You are on page 1of 2

வாரம் 5

திகதி : 06.02.2023 – 10.02.2023


மாணவர்களின் பெயர் : தாரணியரசன், டனேஷ்
1.0 ஆய்வுக்குரிய சிக்கல்

 இவ்வாரத்தின் போது நடைப்பெற்ற கற்றல் கற்பித்தலின் போது எனக்கு ஒரு சிக்கல்கள்


தென்பட்டது எனலாம்.
 சான்றாக, வகுப்பிலிருக்கும் தாரணியரசன் மற்றும் டனேஷ் எனும் ஒரு சில மாணவர்கள்
பேச்சுத் திறன் அடிப்படையில் படைப்பை மேற்கொள்ளும் போது மொழி கலப்பானது
அதிகமாக ஏற்படுவதை நான் கண்டறிந்தேன்.
 இம்மாணவர்கள் யாவரும் பேசும் பொழுது ஆங்கிலச் சொற்களையும் தமிழ்மொழியில்
ஒரு தடுமாற்றத்தோடும் பேசுவதோடு மட்டுமின்றி, தம் கருத்துகளைச் சிறப்பித்துக்
கூறுவதிலும் சிரமத்தை எதிர்நோக்கினர் என்றால் அது மிகையாகாது.
 உதரணமாக sir, game, kacau, thank you, malas, quiz போன்ற சொற்களின் பயன்பாடு
அதிகமாக உள்ளது.
2.0 சிக்கலுக்கான காரணங்கள்
 மொழி கலப்பின்றி தமிழ்மொழியில் சரளமாகப் பேசும் உக்தியை அறியாமை.
பொதுவாகவே, பெரும்பாலான மாணவர்கள் எவ்வாறு கருத்துகளைச் சிறப்பித்துக் கூற
வேண்டும் மற்றும் மொழி வளம் போன்ற கூறுகளைக் கையாளுவதில் சிக்கலை
எதிர்நோக்குகின்றனர் என நான் கருதுகிறேன்.
 போதிய பயிற்சியின்மை. இம்மாணவர்கள் வகுப்பில் பேசுவதைத் தவிர்த்து, வீட்டிலோ
அல்லது வேறு இடங்களில் தமிழ்மொழியில் பிற மொழிக் கலப்பின்றி பேசுவதென்பது
அரிதாகின்றது.
3.0 விளைவு
 வருங்காலங்களில் மாணவர்களால் சரளமாகவும் பிற மொழி கலப்பின்றி
உரையாடுவதற்கும் சிக்கலை எதிர்நோக்குவர்.
4.0 சிக்கலைக் களைவதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுதல்
 மொழி கலப்பைத் தவிர்ப்போம் வாரீர். இச்சிக்கலினைக் களையும் பொருட்டு, நான்
முதலாவதாக மாணவர்களுக்குக் கேட்பொலியின் வாயிலாக பல்வேறு அறிஞர்களின்
உரைகளை ஒலிப்பரப்பவிருக்கிறேன். இதன் வழி, அம்மாணவர்களால் தயார்நிலை,
படைப்பாற்றும் பொழுது நினைவில் கொள்ள வேண்டிய கூறுகளை அறிந்து கொள்ள இது
ஏதுவாய் அமையக் கூடும் எனலாம்.
 பேசலாம் வாங்க! நான் மாணவர்களைக் குறிப்பிட்ட நேரத்திலோ அல்லது இயங்கலை
வகுப்பைத் தொடங்கும் வேளையிலோ ஒரு தலைப்பினை வழங்கி பேசப் பணிப்பேன்.
இதன் வாயிலாக, மாணவர்களால் கருத்துகளைச் சிறப்பித்துக் கூறுவதற்கு
வழிக்காட்டுதலாக அமையக்கூடும். அதோடு, மாணவர்களால் தங்களுடைய மொழி கலப்பு
சிக்கலை களையவும் இது ஏதுவாக அமையக்கூடும்.
5.0 கால அளவு
 13.02.2023- 17.02.2023 வரை இச்சிக்கலைக் களைவேன்.
6.0 வெற்றிக் கூறு
 மொழிக் கலப்பினைத் தவிர்த்து தமிழ்மொழியில் சரளமாகப் பேசத் தொடங்குவர்.
 மாணவர்கள் தங்களுடைய படைப்பாற்றல் திறனை மேலோங்கச் செய்வர் என்பது
திண்ணம்.

7.0 தொடர் நடவடிக்கை


திகதி நேரம் நடவடிக்கை அடைவுநிலை
13/2 பாட வேளை/  மொழி கலப்பைத்  தாரணியரசன்
காலை 8.30 – 9.30 வரை தவிர்ப்போம் வாரீர் மற்றும் டனேஷ்
பேச்சுப் படைப்பின்
போது,
கடைப்பிடிக்க
வேண்டியக்
கூறுகளையும்
தமிழ்மொழியில்
சரளமாகப் பேசத்
தேவைப்படும்
உக்திகளையும்
தெளிவாகப் புரிந்து
கொண்டனர்.
14/2 பாட வேளை/ பேசலாம் வாங்க!  தாரணியரசன்
காலை 9.00 – 10.00 வரை மற்றும் டனேஷ்
ஒரு தலைப்பை
ஒட்டியோ அல்லது
படத்தை ஒட்டியோ
குறிப்பிட்ட
நேரத்தில்
கருத்துகளை மொழி
கலப்பின்றி
தொகுத்துப் பேசத்
தொடங்குதல்.

You might also like