You are on page 1of 6

பள்ளி வரலாறு

தேசிய வகை கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி


1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இப்பள்ளி கூலாய்
மாவட்டத்தின் கூலாய் ஆயில் பாம் தோட்டத்தில் அமைந்துள்ளது.
இப்பள்ளியானது தோட்ட அலுவலகத்தின் பக்கத்தில் உள்ள சில
அறைகளில் மட்டுமே தொடங்கப்பட்டது. அச்சமயம் இப்பள்ளியில்
ஏறக்குறைய 100 மாணவர்கள் பயின்றனர், 10 ஆசிரியர்கள் பணி
புரிந்தனர். ஆயில் பாம் தோட்டம் மற்றும் அருகிலுள்ள வீடமைப்புப்
பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் இப்பள்ளியில் பயின்றனர்
இப்பள்ளி. 66 ஆண்டு பழைமை வாய்நத ் கட்டடத்தில் செயல்பட்டது.

இப்பள்ளி வசதி குறைவான சூழலில் பழைய கட்டடத்தில்


செயல்பட்டிருந்தாலும், 13 தலைமையாசிரியர்களின் சிறப்பான
தலைமைத்துவம் மற்றும் திறமையான ஆசிரியர்களின்
செயல்பாட்டின் மூலம் இப்பள்ளி முறையான நிர்வாகத்துடன்
செயல்பட்டு மாணவர்களின் அடைவுநிலையில் நிறைய
வெற்றிகளைப் பெற்றுள்ளது. மாணவர்கள் கற்றல் கலைத்திறனிலும்
புறப்பாடத்திலும் சிறந்து விளங்கினர். பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
பள்ளி மேலாளர் வாரியம், அரசாங்க மற்றும் சமூகத்தலைவர்களின்
சேவையும் உதவியும் இப்பள்ளியின் மேம்பாட்டிற்கு மிகவும்
உறுதுணையாக அமைந்தது. தோட்டப்புறத்தில் அமைந்துள்ள ஒரு
பள்ளியாக இருந்தாலும், வெற்றி சுவடுகளைப் படைத்த ஒரு சிறந்த
பள்ளியாக கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
விளங்குகிறது.

அயராத முயற்சிக்குப் பிறகு ஜனவரி 2021 முதல் கூலாய்


ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்தில் சிறப்பாகச்
செயல்படத் தொடங்கியது. பள்ளியின் பழைய கட்டடத்திலிருந்து
300 மீட்டர் தொலைவில் இப்புதிய கட்டடம் அமைந்துள்ளது.
தற்போது இப்பள்ளியில் ஆறு வகுப்பறைகள், குறைநீக்கல் அறை,
நூலகம், கணினி அறை, அறிவியல் அறை, தொழில் நுட்ப அறை,
சுகாதார அறை, இரவல் பாடப்புத்தக அறை, புறப்பாட நடவடிக்கை
அறை, பயிற்றுத் துணைப் பொருள்கள் அறை, விளையாட்டு
உபகரண அறை, சிற்றுண்டிச்சாலை, அலுவலகம், ஆசிரியர் அறை,
சிந்தனை செறிவாக்க அறை மற்றும் கழிப்பறைகள் முறையாக
அமைக்கப்பட்டுள்ளன. முறையான கற்றல் கற்பித்தலுக்கு மிகவும்
ஏற்புடைய சூழலில் அமைக்கப்பட்ட இப்புதிய கட்டடத்தில்
மாணவர்கள் வசதியாக கல்வி கற்கவும் ஆசிரியர்கள் நிறைவாகப்
பணியாற்றவும் மிகவும் ஏதுவாக இருக்கிறது. பள்ளியின் புதிய
கட்டட மேம்பாட்டு முயற்சிக்கு அரசியல் தலைவர்கள், கல்வி
இலாகா, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர்
சங்க செயலவையினர், பள்ளி மேம்பாட்டு வாரிய செயலவையினர்
மற்றும் சமூகத்தினர் மகத்தான வகையில் பணியாற்றியுள்ளனர்.

தற்போது இப்பள்ளியில் தலைமையாசிரியர், மூன்று


துணைத்தலைமையாசிரியர்கள், 10 ஆசிரியர்கள், இரண்டு
அலுவலர்கள், 4 துப்புரவு பணியாளர்கள் மற்றும் 4 காவலாளர்கள்
சேவையாற்றுகின்றனர். தற்போது இப்பள்ளியில் 120 மாணவர்கள்
நேர்த்தியான கற்றல் சூழலில் பயில்கின்றனர். பள்ளியின் அருகில்
அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள பிள்ளைகள்
இப்பள்ளியில் பயில்கின்றனர்.

2018ஆம் ஆண்டு முதல் கூலாய் ஆயில் பாம் தோட்டத்


தமிழ்ப்பள்ளி, ‘உருமாற்றப்பள்ளி 25’ என்ற கல்வியமைச்சின் புதிய
திட்டத்தின் கீழ் இணைந்துள்ளது. உருமாற்றப்பள்ளி
செயல்திட்டங்களின் மூலம் இப்பள்ளியில் பல நவீன மற்றும் மிகவும்
ஆக்ககரமான திட்டங்களும் நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டு
வருகின்றது.

ஆக்ககரமான நிர்வாக முறை, தரமான ஆசிரியர்கள்,


மாணவர்களின் சிறந்த அடைவுநிலை மற்றும் பெற்றோர் நல்கை
திட்ட மேம்பாடு போன்ற அம்சங்களுக்குப் பள்ளி நிர்வாகம்
முக்கியத்துவம் வழங்கும் வகையில் இப்பள்ளி ஆக்ககரமாகச்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 21ஆம்


நூற்றாண்டு கல்வித் திட்டத்தின் மூலம் நவீன மற்றும் ஆக்ககரமான
முறையில் கற்றல் கற்பித்தல் நடத்தப்பட்டு நனிசிறந்த மாணவர்கள்
உருவாக்கப்படுகின்றனர். புறப்பாடப் பிரிவிலும் இப்பள்ளியின்
அடைவுநிலை தொடர்ந்து முன்னேற்றம் காண்கின்றது.
மாணவர்களும் ஆசிரியர்களும் மாநில மற்றும் தேசிய அளவில்
வெற்றி பெற்ற சான்றுகளும் உள்ளன. 65 ஆண்டு வரலாற்றில்,
இப்பள்ளி நிர்வாகம் கற்றல் கலைத்திறனுக்கும் புறப்பாடத்திற்கும்
முக்கியத்துவம் வழங்கி மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக
முன்னுரிமை வழங்கி வருகின்றது.

65 வருடமாகச் செயல்பட்டு வரும் கூலாய் ஆயில் பாம்


தோட்டத் தமிழ்ப்பள்ளி, சமுதாயத்தின் சிறந்த கல்விமான்களையும்
உயர்தர பதவி வகிக்கும் வெற்றியாளர்களையும் உருவாக்கிய ஒரு
புனிதக் கல்வித் தளமாக விளங்குகின்றது என்றால் அது
மிகையாகாது. தற்போது புதிய பொழிவுடன் புதிய கட்டடத்தில்
கம்பீரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கூலாய் ஆயில் பாம்
தோட்டத் தமிழ்ப்பள்ளி, மேலும் சிறப்பாகச் செயல்பட்டு ‘வேகத்தில்
விவேகம்’ என்ற சுலோகத்தின் அடிப்படையில் சிறந்த மாணவர்களை
உருவாக்கும் இலக்கை வெற்றிகரமாக அடைவதற்கு
உறுதியளிக்கின்றது.
SEJARAH SEKOLAH

Sekolah Jenis Kebangsaan Tamil Ladang Kulai Oil Palm yang


berusia 66 tahun ini ditubuhkan pada tahun 1955. Sekolah ini
terletak 40 km dari Bandar Johor Bahru. Sekolah ini berada di
kawasan Ladang Kulai Oil Palm yang terletak di daerah Kulai.
Pada awalnya, sekolah ini beroperasi di beberapa buah bilik yang
berhampiran dengan Pejabat Ladang Kulai Oil Palm dengan
berjumlah seratus orang murid dan sepuluh orang guru. Pada
masa permulaan sekolah ini, murid - murid daripada keluarga
pekeja Ladang Kulai Oil Palm telah belajar di sekolah ini.

Bangunan lama sekolah ini kekurangan kemudahan bilik


serta kemudahan fizikal. Bagunan sekolah juga kurang selamat
bagi penggunaannya disebabkan oleh ancaman anai - anai.
Walaupun terdapat cabaran-cabaran yang dihadapi oleh pihak
pengurusan sekolah, tetapi seramai tiga belas orang Guru Besar
yang berkhidmat di sekolah ini sejak tahun 1955 telah memimpin
sekolah ini dengan baik dan sempurna sehingga sekolah ini
mempunyai pencapaian dan keberhasilan murid yang baik serta
mengkagumkan .Para guru yang berwibawa juga telah
berkhidmat dengan penuh dedikasi terhadap perkembangan
kognitif dan pencapaian murid - murid sekolah ini. Pihak
Persatuan Ibubapa dan Guru (PIBG) serta Lembaga Pengelola
Sekolah (LPS) memainkan peranan penting dan memberi
sokongan dalam pengurusan sekolah. Sekolah ini juga telah
mencatatkan rekod keberhasilan yang baik serta menerima sijil-
sijil penghargaan daripada Kementerian Pendidikan Malaysia
(KPM) , Jabatan Pendidikan Negeri Johor (JPNJ) dan Pejabat
Pendidikan Daerah Kulai (PPD) selama ini.

Oleh kerana bangunan lama sekolah ini tidak mempunyai


kemudahan fizikal dan juga ancaman keselamatan, maka sekolah
ini dapat beroperasi di bangunan baharu mulai Januari 2021.
Bangunan baharu sekolah ini terletak 300 meter daripada
bangunan lama sekolah ini.
Bangunan baharu sekolah ini mempunyai 6 buah Bilik
Darjah, Bilik Pemulihan, Perpustakaan, Makmal Komputer,
Makmal Sains, Bengkel Reka Bentuk, Bilik Kesihatan, Bilik SPBT,
Bilik Gerakan Kokurikulum, Pusat Sumber, Setor Sukan, Kantin,
Pejabat, Bilik Guru, Bilik Pencetus Minda serta tandas.
Kemudahan bangunan baharu sekolah ini memberi
kesempurnaan dan keselesaan bagi menguruskan pembelajaran
dan pengajaran secara berkesan kepada murid - murid. Projek
bangunan baru ini telah diusahakan dan diberi sokongan oleh
Kementerian Pendidikan Malaysia, Jabatan Pendidikan Negeri
Johor, Pejabat Pendidikan Daerah Kulai, Pemimpin Politik,
Persatuan Ibubapa dan Guru, Lembaga Pengelola Sekolah serta
pihak komuniti.

Pada masa kini, terdapat seorang Guru Besar, tiga orang


Guru Penolong Kanan, sepuluh orang Guru, seorang Pembantu
Tadbir, seorang Pembantu Operasi, empat orang pekerja
pembersihan serta empat orang pengawal keselamatan sedang
berkhidmat di sekolah ini. Seramai 120 orang murid sedang
belajar dalam keadaan yang baik dan sempurna. Murid - murid
yang sedang belajar di sekolah ini datang dari taman-taman dan
kawasan kediaman yang berhampiran sepuluh kilometer
daripada sekolah. Ibubapa dan komuniti persekitaran memberi
sokongan padu demi kemajuan sekolah ini.

Pada tahun 2018, SJK Tamil Ladang Kulai Oil Palm telah
menyertai dalam Program Sekolah Transformasi (TS25), Kohort
3. Melalui program ini, pihak sekolah telah memberi keutamaan
dalam kepimpinan yang berkesan, kualiti guru, keberhasilan
murid dan Penglibatan Ibubapa dan Komuniti. Melalui amalan
program - program dan aktiviti TS25, maka pihak sekolah telah
mendapat impak yang baik dan berkesan dalam pencapaian dan
keberhasilan murid - murid. Pada tahun 2019, SJK Tamil Ladang
Kulai Oil Palm telah menjadi sekolah ikon TS25 dan melayan
sebanyak 20 buah sekolah yang hadir untuk program Penanda
Arasan anjuran Jabatan Pendidikan Negeri Johor. Era
perkembangan sekolah ini membuktikan bahawa sekolah ini akan
menjadi sebagai satu sekolah ikon yang cemerlang di daerah dan
juga negeri.
Pengurusan SJK Tamil Ladang Kulai Oil Palm telah memberi
tumpuan utama dalam kemenjadian murid dalam kurikulum dan
kokurikulum selama ini. Pembelajaran dan pengajaran dapat
dijalankan dengan sepenuhnya mengikut amalan Pendidikan
Abad Ke-21. Pihak sekolah memberi keutamaan dalam
kemenjadian holistik murid - murid. Hala tuju sekolah ini adalah
‘SJK Tamil Ladang Kulai Oil Palm komited untuk mewujudkan
iklim pembelajaran sekolah yang menyokong kepada
kemenjadian murid secara holistik’.

Pencapaian keputusan terus meningkat pada setiap tahun


dan pencapaian kurikulum setiap kelas juga meningkat.
Disamping itu, bidang kokurikulum juga diberi penuh perhatian
sehingga murid - murid melibatkan diri dengan baik dalam
aktiviti kokurikulum. Peserta - peserta yang mengambil bahagian
di peringkat daerah, negeri dan kebangsaan telah mencatatkan
rekod yang baik sehingga mengharumkan nama sekolah ini yang
dikenali sebagai STKOP secara ringkasnya.

SJK Tamil Kulai Oil Palm yang berfungsi selama 66 tahun,


telah melahirkan insan - insan yang berjaya dalam hidup serta
kerjaya yang mengkagumkan. Pihak sekolah akan terus
berpegang pada visi dan misi sekolah dimana akan memberi
pendidikan yang berkualiti bagi melahirkan insan terdidik demi
kesejahteraan negara pada masa depan.

You might also like