You are on page 1of 6

18.02.

1983 ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா மதுபன்


_________________________________________________________________________________________________________

எப்பொழுதும் ஊக்கம் உற்சாகத்தில் இருப்பதற்கான யுக்திகள்

இன்று அனைத்து குழந்தைகளின் திலாராம் (இதயத்திருக்கும் ராம்) தந்தை, குழந்தைகளின் இதய


ஓசைக்கு, இதயத்தின் மிக இனிமையான விஷயங்களுக்கு பதில் கொடுப்பதற்காக குழந்தைகளின்
நடுவே வந்திருக்கிறார். அமிர்தவேளையில் தொடங்கி நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளின்
விதவிதமான இரகசியம் நிரம்பிய இசையை பாப்தாதா கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு
குழந்தைக்கும் அந்த அந்த நேரத்திற்கு வித விதமான இசை இருக்கிறது. மிக அதிகமாக
இயற்கையான இசையை யார் கேட்கிறார்? இயற்கையான பொருள் எப்பொழுதும் பிரியமானதாக
இருக்கும். அனைத்துக் குழந்தைகளின் வித விதமான இசையைக் கேட்டுக் கொண்டே பாப்தாதா
குழந்தைகளுக்கு சாரமாக முக்கியமான விஷயங்களைக் கூறுகிறார்.

அனைத்து குழந்தைகளும் அவரவர்களின் சக்திக்கேற்றபடி முழு ஈடுபாட்டில் மூழ்கியிருக்கும்


நிலையில் நிலைத்திருப்பதற்காக மேலும், முழு ஈடுபாட்டின் சொரூபத்தின் அனுபவம்
நிறைந்தவராக ஆவதற்காக மிக நன்றாகக் கவனத்துடன் நடந்து கொண்டிருக்கிறார்கள். அனைத்துக்
குழந்தைகளின் இதயத்தில் நான் தந்தைக்கு சமமான நெருக்கமான இரத்தினமாகி உண்மையான
குழந்தை என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே ஊக்கம், உற்சாகம் தான் இருக்கிறது. இந்த
ஊக்கம், உற்சாகம் அனைவரின் பறக்கும் கலைக்கான ஆதாரம். இந்த ஊக்கமானது வரக்கூடிய
அனேக விதமான தடைகளையும் அகற்றி சம்பன்னம் ஆவதில் மிகுந்த சகயோகம் கொடுக்கிறது.
இந்த ஊக்கத்தின் சுத்தமான மற்றும் திட எண்ணம் வெற்றியாளர் ஆக்குவதில் விசேஷமாக
சக்திசாலியான ஆயுதம் ஆகிவிடுகிறது, எனவே எப்பொழுதும் இதயத்தில் ஊக்கம், உற்சாகத்தை
மற்றும் இந்த பறக்கும் கலைக்கான சாதனத்தைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒருபொழுதும் ஊக்கம், உற்சாகத்தைக் குறைக்காதீர்கள். நான் தந்தைக்குச் சமமாக அனைத்து
சக்திகள், அனைத்து குணங்கள், அனைத்து ஞானத்தின் பொக்கிஷங்களினால் கண்டிப்பாக
சம்பன்னம் ஆக வேண்டும் என்ற ஊக்கம் இருக்கிறது. ஏனென்றால், நான் சென்ற கல்பத்திலும்
சிரேஷ்ட ஆத்மாவாக ஆகியிருந்தேன். ஒரு கல்பத்தின் அதிர்ஷ்டம் இல்லை, ஆனால், அனேக
தடவைகளின் அதிர்ஷ்டத்தின் ரேகை பாக்கியத்தை உருவாக்குபவர் மூலம் போடப்பட்டிருக்கிறது.
இதே ஊக்கத்தின் ஆதாரத்தில் உற்சாகம் இயல்பாகவே ஏற்படும். உற்சாகம் என்ன ஏற்கிறது? ஆஹா
என்னுடைய பாக்கியம். பாப்தாதா என்ன என்எனன்ன பட்டங்கள் கொடுத்திருக்கிறாரோ, அதே
நினைவின் சொரூபத்தில் இருப்பதினால் உற்சாகம் அதாவது குஷி இயல்பாகவும் மேலும்
நிரந்தரமாகவும் இருக்கிறது. மிகப்பெரிய உற்சாகத்திற்கான விஷயம், நீக்கள் அனேக ஜென்மங்கள்
தந்தையைத் தேடினீர்கள். ஆனால், இந்த நேரம் பாப்தாதா உங்களை தேடிக் கண்டுபிடித்து விட்டார்.
வேறு வேறு திரைச்சீலைகளின் பின்னால் மறைந்து இருந்தீர்கள். அந்த திரைச்சீலைகளின்
உள்ளேயும் தேடி விட்டோம் இல்லையா? பிரிந்து எவ்வளவு தூரம் சென்று விட்டீர்கள். பாரத
தேசத்தை விட்டு விட்டு எங்கே சென்று விட்டீர்கள்? தர்மம், காரியம், தேசம், பழக்க வழக்கம் அப்படி
எத்தனை திரைச்சீலைகளுக்குள் வந்து விட்டீர்கள். எப்பொழுதும் இதே குஷி மற்றும் உற்சாகத்தில்
இருக்கிறீர்கள் தான் இல்லையா! தந்தை உங்களை தன்னுடையவர் ஆக்கினாரா அல்லது நீங்கள்
தந்தையை உங்களுடையவர் ஆக்கினீர்களா? முதலில் தந்தை தான் செய்தி அனுப்பினார்
இல்லையா! தெரிந்து கொள்வதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தை எடுத்துக் கொண்டார்கள்.
எப்பொழுதும் ஊக்கம், உற்சாகத்தில் இருக்கும் ஆத்மாக்களுக்கு, ஒரு பலம் ஒருவர் மேல் நம்பிக்கை
என்றிருக்கும் குழந்தைகளுக்கு, தைரியம் உள்ள குழந்தைகளுக்கு தந்தையின் உதவி எப்பொழுதும்
அனுபவம் ஆகிக் கொண்டே இருக்கிறது. கண்டிப்பாக நடக்க வேண்டும் என்றிருப்பது தைரியம். இதே
தைரியம் காரணமாக தந்தையின் உதவிக்கு இயல்பாகவே பாத்திரம் ஆகி விடுகிறார்கள். மேலும்
இதே தைரியத்தின் எண்ணத்தின் எதிரில் மாயா தைரியமற்றவராகிப் போய்விடுகிறது. நடக்குமா
அல்லது நடக்காதா என்று தெரியவில்லை, என்னால் செய்ய முடியுமா அல்லது இல்லையா என்ற
மாதிரி எண்ணத்தை வைப்பது என்றால், மாயாவை வரவழைப்பது, எப்பொழுது வரவழைத்தீர்கள்
என்றால் ஏன் மாயா வராது. இந்த எண்ணம் வருவது என்றால் மாயாவிற்கு வழி கொடுப்பது.
எப்பொழுது நீங்கள் பாதையையே திறந்து விட்டீர்கள் என்றால் மாயா ஏன் வராது. அரைக்கல்பம்
அன்பு வைத்திருப்பது வழி கிடைத்தவுடன் எப்படி வராமல் இருக்கும், எனவே எப்பொழுதும் ஊக்கம்,
உற்சாகத்தில் இருக்கும் தைரியமுள்ள ஆத்மா ஆகுங்கள். உருவாக்குபவர் மற்றும் வரமளிப்பவர்
தந்தையின் சம்பந்தத்தில் குழந்தையாக இருப்பவரிலிருந்து எஜமானன் ஆகி விட்டீர்கள். எந்த
கஜனாவில் இல்லையென்ற பொருளே இல்லையோ, அந்த அனைத்து கஜானக்களின் எஜமானன்
ஆகிவிட்டீர்கள். அந்த மாதிரியான எஜமானன் ஊக்கம், உற்சாகத்தில் இல்லையென்றால், வேறு யார்
இருப்பார்கள். நானே தான் இருந்தேன், நானே இருக்கிறேன், மேலும் நானே தான் இருபேன். என்ற
இந்த சுலோகன் எப்பொழுதும் புத்தியின் நினைவில் இருக்க வேண்டும். நினைவு இருக்கிறது தான்
இல்லையா! இந்த நினைவுதான் உங்களை இங்கு வரை கொண்டு வந்திருக்கிறது. எப்பொழுது,ம்
இந்த நினைவு இருப்பதாக ஆகுக. நல்லது.

இன்றோ அனைத்தையும் விட தொலைதூர தேசத்தில் வசிக்கும். தொலைதூரத்திலிருந்து


வந்திருக்கும் இரட்டை வெளி நாட்டுக் குழந்தைகளை விசேஷமாக சந்திப்பதற்காக
வந்திருக்கிறோம். பார்க்கப்போனால் பாரதத்தின் குழந்தைகளும் எப்பொழுதும் அதிகாரிகள் தான்.
இருந்தாலும் வாய்ப்பளிப்பவராகி வாய்ப்பு கொடுக்கிறீர்கள். எனவே, இன்று வரையிலும்
பாரதத்திலும் பெரும் வள்ளலாகும் பழக்க வழக்கம் இருக்கிறது. அனைவரும் அவரவர்களின்
ரூபத்தில் உலக சேவையின் மஹா யாகத்தில் சகயோகம் கொடுத்தீர்கள். ஒவ்வொருவரும் மிகவும்
ஈடுபாட்டுடன் மிக நல்ல பங்கைச் செய்தீர்கள். அனைவரின் ஒரு எண்ணம் மூலமாக உலகின் அனேக
ஆத்மாக்களுக்கு தந்தையின் அருகில் வருவதற்கான செய்தி கிடைத்தது. இப்பொழுது இதே செய்தி
மூலம் எரியத் தொடங்கியிருக்கும் ஜோதி அனேகர்களின் (ஆத்மா) ஜோதியை எரிய வைத்துக்
கொண்டே இருக்கும். இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் தங்களுடைய திட எண்ணத்தை
நடைமுறையில் கொண்டு வந்திருக்கிறார்கள். பாரதவாசி குழந்தைகளும் கூட அனேக, பெயரை
பரப்பக் கூடிய, செய்தியை அனைவருக்கும் சென்றடையச் செய்யும் விசேஷ ஆத்மாக்களை அருகில்
கொண்டு வந்திருக்கிறார்கள். எழுத்தாளர் களையும் அன்பு மற்றும் தொடர்பில் அருகில் கொண்டு
வந்திருக்கிறீர்கள். பேனாவின் (எழுத்து) சக்தி மற்றும் வாயின் (வார்த்தை) சக்தி இரண்டும் சேர்ந்து
செய்தியின் ஜோதியை எரிய வைத்துச் கொண்டே இருப்பீர்கள். இதற்காக இரட்டை வெளிநாட்டுக்
குழந்தைகளுக்கு மேலும் பாரதத்தில் நெருக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு, இருவர்களுக்குமே
வாழ்த்துக்கள்! இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் செய்தியை பரப்பும் சக்திசாயான விசேஷ
ஆத்மாக்களை அழைத்து வந்தார்கள். அதற்காகவும் அவர்களுக்கு விசேஷமான வாழ்த்துக்கள்.
தந்தையோ எப்பொழுதும் குழந்தைகளின் சேவாதாரி, முதலில் குழந்தைகள்,. தந்தையோ
முதுகெலும்பாக இருக்கிறார் இல்லையா! எதிரில் மைதானத்திலோ குழந்தைகள் தான்
வருக்கிறார்கள். உழைப்பு குழந்தைகளினுடையது, அன்பு தந்தையினுடையது. நல்லது.

அந்த மாதிரி எப்பொழுதும் ஊக்கம், உற்சாகத்தில் இருக்கக் கூடிய, எப்பொழுதும் பாப்தாதாவின்


உதவிக்குப் பாத்திரமான தைரியமுள்ள குழந்தைகளுக்கு, எப்பொழுதும் சேவையின் முழு
ஈடுபாட்டில் மூழ்கியிருக்கக் கூடிய, எப்பொழுதும் பாப்தாதாவின் உதவிக்குப் பாத்திரமான
தைரியமுள்ள குழந்தைகளுக்கு, எப்பொழுதும் சேவையின் முழு ஈடுபாட்டில் மூழ்கியிருக்கக்கூடிய,
எப்பொழுதும் தனக்கு பிராப்தி ஆகியிருக்கும் சக்திகள் மூலமாக அனைத்து ஆத்மாக்களுக்கும்
சக்திகளின் பிராப்தியை செய்விக்கக் கூடிய, அந்த மாதிரி தந்தையின், எப்பொழுதும் அதிகாரி மற்றும்
குழந்தையாக இருப்பவரிலிருந்து எஜமானன் ஆகும் குழந்தைகளுக்குத் பாப்தாதாவின்
விசேஷமான சிநேகம் நிரம்பிய அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

ஜானகி தாதியுடன் சந்திப்பு


நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுக என்ற வரம் பெற்றவர் தான் இல்லையா! நீங்கள் இரட்டை
சேவை செய்கிறீர்கள். குழந்தையின் மன சேவையின் வெற்றி மிக நன்றாகத் தென்படுகிறது. நீங்கள்
வெற்றி சொரூபத்தின் பிரத்யக்ஷ சொரூபம். அனைவரும் தந்தையுடன் குழந்தையின் மஹிமையும்
பாடுகிறார்கள். தந்தையுடன் சேர்ந்து சுற்றி வருகிறீர்கள் தான் இல்லையா! நீங்கள் சக்கரவர்த்தி
இராஜா. இயற்கையை வென்றதின் பங்கை மிக நன்றாகவே செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இப்பொழுது எண்ணத்தின் மூலமாகவும் சேவையின் பங்கு மிக நன்றாகவே நடந்து
கொண்டிருக்கிறது. நடைமுறை நிரூபணம் நன்றாக இருக்கிறது. இப்பொழுதோ பெரியவர்கள்
அதிகமாக வருவார்கள். வெளிநாட்டிலிருந்து செய்தி பாரதவாசிகள் வரை வந்தடையும். அனைத்து
வெளிநாட்டுக் குழந்தைகளும் சேவையின் ஊக்கம், உற்சாகத்தை மிக நன்றாகவே நடைமுறையில்
நிரூபித்துக் காண்பித்திருக்கிறார்கள். எனவே அனைவரின் தரப்பிலிருந்தும் உங்களுக்கு மிகுந்த
வாழ்த்துக்கள். நல்ல மைக்கை அழைத்து வந்திருக்கிறீர்கள், நினைவு சொரூபமாகி சேவை
செய்தீர்கள், எனவே வெற்றி கிடைத்திருக் கிறது. நல்ல பூந்தோட்டத்தை தயார் செய்திருக்கிறீர்கள்.
அல்லா தன்னுடைய பூந்தோட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஜெயந்தி சகோதரியுடன் சந்திப்பு


பிறந்ததிலிருந்தே லக்கி (அதிர்ஷ்டசாலி) மற்றும் லவ்லி(அன்பானவர்) ஆகவே இருக்கிறீர்கள்.
ஜென்மமே அதிர்ஷ்டத்தினால் ஏற்பட்டது. எங்கு நீங்கள் சென்றாலும் அந்த ஸ்தானமும் அதிர்ஷ்டம்
நிறைந்ததாக ஆகிவிடும். பாருங்கள், லண்டன் பூமி அதிர்ஷ்டம் நிறைந்ததாக ஆகி விட்டது
இல்லையா! எங்கே சுற்றி வந்தாலும் என்ன பரிசைக் கொடுத்து வருகிறீர்கள்? பாக்கியத்தை
உருவாக்குபவரிடமிருந்து என்ன பாக்கியம் கிடைத்திருக்கிறதோ, அந்த பாக்கியத்தை
அனைவருக்கும் கொடுத்து வருகிறீர்கள் தான் இல்லையா! அனைவரும் உங்களை எந்தப்
பார்வையில் பார்க்கிறார்கள் என்று தெரியுமா? நீங்கள் பாக்கியத்தின் நட்சத்திரம், எங்கு நட்சத்திரம்
மின்னிக் கொண்டிருக்கிறதோ, அங்கு பிரகாஷமாகிவிடும். அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்கள்
தான் இல்லையா! அடியெடுத்து வைப்பது குழந்தை மற்றும் உதவி செய்வது தந்தை, தந்தையைப்
பின்பற்றி நடப்பவராகவோ இருக்கவே இருக்கிறீர்கள், ஆனால் உடன் இருப்பவரையும் (தாதி
ஜானகியையும்) நன்றாகப் பின்பற்றிச் செய்திருக்கிறீர்கள். இதுவும் சமமாக ஆவதற்கான பந்தயத்தை
நன்றாக செய்து கொண்டிருக்கிறீர்கள். நல்லது.

(நியூயார்கிலிருந்து ஸ்விங் ஷைலீ சகோதரி பாப்தாதாவிற்க்கு அன்பு நினைவுகளை


அனுப்பியுள்ளார்) இந்த மதுபனத்தின் நினைவுகள் தான் அவருக்கு புதிய வாழ்க்கையை
அளித்தது. அவரது புதிய பிறப்பின் ஜென்மபூமியே மதுபன் ஆகும். எனவே, அவர்கள் தங்கள்
பிறப்பிடத்தை எப்படி மறக்க முடியும்? அவர் பெற்ற சக்திக்கு ஏற்ப, அவர் சிறந்த சேவையின்
சான்றை அளித்துள்ளார். தனது சக நண்பர்களுக்கு நல்ல செய்தியை வழங்கி அவர்களை
நெருக்கமாக கொண்டு வந்துள்ளார். அவர் ஒரு பங்குதாரர். ஏனெனில், யாருக்கெல்லாம் செய்தி
கிடைக்கிறதோ அதற்கான பங்கு அவருக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

காயத்ரி சகோதரி (நீயூயார்க்) உடன் சந்திப்பு


காயத்ரியும் குறைந்தவர்கள் அல்ல. மிக நல்ல சேவைக்கான வழிமுறையைக்
கடைப்பிடித்திருக்கிறார். யாரெல்லாம் கருவியாகி ஆத்மாக்களை மதுபன் வரை அழைத்து
வந்திருக்கிறார்களோ, அவர்களுக்கும் பாப்தாதா மற்றும் பரிவாரத்தின் நல்ல சிநேகத்தின்
புஷ்பங்களின் மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. எந்தளவு நல்ல ஆத்மாவாக இருக்கிறாரோ,
அந்த அளவே வந்திருக்கும் இந்தக் குழந்தையும் (ராபர்ட் முல்லர்) சேவை கேந்திரத்தில் நல்ல
சகயோகி ஆத்மா. உண்மையான உள்ளத்தில் தந்தை திருப்தியாக இருக்கிறார். சுத்தமான உள்ளம்
உள்ளவர் எனவே தந்தையின் அன்பை, தந்தையின் சக்தியை சுலபமாகப் பிடித்துக் கொள்ள முடிந்தது.
ஊக்கம், உற்சாகம் மற்றும் எண்ணம் மிக நன்றாக இருக்கிறது. சேவையில் நன்றாக உயரம்
தாண்டுதல் செய்வார்கள் பாப்தாதாவும் பொறுப்பாளர் (கருவி) ஆகியிருக்கும் குழந்தைகளைப்
பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். அவர்களிடம் நீங்கள் சேவையில் பறக்கும் கலையுள்ள ஃப்ரிஷ்தா
சொரூபமாக இருக்கிறீர்கள், மேலும் அந்த மாதிரியே அனுபவம் செய்து கொண்டே இருங்கள் என்று
சொல்லுங்கள். நல்லது. - அனைவரின் சகயோகம் மூலம் வெற்றி மதுபன் வரை தென் படுகிறது.
குறிப்பிட்டு யாருடைய பெயரையும் கூறவில்லை. ஆனால் அனைவரும் பாபா என்னைத்தான்
கூறிக்கொண்டிருகிறார் என்று புரிந்து கொள்ளுங்கள். யாரும் குறைந்தவர்கள் அல்ல. முதலில் நான்
சேவையில் முன்னுக்கு இருக்கிறேன் என்று புரிந்து கொள்ளுங்கள். சிறியவர்கள் பெரியவர்கள்
அனைவரும் உடல், மனம், பணம், நேரம், எண்ணம் அனைத்தையும் சேவையில் ஈடுபடுத்தினார்கள்.

சகோதரர் முரளி மற்றும் சகோதரி இரஜனியுடன் சந்திப்பு : (ஜெயந்தி சகோதரியின் பெற்றோர்)

பாப்தாதாவின் அன்பின் கயிறு இழுத்துக் கொண்டு வந்தது தான் இல்லையா! எப்பொழுதும் இந்த
நேரம் என்ன நினைவு இருக்கிறது? எப்பொழுதும் உள்ளத்திலிருந்து பாபா தான் வெளியாகிறது
இல்லையா! மனதின் குஷி, நினைவின் அனுபம் மூலமாக அனுபவம் செய்தீர்கள். இப்பொழுது
ஒருமுகப்பட்டு என்ன நினைப்பீர்களோ, அவை அனைத்தும் முன்னேறிச் செல்வதற்கான சாதனமாகி
விடும். ஒரு பலம் ஒருவர் மேல் நம்பிக்கையில் இருந்து மட்டும் ஒருமுகத்தோடு யோசியுங்கள்.
ஒருவேளை நிச்சயத்தில் ஒரு பலம் மற்றும் ஒருவர் மேல் நம்பிக்கை இருக்கிறது என்றால்,
என்னவெல்லாம் நடக்குமோ, அது நல்லதாகவே நடக்கும்,. பாப்தாதா எப்பொழுதும் உடன்
இருக்கிறார் மேலும் எப்பொழுதும் உடன் இருப்பார். நீங்கள் தைரியம் நிறைந்தவர்கள் தான்
இல்லையா! பாப்தாதா குழந்தைகளின் நிச்சயம் மற்றும் தைரியத்தைப் பார்த்து நிச்சயம் மற்றும்
தைரியத்திற்காக வாழ்த்துக்களைக் கூறுகிறார். கவலையற்ற மஹாராஜாவின் குழந்தைகள்
நீங்களும் மகாராஜா தான் இல்லையா! நாடகத்திலிருந்த காரணத்தினால் நெருக்கமான
இரத்தினமாக ஆக்கியேவிட்டது. துணையும் மிக நல்லதாக கிடைத்திருக்கிறது. சாகாரத்திருக்கும்
துணையும் சக்திசாலியான வர்தான். ஆத்மாவின் துணையாகவோ தந்தை சிவபாபா இருக்கவே
இருக்கிறார். இரட்டை லிஃப்ட் இருக்கிறது. எனவே கவலையற்ற மஹாராஜா, தேவையான
நேரத்தில் புண்ணிய ஆத்மாவாகி புண்ணியக் காரியம் செய்திருக்கிறீர்கள். எனவே பாப்தாதாவின்
சகயோகத்திற்கு எப்பொழுதும் பாத்திரமானவர் நீங்கள். எவ்வளவு புண்ணியத்தின் அதிகாரி
ஆகியிருக்கிறீர்கள். புண்ணிய ஸ்தானத்தின் பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள். ஏதாவது ஒரு
வழியில் குழந்தைகளின் பாக்கியத்தை உருவாக்கியே விட்டீர்கள் தான் இல்லையா! புண்ணியத்தின்
முதலீடு ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது.. முரளீதரனின் முரளி, மாஸ்டர் முரளி தந்தையின் கை
எப்பொழுதும் உங்கள் கை மேல் இருக்கிறது. எப்பொழுதும் நினைவு செய்து கொண்டும், சக்தியை
எடுத்துக் கொண்டும் இருங்கள்.

தந்தையின் பொக்கிஷம் என்பது உங்களுடைய பொக்கிஷம். அதிகாரி என்று புரிந்து நடந்து


கொள்ளுங்கள். பாப்தாதாவோ வீட்டின் குழந்தையாக இருப்பவரிலிருந்து வீட்டின் எஜமானன்
ஆகுபவர் என்று நினைக்கிறார். கூடவே சேர்ந்தே இருக்கட்டும். உலகியல் விவஹாரங்களிலும்
தந்தையின் கூடவே இருங்கள். நல்லது.

யு.கே.குரூப்புடன் சந்திப்பு::
நீங்கள் அனைவரும் தங்களை சுயராஜ்ய அதிகாரியாக இருப்பவரிலிருந்து உலக இராஜ்ய அதிகாரி
என்று நினைக்கிறீர்களா? லண்டனும் தலை நகரம் தான் இல்லையா? எனவே தலை நகரில்
வசிப்பவர்களுக்கு தன்னுடைய இராஜ்யம் எப்பொழுதும் நினைவு இருக்கிறது தான் இல்லையா?
இராணியின் மாளிகையைப் பார்த்து தன்னுடைய மாளிகை நிû வு வருகிறது. உங்களுடைய
மாளிகை எவ்வளவு அழகாக இருக்கும் என்று தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? உங்களுடைய
இராஜ்யம் அந்த மாதிரியானது. அந்த மாதிரி வேறு எந்த இராஜ்யமும் இருந்ததும் இல்லை,
இருக்கவும் முடியாது. அந்த மாதிரி போதை இருக்கிறதா? இப்பொழுதோ அனைத்தும் விநாசம்
ஆகிவிடும். ஆனால் நீங்களோ பாரதத்திற்கு வந்து விடுவீர்கள் தான் இல்லையா? இதுவோ உறுதி
தான் இல்லையா? எங்கெல்லாம் பிராமணர்கள் இவ்வளவு சேவை செய்திருக்கிறார்களோ அவை
அனைத்தும் பொழுதுபோக்கு ஸ்தானம் ஆகிவிடும். மக்கள் தொகை குறைந்து விடும். இவ்வளவு
விஸ்தாரமான இடத்திற்கு அவசியம் இருக்காது. நல்லது. தன்னுடைய வீடு, தன்னுடைய கடமை,
இவை அனைத்தும் நினைவு இருக்கட்டும்.

கேள்வி:
எப்பொழுதும் முன்னேறிச் செல்வதற்கான வழி என்ன?

பதில்:
ஞானம் மற்றும் சேவை,. எந்தக் குழந்தைகள் ஞானத்தை நல்ல முறையில் தாரணை
செய்கிறார்களோ மேலும் சேவை செய்வதற்கான ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது என்றால்
முன்னேறிச் சென்று கொண்டேயிருப்பார்கள். ஆயிரம் புஜங்கள் உள்ள தந்தை உங்கள் துணையாக
இருக்கிறார். எனவே துணைவனை எப்பொழுதும் துணையாக வைத்து முன்னேறிச் சென்று
கொண்டே இருங்கள்.

கேள்வி:
குடும்ப வாழ்க்கையில் யார் எப்பொழுதும் சமர்ப்பணம் ஆகி இருக்கிறார்களோ, அவர்கள் மூலமாக
எந்த சேவை இயல்பாகவே நடந்து விடுகிறது?

பதில்:
அந்த மாதிரி ஆத்மாக்களின் சிரேஷ்ட சகயோகம் மூலம் சேவை என்ற மரம் மிகப் பசுமையாக
வளர்ந்து விடுகிறது. அனைவரின் சகயோகம் தான் மரத்திற்கு தண்ணீர் ஆகிவிடுகிறது. எப்படி
மரத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது என்றால் மரத்திலிருந்து எவ்வளவு நல்ல பழம் உருவாகிறது. அந்த
மாதிரி சிரேஷ்ட சகயோகி ஆத்மாக்களின் சகயோகத்தினால் மரம் நன்றாக பசுமையாக வளர்ந்து
பூத்துக் குலுங்குகிறது. அந்த மாதிரி பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்,
சேவையின் ஆர்வத்திலேயே எப்பொழுதும் இருக்கும் குழந்தைகள், குடும்ப வாழ்க்கையிலும்
சமர்ப்பணம் ஆகி இருக்கும் குழந்தைகள் தான் இல்லையா? நல்லது. ஓம் சாந்தி

You might also like