You are on page 1of 10

லோகேஸ்வர் த/பெ கிருஷ்ணன் குட்டி

நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,


கோத்தாதிங்கி
ஆசிரியர் பணி ஒரு அறப்பணி, அதற்கு உண்ணை அற்பணி

சூரியன் தனது வேளையினைச் செவ்வனே செய்து கொண்டிருப்பதை

இரசித்த வண்ணமாக தனது நீல வர்ண காரை செம்மண் சாலையில்

வேகமாகச் செலுத்தி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள் ஆசிரியர்

சரிதா. காலை மணி நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடந்தது.

மின்சாரக் கம்பத்தில் வெகுநேரம் களைத்து அமர்ந்திருந்த

சிட்டுக்குருவியின் படபடப்பு மட்டும் அதீத ஒசையாகக் கேட்டுக்

கொண்டிருந்தது. தான் பணிப்புரியும் பள்ளி மக்கள் கூட்டம் இல்லா

இடத்திலும் தொழிற்சாலைகளிடமிருந்து விடிவு பெற்று இருப்பதாலும்

காலை பொழுதினில் பச்சைக் கம்பலம் விரித்தாற் போல புற்கள்

நிறைந்து, பனி மூட்டம் படர்ந்து, பல வகையான குருவிகளின் ரீங்கார

ஒசையோடு ஒவ்வொரு வழிப்போக்கரின் வருகையையும் முகம் மலர

சிரிப்போடு வரவேற்பது போல் மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும்

அக்கம்பத்தின் வரவேற்பு.

மறு திசையில் “தி.ச்.ஆர்” ராகாவில் உதயாவும் ஆனந்தாவும் பள்ளி

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் பற்றி விரிவாக பேசிக்கொண்டிருந்தனர்.

அதை கேட்ட சரிதாவிற்கு நேற்று பள்ளியின் நடந்த மனதை வருட்டிய

சம்பவம் ஒன்று ஞாபகம் வந்து வருத்தப்படச் செய்தது. அதைப் பற்றி

சிந்தித்த வண்ணமாக காரை மெதுவாக ஓட்டுனாள்.


லோகேஸ்வர் த/பெ கிருஷ்ணன் குட்டி
நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
கோத்தாதிங்கி
கணித பாட வேளையின் போது தனது மாணவனை நேற்று கடிந்து

கொள்ள வேண்டியதாயிற்று. ஒரு மாதத்தில் பல முறை பள்ளிக்கு

மட்டம் போடுவது மட்டுமில்லாமல் பாடத்தைச் சரியாக செய்யாமலும்

தனது புத்தகங்களை வட்டிலேயே


ீ வைத்து விட்டு வரும் தனது

மாணவனை எண்ணச் செய்வது என்று அறியாது வகுப்பறையில்

நுழைந்தாள். குமரன் கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு மாணவன்.

இப்பொழுது குடும்ப பிரச்சனைகளால் தனது கல்வியில் மற்றவர்களை

பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்குக் கல்வியில் பின்

தங்கலானான். உடல் நலமற்ற தாயை மற்றும் மது அருந்தும்

தகப்பனின் அரவணைப்பில் அடிப்படை வசதிகள் குறைந்த வட்டில்


வாழ்ந்து வருகிறான். செம்மண் சாலையின் நீர் பட்டால் எப்படி

இருக்குமோ அப்படி ஒரு வர்ணத்தில் பள்ளி காலணியை அணிந்து

கொண்டு கிழிந்து தொங்கும் பள்ளிச் சின்னம் கொண்ட பள்ளி

ஆடையையும் அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்திருந்தான். குமரனின்

தாயார் எவ்வளவோ அறிவுரைக் கூறியும் அவன் கேட்காமல் வனே


பள்ளிக்கு மட்டம் போட்டு கல்வி கற்காமல் திரிந்து வருவதை ஆசிரியர்

சரிதா அறிவார். முதல் வேலையாக அனைவருக்கும் வணக்கத்தைக்

கூறு மூன்று நாட்கள் பள்ளிக்கு வராத தனது மாணவன் குமரனைக்

கண்டிக்காமல் முகம் மலர அவனைப் பார்த்துச் சிரித்து நலம்

விசாரித்தாள். மாணவர்கள் குறைவாக இருப்பதனால் இரண்டு

வகுப்புகள் ஒன்றாக சேர்த்து படித்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்


லோகேஸ்வர் த/பெ கிருஷ்ணன் குட்டி
நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
கோத்தாதிங்கி
பலதரப்பட்ட மாணவர்களின் நிலைக்கேட்ப படித்து கொடுத்தாக

வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்ட பள்ளிகளின் பட்டியலில் இந்த

பள்ளியும் ஒன்று. நேரத்தைத் தாழ்த்தாமல் தயார் செய்து கொண்டு

வந்த பாடத்தைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். மாணவர்களும்

போருக்குப் புரப்படுவது போல் தங்களது பொருட்களைப் புத்தகப்

பையில் இருந்து எடுத்து மிகவும் மும்முறமாக ஆசிரியர் சொல்லிக்

கொடுக்கும் பாடத்தை முழு கவனத்துடன் கற்க ஆரம்பித்தனர்.

பாடத்தைச் சொல்லிக் கொடுத்த பிறகு மாணவர்களுக்கு வட்டுப்பாடம்


கொடுத்து விட்டு ஒவ்வொரு மாணவரின் புத்தகத்தையும் சரிப்பார்க்க

ஆயத்தமானார் ஆசிரியர். குமரனிடம் புததகங்களை வாங்கி சரிப்பார்க்க

ஆரம்பித்த போது அவன் புத்தகம் எடுத்து வராமல் ஆங்கில் மொழி

புத்தகத்தில் கணித பாடங்களை எழுதிக் கொண்டிருப்பது தெரிய

வந்தது. “குமரா உன்னுடைய கணித புத்தகங்கள் எங்க? எத்தனை

முறை உன்கிட்ட நான் சொல்றது பாடம் செய்யலனாலும் பரவால;

ஆனா புத்தகத்த எடுத்து வரனும்னு” என கோபமாக வினவினார்.

குமரனோ “இல்லை டீச்சர், நான் பாடம் சென்ஞேன், ஆனா வட்டுலே


மறந்து வச்சிட்டு வந்துட்டேன் என பயப்படும் படி கண்கள் பிதுங்க

கூறினான். “எங்க உனோட புத்தகப்பை, எடுங்க நான் பார்க்குறேன்”

என்று கண்டிப்பான குறளில் ஆசிரியர் சரிதா கூறினார்.

புத்தகப்பையைக் திறந்து பார்த்தால், சீனியைக் கண்டால் மலைப் போல்

குவிந்து இருக்கும் எறுப்புகளின் கூட்டம், என்றோ சாப்பிட்ட


லோகேஸ்வர் த/பெ கிருஷ்ணன் குட்டி
நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
கோத்தாதிங்கி
ரொட்டியின் துண்டு பூஞ்ஞைக் காளான் நிறைந்து காணப்பட்டது,

புத்தகங்கள் யாவும் கிழிந்து பக்கங்கள் யாவும் வெளிவந்து

அலங்கோலமாக காட்சியளித்தது. அனைத்து கணித புத்தகங்களும்

புத்தகப்பையினுல் இருந்த்தது ஆனால் பாடம் ஏதும் செய்யாமல்

அப்படியே சிதறிக் கிடந்தது. புத்தகப் பை முழுவதும் ஒரே குப்பென்ற

நாற்றம். அனைந்து புத்தகத்தையும் வெளியே எடுத்து விட்டு,

புத்தகப்பையைச் சுட்டெரிக்கும் சூரியனின் வெயிலில் கொண்டு காயப்

போடச் சொன்னார் ஆசிரியர். பிறகு, குமரனைக் கூப்பிட்டு கூறிய

பொய்கள் அனைத்திற்கும் நன்றாக கண்டிக்க ஆரம்பித்தார்.

ஆசிரியர் சரிதாவின் மனம் மிகவும் வேதனைக்கு உள்ளாகியது.

ஏனென்றால், முன்பு குமரன் கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற

மாணவன். அவன் சிறப்பாக கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்

என்பதற்காகவே அவனுக்கு ஒவ்வொரு வருடமும் பள்ளியின்

சீறுடைகள், பாடத்திற்கு வேண்டிய புத்தகங்களையும் வாங்கிக்

கொடுத்து, பள்ளியில் ஆசிரியர்கள் நகல் எடுக்கச் சொல்லும்

பாடங்களை நகல் எடுக்க உதவி செய்து கல்வி கற்க ஆசிரியர் சரிதா

நிறைய உதவிகள் செய்துள்ளார். அதனால், குமரனுடைய பொய்கள்

யாவும் அவரை இன்று பொங்கி எழச் செய்துவிட்டது. கண்டித்த

குமரனைப் பார்த்தார். பாசத்திற்காக அவனுடைய அகன்ற கண்கள் சிறு

குளத்தில் நீர் தேங்கி வழிவது போல் காணப்பட்டது. அவனை அருகில்

அழைத்து அன்பாக பேசத் தொடங்கினார். “இங்க பாரு ஐயா, இப்ப


லோகேஸ்வர் த/பெ கிருஷ்ணன் குட்டி
நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
கோத்தாதிங்கி
உள்ள கால கட்டதிலே நீ பெரிய மனிஷனா ஆகி வேலைத் தேடரப்போ

படிப்பு ரொம்ப முக்கியமானதா இருக்கும். இப்போவே வேலை கிடைக்க

திண்டாட்டமா இருக்கு. உனக்கு என்ன பிரச்சனை. நிறைய பேரு

வெளியிலே படிக்க முடியாம ரொம்ப கஷ்ட்டபட்டுக்கிட்டு இருக்காங்க.

உனக்கு எல்லாம் கிடைக்குது. இங்க ஆசிரியர்களும் உன்னை நல்லா

பாத்துக்கிறோம். நீ நல்லா படிச்சா முதல்ல நான்தா ரொம்ப

சந்தோஷப்படுவேன். ஏன்னா நானும் உன்னைப் போல கிராமத்துல தா

பொறந்து வளர்ந்தேன். கஷ்ட்டம் னா என்னானு தெரியாத வயசில

இரண்டு நாள் சாப்பிடாம கூடும் இருந்து எனக்கு வேண்டிய புத்தகங்கல

வாங்கி படிப்பேன். உன் குடும்பம் கஷ்ட்டத்தே புரிஞ்சி நீ நடக்கனும்.

நல்லா படிச்சி பட்டதாரி அயிட்டு அம்மா அப்பாவே நல்லா வச்சி

பாத்துகனும்” என தனது மனம் நிறைந்த வேதனைகளையும்

அறிவுரைகளையும் கூறினார் ஆசிரியர் சரிதா. அதனைக் கேட்டு தனது

தவற்றை உணர்ந்த குமரன் ஆசிரியரிடம் கண் கலங்க வெள்ளை நிற

முத்துகள் அருவியிலிருந்து ஊற்றுவது போல் கண்களின்

பெருக்கெடுக்க்க ஆரம்பித்தது. ஆசிரியரின் கைப்பற்றி மன்னிப்புக்

கேட்டான். இனிமேல் முன்பு போல நான் நன்றாக படிப்பேன் என

உறுதிமொழி கூறினான்.

மதியம் பள்ளி முடிந்ததும் குமரன் ஆசிரியர் சரிதாவுடன்

பள்ளியிலேயே இருக்க அனுமதி கேட்டான். ஆசிரியரும் அவனின்

மாறுதலைக் கண்டு மிகவும் பூரித்துப் போனார். மனதினுல் ஒரு பெரிய


லோகேஸ்வர் த/பெ கிருஷ்ணன் குட்டி
நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
கோத்தாதிங்கி
நீர்விழ்ச்சியில் நீர் பெருகி வழிவது போல் மனம் நிறைய சந்தோஷமும்

நிம்மதியும் நிறைந்திருந்தது. தான் கொண்டு வந்த ரொட்டித்

துண்டுகளின் சிலவற்றைக் குமரனோடு பகிர்ந்து சாப்பிட்டு விட்டு

அவனுடைய கிழிந்த அனைத்து புத்தகங்களையும் ஒட்டி அட்டைப்

போட்டு கொடுத்தார். குமரனோ தான் செய்யாத அனைத்துப்

பாடங்களையும் ஆசிரியரின் உதவியோடு செய்து முடித்தான். மணி

ஐந்து ஆகியது. குமரனை ஏற்றிக் கொண்டு பள்ளியில் இருந்து

புரப்பட்டார் ஆசிரியர் சரிதா. அவன் வட்டிற்குச்


ீ செல்லும் வழியில்

அவனிடம் பேசிக் கொண்டே சென்றார். “டீச்சர், ரொம்ப நன்றி டீச்சர்.

எங்க அம்மாவுக்கு அடுத்து என்ன பாசமா பாத்துக்கிட்டது நீங்கதா”

எனக் கூறு தேம்பி அழ ஆரம்பித்தான். “இனிமே கண்டிப்பா பள்ளிக்குத்

தவறாம வந்துருவேன். எல்லா பாடத்தையும் முடிச்சி கண்டிப்பா

ஆசிரியர்கள் கிட்ட நல்ல பேர் வாங்குவேன். கல்லூரிக்கு போய் உங்கள

மாதிரியே படிச்சி நானும் நிறைய மாணவர்களுக்கு உதவி செய்வேன்.

உங்கள மாதிரியே அவங்கள நல்லா பாத்துக்குவேன், அறுவுரை கூட

சொல்லுவேன். உங்கள மாதிரி டீச்சர் என்ன மாதிரி எல்லாருக்கும்

கிடைக்கனும்னு நா சாமிக்கிட்ட வேண்டிக்குவேன்” என தனது

கல்லங்கபட மற்ற மனதில் உள்ளதைச் சொல்லி முடித்தான். இதைக்

கேட்ட ஆசிரியர் சரிதாவிற்கு மிகவும் சந்தோஷமாக ஆயிற்று. அந்த

பிஞ்சி முகத்தைப் பாசம் நிறைந்த கண்களால் பார்த்து அவனது

தலையைக் கோதி விட்டு தட்டிக் கொடுத்தார்.


லோகேஸ்வர் த/பெ கிருஷ்ணன் குட்டி
நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
கோத்தாதிங்கி
குமரனின் வடு
ீ வந்தடைந்தனர். மழை பேய்ந்து விட்ட அறிகுறி நன்றாக

செம்மண் சாலை அனைவருக்கும் காட்டியது. ஆங்காங்கே குழியும்

செம்மண் நீர் நிறைந்த வண்ணமாக காட்சியளித்தது. குமரனின் வட்டின்


வெளியே அவனுடைய அப்பா படுத்திருந்தார், அம்மா உட்கார்ந்து

மீ னைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். ஆசிரியர் சரிதாவைப்

பார்த்ததும் அவனுடைய அம்மா தனது கைலியில் கையை துடைத்து

விட்டு அருகில் வந்து வணக்கம் கூறினார். அவனுடைய அப்பா எழுந்து

தல்லாடிய வண்ணம் ஆசிரியரை நோக்கி வந்தார். “வணக்கம். நான்

குமரனின் கணித ஆசிரியர். அவன் பாடம் ஏதும் செய்து முடிக்காததால்

கொஞ்சம் கண்டித்து விட்டு, அவனைப் பாடங்களைச் செய்து முடிக்க

வைத்த பிறகு கூட்டிக்கிட்டு வந்தேன். இனிமேல் பள்ளிக்குத் தவராம

அனுப்புங்க, பள்ளிக்கு வரலேனு சொன்ன என்ன தொலைப்பேசியில்

கூப்பிடுங்க. நான் வட்டுக்கு


ீ வந்து கூட்டிட்டு போறேன்” என்று

பணிவாக கொஞ்சும் கண்டிப்பில் கூறினார். இதனைக் கேட்ட அவனது

தாய் “ரொம்ப நன்றி டீச்சர். எனக்கும் அவன் நல்லா படிக்கனும்னு

ரொம்ப ஆசை டீச்சர். இப்போதா கொஞ்சம் நாளா ஒழுங்கா படிக்க

மாட்ரான். பள்ளிக்கு எழுப்பனா காட்டுக்குள்ள போய் ஒழிஞ்சிக்கிட்டு

வட்டுக்கு
ீ வர மாட்ரான்” என கெஞ்சும் குரலில் கூறினர்.

திடீரென குமரனின் தந்தை குறுக்கிட்டு மறியாதை இல்லாமல் பேச

ஆரம்பித்தார். மதுவின் நாற்றம் பேய்ந்து முடிந்த செம்மண் சாலையில்

தேங்கியிருக்கும் நீரின் நாற்றத்தை விட மிகவும் அதிகமாக இருந்தது.


லோகேஸ்வர் த/பெ கிருஷ்ணன் குட்டி
நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
கோத்தாதிங்கி
“இந்தா டீச்சர், என் பையன் படிக்கிறான் இல்ல படிக்காம போறான்.

அதை கேட்க நீ யாறு. அவன் படிக்கலனா விட வேண்டியது தானே?

அவனை அடிக்க உனக்கு யாரு உரிமை கொடுத்தா என்று சினமாக

மப்பு மந்தார குரலில் நேராக நிற்க முடியாமல் தல்லாடிய வண்ணம்

கேட்கலானார். இதைக் கேட்ட ஆசிரியரின் மனது மிகவும்

கவலைக்கிடமாக மாறியது. குமரனின் அம்மா அவனுடைய

தந்தையாரைத் தடுத்தும் அவர் பேசிக் கொண்டேச் சென்றார்.

குமரனையும் போட்டு அடிக்க ஆரம்பித்தார். “நீ இனிமே எங்கேயும்

போக வேணாம். ஒழுங்கா போய் அம்மா கூட மரம் வெட்டி பழகுற.

படிச்சி கிழிச்சதுலா போதும் என்றார். இதனைப் பார்க்க முடியாத சரிதா

உடனே அவ்விடத்தை விட்டு புரப்பட்டார். குமரனின் அம்மாவோ

ஆசிரியர் சரிதாவைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு மன்னிபுக்

கேட்டார். மனவேதனையுடனும் ஏமாற்றத்துடனும் தனது வட்டை


நோக்கி புரப்பட்டார்.

சரியாக மணி ஏழு பதினைந்தைக் காட்டியது கடிகாரம். பள்ளியை

வந்தடைந்தார். நேற்று நடந்த சம்பவத்தையும், குமரனின்

உறுதிமொழியையும், அவனுடைய அம்மாவின் கவலையையும்

யோசித்த அவருக்கு அழுகையே வந்ந்துவிட்டது. பள்ளியின் உள்ளே

சென்றதும், முதலில் ஆசிரியர் சரிதாவின் கண் குமரனை மட்டும்

அலையைப் போல தேடியது. பெருத்த ஏமாற்றம் காரணம் அவன்

பள்ளிக்கு வரவில்லை. தனது இடத்திற்குச் சென்று இடிந்து போய்


லோகேஸ்வர் த/பெ கிருஷ்ணன் குட்டி
நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
கோத்தாதிங்கி
உட்கார்ந்தார். தன்னுடைய உதவியினையும் அக்கறையையும் தப்பாக

புரிந்து கொண்ட குமரனுடைய தந்தையின் பேச்சைக் கேட்டு குமரன்

எப்படிச் சென்றால் எனக்கென்ன என்ற எண்ணத்திற்கு வந்தார் ஆசிரியர்

சரிதா.

தன்னை இரு கண்கள் மீ ண்டும் மீ ண்டும் ஆசிரியரின் அறைப் பக்கமாக

பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தார். சட்டென்று ஏரெடுத்துப்

பார்த்தார். அக்கண்கள் குமரனுடையது. அவன் முகம் நிறைய

சந்தோஷத்துடன் ஆசிரியர் சரிதாவைப் பார்த்து சிரித்தான். “நான்

உள்ளே வரலாமா டீச்சர்” என்று மெதுவாக கேட்டான். ஆசிரியர் சரிதா

தலையை ஆட்டியதும் உள்ளே ஓடி வந்து இதர ஆசிரியர்கள்

இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் ஆசிரியர் சரிதாவின் கையைப்

பிடித்துக் கதறி அழ ஆரம்பித்தான். “எங்க அப்பா பேசியது தப்பு டீச்சர்,

மன்னிச்சிருங்க. அவருக்காக என்னை ஒதுக்கி மட்டும் வச்சிராதிங்கே.

நான் நல்லா படிக்கனும். உங்க பேச்சைக் கேட்டு நடந்து நான்

கண்டிப்பா ஒரு பட்டதாரியா வந்து உங்களுக்குப் பெருமைச் சேர்ப்பேன்”

என்று தேம்பி அழுந்து கொண்டே கூறினான். பேச வார்த்தைகள்

இல்லாமல் குமரனின் கண்களில் கண்ண ீரைக் கண்டதும் அவனை

அணைத்து “யாரு என்னா சொன்னாலும் நான் உன்னை விடமாட்டேன்.

எனக்கு உன் மேல் எல்லா உரிமையும் இருக்கு. ஏனா நீ என் மாணவன்.

நான் உன்னைய கண்டிப்பா வாழ்க்கையில சாதிக்க வைப்பேன்” என்று

கூறி அவனுக்கு நம்பிக்கை ஊட்டினார். பாட வேளை தொடங்கியது.


லோகேஸ்வர் த/பெ கிருஷ்ணன் குட்டி
நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி,
கோத்தாதிங்கி
குமரன் ஆசிரியருக்கு நன்றி கூறி வகுப்பறைக்குள் சென்றான். ஆசிரியர்

சரிதாவும் தனது அறப்பணியைச் செவ்வனே செய்ய பாட புத்தகங்களை

எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ஆண்டு 5-ஐ நோக்கி.

You might also like