You are on page 1of 16

தொடர்பாடல்

விளைபயன்மிக்க தொடர்பாடல்

தொடர்பாடல் என்பது குறிப்பிட்ட ஊடகமொன்றை பயன்படுத்தி

தகவல்களை அல்லது செய்திகளை அனுப்புகின்ற செயற்பாடாகும்.

இங்கு பெறுபவர்களினால் தகவல் பெறப்பட்டு அனுப்புவோருக்கு

பின்னூட்டல் ஒன்று வழங்கப்படுகின்றது. எல்லா சந்தர்ப்பங்களிலும்

தொடர்பாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு அனுப்புபவர் தகவல் மற்றும்

குறிப்பிட்ட அனுமானிக்கப்பட்ட பெறுபவர் ஆகிய கூறுகள் ஆகியன

அவசியமாகின்றது. எவ்வாறெனினும் தகவல் அனுப்புகின்ற

வேலையிலேயே இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தொடர்பாடலில் உரையாடல், பாடல்கள், உரைநடை , சப்த ரீதியான

தெளிவுபடுத்தல்கள், அங்க அசைவுகள், சைகைகள், தொடுகைகள்,

பார்வைகள், சித்திரங்கள், வரைபடங்கள் மற்றும் எழுத்தாவனங்கள்

போன்ற வாய்மொழியற்ற ஊடகங்களையும் காணமுடிகின்றது.

நபர்களுக்கிடையிலான ஒருங்கிணைவு ஒத்துழைப்பும்

தொடர்பாடலைப் பொறுத்தமட்டில் அவசியம். அதே போன்று

தொடர்பாடலில் காணப்படக்கூடிய சில பொதுவான தடைகளையும்

குறிப்பிட முடியும். இவற்றில் பிரதானவையாக தகவல் அனுப்பப்படும்

போது அது தேவையை விட பெரியதாக காணப்படுவதாகும்.


தகவலானது தெளிவானதாகவும் மிக சுருக்கமானதாகவும் காணப்பட

வேண்டும்.

மேலும் தொடர்பாடல் என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு

இடத்திற்கு தகவலைக் கடத்துதலாகும். இது பொதுவாக

மொழியூடாகவே நடைபெறுகின்றது. தகவல் தொடர்பானது ஒரு

மூலத்திலிருந்து மற்றொன்றுக்கு செய்தியை மாற்றுவதாகும்.

குறியீடுகள் மற்றும் செமியாடிக் விதிகளின்படி இருவர்

அடையாளங்களை வைத்தும் தொடர்பு கொள்ளலாம். பேச்சு, எழுத்து

அல்லது குறியீடுகளின் மூலம் செய்திகள், கருத்துகள், சிந்தனைகளின்

பரிமாற்றம் அல்லது அறிவித்தல் தொடர்பு கொள்வதைக் குறிக்கின்றது.

இந்த இருதரப்பட்ட நடை முறையின் மூலம், சிந்தனைகள், உணர்ச்சிகள்

மற்றும் எண்ணங்கள் ஒரு பொதுவான உடன்பாட்டுக்குள்ளான திசை

அல்லது இலக்கை நோக்கி செல்கின்றன. தொடர்பு கொள்ளுதலை ஒரு

கல்வி முறையாகப் பார்க்கையில் அதற்கு நீண்ட வரலாறு உண்டு.

மனிதன் ஒரு தொடர்பாடும் விலங்கு எனக் கூறலாம். மனிதன்

எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ

எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது

அங்கத்தவரிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய

ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல்

முறைகள் உதயமானது. தகவல் தொடர்பு என்பது அனுப்புனர் ரகசிய


குறியீடுகளாகச் செய்தியைத் தொகுத்து பெறுனருக்கு அனுப்புவது

ஆகும். அனுப்பப்பட்ட செய்தியை சரி செய்து புரிந்து கொண்ட பின்னர்

அதற்கு மறுமொழி கூறுகிறார் பெறுநர். தொடர்பு கொள்ளும்

அனைவரும் பொதுவான ஒரு தொடர்புக் கொள்ளும் எல்லையை

வைத்திருக்க வேண்டும்.நமது செவியில் விழுகின்ற பேச்சு, பாட்டு,

குரலொலியைக் கொண்டும், வார்த்தைகள் இல்லாமல் உடல்

அசைவுகளாலும், சைகை மொழியினாலும், குரலொலியின்

மொழியினாலும், தொடுதல், கண்களை நேராக நோக்குதல், எழுதுதல்

கொண்டும் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு கருத்தை ஒதுக்கி அதனி பொதுவான உடன்படிக்கைக்கு வர

மற்றவருக்குத் தெரிவித்தல் தொடர்பு கொள்ளுதலாகும். இதற்கு

கேட்கும் திறன், கூர்ந்து கவனிக்கும் திறன், பேச்சுத் திறன், கேள்வி

கேட்கும் திறன், ஆராயும் திறன், மதிப்பிடும் திறன், தான் நினைப்பதை

தன்னிடமும், மற்றவரிடமும் உணர்த்தும் திறன் வேண்டும். தகவல்

தொடர்பு கொள்ளுதல் மூலம் ஒத்துழைப்புடன், இணைந்து செயல்பட

முடிகிறது[2]. அளவுக்கு மீ றிய செய்திகள் அல்லது குழப்பமான

செய்திகள் அனுப்புவதால் தொடர்பு கொள்ளுவதில் தடைகள்

ஏற்படுகின்றன. தொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின்

அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில்

மனிதன் அங்க அசைவுகள், மேளங்கள், நெருப்பு மூலம் தொடர்பாடலை

மேற்கொண்டான். உலகத்தில் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள்


தோன்றிய காலம் தொடக்கம் இன்று வரை, தங்களுக்கு இடையில்

கருத்துக்களையும், செய்திகளையும், உணர்வுகளையும்

பரிமாறிக்கொண்டே வருகின்றன. பரிணாமவளர்ச்சியின் தொடர்ச்சியாக,

இன்று மனித இனம் பல வகையான ஊடகங்கள், ஊடக உத்திகள்,

ஊடகக்காவிகள் என்பவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய

தொடர்பாடல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றது.

ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்வும், தொடர்பாடலினால்

மற்றவருடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதற்குப் பல

உதாரணங்களைக் கூறலாம். ஒருவர் தன்னடைய கருத்தை, அல்லது

அனுபவத்தை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள, இன்பமான குடும்ப

வாழ்வு வாழ்வதற்கு, சிறப்பாகத் தங்களுடைய தொழில், மற்றும்

சேவைகளைச் செய்வதற்கு எனப் பல காரணங்களுக்காக, குழந்தைகள்

முதல் வளர்ந்தவர்கள் வரை, தொடர்பாடல் பற்றிய அடிப்படை அறிவு

அத்தியாவசியமாகின்றது. அதேவேளையில், தொடர்பாடலை ஒரு

தொழிலாக கொண்ட ஊடகவியலாளர்கள், அலுவலகங்களில் மக்கள்

தொடர்பாளர்களாக இருப்பவர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள்,

வியாபாரத்துறையில் இருக்கும் சந்தைப்படுத்தல் அலுவலகர்கள்,

ஆய்வாளர்கள் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்குச் சாதாரண

பொதுமக்களிலும் பார்க்கத் தொடர்பாடல் பற்றிய அதிக புரிந்துணர்வு

அத்தியாவசியமாகின்றது. உடல் அசைவுகளாலும், குரலாலும்,

சொற்களாலும் மனிதனால் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள முடிகிறது.


தொடர்பு கொள்வதன் மூலம் ஏற்படும் தாக்கம், ஆராய்ச்சிகளில்

தெரிவருகின்றன. அன்றாட வாழ்வில் தொர்பாடல் பற்றிய நுட்பங்களை

அறிந்து, அதனை திறம்பட நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாம்

செய்யும் அனைத்துக் காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிக்க

முடியும். பேசுதல் மற்றும் எழுதுதல் என்பன மானுடத் தொடர்பாடலில்

காணப்படக்கூடிய பிரதானமான பண்புகளாகும். இதற்காக எழுத்துக்கள்

குறியீடுகள் போன்றன பயன்படுத்தப்படுகின்றன. சொற்கள் மற்றும்

மொழி என்பது எல்லா நாடுகளையும் பொறுத்த மட்டில் ஒரு

பொதுவான விடயமாகும். மனிதன் தனது குழந்தை பருவம் முதல்

ஏதேனும் மொழி அல்லது சில மொழிகளை பயின்று கொள்வதில்

ஆர்வம் காட்டுகின்றமை ஒரு பொதுவான விடயமாகும். நபர்களை

அண்மித்து காணப்படும் ஏனைய நபர்கள் பயன்படுத்தும் சப்தங்கள்

பேசுகின்ற முறை மொழிகளில் வெளிப்பட்டிருக்கின்றமையை

அவதானிக்கலாம். இது வரையில் உலகில் பல்லாயிரககணக்கான

மொழிகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வட்டில்


இடம்பெறும் உரையாடல்கள், அலுவலகத்தில் இடம்பெறும்

உரையாடல்கள், பாடசாலைகள், வியாபார நிறுவனங்கள், தூரதேசப்

பயணங்ககள் என எல்லாச்சந்தர்பங்களிலும், நாம் மற்றவர்களுடன்

தனியாகவோ, அல்லது குழுவாகவோ தொடர்பாடலை

மேற்கொள்கின்றோம். மேற்கூறப்பட்ட சந்தர்பங்கள் எல்லாமே

எமக்கொல்லோருக்கும் நன்கு தெரிந்தும், நாம் எல்லாவிதமான

தொடர்பாடலையும் வெற்றிகரமாக மேற்கொள்கின்றோமா? எங்கள்


ஒவ்வொருவரின் சொந்த வாழ்க்கை அனுபவத்திலும் தொடர்பாடல்

என்பது முக்கியமான ஒரு விடயம் என்பதற்குப் பல சான்றுகள்

இருக்கும், அவற்றை ஞாபகப்படுத்தி, ஆராய்ந்து, உண்மையை அறிந்து,

இனிவரும் காலங்களில் திறமையான தொடர்பாடல் மூலம்

காரியங்களை வெற்றிகொள்வோம்.

இன்று உலகின் அனேக நாடுகளில் இடம்பெறுகின்றதாகக்

கூறப்படுகின்ற ஆட்சி முறையில் (ஜனநாயக ஆட்சி என்று

சொல்லப்படுவதில்), எல்லா மனிதர்களுக்கும் தகவல்களை அறியும்

சுதந்திரம் உண்டு. இது அடிப்படை மனித உரிமை எனக்

கொள்ளப்படுகின்றது. போலி ஜனநாயகவாதிகள் தகவல் அறியும்

சுதந்திரத்தை வலியுறுத்துபவர்கள். அதேவேளையில் பொய்யான

தகவல்களை ஊடகக்காவிகளினூடாக மக்கள் மத்தியில் பரப்பி, தமது

அரசியல், வியாபார நலன்களைப் பெற்றுக் கொள்பவர்களாகவும்

இருக்கின்றார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அன்றாட

வாழ்வில் எடுக்கப்படுகின்ற முடிவுகள், செயற்பாடுகள் என்பன,

ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையிலேயே

அமைகின்றன. ஏனெனில், மற்றவர்களில் தங்கிவாழும் இன்றைய

பொருளாதார, அரசியல் முறைமைகள், முடிவுகள் எடுப்பதற்குத்

தகவல்கள் இன்றிமையாதவை என்ற ஒரு பலவனமான


ீ நிலையில்

மக்களை வைத்துள்ளது. சரியான பல தகவல்களைக் கொண்டவர்

பொதுவாகத் தன்னுடைய முடிவுகளைச் சரியாக எடுப்பதையும்,


ஏனையவர்கள் தங்களின் முடிவுகளால் சில சந்தர்ப்பங்களில்

துன்பத்திற்கு ஆளாகுவதையும் அனுபவத்தில் கண்டிருக்கின்றோம்.

தகவல்கள் சரியாக கிடைக்காது துன்பப்படுபவர்களுக்கும்,

தகவல்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாது துன்பப்படுபவர்களுக்கும்,

தொடர்பாடல் பற்றிய அறிமுகம் பெரும் உதவி புரியும். அன்றாட

வாழ்வில்; முக்கியமான ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வதும், புரிந்து

கொள்வதும் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான செயற்பாடு

ஆகும். இது இன்பமான குடும்ப வாழ்விற்கு வழிவகுக்கும்.

மனிதர்களுக்கு ஏற்படுகின்ற தேவைகள், அவர்களைச் சிந்திக்கத்

தூண்டுகின்றது. மனிதர்களில் சிலர் சிந்தித்துச்; செயலாற்ற

முனைகின்றனர். அவர்கள் நாளுக்கு நாள் தங்களுடைய

பலவனங்களைத்
ீ தாம் வாழ்ந்த, வாழுகின்ற சூழலின் அனுபவத்தின்

மூலம் அறிந்து, தங்களுடைய அனுபவத்தையும், உணர்வுகளையும்,,

செய்திகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள

முயற்சிக்கின்றார்கள்;. அதன் விளைவாகவே, பல்வேறு புத்தகங்கள்,

சஞ்சிகைகள், ஒலி, ஒளி நாடாக்கள், இறுவட்டுக்கள் வெளிவருகின்றன.

தனிநபர் ஒருவர் தன்னுடைய தொடர்பாடலை சுற்றியுள்ள சூழலைப்

புரிந்து கொள்வதற்கு, தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, செய்தியைச்

சொல்வதற்கு, சிந்தனையைத் தெரிவிப்பதற்கு, மற்றும் அனுபவத்தைப்

பகிர்ந்து கொள்வதற்கு முக்கிய தேவைகளுக்காக பயன்படுத்துகின்றார்.


பின்னைய காலங்களில் மெல்ல மெல்ல மொழிகள் விரிவாகத்

தொடங்கின. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில்

இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின்

தேவையுடன் உருவாக்கப்பட்டது. ஒரு உரையாடல் என்பது இருவருக்கு

அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு இடையே கருத்து பரிமாற்றம்

ஏற்படுகின்ற வழக்கு ஆகும். வார்த்தைகள் இல்லாமல் செய்திகளை

அனுப்பிப் பெறுவதை சொற்கள் இல்லாத தொடர்பு என்று கூறுவர்.

அப்படிப்பட்ட செய்திகளை சைகைகள், உடல் அசைவுகள், தோரணைகள்,

முகபாவனைகள்,நேர் கொண்ட காணல் மூலம் அல்லது உடை, சிகை

அலங்காரங்கள், கட்டிடக்கலையியல் போன்ற பொருட்கள் மூலம்

அல்லது குறியீடுகள் (இன்போ கிராபிக்ஸ்) மூலம் அல்லது

இவையனைத்தையும் சேர்த்து நடத்தையின் மூலம் தொடர்பு

கொள்ளலாம்.சொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல்

மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாகும்.

உரையாடல் அல்லது கலந்துரையாடல் என்பது இருவர் அல்லது

பலருக்கு இடையேயான நேரடி அல்லது பிற ஊடக கருத்துப்

பரிமாற்றம் ஆகும். அன்றாட வாழ்விலும், நீதிமன்றம், சட்டமன்றம்,

ஊடகம் போன்ற முக்கிய சமூக நிறுவனங்களிலும் உரையாடல் ஒரு

முக்கியக் கூறாக உள்ளது. நெறிப்படுத்தப்பட்ட உரையாடல் ஒரு

மெய்யியல் துறை ஆகும். குரலின் பண்பு, உணர்ச்சி, பேசுகின்ற பாணி

அடங்கிய குரலொலியின் மொழியைக் கொண்டும் அல்லது சந்தம்,

ஓசை நயத்துடன் கூடிய பேச்சு, அழுத்தம் ஆகியவை கொண்டும்


சொற்கள் இல்லாமல் நாம் தொடர்பு கொள்ளலாம். எழுத்தில் கூட இந்த

அம்சம் உண்டு. அவை கையெழுத்தின் அழகு, இரு சொற்களுக்கு

மத்தியில் உள்ள இடைவெளி, அல்லது உணர்ச்சி குறியீடுகளின்

உபயோகம் ஆகும். ஆங்கிலத்தில் கலவை வார்த்தையான

இமோட்டைகான் நமது உணர்ச்சிகளைக் காட்டுகின்ற குறியீடுகளைக்

குறிக்கின்றது.

காட்சித் தொடர்பியல் என்பது காட்சி ஊடகங்கள் மூலம் தொடர்பு

கொள்ளுதலாகும். இதன் வாயிலாக சிந்தனைகளும் செய்திகளும்,

படித்து அல்லது பார்த்து புரிந்துகொள்ளும் வடிவங்களாக காண்பிக்க

படுகின்றன. இது குறிகள், அச்சுக்கலை, ஓவியம், வரைகலைப் படிவம்,

படங்கள் மூலம் விவரித்தல் போன்ற இரண்டு பரிமாணம் கொண்ட

வடிவங்களில் தன்னை இணைத்து உள்ளது. இது முழுமையாக பார்வை

சார்ந்தே வருகிறது. இங்கு, தகவல் தொடர்பு கொள்ளுதல் பார்ப்பதினால்

நேரிடுகிறது. இது கண்கள் பார்த்து கிரகிக்கும் செய்தியையும்

எழுத்துகளையும் எளிதாக மனிதனை சென்றடைய வைப்பது

மட்டுமல்லாமல் அவனை எளிதாக அந்த செய்தியை நம்பவும்

வைக்கிறது. இது செய்தியை காட்சி வடிவில் கொண்டு சேர்க்கும்

முறையாகும். ஒருவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்தல் என்னும்

போது, தான் உணர்ந்து தெளிந்தவற்றைப் பிறருக்கு உதவும் வகையில்

வெளிப்படுத்தற் செயற்பாடாகும். இது, சிறிய அளவில் இடம்பெறும்

போது நனிநபருடனான உரையாடல்களாகவோ, அல்லது குழு ரீதியான


கலந்துரையாடல்களாகவோ, அல்லது ஊடகக்காவிகளுடான மக்கள்

தொடர்பாடற் செயல்முறையாகவோ அனுபவத்தைப் பகிர்ந்து

கொள்வது இடம்பெறுகின்றது.

மனித இனமானது சிறு சிறு தனிக் குழுக்களாக உலகம்

முழுவதும் பரவியிருந்த வேளையில் தொடர்பாடலின் தேவை என்பது,

குறிப்பிட்ட குழுவின் தேவையை மட்டும் திருப்தி செய்வதாக இருப்பது

போதுமானதாக இருந்திருக்கும்;. ஆனால், இன்று மனிதக்குழுக்கள்;

பல்கிப்பெருகி, மனித குழுக்களுக்கு இடையிலான தொடர்புகள் விரிந்து,

ஒவ்வொரு குழுக்களும், விரும்பியோ விரும்பாமலோ, ஒரு குழுவானது

மற்றைய குழுவில் பொருட்கள், சேவைகள் என்பவற்றுக்காக ஒன்றில்

ஒன்று தங்கியிருந்து, வாழ் நாட்களைக் நகர்த்த வேண்டியுள்ளது. இதன்

காரணமாக, ஒரு வேலையை செய்வதற்காக, ஒவ்வொருவரும்

தங்களைச் சுற்றி என்ன நடைபெறுகின்றது என்ற நளாந்த

விடயங்களை அறியவேண்டியிருப்பது தவிர்க்க முடியாததாகின்றது.

இது மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதர்களும் தங்களுடைய அறிவினை

வளர்த்துக்கொள்வதற்கும், கிடைக்கும் ஒய்வு நேரத்தை

ஒவ்வொருவரும் தங்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் செலவு

செய்யவும், தொடர்பாடற் செயல்முறையும், தொடர்பாடல் சார்ந்த ஊடக

உத்திகளும் அவசியமாகின்றன.

இன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல்

தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றோம். இதன் உச்சகட்டமாக


இணையத்தைப் பயன்படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம்

தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்தெறிந்து விட்டது

எனலாம். தொடர்பாடலில் உள்ள தடைகள் என்னவென்றால்

உணர்வுகள், உள்ளடக்கத்தை தெளிவாகப் புரியாமை, கவனத்தை திசை

திருப்பும் காரணிகள், நம்பிக்கைகள், நேரம் போதாமை, பெளதீகவியல்

காரணிகள், மருத்துவ ரீதியான காரணிகள், மொழி தெரியாமை,

வேண்டும் என்று தவறான தகவலைப் பரப்பல் என்ற காரணிகள்

மனித தொடர்பாடலில் பாதிப்பை ஏற்படுத்தவல்லன. தொடர்பு

கொள்ளுவதில் ஒரு சில வகைகளின் எடுத்துக் காட்டுகள்

என்னவென்றால் அறிவியல் தொடர்பாடல், உத்திநோக்குத்

தொடர்பாடல், எளிதாக்கப்பட்டத் தொடர்பாடல், தொழில்நுட்பத்

தொடர்பாடல், மீ ப்பொலிவுத் தொடர்பாடல், வரைகலைத் தொடர்பாடல்,

வன்முறையற்ற தொடர்பாடல்களே ஆகும். பொதுவாக பின்வரும்

காரணங்களே தொடர்பாடல் நடைபெறுவதை ஊக்குவிக்கின்றன. அவை

எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள, திறமைகளை

மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள,

பொழுதுபோக்கு மற்றும் நேரம் செலவிடலுக்காக, மேலும்

மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த ஆகும். இன்றைய

உலகின் நவன
ீ கண்டுபிடிப்புக்களில் மனிதனுக்கு மிகவும்

இன்றியமையாத ஒன்றாக மாறியிருப்பது தொடர்பாடல் துறையாகும்.

முழு உலகையும் ஒரு உள்ளங்கைக்குள் அடக்கிவிடும் அளவிற்கு

இன்று தொடர்பால் சாதனங்களின் வளர்ச்சி மேம்பட்டுள்ளதை


யாராலும் மறுக்க முடியாது. அதேபோன்று தொடர்பாடல் துறையின்

உச்சகட்டமான (சர்வதேச வலையமைப்பு) பாவனையும் மக்கள்

மத்தியில் சிறுவர்கள் முதற்கொண்டு முதியவர்கள் வரையில் மிகவும்

மலிந்து காணப்படுகிறது. முன்னொரு காலத்தில் இன்டர்நெட் என்றால்,

சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.

இன்றைய தொடர்பாடல் நிலையின் ஆதிக்கம்

ஆனால் இன்று அதன் சந்தைப் பெறுமதி வெகுவாகக் குறைந்து

கையடக்கத் தொலைபேசிகளிலேயே நாள் முழுவதும் இன்டர்நெட்

பாவிக்கக் கூடிய அளவிற்கு மலிந்து காணப்படுகிறது. இந்த இன்டர்நெட்

மற்றும் நவன
ீ தொடர்பாடல் வசதிகள் போன்ற மனிதனின்

கண்டுபிடிப்புக்கள் எதனை நாம் எடுத்தக் கொண்டாலும், அதில்

மனிதனுக்கு அதிகம் நன்மைகள் இருப்பதைப் போன்று, பல

தீயவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நவன


ீ தொடர்பாடல்

வசதிகளால் ஒரு காலத்தில் தொலை தூரத்தில் இருந்த எத்தனையோ

விடயங்கள் இன்று நம் கைக்கெட்டும் தூரத்தில் காணப்படுகின்றன.

இதனால் நன்மைகளும் உண்டு, அதேபோன்று சில சமூகத்தீமைகளும்

உள்ளன. இன்டர்நெட் யுகத்தின் அதீத வளர்ச்சியில் பேஸ்புக் (Facebook)

சமூக வலையமைப்பினை ஒரு மைல்கல்லாக குறிப்பிடலாம்.


அந்தளவிற்கு பேஸ்புக் ஆனது இன்று உலகின் மூலை முடுக்கெங்கும்

விரிந்து வியாபித்துக்காணப்படுகின்றது. இளைஞர்களின் இணையத்தள

உலகில் பேஸ்புக் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறதென்றால்,

அது மிகையாகாது. பேஸ்புக் வலையமைப்பை பாவிக்காதவர்கள்

எவரும் இல்லை என்று சொல்லக் கூடியளவிற்கு அதன் பயன்பாடு

இன்று அதிகரித்துக் காணப்படுகிறது.

உலகம் இன்று தொடர்பாடல் மூலம் சுருங்கி விட்ட தாகவும்,

கிராமமாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் நவன


தொடர்பாடல் விருத்தியின் உச்சமானது உலகை ஒரு வடாக


மாற்றியுள்ளது. அதாவது உலகில் நடக்கும் சகல நிகழ்ச்சிகளும்

வட்டிலுள்ள
ீ அனைவருக்கும் உடனுக்குடன் தெரிந்துவிடும். இந்த

அமைப்பே இன்று உலகில் ஏற்பட்டு வருகிறது. உலகில் எப்பாகத்தில்

நிகழும் விடயமானாலும் உடனுக்குடன் தொடர்பாடல் மூலம் இன்று

உலகம் முழுவதும் பரவி விடுகிறது. பேச்சு, காட்சி, செய்தி, படங்கள்,

புள்ளி விபரக்கொத்துக்கள் போன்றவற்றினை ஒருசில செக்கன்களில்

உலகின் எப்பாகத்திற்கும் உடன் அனுப்பக்கூடிய வாய்ப்புக்கள்

காணப்படுகின்றன. இன்று செய்மதி பற்றியும் இணையம் பற்றியும்

செல்லூலர்கள் பற்றியும், Digital Sound பற்றியும், Computer பற்றியும் பேசும்

காலமாக மாறிவிட்டது. Telephone, Fax, Telex, Tele Fax, E-mail போன்றவற் றைத்

தெரியாதவர்கள் உலகில் எப்பாகத்திலும் இருக்க மாட்டார்கள் என்ற

அளவிற்கு தொடர்பாடல் அதன் வளர்ச்சியின் எல்லையைக்


கண்டுகொண்டு விட்டது. நவன
ீ உலகில் தொடர்பாடல் சாதனங்கள்

குரல், செய்தி, காட்சி என்பவற்றை காவிச் சென்று வழங்கு

வனவாகவுள்ளன. தகவல்கள, படங்கள் போன்றவற்றை ஒருசில

வினாடிகளில் உலகின் ஒரு பாகத்திலிருந்து மறுபாகத்திற்கு

அனுப்புவது தற்போது நடைமுறைச் சாத்தியமாகிவிட்டது. செய்திப்

பத்திரிகைகள், விளம்பரங்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப் படம்

என்பன பிரதான தொடர்பாடற் சாதனங்களாக விளங்குகின்றன. இவை

மக்களின் வாழ்வில் பாதகமான அல்லது சாதகமான விளைவுகளைத்

தோற்றுவிப்பனவாகவுள்ளன. தொலைபண்ணி (Telegraph), Telex,

தொலைபேசி, Radar, Fax என்பனவும் இவற்றுள் அடங்குகின்றன.

வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று ‘உறவுகள்’. மனிதர்கள்

தங்களுடைய ஏதோ ஒரு தேவையினை பூர்த்தி செய்வதற்கு ஒருவர்

ஒருவருடன் எப்படியோ தொடர்பு பட்டிருக்கவேண்டும். எந்த

மனிதனிடம் உறவுகள் சமநிலையில் காணப்படுகின்றதோ அவனே ஒரு

ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்கின்றான் எனலாம். நாம்

மற்றவருடன் எம்முடைய கருத்துக்களை, எண்ணங்களை, உணர்வுகளை

வெளிப்படுத்துவதற்கு தொடர்பாடல் திறன் முக்கியமான ஒன்று.

தொடர்பாடல் அடக்குமுறையானதோ அல்லது கட்டளையிடுவதான

வார்த்தைகளோ இல்லாதிருக்க வன்முறையற்ற தொடர்பாடலை

கற்றுக்கொள்ளலாம். எப்பவும் எமது அறிவால் மட்டும் கதைக்காது

இதயத்தால் ஒன்றித்து அறிவால் உணர்ந்து மற்றவருடன் பேசக்


கற்றுக் கொள்ளவேண்டும். நாம் மட்டும் எந்நேரமும்

பேசிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் மற்றவர்கள் என்ன

பேசுகின்றார்கள், என்பதை சற்று பொறுமையுடன் இருந்து கேட்டல் மிக

நல்லது. நாம் மற்றவர்களின் உணர்வுகளை எண்ணங்களை புரிந்து

அவர்கள் உணர்வது போல உணர்ந்து அதை வெளிப்படுத்துவதே

இதுவாகும். இதனை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு எங்களுடையதாகக்

கடைப்பிடிக்கின்றோமோ அது மிக நல்லது. நாம் அன்றாடம்

பழகுபவர்களிடம் நம்பிக்கைக்குரியவர்களாகவே இருக்க வேண்டும்.

எச்சந்தர்ப்பத்திலும் இங்கு கேட்டு அங்கு சொல்வதை அல்லது அங்கு

கேட்டு இங்கு சொல்வதையும் மற்றவர்களின் பின் குறை கூறுவது

போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அனைவரும் பெறுமதியானவர்கள்

என நினைத்து அன்பு செய்து மதித்து பழக வேண்டும்.

இவ்வாறு உறவுகளை ஆழப்படுத்துவதற்கு நமக்குள் பல

பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும். ஆரோக்கியமான மனித

சமுதாயமாக நாம் வாழ வேண்டுமாயின் எம்முடைய உறவுகளை

முதலில் ஆழப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய

மக்களிடையே உள்ள தொடர்பாடல் பல முன்னேற்றங்களை

கொண்டிருந்தாலும், மக்களிடையே உள்ள தொடர்பை

வலுபடுத்தவில்லை என்பதேயாகும். அதனால் நாம் எப்பொழுதும்

மக்களிடையே அல்லது உறவினர்களிடையே நல்ல தொடர்பை


வளர்த்து கொள்ள ஒரு நல்ல தொடர்பாடல் இருத்தல் அவசியமாகும்.

மனிதனின் வாழ்கையில் தொழில் நுட்பம் மிகுந்து கொண்டிருந்தாலும்

மனிதர்களிடையே உள்ள தொடர்பாடல் மிக அவைசியமானதாக

விளங்குகிறது.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீ தை

மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

அகவே தொடர்பு என்பது ஒருவர் இன்னொருவரிடம் கூறும் ஒரு

கருத்துகளே ஆகும். நாம் நம் இறைவனிடமோ அல்லது இறைவன்

நம்மிடமோ தொடர்பு கொள்ளும் முறை தொடர்பாடல் என்று

கூறினால் அது மிகையாகாது.

You might also like