You are on page 1of 5

15.02.

1983 ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா மதுபன்


______________________________________________________________________________________________
உலக அமைதிக்கான ஆதாரம் - உணர்தல்
(உலக அமைதி மாநாட்டிற்காக)

இன்று எல்லைக்கப்பாற்பட்ட தந்தை சேவைக்கு பொறுப்பாளர் ஆகியிருக்கும் சேவாதாரி


குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் ஒவ்வொருவரும்
இன்னொருவரை விட சிரேஷ்ட ஆத்மாவாக இருக்கிறார். பாப்தாதா ஒவ்வொரு சிரேஷ்ட
ஆத்மாவின், சேவாதாரி ஆத்மாவின் விசேஷத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு
குழந்தையும் இந்த உலக மாற்றக் காரியத்தில் ஆதாரமானவர்களாக, முன்னேற்றம் செய்பவர்களாக
இருக்கிறார்கள் என்று பாப்தாதாவிற்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அனைத்துக் குழந்தைகளும்
பாப்தாதாவின் காரியத்தில் எப்பொழுதும் சகயோகி ஆத்மாக்கள். அந்த மாதிரி சகயோகி, சகஜயோகி
சிரேஷ்ட, விசேஷ ஆத்மாக்களை மற்றும் சேவைக்கு பொறுப்பாளர் ஆகியிருக்கும் குழந்தைகளைப்
பார்த்து பாப்தாதா பெரிய மலர்களால் குழந்தைகளின் வரவேற்பு மற்றும் பாராட்டு விழாவை
கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு குழந்தையையும் பாப்தாதா நெற்றியின் மணி, திருப்தி
மணி, இதய மணி என்று மன்னிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். பாப்தாதாவும் எப்பொழுதும் ஒரு
பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறார். எந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறார். எந்தப் பாடல்
பாடுகிறார் என்று அதைத் தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? ஆஹா, என்னுடைய
குழந்தைகளே!, ஆஹா மிக அன்பான குழந்தைகளே! ஆஹா, ஆஹா சிரேஷ்ட ஆத்மாக்களே! ஆகா
என்ற இந்தப் பாடலைத் தான் பாடுகிறோம். அந்த மாதிரியே நிச்சயம் மற்றும் போதை எப்பொழுதும்
இருக்கிறது தான் இல்லையா! பகவான் குழந்தைகளே மகிமை செய்து பாடல் பாடுவது என்ற அந்த
மாதிரி பாக்கியத்தை முழுக் கல்பத்திலும் அடைய முடியாது. பக்தர்கள் பகவானின் மகிமை செய்து
அதிகம் பாடல் பாடுகிறார்கள். நீங்கள் அனைவரும் கூட மிக அதிகமாகப் பாடல்களைப் பாடினீர்கள்.
ஆனால் பகவானும் என்னை மகிமை செய்து பாடல் பாடுவார் என்று எப்பொழுதாவது
நினைத்திருந்தீர்களா? எதை நினைத்தே பார்க்கவில்லையோ அதை நடை முறையில் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள். உலக அமைதி மாநாட்டை நடத்தி விட்டீர்கள். அனைத்துக் குழந்தைகளும்
பேசும் போது மிக நல்ல நல்ல விஷயங்களைக் கூறினார்கள் மேலும் மனதால் அனைத்து
ஆத்மாக்களுக்காக சுபபாவனை மற்றும் சிரேஷ்ட விருப்பங்களின் நல்எண்ணங்களின்
வைப்ரேஷனையும் (எண்ண அலை களையும்) ஞான சூரியனாகி நாலாபுறங்களிலும் பரப்பினீர்கள்.
ஆனால் பாப்தாதா சொற்பொழிவு நிகழ்த்தியவர்கள் கூறிய விஷயத்தின் சாரத்தைக் கூறிக்
கொண்டிருக்கிறார். நீங்களோ நான்கு நாட்கள் சொற்பொழிவு நிகழ்த்தினீர்கள். மேலும் பாப்தாதா ஒரு
நொடி நேரத்தில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். அந்த இரண்டு வார்த்தைகள் ரியலைசேஷன்
(உணருதல்) மற்றும் சொலுயூஷன் (தீர்வுகானல்) என்னவெல்லாம் நீங்கள் அனைவரும்
கூறினீர்களோ அதனுடைய சாரம் ரியலைசேஷன் தான். ஆத்மாவைப் புரிந்து கொள்ளா விட்டாலும்
மனிதனின் மதிப்பை தெரிந்தார்கள் என்றாலும் அமைதி வந்து விடும். மனிதன் விசேஷ
சக்திசாலியான சொரூபம். ஒருவேளை இதையும் உணர்ந்து விட்டார் என்றால் மனிதன் என்ற
கணக்குப்படி மனித தர்மம் அன்பே அன்றி சண்டை சச்சரவு அல்ல. இதற்கும் மேலே செல்லுங்கள்.
மனித வாழ்க்கையின் மற்றும் மனித தன்மையின் ஆதாரம் ஆத்மா மீது இருக்கிறது. நான் எந்த
ஆத்மா, என்னவாக இருக்கிறேன், என்ற இதை உணர்ந்து விட்டால் கூட இயற்கையான குணமான
அமைதி வந்து விடும். இன்னும் மேலே செல்லுங்கள் - நான் சிரேஷ்ட ஆத்மா, சர்வ சக்திவானின்
குழந்தை என்ற இந்த உணருதல் பலமற்ற நிலையிலிருந்து சக்தி சொரூபம் ஆக்கிவிடும். சக்தி
சொரூப ஆத்மா மற்றும் மாஸ்டர் சர்வ சக்திவான் ஆத்மா என்ன விரும்புகிறாரோ, எப்படி
விரும்புகிறாரோ அதை நடைமுறையில் செய்ய முடியும். எனவே தான் அனைத்து
சொற்பொழிவுகளின் சாரம் ஒன்றே ஒன்று தான் ரியலைசேஷன் (உணருதர்) பாப்தாதாவும்
அனைத்து சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறார் இல்லையா? பாப்தாதா எப்பொழுதும்
குழந்தைகள் கூடவே தான் இருக்கிறார். நல்லது.

சேவையில் சமர்ப்பணம் ஆகியிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அனைத்து


மண்டலங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகளுக்கும், ஒவ்வொருவரும் பாப்தாதா எனக்கு
சொல்லிக் கொண்டிருக்கிறார், ஒவ்வொருவருடன் பேசிக் கொண்டிருக்கின்றார் என்று நினைத்துக்
கொள்ளுங்கள். அனைத்துக் குழந்தை களுக்கும் வெளிப்படையாக நிரூபணம்
காண்பித்திருக்கிறார்கள், அதற்குப் பலனாக பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் அவருடைய
பெயரையும் சேர்த்து, ரூபத்தையோ பார்த்துக் கொண்டிருக்கிறோம், பெயரையும் சேர்த்து
வாழ்த்துக்கள் கொடுக்கிறோம். இப்பொழுதோ நேரத்தின் மாற்றத்தின் அறிவிப்பை நீங்கள்
எப்பொழுதும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறீர்கள் என்றால் பாப்தாதாவை சந்திக்கும்
விஷயத்திலும் பரிவர்த்தனை ஆகும் இல்லையா? நமது பரிவாரம் பெரியதாக வளர வேண்டும் என்று
உங்கள் அனைவரின் எண்ணம் இருக்கிறது என்றால் பழையவர்களுக்கு தியாகம் செய்ய
வேண்டியதாக இருக்கும். ஆனால் இந்த தியாகம் தான் பாக்கியம். மற்றவர்களை முன்னே வைப்பது
தான் தன்னை முன்னேற்றுவது. பாப்தாதாவிற்கு வெளிநாட்டுக் குழந்தைகள் பிரியமானவர்கள்,
பாரதத்தைச் சேர்ந்தவர்கள் பிரியமானவர்கள் இல்லை அல்லது ஏதாவது விசேஷக் குழந்தை
பிரியமானவர் என்று அப்படி நினைக்காதீர்கள். பாப்தாதாவிற்கோ ஒவ்வொரு குழந்தையும்
இதயத்தின் ஆதாரம், நெற்றியின் கிரீடத்தின் மணி எனவே பாப்தாதா முதன் முதலில் தனது வலது
கரமான சகயோகி குழந்தை களை உள்ளப்பூர்வமாக, உயிருக்கும் மேலாக மிகவும் அன்புடன்
நினைவு செய்கிறார். தூரத்திலிருந்து வருபவர்களை தொடர்பில் வருபவர்களை சம்பந்தத்தில்
கொண்டு வருவதற்காக நீங்கள் அனைவரும் மிகவும் குஷியோடு அவர்களை முன்னுக்கு
வைக்கிறீர்கள். மேலும் வைத்துக் கொண்டே இருப்பீர்கள்.

இந்த நேரம் நிங்கள் அனைவரும் சேவைக்காக வந்திருக்கிறீர்கள். எனவே இதுவும் சேவை


ஆகிவிட்டது. ஒவ்வொரு மண்டலத்தின் பெயரைச் சொல்லவா என்ன? ஒருவேளை பெயரைக் கூறி,
யாருடைய பெயராவது சொல்லப்படாமல் விட்டுப் போய்விட்டது என்றால்? எனவே அனைத்து
மண்டலத்தைச் சேர்ந்தவர்களும், பாப்தாதா என்னை முதல் நம்பரில் வைக்கிறார் என்று புரிந்து
கொள்ளுங்கள். அனைத்து பாரதத்தின் மற்றும் வெளிநாட்டின், இப்பொழுதோ அனைவரும் மதுபன்
நிவாசிகள், எனவே விஷ்வ சாந்தி ஹாலில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும். ஓம் சாந்தி
பவன வாசி குழந்தைகளுக்கும், எப்பொழுதும் நினைவில் இருங்கள், நினைவூட்டிக் கொண்டே
இருங்கள், ஒவ்வொரு அடியிலும் நினைவுச் சின்ன சரித்திரத்தை உருவாக்கிக் கொண்டே இருங்கள்.
ஒவ்வொரு விநாடியும் தன்னுடைய நடைமுறை வாழ்க்கையின் கண்ணாடி மூலமாக அனைத்து
ஆத்மாக்களுக்கும் தனது தந்தையின் சாட்சாத்காரத்தை செய்வித்துக் கொண்டேயிருங்கள். அந்த
மாதிரி வரதானி, மகாதானி எப்பொழுதும் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் நமஸ்காரம்.

ராபர்ட் முல்லர் (ஐ.நா. சபையின் துணை பொதுச் செயலாளர்) அவர்களுக்காக மகா வாக்கியம்:
நீங்கள் சேவையில் உயர்ந்ததிலும் உயர்ந்த பங்கு ஏற்றுச் செய்யும் ஆத்மா. எந்தக் காரியத்திற்குப்
பொறுப்பாளர் ஆகியிருக்கிறேனோ அதைச் செய்தே காண்பிப்பேன் என்ற உயர்ந்த எண்ணத்தை
மனதில் வைத்திருக்கிறீர்கள். இந்த எண்ணம் பாப்தாதா மற்றும் முழு பிராமண பரிவாரத்தின்
சகயோகம் மூலம் நடைமுறையில் வந்து கொண்டேயிருக்கும். மிக நல்ல எண்ணம்
வைத்திருக்கிறீர்கள். மிக நல்ல நல்ல திட்டத்தையும் யோசிக்கிறீர்கள். இப்பொழுது இதே திட்டத்தின்
நடுவில் ஆன்மீக சக்தி சேர்ந்து விட்டது என்றால் இந்த திட்டம் நடைமுறை ரூபத்தை எடுத்துக்
கொண்டே இருக்கும். குழந்தை களின் அனைத்து ஊக்கங்களும் பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து
கொண்டே இருக்கின்றன. எப்பொழுதும் உறுதியாக இருக்க வேண்டும். தைரியம் உள்ளவராகி
முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். உலக அமைதிக்கான கொடி உலகின்
நாலாபுறங்களிலும் பறக்கும், அந்த நாளும் இந்தக் கண்களுக்குத் தென்படும். எனவே முன்னேறிச்
சென்றுக் கொண்டேயிருங்கள். உலகத்தினர் உங்களை மனமுடைந்து போகுபவராக ஆக்குவார்கள்.
ஆனால் நீங்கள் ஆகாதீர்கள். ஒரு பலம், ஒருவர் மேல் உள்ள நம்பிக்கை என்ற இந்த நிச்சயத்தில்
சென்று கொண்டேயிருங்கள். எந்த நேரம் ஏதாவது சூழ்நிலை வருகிறது, என்றால் தந்தையை
துணைவனாக ஆக்கிவிடுங்கள், பிறகு நான் தனியாக இல்லை என்னுடன் விசேஷ சக்தி இருக்கிறது
என்று அனுபவம் செய்வீர்கள். கனவு நனவாகி விடும். எங்கு தந்தை இருக்கிறாரோ அங்கு எவ்வளவு
தான் புயல் இருந்தாலும்அது பரிசாக ஆகிவிடும். நிச்சயபுத்தி உடையவர் வெற்றி அடைவார் - நான்
நிச்சயபுத்தியுள்ள வெற்றியடையும் இரத்தினம் என்ற இந்தப் பட்டத்தை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள். நல்லது.

ஸ்டீவ் நாராயண் (கயானா நாட்டின் துணை ஜனாதிபதி)க்கான மகாவாக்கியம்:


தன்னை தந்தையின் இதய சிம்மாசனதாரி நெருக்கமான இரத்தினம் என்று அனுபவம் செய்கிறீர்களா?
தூர தேசத்திலிருந்தாலும் உள்ளத்தால் தூரமாக இருக்கவில்லை. சேவையில் குழந்தைகளின்
ஊக்கம், உற்சாகத்தைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சியடைகிறார். மேலும் நம்பர் ஒன் கொடுக்கிறார்.
எப்பொழுதும் பறக்கும் கலையில் இருக்கும் பாப்தாதாவின் கண்ணின் மணியாக இருக்கிறீர்கள்
எனவே பாப்தாதா வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்.

(ஆண்ட்டியின் மகள் காயித்திரியுடன்):


புது பிறவி எடுத்த உடனேயே நீங்கள் சேவைக்குத் தகுதியானவர், அனுபவம் நிறைந்தவர் என்ற
ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. காயானவில் இருந்த போதிலும் உலக சேவைக்காக பொறுப்பாளர்
ஆகியிருக்கிறீர்கள். மேலும் இருப்பீர் கள். நினைவு மூலம் தந்தையின் சகயோகம் மற்றும்
வரதானங்கள் அனுபவம் ஆகிறது தான் இல்லையா? உங்களுடைய நினைவு தந்தையிடம் வந்து
சேர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து எண்ணங்களும் நிறைவேறிக் கொண்டே இருக்கிறது தான்
இல்லையா? சிரேஷ்ட ஆத்மாவான உங்களுடைய ஒரே ஒரு சிரேஷ்ட எண்ணத்தினால் முழு
பரிவாரமும் உயர்ந்த பதவியை அடைந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பலகோடி மடங்கு
பாக்கியம் நிறைந்தவர்.

“கடற்கரைக்கு வந்து வெறும் குடத்தை நிரப்பிச் செல்லாதீர்கள், கடலின் எஜமானராக


மாறுங்கள்”

(உலக அமைதி மாநாட்டில் பங்கேற்க இருக்கும் சகோதர சகோதரிகளுக்காக அவ்யக்த


பாத்தாதாவின் இனிமையான செய்தி)

எப்பொழுதும் போல் இன்று வதனத்தை நான் சேர்ந்தவுடன் பாப்தாதா மிக இனிமையான


பார்வையால் திருஷ்டி மூலமாக அனைத்து குழந்தைகளுக்கும் அன்பு நினைவுகளை கொடுத்துக்
கொண்டிருந்தார். பாபாவின் திருஷ்டி மூலம் இன்று மிகுந்த அமைதி, சக்தி, அன்பு மற்றும்
ஆனந்தத்தின் கிரணங்கள் வந்து கொண்டிருந்தன. அந்த ஆன்மீக திருஷ்டி மூலம் நான்கு
விஷயங்கள் பிராப்தி ஆகி கொண்டிருந்தன. பாபாவிடமிருந்து மிக அதிகமாக அடைந்து
கொண்டிருக்கின்றோம் என்பது போல் அனுபவமானது. குழந்தைகளான நம் அனைவரையும்
பாப்தாதா வரவேற்றார். மேலும், “குழந்தாய், அனைவரின் நினைவையும் கொண்டு வந்தாயா?”
என்று கேட்டார். “நினைவையோ கொண்டு வந்திருக்கின்றேன். மேலும் அனைவரின்
ஆவாஹனத்தின் எண்ணத்தையும் கொண்டு வந்திருக்கின்றேன்” என்று நான் கூறினேன்
அதற்காக பாபா கூறினார், இந்த நேரத்தில் வந்திருக்கும் என்னுடைய அன்பான குழந்தைகள்,
என்னை தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறார்கள். பிறகு சந்திப்பதற்காக வருபவர்களின்
நாட்களும் வரும். பாப்தாதா அனைத்து குழந்தைகளின் காட்சியை வதனத்திலிருந்து கொண்டே
எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். அந்த மாதிரி கூறிக்கொண்டே பார்த்ததா ஒரு
காட்சியை காண்பித்தார். பாரத தேசத்தில் எப்படி பக்தர்கள் கோயில்களில் சிவலிங்க விக்ரத்தை
உருவாக்குகிறார்களோ அதே போல் வதனத்திலும் ஒரு லிங்கத்தை பார்க்க முடிந்தது. ஆனால்
அந்த லிங்கத்தின் உருவம் ஒளி வடிவமாக இருந்தது. மேலும் அந்த ஒளி வடிவமான
லிங்கத்தின் நாளா புறங்களிலும், மின்னிக் கொண்டிருக்கும் வைரங்கள் தென்பட்டன.
வைரங்களிலிருந்து நான்கு விதமான வண்ணங்கள் தென்பட்டன. ஒன்று வெள்ளை,
இன்னொன்று பச்சை, மூன்றாவது வெளீர் நீளம், நான்காவது பொன்னிறம். கொஞ்ச நேரத்தில்
அந்த ஒளி வார்த்தைகளாய் மாறிவிட்டன. வெண்ணிற ஒளியில் அமைதி என்று
எழுதப்பட்டிருந்தது. இன்னொன்றில் ஊக்கம். மூன்றாவது உற்சாகம் மேலும் நாலாவது ஒளியில்
சேவை.

அனைத்து குழந்தைகளும் மிகுந்த ஊக்கம் உற்சாகம் மற்றும் அமைதியின் எண்ணம் மூலமாக


உலகின் சேவை செய்தீர்கள் என்று பாபா கூறினார். குழு ரூபத்தில் ஒவ்வொரு ஆத்மாவும்
எவ்வளவு மின்னிக் கொண்டிருக்கிறது என பாருங்கள். பிறகு பாபா கூறினார் என்னுடைய
குழந்தைகள் அவரவர்களின் சக்திக்கேற்றபடி என்னை தெரிந்துகொள்ள முடிந்தது. இருந்தாலும்
அவர்கள் என்னுடைய குழந்தைகள் தான். என்னுடைய அனைத்து மிக இனிமையான
குழந்தைகளுக்கும் எனது அன்பு நினைவுகள் கொடுங்கள். வந்திருக்கும் அனைத்து
குழந்தைகளின் வாயில் இருந்தும் நான் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கின்றேன் என்ற
வார்த்தையாவது வெளியாகிறது. குழந்தைகளின் இந்த வார்த்தையை கேட்டு பாப்தாதா
புன்முறுவல் செய்து கொண்டே இருக்கிறார். குழந்தைகள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள் என்றால்
முழு அதிகாரத்தையும் பெற வந்திருக்கிறீர்களா அல்லது கொஞ்சம் பெறுவதற்காகவா? பாபா
கூறினார், கடலின் கரைக்கு வந்து சிறிய பாத்திரத்தை நிரப்பி செல்லாதீர்கள். மாஸ்டர் கடலாகி
செல்லுங்கள். சுரங்கத்திற்கு வந்து இரண்டு கைப்பிடி மட்டும் நிரப்பி செல்லாதீர்கள். பிறகு
பாப்தாதா மூன்று விதமான குழந்தைகளுக்கு மூன்று விதமான பரிசுகளை கொடுத்தார்.

1. பாபா கூறினார் என்னுடைய பேனா பிடித்து எழுதும் குழந்தைகள் (அச்சகத்து


சேவ்வாதாரிகள்) யார் வந்திருக்கிறார்களோ அவர்களுக்கு தாமரை மலரின்
பரிசளிக்கிறோம். என்னுடைய கலம்தாரி (பேனா பிடித்து எழுதுபவர்கள்) குழந்தைகளிடம்
கூறுங்கள் எப்போதும் கமல் ஆசனதாரி (தாமரை மலரில் அமர்ந்திருப்பது). முழு
உலகையும் தாழ்ந்த வைப்ரேஷனிலிருந்து விலகி, தந்தைக்கு பிரியமானவர்களாக
ஆகட்டும். ஒருவேளை அந்த நிலையில் நிலைத்திருந்து பேனா பிடித்து எழுதினீர்கள்
என்றால் உங்களுடைய காரியங்கள் வெற்றி அடைந்து விடும். மேலும் பரமாத்மா
காரியமும் வெற்றியடைந்து விடும்.
2. வி.ஐ.பி குழந்தைகள் யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு பாபா வெறும்
சிம்மாசனம் இல்லை ஆனால் ஹன்ஸ் - அன்னப்பறவை ஆசனம் கொடுத்தார்
வந்திருக்கும் வி.ஐ.பி குழந்தைகளின் சொல்லில் சக்தி இருக்கிறது. இவர்களுக்கு நான்
ஹன்ஸ்(அன்னம்) ஆசனம் கொடுக்கிறேன். அந்த ஆசனத்தில் அமர்ந்து பிறகு ஏதாவது
காரியம் செய்யுங்கள். ஆசனத்தில் அமருவதினால் உங்களுடைய நிர்ணய சக்தி
உயர்ந்ததாக இருக்கும். மேலும் என்ன காரியம் செய்தாலும் அதில் விசேஷம் இருக்கும்.
எப்படி நாற்காலியில் அமர்ந்து காரியம் செய்கிறீர்கள் அதேபோல் புத்தி இந்த ஹன்ஸ்
ஆசனத்தில் இருந்தது என்றால் உலகியல் காரியத்தில் இருந்தும் ஆத்மாக்களுக்கு அன்பு
மற்றும் சக்தி கிடைத்துக் கொண்டே இருக்கும்.
3. சமர்ப்பணமான சேவாதாரி குழந்தைகளுக்கு, பாப்தாதா ஒரு மிக நல்ல ஒளி வடிவமான
மலர்களால் கட்டப்பட்ட மாலை கொடுத்தார். ஒவ்வொரு ஒளியிலும் ஏதாவது தெய்வீக
குணம் எழுதப்பட்டிருந்தது. என்னுடைய அனைத்து குழந்தைகளும் தாரணை
செய்யக்கூடிய குணம் நிறைந்த குழந்தைகள். அனைத்து குழந்தைகளும் ஒரு பலம் ஒரு
வழியில் நடந்து, இந்த எல்லைக்கு அப்பாற்பட்ட சேவையை செய்கிறார்கள். அதற்கு
பலனாக பாப்தாதா இந்த தெய்வீக குணங்களின் மாலையை அணைத்து
குழந்தைகளுக்கும் பரிசாக கொடுக்கிறார். மேலும் கடைசியில் கூறினார் அனைத்து
குழந்தைகளும் எப்பொழுதும் குஷியாக இருங்கள். குஷி நிறைந்தவர் ஆக வேண்டும்.
மேலும் அனைவரையும் குஷியின் வரதானங்களினால், பொக்கிஷங்களினால் நிரம்பியவர்
ஆக்கிக்கொண்டே இருங்கள் என்ற இந்த பாப்தாதாவின் மகா வாக்கியத்தை தான் கூற
வேண்டும். இந்த மாதிரி இனிமையான மகா வாக்கியத்தை கேட்டுக் கொண்டே, அன்பு
நினைவுகளை கொடுத்துக் கொண்டே மற்றும் பெற்றுக் கொண்டே சகார வதனத்திற்கு
வந்து சேர்ந்துவிட்டேன்.

You might also like