா நடந்துகொண்டால் என்னால் எப்படி படிக்கமுடியும்?”
“எனக்கு எங்கள் வட்டில்
ீ இருக்கவே பிடிக்கவில்லை. எரிச்சலாக இருக்கிறது”.
- என்று வட்டின்மீ
ீ து வெறுப்பையும், பெற்றோர்கள்மீ து எரிச்சலையும்
காட்டிவருகின்றஇளைய உள்ளங்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். ஒரு மகன்
அல்லது மகளிடம் எப்படி பழகவேண்டும்? என்றஅடிப்படை
அணுகுமுறையைத் தெரியாத பெற்றோர்கள் எளிதில் எரிச்சலடைகிறார்கள்.
இதைப்போலவே – நெஞ்சம் நிறைய அன்பு வைத்திருக்கும் பெற்றோரைப்
புரிந்துகொள்ளவும் சில இளைய உள்ளங்கள் தவறிவிடுகின்றன.
இதனால்தான் பெற்றோர் – பிள்ளைகள் உறவில் அவ்வப்போது விரிசல்
ஏற்பட்டு விடுகின்றன.
இன்று பண்பாடு எனப்படும் கலாசாரம் அதிதீவிரமாக மாறிவருகிறது. அந்தக்
காலத்தில் கோயில் திருவிழா நேரங்களில் இலவசமாக காட்டப்படும்
திரைப்படத்தை பார்ப்பதற்கே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத்
தடைவிதித்தார்கள். ஆனால் இன்று சினிமா தியேட்டருக்குப்போய் படம்
பார்ப்பதற்குப் பதில் ஒவ்வொருவரின் வடும்
ீ சினிமா தியேட்டராக
காட்சியளிக்கிறது. ஹோம் தியேட்டர் என்னும் வசதி பலர் வட்டில்
ீ உள்ளதை
இன்று காணலாம்.
ஒரு சினிமா தியேட்டரில் ஒரு நேரத்தில் ஒரு திரைப்படத்தைதான் பார்க்க
முடியும். ஆனால் வட்டிலோ
ீ 10 – 15 திரைப்படங்களை டி.வி. மூலம் பல்வேறு
சேனல்களில் தினமும் பார்க்க முடியும். திரைவிமர்சனம், காமெடி, சிரிப்பு
வெடிகள், நடிகர் பேட்டி, விரும்பி கேட்ட பாடல் – என்று துண்டு துண்டாக
திரைப்படத் துண்டுகள் டி.வி. மூலம் வந்து வட்டின்
ீ அறைகளைத்
திரையரங்குகளாக்கிவிட்டன.
“அப்பா ஒரு அறையில் இருக்கிறார்கள்” என்றால் மரியாதை காரணமாக அந்த
அறைக்குள் போக மறுத்த பிள்ளைகள் அந்தக் காலத்தில் இருந்தார்கள். இந்தக்
காலத்தில் “சிறுவன் கார்ட்டூன் பார்க்கிறான். அவனை தொந்தரவு செய்ய
வேண்டாம்” என்று பயந்து நடக்கும் பெற்றோர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
சிரிப்புக் கதைகளை அதிகம் பார்த்த சின்னஞ்சிறுசுகளில் சிலர் காமெடி
நடிகர்களாகவே நிஜ வாழ்க்கையில் உலவி வருவது வேடிக்கையாக
இருக்கிறதல்லவா! டி.வி.யை வட்டிற்குள்
ீ வாங்கி வைத்து பெற்றோர்கள் அந்த
டி.வி.யை எதற்கு? எப்போது? எப்படி? பயன்படுத்த வேண்டும்? என்கின்ற
ஒழுங்கு முறையை முறையாக தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர மறந்து
விட்டார்கள். இதன் விளைவாக “பண்பாட்டு பிழைகள்” அதிகமாகிவிட்டன.
“நமது அப்பா தானே கோபப்பட்டு விட்டார். என் நன்மைக்குத்தானே அவர்
இப்படி பேசுகிறார்”.
“அம்மா கோபப்பட்டால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்னை வளர்ப்பதற்கு
எனது அம்மா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்கள்”.
- என்று கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துப் பார்த்தால் பெற்றோர்கள் மேலே
உள்ள வெறுப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதற்கு மாறாக
சின்னசின்ன விஷயங்களையெல்லாம் பெரிதாக்கி நன்றி மறந்து கண்டபடி
பெற்றோரைத் திட்டி தீர்ப்பது அநாகரிகமான அசிங்கம் அல்லவா!
“நீர் எனக்கு அப்பாவே இல்லை” என வந்தவழி தெரியாமல் வாயில் வந்தபடி
பேசுவது சில நொந்த உள்ளங்களுக்கு வேண்டுமென்றால்
வாடிக்கையாயிருக்கலாம் ஆனால் இதனை கேட்பவர்களுக்கு
வேடிக்கையாகத்தான் இருக்கும்.
“அடித்தாலும் உதைத்தாலும் நான் உந்தன் பிள்ளை” என்று பாசப்பெருக்கால்
அன்பு பாராட்டி பிள்ளைகள் நல்ல உறவுடன் பெற்றோரிடம் பழக வேண்டும்.
யாரிடம், எப்படி, எந்த சூழலில், எதைப் பேச வேண்டும் என்பதை தெள்ளத்
தெளிவாக உணர்ந்து கொண்டவர்கள் பெற்றோர்களிடம் அன்பாக நடந்து
கொள்கிறார்கள்.
சிறந்த அணுகுமுறைகளோடு பெற்றோர்களையும், மற்றவர்களையும்,
உற்றவர்களையும் சந்திக்கிறபொழுது வாழ்வில் நன்மைகள் மட்டுமே
மேலோங்கி நிற்கும். மனம் நிம்மதி நிறைந்து காணப்படும்.
ஆனந்தம் தரும் அணுகுமுறைகள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை
எளிதில் பெற்றுத்தரும்.

நீ யும் நானுமா? கண்ணே…. நீ யும்


நானுமா?

Author: கே. ரஜினிகாந்த்

Feb 2011 | Posted in Articles

கணவன் மனைவி உறவு என்பது மற்றஎல்லா உறவுகளுக்கும்


அப்பாற்பட்டது. தாய், தந்தை, குழந்தைகள், கூடப்பிறந்தவர்கள் இப்படி
எந்த உறவாக இருந்தாலும் அவர்களோடு கழிக்கும் காலத்தைவிட நமது
துணையோடு நாம் இருக்கும் காலம்தான் அதிகம். அதனால் இந்த
இதழில் கணவன், மனைவி உறவில் இருக்கும் சில சவால்களைப் பற்றி
பார்ப்போம்.
கமலும், சுந்தரியும் புதிதாக கல்யாணம் முடித்தவர்கள்.
புதுமணத்தம்பதிகள். முதல் ஆறு மாதங்கள் மிகவும் இனிமையாகச்
சென்றது. பிறகு இருவருக்கும் சின்ன சின்ன விஷயங்களிலெல்லாம்
கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியது. சின்ன விஷயங்களில்
ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பேசிக் கொள்வதே இல்லை.
ஒரே வட்டில்
ீ வாழ்ந்தாலும் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.
பல புதுமணத்தம்பதிக்குள் இந்த சூழல் ஏற்படுவது இப்பொழுது
வாடிக்கையாகிவிட்டது. இது எதனால் என்று பார்க்கலாம். கமல், சுந்தரி
வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை இதற்கு உதாரணமாக
எடுத்துக் கொள்ளலாம்.
ஒருநாள் ஒரு கடினமான தினத்தை எதிர்கொண்டு மிகவும் களைப்பாக
வடு
ீ வருகிறாள் சுந்தரி. அன்றைய தினம் நடந்ததைப் பற்றி கணவனிடம்
கூறி சிறிது தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள நினைக்கிறாள்.
சுந்தரி கூறுகிறாள், “நாள் முழுவதும் வேலை இருந்து கொண்டே
இருந்தது. எனக்கென்று நேரமே இல்லை” என்கிறாள். அதற்கு கமல்
“பேசாமல் வேலையை விட்டுவிடு. இவ்வளவு கஷ்டப்படுவதைவிட
வேலையை விட்டுவிடலாம்” என்கிறான். அதற்கு சுந்தரி “ஆனால்
எனக்கு என் வேலை மிகவும் பிடிக்கும். மேலதிகாரிகள்
எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்யச் சொல்கிறார்கள். அதுதான்
மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்கிறாள். கமல் “அவர்கள் கூறுவதை
எல்லாம் பொருட்படுத்தாதே, உனக்கு என்ன செய்ய வேண்டுமோ
அதைச் செய்” என்கிறான்.
சுந்தரி “நான் அதைத்தான் செய்கிறேன். இன்று என் நெருங்கிய
தோழியை தொலைபேசியில் தொடர்பு கொள்வதாகக் கூறி இருந்தேன்.
ஆனால் முடியவில்லை” என்கிறாள். அதற்கு கமல் “கவலைப்படாதே,
அவள் புரிந்து கொள்வாள்” என்கிறான். சுந்தரி “இல்லை, அவள் ஒரு
பெருங்கவலையில் இருக்கிறாள். இப்பொழுதுதான் நான் அவளுக்குத்
தேவை” என்கிறாள். மிகவும் கோபமடைகிறான் கமல். “இப்படி
எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தாள், நீ
சந்தோஷமாக இருக்கவே முடியாது” என்று கூறுகிறான். இதனைக்
கேட்ட சுந்தரி கோபமாக “நான் ஒன்றும் கவலையாக இல்லை, நான்
கூறுவதைக் காது கொடுத்துக் கேட்கக் கூடாதா?” என்கிறாள். “நான்
கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்” என்கிறான் கமல்.
இந்த நீண்ட உரையாடலுக்குப் பிறகு சுந்தரி மிகவும் எரிச்சல்
அடைகிறாள். சுந்தரி நீண்ட கடின நாளை எதிர்கொண்டதால் ஆறுதல்
தேடி வட்டிற்கு
ீ வருகிறாள். கமலும் அப்படித்தான். அவளுக்கு நல்ல
தீர்வுகளைத் தருவதாக நினைத்துக் கொள்கிறான்.
இந்த இடத்தில் கவனித்தால் ஆண் என்ன செய்கிறான்?
ஒரு சில பதில்களில் பெண்ணின் உணர்வுகளை மாற்றமுயற்சிக்கிறான்.
அவள் என்ன கூறுகிறாள் என்பதை முழுதாகக் கேட்காமல் தீர்வு
கொடுக்க நினைக்கிறான். பொதுவாகவே நாம் என்ன கூறுகிறோம்
என்பதைக் காது கொடுத்து கேட்கும் நபரைத் தான் பெண்களுக்குப்
பிடிக்கும்.
இந்த சூழலில் சுந்தரி என்ன கூறுகிறாள் என்பதை முழுவதும்
கேட்டுவிட்டு பிறகு “பரவாயில்லை, சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு,
உன் தோழியை அழைத்துப் பேசு” என்று ஆறுதலாகக் கூறியிருந்தால்
எல்லாமே தலைகீ ழ், இருவரும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.
அடுத்ததாக, இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். சுந்தரியும், கமலும்
ஒரு கல்யாணத்திற்குக் காரில் செல்கிறார்கள். ஒரு இடத்தில் எப்படிச்
செல்ல வேண்டும் என்றகுழப்பம் ஏற்படுகிறது. “யாரையாவது
கேட்கலாமே” என்றாள் சுந்தரி. கமல் தன்னிச்சையாக ஒரு வழியில்
செல்கிறான். 20 நிமிடங்கள் கழித்து மீ ண்டும் அவர்கள் வந்த
வழியிலேயே வருகிறார்கள். எரிச்சல் அடைந்த சுந்தரி, “இதற்குத்தான்
யாரையாவது கேட்கலாம்” என்று கூறினேன். கல்யாண வட்டில்

யாரையாவது போனில் அழைத்துக் கேளுங்கள்” என்று கூறுகிறாள்.
கூறியதோடு அல்லாமல், அவளே யாரையோ அழைத்துக் கேட்டு வழி
கண்டுபிடித்து சரியான நேரத்திற்கு கல்யாண வட்டை
ீ அடைகிறார்கள்.
அன்று முழுவதும் கமல் ‘அப்செட்’ஆக இருக்கிறான். சுந்தரி
நினைக்கிறாள், “நாம் அவனுக்கு உதவி தானே செய்தோம்” ஏன்
‘அப்செட்’ஆக இருக்கிறான் என்று.
இங்கு நாம் எதை கவனிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு இது
போன்றதருணங்களில் தரும் அறிவுரை, எதிர் விளைவுகளைத் தரும்.
தன்னை நம்பாமல் இவள் அறிவுரை செய்கிறாள் என்று எண்ணுவான்.
பொதுவாகவே ஆண்களுக்கு அறிவுரை கூறுவது பிடிக்காது. அதுவும்
இதுபோன்றதருணங்களில் சுத்தமாகப் பிடிக்காது. ஆண்களுக்குத்
தன்னுடைய இலக்கை எந்த உதவியும் இல்லாமல் தானே அடைய
வேண்டும் என்று எண்ணுவார்கள். அது கார் ஓட்டுவது போன்றசிறிய
விஷயமாக இருந்தாலும் அப்படித்தான்.
மேற்கூறிய சம்பவத்தில், சுந்தரி என்ன செய்திருக்க வேண்டும். எந்தவித
குறுக்கீ டும் செய்யாமல், பேசாமல் இருந்திருக்க வேண்டும்.
கணவன், மனைவி உறவில் பொதுவாக நாம் செய்யும் இரண்டு
முக்கியமான தவறுகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
1. பெண் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதை
எண்ணிப்பார்க்காமல் அவள் என்ன கூறுகிறாள் என்பதைக் காதில்
வாங்காமல், ஆண்கள் நல்ல தீர்வு கூறுவதாக எண்ணிக் கொண்டு,
பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடாது.
2. ஆண் தவறு செய்யும்போது தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது
போல் உதவி செய்வதாக எண்ணிக் கொண்டு, பெண் அறிவுரை
செய்தால், கண்டிப்பாக அது எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.
இந்த இரண்டையும் மனதில் கொண்டு பரஸ்பரம் இருவரும் அவரவர்
உணர்வுகளை மதித்து செயல்பட்டால் நிச்சயம் குடும்பத்தில் பல
சச்சரவுகளைத் தவிர்க்கலாம்

என்ன படிக்கலாம்? எங்கு


படிக்கலாம்?

Author: பேரா.மூர்த்தி செல்வகுமாரன்

Feb 2011 | Posted in Articles

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கை விபரங்களின் வரிசையில் கடந்த


இதழில் அறியப்பட்ட சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறைகளின்
தொடர்ச்சியாக இந்த இதழில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும்
தொலை தொடர்பு துறையின் விபரங்களை அறியலாம்.
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை(EEE)
ஒவ்வொருவரின் வாழ்விழும் தினசரி உபயோகத்தில் உள்ள
தொலைக்காட்சி, குளிர்விப்பான், மோட்டார், ஜெனரேட்டர் மற்றும்
மின்சாரம் போன்றவற்றின் உற்பத்தி, செயல்பாடு மற்றும் பயன்பாடு
பற்றிய படிப்பே இத்துறையினரின் ஆற்றலாகும்.
வருங்கால மின் உற்பத்தி தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு
வகையான செயல்திட்டத்தின் வாயிலாக எலக்ட்ரிக்கல்
பொறியாளர்களின் தேவைப்பாடு அதிக அளவில் இருக்கும். நாட்டில்
அனைத்து தொழில் துறையும் மின்சாரத்தினை நம்பியிருப்பதனால்
அரசுத்துறை மட்டுமல்லாது தனியார் துறையினரும் காற்றாலை, சூரிய
ஒளி, மின்சாரம் போன்றவற்றால் உற்பத்தியாகும் மின்சாரம் தனது
தேவைக்கும், மிதமானவை பொது உபயோகத்திற்கும்
பயன்படுத்துவதனால் வருங்காலத்தில் அதிக அளவிலான தனியார்
துறைவேலை வாய்ப்புக்களும் உள்ளன.
தமிழ்நாட்டில் சுமார் 410-க்கும் மேற்பட்ட அரசின் கட்டுப்பாட்டில்
இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள எலக்ட்ரிக்கல் துறையில்
சுமார் 26,700 இடங்களும், மாணவ மாணவிகள் என இரு பாலரின்
போட்டியில் இத்துறை தேர்வு செய்யப்படுவதும், இத்துறையின் சீரான
வளர்ச்சியும், துறையின் வேலை வாய்ப்புக்களும் தற்போதைய
சூழ்நிலையில் இதன் தேர்வு மாணவர்களின் சரியான முடிவாகும்.
தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கையில் 2006 ம் ஆண்டு 56%
மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து இத்துறையானது தற்பொழுது
2010 ம் ஆண்டில் 90% மேலான இடங்களை நிரப்பப்பெற்றுள்ளது.
மாணவர்களின் தேர்வின் அடிப்படையில் இத்துறை4 ம் இடத்தில்
இருக்கின்றது.
Power Systems, Power Electronics, Embedded System, Applied Electronics, VLSI Design,
Avionice, Space Science போன்றமுதுகலை (M.E.) படிப்புகளையும், தமிழ்நாடு
மன்சார துறையில் Junior Engineer (J.E.) மற்றும் Assistant Engineer (A.E.)
போன்ற அரசு வேலை வாய்ப்புகளும், தனியார் மற்றும் சுயதொழில்
வாய்ப்புக்களும் இத்துறைமாணவர்களின் எதிர்கால நம்பிக்கைகள்
ஆகும்.
பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவையில் அளிக்கப்படும் Sandwich
Course எனப்படும் 5 வருட பொறியியல் பட்டப் படிப்பில் அதிக
அளவிலான செய்முறை அறிவை பெறுவதன் வாயிலாக சுயதொழில்
வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது அதிக அளவில்
பண்நாட்டு தகவல் தொழில்நுட்ப துறைகளும் கணினி துறை
மாணவர்களுக்கு இணையாக எலக்ட்ரிக்கல் துறை மாணவர்களைப்
பணிக்கு தேர்வு செய்வதன் மூலம் அதிக அளவிலான வேலை
வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைதொடர்புத்துறை (ECE)
மனிதர்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உணவு, உடை மற்றும்
உறைவிடம் என்பதற்கு அடுத்தபடியாக செல்போன் எனப்படும் தகவல்
தொலைத்தொடர்பு சாதனம் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் ஓர்
அங்கமாக திகழ்கின்றது. பொறியியல் படிப்பில் இத்துறையில் மட்டும்
தொலைத்தொடர்பின் அறிவைப் பெறுவது இத்துறையின்
முக்கியத்துவத்தை மாணவர்கள் மத்தியில் விளங்க வைக்கின்றது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலை பள்ளி மாணவர்களின்
தேர்வில் முதல் இடத்தில் இருப்பதும், ஆண்டுதோறும் எந்தவொரு
தொய்வும் இல்லாமல் 95% மேற்பட்ட இடங்களை நிரம்பப் பெறுவதும்,
இதன் வலிமையை மாணவர்களுக்கு உணர்த்துகின்றது. பெரும்பாலும்
அனைத்து கல்லூரிகளும் அதிக இடங்களை (120) பெற்றிருப்பதினால்
தமிழ்நாட்டில் சுமார் 40,000 மேற்பட்ட இடங்களுடன் முதல்
தரவரிசையை இத்துறை வகிக்கின்றது.
ஒவ்வொரு வினாடியும் புதுப்புது தகவல்களை இத்துறை
மாணவர்களுக்கு வழங்குவதனால் என்றுமே இது ஒரு சிறப்பான
இடத்தை கொண்டிருக்கின்றது. தற்பொழுது அனைத்து தரப்பு
மக்களாலும் நன்கு அறியப்பட்ட 2 எ அலைக்கற்றை ஒதுக்கீ டு மற்றும்
அதன் பொருள் மதிப்பு இத்துறைசெல்வச் செழிப்பை அறிவிக்கின்றது.
இந்நேரத்தில் கல்வி ஆலோசகர் ஆகிய நானும் இத்துறையில்
பொறியியல் பட்டம் பெற்றவன் என்பதில் பெருமை அடைகின்றேன்.
இத்துறைமாணவர்கள் Embedded System, VLSI Design, Medical Electronics, Optical
Communication, Communication System, Avionics மற்றும் Network Engineering
போன்றஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த முதுகலை பொறியியல்
(M.E.) படிப்பதற்கான வாய்ப்புக்களை பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிக அளவில் 470 மேற்பட்ட கல்லூரிகளும், அவற்றில்
சுமார் 40,000 மேற்பட்ட இடங்களும் அதிகமான எண்ணிக்கையுள்ள
மாணவர்களின் இத்துறை ஆர்வத்தினை பூர்த்தி செய்கின்றன.
சிறப்பான கல்லூரிகளின் பெயரும் துவங்கப்பட்ட ஆண்டும்
1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 1946
2. மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, சென்னை 1946
3. ஏ.சி. பொறியியல் கல்லூரி, காரைக்குடி 1969
4. அரசு பொறியியல் கல்லூரி, கோவை 1968
5. அரசு பொறியில் கல்லூரி, சேலம் 1973
6. அரசு பொறியில் கல்லூரி, திருநெல்வேலி 1981
7. அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை 1970
8. பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை 1968
9. தியாகராசர் பொறியில் கல்லூரி, மதுரை 1978
மாணவர்களின் மனதில் தற்பொழுது எழும் ஐயத்தினை என்னால் உணர
முடிகின்றது. ஐயா, நீங்கள் எப்படிப்பட்ட பொறியியல் துறையை தேர்வு
செய்ய வேண்டும் என்பதனை கூறின ீர்கள், ஆனால் எப்படி ஒரு
பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்வது?
தரமான ஒரு பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்யும் முன்
கீ ழ்கண்ட குறிப்புகளைத் கவனத்தில் கொள்வோம்.
· குறிப்பிட்ட கல்லூரிகளில் தான் தேர்வு செய்யவிருக்கும் பிரிவு எந்த
ஆண்டு தொடங்கப்பட்டது?
· தாங்கள் தேர்வு செய்த கல்லூரியில் தகுதியான, நிலையான
ஆசிரியர்கள் உள்ளனரா?
· குறிப்பிட்ட பொறியியல் துறைக்கு முதுகலை பட்ட படிப்பு
அக்கல்லூரியில் உள்ளதா?
· குறிப்பிட்ட துறைக்கு Accreditation எனப்படும் துறைசார்ந்த தரச்சான்று
பெற்றுள்ளதா?
· மாணவர்களின் வேலை வாய்ப்புகளில் கல்லூரியின் செயல்பாடு
எப்படி உள்ளது?
· மாணவர்களின் தேவைகள் கல்லூரி நிர்வாகத்தினரால்
உணரப்படுகின்றதா?
மேலும் பல துறை தகவல்களுடன் அடுத்த இதழில்…

கணினி தொழில்நுட்பம்

Author: கே. நாகராஜ்

Feb 2011 | Posted in Articles

தேடல் இயந்திரம் (Browser)


தேடல் இயந்திர உலகின் மன்னன் கூகுள் என்றால் யாஹூ
(www.yahoo.com) தொலைதூர வித்தியாசத்துடன் இரண்டாவது
இடத்திலும், மைக்ரோசஃப்டின் பிங் (www.bing.com) 3 வது இடத்திலும்
இருக்கின்றன. இணையம் பிரபலமாகத் தொடங்கிய காலகட்டத்தில்
கொடிகட்டிப்பறந்த lycos.com, excite.com, ask.com போன்றவை இந்த
போட்டியில் டெபாசிட் இழந்து பல வருடங்களாகிவிட்டன. சமுக
வலைதளப் போரில் இப்போது இங்கே ஹிட் ஃபேஸ்புக் (www.facebook.com)
மைஸ்பேஸ் (www.myspace.com), டேக்ட் (www.tagged.com) போன்றவை கடும்
போட்டியிடுவது இரண்டாவது இடத்திற்கே.
நிறுவப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் 300 மில்லியன் பயன ீட்டாளர்களை
சம்பாதித்துக் கொண்டிருக்கும் பேஸ்புக் தளத்துக்கு இணைய
வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. இணையம் முழுவதும் உலவித்
தகவல்களை சேகரிக்கும் தேடல் இயந்திரங்களின் மிகப்பெரிய சவால்,
லேட்டஸ்டான தகவல்களை தேடல் முடிவுகளில் முதல் பக்கத்தில்
கொண்டுவருவது.
Google கூகுளை அதிகம் பயன்படுத்துபவருக்குக் கூகுள் சாதாரண
வலைதளங்களைவிட வலைப்பதிவு (Blogs) பக்கங்களுக்கு
முக்கியத்துவம் கொடுப்பது தெரிய வரும். பாரம்பரிய வலைதளங்
களைவிட வலைப்பதிவுகள் தகவல்களை வேகமாக பிரசுரிக்க முடியும்
என்பதால் இந்த முக்கியத்துவம். திறம்பட வேகமாக தொகுக்கும் திறன்
மட்டுமல்லாது, பொருத்தமான தளங்களை ஒரு தேடல் தளம்
அடையாளம் காட்டுவது பயன ீட்டாளர்களுக்கு முக்கியம்.
ஆனால் சமுக வலைதள நிறுவனங்களிடமிருந்து பயன ீட்டாளர்கள்
எதிர்பார்ப்பது சற்றேவித்தியாசமானது. தனது நட்பு வட்டாரத்தின் (Social
Graph) செயல்பாடுகளை உடனுக்குடன் வேகமாகத் தெரிந்துகொள்வதை
பயன ீட்டாளர்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு நடைபெறும் தகவல்
பரிமாற்றத்தை எவ்வளவு விறுவிறுப்பாக கிரகித்துக்கொள்ளமுடியுமோ
அந்த சமுக வலைதளங்களுக்கு வெற்றிபெரும் வாய்ப்பு அதிகம்.
அதனால் தான் பேஸ்புக் நிறுவனம் இந்த தளத்தில் ஆதிக்கம்
செலுத்துகிறது. ஆனால் கூகுள் , பேஸ்புக் இரண்டின் பிசினஸ்
மாடல்களுக்குமே சவாலாக வந்திருப்பது தங்ஹப் பண்ம்ங் ரங்க்ஷ கண
நேர இணையம் என்று இதை அழைக்கலாம். இதன் நோக்கம் நட்பு
வட்டாரத்தின் உரையாடல் மட்டுமல்ல இணையத்தின்
பயன ீட்டாளர்கள் எவருடைய தகவல்களையும் அந்த நொடிப்பொழுதில்
தேடித்தர முடிகிறஇந்த காண்செப்ட்டின் தாக்கம் டிவிட்டரின் பிரமாண்ட
வெற்றியால் தெரியும்.
டிவிட்டரில் யார்வேண்டுமானாலும் எவருடைய டிவிட்டர்
பக்கத்தையும் படிக்கலாம். டிவிட்டர் ஒரு தனிப்பட்ட வலைதளம்
மட்டுமல்லாது அதில் பதிவாகும் டிவிட்டுகளை
மற்றவலைதளங்களுக்கும் மென்பொருட்களுக்கும்
பயன்படுத்திக்கொள்ள இடமளிப்பதால் பெரும்பாலான டிவிட்டுகள்
நீங்கள் அனுப்பிய சில நொடிகளில் பலதரப்பட்ட வலைதளங்களில்
பதிவாகிவிடும். ஆனால் டிவிட்டரில் பிரைவஸி என்பது பூஜ்யம்.
ஆனால் கணநேர இணையம் இன்டர்நெட் தொழில்நுட்பத்தின் அடுத்த
யுகம். கூகுள் போன்றதேடல் இயந்திர நிறுவனங்களும், பேஸ்புக்
போன்றசமுக வலைதள நிறுவனங்களும் டிவிட்டரின்
பிரமாண்டத்தைக் கண்டு மிரண்டு தமது வலை தளங்களை கணநேர
இணையத்திற்கு மாற்றமுயற்சித்துள்ளது.
Logoff …
திறமைக்கு மரியாதை www.zoogoo.com
உங்கள் திறமைக்கு ஏற்றமேடை அமைத்துக்கொடுக்கும் தளம்.
புகைப்படம், அனிமேஷன், கட்டுரை, கவிதை என உங்களின்
படைப்புகளை இணைத்து பாராட்டு வாங்கலாம். உங்களின் இசை,
கவிதை, விளையாட்டு, பேஷன் டிசைனிங் என பலதரப்பட்ட
துறைகளில் உங்களுக்குள் ஒளிந்திருக்கும். திறமையை வடியோ

வடிவில் இங்கு அப்லோடு செய்தால் உங்கள் திறமைக்கு மதிப்பெண்
வழங்கி விமர்சனமும் செய்கிறார்கள். உங்களை இன்னும் எப்படி
மேம்படுத்திக் கொள்வது என்று வகுப்பும் எடுக்கிறார்கள்
சுடச்சுடஉலகம்! www.newspaperindex.com
உலகச் செய்திகளை அறிய ஆசையா? 200 நாடுகளைச் சேர்ந்த
செய்தித்தாள்களின் தளங்களுக்கான லிங்க் இங்கே உண்டு. இந்த
இணைய பத்திரிக்கைகள் எதற்குமே நீங்கள் சந்தாதாரர் ஆக
வேண்டியதில்லை. அப்படியே படித்துக்கொள்ளலாம். வார, மாத
இதழ்களின் செய்திக் கட்டுரைகள், உலக தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளும் உண்டு

சாதனை வாழ்விற்கான சந்தோச


வழிமுறைகள் 50
Author: டாக்டர் இரா. மோகன்குமார்

Feb 2011 | Posted in Articles

என்னுடைய “உறவுகள் மலரட்டும்” என்ற பயிலரங்குகளின்


பங்கேற்பாளர்கள் பலர், தங்கள் குடும்பத்தார் , உறவினர் , நண்பர் உடன்
பணிபுரிவோரிடம் , இருந்த சமூக உறவு சீர்குலைய முக்கிய காரணமாக
தெரிவிப்பது குறைகூறுதல் ஆகும். ஓன்றில் , இவர்கள் அவர்களை
திருத்தும் எண்ணத்துடன் , அவர்களது குறைகளை சுட்டிக்காட்டி ,
இருப்பார்கள் அல்லது அவர்கள் , இவர்களது குறைகளை
எடுத்துரைத்திருப்பார்கள்.
குறைகாண்பது சரியா? தவறா? என்பதற்கு விடைகாணும் விதமாக,
பயிலரங்கு ஒன்றில் பெண் பங்கேற்பாளர் ஒருவர் தெரிவித்த அனுபவ
பகிர்வை , இங்கு விவரிக்கின்றேன். அந்த பெண்மணிக்கு ஒரே மகன்.
மகனுக்கு மூன்று குழைந்தைகள். மகன் மனைவியை தேர்ந்தெடுப்பதில்
அந்த பெண்மனியின் விருப்பமே வெற்றிபெற்றது. மகனும் மருமகளும்
சந்தோக்ஷமாக ஆனந்த வாழ்வு வாழ்ந்து வந்தனர். ஒரே மகன்
என்பதால் தாய் தந்தையோடு ஒன்றாக வாழ்வதில் மகன் உறுதியோடு
இருந்தார்.
பெண்மணி அவர்கள் பகிர்ந்து கொண்ட செய்தி, “ஐயா, இன்று, இந்த
பயிலரங்கில் கலந்து கொண்ட பின்பு தான் நான் செய்த மகா தவறு
ஒன்றை உணர்ந்து கொள்ள முடிந்தது.
என் மருமகளை ஆரம்பம் முதல் மகனிடமும், என் கணவன்,
மருமகளின் வட்டார்
ீ மற்றும் ஊராரிடம் குறைகூறி துன்புறுத்தி,
இறுதியில் என் மூன்று பேரக்குழந்தைகள் அம்மா , இல்லாமல் வளர
வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தான் காரணமாகி விட்டேன்.
இப்போது தான் மூன்று உண்மைகளை உணர முடிகின்றது.
ஒன்று : என் மாமியார் என்னைப் படுத்திய கொடுமைகள், ஏற்படுத்திய
அவமானங்கள், கண்ட குறைகளினால் நான் பட்ட துன்பங்களை, மறந்து
அதே தவறை என் மருமகளுக்கு எதிராக நான் செய்து விட்டேனே
என்பது.
இரண்டு: நான் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் குறைகள் மற்றும்
நிறைகள் கலந்தே வாழ்கின்றனர் என்பது
மூன்று: என் மருமகளிடம் இருந்த கணவன் மற்றும் குழந்தைகளுக்கு
கொடுத்த அன்பு மற்றும் அரவணைப்பு, உழைப்பு, பொறுப்பு, மரியாதை
செலுத்தும் பாங்கு போன்ற பல்வேறு நிறைகளைக் கவனித்து அவரைப்
பாராட்டத் தவறிவிட்டேன். ஆனால் என்ன செய்வது இப்போது காலம்
கடந்து விட்டது. ஞானம் வந்து என்ன பலன்”.
ஆகவே ஒருவருடைய சிறப்புகள், பெருமைகள் மற்றும் சாதனைகள்
மற்றும் நன்மைகளைக் கண்டுபிடித்து பாரட்டக் கற்றுக்கொண்டால்,
மேற்கண்ட தீய விளைவுகளை, சண்டை சச்சரவுகளை, தற்கொலை
விவாகரத்துகளை, கொலை பகை போன்ற எண்ணற்ற
எதிர்விளைவுகளைத் தடுத்துவிட முடியும். அது மட்டுமல்ல ஒருவரைப்
பாராட்ட பாராட்ட அவர் தன் தவறுகளை குறைத்து நன்மைகளை
அதிகப்படுத்த துவங்கிவிடுவார். அத்துடன் அவருடைய செயல்திறன்,
மனஅமைதி, ஒத்துழைப்பு அதிகமாவதுடன் அவர் குடும்பம் அலுவலகம்
அல்லது சமுதாயம் சார்ந்த அனைவரும் சிறப்பாக செயல்படும் சூழலை
ஏற்படுத்த முடியும்.
ஏன் பாரட்ட மறுக்கிறோம்?
நம்முடைய கர்வம் அல்லது ஆணவம் நம்மை ஆட்டிப்படைக்க
அனுமதித்து விட்டால், நாம் ஆணவத்தின் அடிமையாகி விடுகிறோம்.
அதன் பின்பு ஆணவம் நம்மை ஆட்டிப்படைக்கிறது. வழிநடத்துகிறது.
ஆணவம் யாரேனும் நம்மை நல்லவர் என்று சொன்னாலோ புகழ்
பாடினாலோ சந்தோஷம் கொள்கிறது.
யாரேனும் நம்மை குறைகூறினாலோ, இகழ்ந்தாலோ, அறிவுரை
கூறினாலோ போதும் அதற்கும் மேல் நம்மை விட வளர்ச்சி
அடைந்தாலே போதும், நிலை குலைந்து விடுகிறது.
அடுத்து என்ன ?
நம்மை புகழ்ந்தவர் நன்மை செய்தாலும், தீமை செய்தாலும், நம்மை
தவறாக புரியவைக்கிறது.
நம்மை விட வளர்ந்துவிட்டவர் அல்லது (செல்வம், புகழ், அந்தஸ்தில்)
தவறைசுட்டிக்காட்டியவர், நன்மை செய்தால் நம் ஆணவம் நம்
புலன்களைக் கவனிக்க விடாமல் தடுக்கிறது. அவர் தவறு அல்லது
தீமை செய்தால் அதை நம்மிடம் பூதாகரமாக்கி நம்மை உணர்ச்சி
வசப்பட வைக்கின்றது. கோபமடைய வைக்கின்றது. ஆக நம்
ஆணவத்திற்குப் பிடிக்காத வர்கள் மொத்தமாக தவறுகளின் தீமைகளின்
மற்றும் குற்றங்களின் மொத்த உருவமாக நமக்கு தெரிய ஆரம்பித்து
விடுவார்கள்.
நம் ஞானக்கண்ணிற்கு அவர்களிடம் உள்ள எந்த ஒரு நன்மையையும்
தெரிந்துகொள்ள இயலாத நிலையில், நாம் எப்படி அவர்களை பாராட்ட
முடியும். இங்கு தான் நாம் ஒருவரை பாராட்டுவதை விட்டுவிட்டு
குறைகாண, குற்றம் சொல்லத் துவங்குகிறோம் .
பாராட்ட தொடங்குவோம்?
எந்தவொரு மனிதரிடமும் (கொலைகாரராக இருந்தாலும்) நிச்சயமாக
பல சிறப்புகள், மற்றும் நன்மைகள் காணப்படும். உங்களிடம் பிறரை
பாராட்டும் பழக்கத்தை உருவாக்கவேண்டும் என்ற அவா இருந்தால்,
முதலில் உங்களுடைய எதிரிகள் அல்லது பிடிக்காதவர்களின்
பட்டியலைத் தயார் செய்யுங்கள். பின் அமைதியான நிலையில்
அவர்களை பற்றிய நல்ல விஷயங்களை, அவர்கள் செய்த
நன்மைகளை, அவர்களின் நல்ல குணநலன்களை விருப்பு வெறுப்பின்றி
பட்டியலிடுங்கள். இவற்றைமுழு மனதோடு பட்டியலிடத் துவங்கினால்,
உங்கள் ஆணவம் பயப்படத் துவங்கும் அடங்க ஆரம்பிக்கும். பின் அது
உங்களைப் பிறருடைய நன்மைகளைக் கண்டுபிடித்துப் பாராட்ட
அனுமதிக்கும். பிறர் நன்மைகளைக் கண்டு பிடித்து பாராட்டத்
துவங்கினால் அவர்களுக்குச் சந்தோஷ சாதனை வாழ்வு
சாத்தியமாகும். அத்தோடு நம் வாழ்விலும் வாசமும், வசந்தமும் வசத்

துவங்கும்.
(மீ ண்டும் தன்னம்பிக்கையோடு சந்திப்போம் அடுத்த இதழில்)

இராகம் இதயராகம் எத்தனை


வகை ?

Author: டாக்டர் ஆனந்தகுமார் IAS

Feb 2011 | Posted in Articles

கிராமங்களில் பிற்பகல் வேளைகள் எண்பதுகளில் அமைதியானவை.


வெறிச்சோடிய வெயில் மனதிற்குள் விதைக்கும் நினைவுச் செடிகள்
வண்ணமயமானவை. ஆடு மேய்க்கின்ற வேப்ப மரத்தடிகள் அனல்
வசினாலும்
ீ ஆழமான அமைதியை உருவாக்குபவை. எப்போதாவது
கடந்து போகிற மாட்டு வண்டியும் இருசக்கர பழைய லூனாவும் தவிர,
அதிக போக்குவரத்து இடையூறு இல்லாத கிராமத்து மத்தியானங்கள்
இசைக்கு உகந்தவை. வெறுமையும் வெண்மையும் வெம்மையும்
சரிவிகிதத்தில் கலந்த அந்த பருத்தி கரிசல் காட்டு நண்பகல் வேளைகள்
இவ்வளவு வருடங்கள் கடந்த போதிலும் உள் மனதோடு சங்கீ தம் பாடிக்
கொண்டிருப்பதை இப்பொழுதுதான் உணர முடிகின்றது.
அண்ணா நூற்றாண்டு நூலகம் போயிருந்தோம். மூன்றாவது மாடியில்
தமிழர் புத்தகப் பகுதியில் வாழ்க்கை வரலாறு பகுதியில் ஏ.ஆர்.
இரஹ்மானின் வாழ்வு குறித்த புத்தகம் கண்ட நினைவு பள ீரிடுகின்றது.
இசை மேதை பீத்தோவானிலிருந்து உலகின் எண்ணற்ற இசை
வடிவங்களும் இசைஞானியின் இராக படைப்புகளும் மற்ற ஒப்பற்ற
கலைஞர்களின் ஒவ்வொரு குழந்தைகளையும் இரசித்து
சிலாகிப்பதானால்… எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?
என்றல்லவா பாடத் தோன்றுகின்றது.
தமிழில் “ழ” பிறப்பது எவ்வாறு என சிறப்பிடம் கொடுத்திருப்பது போல,
இசை பிறக்கும் இடங்களை மயிலையார் விளக்கி மிடற்றினால் குரலும்,
நாவினால் துத்தமும் என எடுத்து மூக்கினால் தாரமும் பிறக்கும் என
முடிக்கையில் தமிழிசை படிக்க ஆர்வம் அதிகரிக்கின்றது.
வாழ்க்கையில் எதாவது ஒரு சுரத்தின் அடி நாதம் எல்லோருடைய
மனதிலும் இருக்கத்தான் செய்கின்றது. தியானம் செய்யும் பொழுது
மனதை அமைதிப்படுத்திக் கொண்டு இதயத்தின் ஓசையைக்
கேளுங்கள் கவனியுங்கள் என்று சொல்வார்கள். நண்பரொருவரோடு
சேர்ந்து முயற்சிக்கையில் பதினைந்து நிமிடம் கழித்துதான் தன்னால்
தன் இதயத்தின் துடிப்பையும் அது உருவாக்கும் அதிர்வையும் கவனிக்க
இயன்றதாகச் சொன்னார். இதயத்தை நமது நட்டுவனார் என்று
வைத்துக் கொண்டால் அவர் ஜதி மாறாமல் நன்றாகவே தட்டிக்கொண்டு
இருப்பது இசையென புரிந்து கொள்ள முடியும்.
பரெய்லியில் கல்லூரியில் படித்த காலத்தில் அவசர அவசரமாகப்
புத்தகங்களைச் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது. உடனே இசையும்
வருகிறது. வானொலி கேட்டுக் கொண்டு படிப்பது பழக்கமாதலால்
படித்ததை நினைவிலிருந்து வெளியே எடுக்கையில் கூடவே இசையும்
வெளியே விழுகிற அதிசயம் தெரிய வருகின்றது. பதட்டமான
சூழ்நிலைகளில் அழுத்தமான இசையொன்று யாரும் கேட்காமலேயே
காதுகளில் ஒலிக்கக் கேட்கலாம்.
நண்பரொருவருக்குள் உள்ள இசை தாகம் தனது கடுமையான
காவல்துறை முறுக்கு மீ சை உடற்பயிற்சி வேகத்திற்கு இடையில்
பார்க்க நேர்ந்தது. பதினோரு மணி இரவில் தனது பாடலாசிரியரை
சந்தித்து ‘பியானோ” கற்றுக் கொள்கின்ற ஆர்வத்தை எந்த வகையில்
சேர்க்க.
இசை உடனிருப்பவர்களுக்குத் தொற்றிக் கொள்ளக் கூடியது. இன்னும்
மலை வாசஸ்தலங்கள் போனதும் புதிய வானம் புதிய பூமி என்று
துள்ளாத கால்கள் குறைவாகவே இருக்கும்.
ஆழமான மனது இசையினால் உருவாகும், என்று சொன்னால்
மெய்யில்லை என்று சொல்ல முடியாது. மெய்மறக்கும் இசை
மனக்காயங்களை ஆற்றுகின்ற மருந்தாகின்றது. என் பாட்டுத்
திறத்தாலே இந்த வையத்தினைப் பாலித்திட வேண்டும் என்று பாரதி
சொன்னது நிஜமே. பாடல் காதுகளை வைகுண்ட வாசலாக்குகின்றது.
மாயக் கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடலில் தொடங்கி….. என்னோடு
தங்கு தங்கென்று சொன்ன தங்கக் குணத்தானை! எங்குநான் காண்பேன்
இனி? என்று கவிமணி தொடர்புள்ள எதுகைப் பாடலும் சாவே
உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ? என்று கேட்ட நேருவின்
பிரிவில் பாடிய பாடல் ஒன்றும் சோக இசையை மனதுக்குள்
மீ ட்டுகின்றன. டாம் ஹேங்ஸின் கண்களில் இந்த உணர்வை சோக
கீ தத்தை கையறு நிலையை ஒரு கவிதையைப் போல பார்க்க
வேண்டுமானால் ‘கேஸ்ட் அவே”(Cast Away) பார்க்க வேண்டும்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் தன்னைத் தவிர எந்த ஒரு
மனிதனையுமே பார்க்காமல் இருந்தால் பேச்சே இசையைப் போல்
மாறிப்போய் விடுகின்றது.
சதுரங்கப் பலகையில் முதல் வரிசையில் சிப்பாய் வைத்தால் எப்படி,
நமக்கு ஆடத் தெரியாது என, ஆடத் தெரிந்தவர்களுக்குத்
தெரியவருமோ? அதுபோல ஊண்ய்ங் அழ்ற்ள் என்று சொல்கின்ற இந்த
கர்நாடக இசை, நாட்டிய சமாச்சாரங்கள் அவ்வப்போது ‘கற்றது
கையளவு’ என்றும் ஔவை மேலும் சொன்ன ‘எல்லார்க்கும்
ஒவ்வொன்றும் எளிது’ என்றும் சொல்லிப் போகின்றன.
அதிகம் இசை படித்தால் நன்றாகத்தான் மாயமாகும் போல வாழ்க்கை.. ..
..
–மேலும் வளரும்.. .. ..
தேர்வில் வெற்றியை
வென்றிடுவோம்

Author: Er. A.G. மாரிமுத்துராஜ்

Feb 2011 | Posted in Articles

நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குக் கூட, தேர்வுகள் வந்துவிட்டால்


உதறல்தான், என்ன கேட்பார்களோ, என்ன எழுதுவதோ, என்றபயம்
இருந்தபடியே இருக்கும். சுமாராகப் படிப்பவர்களைப் பற்றி கேட்கவே
வேண்டாம். பரீட்சை ஏன் தான் வருகின்றதோ, என அலுத்துக்
கொள்வார்கள். நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, படிக்கும்
மாணவர்கள் அனைவரும் தேர்வுகளைச் சந்தித்தே ஆகவேண்டும். இது
மாற்றப்படாத ஒரு விதியாகும். எனவே மாணவப் பருவத்தில்,
தேர்வுகளைச் சந்திப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டால்
தைரியமாக தேர்வுகளை அணுகலாம் என்பது மட்டுமல்ல, தேர்வில்
நல்ல மதிப்பெண்களையும் பெறமுடியும்.
படிக்காமல் தேர்வுகளைச் சந்திக்கும் துணிவு வராது. அது சரி ஆனால்
எப்படி படிப்பது என்கிறீர்களா? எப்படிப் படித்தாலும் ஒன்றும்
நடக்கமாட்டேன் என்கிறது, என புலம்பும் மாணவர்களும், இனி
கவலைப்பட வேண்டாம். இங்கே கொடுக்கப்படும் குறிப்புகளை
கவனமாக பின்பற்றுங்கள். வரும் தேர்வுகளில் உங்களை அறியாமலே
அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பீர்கள்.
முதலில் நாம் படிக்க உட்கார்ந்தால், பல விஷயங்கள், நமது படிப்பைக்
குலைக்கும் சக்திகளாகச் செயல்படுகின்றன. அவற்றை இனி
பார்ப்போம்.
· பயம்
· மன நெருக்கடி
· கவனச் சிதறல்கள்
· தாழ்வு மனப்பான்மை
· அதீத நம்பிக்கை
· படிக்கும் திட்டம் இன்மை
· மனதை ஒரு முகப்படுத்தாமை
· மன உறுதியின்மை
· வெற்றி பெறுவதில் ஆசையின்மை
பாடத்தின் முதல் பத்தியையும், பின்னர் கடைசி பத்தியையும்
படியுங்கள். அது அப்பாடத்தின் நோக்கத்தையும், சாராம்சத்தையும்,
உங்களுக்குச் சொல்லும்.
பாடத்தின் உள்ளே கொடுக்கப்பட்டுள்ள முக்கியத் தலைப்புகள்
அனைத்தையும் படியுங்கள். இது அந்தப் பாடம் எப்படி
கட்டமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை சொல்லும்.
பாடம் முழுவதையும் ஒவ்வொரு பத்தியின் முதல் வாக்கியங்களை
வாசித்துப் பாருங்கள். இது அந்தந்தப் பத்தியில் கூறப்படும்
கருத்துக்களைப் பற்றிய அறிமுகமாக இருக்கும்.
இனி அந்தப் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்கள்,
அருஞ்சொற்பொருள், சொல்லப்பட்டுள்ள முக்கியக் கருத்துக்கள்
என்னென்ன என நீங்கள் கருதுவதை, ஒரு குறிப்பு புத்தகத்தில்
எழுதுங்கள் எல்லாம் ஓரிரு வார்த்தைகளில் வரிசைப்படுத்தி
எழுதினால் போதும்.
இப்போது நீங்கள் எந்த ஏற்பாடுமின்றி, பாடத்தைப் படிக்கவே
தொடங்கவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். முதலில் பத்து
தடவை, பாடத்தின் முன்னும் பின்னும், கண்களை படரவிடுங்கள்.
இப்போது நீங்கள் அறியாமலேயே பாடத்தின் 50 – 60 சதவதம்

உங்களுக்குள் பதிவாகி இருக்கும்.
இனி, நீங்கள் மேலே சொன்னபடி பாடத்தை ஒருமுறை நிதானமாகப்
படித்துப் பாருங்கள். பாடம் எளிதாகப் புரிவதுடன் மிக ஆழமாக மனதில்
பதியும்.
தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள
1. ஆசிரியர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றார் என்பதைத்
தெரிந்து கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட பாடத்திலிருந்து
எதிர்பார்க்கப்படும் விஷயங்களை நீங்கள் சரியாக எழுதிவிட்டால் அதிக
மதிப்பெண்களைப் பெற முடியும்.
2. உங்களது மொத்தப் பாடங்கள் எவ்வளவு? அதை எப்படி தேர்வுக்கு
முன்னர் படித்து திருப்பம் செய்வது என்பது குறித்த திட்டம் தேவை.
3. தேர்வுக்காக படிப்பது என்பது தினமும் செய்யவேண்டிய ஒரு
வேலை,திரும்பத் திரும்ப படிக்கும்போது, குறிப்புகளை புரட்டிப்
பார்க்கும் போது பிடித்த விஷயங்கள் எளிதாக மனதில் தங்கும், தினமும்
படிப்பதால் மொத்தப்பாடங்களையும் மீ ண்டும் நினைவுபடுத்தி பார்க்கும்
நேரமும் குறைந்து விடும்.
4. சிலர் பரீட்சை வந்துவிட்டால் வகுப்பு
களுக்குப் போகாமல் வட்டில்
ீ இருந்து படிப்பார்கள், இது சரியான முறை
அல்ல, ஆசிரியர்களின் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவை, சில
முக்கியமான பாடப்பகுதிகள் கடைசி நேரத்தில் தான் விளக்கப்படும்,
எனவே அத்தகைய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.
தேர்வுக்கு ஒரு வாரம் முன்னால் செய்ய வேண்டியது
1. இது வரை நீங்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகள் உங்கள் பாடநூல்கள்,
பிற உதவி நூல்கள், அனைத்தையும், சேகரித்து அவற்றை முறைப்படி
அடுக்குங்கள். தேர்வுக்குத் தேவையான அனைத்தும் உங்களிடம்
நேரடியாக கைவசம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
2. இந்த ஒருவாரத்தில் எல்லா பாடங்களையும் படித்து முடிக்க மனதிற்கு
சரியான அளவில் நேரம் ஒதுக்கி, ஒரு அட்டவணை தயார் செய்யுங்கள்.
தேர்வுக்கு முன் இரண்டு தினங்கள் வெறுமனே திருப்பம் செய்வதற்கு
ஒதுக்குங்கள்.
3. ஒவ்வொரு பாடத்திலும் உங்களுக்கு நன்றாக தெரிந்த பகுதிகள்,
தெரியாத பகுதிகள் எது, எது என கணக்கெடுங்கள். இன்னமும் கவனம்
செலுத்தி படிக்க வேண்டிய பகுதிகளை படிப்பதற்காக போதிய நேரம்
ஒதுக்குங்கள்.
4. உங்களுக்கு நீங்களே சுய தேர்வு, உங்களுக்கு பிடித்த முறையில்
வைத்துக் கொண்டு, படித்த விஷயங்களைச் சொல்லி எழுதிப்பாருங்கள்.
5. அன்றாடம், ஆசனங்கள், உடற்பயிற்சிகள், தியானங்கள் மூலம்
மனத்தையும், உடலையும் உறுதியாக்கிக் கொள்ளுங்கள் இவற்றை
தொடர்ந்து செய்யுங்கள். பதட்டம் குறையும், படிப்பு இனிக்கும்.
தேர்வு தினத்தன்று செய்ய வேண்டியது
1, நன்றாக தூங்கி எழும்புங்கள் உடல் அசதி, சோர்வு இருப்பின் நன்றாக
தேர்வு எழுத இயலாது.
2, தேர்வுக்கு முன்னால் புதிதாக எதையும் படிக்க, மனப்பாடம் செய்ய
முற்பட வேண்டாம், தெரிந்த விஷயங்களை மட்டும் மறுபடி
படித்துப்பாருங்கள்.
3, நிறைய சாப்பிட வேண்டாம் அரைவயிறுக்கு சாப்பிட்டால் போதும்,
உணவு லேசானதாக இருக்கட்டும்,
4, தேர்வு அறைக்கு முன்னதாகவே சென்று விடுங்கள் தேர்வை நன்றாக
எழுதப் போவதாக கற்பனையும், உங்களுக்குள்ளே உறுதிமொழியும்
செய்துகொள்ளுங்கள்.
5, ஒருமுறை நிதானமான, ஆழமான, சுவாசப் பயிற்சியை செய்துவிட்டு
மன ஒருமைப்பாடுடன் தயாராகுங்கள்.
தேர்வின் போது கவனிக்க வேண்டியவை
· மூன்று மணி நேரத் தேர்வு எனில் மூன்று மணி நேரமும் தேர்வு
அறையிலேயே இருங்கள். எழுதி முடித்துவிட்டாலும் கூட, எழுதியதை
மறுபடி படித்துப்பாருங்கள். சிறு சிறு தவறுகள், இருந்தால் திருத்துங்கள்.
· மற்றவர்களின் செயல்களிலே கவனத்தை செலுத்தாது உங்களுடைய
வேலையிலே கண்ணும் கருத்துமாக இருங்கள்.
· கேள்வித்தாளில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும்
நிதானமாக வாசிக்கவும், கேள்விகளை ஒரு முறைக்கு இரு முறை
நன்கு படித்து புரிந்து கொண்டு கேள்விகளுக்கு ஏற்ற, சரியான அளவில்
விடைகளை எழுதுங்கள்.
· நேர நிர்வாகம் அதி முக்கியம், ஓவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு
கேள்விக்கும் எவ்வளவு நேரம் என்பதையும் முன்பே தீர்மானித்துக்
கொண்டு எழுதுங்கள், நேரம் தாண்டுகிறது எனில், அடுத்த கேள்விக்கு
போய் விடுங்கள், நேரம் இருந்தால் விடுபட்ட விடையை எழுதிக்
கொள்ளலாம்,
· முதலில் எளிதாக உள்ள கேள்விகளுக்கு, உங்களுக்கு நன்றாக பதில்
தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். மேலும் உங்கள்
கையெழுத்து, முதலிலிருந்து முடிவு வரை, ஒரே மாதிரி இருக்கட்டும்,
சரியான இடைவௌல் விட்டு நேர்க்கோடுகளில் தெளிவாக எழுதுங்கள்.
· முக்கிய செய்திகளுக்கு அடிக்கோடிர்டு, எழுதியதை மறுபடியும்,
சரிபாருங்கள். பக்க எண்கள் கேள்வி எண்கள் உங்கள் பதிவு எண்
போன்றவற்றைச் சரியாக எழுதியிருக்கிறீர்களா எனப்பாருங்கள்
எல்லாவற்றிக்கும் மேலாக,
தைரியமாக, தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள்
வெற்றி நிச்சயம்.

வாங்க பழகலாம் வெற்றி பெற


Author: ஆர். முருகேசன் M.A., M.Phil., Ph.D.,

Feb 2011 | Posted in Articles

நண்பர் நாய் ஒன்றைவாங்கியிருந்தார். வட்டில்


ீ கட்டிப்போடாமலும்
எதுவும் கற்றுத்தராமலும் விட்டிருந்தார். அது தன்னிச்சைக்கு வட்டிற்கு

வெளியே கேட்டுக்குள்# சுற்றி திரிந்தது. இயற்கை உபாதைகளைக்
கண்ட இடங்களில் செய்தது. நண்பர் ஆத்திரமடைந்தார். அடித்தார்.
பாவம் அதற்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு யோசித்த நண்பர் எந்த
நேரத்தில் அப்படி செய்கிறது என்று கவனித்தார். அந்த நேரத்தில்
வெளியே கொண்டு செல்ல அந்த பிரச்சனை நண்பருக்கும் நாய்க்கும்
தீர்ந்தது. ஆனால் வெளியே கூட்டிச்செல்லும் போது கயிறு கொண்டோ
சங்கிலியாலோ கட்டி கூட்டிச்செல்வதில்லை. அது தன்னிச்சைக்கு
வெளியில் சுற்றும். இயற்கை உபாதைகளுக்குப் பிறகு வட்டிற்குக்
ீ கூட்டி
வந்து விடுவார். ஒரு நாள் வெளியில் இருக்கும் போது ஒரு தெரு நாய்
அருகில் வர அதனுடன் விளையாடச்சென்றது. இன்னொருநாள் கேட்
திறந்திருக்க அந்த தெரு நாயை பார்த்த நண்பரின் நாய் வெளியே ஒட,
இவர் விரட்ட அடுத்த தெருவிற்கே ஓடிவிட்டது. நண்பர் மீ ண்டும்
பொறுமை இழந்தார். ஆனால் நாய் வளர்க்கும் எண்ணத்தை மட்டும்
விடவில்லை. சிறிது நேரம் கழித்து தேடிப்போனார். அடுத்த தெருவில்
இருந்த நாய்க்கு இவரைக் கண்டதும் மகிழ்ச்சி. இவருக்கோ கோபம்.
பாவம் அதற்கு வழி தெரியவில்லை. பழக்கமிருந்தால் திரும்பி
வந்திருக்கும். என்ன செய்ய? வந்ததும் நாய்க்கு அடி. பிறகு
வருத்தப்பட்ô ர். தவறு தன்னிடம் தான் உள்ளது என்பதை புரிந்து
கொண்டார். நாயின் இயல்பு படி விட்டதால் தன்னிச்சைக்கு அது நடந்து
கொண்டது. அடுத்த நாளில் இருந்து கயிறு கட்டி நாயை வெளியே
கொண்டு சென்றார். எங்கேயும் ஓடுவதும் இல்லை கண்ட இடங்களில்
அப்படி செய்வதும் இல்லை. அதனால் இருவருக்கும் பிரச்சனையும்
இல்லை.
சரி, இந்த நிகழ்வு இங்கு எதற்கு என்று யோசிக்கிறீர்களா? தொடர்ந்து
ஒரு செயலைச் செய்வதால் அது நாளடைவில் பழக்கமாகிவிடுகிறது.
அதுதான் நாய்க்கும் நண்பருக்கும் ஏற்பட்ட அனுபவம். பழக்கம்
வழக்கமாகிவிடுவது நாய் வளர்ப்பதற்கு மட்டுமல்ல்.நமது மனதையும்
உடலையும் பக்குவமாக வைத்துக்கொள்வதற்கும் இன்றியமையாதது.
ஒருசில குழந்தைகள் அதிகாலை எழுந்து படிக்கிறார்கள், ஆனால் நம்
குழந்நை ஏன் இப்படி என்று என்றாவது நினைக்கிறீர்களா? வருத்தப்பட
வேண்டாம். அது பெரிய விசயமே இல்லை. குழந்தை அதிகாலை
எழுந்திருக்க பழகி கொள்ளவில்லை அவ்வளவுதான். படிப்பது கூட
அப்படித்தான். உலக சாம்பியன் பட்டம் பெற்றபழுதூக்கும் வரர்

தன்உடல் பலத்தை மட்டும் நம்பியிருந்தால் அவரால் நிச்சயம் அந்த
பட்டத்தைப் பெற்றிருக்க முடியாது. மாறாக அவர் உடலை தயார்
படுத்துவதோடு அதிக பழுவை எப்படி தூக்குவது என்பதை
பழகிவந்திருப்பார். அந்த பழக்கம் தான் அவரை உலக சாம்பியனாக
ஆக்கி இருக்கிறது. இதே பழக்கம் தான் உலக நாயகன், சூப்பர் ஸ்டார்
போன்று மற்றதுறைதிறமையானவர்களின் அடையாளங்கள். எல்லாம்
பழக்கத்தின் பலன் தான்.
அடடா அந்த மாதிரி நல்ல பழக்கம் நம்மிடம் இல்லையே என
வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. அதை பெறுவதற்கான
முயற்சி செயல்பாட்டின் தொடக்கம் இன்று கூட இருக்கலாமே. எனவே
பயிற்சியும் பழக்கமும் வழக்கமாகிவிடும் நேரம் உங்கள் வெற்றி
உங்களை நோக்கி ஓடி வரத்துவங்கி விட்டது என்று
அர்த்தப்படுத்திக்கொள்ளுங்கள். எந்த ஒரு செயலும் ஆரம்பத்தில்
ஆர்வத்தின் விளைவாக துளிர்விட்டு முயற்சி செய்வதால் பயிற்சி
என்றசெயல்பாடு தொடர்ந்து பழக்கம் உங்களது வழக்கமாகி விடும்.
உங்கள் வழக்கமான பழக்கம் உங்கள் குணாதிசயங்களாக
மாறிவிடுகிறது. அதன் பிறகு அதுவே உங்கள்
அடையாளமாகிவிடுகிறது.
அவரைத் தெரியுமா என்று கேட்டால் … ஓ தெரியுமே எப்போதுமே
சிரித்த முகத்துடன் நம் தேவையைக் கரிசனமாக கேட்டுக்கொண்டு
சேவைபுரியும் ஓட்டல் சர்வரில் இருந்து நாடாளும் அமைச்சர்கள் வரை
நாம் அவர்களின் அடையாளமாக கொண்டிருப்பது அவர்களுடைய
நெடுநாட்களின் அல்லது ஆண்டுகளின் பழக்கம் என்பதில் சந்தேகம்
இருக்க வாய்ப்பில்லை.
உங்கள் உடல், மனம், உணவு முறைகள். நல்ல புத்தகங்கள் படிப்பது
போன்றவற்றில் நல்லமுறையில் பழக்கப்படுத்திக்கொள்ள
கற்றுக்கொள்ளுங்கள்.
வெற்றியை நோக்கி உங்கள் செயல்பாடுகளை பழக்கி கொண்டால்
வெற்றி உங்களை நோக்கி வருவது வழக்கமாகிவிடும். அதனால் வாங்க
பழகலாம்… அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்……

தளராத முயற்சி இருந்தால்,


வளராதா ஆக்கம்?

Author: சௌதாமினி

Feb 2011 | Posted in Articles

தளராத முயற்சி வெற்றியைத் தரும்…


நீங்கள் எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் தளராத முயற்சி
வேண்டும். ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.
அந்தச் செயலின் மேல் உங்களுக்கும் அவ்வளவு விருப்பம். ஆனால்
அந்தச் செயலைச் செய்வதற்கு முயற்சி வேண்டாமா? ஆக்கம், ஊக்கம்,
எல்லாம் இருந்தும் முயற்சி இல்லாவிட்டால் எந்தக் காரியமும் வெற்றி
பெறுவதில்லை. மிகச்சிறந்த சாதனையாளர்களின் பட்டியலை
எடுத்துப்பாருங்கள். அவர்கள் அனைவருமே தளராத முயற்சியின்
மூலமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
முயற்சி திருவினையாக்கும்
ஒரு தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு
இருக்கின்றீர்கள். ‘ஒரு பஞ்சாலைக்கு வேண்டிய உபகரணங்களைச்
சொந்தமாக நாமே தயாரித்தால் என்ன?’ என்று நினைக்கின்றீர்கள்.
வங்கியில் பெருந்தொகையைக் கடனாக வாங்குகின்றீர்கள். தொழிலை
ஆர்வத்துடன் தொடங்குகின்றீர்கள். பஞ்சாலைக்கு வேண்டிய
உபகரணங்களை உருவாக்குகின்றீர்கள். பணிக்கு ஆட்களைச் சேர்த்துக்
கொண்டு உழைக்கின்றீர்கள். உங்களுடைய தளராத முயற்சி வெற்றி
பெறுகின்றது. ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்றவள்ளுவரின்
குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றீர்கள்.
உழைப்பால் உயர்ந்த உங்களை இயற்கை வாழ்த்தும்
‘எவ்வளவு சோதனைகள் வந்தாலும் வெற்றி பெறுவேன்’ என்றமன
உறுதியோடு இடைவிடாமல் உழைத்தால் இந்த உலகிற்கு ஒளி
கொடுக்கும் கதிரவனின் கன்னத்தில் நீங்கள் முத்தமிடலாம். இந்த
உலகத்திற்குக் குளிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலாவோடு
நீங்கள் கைகோர்த்துக் கொண்டு உலா வரலாம். மலையளவு உயர்ந்த
நீங்கள் மலையையே உங்கள் மடியில் வைத்துக் கொஞ்சலாம். உங்கள்
உயர்வைக் கண்டு, நெடுங்கடல் கூடத் தன் அலைக்கரங்களை
நீட்டியபடியே உங்களை அன்போடு அழைப்பதற்குப் பாய்ந்துவரும்.
உழைத்து உழைத்து வானளவுக்கு உயர்ந்துவிட்ட உங்களை ஆகாயம்
கூடக்குளிர்ந்து போய் உங்கள் மேல் மழையைப் பெய்து உங்களை
ஆசிர்வதிக்கும்.
தளராத முயற்சியின் மூலம் முன்னுக்கு வந்தவர்கள்
தளராத முயற்சியினால் மிகவும் கடுமையாக உழைத்து அமெரிக்க
நாட்டின் அதிபரானார் ஆபிரஹாம் லிங்கன். அவருடைய
முகத்தோற்றம் அனைவரும் விரும்பும்படி அவ்வளவு சிறப்பாக
இருக்காது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், தாழ்வு
மனப்பான்மை என்னும் பேய் தன் உள்ளத்தில் புகாவண்ணம் விழிப்பாக
இருந்து தன் கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தார்.
உலக நாடுகளையெல்லாம் வென்று மாபெரும் சக்கரவர்த்தியாக
விளங்கிய மாவரன்
ீ அலெக்சாண்டரின் உயர்வுக்குக் காரணம்
அவருடைய தளராத முயற்சி தான்.
பிரான்சு நாட்டுப் படையில் சாதாரண சிப்பாயாகப் பணியாற்றிய
நெப்போலியன், தன்னுடைய தளராத முயற்சியால் அந்த நாட்டுக்கே
மன்னனானான்.
தோல்வியில்லாமல் வெற்றி இல்லை
மிகப்பெரிய சாதனைகளைப் படைத்த சாதனையாளர்கள் அனைவருமே
தோல்வியின் வாயிலாகத்தான் சில உண்மைகளைக் கற்றுக்
கொண்டார்கள். தோல்விகள் இல்லாமல் வெற்றியில்லை.
தோல்விதான் ஒரு மனிதனுக்குச் சிறந்த மன உறுதியைத் தருகிறது.
தோல்வித் தோட்டத்தில் அவர் துவண்டு போயிருந்தால், அவர் மிக
உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.
அறிவியல் மாமேதை தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை கடுமையான
போராட்டங்கள் நிறைந்தது. எடிசனின் இளமைப்பருவம் எத்தனையோ
துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறது. எடிசன் தன்னுடைய ஆய்வில்
பல தோல்விகளைக் கண்டார். எத்தனையோ தோல்விகளைக்
கண்டபோதிலும் அவர் மனம் துவண்டு விடவில்லையே.
தோல்விகளைத் தொல்லைகள் என்று அவர் ஒரு நாளும்
நினைத்ததில்லை. தோல்விகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்
செல்லும் எல்லைகள் என்றேநினைத்தார்.
முயற்சியுடையவர், செல்வம் இழந்தாலும் கவலைப்படமாட்டார்
இடைவிடாத முயற்சியை உடையவர்கள், ஏதேனும் ஒரு தொழிலில்
ஈடுபட்டு அதனால் தன்னுடைய செல்வம் முழுவதையும் இழந்தாலும்
கூடக் கொஞ்சம் கூடக் கலங்க மாட்டார்கள். இடைவிடாத முயற்சியை
உடையவர் மீ ண்டும் மீ ண்டும் முயற்சி செய்து தாங்கள் இழந்த
செல்வத்தை அடைவார்கள்.
ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்
என்று வள்ளுவரும் மிகச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.
நீங்கள் கடுமையாக முயற்சி செய்தால் இந்த உலகில் முடியாத காரியம்
எதுவுமில்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல்  பலன்கள்
உங்களுக்குக் கிடைக்கும் என்பதைக்கூட எண்ணிப்பார்க்காமல் 
உழைப்பு உழைப்பு என்று நீங்கள் இடைவிடாமல் உழைத்துக்
கொண்டிருந்தால் வெற்றித் திருமகள் உங்களைத் தேடிவரமாட்டாளா?
திறமைகள் இருந்தாலும், தன்னம்பிக்கை வேண்டாமா?
உங்களுக்குத் தன்னம்பிக்கை ஒன்று இருந்தாலே போதும். முயற்சி,
உழைப்பு, ஊக்கம், ஆக்கம் என்று எல்லாமே இருந்தும் தன்னம்பிக்கை
இல்லாவிட்டால் அதனால் என்ன பயன்? சில பேர் மாடுபோல்
உழைப்பார்கள். கடுமையான முயற்சிகள் செய்வார்கள். எவராவது
தூண்டிவிட்டால் ஊக்கத்துடன் பணியாற்றுவார்கள். ஆனால்
தன்னைப்பற்றி ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருக்காது. “சிறந்த
சாதனைகளைப் படைக்குமளவுக்கு என்னிடம் திறமைகள், ஆற்றல்கள்
எதுவும் என்னிடத்தில் இல்லை” என்று தன்மேல் நம்பிக்கை இல்லாமல்
பேசுவார்கள். இவர்கள் எப்படி முன்னுக்கு வரமுடியும்? எப்படி சிறந்த
சாதனைகளைச் செய்ய முடியும்? தன்னம்பிக்கை என்பது ஆணிவேரைப்
போன்றது. இது ஆட்டம் கண்டுவிட்டால், உங்கள் முன்னேற்றத்திலும்
வாட்டம் வந்துவிடும்.
விதியைக்கூட நீங்கள் வென்றுவிடலாம்
தொடர்ந்து நீங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தால், நீங்கள்
எதையும் சாதிக்க முடியும். முயற்சியில் தளர்வு வந்தால் மலராதே
உங்கள் முன்னேற்றம். தளராத முயற்சிகளைச் செய்து கொண்டே
இருங்கள். உங்களுக்குக் கடுமையான முயற்சி இருக்குமேயானால்,
விதியைக் கூட வென்றுவிடலாம். நீங்கள் தளராத முயற்சிகளைச்
செய்யும்போது சில சமயம் தோல்விகள் வரும் வாய்ப்புண்டு.
வெற்றிபெற்றஎவருமே தோல்வி என்றஅரக்கனைச் சந்திக்காமல்
இருந்ததில்லை. அந்தத் தோல்வி அரக்களை எப்படி வழ்த்த
ீ வேண்டும்
என்று திட்டம் தீட்டி, கடும் முயற்சி என்றவலிமையின் மூலமாக அந்த
அரக்கனை நீங்கள் வழ்த்த
ீ வேண்டும். சாதனைகளை நீங்கள் நிகழ்த்த
வேண்டும் என்று சொன்னால், சாதனைகளை நோக்கி நீங்கள் செல்ல
வேண்டும். சாதனைகள் உங்களைத் தேடி வராது.
துன்பங்களை ஏற்றுக் கொள்கின்றமனவலிமை வேண்டும்
நீங்கள் எண்ணும் ஒரு செயலில் அல்லது ஒரு தொழில் முன்னேற்றம்
காண வேண்டும் என்றால் ஊக்கம் வேண்டும். உங்களுக்கு ஊக்கம்
இருக்குமேயானால் உங்கள் செயல்பாட்டில் விரைவு இருக்கும். உங்கள்
உள்ளத்தில் அச்சம் என்பதே கடுகளவு கூட உங்களுக்கு
இருக்கக்கூடாது. உங்களுக்கு அச்சம் இருந்தால் எந்தச் செயலையும்
செய்வதற்குத் தயங்குவர்கள்.
ீ எனவே அச்சத்தை உதறித் தள்ளுங்கள்.
துன்பங்களை ஏற்றுக் கொள்கின்றமனவலிமை உங்களுக்கு
இருக்குமேயானால், எந்தத் தொழிலையும் மிகச்சிறப்பாகச் செய்ய
முடியும். “எது வந்தாலும் வரட்டும். எனக்குக் கவலை இல்லை. நான்
நினைத்ததை முடித்தே தீருவேன்” என்றஎண்ணம் உங்களுக்கு
இருக்குமேயானால் நீங்கள் நினைக்கும் எந்தச் செயலும் வெற்றிபெறும்.
தளராத முயற்சி இருக்குமேயானால் வளராதா ஆக்கம்? மலராதா
உங்கள் வாழ்க்கை?

முயன்றேன்… வென்றேன்…
Author: ஆசிரியர் குழு

Feb 2011 | Posted in Articles

சமுதாயம் எங்களைப் பார்த்து பரிதாபப்படாமல், பெருமைப்பட


வேண்டும் என்பதைப் போல ‘அகல்’ அமைப்பில் சமீ பத்தில்
பெற்றசாதனையாளர் விருது எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது என
உற்சாகத்தோடு ஆரம்பித்தார் பிரியா பாபு.
என்னைப்போலவே என் கணவரும், இரு கால்களும் போலியோவால்
பாதிக்கப்பட்டவர். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள்.
எங்களைப் பொறுத்தவரை இரு கால்களும் இல்லை. இருவருக்கும்
பிறக்கும் குழந்தையும் ஊனமாக பிறக்குமோ என்றபயத்தில்
குடும்பத்தார் மறுக்க, பல எதிர்ப்புகளையும் மீ றி, மதம் மாறி திருமணம்
செய்து கொண்டோம். திருமணம் முடிந்த நேரம் அவருக்கு அரசு
மானியத்தில் சுந்தராபுரத்தில் ஒரு பெட்டிக்கடை கிடைத்தது.
MBA படித்துக்கொண்டே வேலைபார்த்து கிடைக்கும் சம்பளத்தில்
எங்களுக்குப்போக, எஞ்சிய பணத்தில் எங்கள் பிறந்த நாள், திருமண
நாளில் எங்களைப்போல கஷ்டப்படுவர்களுக்கு உதவியும் செய்கிறோம்.
ஊனமுற்றோர்கள் வடு
ீ சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள் என
ஆரம்பத்தில் வாடகை வடு
ீ கிடைக்காமல் தவித்த இவர்கள், இதே ஊரில்
சொந்த வடு
ீ கட்டி வாழ வாழ்த்துவோம்.
சொந்தக்காரர்களையும், சொந்த கால்களையும் இழந்தபோதும்
தன்னம்பிக்கை கால்கள் வேரூன்றியிருக்கும் இவர்கள் மாற்றுத்
திறனாளிகள் அல்ல, மற்றவர்களை மாற்றும் திறனாளிகள்!

ஜெயம் பிராணி நல
அறக்கட்டளை
Author: ஆசிரியர் குழு

Feb 2011 | Posted in Articles

ஜெயம் பிராணி நல அறக்கட்டளை என்று நிறுவி பணியாற்றவேண்டும்


என்கிற எண்ணம் எப்படி உதித்தது?

என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நான் கால்நடை பராமரிப்புத்


துறையில் 36 1/2 ஆண்டுகள் கால்நடை ஆய்வாளராகப் பணியாற்றி பணி
நிறைவு பெற்றபின்பு இந்த வாழ்க்கையின் உயர்விற்கு வாய்ப்பும்,
வசதியும் ஏற்படுத்திக் கொடுத்த கால்நடைகளுக்கும் விவசாயப்
பெருங்குடி மக்களுக்கும் ஏதாவது நன்றிக் கடன் ஆற்றவேண்டும்
என்கிற வெறியில் ஆரம்பிக்கப்பட்டது இந்த அறக்கட்டளை. செய்யத்
தெரியாத வேலையைத் தேர்ந்தெடுத்து தோல்வியுறுவதைவிட,
செய்யத்தெரிந்த வேலையைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற மனம்
எண்ணியதும் ஒரு காரணம்.
மனிதன் வாழ்வதற்காக தன் ரத்தத்தையே பாலாக மாற்றி தரும்
பசுக்களையும், ஏழைகளின் பொருளாதார நிலை மேம்பாடு அடைய
உதவிடும் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளையும், மனிதனின்
சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்கு சுழற்சியாகப் பயன்படும் கால்நடை
உப பொருட்களாகப் பாதுகாத்து நம் சந்ததியினருக்கு இயற்கை சார்ந்த
கலப்படமற்ற உணவுப்பொருட்களை வழங்கிட வேண்டும் என்கிற
அவாவில் ஆரம்பிக்கப்பட்டது இந்த அறக்கட்டளை.
பாலைப் பொழிந்து தரும் பாப்பா, அந்தப் பசு மிக்க நல்லதடி பாப்பா,
வாலைக் குலைந்து வரும் நாய்தான் அது மனிதருக்கு தோழனடி பாப்பா
என்கிற பாரதியின் வாக்கினையும், வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம் வாடினேன் என்று ரத்தக் கண்ண ீர் வடித்த
வள்ளலாரின் வாக்கிற்கிணங்கவும் நமக்குதவும் கால்நடைகள் வாடிய
போதெல்லாம் அதனைத் தேற்றிடவும், இயற்கை சார்ந்த விவசாயத்தை
ஊக்குவிக்கவும் நினைத்தது மற்ற காரணங்கள்.
இந்த அறக்கட்டளையின் நோக்கங்கள் என்னவென்று தெளிவாக
தெரிந்து கொள்ளலாமா?
கால்நடைகளுக்கு நலம் புரிய வேண்டும் என்பதும், இயற்கை
விவசாயத்தை ஊக்குவிக்கவும், உலகம் வெப்பமயமாவதைத் தடுக்க
விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் உடலுக்கு கேடு புரியும் அசைவ
உணவைத் தவிர்த்து சைவ உணவில் மேல் பற்று ஏற்படுத்திடவும்,
விழிப்புணர்ச்சி முகாம்களை நடத்திடச் செய்வதும் பிரதான
நோக்கங்கள். இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு பேரிழப்புகளை
கொடுக்கும்போது நம்மாலான உதவிகளைச் செய்வதும் கால்நடை
வளர்ப்பு பற்றியும், இயற்கை விவசாய மாதிரி விளக்கப் பண்ணைகள்
அமைக்கவும், சுயஉதவிக் குழுக்களுக்கு பொருளாதார முன்னேற்றம்
ஏற்பட கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளை அளித்து
ஊக்கப்படுத்தவும், முதியோர் வாழ இல்லம் இருப்பது மாதிரி முடியாத
கால்நடைகளுக்கு கருணை இல்லம் மற்றும் ஆநிரைக் காப்பகம்
ஏற்படுத்தவும், வாயில்லா ஜீவன்களுக்கு இரக்கமுடைய இலவச
வைத்திய வசதி ஏற்படுத்தவும், தெரு நாய்களுக்கு அதன்
இனப்பெருக்கத்தைத் தடுக்க குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள்
நடத்திடவும், வெறி நாய்கடி நோய் பரவி மனிதர்களுக்கும்,
பிறபிராணிகளுக்கும் நோய் பரவா வண்ணம் இலவச வெறிநாய்க்கடி
தடுப்பூசி முகாம்கள் நடத்திடவும் இலக்கு. கோசாலா அமைத்து மாடுகள்
வளர்த்து அதன் சிறுநீர், சாணம், பால், தயிர், நெய் முதலான உப
பொருட்கள் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு மருந்துகள்
தயாரிக்க திட்டமும் உள்ளது. பக்க விளைவுகள் இல்லாத அந்த
மருந்துகள் மூலம் உலகளாவிய அந்த வியாதிகளுக்கு வரப்பிரசாதமாக
அமையப்போகும் வகையில் அதிதீவிரமான திட்டங்கள் இருக்கிறது.
பிராணிகளுக்கு துயரம் இழைக்கும் நிலை இன்னமும் இருக்கத்தான்
செய்கிறது. அதற்கு உங்கள் அறக்கட்டளை என்ன செய்யப் போகிறது?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிராணிகளுக்கு இழைக்கப்படும்
கொடுமைகள் ஏராளமாக இருக்கிறது. கொடுமை என்று
தெரியாமலேயே அது நடந்தேறி வருவது வேதனைக்குரியது.
கோழிகளை தலை கீ ழாகத் தொங்கவிட்டுக் கொண்டு வருவதும்,
ஆடுகளை இரு சக்கர வாகனங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி
சந்தைக்குக் கொண்டு வருவதும் அவர்களுக்கு கொடுமையாகவே
தெரியவில்லை. மினிடோர் வண்டிகளிலும், லாரிகளிலும்
அளவிற்கதிகமான கால்நடைகளை ஏற்றி வருவதும் நிறையவே
சகஜமாய் நடக்கிறது. பெரிய மாடுகளுக்கு குறைந்த பட்சம் இரண்டு
முதல் இரண்டரை சதுர மீ ட்டர் பரப்பளவும், ஆடுகளுக்கு அரை சதுர
மீ ட்டர் பரப்பளவும் கண்டிப்பாக இருக்க வேண்டும். படுக்க புல்லால் ஆன
மெத்தை இருக்க வேண்டும். பிரயாணத்தின்போது அந்த கால்நடை
பிரயாணத்திற்கு தகுதியானது என கால்நடை மருத்துவர் சான்று
இருக்க வேண்டும் என்பதையும் யாரும் பின்பற்றுவதே இல்லை.
யானைக்கு இந்திய அரசு பாரம்பரிய அந்தஸ்து வழங்கி
கௌரவித்தாலும் பலபேர் வதியில்
ீ கடைகடைக்கு பிச்சை எடுக்க
துன்புறுத்துகிறார்கள். தலையில் துதிக்கையை வைத்து ஆசிர்வதிக்கக்
கூடாது என சமீ பத்தில் தமிழக அரசு தடை விதித்திருந்தாலும் ஒரு
ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் மனிதர்கள் தலையில் வைத்து
ஆசிர்வதிப்பது வேதனையளிக்கிறது. தலையில் உள்ள புண், பொடுகு,
அழுக்கு மூலம் யானைக்கு பாதிப்பேற்படலாம்.
குரங்குகளை அடித்துத் துன்புறுத்தி குட்டிக்கரணம் போட வைப்பதும்,
கரடியைத் துன்புறுத்தி வட்டிற்கு
ீ வடு
ீ அழைத்துச் சென்று மந்திரித்த
தாயத்து வழங்கி ஏமாற்றுவதும், மொன்னைப் பாம்பில் தங்கம்
இருக்கிறது என்று புரளியைக் கிளப்பி அதைப்பிடித்து துன்புறுத்துவதும்
குற்றச் செயல்களே. இதைப்போல இன்னும் ஏராளமாய் துன்பப்படுகிறது
இந்த வாய் பேசாத அப்பாவி பிராணிகள்.
சரி இதற்கு உங்கள் அறக்கட்டளை என்ன நடவடிக்கை எடுக்கிறது?
மத்திய அரசுக்குட்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையைச் சார்ந்த
பிராணி நல வாரியம் மிக அருமையாக செயல்பட்டுக் கொண்டுள்ளது.
அந்த வாரியத்தின் சென்னை கிளை எனக்கு கௌரவ பிராணி நல
அலுவலர் பதவி அளித்து பணியாற்றப் பணித்துள்ளது.
ஒருமுறைசைபீரியாவின் கூளக்கடா என்று அழைக்கப்படும் 8 கிலோ
எடையுள்ள ஆறடி நீளமுள்ள பறவை ஏதோ அடையாளம் தெரியாத
வாகனத்தில் அடிபட்டது எங்களுக்கு தகவல் வந்தது உடனடியாக
கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அடிபட்ட இடத்தில்
தையல் போட்டு காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்து
கடைசியில் அப்பறவை வெள்ளோடு சரணாலயத்தில் மிக நல்ல
முறையில் சேர்ப்பிக்கப்பட்டது குறித்து இப்போது நினைத்தாலும்
மகிழ்ச்சியாக உள்ளது.
அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழாவின்போது நடைபெறும்
கால்நடைச் சந்தை, வருடா வருடம் காங்கேய இன மாடுகள் மற்றும்
காளைகள் மட்டுமே பல்லாயிரக் கணக்கில் கூடும் கண்ணபுரத்திலும்,
பல்வேறு கூட்டங்கள், கால்நடை கருத்தரங்கம், கால்நடை மருத்துவ
முகாம்கள் நடத்தி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதன்வழி
கால்நடைகளுக்கும் பிறபிராணிகளுக்கும் உதவி புரிந்து வருகின்றோம்.
நீங்கள் ஆற்றுகின்றபணிக்கு அங்கீ காரம் கிடைத்ததாக கருதுகிறீர்களா?
பாராட்டி கடிதங்கள் வழங்கப்பட்ட விருதுகள் பற்றி…
அங்கீ காரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூகப்பணி
ஆற்றவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அப்படி
நேரும்போது அது ஆற்றும் பணிக்கு ஒரு ஊக்குவிப்பு ஆகும் என்பது
உண்மை. இலவச கால்நடை மருத்துவமுகாம் மற்றும் விழிப்புணர்வு
முகாம் முடிந்த பின்பு செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப்
பார்க்கும்போது இவ்வளவு பணி ஆற்றியுள்ளோமா என்று
எண்ணத்தோன்றும். அதோடு இன்னும் அதிக அளவில்
பணியாற்றவேண்டும் என்கிறவேகமும் வெறியும் ஏற்படுவதென்னமோ
உண்மை. எங்களது பணியைப் பாராட்டி பாரதியார் கல்சுரல் அகாடமி
“சேவா ரத்னா” விருதும் “சிறந்த சமூக சேவகர்” பட்டமும் அளித்து
கௌரவித்தது மறக்க முடியாத அனுபவம். பாரம்பரிய வைத்திய
முறைகள் காலைக்கதிர் நாளிதழிலும் விவசாய உலகம் புத்தகத்திலும்
வெளிவந்த பின்பும் கால்நடை மற்றும் இயற்கை விவசாய
கருத்தரங்கம் தொடர்பாக டாக்டர் நம்மாழ்வார் பங்கேற்பது தொடர்பாக
பசுமை விகடனில் வெளிவந்த பின்பும் தமிழகத்தில் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் கால்நடைகளின் வியாதிகளை அலைபேசியில்
சொல்லி அதற்கான பாரம்பரிய வைத்திய முறைகளைக் கேட்டறிந்தும்
அதன்பின்பு கால்நடை நலமுற்றதும் அவர்கள் நன்றி பாராட்டி தொடர்பு
கொள்ளும்போது மனம் மகிழ்வதென்னமோ உண்மை.
இறுதியாக மக்களுக்கு சொல்ல விரும்புவது…
காட்டினை அழித்து மரங்களை வெட்டி கிடைக்க வேண்டிய சுத்தமான
ஆக்ஸிஜனை தடுப்பவர்கள் ஒரு பக்கம்; சாயப்பட்டறைகளிலும், தோல்
சுத்திகரிப்பு நிலையங்களிலும் வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத
கழிவுகள் கலக்கும் நதி, நஞ்சாகி நிலத்தடி நீரும் நஞ்சாகிப் போனது
ஒருபக்கம்; வாகனப் புகையால் காற்றும் மாசாகி உள் வாங்கும் மூச்சுக்
காற்றும் நஞ்சாகி உடலைக் கெடுக்கும் நச்சுத்தன்மை ஒரு பக்கம்;
பாலுக்கும் பயிருக்கும் ஆக்ஸிடோஸின் செலுத்தும் நயவஞ்சகர்கள்
ஒரு பக்கம்; விலங்குகளின் வாழ்வுரிமையைத் துச்சமாக மதிக்கும்
பாமரர்கள் ஒரு பக்கம்; விலங்கினம் மற்றும் பறவைகளின்
இறைச்சிக்காகவும், தந்தம் போன்றவிலையுயர்ந்த பொருளுக்காகவும்,
வேட்டையாடும் கண் இருந்தும் மாற்றுத்திறனாளிகள் ஒரு பக்கம், தீ,
புயல், இடி, மின்னல் போன்றசீற்றங்கள் ஒரு பக்கம்; காட்டை அழிக்கும்
கும்பல் ஒரு பக்கம்; விலங்கினங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவாத
ஆண், பெண் விகிதாச்சாரம் ஒரு பக்கம்; வேறு என்ன வேண்டும்
விலங்கினம் அழிய?
தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு அடுத்த தலைமுறைக்கு
விலங்கினங்களை புகைப்படத்திலும், அருங்காட்சியகத்திலும்
பார்க்கின்றஅவலம் ஏற்படாது பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு
அரசுக்கும் பொது சேவை நிறுவனங்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும்
இருக்கிறது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

என்றவள்ளுவன் வாக்கிற்கிணங்க அசைவம் தவிர்ப்போம்.


பிராணிகளிடம் அன்பு செலுத்துவோம். அனைத்துயிர்களுக்கும்
வாழ்வுரிமை வழங்குவோம். ஆரோக்கியமான உயர்ந்த லட்சியங்களை
உள்ளத்தில் கொள்வோம். உயர்வடைவோம். நாம் என்னவாக ஆக
வேண்டும் எனது உள்ளூற நினைக்கிறோம் அதாக கண்டிப்பாக ஆவோம்.
அது தான் தன்னம்பிக்கை.
நன்றி
கே.வி. கோவிந்தராஜன்
தொடர்புக்கு:
ஜெயம் பிராணி நல அறக்கட்டளை
94425 41504, 98427 04504
95244 40504

தவறு செய்தால் மன்னிப்புக்கேள்


Author: என். நடராஜன் நாகரெத்தினம்

Feb 2011 | Posted in Articles

-    என். நடராஜன் நாகரெத்தினம்


மகன் அழைக்கிறான். எனவே ராமசாமி, மனைவியுடன் அமெரிக்கா
போகத் தயாராகிறார். பத்து அல்லது இருபது வருடம் முன்னால் இப்படி
ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் பல இடங்களைச் சுற்றிப்பார்க்க
ஆசைப்பட்டிருப்பார். வயது கூடிவரும்போது ஆசைகளை அது
அழித்துவிடும் இல்லையா?
இப்போது போவது பேரனுடன் சில மாதங்களைச் செலவழிக்க
ஆசைப்பட்டுத்தான்.
சிரமமான 18 மணி நேரத்திற்கு குறையாத பயணம். மகன் வட்டை

அடைந்து ஒரு சில நாட்கள் நன்றாகவே கழிந்தன. பேரனுக்கு பரிசு தர
விரும்பாத தாத்தா உண்டா?
மகனிடம் ஒரு உதவி கேட்கிறார். சமயம் கிடைத்தபோது தன்னை
கடைகளுக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொள்கிறார்.
உடனே மகன் கோபம் கொள்கிறான். “பணம் இங்கே கொட்டிக்
கிடக்கவில்லை… இன்னமும் ஏதோதோ…” தந்தைக்குப் புரிகிறது.
மகனுக்கு ஏதோ பணமுடை போலும். தந்தை இடை மறிக்கிறார். ‘தான்
வரும்போது பரிசுகளை வாங்கத் தேவையான பணம் கொண்டு
வந்திருப்பதாகவும், தான் கேட்பது, முடிந்தபோது கடைகளுக்கு
அழைத்துச் செல்லும் உதவி மாத்திரமே’ என்று சொன்னார்.
தனையன் தான் அவசரப்பட்டதை உணர்ந்து உடனே, தன் பணப்
புழக்கத்தில் கஷ்டம் இருப்பதாகச் சொல்லியிருக்கலாம். அதோடு
மரியாதை இல்லாமல் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டிருக்கலாம்.
பெரியவர்களும் அதோடு மறந்திருப்பார்கள்.
ஆனால், மகனுக்கு அது சரி எனத் தோன்றவில்லையோ? தவறு
செய்வதில் சிறிதும் குறையாத தனது தன்மானத்திற்கு தந்தையிடம்
மன்னிப்புக் கேட்டால் குறைவுவரும் என்ற பயமா?
‘உன்னிடம் ஏது பணம்? எல்லாமே என் பணம் தான். என் பணத்தில்
எனக்கே பரிசு தருவது என்ன ஒரு செயல்’ என்றெல்லாம் மேலும்
மேலும் விடாமல் தொடர, பெரியவர்கள் இனிமேல் தன் வாழ்நாளுக்கும்
இந்த மகனின் தொடர்பு போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு,
துயரத்துடன் நாடு திரும்பியதாக முடிகிறது இந்த கதை.
பெற்றோர் துக்கத்தைச் சுமந்தாலும், தன் புத்திர செல்வங்களைக் கண்டு
பயந்தாலும், அவர்களை முழுவதும் வெறுப்பதோ அல்லது
அவர்களுக்கு கேடு செய்வதோ இல்லை.
ஒருவர் மிகவும் தைரியசாலி என்றால், அவர் பொய் சொல்லாதவராக
இருக்க வேண்டும். தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதில்
தயங்கக் கூடாது. இவை இரண்டும் இல்லாதவர் ஒரு கோழைதான்.
மன்னிப்புக் கேட்டவர் எவரையும் நாம் வாழும் சமூகத்தில் குறைவாக
மதிப்பிட்டதில்லை. தவறு செய்தும் மன்னிப்புக் கேட்காதவர்கள்,
நிரந்தரமாக புண்பட்டவரின் வெறுப்பையும் விரோதத்தையும்
சம்பாதிக்கிறார்கள்.
உங்கள் புத்திர செல்வங்களுக்கு நீங்கள் அளிக்கும் உண்மையான
செல்வம், காசு, பணம், நிலம், வடு
ீ அல்ல. அவர்கள் சிறு வயதிலே தவறு
செய்யும்போது, மனதார மன்னிப்புக் கேட்கும் ஒரு குணத்தை, இது
வட்டிலும்,
ீ வாழும் சமூகத்திலும், விரோதங்கள் வளராமல் செய்யும்.
இந்த குணம் வளர்க்காதவர்கள், தோல்விகளைச் சுமப்பார்கள்.
வெற்றிக்கு ஒரு வழி
நமக்கு பாதகமான சூழ்நிலைகளை சாதகமாக மாற்றுவது.
துயர் உன்னை தொடரும்போது  துவளாதே, துரத்து
நல்லவரோ, தீயவரோ, வல்லவரோ, எளியவரோ, சாமியாரோ,
குடும்பியோ, மனிதனோ, மிருகமோ யாரும் என்றுமே. எப்போதும்
துயரம் தொடராமல் வாழ்ந்ததில்லை. துயரத்திலிருந்து
தப்பித்ததில்லை. யாருமே வாழ்வின் ஆரம்பம் முதல் முடிவு வரை
சாதகமான சூழ்நிலையில் மாத்திரம் வாழ்ந்து, மடிந்ததில்லை.
துயரம் நம்மை பல உருவங்களில் துரத்தும். உதாரணமாக தொழில்
நஷ்டம், வேலையில் தொல்லை, நமக்கும் நம்மை அடுத்தோர்க்கும்
உடல் நலக்கேடு. முயற்சிகளில் தோல்வி, பிரியமானவரின் பிரிவு
இதுபோன்ற துயரம் தரும் நிகழ்ச்சிகள் எல்லாருடைய வாழ்விலும்,
வெவ்வேறு கட்டங்களில் நுழைவது இயற்கையே.
இவைகளை எவ்வாறு எதிர்கொண்டு வெல்லுவது என்ற சிந்தனை
நமக்கு வேண்டும். அய்யோ, அப்பா என்று கதறி மற்றவரின்
அனுதாபங்களைத் தேடுவதும், ஓடி ஒளிவதும், தற்கொலை, கொலை
போன்ற அறிவற்ற செயல்களும், நமக்கு நல்ல பலனைத் தராது.
மாறாக, முயற்சியும் துணிவும் கொண்டால், நாம் அடைந்த துயரத்தை
நமக்கே சாதகமாகப் பயன்படுத்தும் வழிகள் பிறக்கும். அதனால் நமது
வாழ்வு சிறப்பாக இருக்கும்.
நாம் மனது வைத்தால், எந்த பாதகமான சூழ்நிலையையும் சாதகமாக
மாற்றிக் கொள்ள முடியும்.
இறைவனின் தூதுவராக நாம் வணங்கும் புனிதர் யேசு சிலுவையில்
அறையப்பட்டார். மக்களை நல்வழிப்படுத்தப் பாடுபட்ட தீர்க்கதரிசியார்
முகம்மது கல்லால் அடிக்கப்பட்டார். அப்படி இருக்கும்போது, பழி
பாவங்களில் சிக்கி சாதாரண மக்களாக உழலும் நாம் எம்மாத்திரம்?
அதுவும் உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும், இன்று நேற்றல்ல, காலம்
காலமாக நடைபெறும் அதிசயம். இதனால் நாம் தெரிந்து கொள்ள
வேண்டியது என்னவென்றால்,
படைத்த கடவுளே ஆசைப்பட்டாலும், தீமையை என்றுமே தனியே
பிரித்து அதை அழிக்க முடியாது. தீமை, நன்மையின் பிரிக்க முடியாத
பாகம்.
உயிரினமான நாம் எல்லோருமே நம்மை அறிந்தோ, அறியாமலோ,
விரும்பியும் விரும்பாமலும், சாதகமான மற்றும் பாதகமான
சூழ்நிலைக்கு மாறி மாறி தள்ளப்படுகின்றோம்.
சாதகமான சூழ்நிலையிலும் குதூகலிக்கும் நாம், பாதகமான
சூழ்நிலைகளில், நிலை தடுமாறி விடுகிறோம். இந்த கடவுளின்
படைப்பில், ஏனோ தவிர்க்க வேண்டிய ஒரு தவறு நடந்து விட்டதைப்
போல நினைத்துக் கொள்கிறோம். குமுறுகிறோம்.
அப்படியானால், “துன்பம் வந்தால் என்னதான் செய்ய வேண்டும்?” என்ற
கேள்விக்கு பதில், “அடுத்து வரும் கதையின் கதாநாயகனான
கழுதையைப் பின்பற்ற வேண்டும்” என்பதே.
துயரத்துக்கு நம்மேல் ஏன் அப்படி ஒரு பாசம்?
முக்கியமான காரணம் என்று பார்த்தால்  நமது அநியாய ஆசைகள் 
வழக்கமான தப்புக் கணக்குகள்  மற்றவரை ஏமாற்ற முயற்சி செய்வது 
உழைக்காமல் உயர்வைத் தேடுவது  அதிக லாபம் தேடுவது  இது போல
பல வழுக்கலான விவகாரங்கள் துயரமாக மாறி மனிதனைத்
துரத்துகிறது.
உயிரினம் எல்லாமே, எப்போதுமே மற்ற உயிரினத்தால் ஏதாவது ஒரு
வகையில், பயனோ அல்லது பயமோ கொண்டு வாழ்ந்து வருகிறது.
இதோடு இயற்கையும் கூட்டணி அமைக்கும்போது வாழ்க்கை சூடு
பிடிக்கிறது.
இங்கே பாருங்க அதிசயத்தை!
எந்தவொரு உயிரோ அல்லது பொருளோ, நல்லதோ, பொல்லாததோ 
மற்றவரை வெவ்வேறு விதமாகப் பாதிக்கும் அல்லது பலன் தரும்.
குழப்பமா? மேலே கூறின இயற்கையின் சீற்றம் பொது மக்கள் பலரின்
உயிரைக் குடித்து, பலரின் வாழ்க்கையைச் சிதைத்தாலும், அதுவே, சில
அரசு அலுவலர், சில அரசியல்வாதிகள் என்ற வேறு சில மக்களை
பெரும் செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ காரணமாகிறது அல்லவா?
சிலருக்கு நன்மை தரும் ஒரு உயிரோ, ஒரு பொருளோ, மற்ற பலருக்கு
வெவ்வேறு அளவுகளில் தீமை தரும். சிலருக்கு தீமை தருமென
நம்பப்படுபவை பலருக்கு பல்வேறு அளவுகளில் நன்மையும் தருவதால்,
எதையுமே, எவரையுமே, எக்காலத்திலும்  நன்மை, தீமை என்று இனம்
காண முடியாது.

முடியும் வரை முயற்சி எந்நாளும்


தரும் மகிழ்ச்சி
Author: ஆசிரியர் குழு

Feb 2011 | Posted in Cover Story

இந்திய ரூபாய்க் குறியீடு வடிவமைப்பாளர் திரு. த. உதயகுமார்

உலகளவில் வளர்ந்த நாடுகளுக்குப் போட்டியாக உருவெடுத்து வரும்


நம் இந்திய ரூபாய்க்கு தனிக்குறியீடு அவசியம் என்பதை பலரும்
உணர்ந்ததின் அடிப்படையில் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது
ரூபாய்க்கான புதிய குறியீடு.
உலக நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் வழ்ச்சியைச்
ீ சந்தித்து வரும்
வேளையில் நாம் மட்டுமே ஏறுமுகமாக இருந்து வருகிற தருணத்தில்
ரூபாய்க்கு தனிக்குறியீடு கண்டிருப்பதின் மூலமாக சர்வதேச அளவில்
இனி நம் இந்திய ரூபாய்க்கு தனி மதிப்புக் கிடைக்கப் போகிறது.
அமெரிக்க (டாலர்), ஐரோப்பிய நாடுகள் (யூரோ), இங்கிலாந்து (பளிண்ட்-
ஸ்டெர்லிங்), ஜப்பான் (யென்) அடுத்து கரன்சிக்கு தனிக்குறியீடு கண்ட
ஐந்தாவது தேசம் நம் இந்தியா.
விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரவிருக்கும் இப்புதிய
குறியீட்டை உருவாக்கி அளித்திருப்பவர் தான் இம்மாத நேர்முகத்தில்
இடம் பெற்றிருக்கும் திரு. த. உதயகுமார்.
பள்ளி வயதிலேயே ஓவியத்தின் மீ து அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர்.
கல்லூரி வாழ்க்கையில் புதிய புதிய வடிவமைப்புகளை உருவாக்கி
பலரின் பாராட்டுக்களைப் பெற்றவர்.
கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் துணைப் பேராசிரியராக தற்போது பணிபுரிந்து
வருபவர்.
முடியும் வரை முயற்சி என்பது காலம் உள்ளவரை மகிழ்ச்சியைத்
தரும். எனவே எடுத்த செயலை முடிக்கும் வரை இடைவிடாது உழைக்க
வேண்டும். அந்த உழைப்பின் பயன் தான் இன்று எனக்கு கிடைத்து
வருகிற பாராட்டுக்கள். நிரம்ப “தன்னம்பிக்கை” கொண்டவர்.
தான் கற்றதை தன்னிடம் கற்கும் மாணவர்களுக்குக் கொடுத்து நிறைய
சாதிப்பாளர்களை உருவாக்குவதே இலட்சியம் என்று
செயல்பட்டுவருபவர்.
“ஒவ்வொரு தனி மனிதரும் பிறருக்கு உதாரணமாக விளங்கக்கூடிய
வாழ்க்கையை வாழ வேண்டும். அப்போது தான் நாடு நலம் பெறும்.
நாமும் நிம்மதியாய் வாழ முடியும்” சிந்திக்கவும் சிகரம் தொடவும்
அழைத்துச் செல்லும் திறமை நிரம்பப் பெற்ற செல்வன் திரு. த.
உதயகுமார் அவர்களுடன் இனி நாம்…
உங்களைப்பற்றி?
சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. எனக்கு ஐந்து வயது இருக்கும்போது
பெற்றோர் (திரு. தர்மலிங்கம், திருமதி. ஜெயலட்சுமி) சென்னைக்குக்
குடிபெயர்ந்தனர். உடன்பிறந்தோர் ஒரு அண்ணன், ஒரு தம்பி, ஒரு
சகோதரி. பன்னிரண்டாம் வகுப்பு வரை சென்னை ஆழ்வார் திருநகரில்
உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். சென்னை அண்ணா
பல்கலைக்கழகத்தில் பி.ஆர்.க்கும், மும்பை ஐ.ஐ.டி., யில் உள்ள
இன்டஸ்டிரியல் டிசைன் சென்டரில் எம்.டெஸ் (ங. ஈங்ள்) மற்றும்
பி.எச்.டி., முடித்தேன். பின்னர் 2010 லிருந்து கவுகாத்தி ஐ.ஐ.டி.யில்
உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். தற்பொழுது இந்திய
மொழிகளுடன் எழுத்து வடிவம் குறித்தும் பழமையும் பெருமையும்
வாய்ந்த நம்மொழி தமிழ்மொழியின் எழுத்துவடிவம் குறித்தும்
ஆராய்ச்சி செய்து வருகிறேன்.
இந்திய ரூபாய்க்கு குறியீடு உருவாக்குவதற்கான போட்டியில் நீங்கள்
பங்கெடுத்துக் கொண்டது குறித்து?
2009 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய ரூபாய்க்கு குறியீடு
உருவாக்குவதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட
செய்தியை மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் மற்றும் நண்பர்கள்
மூலமாக அறிந்தேன்.
இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து
கொள்ளலாம் என்றும் குறியீடானது இந்தியக் கலாச்சாரம், பண்பாட்டை
எடுத்துக்கூறும் விதமாகவும், கணினியில் எளிதாக இடம்பெறக் கூடிய
எழுத்து வடிவமானதாகவும் இருக்க வேண்டும் என்றும், இரண்டு
இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் கடைசி
சுற்றுக்குத் தேர்வு செய்யப்படும் ஐந்து பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் பரிசு
வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய ரூபாய்க்கு குறியீடு உருவாக்குவதற்கான அறிவிப்பை
அறிந்தவுடன் போட்டியில் பங்கெடுக்க ஆர்வமான ீர்களா? இல்லை
மற்றவர்களால் தூண்டப்பட்டீர்களா?
பள்ளிப்பருவத்தில் இருந்தே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம்
கொண்டவனாக இருந்த காரணத்தினாலும் கல்லூரி வாழ்க்கையில்
நிறைய புதிது புதிதாக வடிவமைத்து பாராட்டுக்களும் பரிசுகளும்
பெற்றதனாலும் இந்திய ரூபாய் குறியீட்டுப் போட்டியில் கலந்து
கொள்வதற்கு நானாகவே ஆர்வமானேன்.
பலவாறு யோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து ‘இம்முறையில்
குறியீடு அமைப்பது’ நன்றாக இருக்கும் என
தீர்மானித்திருந்திருப்பீர்களே அது எம்முறை?
தீவிர ஆராய்ச்சியின் முடிவில் இந்தி மொழியின் எழுத்து வடிவமான
‘தேவநகரி’ எழுத்துக்களைப் பயன்படுத்துவது என முடிவு செய்தேன்.
இந்தி மொழியில் உள்ள ‘ர’ என்ற எழுத்து ‘ரூபியா’ என்ற ரூபாயைக்
குறிக்கும் முதல் எழுத்து என்பதால் முதலில் அதைத் தேர்வு செய்தேன்.
ஆங்கில மொழியில் ‘ஆர்’ எழுத்து ரூபாயைக் குறிக்கும் முதல் எழுத்து
என்பதால் அதையும் தேர்வு செய்தேன். இவை இரண்டையும் இணைத்து
‘ஆர்’ போன்ற எளிதான எழுத்து வடிவத்தை உருவாக்கினேன்.
நம் நாட்டின் உயர்வையும், இந்தியப் பொருளாதாரம் எப்போதும் மற்ற
நாடுகளுக்குச் சமமானது என்பதை உயர்த்தவும் ‘இக்குவல்’ என்ற
குறியீட்டை ‘ஆர்’ எழுத்தின் மேல் பகுதியில் இணைத்து இந்திய
ரூபாய்க்கு புதிய குறியீட்டை உருவாக்கி போட்டிக்கு அனுப்பி
வைத்தேன்.
போட்டி கடுமையாக இருந்திருக்குமே?
பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் என்னைப்போலவே குறியீட்டை
அனுப்பி போட்டியில் கலந்து கொண்டார்கள். அதில் 2500 பேர் தேர்வு
செய்யப்பட்டு, கடைசி சுற்றுக்கு ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
தமிழகத்தில் இருந்து நானும், மும்பையிலிருந்து மூன்று பேரும்,
கேரளத்திலிருந்து ஒருவருமாக தேர்வு செய்யப்பட்டோம்.
ஐந்து பேரில் ஒருவர் என்கிற தகவல் கிடைக்கப் பெற்றதும் இறுதியில்
வென்றுவிடுவோம் என்று நினைத்தீர்களா?
புதிது புதிதாகச் சிந்திப்பது, உருவாக்குவது எனக்கு பிடித்தமான ஒன்று
என்பதால் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டேன். இறுதி
ஐவரில் ஒருவர் என்றதுமே மகிழ்ச்சி ஒருபுறம் என்றாலும் அடுத்த
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதில் கவனமானேன்.
முடியும் வரை முயற்சி செய்வோம். அந்த முயற்சிக்கான பலன்
எதுவாக இருந்தாலும் அது நமக்கு நன்மையே என்று நினைத்தேன்.
நேர்முகம் அனுபவம் எப்படி இருந்தது?
இந்திய ரூபாய்க்கான குறியீடு வடிவமைத்தது குறித்து விளக்கம் கேட்க
ஏழுபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு
நிதியமைச்சர்கள், இரண்டு தஆஐ அமைச்சர்கள், மூன்று பெரிய
வடிவமைப்பு நிறுவனங்களிலிருந்து 3 பேர் வருகை தந்திருந்திருந்தனர்.
2010 டிசம்பரில் அவர்களைச் சந்தித்து குறியீட்டுக்கு பயன்படுத்திய
‘தேவநகரி’ எழுத்து வடிவம் குறித்து விளக்கினேன். இந்திய அளவில்
இவ்வெழுத்து வடிவத்திற்கு தனிச் சிறப்பு உண்டென்றும் தொங்கும்
வடிவில் எழுதக்கூடிய வடிவம் ‘தேவநகரி’ எழுத்து வடிவம் என்றும்
அச்சிறப்பிற்குரிய எழுத்து வடிவத்திலிருந்தும், ஆங்கில எழுத்து
‘ஆர்’லிருந்தும் உருவாக்கி இந்தி ஆங்கிலம் என ஒரு “யுனிவர்சல்”
வடிவம் கொடுத்திருக்கிறேன் என விளக்கம் தந்து வந்தேன்.
நீங்கள் வடிவமைத்த குறியீடு தான் இந்திய ரூபாய்க்கான குறியீடாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை எப்படி எப்போது அறிந்தீர்கள்?
அப்போது உங்கள் மன நிலை?
டிசம்பரில் ஏழு நபர் குழுவின் முன் குறியீட்டுக்கான விளக்கம்
கொடுத்ததிற்குப் பின்பு முடிவு இரண்டு மாதங்களில் அறிவிக்கப்படும்
என சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி முடிவு
அறிவிக்கப்படவில்லை. திடீரென 2010 ஜூலை மாதம் நிருபர் ஒருவர்
தொடர்புகொண்டு நீங்கள் வடிவமைத்த குறியீடு தான் இந்திய ரூபாய்
குறியீடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்றார். எனக்கு உடனே
நம்ப முடியவில்லை. அடுத்தநாள் 10 மணி அளவில்
தொலைக்காட்சிகளில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
வெளியிடப்பட்டிருந்தது கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
கடின உழைப்பு தான் இதனை சாத்தியமாக்கியிருக்கிறது என்று
நம்பினேன்.
இந்திய ரூபாய்க்கான குறியீடு உருவாக்கியதன் மூலமாக நீங்கள்
உணர்வது?
நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருப்பதாக உணர்கிறேன்.
இந்தச் சாதிப்பிற்குப் பின்னால் இவர்கள் எல்லாம் உள்ளார்கள் என்று
நீங்கள் குறிப்பிட விரும்புபவர்கள்?
என் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், நண்பர்கள், என் பள்ளிப்பருவ ஆசிரியர்கள்,
பெற்றோர், உடன்பிறப்புகள் இப்படி நிறையவே சொல்ல வேண்டும்.
பெற்றோர் குறித்து?
என் ஒவ்வொரு நிகழ்வின் வெற்றிக்கும் பெரிதும் காரணம் என்
பெற்றோரின் ஒத்துழைப்பும், அவர்கள் தந்த சுதந்திரமும் தான் காரணம்.
நான் எடுக்கும் முடிவை ஆதரிப்பதுடன் எப்போதும் ஊக்கப்படுத்திக்
கொண்டே இருப்பார்கள். இதைச் செய் அதைச் செய் என எப்போதும்
வற்புறுத்தியது இல்லை.
இனி எதிர்வரும் காலத்தில் உங்கள் பணி குறித்து?
உதவிப் பேராசிரியராக கவுகாத்தி ஐ.ஐ.டி., யில் பணிபுரிந்து வருகிற
நான், எனது மாணவர்களுக்கு நான் அறிந்தவற்றை நன்கு
கற்றுக்கொடுத்து ஒவ்வொருவரையும் சாதனையாளர்களாக உயர்த்த
வேண்டும் என்று விரும்புகிறேன்.
பி.ஆர்க். துறையில் இருப்பவர்கள் இன்ஜினியரிங், டிசைனிங்,
கன்ஸ்ட்ரக்சன், இன்டீரியல் என சென்று கொண்டிருக்கும்போது நீங்கள்
வேறுபட்டு நிற்க ஏதேனும் காரணம் உண்டா?
பொருள் ஈட்ட வேண்டும் என்பதைவிட பேராசிரியராக இருந்து நல்ல
நல்ல மாணவர்களை உருவாக்கி நாடு உயர பாடு படவேண்டும் என்கிற
எண்ணம் எனக்கு சிறுவயது முதலே இருந்தது. டிசைனிங்கில் இருந்த
ஆர்வம் ஐ.ஐ.டி.யில் நுழையத் தூண்டியது. அங்கு கிடைத்த
அனுபவங்கள், பாராட்டுக்கள் இன்று சாதிக்க வைத்திருக்கிறது. என்
சாதிப்பின் அடுத்த இலக்கு பேராசிரியர் பணியின் மூலம் பல
மாணவர்களைச் சாதிக்கத் தூண்டுவது தான்.
வெற்றிக்கு வழி என்று நீங்கள் கருதுவது?
தன்னம்பிக்கையுடன் கூடிய கடின உழைப்பே எப்போதும் வெற்றி தரும்.
இந்திய மொழிகளில் “வடிவ மைப்பு” என்பது நன்மையைத் தருமா?
நன்மை என்பது இப்போது தெரியாமல் போகலாம். எதிர்காலத்தில்
நிறையப்பேர் நம் இந்திய மொழிகளில் வடிவமைக்கும் போது தான்
நன்மைகள் என்னவென்பது புரிய வரும். மேலும், அவரவர் மொழிகளில்
வடிவமைக்கும்போது ஆற்றலுடன் கருத்துக்களை நன்கு வெளிப்படுத்த
வாய்ப்பிருக்கிறது.
இந்திய ரூபாய் குறியீடு வடிவமைப்பின் சாதிப்பிற்குப் பின்னால்
உதயகுமார் எப்படி?
அப்போதும் இப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறேன். இப்போது
நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புகள், கௌரவப்
பேராசிரியர் பணிகளுக்கான அழைப்புகள் என வந்து கொண்டே
இருக்கிறது. ‘நேரம்’ தான் இப்போதைக்கு பிரச்சனை. கவுகாத்தி ஐ.ஐ.டி.,
யிலேயே பணிபுரிவதற்கு காலம் சரியாக இருக்கிறது. அதனால்
அப்போதும் இப்போதும் உழைப்பு உழைப்பு என்பது அப்படியே
தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இளைஞர்களுக்கு…
· தன்னம்பிக்கையுடன் இருங்கள்
· எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று கருதுங்கள்
· எதையும் முழு மனதுடன் செய்யுங்கள்
· நேர்மையைக் கடைபிடியுங்கள்
· உண்மையாக இருங்கள்
· நல்லதையே நினையுங்கள். நல்லதே நடக்கும்.
நிறைய வாழ்த்துக்கள் வந்து குவிந்திருக்கும். அதில் இது என்னை
நெகிழ வைத்தது என்று நீங்கள் கருதுவது?
வந்த வாழ்த்துக்கள் எல்லாமே நெகிழ வைத்தவை தான் என்றாலும்
பிறந்த ஊர் கள்ளக்குறிச்சி மற்றும் மருவூரில் கிடைத்த பாராட்டு அதிகம்
நெகிழ வைத்தது. அவர்கள் காட்டிய அன்பு, அவர்கள் அடைந்த மகிழ்ச்சி
இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத்
தூண்டிவிட்டது.
தன்னம்பிக்கை…..

மனதை வலிமைப்படுத்து
வாழ்வைப் பெருமைப்படுத்து

Author: admin

Jan 2011 | Posted in Cover Story

K.P.R. மில்ஸ் நிறுவனர் திரு. இராமசாமி

நேர்முகம் என். செல்வராஜ்

பிறந்தது… வளர்ந்தது… படித்தது…


பெருந்துறை விஜயமங்கலத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள
கள்ளியம்புதூர் நான் பிறந்த ஊர். மூன்று சகோதரர்கள். விவசாயக்
குடும்பம். அப்பா பழனிசாமிக் கவுண்டர், அம்மா செல்லம்மாள். செய்யும்
தொழிலில் எப்போதும் முதல்வனாக இருக்க வேண்டும் என்பது
அம்மாவிடம் கற்றுக்கொண்டது,
விஜயமங்கலம் அரசுப்பள்ளியில் 10 ம் வகுப்பு வரையிலும். பி.யூ.சி.
பெரியநாயக்கன் பாளையத்திலும் படித்தேன். பி.யூ.சி. முடித்தவுடன்
மருத்துவம் அல்லது பி.எஸ்.சி. (Agri) படிக்கலாம் என விருப்பப்பட்டேன்.
இரண்டு படிப்பிற்கும் இடம் கிடைக்கவில்லை. சிவகாசி அய்யன் நாடார்
ஜானகி அம்மாள் கல்லூரியில் பி.ஏ. படிப்பில் சேர்ந்தேன். ஏனோ
கல்வியில் தொடர மனம் மறுத்தது. ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.
அப்பா விவசாயத்தைக் கவனி என்றார். இரவு பகல் பாராது உழைத்தேன்.
மிச்சம் ஒன்றும் இல்லை. விவசாயம் ஒத்துவராது என்கிற முடிவுக்கு
வந்தேன். மாற்றாக வேறு என்ன செய்யலாம் என்கிற யோசனையில்
உதித்தது தான் “பவர் லூம்” தொழில்.
“பவர் லூம்” தொழிலில் ஈடுபடுவது என்கிற முடிவெடுத்தவுடன்
அத்தொழிலில் இறங்கி சாதிக்க முடிந்ததா?
இல்லை. கள்ளியம்புதூரில் விவசாயத்திற்கு அடுத்தத் தொழில் “பவர்
லூம்” அதுவும் அதிக அளவில் இல்லை. மூன்று பேர் மட்டுமே வைத்து
இயக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரிடம் சென்று
ஆலோசனை கேட்டேன். “உனக்கெல்லாம் இது ஒத்துவராது, வேறு
தொழில் பாரப்பா” என்று அறிவுரை சொல்லி அனுப்பி
வைத்துவிட்டார்கள். ஆனால் எனக்குள் இத்தொழிலைச் செய்து
பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம். முதலீட்டுக்கு கையில் பணம்
இல்லை. உறவினர் ஒருவரிடம் நூற்றுக்கு 50 பைசா வட்டிக்கு
எட்டாயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். தைரியமாகத் தொழிலைத்
துவங்கினேன். நாள்தோறும் 3 லிருந்து 4 மணிநேரம் மட்டுமே தூக்கம்.
மற்ற நேரங்களில் உழைப்பு, உழைப்பு.
ஒரு வருட காலத்தில் 4 “பவர் லூம்” 8 ஆனது. 5 வருடத்தில் 40 ஆக
உயர்த்தி சாதித்தேன்.
அப்போது குடும்பத்தின் ஆதரவு எந்தளவுக்கு இருந்தது?
என் தந்தையைப் பொறுத்தவரையில் இந்தச் செயலைச் செய்கிறேன்
என்று சொன்னால் நல்ல முறையில் செய்யப்பா என்பதைத் தவிர வேறு
ஒன்றும் சொல்லமாட்டார். தம்பிகள் அப்போது தான் படித்துக்
கொண்டிருந்தார்கள். எனக்கு கிட்டாத கல்வி என் தம்பிகளுக்கு கிடைக்க
வேண்டும் என்பதற்காக அவர்களை நன்கு படிக்க வைத்தேன்.
அவர்களும் நன்கு படித்தார்கள். அவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன்
ஓரிரு வருடங்கள் வெளியிடங்களில் வேலைபார்த்தார்கள். பின்பு
அவர்களே சொந்தமாக தொழில் துவங்கிட ஆர்வம் கொண்டார்கள்.
விருப்பப்படியே செய்யுங்கள் என்றேன். அப்போது உருவானது தான்
கோவையில் உள்ள “எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனி”.
“எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனி” தந்த திருப்புமுனை குறித்து…
1984 ஜனவரி 23 ல் கோவையில் ஆறு இலட்சம் ரூபாய் முதலீட்டில்
“எக்ஸ்போர்ட்ஸ்” நிறுவனத்தை ஆரம்பித்தோம். பேப்பரிக் தயார் செய்து
ஓவன் பேப்பரிக் என்று சொல்லக்கூடிய சர்ட்ஸ், டாபி, ஜக்கார்டு
ரகங்களை ஸ்ரீ லங்கா, பங்களாதேஷ், எகிப்து நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்தோம். 5 வருட காலம் தொழில் நல்ல முறையில் அமைந்தது.
அதற்கடுத்த ஓரிரு ஆண்டுகளில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது.
கோவையை அடுத்து வேறு ஊரில் இத்தொழிலை விரிவுபடுத்த
நினைத்தோம். பெங்களூர், சென்னை என்றாராய்ந்து இறுதியில்
திருப்பூரைத் தேர்ந்தொடுத்தோம். 1990 களில் “எக்ஸ்போர்ட்ஸ்” தொழில்
நல்ல மாற்றத்தைக் கொடுத்தது. கூடவே மாற்றுத் தொழில்
சிந்தனையையும் அதிகப்படுத்தியது.

ஒரு தொழில் நன்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாற்றுத்


தொழில் சிந்தனை எழக் காரணம்?
எக்ஸ்போர்ட்ஸ் தொழில் நிரந்தரமானதாக எனக்கு அப்போது
தோன்றவில்லை. ஏற்ற இறக்கம் இருந்துகொண்டே இருக்கக்கூடிய
தொழில் அது. “ஆர்டர்” இருக்கும் வரைதான் அத்தொழிலில் வெல்ல
முடியும். ஆர்டர் இல்லை என்கிறபோது இருக்கிற தொழிலாளர்களுக்கு
கூட வேலை தரமுடியாது. அதனால் நிரந்தரமாய் ஒரு தொழிலை
அமைத்திட வேண்டும் என்கிற சிந்தனை எழுந்தது. ஆலோசித்தோம்
முடிவில் “நூற்பாலை” அமைப்பது என்கிற முடிவுக்கு வந்தோம். 1996 ல்
சத்தியமங்கலத்தில் K.P.R. மில்ஸ் என்கிற பெயரில் முதன்முதலாக
நூற்பாலை துவக்கினோம். 2001 ல் கருமத்தம்பட்டியிலும், 2004 ல்
நீலம்பூரிலும், அதற்குப் பின்பு பெருந்துறையிலும் நூற்பாலைத்
துவக்கினோம். 3,50,000 பவர் லூம்களுடன் இன்று நூற்பாலைத்
தொழிலில் தென்னிந்திய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள்
ஒன்றாக உயர்ந்து நிற்கிறோம்.
நூற்பாலையைத் தொடர்ந்து வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறீர்களா?
“வின்ட் மில்” கல்வித்துறையில் கால் பதித்திருக்கிறோம். வின்ட்
மில்லின் மூலமாக 65 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து
வருகிறோம். கடந்த ஆண்டிலிருந்து K.P.R. இன்ஜினியரிங் கல்லூரியைத்
துவக்கி சிறப்புடன் நடத்தி வருகிறோம்.
புகழ்மிக்க நூற்பாலைத் தொழிற்கூடங்கள் பெரும்பாலனவை
கோவையில் இல்லாமல் போனதற்குக் காரணம்?
நவன
ீ தொழில் நுட்பத்தை புகுத்த முடியாமை மற்றும் நிர்வாகத்தில்
குளறுபடி
எதிர்வரும் காலத்தில் நூற்பாலைத் தொழில் சிறந்து விளங்க அவசியம்
என்று நீங்கள் கருதுவது?
நவன
ீ தொழில் நுட்பங்கள் அதிகப்படுத்தப்பட்டு, வேலைப் பளுவை
குறைப்பதுடன், வேலை ஆட்களின் எண்ணிக்கையையும் குறைக்கப்பட
வேண்டும்.
தொழில் தொடர்ந்து வெற்றி பெற ஒருவருக்கு வேண்டியது…
·    நல்ல எண்ணங்கள்
·    பணியாளர்கள் அனைவருக்கும் எல்லாமும் கிடைக்க ஏற்பாடு
செய்தல்
·    செய்யும் தொழிலுடன் எப்போதும் இணைந்திருத்தல்
மக்கள் நலனில் தாங்கள் காட்டி வரும் ஈடுபாடு குறித்து?
எங்கள் நூற்பாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு கல்விச் சேவையை
மிகச்சிறப்பாக தந்து வருகிறோம். வருடத்திற்கு ஒன்றரை கோடிவரை
இப்பணிக்காக செலவு செய்கிறோம். இதுவரை எங்கள் நூற்பாலைகளில்
பணிபுரிந்தவர்களில் 5000 பேர் உயர்கல்வி பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.
தற்போது 3000 பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு
படித்தவர்கள், பத்து, பன்னிரெண்டு, இளநிலை, முதுநிலை என
தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்து தருகிறோம். வேலை நேரம் போக மீ தி
நேரங்களில் அவர்கள் படிக்க நிரந்தரமாக ஆசிரியர்களை
நியமித்திருக்கிறோம்.
தொலைதூரக்கல்வி இயக்கங்களிலிருந்தும் ஆசிரியர்கள் வருகை
புரிந்து பாடம் எடுத்துச் செல்கிறார்கள்.
எங்களிடம் வேலை பார்த்துக்கொண்டு படித்தவர்களில் பலர் காவல்,
ஏர்லைன்ஸ், நர்சிங், மேலாண்மை என பல துறைகளிலும்
கால்பதித்திருக்கிறர்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தர இயலாத கல்வி என்னும்
வெகுமதியை நீங்கள் சேவையாகத் தந்துதவுகிறீர்கள். இந்த எண்ணம்
எழக் காரணம்?
காரணம் என்று எதுவும் இல்லை. நம்மிடம் வேலை பார்க்கிற
பெண்களுக்கு வேலை செய்ததற்கு சம்பளம் தருகிறோம். வேறு என்ன
நன்மை செய்கிறோம் என்று யோசித்ததின் விளைவுதான் இத்திட்டம்.
எங்கோ சிறு குக்கிராமத்திலிருந்து வேலைக்கு வருகிற பெண்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கல்வி தான் சிறந்தது எனக்
கருதினேன். செயல்பாட்டிற்கு கொண்டு வந்தேன்.
மழைவந்தால் உங்கள் பள்ளிக்காலப் படிப்பு தடைபட்டிருக்கிறது என்று
அறிந்தோம். மழைக்கும் உங்கள் படிப்பின் தடைக்கும் எது காரணமாக
இருந்தது?
எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வருடம் நல்ல
மழை பெய்தது. கிணற்றில் நீர்வரத்து அதிகரித்தது. கிணற்றில் நீர்
இருக்கும்போதே இரண்டு மூன்று விளைச்சலை எடுத்துக் கொள்ளலாம்
என்று என்னை விவசாயம் பார்ப்பதற்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.
அதனால் அந்த வருடப்படிப்பு இல்லை. மீ ண்டும் அடுத்த வருடம் அதே
படிப்பு. 8 ம் வகுப்பு படிக்கும்போது இதே போல் 10 ம் வகுப்பு
படிக்கும்போதும் நடந்தது.
அன்றைய சூழலில் “கல்வியோடு என்னால் சரிவர பயனிக்க
முடியவில்லை. இன்றைய சூழலில் நம்மால் பிறரை கல்வியோடு
பயணிக்க வைக்க முடிகிறதே என்பதை நினைக்கும்போது மனதுக்கு
மகிழ்ச்சியாக இருக்கிறது.
தன்னம்பிக்கை
“இந்த உலகில் சிறப்பான வாழ்க்கையைக் கடைபிடிப்பதற்குத்
தன்னம்பிக்கை, தன்னறிவு, தன்னடக்கம் ஆகிய மூன்று நற்பண்புகளும்
இன்றியவையானவை. இம்மூன்றும்தான் மனிதனை வாழ்க்கையில்
மேம்படுத்தச் செய்து அவனை உன்னத நிலையில் உயர்த்துகின்றன
என்பார் டென்னிசன்.
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் தரணியை ஆரலாம்.
தங்கள் குடும்பம் குறித்து?
மனைவி —– ஒரு மகன் ஆனந்த கிருஷ்ணன்-காயத்ரி, இரு மகள்கள்
உமா-ராஜசேகர், கல்பனா-ஆனந்தகுமார்.

தொழிலை நேசி! வெற்றியை


சுவாசி!!
Author: டாக்டர் ந.செந்தில்

Dec 2010 | Posted in Cover Story

திரு. ராஜராஜன்
அஞ்சல் தலைவர், மேற்கு மண்டலம்
நேர்முகம் : செந்தில் நடேசன்
அதிர்ஷ்டம் என்பது நல்ல நேரம் அல்ல. அது உழைக்கும் காலமே
என்பார் இங்கர்சால். அதுவாய் உழைப்பின் மூலம் அதிர்ஷ்டத்தை வர
வழைத்துக் கொண்டவராக, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை
என்பதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்காமல் கிடைத்ததை
எல்லோரும் பாராட்டும் வண்ணம் உயர்த்திடும் வல்லமை பெற்றவராக,
எந்த ஒரு செயலிலும் சகிப்புத் தன்மையையும் நிதானத்தையும்
கடைப்பிடித்து அனைவரும் விரும்பும் நல் அதிகாரியாக, தன்னால்
முடிந்த உதவிகளை பிறருக்கு அவசியம் செய்திட வேண்டும். எந்தச்
சூழலிலும் நாம் நாமாகவே இருந்திட வேண்டும் என்று தபால்
துறையில் தனிமுத்திரை பதித்து வருபவரும், மேற்கு மண்டலம்
அஞ்சல் தலைவருமான
திரு. ராஜராஜன் அவர்கள் தந்த நேர்முகத்தில் இனி நாம்…

உங்கள் இளமைக்காலம், கல்வி, குடும்பம் பற்றி…


நான் பிறந்தது திருவாரூரில். என்னுடைய தந்தை (திரு. இரா.
வரதராஜன்) ஆசிரியப் பணியில் சிறந்து விளங்கியவர். எனக்கு இரு
சகோதரிகள். சிறுவயதி லேயே தாயை இழந்ததால் பாட்டியின் பரா
மரிப்பில் வளர்ந்தேன். பள்ளிப் படிப்பு முழுவதுமே திருவாரூரில்தான்.
பி.யூ.சி பயின்றது திருச்சியில். பின்னர் மதுரை வேளாண்மைப்
பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தேன். பள்ளியில் இருக்கும்
போதே விளையாட்டு, தேசிய மாணவர் படை உள்ளிட்டவற்றில்
ஆர்வத்துடன் பங்கேற்றேன். கல்லூரியில் இருந்தபோது கூடைப் பந்து,
கிரிக்கெட், மேசை வரிப்பந்தாட்டம் போன்ற அனைத்து
விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினேன்.
பி.யூ.சி படிப்பு உங்கள் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது
என அறிந்தோம் அது குறித்து?
என் பள்ளிப் பருவம் எனக்கு சந்தோசம் நிறைந்த பருவம். இயற்கையை
நேசித்தல், மீ ன் பிடித்தல், நீச்சல் அடித்தல் என எந்நேரமும்
குதூகலமாக, குறும்புத்தனமாக விளையாடி மகிழ்ந்திருந்தேன். வட்டில்

கண்டிப்பு இருந்தாலும் என் செயல்களுக்குத் தடை இருந்ததில்லை. எந்த
செயலையும் சரியாகத்தான் செய்வான் என்கிற நம்பிக்கை என்
தந்தைக்கும் பாட்டிக்கும் இருந்திருக்கலாம் என நம்புகிறேன்.
அதனாலேயே அந்த வயதில் அதிகம் சுதந்திரம் கிடைக்கப் பெற்றேன்.
மேலும் பதினொன்றாம் வகுப்பு வரை தமிழ் கல்வி முறையிலேயே
படித்ததால், திருச்சியில் பி.யூசி. படிக்கும்போது விலங்கியல்
பாடப்பிரிவில் இடம்பெற்ற ‘Characteristics’ என்ற ஆங்கில வார்த்தையைப்
பார்த்து இவ்வளவு பெரிய ஆங்கில வார்த்தையா? என்று
அதிர்ச்சியடைந்தேன். ஆங்கிலத்தைக் கண்டு பயப்பட ஆரம்பித்தேன்.
“ஆசிரியர்கள் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்துகிறார்கள். என்னால்
புரிந்து கொண்டு தொடர்ந்து படிக்க முடியுமா என்று தெரிய வில்லை”.
என தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
இது எல்லா மாணவர்களுக்கும் வரக்கூடிய பயம்தான். புரிந்துகொள்ள
புரிந்து கொள்ள சரியாகி விடும் என்கிற நம்பிக்கையை ஊட்டினார்.
மேலும் அடிக்கடி எனக்கு ஆங்கிலத்திலேயே கடிதம் எழுது அதில்
இருக்கக்கூடிய பிழைகளை திருத்தி அனுப்பி வைக்கிறேன். இந்தப்
பழக்கம் நாளடைவில் உன்னை ஆங்கிலத்தில் புலமை
பெற்றவனாக்கும் என்றார் என் தந்தை. அவரின் வார்த்தைகள் எனக்குள்
தன்னம்பிக்கையை வளர்த்தது.
பயம்தான் தனக்குள்ளே உள்ள திறமையை வெளிக்கொணராமல்
தடுக்கிறது என்பதை உணர்ந் தேன். படிப்பில் ஆர்வம் ஆனேன்.
வெற்றிகளைச் சந்திக்க ஆரம்பித்தேன்.
சிறுவயதில் உங்களுடைய கனவு?
சிறு வயதில் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற எண்ணமே மேலாங்கி
இருந்தது. என்றாலும் மருத்துவப்படிப்பு கிடைக்காததால், அடுத்து
எனக்கு பிடித்தமான வேளாண்மைத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்.
வேளாண்மைக் கல்வி என் வாழ்க்கையில் அமைந்த மிகச் சிறந்த
விஷயம். இளமையிலேயே எனக்கு இயற்கை மீ து காதல் இருந்ததால்
எனக்கு இப்படிப்பு மகிழ்ச்சியையே தந்தது. மேலும் என்னுடைய
கல்லூரிப் படிப்பின் போது எனக்கு மிகச் சிறந்த நண்பர்களும்,
ஆசிரியர்களும் கிடைத் தார்கள். குறிப்பாக, எனது கல்லூரி முதல்வர்
டாக்டர் கே.கே. அவர்களின் மூலம் தலைமைப் பண்பு, பரிவு,
நிர்வாகத்திறமை உள்ளிட்டவற்றைக் கற்றுக் கொண்டேன்.
ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போது
தோன்றியது?
ஐ.ஏ.எஸ். கனவு எனக்கு சிறு வயதில் இருந்தது இல்லை. நான் கல்லூரி
இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது தான் தற்போதைய நிதிச்
செயலர் திரு. சண்முகம் அவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில்
தேர்ச்சியடைந்தார். அதன்பின், எனது நண்பர் கோவை போலீஸ்
கமிஷனர் முனைவர்
சி. சைலேந்திர பாபு. இவர்களைப் பார்த்த பின்பு தான் எனக்கும் இந்த
எண்ணம் ஏற்பட்டது. ஐ.ஏ.எஸ் தேர்விற்குத் தயாராகினேன்.
முதுகலைப்பட்டம் முடிப்பதற்கு முன்பாக இரண்டு முறை
பிரிலிமினரித் (முதல்நிலை) தேர்வு எழுதினேன்.
தேர்ச்சியடையவில்லை. முதுகலைப் பட்டம் முடித்தவுடன் எனக்கு
திருமண ஏற்பாடு நடைபெற்றது. திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு
முன்னர்தான் பிரைமரி தேர்வை எழுதினேன். அப்போது தேர்ச்சி
அடைந்தேன். திருமணத்திற்குப் பிறகு எனது மனைவியின்
ஒத்துழைப்பும் தியாகங் களும் என் வெற்றிக்கு துணையாக இருந்தன.
எப்போதாவது ஐ.ஏ.எஸ். ஆக முடியவில்லையே என்ற எண்ணம்
உங்களுக்கு வந்ததுண்டா?
இல்லை. அப்படி நான் நினைத்ததில்லை. அத்துறைக்கு சென்றிருந்தால்
என் பார்வையும், எண்ணமும் விரிந்து இருக்கும் என்று நினைத்ததுண்டு.
ஆனால் வருந்தியது இல்லை.
துறை மாற்றம் எப்போது நிகழ்ந்தது?
ஐ.ஏ.எஸ் நேர்முகத் தேர்வில் பங்கேற்ற உடனேயே அடுத்த பணிக்குத்
தயரானேன். சென்னைக்குப் புறப்பட்டு வந்தேன். இந்தியன் வங்கிப்
பணியில் சேலத்தில் அமர்ந்தேன். ஆனால் எனக்குள் வேளாண்மைப்
பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிய வேண்டும் என்பதி
லேயே ஆர்வ மாக இருந்தேன். என்றாலும் தேர்வு முடிவுகளுக்குப்
பின்பு, இந்தியத் தபால் துறையைத் தேர்ந்தெடுத்து பணியாற்றத்
துவங்கினேன்.
இந்தியத் தபால் துறையில் பணியாற்றிய உங்கள் அனுபவம் பற்றி…
சேலம், மதுரை, கோவில்பட்டி, சென்னை, கர்நாடகா, மஹாராஷ்டிரா,
கேரளா உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றியுள்ளேன். இளமையில்
இருந்த எனது வேகமும், கோபமும் பின்னாளில் விவேகமாக மாறியது.
எனது நிர்வாகத் திறமையும் வளர்ந்தது. வேலை செய்யும் இடத்தில் ஒரு
சுமூகமான மனநிலையை ஏற்படுத்தும் திறமையும் எனக்கு வந்தது. ஒரு
முடிவு எடுக்கும்போது அது பிறரை பாதிக்காத வண்ணம் எடுக்கப் பழகிக்
கொண்டேன். எனது முடிவை மற்றவர்களும் மறுப்பின்றி ஏற்றுக்
கொண்டனர்.
இப்போது தபால் துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் பற்றி…
தபால் துறையில் ஒரு சுணக்கம் ஏற்பட் டுள்ளது என்பது யாரும் மறுக்க
முடியாத உண்மை தான். இதற்குக் காரணம் தனியார் நிறுவனத்தின்
பெருக்கம் கிடையாது. தொலை செய்தித் துறை யில் ஏற்பட்டுள்ள
புரட்சியே இதற்குக் காரணம். இப்போது உறவினர்களுக்கும்
நண்பர்களுக்கும் கடிதம் எழுதுபவர்கள் யாரும் இல்லை. இப்போது
வரும் கடிதங்கள் பெரும் பாலும் வர்த்தகம் மற்றும் வங்கித் தொடர்
பானவை மட்டுமே.
இதிலிருந்து தபால் துறையை மீ ட்க என்னென்ன நடவடிக்கைகள்
எடுக்கப்படுகின்றன?
இந்திய தபால் துறை என்பது மிகப்பெரிய வலைபின்னல். இந்தியாவில்
கிட்டத்தட்ட 1,55,000 தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 1,25,000
கிராமப்புற தபால் நிலையங்களில் ஒருவர் மட்டுமே பணியாற்றி
வருகின்றனர். சில கிராமங்கள் இந்தியாவைச் சேர்ந்தது தான் என்பதை
அங்கே செல்லும் இந்தியத் தபால்காரர் மூலமே கண்டறிய முடிகின்றது.
இப்போது இந்த 1,55,000 தபால் நிலையங்களையும் ஒரே மின்னனு வலை
பின்னலின் கீ ழ் கொண்டுவர முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.

தபால் நிலைய வங்கிகளும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.


வாழ்நாள் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு (உள்நாட்டு
மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே பணமாற்று சேவை)
உள்ளிட்டவையும் நன் முறையில் செயல்படுகின்றன.
தனியார் நிறுவனங்கள் பல இந்த சேவையைச் செய்யும் போதிலும்,
அரசு தபால் துறையால் மேலும் சாதிக்க முடிகின்றது. இதற்குக் காரணம்
முக்கியமான நகரங்களைத் தாண்டி கிராமங்களையும் அடையக்கூடிய
எங்களின் பலம்.
தபால் துறையானது சமீ பத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கீ ட்டின்
(2010) போது பல உட்புற கிராமங்களையும் எளிதாக அடையவும்,
கொடுக்கப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான
முகவரி சரிபார்த்தலை செய்வதற் கும், நுகர்வோர் விலைபட்டியல்
தயாரிப்பதற்கும் பெரிதும் உதவியுள்ளது.
இதனால் தபால் நிலையங்களின் நிலை உயர்ந்துள்ளது. மக்களுக்கு
மீ ண்டும் பல வகையான சேவைகளைச் செய்து, மக்களின் தினசரி
வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையை நெருங்கிச்
சென்றுள்ளது.
தபால்துறையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட விருக்கும்
சேவைகள் குறித்து?
இந்தியாவில் குறிப்பாக வங்கிகள் தபால் நிலையத்துடன் இணைந்து
கிராமப்புற வங்கிகளை ஏற்படுத்த விளைகின்றது. அவசரத் தபால்
இருக்கும் இடத்தை கண்டறியும் சேவையைப் (Speed Post Tracking Service)
போல பதிவஞ்சலை கண்டறியும் சேவையும் விரைவில்
அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் பணியாற்றும் ஆறு லட்சம் அஞ்சல் பணியாளர்களுக்கும்
இப்போது கணிணிப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது. 2014 ம்
ஆண்டு இத்திட்டம் முழுமையாக முடிவு பெறும் போது
கிராமப்புறங்களிலும் தபால் துறை வங்கி சேவை உள்ளிட்ட அனைத்து
சேவைகளையும் முழுமையாகப் பெறலாம். 2014 ல் தபால் துறை
முற்றிலுமாக நவனமடையும்.

தபால் தலை பற்றி…
வழக்கமாக அச்சிடப்படும் தபால் தலையைத் தவிர, இந்தியத்
தபால்துறை ஒவ்வொரு வருடமும் 30 க்கும் குறைவான விதவிதமான
தபால்தலைகளை வெளியிடுகின்றது. குறிப்பிட்ட அளவு மட்டுமே
வெளியிடப்படும் இத்தபால் தலைகள் விற்றுத்தீர்ந்ததும் பின் நாட்களில்
மிக அதிக விலைக்கு விலைபோகின்றன. அரசிற்கு இதனால்
எவ்விதமான லாபமும் இல்லாத போதும், மக்கள் லாபம்
அடைகின்றனர். இந்த சிறப்புத் தபால்தலைகள் சரித்திர
ஆவணங்களாகவும் திகழ்கின்றன. மாணவர்களின் அறிவுத்திறனை
வளர்க்கவும் இவை உதவுகின்றன.
கடினமான வேலைப்பளுவிற்கு இடையில் உங்கள் குடும்பத்திற்காக
உங்களால் நேரம் ஒதுக்கிக் கொள்ள முடிகிறதா?
குடும்பத்திற்காக குறைந்த நேரம் ஒதுக்கி னாலும் அது உபயோகமாக,
பயனுள்ளதாக, தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்து
செயல்படுவேன். என் குடும்பத்தாரும் என்னுடைய வேலையை
அனுசரித்து மிகவும் புரிதலுடன் நடந்து கொள்கிறார்கள். பணி
நிமித்தமாகப் பல ஊர்களுக்குச் செல்வதை ஒரு சுமையாக நான்
நினைப்பதில்லை. புது நண்பர்களையும், புது இடங் களையும் தெரிந்து
கொள்ளும் வாய்ப்புகளாகவே நான் அதை எடுத்துக் கொள்கிறேன்.
வலிகளையும் ரசிக்கக் கற்றுக்கொள்கிறேன்.
உங்களுக்கு முன் உதாரணமாக யாரைக் கருதுகிறீர்கள்?
திரு. தியோடர் பாஸ்கரன் இயற்கை ஆர்வலர் மற்றும் சிறந்த மனிதர்.
திருமதி. சாந்தி நாயர், தமிழகத்தின் முதன்மை அஞ்சல் தலைவர்.
எனக்கு பணி வல்லமையைக் கற்றுக் கொடுத்தவர். ஆசிரியர் டாக்டர்
கே.கே., நற்சிந்தனை கொண்ட எனது நண்பர்கள் மற்றும் என் தந்தை
திரு. இரா.வரதராஜன்.
புதிதாகப் பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு நீ ங்கள் சொல்ல
விரும்புவது…
பிரச்சனைகள் நமக்கு மட்டுமே வருகின்றது என்ற எண்ணத்தை
விடுங்கள். எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனைகள் தான் நமக்கும்
வருகின்றது. ஒரு முடிவு எடுக்கும்போது நல்லறிவுடனும், மற்றவர்கள்
மீ து அக்கறை கொண்டும் எடுக்க வேண்டும். நிர்வாகத் திறன் என்பது
வெளியில் இல்லை. உங்களுக்குள் தான் இருக்கின்றது.
இளைஞர்களுக்கு நீ ங்கள் சொல்ல விரும்புவது…
நீங்கள் நீங்களாகவே இருங்கள். சமூகத்திற் காகவும்,
மற்றவர்களுக்காகவும் மாறாதீர்கள். கனவுகளை அடையப்
போராடுங்கள்.
‘தன்னம்பிக்கை’ குறித்து…
இந்த வார்த்தையிலேயே அனைத்தும் உள்ளது. நேரம் பலனை
எதிர்பார்க்காது நற்செயல் புரிய அனைவரையும் தூண்டி சாதிக்க
வைக்கிறது.
தங்கள் குடும்பம் குறித்து…
அளவான ஆரவாரமில்லாத குடும்பம். மனைவி சாந்தி குடும்ப நிர்வாகி.
மகன் இராகுலன், பொறியியல் படிப்பு முடித்துக்கொண்டு மேற்
படிப்பிற்குத் தயாராகிக்

உதவும் குணம்! நம்மை


உயர்த்தும் தினம்!
Author: டாக்டர் ந.செந்தில்

Nov 2010 | Posted in Cover Story

நேர்முகம் : – டாக்டர் செந்தில் நடேசன்

திரு.K.A. குரியச்சன்

சமூக சேவை சாதனையாளர் கோவை

பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மேலான எண்ணம்


விடாமுயற்சியுடன் செயல்பட்டு எடுத்துக் கொண்ட செயல்களில்
எல்லாம் வெற்றியைக் குவிக்கும் பேராற்றல், இளம் வயதிலேயே
ரோட்டரி கிளப்பின் ஆளுநர் பொறுப்பு, பொறியாளர் பணியில் இருந்து
கொண்டு மேலாண்மைத் துறையில் பகுதி நேர பேராசிரியராக
பணிபுரிந்து ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்குவதில்
ஆர்வம், அரசின் 108 திட்டத்தின் தாய் திட்டத்தை உருவாக்கியதில்
பெரும் பங்களிப்பு.

உங்களின் இளமைக்கால வாழ்க்கை, கல்வி குறித்து

என்னுடைய பள்ளிப் படிப்பு அனைத்தும் நான் பிறந்து வளர்ந்த


கோவையில் தான். பி.இ. சிவில் என்ஜினியரிங் பெங்களூர்
பல்கலைக்கழகத்திலும், எம்.பி.ஏ., பி.எஸ்.ஜி. பொறியியல்
கல்லூரியிலும் பயின்றேன்.

சிறு வயதிலேயே தபால் தலை சேகரிக்கும் பழக்கம் இருந்தது. எங்கள்


பள்ளி அணி மாவட்ட, மாநில அளவிலும், தேசிய அளவிலும் தபால்
தலை சேகரித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. இந்தப் பழக்கத்தின்
மூலம் என்னுடைய பொது அறிவு பெரிதும் வளர்ந்தது. பள்ளி, கல்லூரி
காலங்களில் தேசிய மாணவர் படையில் என்னை இணைத்துக்
கொண்டதின் பலனாக பல புதியவற்றைக் கற்றுக் கொண்டேன்.
அதனால் என்னுடைய எண்ணங்கள் விரிவடைந்தது. சமூக சேவையில்
ஆர்வம் கொள்ளவும் தூண்டியது.

தபால் தலை சேமிக்கும் பழக்கத்தின் மூலமாக உலக நாடுகள், அங்கு


வாழ்ந்த தலைவர்கள், உலக நாடுகளில் உள்ள பூக்கள், மரங்கள்,
இரயில்கள் இப்படி ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக அறிந்து
கொள்ள முடியும். மேலும் இந்த ஆர்வம் நாளடைவில் நிறைய
விவரங்களை அறிந்து கொண்டு நல்ல திறமையுடன் பல செயல்களை
ஆக்கப்பூர்வமாக படைக்க பெரிதும் உதவி புரிகிறது. அதே போல தேசிய
மாணவர் படையில் (NCC) இணைந்து கொள்வதும் நல்ல பண்புகளை
இளம் வயதிலேயே அறிந்துணர்ந்து சிறப்பாக வளர பெரிதும்
உதவுகிறது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இது போன்ற
வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று
விரும்புகிறேன்.
படிக்கும் காலத்தில் எந்த அனுபவம் உங்களுக்குள் நம்பிக்கை
விதையை தூவியது?

பெங்களூரில் படிக்கும் போது நான் பெங்களூர் பல்கலைக்கழகத்தின்


பொது செயலாளராக இருந்தேன். அப்போதைய கர்நாடக முதல்வர்
இராமகிருஷ்ண ஹெக்டே கர்நாடக பிரதேச காங்கிரஸ் தலைவர்
ஆஸ்கர் பெர்னான்டஸ் உள்ளிட்டோருடன் பல்கலைக்கழக பணிக்காக
உரையாடியுள்ளேன். எங்களுடைய சந்திப்பு டெக்கான் ஹெரால்டு
பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. 18 வயதில் எனக்கு கிடைத்த அந்த
அனுபவம் மனதில் தன்னம்பிக்கை விதையை முளைக்கச் செய்தது.

சிவில் இன்ஜினியரிங் துறையில் இருந்து கொண்டு மேலாண்மைத்


துறையில் பகுதி நேர பேராசிரியராக நீ ங்கள் பணியாற்றுகிறீர்கள்.
உங்கள் பணி குறித்து:

ஆசிரியர் பணி எனக்கு தொழில் அல்ல. அது என்னுடைய பேரார்வம்.


மாணவர்களுக்கு அறிவினை அளிப்பது எனக்கு ஆனந்தத்தை
அளிக்கிறது. நான் கட்டுமானப் பணியில் இருந்து கொண்டே
மாணவர்களுக்குப் பாடமும் எடுப்பதால், அவர்களுக்கு அனுபவ
அறிவை என்னால் வழங்க முடிகின்றது. இந்திய விமானப் படையில்
காஷ்மீ ர் முதல் கன்னியாகுமரி வரை உள்ளவர்களுக்கும் சில
வகுப்புகள் எடுத்துள்ளேன். ‘Discover Youself’ (உன்னை அறிவாய்)
என்பதைப் பற்றி அவர்களுக்கு நான் எடுக்கும் வகுப்பில் அவர்களுடைய
உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர முயல்கிறேன். அது எனக்கு
மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது.

நம்முடைய கல்வி திட்டத்தில் என்ன மாற்றங்கள் வர வேண்டும்


என்று நினைக்கிறீர்கள்?

நல்ல தரமுள்ள நிர்வாகக் கல்லூரிகள் வர வேண்டும். மாணவர்களுக்கு


அனுபவ அறிவினை வழங்க வேண்டும். அவர்கள் திறனை வெளிக்
கொணர வாய்ப்பளித்து, நவன
ீ முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு பயிற்சி
அளிக்க வேண்டும். நூலகம், இணையதளம், பத்திரிக்கை
உள்ளிட்டவைகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண வேண்டும்.
தீவிர போட்டிகளுக்கு இடையிலும் உங்கள் கட்டுமானத் துறையில்
உங்களுக்கென்று உள்ள இடத்தை தக்கவைத்து கொள்கிறீர்கள்?

எத்தனை போட்டிகள் வந்தாலும் நல்ல தரம் வாய்ந்த பொருட்களை


மக்கள் எப்போதும் விரும்பி வாங்குகின்றனர். சீன பொருட்கள் மலிவாக
கிடைக்கும் போது மக்கள் அந்தப் பொருட்களை விட்டு நம்
பொருட்களை தேர்ந்தெடுப்பது இந்த காரணத்தினால் தான்.

மக்களுடைய வாழ்க்கைத் தரம் மாறிக் கொண்டே வருகின்றது.


அவர்களுக்கென்று நாங்களும் மாறுகிறோம். அவர்களின்
விருப்பங்களை நன்கு உணர்ந்து அதனை எல்லோரும் விரும்பும்
விதமாக அமைத்து, இப்போது பெரும்பாலானவர்களுக்கு நாமிருக்கும்
வடு
ீ அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.
ஆடைகள் வைத்துக் கொள்வதற்கான அலமாரி, மாடுலர் கிச்சன்
உள்ளிட்டவற்றில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது
வட்டுக்
ீ கடனும் எளிதாக கிடைப்பதால் அலுவலகங்களைப் போல
வட்டைப்
ீ பராமரிப்பதிலும், அழகுபடுத்துவதிலும் மக்கள் அக்கறை
கொள்வதால் இந்த தொழில் தற்போது நல்ல வளர்ச்சி அடைந்து
வருகின்றது. எங்கள் நிறுவனமும் நாளும் உயர்ந்து வருகிறது.

ரோட்டரி கிளப்பின் மூலம் நீ ங்கள் செய்த சாதனைகள் குறித்து:

இளம் வயதில் ரோட்டரி கிளப்பின் ஆளுநர் பொறுப்பை வகித்தவன்


என்பதை நினைத்தால் மகிழ்ச்சியே. நான் ஆளுநர் பொறுப்பை
ஏற்றபோது என் வயது 34. கோவை, கேரளாவில் உள்ள 12
மாவட்டங்களுக்கு நான் ஆளுநராக இருந்தேன்.

நான் சிறு பிள்ளையாக இருந்த போது என் தந்தைக்கு சாலை விபத்து


நேர்ந்தது. 10 நிமிடம் தாமதமாக அவரை மருத்துவமனை கொண்டு
சென்றிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கமாட்டார். அன்றைக்கு ஒரு
பேருதவி செய்து ஒருவர் என் தந்தையையும் குடும்பத்தையும்
காப்பாற்றினார்.

இதை மனதில் வைத்து இதுபோல் பல குடும்பங்களுக்கு உதவ


வேண்டும் என்ற எண்ணத்தில் பவானி முதல் கொச்சின் வரை உள்ள
நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 20 கிலோமீ ட்டருக்கும் ஒரு
ஆம்புலன்சும், மருத்துவ வசதி கொண்ட பூத்தும் (சாவடியும்)
அமைக்கப்பட்டது. இதன் மூலம் 7000 பேரை காப்பாற்றியுள்ளோம். இந்த
சாவடிகளை பார்த்த அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர்
மேஜர் ஜெனரல் காண்டூரி என்னை நேரில் அழைத்துப் பேசினார். இந்த
திட்டத்தைப் பற்றி விளக்கவுரை அளிக்க டில்லி சென்றேன்.
எங்களுடைய இந்த திட்டம் ஜார்கண்ட், ஆந்திரா உள்ளிட்ட
மாநிலங்களில் பல இடங்களில் செயல்முறைபடுத்தப்பட்டது. இந்த
திட்டமே தற்போதைய 108 திட்டத்தின் தாய் என்று சொல்வதில் நான்
பெரிதும் மகிழ்ச்சி கொள்கிறேன். மேலும் விபத்துக்களைத் தடுக்க 3
விஷயங்களை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் 3-E’s
எனப்படும் (Education, Engineering and Enforcement) கல்வி, அறிவு, கட்டமைப்பு
மற்றும் விழிப்புணர்வு.

இவர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன் என்று நீ ங்கள் சொல்ல


விரும்புகிறவர்கள்:

தனிப்பட்ட முறையில் எனக்கு ஊக்கம் தந்து வழி நடத்திய தந்தை


முடியப்பன். ஆர்ய வைத்திய சாலையின் நிர்வாக இயக்குநர் திரு.
கிருஷ்ணகுமார் வாரியார் என்னை மிகவும் பாதித்தவர். திருமணம்
செய்து கொள்ளாமால் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும்
அவரை பார்த்து நான் வியக்கிறேன். மேலும் டி.என்.சேஷன்,
கிருஷ்ணராஜ் வானவராயர் உள்ளிட்டோரும் என்னை பெரிதாக
கவர்ந்தவர்கள். ஜி. வரதராஜன் (பி.எஸ்.ஜி. நிர்வாக அறங்காவலர்)
அவர்களின் எளிமையும், ஜி.ஆர். மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.
கோ. இராமநாதன் அவர்களின் செயல்துடிப்பும் என்னைக் கவர்ந்தது.

புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும் மனிதர்களைப் படிப்பதில்


ஆர்வம் காட்டுகிறேன் என்கிறீர்கள் எப்படி?

ஷிவ் கெராவின் “நீங்களும் ஜெயிக்கலாம்”, ஏ.பி.ஜே. அப்துல்கலாமின்


“அக்னிச் சிறகுகள்” உள்ளிட்ட புத்தகங்கள் என்னைக் கவர்ந்தவை
என்றாலும் நான் புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும் மனிதர்களைப்
படிப்பதில் ஆர்வம் உடையவனாகவே இருக்கிறேன். காந்தி பிறந்த
இடத்தைப் பார்த்து, உணர்ந்து பலவற்றைக் கற்றுள்ளேன். அல்போன்சா
அம்மையார், அன்னை தெரசா அவர்களின் உள்ளன்பை உணர்ந்து
மகிழ்ந்துள்ளேன்.
இன்றைய இளைஞர்களின் எப்படிப்பட்ட செயல்பாடுகள் வட்டையும்

நாட்டையும் உயர்த்தும் என்று நினைக்கிறீர்கள்?

இப்போதைய இளைஞர்கள் கல்வியைக் கற்று வேலையில் இருப்பது


மட்டும் போதாது. அவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள முன் வர
வேண்டும். நம்முடைய அரசியலமைப்பும், அதையே முன் மொழிகிறது.
நாட்டிற்காக அவர்கள் உழைக்க முன்வர வேண்டும். நேரத்தை
உபயோகமாக செலவு செய்ய வேண்டும். 60 நிமிடங்களில் 6 நிமிடத்தை
பிறருக்காக உதவி செய்திட முன்வர வேண்டும். ஒவ்வொருவரும்
இதைச் செய்யும்போது நம் வடும்
ீ நாடும் முன்னேறும்.

மரம் வளர்த்து பாதுகாத்தல், குப்பை போடாமல் நம் சுற்றுப்புறச் சூழலை


சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றையும் அவசியம்
செய்ய வேண்டும்.

இன்றைய பத்திரிக்கைத் துறை எவ்வாறு இருக்க வேண்டும் என்று


நினைக்கிறீர்கள்?

புதுமையை புகுத்துவதாக, படைப்பாற்றலை தூண்டுவதாக அமைய


வேண்டும். தேவையில்லாத நிகழ்ச்சிகளை ஒதுக்கி, ஒவ்வொரு ஊர்
மற்றும் நாட்டின் தனித்தன்மையையும், திறமையையும்,
கண்டுபிடிப்புகளையும் காட்டுவதாக இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருக்கும் நல்ல பல்கலைக்கழகங்கள் பற்றியும்,
ஊக்கத்தொகை பற்றியும், பாடத்திட்டங்கள் பற்றியும், கல்வியைப்
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு இருத்தல் வேண்டும்.

‘தன்னம்பிக்கை’ வாசகர்களுக்கு நீ ங்கள் சொல்ல விரும்புவது:

குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். முதலில் குடும்பம், பிறகு


தொழில், அடுத்ததாக சமூக சேவை. உங்கள் குடும்பத்துடன் கழிக்கும்
நேரம் தரமுடையதாக இருக்கட்டும். கஷ்டங்கள் இல்லாதவர்கள்
யாருமே இல்லை. அதனால் மகிழ்ச்சியுடன் உங்கள் பணிகளில்
ஈடுபடுங்கள். பிறருக்கு அறிவைக் கொடுங்கள். ஊக்கப்படுத்துங்கள்,
நம்பிக்û யுடன் வாழுங்கள். நீங்களும் வளர்வர்கள்.
ீ நாடும் வளரும்.
கிராமம் என முடங்காதே சிகரம்
உண்டு மறக்காதே!!
Author: டாக்டர் ந.செந்தில்

Oct 2010 | Posted in Cover Story

நேர்முகம் : – டாக்டர் செந்தில் நடேசன்

டாக்டர் எஸ். திருமலைச்சாமி


மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் KMCH கோவை

 இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தலைசிறந்த


மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்.

 உலகநாடுகள் பலவற்றில் தன்னுடைய ஆய்வுக்


கட்டுரைகளை சமர்பித்து அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு
இருப்பவர்.

 முழங்கால் மூட்டு, இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சைக்கான


ஆய்வுக் கட்டுரைகளுக்கு தேசிய, மாநில அளவில் தங்கப்
பதக்கம் பெற்றவர்.

 தமிழ்நாடு மெடிக்கல் அசோசியேசன் செயலாளராக பொறுப்பு


வகித்தவர்.

 ஏழை எளியவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சையை


வழங்கியும், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு பெரிதும்
உதவியும் வருபவர்.

 ‘கிராமத்து இளைஞர்கள்’ தங்களால் எல்லாத்துறையிலும்


சிறப்பாக சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன்
செயல்பட்டு அவர்கள் உலகளவில் உயர்ந்து நிற்க வேண்டும்
என்கிற விருப்பம் கொண்டவர். கோவை மெடிக்கல் சென்டர்
மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் எஸ். திருமலைசாமி
அவர்கள் எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து, இன்று
உலகநாடுகள் பலவற்றில் தன் மருத்துவ திறமையை
அற்புதமாக பதிவு செய்திருக்கும் அவரோடு இனி நாம்……….

இளமைக்காலம்

பழநி அருகே எரமநாயக்கன்பட்டி என்ற 200 வடுகளைக்


ீ கொண்ட சிறிய
கிராமமே நான் பிறந்த ஊர். அப்பா சுப்பையா கவுண்டர். அம்மா
கண்டியம்மாள். ஒரு சகோதரர். அவருக்குத் தொழில் விவசாயம்.
உலத்தில் யாரையாவது பார்க்க வேண்டும் என்று கேட்டால் நான் என்
தந்தையை பார்க்க வேண்டும் என்று கேட்பேன். உயர்ந்த மனம் கொண்ட
அவர் நிறைய பேருக்கு நிலம் பொருள் எனப் பலவாறு தானம் தந்து
உதவியிருக்கிறார். அப்படிப்பட்டவர் என்னுடன் இல்லை என்பது
பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது. அம்மா தான் எல்லாமுமாக இருந்து
எங்களை உயர்த்தினார்கள். என் பெற்றோர்களே என் தெய்வம்.
என்னுடைய ஆரம்ப பள்ளி அரசு ஊ. ஓ. துவக்கப் பள்ளியில் அதுவும்
மண்ணில் தான் அ… ஆ……. எழுதி படித்தது வந்தேன். A,B,C,D ஆங்கில
எழுத்துக்களை நான் கற்க ஆரம்பித்ததே ஆறாம் வகுப்பில்தான்.
நேர்மை, கடின உழைப்பு, புராணங்கள், இதிகாசங்கள் முதலியவற்றை
அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். தமிழ்வழி பள்ளியிலேயே
படித்த காரணத்தினால் தமிழின் மீ து தனிப்பற்றுதல் இருந்தது.
பாரதியார் கவிதைகள், கம்பராமாயணம், சீவக சிந்தாமணி, ஆகிய
நூல்களை தேவைக்கு மேல் படித்திருக்கிறேன். அதன் பயன்பாட்டை
பிற்காலத்தில் உணர்ந்தேன். பாரதியார் கவிதைகள் எனக்கு
உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்தது. எதையும் சாதிக்க
முடியும் அச்சப்படக்கூடாது என்பதினை அவர் கவிதைகளின் வழி
கற்றுக் கொண்டேன். என்னுடைய பெரியப்பா, மாமாவின் உதவி
என்றுமே மறக்கமுடியாதது. இருவர் பெயரும் பழனிச்சாமி கவுண்டர்.
அவர்கள் தந்த பேராதரவில்தான் இந்த வளர்ச்சியை இன்று எட்ட
முடிந்திருக்கிறது. ஆரம்பள்ளிக் காலத்தில் படிப்பில் அக்கறை இல்லை.
குடும்ப சூழ்நிலை காரணமாக நாம் படித்தால் வாழ்க்கையில் முன்னேற
முடியும் என்பதை அறிந்தேன். பின்பு தான் சாதிக்க வேண்டும் என்கிற
வெறி எனக்குள் வந்தது. எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் முதல்
மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தொடர்ந்து
முயற்சி செய்தேன் அப்படியே சாதித்தேன். அது எனது முதல்
இலட்சியத்திற்கு கிடைத்த வெற்றி.
மருத்துவத்தின் மீ து ஈடுபாடுவரக் காரணம்:
நான் ஏழாவது படிக்கும் போது என் தாயாருக்கு மதுரையில் டாக்டர்
ஆசிர்வாதம் மருத்துவமனையில் தைராய்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர் ஆசிர்வாதம் அவர்களின் அன்பான செயல்பாடு என்னைப்
பெருமளவு பாதித்தது. அப்பொழுதே எனக்குள் மருத்துவராக ஆக
வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. வளர்ந்து அவரைப் போன்று
நாமும் உயர்ந்து உயிர்களைக் காக்க வேண்டும் என்கிற ஆசை எழுந்தது.
மறக்க முடியாத ஆசிரியர்கள்:
சாலமென் ஆசிரியரின் இயேசு கிறிஸ்து கதைகள் மூலம் மதங்களைக்
கடந்து மனங்களை நேசிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.
குருசாமி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்
முத்துசாமி, வேதியியல் ஆசிரியர் ஜெகநாதன், ராமசாமி, கந்தசாமி
முதலிய ஆசிரியர்கள் என்னால் மறக்க முடியாத ஆசிரியர்கள். நான்
ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அவர்களைச் சந்தித்து உரையாடி
விட்டு வருவேன். இன்றும் இவ்வாசிரியர்களுடன் தொடர்பில்
இருக்கிறேன். அன்றைக்கு இவர்கள் காட்டிய அக்கறையே என்னை
கல்வியில் வளர வைத்தது. வாழ்வில் உயர வைத்தது.
எச்சம்பவம் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை?
செயின் ஜோசப் காலேஜ் திருச்சியில் படித்தது தான் என் வாழ்க்கையின்
திருப்புமுனை. 18 வருடங்கள் கிராமப்புற வாழ்க்கையில் இருந்து விட்டு
நகர்புற வாழ்க்கைக்கு வந்தபோது என்னால் திருச்சியில் இருந்து
கொண்டு படிப்பைத் தொடர முடியவில்லை. ஓரிரு மாதங்களில்
ஊருக்குத் திரும்பி விட்டேன். பெரியப்பா, பெரியப்பா, மகன் செல்வராஜ்
ஆகியோரின் அறிவுரைகளின் படி மீ ண்டும் செயின் ஜோசப்
கல்லூரியில் வந்து படித்தேன். அங்கு கற்ற கல்வியும், நட்புகளும்
என்னைச் சாதிக்கத் தூண்டியது. யாருடைய பரிந்துரை இல்லாமலும்,
பணம் கொடுக்காமலும் மெரிட்டில் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும்
என்று நினைத்தேன். அதற்காக கடினமாக உழைத்து வந்தேன். அதன்
விளைவாக மெரிட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். கட்டணம்
வருடத்திற்கு 400 ரூபாய் உணவுவிடுதிக்கு 300 ரூபாய். இந்தச் செலவை
இரண்டு கறவை மாடுகளின் வருமானத்தின் மூலமாக என் மருத்துவக்
கல்லூரிப் படிப்பை என் தாய் பார்த்துக் கொண்டார்கள்.
மதுரை மருத்துவக் கல்லுரி:
மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த போது
நிறைய மாற்றங்களை எனக்கு இக்கல்லூரி ஏற்படுத்தியது. என் மன
வளர்ச்சிக்கும், என் தொழில் வளர்ச்சிக்கும் பெரிதும் காரணமாக இருந்த
கல்லூரி அது.
மருத்துவத்தில் இருந்து கொண்டு எப்படி மாநில அளவில் தேர்வு செய்த
வரராக
ீ விளையாட்டிலும் ஜொலித்திருக்கிறீர்கள்?
சிறு வயது முதலே எனக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு.
நான் நல்ல உயரம். என் உயரத்தைக் கொண்டு திடீரென பேஸ்கட்பால்
வரராக
ீ மதுரை மெடிக்கல் காலேஜ் அணியில் தேர்வு
செய்துவிட்டார்கள். தெரியாது என்று சொல்லி தவிர்ப்பதை விட
இத்துறையிலும் சாதிக்க வேண்டுமென அதிகாலையில் எழுந்து கடும்
பயிற்சிகள் எடுத்து பேஸ்கட்பால் வரராக
ீ திண்டுக்கல் மாவட்டம்,
மதுரை மெடிக்கல் காலேஜ், நேஷனல் கிளப், மதுரை யுனிவர்சிட்டி
ஆகிய அணிகளின் சார்பாக விளையாடி பாராட்டுக்கள் பெற்றேன்.
மேலும் தமிழ்நாடு அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட போது
மருத்துவர் இலட்சியம் பாதித்துவிடுமென அந்த வாய்ப்பை தவிர்த்து
விட்டேன். தற்போதும் ஓய்வு நேரங்களில் என் மகனோடு டென்னிஸ்
விளையாடி வருகிறேன்.
ஒரு விளையாட்டு வரராக
ீ இருக்கும் பட்சத்தில் அடையும்
நன்மைகள்

 உடல் ஆரோக்கியம்

 வெற்றி தோல்விகளை சரிசமமாக எடுத்துக் கொள்ளும்விதம்

 மனப்பக்குவம்

 நல்ல நட்புகள்

மருத்துவத்தில் குறிப்பிட்டு ஆர்த்தோ துறையை நீ ங்கள்


தேர்ந்தெடுக்கக் காரணம்?
மதுரை மெடிக்கல் காலேஜில் படிக்கும் போது ஆர்த்தோ சிறப்பு
மருத்துவர் தேவராஜ் அவரின் செயல்பாடுகள் என்னை அத்துறையில்
தனிக்கவனம் செலுத்தி ஆர்த்தோ மருத்துவராக வேண்டும் என்ற
எண்ணத்தினை ஏற்படுத்தியது. இவரிடம் நாம் சேர்ந்து பயிற்சி
மேற்கொள்ள முடியாதா என்று எனக்குள் ஒரு ஏக்கம் ஏற்பட்டது. பின்பு
நான் என்னுடைய ஆர்த்தோ பயிற்சியை மேற்கொள்ளும் போது நான்
விரும்பியது போலவே அவரின் நெறிகாட்டுதலின் படி பயிற்சி
மேற்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப்பெரிய
மகிழ்ச்சியை தந்தது. அவர்கள் தந்த பாதிப்பு தான் காரணம். அவரின்
செயல்பாடுகளே அந்தத் துறையின் மீ து என்னை தனிக்கவனத்தை
கொண்டு வர வைத்தது. பின்பு அவரிடமே ஆர்த்தோவில் சேர்ந்து
பயிற்சிகள் பெற்றேன்.
இந்தத் துறையில் ஒர் சிறந்த அங்கீ காரம் பெற நீங்கள் மேற்கொண்ட
முயற்சிகள் குறித்து?
எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள்
15 க்கு மேற்பட்டு எழுதினேன். இரண்டரை வருடங்கள் எதிர்பார்த்த
அங்கீ காரம் கிடைக்கவில்லை. இத்துறையில் இன்னும் உழைப்பை
கடினமாக்க வேண்டும் என்று அப்போது உணர்ந்தேன். கோவை
பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் சிறப்பு அனுமதி பெற்று தினமும் 14
மணிநேரம் உழைத்தேன். இலக்கை நோக்கி எளிதாக பயனித்து
சாதிப்புகளை நிகழ்த்த அந்த உழைப்பு பெரிதும் உதவியது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நீங்கள் தரும் இரண்டு முக்கிய
ஆலோசனைகள்
1. மாணவர்களாக இருக்கும் காலத்தில் விளையாட்டில் ஆர்வம்
செலுத்துங்கள் அது மனபலத்தையும் உடல்பலத்தையும்
அதிகப்படுத்தும்.
2. மருத்துவத்தில் இரண்டாவது வருட படிப்பின் போதே நுழைவுத்
தேர்வுக்கும் தயார் ஆகுங்கள் அது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பெரிதும்
உதவியாக இருக்கும்.
KMCH – ல் பணியில் அமர்ந்தது குறித்து?
ஜென்ரல் ஆர்த்தோபேடிக்ஸ் மதுரை மெடிக்கல் காலேஜில் படித்துக்
கொண்டிருக்கும் போதே எம், எஸ் ஆர்த்தோவில் சேர்ந்து ராயப்பேட்டை
மருத்துவமனையில் நன்கு பயிற்சி பெற்றேன். மேலும் 1995- ஆம்
ஆண்டு இங்கிலாந்தில் ஆர்த்தோ சிறப்பு தேர்வு எழுத அங்கு
பயணமானேன். ஒரு வருடத்திற்குள் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக
வேண்டும் என்கிற உறுதியுடன் அத்தேர்வைச் சந்தித்து வெற்றி
பெற்றேன். அதற்குப் பின்பு பல்வேறு வாய்ப்புகள் தேடி வந்தது. நூறு பேர்
பங்கேற்ற நேரடித் தேர்வில் முதல் இடத்தைப் பிடித்து கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகப் பணியில் இணைந்தேன். அப்பல்கலைக்கழகத்தில்
மூட்டு மாற்று அறுவை, ஆர்த்தராங்கோபி இரண்டிலும் நன்கு
தேர்ச்சிபெற்றேன். அப்போது கோவை KMCH -ல் பணியாற்ற
மருத்துவர்கள் தேவை என்கிற விளம்பரம் இங்கிலாந்து
பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. அப்போது அங்கு நடைபெற்ற
நேர்முகத்தேர்வில் டாக்டர் நல்ல பழனிச்சாமி அவர்கள் என்னைத்
தேர்வு செய்து இங்கு பணியில் அமர்த்தினார்கள். வாழ்வின்
வளர்ச்சியில் இரண்டு ‘ப’ என்பது ( பழனிச்சாமி கவுண்டர்) என்பது
மூன்று ‘ப’ ஆனது.
உலக அளவில் ஒப்பிடும்போது ஆர்த்தோ துறையில் இன்னும் நாம்
எட்ட வேண்டியது………
நம்மிடம் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களின் ஆற்றல்
போதுமானதாக இருக்கிறது. அதற்கான கருவிகளும் மேலைநாட்டைப்
போலவே இருக்கிறது. டெலிவரி சிஸ்டம், ஹாஸ்பிட்டல்,
என்வரால்மென்ட், நர்சிங்கேர், சப்போட்டிங்கேர் இன்னும் கொஞ்சம்
உயர்த்தப்பட வேண்டும்.
மெடிக்கல் டூரிசம்:
நம்நாட்டில் விரைவில் இத்துறை நன்கு வளரப்போகிறது. எதிர்வரும்
காலங்களில் வெளிநாடுகளில் இருந்து நிறைய நோயாளிகள்
சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருவார்கள் அதில் சந்தேகமில்லை.
காரணம் தட்பவெட்பநிலை, டூரிசத்திற்கு ஏற்றாற்போல் உள்ள இடங்கள்.
மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான அளவு
மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இருக்கிறதா?
2000 த்தில் 5000 மூட்டுமாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருந்தன.
2010 ல் ஒரு இலட்சம் மூட்டுமாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது.
பத்து ஆண்டுகளில் 20 மடங்கு அதிகமாயிருக்கிறது என்றாலும் இது 20
சதிவிதம் தான். இன்னும் 80 சதிவிகிதம் அறுவை சிகிச்சை
செய்யப்படாமல் இருக்கிறது. அதனால் இந்திய அளவில் தனியாகவே
மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனைகள் தேவைப்படுகிறது.
மூட்டுமாற்று அறுவை சிகிச்சை பெருகிவரக் காரணம்:
முதலில் மக்களின் லாஞ்சிவிட்டி அதிகமானது. கடந்த 20 ஆண்டுகளில்
மனிதனின் சாரசரி ஆயுள் 57 லிருந்து 67 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தப்
பத்து வருடகாலத்தில் தான் இதயநோய், நீரழிவு நோய் என
அதிகமாயிருக்கிறது. இரண்டாவது உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை
முறைகள்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்குப் பின்பு மூட்டுமாற்று அறுவை
சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காயிருக்கிறது.
மூட்டுத் தேய்மானத்திற்கு அறிவியல் பூர்வமான காரணம் இல்லை.
ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் கண்டறியப்படவில்லை.
மூட்டுத் தேய்மானத்தினைக் குறைக்க உயரத்திற்கு தகுந்த எடையைக்
கொண்டிருத்தல் வேண்டும். தசைகளுக்கு பயிற்சிகள் கொடுத்தல்,
படிக்கட்டுகளை அதிகம் பயன்படுத்தாதிருத்தல் இப்படி அன்றாட
வாழ்க்கையில் சில நடைமுறைகளை சரியாக கடைப்பிடிப்பதன்
மூலமாக ஓரளவு மூட்டு வலியைக் குறைக்க முடியும். 100 சதவிகிதம்
தடுக்க முடியாது.
இங்கிலாந்தில் 95 -ல் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்ய ஒருவர்
காத்திருக்க வேண்டிய காலம் 1, 1/2 வருடம் தற்பொழுது ஆறு வாரங்கள்.
நம் நாட்டினைக் காட்டிலும் இப்பாதிப்பு மேலை நாடுகளில் அதிகம்.
குடும்பம்
மனைவி டாக்டர் தமிழ்ச்செல்வி (பிரபல மருத்துவர் ஜே.கே.
பெரியசாமியின் சகோதரர் மகள்) குழந்தைகள் – சிந்து (டிசைனிங்
பெங்களூர்) மிருதுன் (10 ம் வகுப்பு வித்யா நிக்கேதன்)
நீங்கள் விரும்பிய புத்தகங்கள் குறித்து?
தமிழில் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.
பாரதியார் கவிதைகள் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின்
கடல்புறா, சின்னச் சின்ன சிறுகதைகள்.
தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீ ங்கள் சொல்ல விரும்புவது
எந்தச் சூழலில் பிறந்திருந்தாலும், கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு
குறிக்கோளை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்.
குடும்பச் சூழல் சரியில்லை. படிப்பு வரவில்லை, எனக்கு யாரும்
உதவிபுரியவில்லை இவையெல்லாமே நமக்கு நாமே ஏமாற்றிக்
கொள்ளக் கூடியவைகள். நமக்கென்று முயற்சிகள் இருந்தால்
முன்னேற முடியும்.
மருத்துவ பாலிசி குறித்து உங்கள் கருத்து
சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு இம்முறை நன்மைபயக்கத் தக்கது.
ஒவ்வொருவரும் இப்பாலிசிகளை வைத்திருத்தல் அவசியம். அதே
சமயம் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் இன்டியன் மெடிக்கல்
அசோசியேசன் மருத்துவக் குழுவினருடன் கலந்தாலோசித்த பின்பு
ஒவ்வொரு அறுவைசிகிச்சைக்கும் உண்டாகும் தொகையை நிர்ணயம்
செய்தால் பாலிசிதாரர்கள் நவன
ீ சிகிச்சைகளை திறம்பட எடுத்துக்
கொள்ள முடியும்

You might also like