You are on page 1of 35

ஒளி பரவட்டும்

ஜுலை 2023

எங்கெங்கோ இருந்து வண்டு


அழியாத தேன் சேகரிக்க
வேண்டி உள்ளது.
மனிதர்கள் அப்படி அறிவு
சேகரிக்க வேண்டும்
- சுகி.சிவம்

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


1
அது ஒரு நிலாக் காலம்
வாழ்கை வாழுகிற�ோமா!!! வசிக்கிற�ோமா???

இட்லியை ஆசையுடன் பார்த்தோம் பண்டிகை


நாட்களில் மட்டும்.

கறிக்கடை ஊருக்கு ஒன்று மட்டும் தான்


இருந்தது.

நண்பர்கள�ோடு எதையும் எதிர்பாராமல் தூய


நட்பாய் பழகின�ோம்.

ஒரு சினிமா பார்க்க ஒப்புதலுக்கு ஒரு வாரம்


தவம் கிடந்தோம். அந்தக் காலம் தான் நன்றாக
இருந்தது..

ஆரத்தி எடுக்க ப�ோட்டி ப�ோட்ட மதினிமார்கள்


இருந்தார்கள்..

தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள்


இருந்தார்கள்..

ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காகச் கண்டதை உண்டாலும் செரித்தது.


சண்டை ப�ோட்ட பங்காளிகள் இருந்தார்கள்..
த�ொலைக்காட்சி செய்திகளில் உண்மை
இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு இருந்தது..
வரை ப�ோனார்கள்..
பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே ஆர்வமுடன்
அடுத்தடுத்து பெண்களுக்குத் திருமணம் செய்தும் தயாரான�ோம்.
மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்குப் பெண்கள்
வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள் உடுத்த புதுத்துணி கையில் தரும் ப�ோது
ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு ஆஸ்கார் விருது வாங்கும் கலைஞன் ப�ோல்
மன அழுத்தங்கள் இல்லை.. உணர்ந்தோம்

ஒரே ச�ோப்பைக் குடும்பம் முழுதும் உபய�ோகித்தும் ஃபேன் இல்லாமல் உறக்கம் வந்தது..


த�ோல் ந�ோய்கள் வரவில்லை..
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
2
எங்கோ ஏத�ோ ஒரு நீர் சுத்தமாய் இருந்தது..
மூ லை யி ல்
ம ரு த் து வ ம னை யு ம் , பையில் இருக்கும் ஐந்து
ஹ�ோட்டலும் இருந்தது.. ரூபாய்க்கு அளவில்லா
ஆனந்தம் க�ொண்டோம்.
வெ யி ல ா லு ம் ,
மழையாலும் பாதிப்பு ஹ�ோட்டலில் தாத்தா
இல்லை.. ஆசைய�ோடு வாங்கி
தரும் பூரி மசாலாக்கு
பி ள ் ளைப்பே று எல்லையில்லாத மகிழ்ச்சி
செலவில்லாமல் சுகமாய் கண்டோம்.
இருந்தது..
செல்போன் எதுவும்
கல்வி கட்டணம் இல்லை ஆனாலும்
இல்லாமல் கிடைத்தது.. பேசிய நேரத்தில் வந்து
சேர்ந்தனர் நண்பர்கள்.
ம ா ண வ ர ்க ள்
ஆசிரியரிடம் அன்பாய் ஆசிரியர் மீது அசாத்திய
ப ணி வ ா ய் மரியாதை இருந்தது.
இருந்தார்கள்..
த ா வ ணி யி ல்
ஆ சி ரி ய ை க ளி ட ம் தேவதைகளாக இளம்
எளிமை இருந்தது.. பெண்கள்.

காதுகளை ரணமாக்காத இனிய பாடல் இசை


படுக்கையை எதிர்பாராமல் பாயில் உறங்கின�ோம். கேட்டோம்.

தாத்தா பாட்டி ச�ொல்லும் கதை கேட்டுக�ொண்டே ஒரே குச்சி ஐஸ் வாங்கி எந்த சங்கோஜமும்
அவர்கள் மடி மீது தலை வைத்து நாம் உறங்கிய இல்லாமல் நண்பர்கள் ஆள�ொக்கொரு கடி
தருணம் கண்டோம். கடித்துச் சுவைத்தோம்.

பெரியப்பா, சித்தப்பா உரிமைய�ோடு அடித்தார்கள் ஆண்கள் தான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்


நம் தப்பைச் சரி செய்ய பெரியவர்களின் க�ொடுத்தார்கள்..
உடையைப் ப�ோட தயங்கியதில்லை..
மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள்
அப்பா ச�ொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் த�ோன்றவில்லை..
ஏற்கப்பட்டது..
ஆசிரியர் குறிப்பு : அப்போது வாழ்ந்தோம்
பெண் பார்க்க வந்தவனைப் பிடித்திருக்கிறது இப்போது - இருக்கிற�ோம். அவ்வளவே...
என்று ச�ொல்ல வெட்கப்பட்டோம்...
ஆமாம் தானே??? GSR
காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
3
உலகத்தைப் புரிந்து க�ொள்வது கஷ்டம்.
சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் ஆனாலும், பாம்புகள் முட்டைகளைக் குடித்து
விளையாடிக் க�ொண்டு இருக்கிறான். அப்போது, விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்"
"என்னைக் காப்பாற்று, காப்பாற்று"என்று ஓர் என்று ச�ொல்கின்றன.
அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள்
சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் அங்கு மேய்ந்து க�ொண்டு இருக்கும்
பார்த்துப் பரிதாபமாகக் கதறுகிறது. கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். "நாங்கள்
இளமையாக இருந்த காலத்தில் அதிகப்படியான
‘மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை சுமைகளைச் சுமக்க செய்து, அடித்து, சக்கையாக
விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி,
மறுக்கிறான் சிறுவன். நடை தளர்ந்தவுடன், தீனி ப�ோட முடியாது
என்று விரட்டிவிடுவதால், முதலை ச�ொல்வது
ஆனால் முதலை, "நான் உன்னைச் சரிதான்"என்கின்றன.
சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னைக்
காப்பாற்று" என்று கண்ணீர் விடுகிறது. ஆடுகளைக் கேட்கிறான். "எங்களுக்கு
இரை ப�ோட்டு வளர்ப்பவர்களே, எங்களை
முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் இரையாக்கிக் க�ொள்வதால், முதலை ச�ொல்வது
வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து சரிதான்" என ஆம�ோதிக்கின்றன.
முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக்
க�ொண்டது. "பாவி முதலையே இது நியாயமா? கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக்
என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, கேட்கின்றான்."இதுவல்ல உலகம். முதலை
பிதற்றுகிறது" என முயல் ச�ொல்ல, முதலைக்குக்
"அதற்கென்ன செய்வது, பசி வந்தால் க�ோபம் வந்துவிடுகிறது.
பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான்
வாழ்க்கை" என்று ச�ொல்லிவிட்டு விழுங்க ‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’
ஆரம்பித்தது முதலை. என்று முதலை ச�ொல்லவும், ‘நீ பேசுவது
சரியாகப் புரியவில்லை, தெளிவாகப் பேசு’
சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை என்கிறது முயல்.
இல்லை. முதலை ஏமாற்றி விட்டத�ோடு மட்டும் .
அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான்
உலகம்’ என்று ச�ொல்வதை அவனால் ஏற்றுக் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாகச்
க�ொள்ளமுடியவில்லை. சிரித்தது. உன் வாலை வைத்து அவனை
அடித்து விட முடியாதா? ஒரே அடியில்
மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் அவனை வீழ்த்திவிட முடியும் உன்னால்
கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டு விட்டு,
பறவைகள், "எத்தனைய�ோ பாதுகாப்பாக இதுதான் உலகம் என பேசத் துவங்கியது
மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிற�ோம். முதலை.
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
4
(எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு,
முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! முன்னேறுவதுதான் வாழ்க்கை"....
ஓடிவிடு’ என்கிறது.சிறுவன் ஓடிவிடுகிறான்.
வாலால் அடித்து

விடலாம் என நினைத்த முதலைக்கு


ஏமாற்றமாகப் ப�ோய்விடுகிறது, வலையில்
சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள்
சிறுவனைப் பிடித்தது நினைவுக்கு வருகிறது.

க�ோபத்துடன் முயலைப் பார்க்க, ‘புரிந்ததா?


இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை’ என்கிறது
முயல். தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை
அழைத்துவர, அவர்கள் முதலையை
க�ொன்றுவிடுகின்றனர்.

சிறுவன�ோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி


முயலைப் பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன்
காப்பாற்றுவதற்குள் முயலை நாய்
க�ொன்றுவிடுகிறது. உயிராக வளர்த்த நாய்தான்
என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலைக்
க�ொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் க�ொள்ள
முடியவில்லை.

கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.


உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும்,
நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும்
அவனைக் குழப்பிவிடுகிறது.
இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா?
என்ற கேள்விக்குப் பதில் ச�ொல்வார் யாருமில்லை!.

முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும்


புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை அடுத்த
ந�ொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா?
ஆச்சரியங்களா? என அறியமுடியாமல்
இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.

"வாழ்க்கையைப் புரிந்துக�ொள்ளமுடியாது. புரிய


வைக்கவும் முடியாது.
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
5
சுகி.சிவம் புத்தகம் பற்றி
ஒரு த�ோழரின் பதிவு

வாழ்க்கை ஒரு பூப்பூத்தல்!, ம�ொட்டவிழ்தல், 8. அறியாமல் செய்த குற்றத்திற்கு


அது ஒரு கவிதை. மூளையால் அதைப் புரிந்து மன்னிப்பு கேட்பது சரி. கடவுள் மன்னிப்பார்
க�ொள்ள முடியாது. ஆனால் இதயத்தால் என்று ச�ொல்லியபடியே குற்றம் செய்வது
அனுபவிக்க முடியும் எனத் த�ோடங்கி வாழ்வை அய�ோக்கியத்தனம்.
மகிழ்வாக வாழும் வழிகளை அழகாக
எடுத்துரைக்கிறார் ச�ொல்வேந்தர். இப்படி 33 தலைப்புகளில் முத்திரை
பதித்திருக்கிறார் ச�ொல் வேந்தர்.
1. கவலை, துக்கம் அவற்றுடன் நீங்கள்
அமிர்தத்தைச் சாப்பிட்டாலும் அது விஷமாகி வாழ்க்கையைக் கற்று வைக்கவும்
விடுகிறது. வாழ்தலில் பற்று வைக்கவும்
பூந்தோட்டம் அமைத்திருக்கிறார்.
2. க�ோபத்தால் முகம் அக�ோரமாகி விடுகிறது.
ஒரு தென்றலாய்ப் புகுந்து பார்த்தால்
3. அளவான பணம் நம்மைக் காக்கும். ஆயிரமாயிரம் பூக்களின் வாசம் படிப்பவர்
அளவற்றப் பணத்தை நாம் காக்கவேண்டும் மனதில் பரவசம் உண்டாக்கும்.

4. அகங்காரம் உள்ளவருக்கு ஆனந்தம் நாள்முழுதும் உங்களால் மகிழ்ச்சியாய்


கிடையாது இருக்க முடியுமென்றால் நீங்கள் ப�ோவதற்குரிய
க�ோயில் உலகில் எங்கும் இல்லை. நீங்கள்
5. எதிர்பாராததையும் எதிர்பாருங்கள் இருக்கும் இடமே நிஜமான க�ோயில்.

6. உழைப்பில் இருந்து ஒதுங்குகிறவன் எப்போதும் சந்தோஷம்


வாழ்விலிருந்து ஒதுங்குகிறான். சுகி சிவம்

7. எத்தனை பெரிய எரிமலையின் வாயையும்


மூடும் சக்தி அன்பின் ஒற்றை விரலுக்கு
த�ோழமையுடன்

இருக்கிறது.
சீனி. சந்திரசேகரன்

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


6
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
7
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
8
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
9
மலரும் நினைவுகள்

இன்றிலிருந்து 60 வருடங்களுக்கு முந்தைய


காலம். பஸ்களுக்கும் லாரிகளுக்கும் மூக்கு
இருந்த காலம். அது ஒரு சிறிய ஊர். ஊருக்கு
வெளியே ஒரு டூரிங்க் டாக்கீஸ். ஓலை வேய்ந்த
க�ொட்டாய். விவசாய நிலத்தில் இருக்கும்
ம�ோட்டார் ரூம் மாதிரி முன்னால் ஒரு தகர
ஷெட். அதுதான் ப்ரொஜ�ொக்டர் ரூம். மூனாங்
க்ளாஸ் படித்த முனுசாமி தான் ஆப்பரேட்டர்.

காலையில் தெருவில் டம் டம் என்று


அடித்துக் க�ொண்டு ஒரு மாட்டு வண்டி ப�ோகும்.
மாடு மகாதேவியை இழுத்துக் க�ொண்டு ப�ோகும்.
இரண்டு பக்கமும் படத்தின் பெயர் ப�ோட்டு தட்டி
கட்டியிருக்கும்.

பஞ்சு மிட்டாய் கலரில் ந�ோட்டீஸ் க�ொடுத்துக்


க�ொண்டே ப�ோவார்கள். ந�ோட்டீஸ் வாங்க
பிஞ்சுகள் பின்னாலேயே ஓடும்.

நாராயண செட்டியார் கடையில் விளம்பர திடீரென்று ஒரு நாள் ப�ோஸ்டரின் மேல்


தட்டி வைத்திருப்பார்கள். அதற்காகத் தட்டி பாஸ் 'இன்றே இப்படம் கடைசி' என்று ஒரு ஸ்டிக்கர்
க�ொடுப்பார்கள். இரண்டு டிக்கெட். கடைசி நாள் ஒட்டுவார்கள்.
ப�ோகலாம். இதற்காகவே செட்டியாரின் பையன்
ஸ்ரீராமுலுவுடன் நிறைய பேர் சிநேகம் இன்றைய கால கட்டப் படங்களுக்கு ரிலீஸ்
வைத்திருப்பார்கள். ஆன தேதியிலேயே இந்த ஸ்டிக்கர் ஒட்டி
விடுகிறார்கள்.
ஆனால் கடைசி வரை செட்டியார் அந்த
தட்டி பாஸ்களை மற்றவர்களுக்கு ட்ரான்ஸ்பர் மாலை ஆறு மணிக்குத் தியேட்டரில் கூம்பு
செய்ததே இல்லை. ஒலி பெருக்கியில் பாட்டு ப�ோடுவார்கள். அது
ஊர் முழுக்க கேட்கும்.
என் அப்பா கடை வைக்காமல் ஏன்
கவர்ன்மெண்ட் உத்திய�ோகத்துக்குப் ப�ோகிறார் சினிமா ப�ோக வேண்டியவர்கள் தங்களைத்
என்று எனக்கு க�ோபம் க�ோபமாக வரும். தயார் படுத்திக் க�ொள்வார்கள். பெண்கள் ரெமி
பவுடர் எடுத்து அப்பிக் க�ொள்வார்கள்.

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


10
வீபூதிக் காப்பு செய்த முருகர் மாதிரி முகம் தியேட்டருக்குள் அவர்கள் ஆண் - பெண்
மாறிப் ப�ோயிருந்திருக்கும். என்று redefine செய்யப் படுவார்கள்.
ஆண்களுக்குத் தனி இடம். பெண்களுக்குத்
தியேட்டரில் ம�ொத்தம் பதினைந்து ரிகார்ட் தனி இடம். மூன்று மணி நேர legal sepa-
தான் இருக்கும். அதே பாட்டைத் தான் ration.
தினமும் ப�ோடுவார்கள். வரிசை கூட மாறாது.
ஆப்பரேட்டரின் play list ல் shuffle op- தரை டிக்கெட் நாலணா. கீழே மணல்
tion கூட இருக்காது. பரப்பியிருக்கும். அந்த மணலைக் குவித்து
அதை high chair ஆக்குவார்கள்.
அரை மணி நேரத்தில் பாட்டு தியேட்டருக்கு
உள்ளே ஒலிக்க ஆரம்பிக்கும். விரைவில் படம் ஸ்க்ரீன் என்பது ஒரு பெரிய வெள்ளைத்
ப�ோடப் ப�ோகின்றார்கள் என்பதற்கான சிக்னல் துணி. அதற்குத் திரை எல்லாம் கிடையாது.
அது. கவர் ப�ோடாத செல்போன் மாதிரி. நிறைய
அடி வாங்கியிருக்கும். மட்டை உரிக்காத
"பாட்டு உள்ளே ப�ோடறாங்க..." என்று தேங்காய் சைஸுக்கு மஞ்சளாக ஒரு கறை
தியேட்டருக்கு ஓடுவார்கள். குழந்தையைத் தர இருக்கும்.ஸ்க்ரீனில் அவ்வப்போது ஒரு பெரிய
தரவென இழுத்துக் க�ொண்டு ஓடுவார்கள். பல்லி ரவுண்டு அடித்துக் க�ொண்டிருக்கும்.

தியேட்டர் வரை குழந்தை சைரன் ஒலித்துக் ஏகப்பட்ட வேட்டிகளைப் பக்கம் பக்கமாக


க�ொண்டே வரும். தியேட்டர் வரைக்கும் தான் நிற்க வைத்து மேலிருந்து கீழாக
கணவன் மனைவி ஜ�ோடி செல்லும். தைத்திருப்பார்கள். அது தான் ஸ்க்ரீன்.
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
11
ஊரிலிருக்கும் எல்லா வேட்டியும் நுழையக் கூடாத இடத்தில் எல்லாம் நுழையும்.
ஸ்க்ரீனுக்கே ப�ோய் விட்டதால் ஆடியன்ஸில் கதாநாயகன் பாட்டுக்குப் பாடிக் க�ொண்டிருப்பான்.
நிறைய பேர் வேட்டி இல்லாமல் இருப்பார்கள். பாட்டு முடிந்தவுடன் பல்லி வட கிழக்கு திசையில்
ஓடி மறைந்து விடும். படத்தில் ம�ொத்தம் நான்கு
'ட்ட்ட்ட்ட்ரிங்' என்று மணி அடிக்கும். இண்டர்வெல்.

நல்வரவு என்று ஸ்லைட் ப�ோடுவார்கள். டைரக்டர் தயவில் இரண்டு. ரீல்


மூனாங் க்ளாஸ் முனுசாமி இவ்வளவு எழுதியதே மாற்றுவதற்காக இரண்டு இண்டர்வெல்.
பெரிய விஷயம். இண்டர்வெல் விட்டதும் " ச�ோடாலேர்...
வேகலே..." என்று பையன்கள் கத்திக் க�ொண்டு
அடுத்து நியூஸ் ரீல் ஓடும். நேரு எகிப்துக்கு ப�ோவார்கள்.
நல்லெண்ண விஜயம் ப�ோய் நாசருடன் கை
குலுக்குவார். பீகாரில் வெள்ளம் வரும். ஏத�ோ ச�ோடா கலர், வேர்க்கடலை என்பதின்
ஒரு விவசாயி நாலு நிமிடம் ஹிந்தியில் திரிபுகள் அவை. க�ோலி ச�ோடாவை குடிப்பது
பேசுவார். கேமரா தப்பித் தவறிக் கூட விந்திய தனி டெக்னிக். எல்லோராலும் குடித்து விட
மலைக்குக் கீழே வந்து விடாது. முடியாது. கவிழ்த்தால் க�ோலி வந்து மூடிக்
க�ொள்ளும். அப்படியே குடித்தாலும் மீத்தேன்
படம் ப�ோட ஆரம்பிப்பார்கள். முதலில் கேஸ் மூக்கு வழியாக ரெகுலேட்டர் இல்லாமல்
சென்சார் ப�ோர்ட் சர்டிபிகேட். 22 ரீல் என்று வந்து க�ொண்டே இருக்கும்.
ப�ோட்டிருக்கும். அனைவருக்கும் சந்தோஷம்.
க�ொடுத்த நாலணாவுக்கு நான்கு மணி நேரம் இண்டர்வெல் முடிந்ததும் ஸ்லைட்
படம் பார்க்கலாம். ப�ோடுவார்கள்.
சாந்தி சில்க் ஹவுஸ்
அப்போதெல்லாம் பெரும்பாலும் சரித்திரக் முத்து ஹேர் கட்டிங் சலூன்
கதைகள் தான். முதல் சீனிலேயே மகாராணிக்கு ராஜா டெய்லரிங்
ஆண் குழந்தை பிறக்கும். பிறக்கும் ப�ோதே காமதேனு காபி ஒர்க்ஸ்
பப்பாளி சைஸில் கன்னத்தில் திருஷ்டி ப�ொட்டு என்று வரிசையாக வரும்.காமதேனு காபி
வைத்துக் க�ொண்டு பிறக்கும். ப�ொடி விளம்பரத்தில் கவுன் ப�ோட்டுக் க�ொண்டு
ஒரு லேடி வருவார்.
டெலிவரிக்காக எம்.என்.நம்பியார் தயாராகக் படம் ஆரம்பிக்கும்.கிர்ர்ர் என்ற சத்தத்துடன்
காத்திருப்பார். நம்பியாரும், பி.எஸ். வீரப்பாவும் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே,
மாறி மாறி வில்லன்களாக வருவார்கள். திடீரென ஃபிலிம் கட் ஆகும்.
நம்பியார் ஒரு படத்தில் நாகேந்திரனாக வந்தால்
அடுத்த படத்தில் பி.எஸ். வீரப்பா பிலேந்திரனாக வெள்ளைத் திரை தெரியும். விசில் சத்தம்
வருவார். இப்படியாக இருவரும் பிற்போக்குக் கேட்கும். ஸ்க்ரீன் மீது டார்ச் அடித்து
கூட்டணி அமைத்து கெட்ட செயல்கள் செய்து ஹீர�ோயினைத் தேடுவார்கள். ஃபிலிம் ஒட்டியதும்
வருவார்கள். படம் ஓடும். படம் முடியும் ப�ோது பதின�ோரு
மணி ஆகியிருக்கும். பெண்கள் முகம் எல்லாம்
அந்த நேரம் பார்த்து பல்லி ஸ்க்ரீனில் அழுது அழுது உப்பிப் ப�ோயிருக்கும். அழுமூஞ்சி
ஓடும். கதாநாயகன் உடலெங்கும் படர்ந்து மனைவியை அரை இருட்டில் தேடிக்
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
12
க�ொண்டிருப்பார்கள் கணவர்கள்.படம் முடிந்து
ப�ோகும் ப�ோது கும்பலாகப் ப�ோக வேண்டும்.
சாலையில் விளக்கு இருக்காது. கும்மிருட்டு.

இரு பக்கமும் புளிய மரங்கள். பாராசூட்டில்


பேய்கள் எந்த நேரமும் வந்து இறங்கலாம்.
கண்களைத் திருப்பாமல் வேகமாக நடப்பார்கள்.

பெண்கள் திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள்.


பி.எஸ்.வீரப்பா பின்னால் வருவது ப�ோலவே ஒரு
உள்ளுணர்வு இருக்கும். பெண்களுக்கே தெரியாமல் ஷாப்பிங்
மால் கடை வீதியில் புகைப்படங்கள் எடுத்து
வீடு பக்கத்தில் வந்து விளக்கு வெளிச்சம் டெலிகாரம் செயலி முலம் ஆபாசமாக
பார்த்தவுடன் தான் உயிர் வரும். சித்தரித்து விற்பனை செய்த ஈர�ோட்டை
சேர்ந்த ஆர்யா, திருவ�ொற்றியூர் சேர்ந்த
அடுத்த நாள். பத்து பெண்களைச் சுற்றிலும் தமிழ்மாறன் என்ற இரு B.Tech படித்த
வைத்துக் க�ொண்டு படத்தின் கதையைச் பட்டதாரிகளை சென்னை தெற்கு மண்டல
ச�ொல்லிக் க�ொண்டிருப்பாள் மனைவி. சைபர் க்ரைம் ப�ோலிசார் கைது செய்தனர்.
அவர்களிடம் ஏராளமான புகைப்படங்கள்
இனி அடுத்த படம் இரண்டு மாதம் கழித்தோ இரு லேப் டாப், ம�ொபைல்கள்
மூன்று மாதம் கழித்தோ தான். கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பெண்கள்
ப�ொது இடங்களில் உஷாராக இருக்க
இத�ோ..இப்போது என் முன்னால் டி.வி ஓடிக் காவல்துறை வேண்டுக�ோள் விடுத்துள்ளனர்.
க�ொண்டிருக்கிறது. ரிம�ோட் ஒவ்வொரு சேனலாக
நீந்துகிறது.

பதின்மூன்று படங்கள் ஓடிக்


க�ொண்டிருக்கின்றன. எதையும் பார்க்காமல்
அணைக்கிறேன்.

வாட்ஸ் அப் ப�ோகிறேன். அந்த மகானுபாவன்


தன் தலைவரின் ஆங்கிலப் பேச்சைத் தமிழில்
ம�ொழி பெயர்த்துக் க�ொண்டிருக்கிறார்.
பார்க்கிறேன்.

என் சேனலில் சினிமா பாருங்கள் என்று


டி.வியில் கூவுகிறார்கள். கெஞ்சுகிறார்கள்.
பிடிக்கவில்லை.

அந்தக்கால நினைவுகளே சுகங்கள்தான்.


ஒளி பரவட்டும் | ஜுலை 2023
13
வணிகர் என்றால் என்ன ???
1 ச�ொந்தப் பணத்தில் த�ொழில் த�ொடங்குகிறார். 11 வணிகருக்கு விடுப்பு இல்லை, அவர்
செல்ல வேண்டியிருந்தால், குடும்ப உறுப்பினரின்
2 வணிகத்தின் முழுப் ப�ொறுப்பு. கூடுதல் கடமை.

3 ஒரு வணிகத்தை நிறுவ அல்லது நடத்த 12 மிகப் பெரிய விஷயம் என்னவென்றால்,


கடினமாக உழைக்கிறார். ஒரு வணிகர், ப�ொருட்களை விற்ற பிறகு,
அரசாங்கத்திடம் இருந்து சம்பளம�ோ கமிஷன�ோ
4 நஷ்டத்திற்கு எந்த அரசும் ப�ொறுப்பல்ல. பெறாத ப�ொதுமக்களிடமிருந்து வரி வசூலித்து
அரசாங்கத்திடம் டெபாசிட் செய்கிறார்.
5 ஆனால் வரி வடிவில் லாபத்தில் அரசுக்கு
உரிமை உண்டு. 13 சமுதாய நலன் கருதி நன்கொடை அளிப்பது,
உணவு வழங்குவது, சமூக-மத-அரசியல்
6 தனக்கும் தன் குடும்பத்துக்கும் தன் ச�ொந்தப் பணிகளில் பங்களிப்பது ப�ோன்றவை.
பணத்தில் வைத்தியம் செய்கிறார். மாறாக,
அரசு வேலையில், அவரது கடின
7 அனைத்துப் பயணங்களையும் (குடும்பம் உழைப்புக்கு சம்பளம், உதவித்தொகை,
அல்லது வணிகம்) தனது ச�ொந்தப் பணத்தில் பயணப்படி, குடும்பம் மற்றும் ஓய்வு பெற்றவுடன்
செய்கிறார். நிலையான அகவிலைப்படி ஓய்வூதியம் என
அனைத்தும் உள்ளது. இத்தனைக்குப் பிறகும்
8 குடும்ப உறுப்பினர்களின் கல்விச் செலவை ஒரு மாதத்தில் குறைந்தது 4 முதல் 6
அவர் தனது ச�ொந்தப் பணத்தில் இருந்து விடுமுறைகள் கிடைக்கும்.
கவனித்துக் க�ொள்கிறார்.
நாமும் நம் நாடும் எங்கே ப�ோகிறது என்று
9 வணிகர் ஒருப�ோதும் ஓய்வு பெறுவதில்லை சிந்தியுங்கள்.
அல்லது ஓய்வு பெற்றவுடன் எவரும்
அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் பெறுவதில்லை. இப்போது வணிகர்களை மரியாதையுடன்
நடத்துவது அவசியம். அரசு, நிர்வாகம்,
10 வணிகர்களுக்கு எந்தவ�ொரு அகவிலைப்படியும் ப�ொதுமக்கள் அனைவரும் தங்கள்
கிடைக்காது. எண்ணங்களில் மாற்றத்தைக் க�ொண்டு வர
வேண்டும்.
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
14
எது உன்னுடையது?

ஒரு மனிதன் திடீரென இறந்து ப�ோனான்...! கடவுள் : "அவை காலத்தின் க�ோலம்...! "
அவன் அதை உணரும் ப�ோது கையில் ஒரு
பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் மனிதன் : "என்னுடைய திறமைகளா?"
வந்தார்...!
கடவுள் : "அவை உன் சூழ்நிலைகளுடன்
கடவுள் : "வா மகனே...! நாம் கிளம்புவதற்கான சம்பந்தப்பட்டது...!"
நேரம் வந்து விட்டது...! "
மனிதன் : "அப்படியென்றால் என்னுடைய
மனிதன் :"இப்பவேவா? இவ்வளவு குடும்பமும் நண்பர்களுமா?"
சீக்கிரமாகவா? என்னுடைய
திட்டங்கள் என்ன ஆவது?" கடவுள் : "மன்னிக்கவும்! குடும்பமும்
நண்பர்களும் நீ வாழ்வதற்கான
கடவுள் : "மன்னித்துவிடு மகனே...! வழிகள்...!"
உன்னைக் க�ொண்டு செல்வதற்கான
நேரம் இது...! " மனிதன் : "அப்படி என்றால் என் மனைவி
மற்றும் மக்களா ? "
மனிதன் : "அந்தப் பெட்டியில்என்ன உள்ளது?"
கடவுள் : "உன் மனைவியும் மக்களும் உனக்கு
கடவுள் : "உன்னுடைய உடைமைகள்...! " ச�ொந்தமானவர்கள் அல்லர்...!
அவர்கள் உன் இதயத்துடன்
மனிதன் : "என்னுடைய உடைமைகளா...! சம்பந்தப்பட்டவர்கள்.! "
என்னுடைய ப�ொருட்கள், உடைகள்,
பணம் எல்லாமே இதில்தான் மனிதன் : "என் உடலா?"
இருக்கின்றனவா?"
கடவுள் :"அதுவும் உனக்குச் ச�ொந்தமான
கடவுள் : "நீ கூறியவை அனைத்தும் தல்ல...!
உன்னுடையது அல்ல.. அவைகள் உடலும் குப்பையும் ஒன்று...!"
பூமியில் நீ வாழ்வதற்கு
தேவையானவை...!" மனிதன் : "என் ஆன்மா ?"

மனிதன் : "அப்படியானால் என்னுடைய கடவுள் : "அதுவும் உன்னுடையது அல்ல...!


நினைவுகளா?" அது என்னுடையது...!"
மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
15
அந்தப் பெட்டியை வாங்கித் திறந்தவன் காலிப்
பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்...!

கண்ணில் நீர் வழிய கடவுளிடம்


"என்னுடையது என்று எதுவும் இல்லையா?"
என கேட்க...!

கடவுள் ச�ொல்கிறார் :
அதுதான் உண்மை! நீ வாழும் ஒவ்வொரு
ந�ொடி மட்டுமே உன்னுடையது...!
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு ந�ொடிதான்...!

ஒவ்வொரு ந�ொடியையும் சந்தோஷமாக வாழ்...!


எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே...!

ஒவ்வொரு ந�ொடியும் வாழ்...! உன்னுடைய


வாழ்க்கையை வாழ்...!

மகிழ்ச்சியாக வாழ்...! அது மட்டுமே


நிரந்தரம்...!

உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன்


க�ொண்டு ப�ோக முடியாது...!

வாழுகின்ற ஒவ்வொரு ந�ொடியையும்


சந்தோஷமாக வாழ்வோம்...!

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


16
ஆழ்வாரின் ஆயுதங்கள்
தி ரு ம ங ் கை ய ா ழ ்வார்
அவருடைய ஆயுதங்களை
தன்னுடைய கடைசி காலத்தில்
திருக்குறுங்குடி நம்பி
எம்பெருமானிடம் ஸமர்ப்பித்து
சரணாகதி அடைந்தார்.

இன்றளவும் திருக்குறுங்குடி
திருக்கோவிலில் பாதுகாக்கப்பட்டு
ஆயுத பூஜை அன்று மட்டும்
வெளியே எடுத்து பூஜை
செய்யப்படுகிறது.......!

அணைத்த வேலும், த�ொழுத


கையும், அழுந்திய திருநாமமும்,
ஓம் என்ற வாயும், உயர்ந்த
மூக்கும்,குளிர்ந்த முகமும், பரந்த
விழியும்,பதித்த நெற்றியும், நெறித்த
புருவமும் சுருண்ட குழலும், வடிந்த
காதும், அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும்,
அகன்ற மார்பும், திரண்ட த�ோளும், நெளித்த முதுகும், குவிந்த இடையும், அல்லிக் கயிறும்,
அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும் த�ொங்கலும் தனி மாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற
நிலையும் சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும், தஞ்சமான தாளிணையும், குந்தியிட்ட
கணைக்காலும்,குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாளி மணவாளனும்,
வாடினேன் வாடி (என்று) வாழ்வித்தருளிய, நீலிக்கலிகன்றி, மருவலர்தம் உடல் துணிய வாள் வீசும்
பரகாலன், மங்கை மன்னனான வடிவே.

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


17
காற்றில் கவனம்!

பகிர்வு: Awareness என்று ய�ோசித்தேன். மனம் புயலடித்து விட்டதால்,


இன்றே இந்த விஷயத்தைக் கண்டுபிடிக்க
நேற்று அவுரங்காபாத்தைச் சேர்ந்த 7 வேண்டும் என்று நினைத்தேன்.
இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
காரின் டயர் வெடித்ததே காரணம். எனவே அதைக் கண்டு பிடிக்க நண்பர்
குழுவை ஏற்படுத்தின�ோம். நாங்கள் ஒரு
முக்கியமான செய்தி புதிதாகக் கட்டப்பட்ட ஸ்கார்பிய�ோ எஸ்யூவியில் ஏறின�ோம்.
அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின்
டயர் வெடிக்கும் சம்பவங்கள் இந்த நாட்களில் பயணத்தின் ஆரம்ப நிலையில் காரின்
அதிகம். இதில் தினமும் ஏராளமான�ோர் டயரின் அழுத்தத்தைச் சரிபார்த்து, 25 PSI
உயிரிழந்து வருகின்றனர். நாட்டின் அதி நவீன என்ற சர்வதேச தரத்தின்படி வைத்தோம்.
சாலைகளில் ஏன் அதிக விபத்துகள் நடக்கின்றன (அனைத்து வளர்ந்த நாடுகளின் கார்களிலும்
என்ற கேள்வி ஒரு நாள் என் மனத்தில் எழுந்தது. மேற் ச�ொன்ன ஒரே காற்றழுத்தம் தான்
வைக்கப்படுகிறது..
பெரிய விபத்துக்களுக்கு ஒரே ஒரு காரணம்
மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டது. அது டயர் நம் நாட்டில் உள்ளவர்கள் இதைப் பற்றி
வெடிப்பதால் மட்டுமே. அறியாமல�ோ அல்லது எரிப�ொருளைச்
சேமிக்கவ�ோ PSI குறியீட்டு அளவைவிட
எல்லாருடைய டயர்களும் ஒரே மாதிரி அதிகமான காற்றை டயர்களில் நிரப்புகிறார்கள்..
வெடித்துச் சிதறும் வகையில் நெடுஞ்சாலைத் ப�ொதுவாக 35 முதல் 45 PSI வரை
துறையினர் அப்படி என்ன வகையான வைக்கிறார்கள். நம் பயணத்தில் நான்கு
கூர்முனைகளை சாலையில் வைத்திருப்பார்கள் வழிச்சாலையில் ஏறி காரை ஓட்டின�ோம்.
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
18
வாகனத்தின் வேகம் மணிக்கு 120 - 140 கி.மீ
வரை இருந்தது. அதே வேகத்தில் இரண்டு மணி
நேரம் காரை ஓடவிட்டு உதய்பூர் அருகே வந்து
சேர்ந்தோம்.

நாங்கள் காரை நிறுத்தி டயரின் பிரஷரை


மீண்டும் ச�ோதனை செய்தப�ோது எங்களுக்கு
மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால்
இப்போது டயரின் அழுத்தம் 52 PSI ஆக
இருந்தது. இப்போது டயரின் அழுத்தம் எப்படி
இவ்வளவு அதிகரித்தது என்ற கேள்வி எழுந்தது

எனவே இதற்கான தெர்மாமீட்டரை டயரில்


ப�ொருத்தியப�ோது டயரின் வெப்பநிலை 92.5
டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

சாலையில் உள்ள டயர்களின் உராய்வு


மற்றும் பிரேக்கைத் தேய்ப்பதால் ஏற்படும் வெப்பம்
காரணமாக டயர்களுக்குள் காற்று விரிவடைவதால்
தான் என்ற மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டு முழு
உண்மையும் எங்களுக்கு விளங்கியது.

B2B டயரின் உள்ளே காற்றழுத்தம் மிகவும்


அதிகரித்துள்ளது. எங்கள் டயர்களில் காற்று
ஏற்கனவே சர்வதேசத் தரத்திற்கு ஏற்ப இருந்ததால்,
அவை வெடிப்பதில் இருந்து தப்பித்தன. ஆனால்
ஏற்கனவே காற்றழுத்தம் அதிகமாக இருக்கும்
டயர்கள் (35 -45 PSI) அல்லது கட் உள்ள
டயர் வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக
உள்ளன.

எனவே உங்கள் காரின் டயர் அழுத்தத்தை


சரிசெய்து, நான்கு வழிச்சாலைக்குச் செல்வதற்கு
முன் பாதுகாப்பான பயணத்தை அனுபவிக்கவும்.
ஓட்டுனர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு
அதிவேக நெடுஞ்சாலைத் துறையை
கேட்டுக்கொள்கிறேன்.

அதனால் நெடுஞ்சாலைப் பயணம் கடைசிப்


பயணமாகிவிடாது.
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
19
நமக்கான கழுதையின் பாடம்

ஒரு நாள் ஒரு விவசாயியின் கழுதை


கிணற்றில் விழுந்து. அந்தக் கழுத்தை மணிக்
கணக்கில் சத்தமாகக் கத்தியது, அழுதது,
விவசாயி அதை வெளியேற்றுவதற்கு ஏத�ோத�ோ
முயற்சி செய்தார்.

இறுதியாக, கழுதைக்கு வயதாகிவிட்டதாலும்,


ஏற்கனவே கிணறு வறண்டு ப�ோய் இருந்ததால்,
அந்தக் கிணற்றை மூடிவிட வேண்டும் என்றும்
விவசாயி முடிவு செய்தார்; உண்மையில்
கழுதையைக் கிணற்றில் இருந்து வெளியே
எடுப்பது மதிப்புக்குரியது அல்ல. தற்போதைய
கழுதையின் மதிப்பை விட வெளியே எடுக்க
அதிக செலவாகும் என்று த�ோன்றியது
விவசாயிக்கு.

அக்கம்பக்கத்தினர் அனைவரையும் உதவிக்கு


வருமாறு அழைத்தார். அவர்கள் ஒவ்வொருவரும்
ஒரு மண்வெட்டியைப் பிடித்து கிணற்றில்
மண்ணை அள்ளி க�ொட்டத் த�ொடங்கினர். அசைத்து, கீழே விழும் மண்ணை மிதித்து
க�ொஞ்சம் க�ொஞ்சமாக மேலே வந்து
கழுதை என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து க�ொண்டிருந்தது. மிக விரைவில், கழுதை
பயங்கரமாக அழுதது. பின்னர், அனைவரையும் கிணற்றின் எல்லையை அடைந்து, கிணற்றை
ஆச்சரியப்படுத்தும் வகையில், சில நேரத்திற்கு விட்டு வெளியே சென்றதை அனைவரும்
பிறகு அந்தக் கழுதை அமைதியாகிவிட்டது. ஆச்சரியத்துடன் பார்த்துக் க�ொண்டிருந்தார்கள்.

கடைசியாகக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த வாழ்க்கை உங்கள் மீது மண்ணை அள்ளி


விவசாயி, அவன் பார்த்ததைக் கண்டு வியந்தான்.. வீசப்போகிறது, உங்கள் மீது வீசப்படும் எல்லா
ஒவ்வொரு முறை மண்ணைத் தள்ளும் ப�ோதும் விதமான தூற்றுதலையும் தாண்டி வெற்றி
கழுதை நம்ப முடியாத ஒன்றைச் செய்து பெறுவதற்கான தந்திரம், அதையே படிகளாக
க�ொண்டிருந்தது: அது தன் மீது விழுகின்ற பயன்படுத்தி மேலே செல்வது தான். நம் ஒவ்வொரு
மண்ணையெல்லாம் உடலை அசைத்து, பிரச்சனையும் ஒரு படி மேலே நம்மைக் க�ொண்டு
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
20
செல்லும். நாம் விட்டுக்கொடுக்காமால் 2. கவனச்சிதறல்கள் இல்லமால் உங்கள்
முயன்றால் எவ்வளவு ம�ோசமான மனதைப் பழக்குங்கள்.
சூழ்நிலைகளில் இருந்தும் வெளியேறலாம்... 3. எளிமையான வாழ்க்கைக்குப் பழகுங்கள்.
4. அதிகமாகக் க�ொடுங்கள் மற்றும் குறைவாக
எதிர்பாருங்கள்.
அவர்களின் தூற்றுதலே, உங்கள்
5. அன்பு செலுத்துங்கள், தூற்றினால்
முன்னேற்றத்தின் வைராக்கியம்.
தூர எறியுங்கள்.
எதையும் சமாளிக்க 5 விதிகளை நினைவில்
ஏனென்றால் இந்த வாழ்க்கைக்கு நீங்கள் ஒரு
க�ொள்ளுங்கள் :
தீர்வாக இருக்க வேண்டும், பிரச்சனையாக
அல்ல!
1. வெறுப்பை உங்கள் இதயத்தில் இருந்து
வாழ்வது ஒருமுறை தான்.
தூக்கி எறியுங்கள்.
அதை சிறப்பாக வாழ பழகுங்கள்.

This is a forward.

They migrated and


reached great heights.

I really don't under-


stand what we should
feel proud about?

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


21
So beautifully planned for the students being confused in choosing
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
22
How to select your future?

a stream . This chart helps them to decide on the course to be chosen.


ஒளி பரவட்டும் | ஜுலை 2023
23
வீண் ஆடம்பரமும் வறுமையே
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வாங்கனும்?....
வயதான "சாடிய�ோ மானே செனகல்" (மேற்கு நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன்,
ஆபிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு சாப்பாட்டிற்கு கஷ்டபட்டுள்ளேன்,.. என்னால்
ரூ.140 மில்லியன் (14க�ோடி) சம்பாதிப்பதாக படிக்க முடியவில்லை,எனக்கு காலணிகள் இல்லை,
மதிப்பிடப்பட்டுள்ளது... காலணிகள் இல்லாமல் விளையாடுவேன், நல்ல
உடைகள் இல்லை, சாப்பிடவில்லை.
அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே ஆனால் இன்று நான் நிறைய பணத்தை
உடைந்த ம�ொபைலுடன் பல இடங்களில் சம்பாதிக்குறேன் .. அதனால்தான் சம்பாதித்த
காணப்பட்டார்.... ஒரு நேர்காணலில், அதைப் பற்றி பணத்தில் மக்கள் படிக்கும்படி பள்ளிகளை
அவரிடம் கேட்கப்பட்ட ப�ோது நான் அதைச் சரி உருவாக்கியுள்ளேன்..
செய்வேன், டிஸ்பிளே மாற்றி விடுவேன் என்றார்...
என் நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு
நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்ற வேண்டும், பல புதிய காலணிகளும், உடைகளும், உணவும்
க�ோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய ம�ொபைலே க�ொடுக்குறேன்... வசதியாக வாழ்வதற்குப் பதிலாக
வாங்கலாமே என்று அவரிடம் கேட்கப்பட்ட ப�ோது அதை என் மக்களுடன் பகிர்ந்து க�ொள்ள
என்னால் ஆயிரம் ம�ொபைல்கள், 10 ஃபெராரிஸ், விரும்புகிறேன்" என்றார்... அற்புத மனிதன்.
2 ஜெட் விமானங்கள், டயமண்ட் கடிகாரங்களை
வாங்க முடியும், ஆனால் இதையெல்லாம் நான் ஏன்

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


24
மகிழ்ச்சி என்பது என்ன?
மகிழ்ச்சி என்பது என்ன? பற்றற்றத�ொரு பரவச நிலை...
இலக்கா...இல்லை பணம் ப�ொருள் தேவைக்கு மேல் தேவையே
குறிக்கோளா...க�ொஞ்சமும் இல்லை இல்லை... நடப்பவை யாவும் நன்மைக்கே
முடியும் தருணமா...முற்றிலும் இல்லை எனும் நம்பும் நிலை...
தவப்பயனா...இல்லவே இல்லை
உண்மையான மகிழ்வை உணர்வது எப்படி?
மகிழ்ச்சி ஒரு பயணம்... சிரிப்பதா...சிறிதளவும் இல்லை
இலக்கற்றத�ொரு இன்பப் பயணம்... தேடலா...தெளிவாகச் ச�ொல்லலாம்...இல்லவே
குறிக்கோளற்றத�ொரு குழந்தை விளையாடல் இல்லை...
முடிவில்லாதத�ொரு முழுமை உணரல் நிகழ்வுகளாலா...நிச்சயமாக இல்லை...
தானாய் நிகழ்வதைத் தனக்கானதாக்கிக் இறையருள், ஏகாந்த இன்பம்...எதுவுமே
க�ொள்ளல் இல்லை...

மகிழ்ந்திருக்க என் செய்வது? உண்மையான மகிழ்வை உணர...


யாரையேனும் சார்ந்திருக்க வேண்டுமா...இல்லை உன்னை உணர வேண்டும் நீ...
எதிலேனும் பற்றிருக்க வேண்டுமா...இல்லை உள்ளம் சிரிக்க வேண்டும், உதடுகள் அல்ல...
பணம் ப�ொருள் சேர்த்திருக்க வேண்டுமா... எதுவுமே வேண்டாம் என்றுணர உணர...
இல்லை நன்மைகள் மட்டுமே நடக்க எது வேண்டும�ோ அது நிறையும்...
வேண்டுமா...இல்லவே இல்லை மெனக்கெடாமலே மனவனமெங்கும் மகிழ் மலர்
மலரும்...மணம் வீசும்...
மகிழ்ந்திருத்தல் ஒரு மனநிலை! - Dr. S.முருகுசுந்தரம்
சார்புகளற்ற விடுதலை... த�ோல் சிகிச்சை நிபுணர்,
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
25
நன்கொடைகள்
வரவேற்கப்படுகின்றன.
Gpay Number : 98946 81443

ஒளிபரவட்டும் மின்னிதழிழ் உங்கள் வணிகம் மற்றும்


அலுவல் ரீதியான விளம்பரங்கள் செய்ய த�ொடர்பு
க�ொள்க.

த�ொலைபேசி எண் : 98412 72047


மின்னஞ்சல் : gomathibooks2020@gmail.com

நன்கொடைகள், கச�ோலை மற்றும் வரைவ�ோலை மூலம் அனுப்பலாம். க�ோமதி புக்ஸ்


என்ற பெயரில் செக் / டி.டி. அனுப்பவும். பின்புறம் உங்கள் பெயர், ஊர் எழுதவும்.
அல்லது க�ோமதி புக்ஸ் என்ற வங்கிக் கணக்கில் (AC No. CA 510909010138128)
சிட்டி யூனியன் வங்கி, ராஜீவ் காந்தி சாலை, பெருங்குடி - Branch IFSC:
(CIUB0000650) பணம் செலுத்தி, அதன் ஒப்புகை பிரதியை படிவத்துடன் அனுப்பி
வைக்கலாம்.

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


26
க�ொஞ்சம் கவலைப்படுங்க சார்

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு


அஞ்சி நடுங்குகிறது தெரியுமா????

#Kidney - சிறுநீரகம்
நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.

#Stomach - வயிறு
குளிரூட்டப்பட்ட உணவுகள்.

#Lungs - நுரையீரல்
புகைப்பிடித்தல்.

#Lever - கல்லீரல்
க�ொழுப்பு சத்து நிறைந்த உணவுகள்,
மது அருந்துதல்.

#Heart - இதயம்
உப்பு நிறைந்த உணவு வகைகள்.
#Gallbladder - பித்தப்பை
#Pancreas - கணையம் காலை உணவை தவிர்ப்பது.
அதிகப்படியான ந�ொறுக்கு தீனி நம்மை பாதுகாத்துக் க�ொள்வது நமது கடமை.
ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த
#Intestines - குடல் உதிரிபாகங்கள் விலையுயர்ந்தது.
கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக
உண்பது. மாற்றிப் ப�ொறுத்த மிகவும் செலவு பிடிக்கும்.
எளிதாகக் கிடைக்காது.
#Eyes - கண்கள்
த�ொலைகாட்சி பெட்டி, த�ொடுதிரை கைபேசி & அசல் ப�ோல் இயங்காது.
கணினி திரைகளை அதிக நேரம் பார்ப்பது. உண்ணும் உணவில் கவனம் தேவை.
வாழ்க்கை முறையில் கவனம் தேவை..!

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


27
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
28
கஷ்டமா இருக்குப்பா

கணிதம் படிக்க

ஒளி பரவட்டும்
கஷ்டமா இருக்குப்பா! என்றாய்…
டியூஷன் வைத்தோம்!

மிதிவண்டி ஓட்ட ஜுலை 2023

கஷ்டமா இருக்குப்பா! என்றாய்..


ஸ்கூட்டர் வாங்கின�ோம்!
திருமதி. இராஜேஸ்வரி சிவம்
அவள் இல்லாமல் வாழ பதிப்பாளர்
கஷ்டமா இருக்குப்பா! என்றாய்.. க�ோமதி புக்ஸ்
திருமணம் முடித்தோம்!

கூட்டுக் குடும்பமாய் வாழ புத்தக ஆக்கமும், வடிவமைப்பும்


கஷ்டமா இருக்குப்பா! என்றாய்..
முதிய�ோர் இல்லம் வந்தோம்!
வெ.இராஜசேகர்
த�ொலைபேசி : 98412 72047
இங்கு உங்களை இப்படி பார்க்க
கஷ்டமா இருக்குப்பா! என்றாய்..
உயிர் பிரிந்தோம்..
PUBLISHED BY
மகனே இன்னும் நீ GOMATHI BOOKS
உச்சரித்துக்கொண்டே இருக்கின்றாய் 20/21 VPK STREET,
எங்கள் புகைப்படங்களைப் பார்த்து PERUNGUDI.
கஷ்டமா இருக்குப்பா!… CHENNAI - 600 096
- ஆதிரன், சேலம்
CELL : 989468 1443

படைப்புகளை அனுப்பும் ப�ொழுது கீழே


க�ொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு
படைப்பாளி பெயருடன் அனுப்புக.

மின்னஞ்சல் :
gomathibooks2020@gmail.com

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


29
20 Motivational Messages from book
3 Minute Motivation
1. Make small, consistent changes in your 11. Stay focused on your goals and avoid
life towards your goals. distractions and negative self-talk.
2. Don't give up on your dreams, even if you 12. Develop a positive attitude and outlook
face struggles or setbacks. on life.
3. Set specific, measurable, and achievable 13. Stay accountable to yourself and others
to reach your goals.
goals to stay motivated.
14. Find purpose and meaning in your
4. Visualize your success and stay positive
work and life.
even in difficult times.
15. Keep learning and exploring your
5. Create a routine or system that supports
passions to stay motivated.
your goals and motivation.
16. Use affirmations and positive self-talk
6. Surround yourself with positive to boost your confidence and
influences and like-minded people. motivation.
7. Take breaks and allow time for self-care 17. Prioritize self-reflection and personal
and relaxation. development.
8. Celebrate your successes, no matter how 18. Stop comparing yourself to others and
small they may seem. focus on your own growth and progress.
9. Continuously learn, grow, and adapt to 19. Stay present and mindful in your daily
new challenges and opportunities. life.

10. Have a growth mindset and embrace 20. Choose to be happy and grateful for
what you have in your life.
failure as a learning opportunity.

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


30
Fortunate People
Dr. Wada in Japan advocates calling
people over 70 years old as "fortunate peo-
ple" rather than "elderly people".

He summed up the secret of 70-year-


olds becoming "lucky ones" into " 42 sen-
tences"

Seniors over the age of 70 do not need


regular physical examinations because the
"standard of health" varies from person to
person. He also said: "Don't believe what
doctors say." This is because doctors are in
contact with "patients", so they do not un-
derstand what health is. At the same time,
he also opposes the long-term use of multi-
ple drugs by the elderly, and advocates "only
take necessary drugs when necessary." In
other words, "taking medicine to prevent In addition, the cholesterol level that the
something" makes little sense. elderly are generally worried about, even if it
is high to a certain extent, there is no need to
According to this point of view, the el- worry. Because cholesterol is the raw mate-
derly do not need to take sleeping pills fre- rial for the body to generate immune cells.
quently. Loss of sleep time as you age is a The more immune cells, the lower the risk of
natural phenomenon, and no one dies from cancer in older people. In addition, part of
insomnia. 24 hours a day, sleep whenever the male hormone is also composed of cho-
you want, wake up whenever you want, this lesterol. If the cholesterol level is too low,
is the privilege of the elderly. men's physical and mental health will be un-
sustainable.
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
31
Likewise, high blood pressure doesn't 17. Do everything meticulously
matter at all. More than 50 years ago, hu- 18. Don't deal with people you hate
man malnutrition was widespread. So, 20. Rather than fighting the disease to
when blood pressure reaches around 150, the end, it is better to live with it
the blood vessels burst. But very few people 21. "The car must have a way to the front of
are malnourished these days, so even blood the mountain" is the magic spell to make
pressure over 200 won't cause a blood vessel the old man happy
to burst. 24. You can't fall asleep and don't force it
25. Doing happy things is best for boosting
Dr. Wada summed up the secret of brain activity
70-year-olds becoming "fortunate people" 27. Find a "family doctor" early
into "42 sentences", as follows: 28. Don't be overly patient or force yourself,
there is nothing wrong with being a "bad
1. Keep walking old man"
2. Take a deep breath when you feel irritable 31. Stop learning and you will grow old
3. Exercise so that the body does not feel stiff 32. Don't be greedy for vanity, it's good to
4. Drink more water when the air have everything you have now
conditioner is on in summer 33. Innocence is the privilege of the elderly
6. The more you chew, the more 34. The more troublesome things are,
energetic your body and brain will be the more interesting they are
7. Memory declines not because of age, 36. Do what is good for others
but because of long-term non-use of 37. Live leisurely today
the brain 38. Desire is the source of longevity
8. No need to take a lot of medicine 39. Live as an optimist
9. No need to deliberately lower blood 40. Cheerful people will be popular.
pressure and blood sugar levels 41. The rules of life are in your own hands
13. Only do what you love, not what you hate 42. Accept everything calmly
15. No matter what, don’t stay at home https://deemagclinic.com/2022/12/04/
all the time fortunate/
16. Eat whatever you want, the fat body
is just right

ஒளி பரவட்டும் | ஜுலை 2023


32
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
33
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
34
ஒளி பரவட்டும் | ஜுலை 2023
35

You might also like