You are on page 1of 3

பெயர் : கண்ணன் ரகுராமன்

பள்ளி : தேசிய வகை யோ செங் லுவான் தமிழ்பள்ளி

பயிற்றுப் பணி : 2

வாரம் : 2

திகதி : 16.01.2023 முதல் 20.01.2023 வரை

பாடம் : தமிழ்மொழி

வகுப்பு : ஆண்டு 2

சிக்கல் : மாணவரிடத்தில் வாசிப்புப் பிரச்சனை.

1.0 ஆய்வுக்குரிய சிக்கல்

 லட்சுமி எனும் மாணவியிடம் வாசிப்புத் திறன் மிகவும் குறைந்தே காணப்பட்டது.

 அம்மாணவியால் சரளமாக வாசிக்க இயலவில்லை.

 எழுத்துக்களை விரைவாகக் கூட்டி வாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 வாசிக்கும் பகுதியின் பொருளைப் புரிந்து கொள்வதிலும் தடுமாற்றம் ஏற்படுகிறது.

2.0 சிக்கலுக்கான காரணங்கள்

 அம்மாணவிக்கு முறையான வாசிப்புப் பயிற்சியின்மையாலே இச்சிக்கல் ஏற்படுகின்றது.

 தினமும் வாசிப்புப் பயிற்சிகள் செய்யாமல் என்றாவது ஒரு நாள் வாசிக்கையில் இது போன்ற

சிக்கல் ஏற்படுகின்றது; வாசிப்புப் பழக்கம் குறைந்தே காணப்படுகின்றது.

 சில எழுத்துகளை அடையாளப்படுத்திட இயலவில்லை.

3.0 விளைவு

 மாணவியால் ஆசிரியர் கொடுக்கும் பயிற்சிகளை விரைவாக வாசிக்க இயலவில்லை.

 சரளமாக வாசிப்பதில் சிக்கல் ஏற்படுவதால், வாசிப்புப் பகுதியின் பொருளைப் புரிந்து

கொள்வதில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

 ஒவ்வொரு சொற்களின் மற்றும் வார்த்தைகளின் உச்சரிப்புகளிலும் தெளிவிமின்மை.


4.0 சிக்கலைக் களைவதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுதல்

 மாணவர் தனிப்பட்ட முறையில் சில சொற்களை அல்லது பகுதியை வாசித்தல்.

 நாளிதழ் செய்தி துணுக்குகளை வழங்கி வாசிக்கச் சொல்லுதல்.

 வாரம் ஒரு கதைப் புத்தகத்தைக் கட்டாயமாக வாசிக்கச் சொல்லுதல்.

5.0 சிக்கலைக் களைவதற்கான கால அளவு

 இச்சிக்கலை அடுத்த வகுப்பிற்குள் நான் களைய எனக்கு மூன்று நாட்கள் தேவைப்படும்.

இச்சிக்கலை முறையாகக் கையாள 20.01.2023 வரையிலும் தொடர் நடவடிக்கைகள்

அமல்படுத்தப்படும்.

6.0 வெற்றிக் கூறு

 மாணவியால் சில சொற்களை எழுத்துக் கூட்டாமலே, சரளமாக வாசிக்க முடியும் என்ற நம்பிக்கை

இருக்கிறது. மாணவியிடம் வாசிக்கும் ஆர்வம் அதிகரித்து வாரத்திற்கு இரண்டு கதைப்

புத்தகங்களை வாசிக்க தொடங்குவார் என எண்ணம் கொண்டுள்ளேன்.

7.0 தொடர் நடவடிக்கை

 நான் மாணவியின் நேரத்தைக் கருத்தில் கொண்டு குறைவான கால அவகாசத்தில் நிறைவான

நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
நாள் நேரம் நடவடிக்கை அடைவுநிலை

செவ்வாய் பள்ளி நேரம் முடிந்த  மாணவி ஆசிரியர்  மாணவியின் வாசிப்பில்


17.01.2023 பிறகு : வழங்கிய சில முன்னேற்றம்

மதியம் 01.05 முதல் சொற்களையும் உதாரண தெரிகின்றது.

01.30 வரை வாக்கியங்களையும்  உடனடி திருத்தங்களின்


வாசித்தல். வழி தவறுகள்
 ஆசிரியர் குறைந்தன.
அச்சொற்களுக்கும்
வாக்கியங்களுக்கும்
பொருள் விளக்குதல்.
புதன் பள்ளி நேரம் முடிந்த  மாணவி ஆசிரியர்  மாணவியால் சிறிய
18.01.2023 பிறகு : வழங்கிய இயங்கலை வாக்கியங்களைச்

மதியம் 01.05 முதல் கதைப்புத்தங்களை சரியாக வாசிக்க

01.30 வரை வாசித்தல். முடிகின்றது.


 ஆசிரியர் மாணவிக்குக்  படங்களின் வாயிலாக
கதையை விளக்குதல். வாசிக்கும் ஆர்வம்
வளர்வதோடு
கருத்துணர
முடிகின்றது.
வியாழன் பள்ளி நேரம் முடிந்த  மாணவி ஆசிரியர்  வாசிக்கும் போது
19.01.2023 பிறகு : வழங்கிய செய்தி மாணவி சரளமாக

மதியம் 01.05 முதல் துணுக்குகளை வாசித்தல். வாசிக்க முயற்சி

01.30 வரை  ஆசிரியர் செய்தி செய்வதோடு


துணுக்குகளில் உள்ள தன்னம்பிக்கையும்
கருத்துகளை மாணவிக்கு அதிகரிக்கின்றது.
விளக்குதல்.  தற்போது மாணவி
சுயமாகச் செய்தி
துணுக்குகளைத்
தெரிவு செய்து
வாசிக்க முயல்கிறார்.

You might also like