You are on page 1of 6

Assessment 1

TID 3002 Teori & Amali Penterjemahan

1. 17 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த

மாற்றங்களைத் தொகுத்துக் கூறுக. (15 புள்ளிகள்)

17 ம் நூற்றாண்டு என்பது கிரிகோரியன் நாட்காட்டிப்படி 1601 இல்


ஆரம்பித்து 1700 இல் முடிவடைந்த நூற்றாண்டு காலத்தைக்
குறிக்கும்.

17 ம் நூற்றாண்டில் பொதுவாக அறிவியல் வரலாற்றில் புதிய


கண்டுபிடிப்புகள் பல இடம்பெற்ற காலப்பகுதியாகும்.
குறிப்பாக கலிலியோ கலிலி, ரெனே டேக்கார்ட், பாஸ்கல், ஐசாக்
நியூட்டன் போன்றவர்களின் அரிய கண்டுபிடிப்புகள்
இடம்பெற்றன. ஐரோப்பாவில் இந்நூற்றாண்டு முழுவதும்
நாடுகளுக்கிடையே போர்கள் பல இடம்பெற்றன.
அத்துடன் அமெரிக்காவில் ஐரோப்பிய குடியேற்றம் பரவலாக
இடம்பெற்றது.

17 ஆம் நூற்றாண்டில் இலக்கிய தொகுப்புகளான கவிதைகளும்


காப்பிய தொகுப்புகளுக்கும் மொழிப்பெயர்ப்புகள் நிகழ்ந்தன. மேலும்,
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சமணம், பௌத்தம், வைதிக
சமயக் கருத்துகள் இடம் பெற்றமையினால் பிறமொழிச் சொற்களும்
தமிழில் இடம்பெறலாயின. மேலும் மொழிபெயர்ப்பு நூல் என்று
தனியாகக் கருதாமல், தமிழ்ப் படைப்புப் போலக் கருதுமளவு
ஆசாரக் கோவை போன்ற நூல்கள் தழுவியெழுதப்பட்டன. சமயம்
சார்ந்த அறநெறிக் கருத்துகளை வலியுறுத்தி எழுதப்பட்ட நூல்களால்
பிறமொழித் தாக்கம் மிகுதியாக இருப்பதைக் காணலாம்.

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவ சமயத்தைப்


பரப்பிடும் பொருட்டு இந்திய மொழிகளில் விவிலிய கருத்துகள்
மொழிபெயர்த்து வழங்கப்பட்டன.பிறகு, இலக்கியம், தத்துவம்,
மருத்துவம், வேதங்கள், அறிவியல் சார்ந்த நூல்கள் ஐரோப்பிய
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

மொழிபெயர்ப்பிற்கு சலிக்காத உழைப்பு தேவையிருப்பதால்


1940 களில் பொறியியலாளர்கள் தானியக்கமாக மொழிபெயர்க்க
(இயந்திர மொழிபெயர்ப்பு) அல்லது மனித மொழிபெயர்ப்பாளருக்கு
துணையாக இருக்க கருவிகளை உருவாக்கி
வருகிறார்கள். இணையத்தின் வளர்ச்சி உலகளவில் மொழிபெயர்ப்பு
சேவைகளுக்கான சந்தையை விரிவுபடுத்தி உள்ளது. மேலும்
இடைமுக மொழியின் உள்ளூராக்கலுக்கும் வழிவகுத்துள்ளது.

மொழிபெயர்ப்பின் கோட்பாடு, விவரிப்பு, செயற்பாடு ஆகியவற்றைக்


குறித்த முறையான கல்வியை மொழிபெயர்ப்பியல் வழங்குகிறது.

2. மொழிபெயர்ப்பின் தேவை என்ன? (10 புள்ளிகள்)

இவ்வுலகில் சுமார் 6500 மொழிகள் பேசப்படுவதாக


குறிப்பிடப்படுகின்றது. இவ்வுலகில் உள்ள அனைவராலும் அனைத்து
மொழிகளிலும் தங்களது தொடர்பாடல்களை மேற்கொள்ள
முடியாது, அதாவது அனைவருக்கும் அனைத்து மொழிகளும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதாகும்.ஆகவே, மொழிபெயர்ப்பு
என்பது அவசியமாகின்றது. மொழிபெயர்ப்பானது தொடர்பாடலை
இலகுபடுத்தவும், மற்றவரினது கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளை
பரிச்சயமான மொழியில் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றது.
பெறுமதிமிக்க ஆவணங்கள், புத்தகங்கள், கட்டுரைகள், போன்ற
பல்வேறு விடயங்களில் மொழிபெயர்ப்பின் தேவைப்பாடு
வேண்டப்படுகின்றது. எழுத்தாளர்களின் கருத்துகள் மற்றும்
சிந்தனைகள் ஆகியன மொழிபெயர்ப்பின் மூலமாகவே
விரிபுபடுத்தப்படுகின்றது.

சாதாரணமாக ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் ஒரே


மொழி பேசுவோராக வாழ்கின்றனர். சில நாடுகளில் பல மொழிகள்
பேசுவோர் வாழ்கின்றனர். குறிப்பாக மலேசியா, இந்தியா போன்ற
நாடுகளில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர்.
மக்கள் அனைவரும் தங்களுக்கிடையே ஏதோ ஒரு வகையில்
தொடர்பு கொள்ளும்போது இருவரும் வேறு வேறு மொழிகளில்
தொடர்பு கொண்டால் அப்போது இருவருக்கிடையில் மொழிபெயர்ப்பு
அவசியமாகிறது.

பதிப்பு ஊடகங்களான இதழ்கள், நூல்கள் முதலியன


மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வெளியிடப்படுவதால் அவற்றிற்கும்
இன்றைய சூழலில் அவசியம் ஏற்படுகிறது. மொழிபெயர்ப்பின்
நோக்கம் கருத்துப் பரவல் என்பதால் அது இல்லாத துறையே
இல்லை என்ற அளவிற்கு அதன் அவசியம் தற்காலத்தில்
உணரப்பட்டு, பெருமளவு மொழிபெயர்ப்புப் பணிகள் நடக்கின்றன.
இதில் தொடர்புடையன தருமொழி - மொழிபெயர்ப்பாளர் -
பெறுமொழி ஆகியனவாகும். மேலும், ஒரு மொழியிலுள்ள இலக்கிய
படைப்புகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கும். இந்த
மொழிப்பெயர்ப்பு பெரிதும் துணைப்பிரிகின்றது.

3. மொழிபெயர்ப்பு எப்படி மாறுபடுகிறது ? (10 புள்ளிகள்)

மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு கலை. மொழிபெயர்ப்பானது


முலமொழியிலே அமைந்த மூலத்தினைத் தாய்மொழியாகக்
கொண்டவர், வழி மொழியில் படிக்கும்போது அதே உணர்வு ஏற்பட
வேண்டும் என்று பொது நிலையில் கருதப்படுகிறது.
மொழிப்பெயர்ப்பில் சில வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக,
சொல்லுக்குச் சொல் மொழிப்பெயர்த்தல் (METAPHRASE TRANSLATION
AND LITERAL TRANSLATION), விரிவான மொழிப்பெயர்ப்பு (AMPLIFICATION),
முழுமையான அல்லது சரியான மொழிப்பெயர்ப்பு(CLOSE OR
ACCURATE TRANSLATION), சுருக்கம்(PARAPHRASE OR ABRIDGEMENT),
தழுவல் (ADAPTATION), மொழியாக்கம்(TRANSCREATION) என நிறைய
உள்ளன. மேற்கூறிய வகைகளோடு இன்னும் சற்றுத் தனித் திறன்
கொண்ட நிலைகளிலே மொழிப்பெயர்ப்பை வகைப்படுத்தலாம்.

சொல்லுக்குச் சொல் மொழிப்பெயர்த்தல் என்பது மூல


மொழியிலுள்ள சொல்லுக்கு இணையான மாற்று மொழிச்
சொல்லால் பெயர்க்கும் முறையே ஆகும். ஆனால், இந்த வகை
மொழிப்பெயர்ப்பு எல்லா அமைப்புக்கும் சரியாகப் பொருந்தாது.
அடுத்ததாக, விரிவான மொழிப்பெயர்ப்பு. மூல மொழியிலுள்ள
கருத்துகளை இன்னும் விரிவாக கூறுவதே விரிவான
மொழிப்பெயர்ப்பு. இதை கதையில் அல்லது காப்பியங்களீல்
பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். மேலும், மூல மொழியிலுள்ள
கருத்துகளைச் சுருக்கமாகக் கூறினால் சுருக்கம் என்கிறோம்.
இம்மாத்ரியான வகைகளை கவிதை வடிவிலோ உரைநடை
வடிவிலோ பயன்படுத்தலாம்.

தொடர்ந்து, மொழிப்பெயர்ர்பை பொறுத்த வரையில் தழுவல் தான்


ஆரம்ப காலத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தது என
கம்பராமாயணம் சான்றாகக் காட்டலாம். இவ்வகையில்
மூலநூலாசிரியனை விட மொழிப்பெயர்ப்பாளர்களின் புலமையே
மிகுதியாகக் காணப்படுகிறது. ஆக, தழுவல் வகையை நாடகத்தில்
பயன்படுத்துவது சிறப்பான ஒன்றாகும். இறுதியாக, மொழியாக்கம்.
இன்னொரு மொழியிலிருந்து மொழிபெயர்த்திருந்தாலும் கூட, நாம்
மொழிபெயர்த்துள்ள மொழியின் மரபு அதில் காணப்பட வேண்டும்.
அவ்வாறு மொழிப்பெயர்ப்பதை மொழியாக்கம் என்று சொல்லலாம்.
கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்தோ என்றால் அது
தமிழ்க்கவிதை போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வகையைப் பொறுத்தவரையில் கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை, மறைமலையடிகள், விபுலாந்த அடிகள் குறிப்பிடத்
தகுந்தவர்கள் எனக் கூறலாம்.
4. இரண்டு மொழிபெயர்ப்பாள்ர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள்
மொழிபெயர்ப்புக்கு எவ்வகை பங்களிப்பத்த்ந்துள்ளவர்
என்பதைத் தொகுத்துக் கூறுக
(15 புள்ளிகள்)

i. வெர்னர் கோலர்
குறிப்பொருள் நிகரன் (Denotative Equivalance)

• அகராதி பொருள் : SL and TL words refer to the same thing in the real world. This
is the referential identity between SL and TL units. Words in SL refer to the same
objects in the world as the words in the TL.

• உட்பொருள் நிகரன் (Connotative Equivalence)


* சொல்லின் பருப்பொருளுக்குப் புறம்பாக உய்த்துணரக்
கிடைக்கும் பொருள் மொழியியல், சமூகம், நிலவியல்,
நடையியல் அடிப்படையாக்க் கொண்டு பொருள் காட்டுதல்.
• செயல்முறை நிகரன் (Pragmatic Equivalence)
ஒரு சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு
மொழிபெயர்க்கப்படுகிறது. அப்படி, மொழிபெயர்க்கப்படும்
இலக்கு மொழி பனுவல், மூலமொழியைப் போலவே
விளைவினை ஏற்படுத்த வேண்டும்.
• புற வடிவ/ அழகியல் நிகரன் (Formal/ Aesthetic Equivalence)
மூல மொழியில் பயன்படுத்தப்படும் அணி சிறப்புகளை இலக்கு
மொழியிலும் அழகுற வடித்துக் காட்டுதல்

ii. லாரண்ஸ் வெனுட்டி


 ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்புக் கோட்பாட்டாளர்,
மொழிபெயர்ப்பு வரலாற்றாசிரியர் மற்றும்
இத்தாலியன், பிரஞ்சு மற்றும் கற்றலான் மொழிகளில்
இருந்து மொழிபெயர்ப்பாளர் ஆவார்.
 உள்நாட்டு பண்பாட்டின் மொழிபெயர்ப்பு (Domestication)
 உள்நாட்டு வாசகர்களிடம் பதிவு செய்வதற்கு அந்த
நாட்டு மக்களின் பண்பாட்டிற்கு ஏற்றவாறு
மொழிபெயர்ப்பு அமைந்திருக்க வேண்டும்.
 இம்மொழிபெயர்ப்பில் உள்நாட்டு பண்பாட்டிற்கு
முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

 வெளிநாட்டு பண்பாட்டின் மொழிபெயர்ப்பு (Foreignzation)


• மொழிபெயர்ப்பாளர் மூல மொழி பண்பாட்டிற்கு முக்கியத்துவம்
கொடுத்தல்.
• மூல மொழியின் பண்பாட்டை மாற்றாமல் அதை அப்படியே
இலக்கு மொழிக்கு மொழிபெயர்த்தல். இலக்கு மொழி
பனுவலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

You might also like