You are on page 1of 7

மொழிபெயர்ப்பு வகைகள்

பொதுவாக மொழிபெயர்க்கும் பாணியில் மொழிபெயர்ப்பு ஆறு வகைகளாகப்


பகுக்கப்படும்:
(1) சொல்லுக்குச் சொல் பெயர்த்தல் (Literal And Metaphrase Translation)
(2) விரிவான மொழிபெயர்ப்பு (Amplification)
(3) முழுமையான அல்லது சரியான மொழிபெயர்ப்பு (Close or Accurate Translation)
(4) சுருக்கம் (Paraphrase or Abridgement)
(5) தழுவல் (Adaptation)
(6) மொழியாக்கம் (Transcreation)
சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல்
• மூல மொழியிலுள்ள சொல்லுக்கு இணையானஇலக்குமொழிச்
சொல்லால் பெயர்க்கும் முறையைத்தான் சொல்லுக்குச் சொல்
பெயர்த்தல்
• சிறப்பானதாய் அமையாது
• He kicked the bucket -அவன் வாளியை உதைத்தான் ( அவர்
காலமானார்)
விரிவான மொழிபெயர்ப்பு
• மூலமொழி நூலின் கருத்துகளை விட அதிகமான செய்திகளை, இலக்கு
மொழிக்கு ஏற் றவாறு கூறுவதைத்தான் விரிவான மொழி
பெயர்ப்பு என்கிறோம். இது ஒருவகையான மொழிபெயர்ப்பு என்பதுதான்
பொருந்தும்.
தழுவல்

• மூலநூலின் கருத்தையும், கருவையும், கதைப்பின்னலையும், நிகழ்வுகள்,


பாத்திரங்கள், நிகழ்ச்சி மாற்றங்கள் ஆகியவற்றையும் ஒருமேற்சட்டமாக
வைத்து வரைகோடிட்டபின் அதைத் தனது எண்ணத்திற்கேற்ப இலக்கு
மொழியில் தழுவி எழுத்துவது/அமைப்பது மொழித்தழுவல் ஆகும்
மொழியாக்கம்

• மூலமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு இருந்தாலும், மூலமொழியின்


மரபுத்தாக்கம் இலக்கு மொழியில் காணப்படவேண்டும்.
இதனையே மொழியாக்கம் என்கிறோம்
மொழிபெயர்ப்பு கொள்கைகள்
• முரண்பாடு தவிர்த்தல்
முரண்பாடு நிகழா வண்ணம் காப்பது மொழிபெயர்ப்பாளரின் அடிப்படைக் கருத்தாக அமைய வேண்டும்
• எளிமை
அழகு சிதையா வண்ணம், கற்போருக்கு இயல்பான நடையில், இது ஒரு மொழிபெயர்ப்பு என்று தோன்றாத
வகையில், எளிய இனிய சொற்களால் மொழிபெயர்க்கும் போது இந்த எளிமை அமைந்து விடுகிறது.
• தெளிவு
மொழிபெயர்ப்பினைச் செய்யும் பொழுது அது மிகத் தெளிவாக அமைந்திருந்தால்தான் எடுத்ததன் நோக்கம்
நிறைவேறும்.
கருத்துத் தெளிவிற்காக மூலநூலின் மிக நீண்ட தொடர்களை ஆங்காங்கே எளிய தொடர்களாக்கியும்
மொழிபெயர்க்கலாம்.
• விளக்கங்கள்
அந்தந்த மொழியினரின் மரபுகள், பழக்க வழக்கங்கள், சூழல்கள் போன்ற அடிப்படைகள் ஒன்றன் சிறப்பு
மற்றொன்றில் உறுதியாகப் புலப்படுவதும், அச்சொற்களை அப்படியே தந்துவிட்டு அவற்றிற்குத் தேவையான
விளக்கங்களை அடிக்குறிப்பில் தருவதும் விளக்கத்திற்குத் துணை நிற்கும்
• தன்வயமாக்கல் பிறமொழியினரின் பெயர்ச்சொற்கள் அதாவது பாத்திரத்தின் பெயர், இடப்பெயர்
போன்றனவும், நம்மிடையே இல்லாத பொருட்களின் பெயர்களும் மூலத்தில் வருமாயின் அவற்றைத்
தன்வயமாக்கி ஏற்றுக் கொள்ளுதல் சிறப்புடையதாகும்

You might also like