You are on page 1of 5

பெயர் : கண்ணன் ரகுராமன்

பள்ளி : தேசிய வகை யோ செங் லுவான் தமிழ்பள்ளி

பயிற்றுப் பணி : 2

வாரம் : 7

திகதி : 27.03.2023 முதல் 31.03.2023 வரை

பாடம் : தமிழ்மொழி

வகுப்பு : 2

சிக்கல் : மாணவர்களிடையே வாக்கியம் அமைத்தலில் எழுத்து பிழைகள்

1.0 ஆய்வுக்குரிய சிக்கல்

 நான் கண்டறிந்தச் சிக்கலானது ஷாலினி, கஜெண்திரன் மற்றும் நிவேதா எனும் மாணவர்கள்

வாக்கியம் அமைக்கையில் எழுத்து பிழைகள் அதிகளவில் காணப்படுகிறது.

 இவ்வாரம் ஆசிரியர் மதிப்பீடின்போது மாணவர்களை வாக்கியம் அமைக்கப் பணித்தார்.

 மாணவர்கள் வாக்கியம் அமைக்கும் போது எழுத்து பிழைகளைத் தவிர்க்க வேண்டும் என்று

விளக்கினார்.

2.0 சிக்கலுக்கான காரணங்கள்

 அலட்சிய போக்கு
 மேற்குறிப்பிட்ட மாணவர்களின் கவனமின்மையும் அலட்சியப்போக்கும் இவர்கள் எழுத்துப்

பிழைகள் செய்வதற்குக் காரணம் எனலாம். ஆசிரியர் கற்பிக்கும்பொழுது மாணவர்கள் சரியாகக்

கவனம் செலுத்தாமல் இருந்ததால் இவ்வாறான தவறுகள் ஏற்படுகின்றன.

 வாசிப்பு பழக்கம் குறைவு


 குறைவான வாசிப்புப் பழக்கமும் மாணவர்கள் எழுத்துப் பிழைகள் செய்வதற்குக்

காரணமாகின்றன. தினமும் வாசிக்கும் பழக்கத்தை அமல்படுத்தியிருந்தால் எழுத்துகள் மற்றும்

சொற்களின் பயன்பாட்டினை மாணவர்களால் அறிந்திருக்க முடியும்.

3.0 விளைவு
 வாக்கியம் அமைப்பதில் பல பிழைகளை எற்படும் நிலை உருவாகின்றது.

4.0 சிக்கலைக் களைவதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுதல்

 மாதிரி வாக்கியங்களில் பயன்பாடு

 ஆசிரியர் மாணவர்களுக்கு மாதிரி வாக்கியங்களைக் கொடுத்து அதனை வாசிக்கப் பணித்தல்.

ஒவ்வொரு வாரத்திற்கும் குறைந்தது 5 வாக்கியங்களை மாணவர்கள் வாசிப்பதை ஆசிரியர் உறுதி

செய்தல். மாணவர்கள் எழுத்துக் கூட்டி வாசிக்கும்பொழுது எழுத்துகள் மற்றும் சொற்களின்

பயன்பாட்டினை அறிந்து கொள்வர். இதனால், அவர்கள் பிழையற எழுத வாய்ப்புண்டு.

 பார்த்தெழுதுதல்

 ஆசிரியர் மாணவர்களிடம் வாக்கியங்களைக் கொடுத்து அதனைப் பார்த்து எழுதும்படி பணித்தல்.

இதன்வழி மாணவர்களின் எழுத்துப் பிழைகளை ஆசிரியர் சுட்டிக்காட்டித் திருத்துவதோடு

மாணவர்களின் எழுத்துத் திறனையும் மேம்படுத்த இயலும்.

 எழுத்துப் பயிற்சி

 ஆசிரியர் துணைச் சொற்களைக் கொடுத்து மாணவர்களைச் சுயமாகக் வாக்கியம் எழுதும்படி

கூறுதல். ஆசிரியர் மாணவர்களின் வாக்கியங்களைச் சரிப்பார்த்து உடனுக்குடன் அதனைத்

திருத்தி விளக்கமளித்தல். இதனால் மாணவர்கள் தங்களின் பிழைகளை உணர்ந்து அவற்றை

புரிந்து கொள்வர். மேலும் இதுபோன்ற பிழைகளைச் செய்யாமல் கவனமாக எழுதுவர்.

5.0 சிக்கலைக் களைவதற்கான கால அளவு

 இச்சிக்கலை அடுத்த வகுப்பிற்குள் நான் களைய எனக்கு மூன்று நாட்கள் தேவைப்படும்.

இச்சிக்கலை முறையாகக் கையாள 03.04.2023 முதல் 07.0.2023 வரையிலும் தொடர் நடவடிக்கைகள்

அமல்படுத்தப்படும்.

6.0 வெற்றிக் கூறு

 அம்மாணவர்கள் தொடர்ந்து வரும் பாடங்களின்போது, சரியான சொற்களைப் பயன்படுத்திச்

வாக்கியம் அமைத்துத் தங்களின் வாக்கியங்களைப் பிழையற எழுதுவார்கள் என்பது


எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இத்தகைய நிலை ஏற்பட அம்மாணவர்களுக்கு ஆசிரியர் பாட

வேளையின்போது, சிறப்பாக முயற்சி செய்ய வாய்ப்பும் உற்சாகமும் அளிக்க வேண்டும். ஆசிரியர்

எப்போதும் உற்சாகம் அளிக்க வேண்டும்.

7.0 தொடர் நடவடிக்கை

 நான் மாணவர்களின் நேரத்தைக் கருத்தில் கொண்டு குறைவான கால அவகாசத்தில் நிறைவான

நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
நாள் நேரம் நடவடிக்கை அடைவுநிலை
திங்கள் வகுப்பு நேரம் : “மாதிரி வாக்கியங்களை  ஷாலினி,
03.04.2023 வாசிக்கப் பணித்தல்”
காலை மணி 08.00 கஜெண்திரன்
முதல் 09.00 வரை  முதலில் நான் மாணவர்களுக்குச் மற்றும் நிவேதா
சில வாக்கியங்களை வழங்கி அவ்வாக்கியங்க
வாசிக்கப் பணித்தேன். ளில் சரியான
தொடர்ந்து, மாணவர்களின் உச்சரிப்புடன்

உச்சரிப்பைச் சரி பார்தேன். வாசித்தனர்.

தவறுகள் இருப்பின் அவற்றைச்


சுட்டிக்காட்டித் திருத்தி
தொடர்ந்து முயற்சி செய்ய
ஊக்கம் அளித்தேன்.
செவ்வாய் வகுப்பு நேரம் : “பார்த்தெழுதுதல்”  ஷாலினி,
04.04.2023 காலை மணி 08.00 கஜெண்திரன்
 நான் மாணவர்களுக்கு
முதல் 09.00 வரை மற்றும் நிவேதா
குடும்பம் தொடர்பான
அவ்வாக்கியங்க
வாக்கியங்களை வழங்கி
ளைப் பிழையற
மீண்டும் புத்தகத்தில் பார்த்து
புத்தகத்தில்
எழுத பணித்தேன்.
எழுதினர்.
மாணவர்கள் ஆசிரியர்
கொடுத்த வாக்கியங்களைப்
பார்த்து புத்தகத்தில் பிழையற
எழுதி அனுப்பினர்.
வெள்ளி எழுத்துப் பயிற்சி”  ஷாலினி,
07.04.2023 கஜெண்திரன்
 இறுதி நாளில், நான்
மற்றும் நிவேதா
மாணவர்களுக்குச் சில
குறைந்த
துணைச் சொற்களை
எழுத்து பிழைச்
மாணவர்களுக்கு
செய்யும்
வழங்கினேன். அதனை
நிலையைக்
கொண்டு மாணவர்களைச்
காண முடிகிறது.
சுயமாகக் வாக்கியங்களை
எழுத பணித்தேன். மூன்று
மாணவர்களும் ஆசிரியர்
கொடுத்த சொற்களைக்
கொண்டு சுயமாகக்
வாக்கியத்தை உருவாக்கினர்.
மாணவர்களின் எழுத்து
திறனும் மேம்பட்டிருந்தது.

You might also like