You are on page 1of 2

ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் பேச்சுக்கலையும் ஒன்றாகும்.

ஆரம்பகாலத்தில்
ஒலிகலையும் செய்கையும் கொண்டு தொடர்பாடிக் கொண்டிருந்த மனிதர்கள்,
காலப்போக்கில் மொழிகளை உருவாக்கி பேச்சுக்கலையை வளர்த்தனர். கற்றறிந்த
தகவல்களைப் பிறருடன் பகிர்வதற்காகப் பயன்படுத்தப்படுவதே நல்லதொரு பேச்சுக்கலைப்
பயன்பாடாகும். சிறந்த பேச்சிற்கான இலக்கணம் பற்றித் திருவள்ளுவர்,
கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (643)
என்கிறார். சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும்
கேட்க விரும்புமாறு கூறப்படுவதே சொல்வன்மை என்கிறார் வள்ளுவர். பேச்சுக்கலை
வாழ்நாள்முழுவது பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், மேடைப்பேச்சு என்று வரும்போது
அதற்கென எடுத்தல், தொடுத்தல், முடித்தல் என மூன்று படிநிலைகள் உள்ளன.
மேடைப்பேச்சுக்குப் பேச்சின் முன், பேச்சின் போது, பேச்சின் பின் என மூன்று நிலைகள்
உள்ளன. இந்த பேச்சுக்கலைக்கு அரிஸ்டாட்டில் லோகோஸ், ஏத்தோஸ் மற்றும் பாத்தோஸ்
என கோட்பாடுகள் தந்துள்ளார். தர்க்கரீதியாக மற்றும் பகுத்தறிவு நிறைந்த வாதம் என்பதே
லோகோஸ். நம்பகத்தன்மை மற்றும் பேச்சாளரின் தன்மை என்பதே ஏத்தோஸ் ஆகும்.
பாத்தோஸ் என்பது கேட்பவர்களுடன் உணர்ச்சிபூர்வமான பிணைப்பாகும்.

முதலில், எடுத்தல் என்பது பேச்சின் தொடக்கமாகும். சிறந்த பேச்சின் தொடக்கம்


பெறுநர்க்கு, அதாவது பார்வையாளர்க்குப், பேச்சாளரின் உரையின்மீதான நாட்டத்தை
வழுப்படுத்தும். பேச்சின் தொடக்கத்தில் அவையடக்கம் மிக அவசியம். விளிப்பு விடுத்து,
வணக்கம் சொல்லி பேச்சைத் தொடங்குவது முக்கியம். தொடர்ந்து, தன்னைப்பற்றிய சிறு
அறிமுகத்தைத் தந்தவுடன், பார்வையாளர்களைக் கவர்வதற்காகத் தலைப்பு சார்ந்த ஒரு
பாடலோ, கவிதையோ, நகைச்சுவையோ சொல்லித் தொடங்குவது சிறப்பாகும். வள
வளப்பாகப் பேசி சலிப்புத்தன்மையை உருவாக்காமல் நேரடியாக தலைப்பிற்குள் சென்றுவிட
வேண்டும். அரிஸ்டாட்டலின் பாத்தோஸ் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பெறுநரின்
ஆர்வத்தையும் மனத்தையும் கவரும்படி தொடர்பு கொள்ளுதல் சிறந்த பேச்சுக்கலையாகும்.
பாத்தோஸ் கோட்பாட்டிந்படி நகைச்சுவை அல்லது கதை கூறுதல் ஒரு சிறந்த பேச்சிற்கு
அவசியம். பேச்சாளர் ஒலிப்பெருக்கியைச் சிறந்த வகையில் கையாளுவது
பார்வையாளர்களை ஒருவகையில் கவரும். பேச்சாளர் தொடக்கதிலேயே பெறுநருடன் ஒரு
உணர்ச்சிப்பூர்வமான உறவை உருவாக்கிவிட வேண்டும். பேச்சாளர்க்கு மொழியாளுமை
மிக முக்கியமான ஒன்று. நகைச்சுவை செய்யும்போது இயல்பான மொழியைப்
பயன்படுத்தலாம்.

தொடர்ந்து, தொடுத்தல் என்பது தலைப்பு சார்ந்த கருத்துகளையும் விளக்கத்தையும்


விவரமாகவும் தெளிவாகவும் விவரிக்கும் நிலை. வளவளவென பேசி சலிப்பு தன்மையை
ஏற்படுத்தும் வகையில் அமைந்தால் பார்வையாளர்கள் பாதியிலேயே எழுந்து சென்று
விடுவர், இறுதியில் இருக்கைகளே மீதம் இருக்கும். ஏனெனில், நேரடியாக கருத்துகளை
தெரிவிக்க வேண்டும். பேச்சாளர் கொடுக்கும் தகவல்களைப் பெறுநர் ஏற்றுக் கொள்வதற்கு
தகுந்த சான்றுகள் கொடுக்கப்பட வேண்டும். புள்ளி விவாரங்கள், அதிகாரபூர்வமாக
அங்கிகரிக்கப்பட்ட தகவல்களையும் சான்றுகளையும் பேச்சாளர் பயன்படுத்துவது அவசியம்.
இவ்வாறான தகவல்களும் சான்றுகளும் பெறுநர்களிடம் நம்பத்தன்மையை
உருவாக்குவதோடு வழுப்படுத்தவும் செய்யும். அரிஸ்டாட்டலின்
ஏத்தோஸ் எனும் கோட்பாட்டின்கீழ் பெறுநருக்கும் பேச்சாளர் மீது நம்பத்தன்மை இருப்பது
அவசியம். அதே கோட்பாட்டின் கீழ், சான்றோர்கள் அல்லது நிபுணர்கள் பரிந்துரையின் கீழ்
நடத்தல் சிறப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தொடுத்தலின் போது மட்டுமின்றி ஒரு
மேடை பேச்சு முழுவதும் தலைப்பு சார்ந்த வார்த்தைகளை ஆராய்ச்சி செய்து முன்வைப்பது
மிக முக்கியம் என்கிறார். பெறுநர் என்பவர் பார்வையாளர்களாவர். நகைச்சுவை பயன்பாடு
மூலம் கவரப்பட்டு ஆர்வத்துடன் பேச்சைத் தொடர்ந்து கேட்பர். பேச்சாளர் பெறுநருடன்
பார்வையின் மூலம் தொடர்பு கொள்வது அவசியம். அது பார்வையாளர்களின் கவனம்
பேச்சிலிருந்து திசைத் திரும்பாமல் பார்த்துக் கொள்ளும். அதோடு, சற்று ஆளமான
தொடர்பு மேற்கொள்வதற்கு வினா விடை முறைமை பயன்பாடு சிறப்பானது. கேள்வி
எழுப்பியபின் பார்வையாளர்கள் பதிலளிக்க நேரம் கொடுக்க வேண்டும். புரிந்துணர்வோடு
ஒரு வினா விடை மேற்கொள்வது சிறப்பு. பெறுநர் கைத்தட்டல் மூலமும் பேச்சாளர்களுடன்
தொடர்பு கொள்வார்கள். சிறந்த பேச்சாளரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் அவ்வாறு
கைத்தட்டல் எழுப்பப்படும். இத்தகைய உணர்ச்சிபூர்வமான பிணைப்பைப் பற்றி தான்
அரிஸ்டாட்டில் பாத்தோஸ் கோட்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில், சிறப்பற்ற
பேச்சாளரின் உரையில் அவர் பேசும் ஒவ்வொரு விஷயதிற்கும் கரகோசையை எழுப்பி
பேச்சாளரைப் பேச விடாமல் திருப்பி அனுப்பிவிடுவர். லோகோஸ் கோட்பாட்டின்
அடிப்படையில், பேச்சாளர் சிந்தனை கட்டமைப்புகள் அமைத்து ஒரு தெளிவான வாதத்தை
மேற்கொண்டால் அவர் பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை ஈர்க்கலாம். ஒரு
பேச்சாளர் எடுத்து வைக்கும் வாதம் முக்கியமான ஒரு பகுதியாகும். வாதத்தில் அவர்
முன்வைப்பவை யாவும் உண்மையாகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டிருப்பது
அவசியம். பேச்சாளர்களின் பேச்சின் பொழுது உச்சரிப்பில் அதிக கவனம் அவசியம்.
பேசும்பொழுது சரியான உச்சரிப்பில் வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் பேச்சாளர்களில் கருத்துகள் பார்வையாளர்களைச் சரியாக போய் சேரும்.
சிறந்த குரல்வளம் ஒரு பேச்சாளருக்கு மிக முக்கியம். குரல்வளத்தைக் கொண்டு
பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும். அதே போல், ஒரு பேச்சாளர் பேச்சில் தொனி
முக்கிய பங்கு வகிக்கின்றது. ஏற்ற இறக்கத்தோடும் அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில்
சரியான அழுத்தத்தோடும் குரலை உயர்த்த வேண்டும் இடத்தில் உயர்த்தியும் தாழ்த்த
வேண்டிய இடத்தில் தாழ்த்தியும் பேசுவது ஒரு சிறந்த பேச்சாக கருதப்படும். அதோடு,
பேசும்பொழுது பேச்சாளர்கள் மரக்கட்டை போல் நேராக நின்று அசைவில்லாமல்
பேசினால் அது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்காது. பேசும் பொழுது பேச்சாளர்கள்
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நடப்பது, ஏற்ற முகபாவனையும் கையசைவும்
கொடுப்பது போன்றவை இருப்பது சிறப்பாகும். மேலும், இடையே நகைச்சுவை தன்மையைக்
கையாளுவது சிறப்பாகும். அதுமட்டுமின்றி, பேசும் தகவல்கள் யாவும் தலைப்பு சார்ந்ததாக
மாட்டுமே இருக்க வேண்டுமே தவிற தொடர்பு இல்லாத விஷயங்களைப் பேசி நேரத்தை
வீண்ணடிக்கக் கூடாது.

அதையடுத்து, பேச்சின் இறுதி படிநிலையான முடித்தல் எனப்படுவது பேச்சாளர்


தலைப்பை ஒட்டிய தன் கருத்துகளையும் விளக்கங்களையும் சுருக்கமாகவும் தெளிவாகவும்
தொகுத்து கூறி பேச்சை முடிக்கும் நிலையாகும். ஒரு பேச்சாளர், உணர்ச்சியைத் தூண்டும்
வகையிலோ, பாராட்டியோ, பொருத்தமான கதை, கவிதை, பாடல் வரிகளைக் கூறியோ
பேச்சை முடிக்கலாம். பேச்சை முடிக்கும் பேச்சாளர், அங்குள்ள சூழல் அறிந்து முடித்தல்
அவசியம். அந்த சூழல் அறிந்து செயல்படும் கூறு பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும்.
பேச்சாளர், தன் பேச்சின் போது யாருடைய மனதைப் புண்டுத்தும் வகையிலோ தவறாகவோ
பேசியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருதல் மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று. இத்தகைய
பயனும் பண்பும் மிக்க பேச்சைக் கேட்கும் பெறுநர் மத்தில் பல விளைவுகள் உண்டாகும்.
பேச்சாளர் கூறிய கருத்துகள் யாவும் மனதில் ஆழமாகவும் தெளிவாகவும் பதியும். அதனை
தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க முயலுவர் பார்வையாளர்கள். பேச்சாலரின் பேச்சின் மீது
மோகம் கொண்டவர்கள், அவரை முன்னோடியாகக் கொண்டு மேடை பேச்சாளராக
முயற்சிப்பர். சிறந்த பேச்சாளரின் பேச்சுகளைத் தொடர்ந்து கேட்பர். இறுதியாக, பேச்சாளர்
நன்றி கூறி தங்களது பேச்சை முடிப்பது சிறந்த பண்பாகும்.

You might also like