You are on page 1of 2

உன் பள்ளியில் தமிழ்மொழிக் கழகம் சிறுகதை பட்டறை ஒன்றனை ஏற்பாடு செய்து

சிறப்பாக நடத்தி முடித்தது.கழகத்தின் செயலாளர் என்ற முறையில் அந்நடவடிக்கையைப்

பற்றிய செயலறிக்கை ஒன்றனை எழுதுக.

சௌஜனா இம்பியான் தேசிய இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகத்தின் சிறுகதை

பட்டறை செயலறிக்ககை

1.0 தொடக்கம்

சௌஜனா இம்பியான் தேசிய இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழி கழகம் ஏற்பாடு

செய்த சிறுகதை பட்டறை கடந்த 21 ஆம் திகதி மார்ச் திங்கள் 2023 ஆம் அன்று மிகச்சிறப்பாக

பள்ளி மண்டபத்தில் நடந்தேறியது.இப்பட்டறை காலை 8.00 மணி தொடங்கி பகல் 1.00

மணிக்கு இனிதே முடிவுற்றது.

2.0 திறப்புவிழா

இச்சிறுகதை பட்டறையை பள்ளியின் முதல்வர் திரு.சுரேந்நதிரன் அதிகாரப்பூர்வமாகத்

திறந்து வைத்துத் திறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில் மாணவர்களுக்குப் சிறுகதை

எழுதுவதின் முக்கியத்துவதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.தொடர்ந்து, மாணவர்கள்

வார, மாத சஞ்சிகைகளுக்கும் நாளிதழ்களுக்கும் சிறுகதைகள் எழுதி அனுப்ப வேண்டுமென

கேட்டுக் கொண்டார்.நிகழ்வின் அதிகார்ப்பூர்வத் திறப்புவிழா முடிந்தவுடன் கழகத்தின்

ஆலோசகர் ஆசிரியை திருமதி. மலர்விழி பள்ளி முதல்வருக்கு மாலை அணிவித்துச் சிறப்புச்

செய்தார்.

3.0 நடைபெற்ற நிகழ்வுகள்


தொடர் நிகழ்வாக,சிறுகதை பட்டறையை ஆசிரியர் திரு.தமிழன்பன் வழி

நடத்தினார்.அவர் சிறுகதை எழுதும் அமைப்பை மாணவர்களுக்கு தெள்ளத் தெளிவாக

எடுத்துரைத்தார்.தொடர் நடவடிக்கையாக, ஐயா திரு.தமிழன்பன் பட்டறையில் கலந்து

கொண்ட மாணவர்களுக்குச் சில எடுத்துகாட்டு சிறுகதைகளை வழங்கி அச்சிறுகதைகளில்

காணப்படும் குறை நிறைகளைக் கண்டறியச் சொன்னார்.மாணவர்கள் கண்டறிந்த

குறைகளைத் திருத்த துணைப்புரிந்தார்.திருத்திய சிறுகதைகளை மாணவர்கள் குழு

வாரியாகப் பிற மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர்.அடுத்த இடுபணியாக ஆசிரியர்

மாணவர்களுக்கு சிறுகதை தலைப்பு ஒன்றனை வழங்கி சிறுகதை எழுத

பணித்தார்.மாணவர்கள் சிறுகதை எழுதும் பொழுது ஆசிரியர் தமிழன்பன் மாணவர்களுக்கு

வழிகாட்டினர்.அனைத்து மாணவர்களின் எழுத்துப் படிவங்களைத் திரட்டி திரட்டேடாக

உருவாக்கினார்.காலை மணி 10.30 அளவில் மாணவர்களுக்கு தேநீரும்,சிற்றுண்டியும்

வழங்கப்பட்டது.பட்டறை காலை மணி 11.00 அளவில் தொடரப்பட்டது.சிறப்பாகக் சிறுகதை

எழுதிய மூன்று மாணவர்களுக்கு ஆசிரியர் திரு.தமிழன்பன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

You might also like