You are on page 1of 12

BACHELOR OF TEACHING (PRIMARY EDUCATION) WITH HONOURS

JANUARI 2022

HBTL 4203

PENGAYAAN BAHASA TAMIL

NO. MATRIKULASI : 801116146096001


NO. KAD PENGENALAN : 801116146096
NO. TELEFON : 0172841774
E-MEL : vijiahrajoo@gmail.com
PUSAT PEMBELAJARAN : OUM KUALA SELANGOR
கேள்வி 1

கற்றல் கற்பித்தல் நடவடிக்கை கல்வி வளர்ச்சிக்கு முக்கியம் .திறன் மொத்தம் கேட்டல் , பேசுதல் ,
எழுதுதல் , வாசித்தல் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம் . கேட்டல் மற்றும் வாசிக்கும் திறனை
“ஏற்கொள்ளும் திறன் என்றும் , மாறாக பேச்சுத் திறன் மற்றும் எழுத்துத் திறனை “உற்பத்தித் திறன்”
என வகைப்படுத்தலாம்.

ஒருவர் தான் நினைப்பதையும் தன் அறிவுத்திறனையும் தனது உணர்ச்சியையும் வெளிக்காட்டுவதற்கு


பேச்சுத் திறன் மிகவும் அவசியம். படிப்பு மற்றும் வேலையிலும், சமூகத்துடன் பழகிச் சிறந்து
விளங்குவதற்கும் பேச்சாற்றல் மிகவும் தேவை. இதில் தாக்கம் ஏற்பட்டால் அது ஒருவருடைய
தன்னம்பிக்கை மற்றும் சுயமதிப்பீட்டை வெகுவாகப் பாதித்து, வாழ்வில் நிறைவையும்
வெற்றியையும் குலைக்கும்.

21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் உள் நான்கு ‘சி’ கல்வி அணுகுமுறை அடங்கியுள்ளது அவை

 பேச்சுக்கலை/ தொடர்பு
 ஒத்துழைப்பு
 விமர்சனச் சிந்தனை
 ஆக்கச் சிந்தனை

பேச்சுக்கலை அல்லது தொடர்பு என்பது வகுப்பறையில் கற்றல் கற்பித்தலின் போது மாணவர்கள்


ஒரே இடத்தில் அமர்த்து கொண்டு ஆசிரியர் சொல்வதை எல்லாம் கேட்டு கற்பது அல்ல . மாறாக,
ஆசிரியர் தலைப்பு சார்த்த வினாவை முன்வைக்க மாணவர்கள் சுயமாக தத்தம் கருத்துகளைக்
கூறுவதோடு தலைப்பு சார்ந்த கருத்துகளைச் சேகரித்துப் படைப்பதுமாகும் . கருத்துகளைச் சேகரிக்க
மாணவர்கள் மின்னியல் ஊடகங்களைப் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கதாக அமைகிறது. தங்கள்
எண்ணத்தில் எழும் எண்ண அலைகளை மாணவர்கள் தைரியமாக தன்னம்பிக்கையுடன் கூற
இப்பெசுக்கலை உறுதுணையாய் அமைகிறது.

‘communication is transfer of information from one person to another, whether or not it alicits
confidence. But the information transferred must be understandable to the receiver.
(G.G Brown)

“communication is the intercourse by words,letters or messages”


(Fred G.Meyer)
தனி நபர் முறையில் கருத்துகளைக் கூறுவதோடு இரு நபர் முறையிலோ அல்லது குழு முறையிலோ
மாணவர்கள் பெச்சுக்கலையின் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்நிலை மாணவர்களின்
தலைமைத்துவ மாண்பை வெளிப்படுத்த உறுதுணையாய் இருக்கின்றது . மாணவர்கள் சுயமாக
இயங்குகின்றனர்.

தொடக்கநிலை , இடைநிலை, உயர்நிலை என மூன்று நிலைகளிலும் மாணவர்கள் படித்தாலும்


பேச்சுத் திறனில் பின் தங்கியே உள்ளனர். மாணவர்கள் பேசும் பொழுது உடனடியாகக் கருத்தை
வெளிபடுத்த வேண்டிய நிலை இருப்பதால் மாணவர்கள் தயங்குகின்றார்கள் .

குழந்தைகளுக்கு மொழியைக் கற்றுத்தருவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. ஆனால்


பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் கணினித்திரையையும், டிவி திரையையும் பார்ப்பதும்,
பொம்மைகளுடன் விளையாடுவதுமாக கழிகிறது அவர்களுடைய பொழுதுகள். இதுபோன்ற
சூழலில் சூழல்களில் குழந்தைகள் பேசுவதற்கான வாய்ப்பு குறைந்து, கேட்பது மட்டுமே நடக்கிறது.
ஒரு விஷயத்தை எப்படிப் பேச வேண்டும் என்பது தெரியாமல் குழந்தைகள் வளர பெற்றோர்கள்
காரணமாகின்றனர். இடம், பொருள் அறிந்து பேச வேண்டிய தெளிவும் அவர்களிடம்
இருப்பதில்லை.

மாணவர்களுக்கிடையே மொழி வளம் குறைவாக இருப்பதால் அவர்களால் தன் கருத்துகளை


உடனடியாக கூறும் ஆற்றல் குறைவாக உள்ளது. மாணவர்களுக்கிடையே வாசிப்பு பழக்கம்
குறைவதால் அவர்களின் மொழி வளம் குறைகிறது. ஒரு மொழியில் புலமை பெற அம்மொழியில்
வெளிவந்துள்ள பல புத்தகங்களை வாசிப்பது அவசியமான ஒன்றாகும். அவ்வாறு வாசிப்பதனால்
அம்மொழியில் நாம் புலமை பெற முடியும். மொழி வளத்தைப் பெருக்கி கொள்ள முடியும். ஆனால்,
இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக வழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால்
வாசிப்பு பழக்கம் மாணவர்களுக்கிடையே குறைந்துள்ளது. ஒரு மொழியில் உள்ள பல புதிய
சொற்களை அறிய அம்மொழி நூல்களை வாசிக்காத காரணத்தால் அம்மொழியில் புலமை பெற
இயலாமல் அவற்றின் பொருளை உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்தி தெளிவாக பேச
முடிவதில்லை.

        மொழி வளத்தைப் பெருக்கும் அதே வேளையில், பொது அறிவையும் வாசிப்பதன் மூலம்
வளர்த்துக் கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதால் அத்துறைகளைப்
பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது. வாசிப்பு பழக்கம் குறைவாக இருப்பதால்
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பேசும் ஆற்றலை இழக்கின்றனர்.
பேச்சில் பயம் ஒரு காரணமாக இருக்கிறது . சிறுவயதில் பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு மொழி
சம்பதமான காணொளி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை அறிமுக படுத்துவது மிக குறைவு.
தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால், பிள்ளைகளுடன்
உரையாடுவது குறைந்து போகின்றது. பலர் பிள்ளைகளை பிள்ளைகள் காப்பிடத்தில் விட்டு
செல்கின்றனர். அங்கே அவர்களுக்கு பேச்சுரிமை குறைகிறது. பெரியவர்களுடன் உரையாடுவதும்
குறைகிறது. பெரியவர்களுடன் உரையாடுவது குறைகிறது . முன்னைய காலத்தில், வீட்டில் இருக்கும்
பெரியவர்கள் அதாவது தாத்த, பாட்டி, அத்தை, மாமா போன்றோர் பொறுப்பில் பிள்ளைகள்
வளர்வார்கள். இப்படி வளரும் பொழுது மொழி அங்கே வளரும். பெரியவர்களுடன் உரையாடும்
பொழுது மொழி நன்றாக வளரும். பிறர்களுடன் பேசும் பொழுது தவறாக பேசி விடுவோம் ,
பிழையாக பேசி விடுவோம் என்ற பயம் வராது . ஏனென்றால் பெரியவர்கள் உரையாடலை
செவிமெடுத்து சுலபமாக மொழியை கற்று கொண்டனர் . ஆனால் காப்பகத்தில் குழந்தைகள்
சிறுவர்களுடன் பழகும் பொழுது பேச்சாற்றல் குறையும் . அரைகுறை மொழி மட்டும் அங்கே
வளரும் போது சபையில் பேச அல்லது பெரியவர்களுடன் பேச பயம் ஏற்படும். இதுவே பேச்சில்
பயத்தை உண்டாக்கி மொழி பற்றை அழிய செய்கிறது .

மாணவர்களுக்கிடையே தெளிவற்ற பேச்சி மற்றொரு குறைபாடாகும் . மாணவர்கள் வாயை

போதியளவு திறந்து பேசாதிருப்பது ஒருவேளை காரணமாக இருக்கலாம். தாடை தசைகள்


விறைப்பாகவும் உதடுகள் அதிகம் அசையாமலும் இருக்கும்போது வாய்க்குள்ளேயே

பேசிக்கொள்வது போல் தோன்றும். மாணவர்கள் படபடவென்று வேகமாக பேசினாலும் பேச்சை

கிரகிக்க முடியாமல் போகும். பதிவு செய்யப்பட்ட பேச்சை வழக்கத்தைவிட அதிக வேகத்தில்

போட்டுக் காட்டுவது போல் அது இருக்கும். பேச்சில் வார்த்தைகள் இருந்தாலும் அவற்றால் அதிக

பிரயோஜனம் இருப்பதில்லை. சிலசமயம் பேச்சு உறுப்புகளில் ஏதோ குறை இருப்பதால்

தெளிவாக பேச முடியாமல் இருக்கலாம். இருந்தாலும், பேச்சு தெளிவற்று இருப்பதற்கு

பொதுவான காரணம், புரிந்துகொள்ள முடியாதபடி கடகடவென்று வார்த்தைகளை

சொல்லிவிடுவதே. சொல்லின் அசைகளை அல்லது முக்கியமான எழுத்துக்களை அல்லது கடைசி

சில எழுத்துக்களை விழுங்கி விடுவது பிரச்சினையாக இருக்கலாம். மாணவர்கள் கடகடவென்று

பேசும்போது, கேட்பவர்கள் சில கருத்துக்களையும் சொற்றொடர்களையும் புரிந்துகொள்வார்கள்,


ஆனால் மற்றவற்றை ஊகிக்க வேண்டியதாகிறது. ஆகவே, தெளிவாக பேசாவிட்டால்

போதனையினால் அதிகத்தை சாதிக்க முடியாது என்பதை புரிந்துகொள்கிறோம்.

வளரும் குழந்தைகளுக்கு மொழியைப் பேசுவதிலோ, பிறர் பேசுவதைப் புரிந்து கொள்வதிலோ


பிரச்னை ஏற்பட்டால், அது நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளில் ஒன்றான பேச்சு அல்லது மொழித்
திறன் குறைபாடாக இருக்கலாம். இவ்வகை குறைபாடுகள் குழந்தைகளின் வளரும் பருவத்திலேயே
காணப்படும். மொத்தம் 4 வகைகள் உள்ளன.மொழித்திறன் குறைபாடு (Language
Disorder)குழந்தைகள் மொழியை கற்பதிலும், புரிந்து கொள்வதிலும் சக வயதினரைக் காட்டிலும்
பின்தங்கி காணப்பட்டால், மொழித்திறன் குறைபாடாக இருக்கலாம். வார்த்தைகளின் அர்த்தம்,
அவற்றின் இலக்கணத்தை புரிந்துகொள்ளுதல் மற்றும் வாக்கியம் அமைப்பதில் திணறக் கூடும்.
மொழித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள், மற்றவர்களின் பேச்சு/எழுத்து மொழியைப் புரிந்து
கொள்வதிலும் (Receptive), பிறருக்கு புரியும்படி அல்லது தெளிவாக பேசுவதிலும்/ எழுதுவதிலும்
(Expressive) தன் வயதொத்த குழந்தைகளை விட பின்தங்கி இருப்பார்கள்.

வழக்கமாகக் குழந்தைகள் வளர வளர பேச்சு மற்றும் மொழித்திறன்களைப் பெற்றுக்


கொள்கிறார்கள். ஆனால் சில குழந்தைகள் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளச் சிரமப்படக்கூடும்.
 
பேச்சுக் குறைபாடு என்பது ஒரு குழந்தையால் தான் விரும்புவதைச் சரியாகச் சொல்ல இயலாமல்
போதல், குரல்,  சரளத்தன்மை ஆகியவற்றில் அதற்குச் சிரமம் ஏற்படுதல் அல்லது தகவல்
தொடர்புக்குத் தேவையான பேச்சு ஒலிகளை உருவாக்குவது மற்றும் அவற்றை வெளிப்படுத்துவதில்
அவர்களுக்குச் சிரமம் ஏற்படுதல். இந்தக் குழந்தைகளால் சொற்களை நன்கு புரிந்து கொள்ள
இயலும், இவர்களுக்கு நல்ல மொழித் திறன்கள் இருக்கும், ஆனாலும் இவர்கள் பேசுவதற்குச்
சிரமப்படக்கூடும். உதாரணம் வார்த்தையில் மெய்எழுத்து சேர்ந்து வரும்போது, அதை உச்சரிப்பதில்
சிரமம் (உதாரணம்... ஈர்ப்பு - ஈப்பு).குறிப்பிட்ட ஒலி உள்ள வார்த்தைகளை உச்சரிப்பதில் சிரமப்பட்டு அதை
விட்டுவிடுவது (உதாரணம்: பழம் - பலம்; ரத்தம் - தத்தம்...)வார்த்தையில் ஒரு ஒலிக்கு பதில் வேறு
ஒலியைப் பயன்படுத்துவது (குளி - சுளி;தண்ணி - அண்ணி...)காரணி மற்றும் சிகிச்சை. வார்த்தையை நிறுத்தி
நிறுத்தி பேசுவது (வார்த்தையின் ஒரு பகுதியை சொல்லிவிட்டு பாதியில் நிறுத்திவிடுவது/மீதி வார்த்தையை
சொல்லி முடிக்க முடியாமல் திணறுவது).பேசும் போது நடுநடுவே ஏற்படும் மௌன இடைவெளி அல்லது
அவ்வித இடைவெளியில் வேறு ஒலியை (அ, ஆ, உ) பயன்படுத்துவது. ஒரு வார்த்தைக்கு நடுவே
நீண்டநேரம் உயிர்மெய் ஒலிகளை ஏற்படுத்துவது.வாக்கியத்தில் அடுத்தடுத்த வார்த்தைகளை சொல்லாமல்
ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்வது.பேசும் போது அதிகப்படியான உடல் பதற்றம் ஏற்படுவது.
கடினமான வார்த்தைகளுக்கு பதில் வேறு வார்த்தைகளை பயன்படுத்துவது.திக்குவாய் பாதிக்கப்பட்ட
குழந்தைகளிடம் காணப்படும் உடல்ரீதியான அறிகுறிகள் பேசும் போது அதிகமாக கண்ணை சிமிட்டுவது.
தலை மற்றும் கை, கால்களை ஆட்டுவது. முக நடுக்கம். குரல் நடுக்கம்... குழந்தை உணர்ச்சிவசப்படும்
போதோ அல்லது சோர்வாக இருக்கும்போதோ இவ்வித அறிகுறிகள் மேலும் மோசமடையும். இதுபோன்ற
குழந்தைகள் பழக்கமில்லாத புது ஆட்களுடன் பேசுவதை தவிர்த்துவிடும். அப்போது, அவர்களைப் பேசச்
சொல்லி கட்டாயப்படுத்தினால், அறிகுறிகள் அதிகப்பட்டு, அதீத பதற்றத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி
விடும். அதனால், குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி பேச வைப்பதன் மூலம் இவ்விதக் குறைபாடை,
சரிசெய்ய முடியாது.

மாணவர்களின் பேச்சில் மொழி சிதைவு ஏற்பட்டுள்ளது. மொழிச்சிதைவென்பது மொழியின்


தூய்மையினை சிதைக்கும் செயலாகும். ஒரு மொழியின் தொன்மையை பாழ்படுத்தும்
இழிச்செயலே மொழிச்சிதைவாகும். மொழிக்கென உள்ள முகவரியை அதாவது அதன்
தனிச்சிறப்பை அழிக்கும் செயலே மொழிச்சிதைவாகும். ஒரு மொழியை அதன் விதிகளுக்கு
முரண்பட்டு பிழைப்பட கையாளுவதும் மொழிச்சிதைவே. பிற மொழி கலப்பு சேர்ந்துள்ளது மொழி
சிதைவு என்றே கூறலாம். காலங்காலமாக பல்வேறு இனத்தவரின், மொழியினரின் தொடர்பும்
கலப்பும் ஏற்பட்டதன் விளைவாக இன்றைக்கு மாணவர்கள் பயன்படுத்தும் சொற்களில் பல
பிறமொழிச்சொற்கள் கலந்திருப்பதை மொழியியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். மாணவர்கள்
பேசும் போது மலாய் சொற்களின் தாக்கங்கள் சேர்ந்திருப்பதை நன்றாக உணரமுடியும். மேசலும் , .  
தனியார் ஒலியலை தொலைக்காட்சிகளையும் வானொலிகளையும் கேற்பதலும் பார்ப்பதாலும்
மாணவர்களின் பேச்சில் குறைப்பாடு ஏற்பட்டுள்ளது . இந்த ஒலி. ஒளி ஊடகங்கள் தமிழ் மொழியை
நாள்தோரும் சிதைத்து வருகின்றன. மொழிச் சிதைவுகள் பெருக்கம் காண இவர்கள் உறுதுணையாக
உள்ளனர். பேச்சில் பிறமொழி கலப்பு இருப்பது தெரியாமலேயே , பெற்றோர்களும் மாணவர்களும்
தமிழில் பேசுவதாகக் கருதுகின்றனர். மொழியின் வளர்ச்சிக்கு இது உகந்தது அல்ல . மொழியைச்
சிதைவில் இருந்து காப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் துவங்க வேண்டும்.

கேள்வி 2

பெற்றோர் குழந்தைகளுடன் பேசவும், விளையாடவும் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர்


அவர்களோடு சேர்ந்து விளையாடும்போது அவர்கள் உங்களோடு பேசப் பேச மொழித்திறன்
அதிகரிக்கிறது. குழந்தைகள் தொலைக்காட்சி, கைப்பேசி மற்றும் வீடியோ கேம் ஆகியவற்றில்
அதிக நேரம் செலவளிப்பதைக் குறைப்பது அவசியம். இவற்றில் நேரம் செலவளிக்கும்போது
பெரும்பாலும் அவர்கள் பேசுவதில்லை. ஆகையால் பெற்றோர்கள் தங்களின் நேரத்தை
குழந்தைகளுடன் பேசி செலவிட வேண்டும். குழந்தைகளிடம் கதைகளை கூறி அவர்களின் மொழி
ஆற்றலை வளர்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக சிறுவயதிலேயே
குழந்தைகளுக்கு பேச்சாற்றலை மேன்படுத்த முடியும் பெற்றோர்கள் மற்ற குழந்தைகளுடன்
இணைந்து புத்தகம் வாசிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது போன்ற வாய்ப்புகளை
உருவாக்குங்கள். மேலும் குழந்தைகள் படுக்கைக்குச் சென்ற பின் தூக்கம் பிடிக்கும் வரை கதை
புத்தகங்கள் வாசித்துக் காட்டலாம். இதனால் கற்பனை வளம் கூடுவதுடன் மொழி வளமும்
அதிகரிக்கும். குழந்தைகள் விரும்பும் வகையில் வர்ண படங்கள் கொண்ட புத்தகங்களை அறிமுகம்
செய்வதோடு குழந்தைகளிடம் அது பற்றிய கற்பனை மற்றும் கதைகளைச் சொல்ல வைத்துக்
கேட்கலாம். மழலை மெல்ல மெருகேருவதை உணரலாம். குழந்தைகள் புதிய விஷயங்களை
தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் .
அறிவில் சேகரிக்கும் விஷயங்கள் மொழியிலும் வெளிப்படும். குழந்தைகளுக்கு உறவுகளை
அறிமுகம் செய்ய வேண்டும் . அவர்களைச் சந்தித்து உறவாடவும், உறையாடவும்
வாய்ப்பளிக்கலாம். இதன் வழியாக அவர்கள் உற்சாகத்துடன் பேசிப்பழகுகின்றனர். குழந்தைகளை
விடுமுறை நாட்களில் புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்குள்ள கோயில்,
பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் பார்க்கும் பொருட்கள் பற்றிப் பேச வேண்டும்.
குழந்தைகள் தங்களது தேவைகளை வாய்விட்டு கேட்கப்பழக்குங்கள். எது வேண்டும், வேண்டாம்
என்று முடிவெடுப்பதற்கான சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கட்டும். நிறைய சிந்திக்கவும்,
சிந்தித்ததை வார்த்தைகளில் பரிமாறிக் கொள்ள வாய்ப்பிருக்கும் பட்சத்தில் குழந்தைகள் மொழி
அழகும், மேன்மையும் பெறுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர்களிடமிருந்து பல
விஷயங்களையும் கற்றுக் கொள்கின்றனர். எதைப் பேசும்போதும் கவனத்துடன் செயல்பட
வேண்டும் .
மேடையில் பலர் முன் பேச பயப்படும் குழந்தைகளை அவரது நண்பர்கள் மத்தியில் பேசப்
பழக்கலாம் . நன்றாகப் பேசும்போது பாராட்ட வேண்டும் . தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அது
அவர்கள் மொழியில் வெளிப்படும்.

  புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை குழந்தை பருவத்திலேயே வளர்த்தெடுப்பது பெற்றோரின்


கடமை. பள்ளியில் தினமும் பலவிதமான புத்தகங்களை படிக்கின்றனர். அவை அந்தந்தப் பாடங்கள்
சம்பந்தப்பட்டவையாகும். இவற்றைப் படித்துவிட்டு தினமும் படிக்கின்றனர் என்றால் தவறாகும்.

பரந்து விரிந்த உலகில், பலவித நுால்களையும் மாணவர்கள் வாசிக்க பழக வேண்டும் என்பது
ஆசிரியர்கள் அறிவுரையாகும்.பள்ளிப் பாடங்கள் மட்டும் மாணவர்களின் அறிவை வளர்க்காது.
பாடங்கள் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களைப் பெற மாணவர்கள் வேறு பல நூல்களை
வாசிக்க வேண்டியது அவசியமாகிறது.  மாணவர்கள் சிக்கலின்றி சரளமாக பேச முதலில் பல

நூல்களைப் படித்து அறிய வேண்டும். தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றை பார்த்து


உடலையும், மனதையும் கெடுத்துக்கொள்ளாமல் நம் சீரிய சிந்தனையையும் அறிவையும் பயனுள்ள
புத்தகங்களை பெற்றோர் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் பேசும்
போது பிழையின்றி தன்னம்பிக்கையுடன் பேச இயலும் . பல தகவல்களைத் தன்னுடைய பேச்சில்
புகுத்த முடியும். எனவே, வாசிப்பு நமக்கு எவ்வளவு அவசியமாகிறது என்பதை அறிய முடிகிறது.
”நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்பதற்கேற்ப பல நூல்களை வாசித்து நம் அறிவைப் பெருக்கிக்
கொள்வோம்.

வார்த்தைகளைத் தெளிவாக சொல்வதற்கு தேவையான ஒன்று, மாணவர்கள் மொழியில் அவற்றின்

அமைப்பை புரிந்துகொள்வதாகும். தமிழில், வார்த்தைகள் எழுத்துக்களால் ஆனவை. ஒவ்வொரு

எழுத்தும் ஒலியின் ஒவ்வொரு அலகாகும். மாணவர்கள் பேசும்போது ஒவ்வொரு எழுத்தையும்

உச்சரிக்க வேண்டும். மாணவர்களின் பேச்சு இன்னும் தெளிவாக ஒலிக்க வேண்டுமென்றால்

மெதுவாக பேச வேண்டும் , முடிந்தளவு ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க முயற்சி செய்ய

வேண்டும் . முதலில் அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுத்து வாசிப்பதுபோல் தோன்றலாம்,

ஆனால் பழகப் பழக நயமாக பேச வந்துவிடும். சரளமாக பேச வேண்டும் என்பதற்காக சில

வார்த்தைகளை கடகடவென்று சொல்லிவிட வாய்ப்புண்டு; ஆனால் வார்த்தைகளின் அர்த்தம்

புரியாமல் போய்விடும் ஆபத்து இருந்தால் இதைத் தவிர்க்க வேண்டும்.

தெளிவாகப் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள, மாணவர்கள் மிக அழுத்தம் திருத்தமாக பேசிப்

பழகலாம். ஆனால் அப்படி பேசுவதையே பழக்கமாக்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் .

ஏனெனில் அது இயல்பாக இல்லாமல் செயற்கையாக தொனிக்கும்.

பேசும்போது மாணவர்கள் வாய்க்குள்ளேயே முணுமுணுக்கின்றனர் என்றால், முகவாய்க்கட்டை

நெஞ்சில் படாதவாறு தலையை உயர்த்தி பேச வேண்டும் . பைபிளிலிருந்து வாசிக்கும்போது,

அதை மேலே நன்கு தூக்கிப் பிடிக்க வேண்டும் , சபையாரைப் பார்த்த பிறகு மறுபடியும்
பைபிளைப் பார்ப்பதற்கு லேசாக குனிந்தாலே போதுமானதாக இருக்க வேண்டும். வாயிலிருந்து

வார்த்தைகள் தட்டுத்தடங்கலின்றி வர இது உதவும்.

பேச்சுக் குறைபாடு 2 வயதில் கண்டறியப்பட்டால், உடனே மொழிப் பயிற்சி அளித்து பிறகு 'பேச்சுப்
பயிற்சி' (Speech therapy) கொடுக்க முடியும். விரைவில் குறைபாட்டை சரி செய்யவும் முடியும்.
ஆனால், பலர் அறியாமையால் 5 வயதில்தான் குழந்தையை மருத்துவரிடம் கொண்டு செல்கிறார்கள்.
அப்போது குழந்தையின் பேச்சு வளர்ச்சி ஒரு வயது அளவுக்குத்தான் இருக்கும். இதுபோன்ற
சந்தர்ப்பங்களில் பயிற்சி கொடுத்து அவர்களை சாதாரண நிலைக்குக் கொண்டு வர அதிக காலம்
தேவை. பேச்சுத்திறன் என்பது மூளையுடன் தொடர்புடையது. மூளை வளர்ச்சிக் குறைபாட்டின்
காரணமாகவும் கூட பேச்சு தாமதப்படலாம். எனவே, குறிப்பிட்ட காலத்தில் குழந்தையின்
பிரச்சினையை மிகச் சரியாக கண்டறிந்து சிகிச்சை செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்.
குழந்தை பேசத் திணறும் போது, பெற்றோர் அவர்களுக்கு நேரம் கொடுத்து பேச ஊக்குவிக்க வேண்டும்.
பிறர், குழந்தையின் போராட்டத்தை கிண்டலும் கேலியும் செய்வதை அனுமதிக்கவே கூடாது. இவ்வித
குறைபாடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமானத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதால், கல்வி, வேலை,
சமூக வாழ்க்கை போன்றவற்றை வெகுவாக பாதிக்கிறது. திக்குவாயை முழுமையாக குணப்படுத்த
முடியாவிட்டாலும், அதன் தீவிரத்தை குறைத்து, சரளமாக பேச உதவ முடியும். இதற்கு ஸ்பீச் தெரபிஸ்ட்
(Speech Therapist) மற்றும் உளவியல் ஆலோசகர்களின் (Psychologist)
பங்கு மிகவும் அவசியம். பிரச்னையின் தன்மையைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான
சிகிச்சை தேவைப்படலாம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் திக்குவாய் குறைபாடு வாழ்நாள்
பிரச்னையாக ஆவதைத் தடுக்க முடியும்.

தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க தமிழாசிரியர்கள் மொழிப்பற்றினை


தமிழ் மாணாக்கர்களிடம் விதைக்க வேண்டும். தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக
மட்டும் பயிலாமல் தமிழ் மொழியைப் பிழையற பேசும் வண்ணம் புதிய சமுதாயம் இந் நாட்டில்
உருவாக வேண்டும். தமிழ் மொழியின் தூய்மையான பேச்சைக் கேட்டு அனனத்து தமிழ் மக்களும்
தமிழ் மொழியின் இனிமையை தங்கள் குழந்தைகள் அறிய முனைப்பு காட்ட வேண்டும்.
தமிழாசிரியர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டும் போதிக்காமல் தமிழ் மொழியை
இனத்தின் அடையாளமாக போதிக்க வேண்டும். ‘எழுத்தறித்தவன் இறைவன் ஆவான்’ எனும்
திருமொழியை தமிழ் இனம் உணர தமிழாசிரியர்கள் பெரிதும் பங்காற்ற வேண்டும். சிறந்த
படைப்புகள் தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும், தமிழ் இணைய தளங்களிலும் உலா
வர அதிக நாட்டமுடையவர்களாக தமிழாசிரியர்கள் இருக்க வேண்டும். தூய தமிழில் அனைவரும்
பேசும் முறையினை அறிமுகம் செய்திடல் வேண்டும்.  தமிழர்களிடையே தூய தமிழ் மொழிப்
பற்றினை ஓங்கச் செய்வது தமிழாசிரியர்களின் தலையாய கடமையாகும்.  

தனியார் ஒலியலை தொலைக்காட்சிகளையும் வானொலிகளையும் புறக்கணிப்பு செய்ய வேண்டும்.


இந்த ஒலி. ஒளி ஊடகங்கள் தமிழ் மொழியை நாள்தோரும் சிதைத்து வருகின்றன. மொழிச்
சிதைவுகள் பெருக்கம் காண இவர்கள் உறுதுணையாக உள்ளனர். தனியார் ஒலி, ஒளி அலைகள் மீது
தமிழினம் அடிமையாகுவதை அரசியல் தலைவர்கள் தடுக்க வேண்டும். இவர்கள் பெருமளவில்
பரப்புரைகளையும் விழிப்புணர்வுகளையும் நாடு முழுவதும் நடத்த வேண்டும். மொழிச் சிதைவு
இனச்சிதைவை ஏற்படுத்தும் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். இவர்கள்
பச்சோந்தி தன்மையை மறந்து பொதுநல வாதிகளாகவும் உண்மை தலைவர்களாகவும் நடந்து
கொள்ள வேண்டும்.

முடிவுரை

உலகிலுள்ள மொழிகளனைத்திலும் பேச்சு மொழி உண்டு. ஒலியைக் குறிப்பிட்ட ஒழுங்கில்


உச்சரிப்பதே பேச்சு. மனிதன் எல்லா தேவைகளையும் ஒருவரை ஒருவர் சார்ந்தே பூர்த்தி செய்து
கொள்கிறான். அதற்குப் பேச்சு தான் துணை புரிகிறது. பேச்சு மனிதனுக்கு ‘மூச்சு’ப் போன்றது என்று
சொல்வது மிகையல்ல. அத்தகைய பேச்சில் தேர்ச்சிப் பெறுவது – மாணவப் பருவத்தில் மிகவும்
நலம் பயக்கும். பள்ளிச் சூழலில் பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த மொழி
ஆற்றலையும் ஆளுமைப் பண்பையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள
முடியும். மாணவர்கள் பேச்சுத் திறனுடையவர்கள் ஆகுதற்கு ஆசிரியர்கள் மிகுந்த திறனையும்
ஆர்வமும் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

மகாகவி பாரதியார் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’


என்று கூறியதன் வாயிலாகத் தமிழை இனிய மொழி என்று கூறினார். அவர் மேலும், ‘தேமதுர
தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்றார். அத்தகைய தமிழ் மொழியை
அதன் சுவை, ஓசை குறையாமல் போற்றி வளர்ப்பதே ஆசிரியர்களின் கடமையாக இருக்க
வேண்டும். ஆங்கில மோகம் தலை விரித்தாடும் இக்காலக் கட்டத்தில் மொழியாசிரியர்கள், புத்தம்
புதிய உத்திகளாலும் தளராத உழைப்பினாலும் மட்டுமே மாணவர்களை ஆர்வமுடன் தமிழைப் பேச
வைக்க இயலும். இல்லையென்றால் பேசுகின்ற ஆர்வம் குறைந்து போய் விடும் என்பதை
கவனத்தில் கொள்ள வேண்டும். ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற நான்றோர் வாக்கை நாம் மறத்தல்
கூடாது. பாத்திரத்தில் இருந்தால் தான் பரிமாற முடியும் – அதாவது ‘சட்டியில் இருந்தால் தான்
அகப்பையில் வரும்’. நிறைய சொற்களை அறிந்திருந்தால் தான் அவற்றைப் பயன்படுத்திப் பேச
முடியும். இத்தகைய சொற்களை நிறையப் பெறுவதற்குப் பள்ளிச் சூழலில் பல்வேறு பயிற்சிகளை
ஆசிரியர்கள் அறிமுகம் செய்தல் வேண்டும்.

பார்வை நூல்கள் விவரம்

1. தமிழ் பயிற்றும் முறை , டாக்டர் ந.சுப்பு ரெட்டியார், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு,

சிதம்பரம், டிசம்பர்2000.
2. நற்றமிழ் கற்பிக்கும் முறைகள், வி.கணபதி, சந்திரிகா ராஜமோகன், சாந்தா பப்ளிஷர்ஸ்,

சென்னை, 2002.

3. கார்த்திகேயன் கம்பெனி, (1970), கற்பித்தல் பொது முறைகள், ஏசியன் பிரிண்டர்ஸ், சென்னை.

4. Skinner, B.F., (1967), “A Functional Analysis Of Verbal Behaviour”.

5. Bright Ideas – Teacher Handbooks – Developing Children’s Writing , Scholastic

Publications.

http://www.muthukamalam.com/essay/serial/p4e.html

You might also like