You are on page 1of 9

தேசிய வகை பிரேசர் மலை தமிழ்ப்பள்ளி.

பெற்றோர் ஆசிரியர் சங்கம் & பள்ளி மேலாளர் வாரியம்

தேதி : 24/11/2018 கிழமை : சனி


நேரம் : காலை மணி 10.00
இடம் : வகுப்பறை, பிரேசர் மலை தமிழ்ப்பள்ளி

1.0 வரவேற்புரை (திரு.வே.பாலசுப்ரமணியம்)

1.1 தலைமையாசிரியர் திரு.வே.பாலசுப்ரமணியம் அவர்கள்

பள்ளியின் எ ¾¢ர்காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டக்

கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம் கூறி

வரவேற்றார்.

2.0 இறை வாழ்த்து


2.1 மாணவி செல்வி சே.தர்ஷினி அவரின் இறை வாழ்த்துடன்

கூட்டம் இனிதே

தொடங்கியது.

3.0 பள்ளியின் தலைமையாசிரியர் (திரு.வே.பாலசுப்ரமணியம்)


3.1 தலைமையாசிரியர் கருத்தரங்கு முறையில் இக்கூட்டம் நடைபெற

வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

3.2 தலைமையாசிரியர் இப்பள்ளி 1935 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தேசிய

வகை தமிழ்ப்பள்ளி அபு பாக்கார் எனப் பெயர் பெற்றது என்று

பள்ளியின் வரலாற்றை விளக்கினார்.


3.3 பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் பெருமளவில் முயற்சிகள்

செய்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எண்ணினர்.

ஆனால், முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றார்.

3.4 டத்தோ டாக்டர் NS.இராஜேந்திரன் அவர்களுடன் பேசப்பட்ட

முயற்சிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

3.5 2019 ஆம் ஆண்டில் ஆண்டு 1 ஒரு மாணவர், ஆண்டு 2 ஒரு மாணவர்,

ஆண்டு 3 ஒரு மாணவர் மற்றும் ஆண்டு 6 ஒரு மாணவர் என

தற்போது 4 மாணவர்கள் உள்ளனர்.

3.6 புலனத்தில் பள்ளி தொடர்பாக பல தகவல்கள் பரவியதால் பலர்

தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு மாணவர்களைக் கொண்டு

வருவதாக உறுதியளித்துள்ளனர்.

3.7 பள்ளி தொடர்பாக புலனத்தில் வந்த தகவல்கள் பொய்யான தகவல்கள்

என NST நாளிதழில் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

3.8 வருகை புரிந்த அனைவரையும் பள்ளி தொடர்பாக முடிவு எடுக்குமாறு

கேட்டுக் கொண்டார்.

4.0 YB காமாட்சி
4.1 வருகை புரிந்த அனைவருக்கும் வணக்கம் கூறினார்.

4.2 கோலா ரெமான் தமிழ்ப்பள்ளியை விட பிரேசர் மலை தமிழ்ப்பள்ளி

மேலும் சிறப்பாக உள்ளது.

4.3 குளிர்ச்சியான ஒரு சூழலில் தமிழ்ப்பள்ளி கிடைப்பது அரிது. இச்சூழலில்

இருக்கும் பள்ளியின் எதிர்காலத்தைப் பற்றி கலந்துபேசி முடிவு

எடுப்போம் என்றார்.
4.4 இப்பள்ளியை இங்கேயே தக்க வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய

முயற்சிகளைக் கலந்து பேசலாம் என்றார்.

5.0 கலந்துரையாடல்
5.1 தலைமையாசிரியர் இப்பள்ளியைத் தக்க வைக்கலாம் அல்லது

இடமாற்றம் செய்யலாம் என்பதனைப் பேசி முடிவு எடுக்க வேண்டும்

என்றார்.

5.2 இப்பள்ளியை இங்கேயெ தக்க வைத்தாலோ அல்லது இடமாற்றம்

செய்ய வேண்டும் என்றாலோ மேற்கொள்ள வேண்டிய

திட்டங்களையயம் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

5.3 YB காமாட்சி அவர்கள் குடும்பங்களைக் கொண்டு வராமல் அநாதை

பிள்ளைகளைக் கொண்டுவர முயற்சி செய்யலாம் எனக் கூறினார்.

5.4 திரு.துரை அவர்கள் பிள்ளைகளைக் கொண்டு வந்தால் பணப்பிரச்சனை,

இடைநிலைப்பள்ளி ஆனதும் யார் பொறுப்பு ஏற்பது போன்ற

பிரச்சனைகள் ஏற்படும் எனக் கூறினார்.

5.5 திரு. சரவணன் அவர்கள் 150 மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால்

மாணவர்கள் குறைவான பள்ளி (SEKOLAH KURANG MURID) எனவும்

30 க்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு பண்ணை வகுப்பு (KELAS

BERCANTUM) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றார்.

5.6 இப்பள்ளியில் எத்தனை மாணவர்கள் பயில முடியும், மொத்த

வகுப்பறைகளின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு ஏற்ப திட்டமிடல் செய்ய

வேண்டும் என்றார்.
5.7 ஆறாம் ஆண்டு முடிக்கும் மாணவர்கள் இடைநிலைப்பள்ளி

ஆசிரமத்தில் தங்கிப் பயில முடியும் என்பதனால் எந்தப் பிரச்சனையும்

வராது என்றார்.

5.8 Boarding School செயல்முறைப்படுத்த நீண்ட நாட்கள் பிடிக்கும். ஆனால்,

திட்டமிட்டால் எதிர்காலத்தில் நிறைவேற்றி மலேசியாவில் சிறந்த

மாணவர்கள் மட்டும் இங்கே பயில வாய்ப்புகள் ஏற்படுத்தலாம்.

5.9 V-Genius Boarding School தொடர்பாக பல திட்டங்கள் பேசப்பட்டன.

ஆனால், தற்பொழுது அத்திட்டம் நடைபெறாமல் உள்ளது என்றார்

தலைமையாசிரியர்.

5.10 சீமா இளந்தமிழ் பள்ளியைத் தக்க வைப்பதா அல்லது இட மாற்றம்

செய்யலாமா என்பதனைக் கலந்து பேசி முடிவு எடுத்தப்பின் பிற

திட்டங்களை வழிவகுக்கலாம் என்றார். பள்ளிக்கு வரும் மாணவர்களின்

கல்வியை ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரை மட்டுமே யோசிக்க

முடியாது என்றார்.

5.11YB காமாட்சி அவர்கள் தமிழ் ஆர்வாளர்கள் ஆண்டு 1 முதல் 18 வயது

வரையிலான மாணவர்களுக்கு உதவிகள் செய்து வருவதாகக் கூறினார்.

5.12 கோலா குபு பாருவில் உள்ள சிவானந்தா ஆசிரம உறுப்பினர்கள்

இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் பொறுப்பை ஏற்றுக்

கொள்வதாகக் கூறியுள்ளனர் என்றார் திரு. திருச்செல்வம்.

5.13 திரு. சீம இளந்தமிழ் பெற்றோர் ஆசிரியர் சங்கம், தமிழ் அறவாரியம்,

தலைமையாசிரியர் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்

ஆகியோர்கள் தமிழ்ப்பள்ளிக்கு முக்கியம் என்றார்.

5.14 பள்ளியை இங்கேயே தக்க வைத்துக் கொள்ளலாம் என அனைவரும்

ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர் என அறிவித்தார் திரு. சீம இளந்தமிழ்.


5.15 மாநில இலாகா அதிகாரி திருமதி. கு.வாசுகி அவர்கள் இப்பள்ளியில்

தற்போது மலாய் மாணவர்கள் பயில்வதால் மலாய் ஆசிரியர்

இப்பள்ளிக்கு வந்து செல்வது போக்குவரத்து ஆபத்தாக இருப்பதால்

மாவட்ட கல்வி அதிகாரிகள் மலாய் மாணவர்களை மலாய் பள்ளிக்கு

மாற்ற முயற்சி செய்வதாகக் கூறினார்.

5.16 இப்பள்ளி மலையில் இருப்பதால் மற்ற ஆசிரியர்கள் இங்கே

பணிப்புரிய மறுக்கின்றனர் என்றார் திருமதி. கு.வாசுகி.

5.17 வேறு மாநிலத்திலிருந்து அநாதை மாணவர்களைக் கொண்டு வந்தால்

அந்த மாநிலத்திலிருந்து போக்குவரத்து கடிதம் பெறவேண்டும்;

மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்றார் திருமதி.

கு.வாசுகி.

5.181 மாணவர் படித்து முடிக்கும் வரை இப்பள்ளி மூடப்படாது . ஆகவே,

2024 க்குள் இறுதி மாணவர் படித்து முடிப்பதற்குள் சரியான முறையில்

மாணவர்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றார்

திருமதி கு.வாசுகி.

5.19 டாக்டர் திரு.குமரவேலு அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டால்

பள்ளியை இடமாற்றம் செய்ய முடியும். ஆனால், புதிய இடத்தில் 150

மாணவர்கள் இருந்தால் மட்டுமே புதிய கட்டிடம் கட்டி பள்ளி

நடத்தப்படும். ஆகவே, இப்பள்ளியை இங்கேயே தக்க வைத்துக்

கொண்டால் சிறப்பு என ஆலோசனை கூறினார்.

5.20 பிரேசர் மலையில் தமிழ்க் குடும்பங்கள் குறைவாக உள்ளதனால்

அநாதை பிள்ளைகளை அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கலாம், SEDIC

B-14 திட்டத்தின் மூலம் மாணவர்களைக் கொண்டு வந்து தங்கும் விடுதி

கட்டி பள்ளியைக் காப்பாற்றலாம், அல்லது SEDIC B-14 திட்டத்தின்


மூலம் அநாதை மாணவர்களைக் கொண்டு வந்து பள்ளியில் பயில

வைக்கலாம் என ஆலோசனை கொடுத்தார் டாக்டர் திரு.குமரவேலு.

5.21 பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே பயிலும் போது வட்டாரத்தில் 30KM

வரை வேறு தமிழ்ப்பள்ளிகள் இல்லையெனில் பள்ளி மூடப்படாது .

SEDIC B-14 மூலம் மாணவர்களைக் கொண்டு வந்து V-GENIUS, NGOS

ஆகியோர்களை இணைத்து திட்டத்தை முழுமைப்படுத்தி பள்ளியைக்

காப்பாற்றலாம். இதன் மூலம் பணப்பிரச்சனை போன்றவற்றைத் தீர்க்க

முடியும். V-GENIUS உறுப்பினர்கள் மாணவர்களுக்குத்

தியானப்பயிற்சியை வழங்கலாம் என்றார் டாக்டர் திரு.குமரவேலு.

5.22 டாக்டர் திரு.குமரவேலு கல்வி அமைச்சுக்கும் SEDIC க்கும் இடையே

நல்ல உறவு இருப்பதாகவும் இப்பள்ளியின் பிரச்சனையைக் கல்வி

அமைச்சுடன் கலந்து பேசி தீர்வு காணலாம் எனவும் கூறினார்.

5.23 பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் குமாரி.லெ.நளினி அவர்கள் பிரேசர்

மலையில் வேலைவாய்ப்புகள், தங்கும் வசதிகள் கிடைப்பது கொஞ்சம்

அரிது. ஆனால், முயற்சி செய்து தேடி பார்க்கலாம். தற்போதைக்கு 2

வடுகள்
ீ கிடைக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பங்கள் கொண்டு வராமல்

அநாதை பிள்ளைகளைக் கொண்டு வந்தால் 1 அல்லது 2 விடுதி

மேலாளர்களை நியமித்து மாணவர்களைப் பள்ளியில் படிக்க

வைக்கலாம் என்றார்..

5.24 மாநில கல்வி இலாகா அதிகாரி திரு.இரா.சரவணன்

இப்பொழுதிலிருந்து இத்திட்டத்தை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டால்

2020 க்குள் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

5.25 மாநில கல்வி இலாகா அதிகாரி திருமதி.கு.வாசுகி அவர்கள் 10 க்கும்

குறைவான மாணவர்கள் இருப்பதனால் இப்பள்ளியை மாணவர்கள்


குறைவான பள்ளி எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அரசாங்கம்

இப்பள்ளியை மூடாது. பெற்றோர்களிடமிருந்து இப்பள்ளியை

இடமாற்றம் செய்ய முடியாது என கடிதம் பெற வேண்டும் என்றார்.

5.26 இப்பள்ளியில் 2 BAY வகுப்பறைகள் 2 இருப்பதால் மேலும் 4

வகுப்பறைகள் வேண்டும். மாணவர்கள் அதிகரித்தால் மேலும் 4

வகுப்பறைக்ள் கட்ட வேண்டும் என்றார் திருமதி கு.வாசுகி. இப்பள்ளிக்கு

குறைந்தது 50 மாணவர்கள் கிடைத்தாலே போதுமானது என்றார்.

5.27YB காமாட்சி அவர்கள் மாணவர்கள் கிடைத்தால் உடனே திட்டத்தை

ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டும் என்றார். பிரச்சனைக்குரிய

பெற்றோர்கள் என்றால் பிள்ளைகளை மட்டும் அழைத்து வந்து

பள்ளியில் பதிய வேண்டும் என்றார்.

5.28 திருமதி.கு.வாசுகி மற்றும் திரு.இரா.சரவணன் அவர்கள் மீ ண்டும்

டிசம்பர் மாதத்தில் V-GENIUS, SEDIC, NGOS, சிவானந்த ஆசிரம

உறுப்பினர்கள் மற்றும் சிரமப்படும் குடும்ப உறுப்பினர்களுடன் மீ ண்டும்

ஒரு சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

இப்பள்ளியில் குறைந்தது 5 மாணவர்களை உடனே சேர்த்து பள்ளியில்

மாணவர் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த வேண்டும் என்றனர்.

5.29 டாக்டர் திரு.குமரவேலு 10 க்கும் குறைவான எண்ணிக்கையில்

மாணவர்கள் இருந்தால் பள்ளியாகக் கருத முடியாது என்பதனால்

10 க்கும் அதிகமான எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டு வர

வேண்டும் என்றார். பிற ஆசிரமங்களில் இருந்து மாணவர்களைக்

கொண்டு வரலாம் என்றார்.


5.30 திருமதி கு.வாசுகி 10 க்கும் அதிகமான மாணவர்களைச் சேர்த்து 10 க்கும்

குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளி என்ற வரிசையில் இருந்து

இப்பள்ளியை நீக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

5.31 டாக்டர் திரு.குமரவேலு 2019 ஆம் ஆண்டு 10 மாணவர்கள் வரை

உயர்ட்த வேண்டும் என்றார். சமூக ஆர்வாளர்கள், NGOS, SEDIC

போன்றோர்களிடம் மானியம் பெற்று விடுதி மேலாளர் சம்பளம்,

மாணவர்களுக்கான தங்கும் செலவுகள் போன்றவற்றைத் திட்டமிடலாம்

என்றார்.

5.32 பள்ளியின் தலைமையாசிரியர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமும்,

பள்ளி மேலாளர் வாரியத்திடமும் பணம் இல்லை என்றார். டிசம்பர்

மாதத்தில் மீ ண்டும் ஒரு சந்திப்புக் கூட்டம் நடைபெறும்; அக்கூட்டத்தில்

Divine Life Society, SEDIC, VE-GENIUS ஆகியோரிடம் மாணவர்கள்

அதிகரிப்பு திட்டத்திற்கு உதவிகள் கேட்கலாம் என்றார்.

5.33B-14 திட்டத்தின் மூலம் ஆசிரம் கட்டி பிள்ளைகள் அதிகரிக்க திட்டம்

ஆரம்பிக்கப்படும் என்ற முடிவினைத் தெரிவித்தார் தலைமையாசிரியர்.

2019 ஆம் ஆண்டு 10 மாணவர்கள் வரை அதிகரிக்கும் முயற்சியில்

முழுமையாக ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். மேலும், இச்சூழலில் உள்ள

பள்ளியை இன்னும் சிறந்த பள்ளியாக மாற்ற இப்பள்ளியை இங்கேயே

தக்க வைத்து அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தருமாறு

கேட்டுக் கொண்டார்.

6.1 நன்றியுரை/கூட்ட ஒத்திவைப்பு (திரு.வே.பாலசுப்ரமணியம்)


6.2 தலைமையாசிரியர் கூட்டத்தில் கலந்து சிறப்பித்த
அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
6.3 மதியம் மணி 2.00-க்கு இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

You might also like