You are on page 1of 8

(/)

 
tps://www.facebook.com/Kaanpiyam)(https://www.youtube.com/channel/U

உளவளத்துணை
நுட்பங் களைப் பயன் படுத்தி
கற்பித்தல்

Category: உளவியல் (/index.php/2020-08-15-12-05-


50/2021-02-19-05-16-57)

<
Hits: 3207
 ஒருவருக்கு
ஏற்படுகின் ற

பிரச்சினைகளை, குறிப்பாக உளவியல் சார்ந்த


பிரச்சினைகளை தகுந்த முறையில்
அணுகுவதையும், கையாளுவதையும் அதற்கான
தீர்வை நோக்கி வழிப்படுத்தப்படுவதையும் நாம்
ஆங் கிலத்தில் COUNSELLING' என் று
அழைக்கின் றோம். தமிழ் மொழியில் இதனை
விளக்குவதற்கு பல சொற்கள் புழக்கத்தில்
இருக்கின் றன.
 தென் னிந்தியாவிலும் இலங் கையிலும்
கூடுதலாக 'உளவளத் துணை' எனும் சொற்பதம்
பயன் படுத்தப்படுகிறது. இருப்பினும்
தென் னிந்தியாவில் இருந்து வெளிவரும் சில
உளவியல் சார் புத்தகங் களில் இது
ஆற்றுப்படுத்தல்' எனும் சொல்
பயன் படுத்தப்படுகிறது. தேசிய கல்வி
நிறுவகம், திறந்த பல் கலைக்கழகம்
என் பன 'வழிகாட்டலும் ஆலோசனை
வழங் கலும்' என் று பயன் படுத்துகின் றனர். இது
எந்தளவு பொருந்தும் என் பது ஒரு
புறமிருக்க, யாழ்பல் கலைக் கழக கல்வித்துறைப்
பேராசிரியர் கலாநிதி சபா.ஜெயராசா அவர்கள்
இதற்கு 'சீர்மியம்' எனும் சொல்லை அறிமுகம்
செய் து வைத்துள்ளார். உளவளத்துணை என் பது
ஒருவரில் புதைந்து கிடக்கின் ற ஆற்றல் களையும்
வளங் களையும் வெளிப்படுத்தும் முறையைக்
குறிப்பிடுவதால் இங் கு இச்சொல்லே
பயன் படுத்தப்படுகின் றது.

நல்ல மனைவியை வறுமையிலும், சிறந்த


நண் பனை கஷ் ட காலத்திலும், சுற்றத்தவனை
துன் பத்திலும் அறியலாம் எனும் தமிழ்
பழமொழியும் உண் டு. எழுத்தாளர்
மு. வரதராஜன் அவர்கள்  'ஈயும் எறும்பும் கூட
இன் பத்தில் உதவும் ஆகவே துன் பத்தில்
உதவுவோரைத் தேடு' என் று தனது நாவலில்
குறிப்பிட்டுள்ளார். ஆழ்ந்த விருப்பங் கள்
ஆசைகள் , உணர்ச்சிகள் ஆகியவற்றைப்பகிர்ந்து
கொள்வதற்கு வாழ்வில் ஒருவர் இருப்பது மிக
அவசியமாகிறது. இப்படியான தேவைகள்
உடைய மாணவர்கள் எம்மைத் தேடி வரும் போது
அவர்களுக்குள்ள உளவியல் சார்ந்த
பிரச்சினைகளை பொருத்தமான முறையில்
அணுகிக் கையாண் டு பொருத்தமான தீர்வை
நோக்கிச் செல்ல உதவுவதற்காக
உளவளத்துணைச் செயற்பாட்டில் பல நுட்பங் கள்
கையாளப்படுகின் றன. இவை
உளவியலாளர்களின் கொள்கைக்கேற்ப
கையாளப்படும் முறைகளிலும் நுட்பங் களிலும்
மாற்றங் கள் ஏற்படலாம். உதாரணமாக
உடனிருத்தல், உன் னிப்பாக
செவிமடுத்தல், ஒத்துணர்வு வழங் கல் போன் றன
முக்கிய நுட்பங் களாகப்
பயன் படுத்தப்படுகின் றது. பிள்ளை
மையக்கல்விக்கு வலுச் சேர்த்த கார்ல்ரொஜெர்ஸ்
அவர்களுடைய நுட்பவியல் கள் கூடுதலாகப்
பயன் படுத்தப்படுகின் றன. பிள்ளைகள்
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட உலகம் இருக்கும்
அந்த உலகினுள் புகுந்து ஆசிரியர் அதை தனது
பழக்கமான இடமாக ஆக்கிக்கொள்ளும்போது
பிள்ளைகளைப் புரிந்து
கொள்ளல் ' இலகுவாகும். ஒத்துணர்வு என் பது
எம்மை நாடி வரும் மாணவருடைய தனிப்பட்ட
உலகத்திற்குள் புகுந்து அதை ஆசிரியர் தனக்குப்
பொருத்தமான இடமாக்கிக் கொள்வதுதான்
ஒத்துணர்வு EMPATHY என ரொஜெர்ஸ்
குறிப்பிடுகின் றார். 'ஜோணுக்கு லத்தீன் மொழி
கற்பிக்கும் ஆசிரியருக்கு லத்தீன் மொழியுடன்
ஜோணையும் அறிந்திருத்தல் அவசியம்' எனும்
ஜோன் டூயியின் கருத்து முக்கியம்
பெறுகிறது. பிள்ளையை ஒத்துணர்வுடன்
விளங் கிக்கொள்ளலே இங் கு முதற்கண்
முன் னெடுக்கப்படுகின் றது.

 உளவளத்துணை நுட்பங் களை கற்பித்தலில்


பயன் படுத்தும் போது வினைத்திறன் மிக்க
ஆற்றல் விளைவுகள் கண் டறிப்பட்டுள்ளதாக
லொயோலா பல் கலைக்கழக உளவியற்
பேராசிரியர் சார்ஸ் . எ.கரன் தெளிவாகக்
குறிப்பிட்டுள்ளார். பேரா.கரன் அவர்கள்
உளவியற்துணையை பின் பற்றிய
கற்றல் - கற்பித்தல் செயல் முறை "SARD"எனும்
குறியீட்டினால் குறிப்பிட்டுள்ளார். இதன்
விளக்கமாக அமைவது

S-பாதுகாப்பைக் குறிப்பிடும்.

A-இது கவனயீர்ப்பையும், கற்கும் போது


ஏற்றமடையும் எழுபலத்தையும்
குறிப்பிடுகின் றது.

R-இது நினைவிற் பதித்தலையும் தெறித்தலையும்


குறிப்பிடுகிறது.

D-வேறுபிரித்தலை இது குறிப்பிடுகிறது.

 மொழியின் ஓர் அலகு மற்றையவற்றுள் எவ்வாறு


தொடர்பு கொண் டுள்ளது. எவ்வாறு
வேறுபட்டுள்ளது என் பன வேறு
பிரித்தறியப்படும். வகுப்பறைக்கு வெளியிலும்
மொழியைப் பயன் படுத்தும் திறனும் இதைத்
தொடர்ந்து வளர்ச்சியடைகின் றது. பேரா.கரன்
உளவளத்துணை நுட்பங் களை மொழிக்
கற்பித்தலில் பயன் படுத்தி பயனுள்ள
விளைவுகளைக் கண் டறிந்து அந்த தமது
நுட்பமுறைக்கு 'சமுதாய மொழிக்கற்றல்' என் று
அழைத்தார்.

பேரா.கரனுடைய மாணவராகிய லாபோர்ஜ்


என் பவர் இத்துறையில் மேலும் விரிவான
ஆய் வுகளை மேற்கொண் டு' சமூக செயல்
முறையாக மொழி' எனும் கோட்பாட்டை
முன் வைத்தார். தொடர்பாடல் என் பது
வெறுமனே செய் தி பரிமாறல் என் பதிலிருந்து
உயர்வானதென லாபோர்ஜ்
விளக்குகின் றார். ஒரே நேரத்தில்
பொருளாகவும், பொருட்குறிப்பீடாகவும்
அமைதலைச் சுட்டிக்காட்டுகின் றார். கட்ட
மைப்புவாதிகளும் பின் கட்டமைப்புவாதிகளும்
மொழியின் இயல்பினை திறனாய் வுக்கு
உட்படுத்தி யுள்ளனர். சொல் குறிப்பான் என் றும்
அதன் வழியாகச் சுட்டப்படும் பொருள் குறிப்பீடு
என் றும் குறிப்பிடப்படும். இரண் டுக்குமுள்ள
தொடர்புகள் ஆய் வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண் டுக்குமுள்ள
தொடர்புகள் நனவு மனத்துடனா அல்லது
நனவிலி மனத்துடனா இணைந்தது எனும்
சந்தேகமும் எழுகின் றது. நனவிலி மனத்தின்
முக்கியத்துவம் லக்கானால் மொழி பற்றிய
விளக்கத்தில் விபரமாக
எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

 உளவளத்துணை நுட்பங் களுக்கும் கற்பித்தல்


நுட்பங் களுக்குமுள்ள தொடர்பிலே
உளவளத்துணையாளரும் உளவளத்துணை பெற
நாடி வருபவரும் மனமுவந்து
இணக்கமுறுவர். அதே போல் வகுப்பறையில்
ஆசிரியரும் மாணவரும் கற்பதற்கு
இணக்கமுறுவர். உளவளத்துணை நாடி, மன
வெழுச்சி கலந்த மொழியிலே தனது
பிரச்சினையைக் கூறுவார். அதே போல்
மாணவர் ஆசிரியருக்கு கற்றல் தொடர்பான
தனது செய் தியை உணர்ச்சி கலந்த
நிலையிலேயே அளிக்கை செய் வார்.
உளவளத்துணையாளர் உன் னிப்பாக
செவிமடுப்பார். இவ்வாறே ஆசிரியரும்
மாணவர்கள் கூறுபவற்றை கவனமாக
செவிமடுப்பதுண் டு. உளவளத்துணையாளர், உளவளத்துணை
நாடியின் செய் தியை அவரால்
அறிகைப்படுத்தக்கூடிய மொழியில் மீள
உரைப்பார். இது ஒத்துணர்வுப் பதில் களை
வழங் குதல் எனப்படும் இவ்வாறே மாணவர்கள்
ஆசிரியர்கள் வழங் கிய செய் தியை தனது மொழி
நடையில் உணர்வுடன் கூறுவார்கள் .

இவ்வாறே உளவளத்துணை நுட்பங் களை


கற்பித்தல் நுட்பங் களாக மாற்றிப்பயன் படுத்தும்
போது இக்கற்பித்தல் உணர்ச்சியும்
மனவெழுச்சியும் கலந்த நிலையில் மாணவர்கள்
முழுமையான காட்சிக்கு
உட்படுத்தப்படுவதுடன் அவர்களின்
மொழித்திறன் களும் நடத்தைத் திறன் களும்
முழுமையாக நோக்கப்படுகின் றது. இந்த
முறையியல் 2ம் மொழிக் கற்பித்தலுக்குப்
பயன் படுத்தப்படுவதை 'மக்கி' என் பவர், இதை
மொழி மாற்றிப் பொருத்தல் எனும்
எண் ணக்கருவால் அழைத்தார்.

இங் கு மாணவர்களுக்கிடையேயும் மற்றும்


மாணவர் - ஆசிரியர்களுக் கிடையேயும் ஏற்படும்
இடை வினைகள் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கு மிடையேயான இடை
வினைகள் மனவெழுச்சிப் பரிமாற்றங் களோடு
கலந்து நிற்பதனால் வகுப்பறையானது
வினைத்திறன் மிக்க உளவியல் நிலைப்பட்ட
சமுதாயமாக மாற்றமடைகின் றது. இதனால்
மகிழ்வுடன் கற்பதற்கும் தமது கருத்துக்களை
தயக்கமின் றி முன் வைக்கவும் கற்பதற்குரிய
பொருத்தமான சூழல்
ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு செயற்படும்
போது மாணவர்கள் தற்துணிவுடன் ஈடுபாடு
காட்டுவர். இதனால் இடைவினைகள் சமநிலை
உள் ளோரிடமும் நிகழும், தம்மோடு சமநிலை
இல்லாதோரிடமும் நிகழ வாய் ப்பு
ஏற்படுத்தப்படுகின் றது.
 கற்றல் என் பது தகவல் களைத்
திரட்டலும், விளக்குதலும் ஆகிய நுண் மதிச்
செயற்பாடு என் றே மேற்குலகில் நீ ண் ட காலமாக
நிலவி வந்தது. இந் நிலையில் மாணவரது
அகமும், மனவெழுச்சிகளும் ஈடுபடுத்தப்படாத
நிலையை சமுதாய மொழிகற்கும்
செயற்பாட்டினர் சுட்டிக்காட்டுகின் றனர். மேலும்
மேற்குலகில் மரபு வழி வந்த நடத்தை
வாதக்கற்றல் முறை மாணவரின் அகஈடுபாட்டை
முழுமையாக ஈடுபடுத்தாத செயலூக்கம் குன் றி
முழுமையாக இருத்தலும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த
எல்லைப்பாடுகள் , பேரா.கரன் என் பவரின்
உளவளத் துணை நுட்பங் களை கற்றலில்
செயற்படுத்தல் எனும் சமுதாய மொழிக்கற்றல்
செயற்பாட்டினால் மாற்றியமைக்கப்படுகின் றது.

உளவளத்துணை நுட்பங் களை கற்றலில்


படுத்தும் போது மாணவர்களின் வளர்ச்சியோடு
இணைந்த ஐந்து படிநிலைகளை பேராசிரியர்
கலாநிதி சபா.ஜெயராசா பின் வருமாறு
விளக்குகின் றார்.

 1. பிறப்போடிணைந்த படிநிலையில்
பாதுகாப்புணர்வும், பற்றுக்கோடான உணர்வும்
நிலை நிறுத்தப்படுகின் றது.

2. கற்கும் ஆற்றல் முன் னேற்றம்


பெறுகின் றது. பெற்றோரிடம் இருந்து விடுபடும்
சுயாதீனம் ஓரளவு முன் னேற்றம்
அடையத்தொடங் குகிறது.

3. சுயாதீனப் பேச்சு
எழத்தொடங் குகிறது. தமக்குரிய தனித்துவ
வெளிப்பாட்டுத் துலங் கல்
மேலெழத்தொடங் கும். பிறரால் வழங் கப்படும்
கேட்டுக்கொள்ளப்படாத ஆலோசனைகளை
நிராகரிப்புக்கு உள்ளாக்குவர்.

4. திறனாய் வுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்


படிப்படியாக வளர்ச்சி அடையத்
தொடங் குகிறது.

5. இறுதியாக மொழித்தெளிவும்
மொழிநடையியலை மேம்படுத்துவதற்கான
நடைவடிக்கை களும் வளர்ச்சி
அடையத்தொடங் கும். இந்தச் செயல் முறையின்
வளர்ச்சி சிறுவர்களை வளந்தோர் எனும்
நிலைக்கு இட்டுச்செல்லும். மொழிக்கற்றல்
என் பது ஒரு புதிய சமூகத் தொடர்பை
கற்றுக்கொள்ளல் ஆகின் றது. மற்றவர்களுடன்
போட்டியிடுதல் மற்றும் தனிமைப்படல் எனும்
மரபுவழிப் பாடசாலைக்கற்பித்தல் முறைமை
இங் கே தகர்ப்புக்கு உள்ளாகின் றது.

 இக்கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளின் போது


மாணவர்கள் கூறுவதை ஆசிரியர் இலகு
மொழியில் மொழிபெயர்த்துக் கூற ஆசிரியரின்
மொழிபெயர்ப்பை மாணவர்கள் மீள ஒப்பித்துக்
கூறும் செயற்பாடும் மாணவர்கள் சிறுசிறு
குழுக்களாகப் பிரிந்து செயற்பாட்டில்
ஈடுபடலும், தமது உரையாடல் களை பதிவு
செய் தல், பதிவு செய் த உரையாடலை
மொழியின் நோக்கில் ஆய் வு செய் தல், இவற்றின்
இலக்கண விதிகள் பற்றி பகுப்பாய் வு
செய் தல், தமது உணர்வுகளையும்
அனுபவங் களையும் தெறித்து கூறுவதுடன் உற்று
நோக்கலும் செய் வர். இவற்றுடன் ஆசிரியரின்
உரையை உண் ணிப்பாக செவிமடுப்பதுடன்
ஆசிரியரும் கட்டற்ற முறையில்
உரையாடுவதற்கு ஊக்கமளித்தல் போன் ற
செயற்பாடுகளை உள்ளடக்கியதாகவும்
இச்சமுதாய மொழிக்கற்றச் செயற்பாடு
இடம்பெறு வதாகக் குறிப்பிடுகின் றனர்.

 கார்ள் ரொஜெர்ஸினால் முன் மொழியப்பட்ட


உளவளத்துணை செயற்பாட்டை அடியொற்றிய
முறையில் ஆசிரியர் ஈடுபடுவதனால்
மாணவர்களுடன் மனவெழுச்சி சார்ந்த
தொடர்பாடலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு
செயற்படுவது சிறப்பான
விடயமாகின் றது. மாணவர்களின் உணர்ச்சி
கலந்த மொழியை விளங் கிக்கொண் டு ஆசிரியர்
அறிகை நிலை மொழியிலேயே துலங் கலை
வழங் குவார். மாணவர்கள் மனம் திறந்து
உணர்ச்சி கலந்த முறையில்
உரையாடவும், மாணவர்களின்
உளப்பிரச்சினைகளை ஆசிரியர் தெளிவாகப்
புரிந்து கொண் டு அதற்குப் பொருத்தமான
உணர்வுப் பதில் களை வழங் கும் போது நல்ல
புரிந்துணர்வுடன் தொடர்பாடல் ஏற்படுவதால்
பயனுள்ள கற்றற் செயற்பாடு இடம்பெறுவதாக
குறிப்பிடப்படுகின் றது.

 மாணவர்கள் ஆசிரியருடன் கட்டற்ற முறையில்


கருத்துக்களைப் பரிமாறுவதால் பாதுகாப்பான
சூழல் ஏற்படுகின் றது. இதனால் கற்றல்
வினைத்திறன் உடையதாக
மாறுகின் றது. இச்செயற் பாட்டில் பாட நூல் கள்
முக்கியத்துவம் பெறுவ. தில்லை. மாணவர்கள்
தேர்ச்சி மட்ட அடிப்படையில்
குழுக்கலந்துரையாடலில் ஈடுபட்டு தெளிவான
விளக்கம் பெறுகின் றனர்.

கற்றலில் மாணவர்கள் உணர்வுகளுடனும்


செயற்பாடுகளுடனும் உளவளத்துணையுடனும்
ஒன் றிணைக்கும் பாங் குகள் தமிழர்களது
பாரம்பரிய நடைமுறைகளில் பேணப்பட்டு
வந்ததாக யாழ் பல் கலைக்கழக
மருத்துவத்துறைப் பேராசிரியர்
தயா. சோமசுந்தரம் அவர்கள்
கூறுகின் றார். இருப்பினும் இவை இன் று
மேலைநாட்டுக்கல்வி முறையுடன் முறையாக
ஆராயப்பட்டு கல்வியில் கட்டமைப்பு
செய் யப்பட்டுள்ளதாகவும்
குறிப்பிடப்படுகின் றது.

திரு.எஸ் .ஜெயராஜர்

ஆசிரியர் மட்/விவேகானந்தா கல் லூரி

*அகவிழி சஞ் சிகையில் பிரசுரமான


இக்கட்டுரை தேவை கருதி அனுமதியுடன்
மீள் பதிவு செய் யப்படுகின் றது

 EMAIL  FACEBOOK 
(HTTP://TWITTER.COM/HOME?
(MAILTO:? (HTTPS://WWW.FACEBOOK.COM/SHARER/SHARER.PHP?
STATUS=உளவளத்துணை
SUBJECT=HTTPS://KAANPIYAM.COM/INDEX.PHP/2020-
U=HTTPS://KAANPIYAM.COM/INDEX.PHP/2020-
நுட்பங் களைப்

08-15-12-05- 08-15-12-05-
பயன் படுத்தி
Prev (/index.php/2020-08-15-12-05-50/2021-02-
50/2021-02-19- 50/2021-02-19-
கற்பித்தல் HTTPS://KAANPIYAM.COM/INDEX.PHP/2020-
19-05-16-57/680-2021-01-05-21-50-46)
05-16-57/592- 05-16-57/592-
08-15-
2020-12-15-10- 2020-12-15-10-
12-05-
13-31) 13-31 )
50/2021-
02-19-
05-16-
57/592-
2020-
12-15-

You might also like