You are on page 1of 5

ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளியின் வரலாறு

1957-ஆம் ஆண்டு இத்தமிழ்ப்பள்ளி ஜாலான் சுங்கை சிப்புட், கோத்தா


திங்கி எனும் ஒரு தனியார் நிலத்தில் இந்தியர் சங்கத்தால்
கட்டப்பட்டது. அப்போது, அப்பள்ளியின் முதல் தலைமையாசிரியராக
ஆசிரியர் திரு. கண்ணன் அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். 20
மாணவர்களுடன் இப்பள்ளியில் கற்றல் கற்பித்தல் நடைபெற்றது.
ஆரம்பத்தில் ஒர் ஆசிரியரின் துணையுடன் நடத்தப்பட்ட இப்பள்ளி,
தொடர் ஆண்டுகளின் ஆசிரியரின் எண்ணிக்கை 2 மற்றும் 3-ஆக
அதிகரித்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அங்குத் தலைமைப்
பொறுப்பில் இருந்த ஆசிரியர் திரு. கண்ணன் பிறகு வேறொரு
பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு அடுத்து, ஆசிரியர் திரு. சாமுவேல்


தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார். 3 ஆண்டுப் பணிக்குப்
பிறகு அவரும் வேறொரு பள்ளிக்கு மாற்றலாகி சென்றார்.
அவருக்குப் பின் ஆசிரியர் திரு. குப்புசாமி 1964-ஆம் ஆண்டு
இப்பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார்.

முன்னாள் ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர்


அமரர் ஆ.வி.அருணாசலம், தலைமையாசிரியர் திரு. அ. குப்புசாமி
அவர்களின் முயற்சியாலும், திரு. ஜெகநாதன் ( மேலாண்மை
குழுவின் இணைத்தலைவர் ), திரு. சக்திவேல் ( அரசாங்க ஊழியர் )
மற்றும் ஜெ.பி.ராமு ( ம.இ.கா ) போன்றோரின் உதவியுடன் மாவட்ட
அதிகாரியும் இணைந்து இப்பள்ளி சீர் செய்யப்பட்டது. மேலும்,
இவரின் சேவை காலத்தில் ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளி ஆறு
வகுப்பறைகள் கொண்ட கட்டடமாக எழும்ப முயற்சி செய்யப்பட்டது.
ஏறக்குறைய 1970-ஆம் ஆண்டு ஜாலான் சுங்கை சிப்புட்டில்
இயங்கிக் கொண்டிருந்த ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளி தற்போது
இருக்கும் இடத்திற்கு மாற்றம் கண்டது. மிக கம்பீரமாக, ஜொகூர்
மாநிலத்திலேயே அக்காலக் கட்டடத்தில் இவ்வாறு வேறு எந்தப்
பள்ளியும் கட்டாத நிலையில் இப்பள்ளி புதியக் கட்டடத்தைப்
பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார், 200 மாணவர்களைக்
கொண்டு இப்பள்ளி இரு வேளைப் பள்ளியாக இயங்கியது. சுற்று
வட்டாரத்திலிருந்து பல மாணவர்கள் இங்கு வந்து கல்விக் கற்றனர்.

தொடர்ந்து, தலைமையாசிரியர் திரு. அ.குப்புசாமி அவர்கள்


பள்ளி விளையாட்டுப் போட்டியை மிகச் சிறப்பாக அருகிலுள்ள
லக்சமணா திடலில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு
ஆண்டும் பள்ளி விளையாட்டுப் போட்டி விமரிசையாக நடத்தப்பட்டு
வந்தது திரு.அ.குப்புசாமி அவர்கள் சுமார் 10 ஆண்டுகள்
இப்பள்ளியில் செவ்வனே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தலைமையாசிரியர் திரு.து.சண்முகம் அவர்களின்


கூற்றுப்படி 29.12.1972-ஆம் திகதி முதல் திரு. டி. பால் இப்பள்ளியின்
தலைமையாசிரியராகப் பணிப்புரிய மாற்றம் செயப்பட்டார். தொடக்க
நிலையில் 4, 5 மற்றும் 6-ஆம் வகுப்பு மாணவர்கள்
பெரும்பான்மையினர் ஆர். இ. எம், பெலப்பா, தைத்தாக் மற்றும்
பாசாக் தோட்டத்திலிருந்து வந்தவர்களாவர். அக்காலக்கட்டத்தில்
படிநிலை இரண்டு மாணவர்கள் சுற்று வட்டார பள்ளிகளிலிருந்து
இங்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டு கல்வி பயின்றனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

1981-ஆம் ஆண்டு இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை


320-ஆக உயர்ந்தது. சுமார் 18-க்கும் மேற்பட்ட பயிற்சிப் பெற்ற
ஆசிரியர்கள் இங்குக் கற்றல் கற்பித்தலை மிக சிறப்பாக
நடத்தியுள்ளனர். அவர்களில் திருமதி. சரஸ், திருமதி. காமாட்சி,
திருமதி. தமயந்தி, திருமதி. மகேஸ்வரி, திருமதி. சுகுணா, திரு.
ஆறுமுகம், திரு. சண்முகம், திரு. செல்லப்பன், திரு. கிருஷ்ணன்,
திரு.சந்நியாசி, திரு.மாரிமுத்து, திரு.மு.இராமு ஆகியோரும்
அடங்குவர்.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து,


அப்போதைய தலைமையாசிரியராக இருந்த திரு. அர்ஜுணன்
அவர்களால் பள்ளிக்குப் புதிய இணைக் கட்டடம் கோரி மனு
செய்யப்பட்டது. அதன் பின்னர், 1998-ஆம் ஆண்டு
தலைமையாசிரியராக இருந்த திரு. மருதையா அவரின்
பணிக்காலத்தில் 4 வகுப்பறைகளைக் கொண்ட இணைக் கட்டடமும்
பாலர்ப் பள்ளியும் பள்ளியின் அருகாமையிலேயே கட்டப்பட்டது.
அதன் பின்னர், அப்போது ம.இ,.கா கோத்தா திங்கி தொகுதி
தலைவராக இருந்த திரு. சக்திவேல் அவர்களின் முயற்சியால்
டைமன் மேம்பாட்டுத் திட்டத்தில், தாஜூல் தமிழ்ப்பள்ளிக்கு இடம்
வேண்டும் என்று பல இன்னல்களுக்குப் பிறகு அவர் அனுமதி
பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர், 2008-ஆம் ஆண்டு பள்ளியின்


தலைமாசிரியராகப் பணியாற்றி வந்த ஆசிரியை திருமதி. இரா.
திலகவதி அவர்களின் முயற்சியாலும் பள்ளியின் அப்போதைய
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. துரைராஜூ அவர்களின்
ஒத்துழைப்பினாலும் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்ட
அரசாங்கத்திடம் மனு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே, நமது பள்ளிக்கு
டைமன் குடியிருப்புப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததால்
அங்குப் புதிய கட்டடம் கட்ட அரசாங்கத்தின் முழு மானியத்தோடு
ஒப்புதல் கிடைக்கப்பட்டது.

பின்னர், தலைமையாசிரியரின் மாற்றம் நடைபெற்றது.


தலைமையாசிரியர் திரு. நடராசன் அவர்கள் இப்பள்ளிக்குப்
பொறுப்பேற்று வந்து, புதிய கட்டடத்திற்கான வேலைகளைத்
தொடங்க அவரும் பல முயற்சிகள் எடுத்துள்ளார். இன்று
அவ்வேலைகள் அனைத்தும் பூர்த்தியாகி தாமான் டைமனில் மிக
கம்பீரமான கட்டடமாக வற்றிருக்கிறது.
ீ கட்டடத் திறப்பிற்கான
வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

பழைய பள்ளி கட்டடம்

புதிய பள்ளி கட்டடம்

பள்ளியின் வரலாற்றைத் திருத்தம் செய்தவர்கள்: தாஜூல்


தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் முனைவர்
அ.குப்புசாமி, முன்னாள் தலைமையாசிரியர் திரு. து. சண்முகம்
மற்றும் ஆசிரியை குமாரி.செ.மங்களேஸ்வரி

You might also like