You are on page 1of 19

பள்ளியின் பின்னனி

ஆ) முந்தையக் காலம்

 நேஷனல் டைப் ஸ்கூல் (டி)


லோரோங் ஜாவா அல்லது அதன்
குறுகிய பெயர் எஸ்.ஜே.கே.(டி)
லோராங் ஜாவா. இஃது ஒரு தமிழ்
தேசிய வகை பள்ளி.

 இந்தப் பள்ளி முதன் முதலில்


1897-இல் ஜாலான் முனாவிர்
(எலுமிச்சை தெரு)-இல் உள்ள
கட்டிடத்தில் தொடங்கியது.

1
 பின், மாணவர்களின் அதிகரிப்பால்
1909 இல் லோரோங் ஜாவா (ஜாவா
லேன்) என்ற புதிய தளத்திற்கு
ஆங்கிலேயர்களால் மாற்றப்பட்டது. 

 இது முற்றிலும் அரசாங்க உதவி


பெறும் பள்ளிக்கூடமாய் அன்றும்
இன்றும் திகழ்கிறது. தமிழ் மொழியே
இப்பள்ளியின் தாய்மொழியாகவும்
தொடர்பு மொழியாகவும் இருந்தது.

 ஆரம்பத்தில் இப்பள்ளி அரசு


மருந்தகமாக செயல்பட்டு வந்த ஒரு
கட்டடத்தில் இயங்கி வந்தது.

2
 அந்தக் கட்டிடத்தில் ஒரே ஒரு
அறை மட்டுமே என்பதால் 1949
மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் புதிய
கட்டிடங்கள் கட்ட பல அதிகாரிகளால்
முன்மொழிவுகள் செய்யப்பட்டன.

 ஆனால், அச்சமயம் முன்னுரிமை


கொடுக்கப்படவில்லை. ஏறக்குறைய
150 மாணவர்கள் பழைய கட்டிடத்தில்
அமைந்துள்ள ஒரே அறையில்
பயின்று வந்தனர்.

 இறுதியில், பள்ளிகளின் தலைமை


ஆய்வாளர் மற்றும் சுகாதாரத்
துறையின் பல அறிக்கைகளின்
விளைவாக இந்தப் பள்ளி செப்டம்பர்

3
11, 1957 அன்று மூடப்பட்டது, பள்ளி
மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும்
பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக
உள்ளது என்ற அடிப்படையில்
பள்ளியை மூட பரிந்துரைக்கப்பட்டது.

 அதன் பின், இப்பள்ளி


மாணவர்கள் புக்கிட் டெம்போக்கில்
உள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளிக்கு
அனுப்பப்பட்டனர். அன்றைய
மாணவர் எண்ணிக்கை 96 பேர்
மற்றும் தலைமை ஆசிரியரான
திரு.கே.ராசையாவின் கீ ழ் இதர 3
ஆசிரியர்களும் பாடத்தை
வழிநடத்தினர்.

4
 இருப்பினும், ஜாவா லேன் தமிழ்ப்பள்ளி
விவேகானந்தா தமிழ்ப்பள்ளியுடன்
இணைந்தது இந்திய சமூகத்தால்
நல்ல வரவேற்பைப் பெறவில்லை. 

 அவர்கள் அமைச்சு மற்றும் கல்வித்


திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு
எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜாவா லேன்
தமிழ்ப்பள்ளியை அதன் அசல்
இடத்தில் மீ ண்டும் திறக்க வலியுறுத்தி
இந்திய சங்கங்கள் அதிகாரிகளுக்கு
மேல்முறையீட்டு கடிதம் அனுப்பினர்.

 அதனை அடுத்து, திரு. லூர்து


கையொப்பமிட்ட ஒரு குறிப்பாணில், 
இந்தப் பள்ளியை ஏன் திறக்க
வேண்டும் என்ற நோக்கத்தை

5
பெற்றோர்கள் சார்பில் முதன்மை
கல்வி அதிகாரிக்கு விளக்கம்
அளிக்கப்பட்டது. பின், சிரம்பான்
தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக் சங்கம்
ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியை
மீ ண்டும் நிறுவக் கோரி தொடர்ந்து
போராடியது.

 இவர்களின் போராட்டத்திற்கு
அப்போது ஈப்போவை தளமாகக்
கொண்ட 'அகில மலாய தமிழர் சங்கம்'
ஆதரவும் கிடைத்தது. இந்த பள்ளியை
மீ ண்டும் திறக்க வேண்டும் என்ற
கோரிக்கை மிகவும்
சிக்கலானதாகிவிட்டதால், தமிழ்
மொழி நாளிதழ்கள் மலாயா

6
முழுவதும் செய்திகளைக் காட்டுத் தீ
போல பரப்பின. 

 மாநில அரசு கல்வித்துறை மற்றும்


கல்வி அமைச்சுடன் இணைந்து
செயல்பட்டு, "மாண்புமிகு இந்திய
உயர் ஸ்தானிகர்" அவர்களின்
ஒத்துழைப்பால் இப்பிரச்சனைக்கு
ஒரு புள்ளி வைத்தனர். இறுதியாக
1960-இல், லோரோங் ஜாவா தமிழ்ப்
பள்ளி அதன் அசல் இடத்திற்கு
மாற்றப்பட்டது.

 அவ்வேளையில் விவேகானந்தா
தமிழ்ப்பள்ளியின்
தலைமையாசிரியராக இருந்து வந்த
திரு.வி.தின்னத்தம்பியிடம் இருந்து
7
பொறுப்பேற்ற என்.எம்.கந்தையா
அவர்கள் தலைமை ஆசிரியராக
நியமிக்கப்பட்டார்.  

 1960 முதல் இப்போது வரை


லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி
இன்னும் சிரம்பான் நகரின் நடுவில்
உள்ளது. மாணவர்களின்
அதிகரிப்புக்கு ஏற்ப பல்வேறு உடல்
மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஆ) தற்போதைய காலம்

 இப்பொழுது ஏறக்குறைய 600


க்கும் மேற்பட்ட மாணவர்களைக்
8
கொண்டுள்ள பெயரை ஜாவா லேன்
தமிழ்ப்பள்ளியையே சாரும்.

 இப்போதும் கூட பல
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை
125 வயதாகியிருக்கும்
தாய்ப்பள்ளியான ஜாவா லேனில்
படிக்க வைக்க விரும்புகிறார்கள். 

 புதிய இணைக்கட்டிடத்தின்
வருகையால், பள்ளியில்
மாணவர்களுக்கு பல வசதிகள்
அமைத்துத் தரப்பட்டிருக்கின்றது.

 தற்போது, இரண்டு 2 மாடிக்


கட்டடங்களும், மூன்று 3 மாடி
கட்டடங்களும் அமைக்கப்பட்டு

9
பள்ளியின் பெயர்
தலைத்தோங்குகிறது.

இ) பள்ளியின் புதிய தோற்றம்

பணியாளர்கள்

 45 ஆசிரியர்கள்

 670 மாணவர்கள்

 1 தலைமையாசிரியர்

 3 துணைத்தலைமையாசிரியர்கள்

 3 குமாஸ்தாக்கள்

10
 5 தோட்டக்காரர்கள்

 4 பாதுகாவலர்கள்

 4 சிற்றுண்டிப் பணியாளர்கள்

வசதிகள்

 2 மண்டபங்கள்

 24 வகுப்பறைகள்

 1 ஆசிரியர் அறை

 1 அறிவியல் அறை

 2 பெண்கள் கழிப்பறைகள்

 2 ஆண்கள் கழிப்பறைகள்
11
 2 பெண் ஆசிரியர்கள் கழிப்பறைகள்

 2 ஆண் ஆசிரியர்கள் கழிப்பறைகள்

 ஒரு நூலகம்

 ஒரு சிற்றுண்டிச்சாலை

 ஒரு கணினி அறை

 ஒரு சந்திப்புக் கூட்ட அறை

 ஒரு உடற்கல்வி மற்றும்

விளையாட்டு அறை

என் பள் ளிச்


சின் னம்

12
 ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியின்
பள்ளிச் சின்னமானது 1999-இல்
வடிவமைக்கப்பட்டது.

 மீ ண்டும் இது கல்வி அமைச்சின்


நோக்கத்திற்கு ஏற்பவும் பள்ளியின்
இலக்கிற்கு ஏற்பவும்
மறுவடிவமைக்கப்பட்டது.

 ஜாவா லேன் பள்ளிச் சின்னம்


முதன் முதலில்
தலைமையாசியரியர் திரு.
முனியாண்டி ஐயாவின் முயற்சியால்
உருவாக்கப்பட்டது என்பது மறைக்க
முடியாத உண்மையாகும்.

13
 இந்த பள்ளிச் சின்னத்தில்
வெள்ளை, பச்சை, நீலம், மஞ்சள்,
சிவப்பு என ஐந்து நிறங்கள் உள்ளன.

 மஞ்சள் நிறமானது நெகிரி


செம்பிலான் மாநிலக் கொடியின்
மன்னராட்சி அரசமைப்பைக்
காட்டுகிறது. மாணவர்கள் அரசியல்
அமைப்புச் சட்டத்தை மதிக்க
வேண்டும் என்பதே பொருள்.
 பச்சை நிறமானது மாணவர்கள்
இயற்கையோடு இயைந்து கல்வி
கற்ற வேண்டும் என்பதாகும்.

 நீல நிறமானது மாணவர்கள்


கடலைப் போன்று பரந்து விரிந்துக்
கிடக்கும் கல்வி எனும் நீரை
கரைத்துக் குடிக்க வேண்டும்.

14
 வெள்ளை நிறமானது மாணவர்கள்
எப்பொழுதும் புனிதமான
எண்ணங்களையும்
கொள்கைகளையும் கொண்டிருத்தல்
வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

 சிவப்பு நிறத்திலான தீப்பந்தம்


மாணவர்களின் ஒளி நிறைந்த
இதயத்தைக் குறிக்கிறது.

 ஐந்து வட்ட வளையங்கள் நம்


நாட்டின் 5 தேசியக் கோட்பாட்டைக்
குறிக்கிறது.

 ஆண்டு 1897 என்பது ஜாவா லேன்


தமிழ்ப்பள்ளி துவக்கப்பட்ட
வருடமாகும்.
15
 பள்ளியின் முழக்கச் சொல்லாக
“முயற்சியே வெற்றி” எனும் வாசகம்
தேர்வு செய்யப்பட்டதன் காரணம்
மாணவர்களின் கல்வி கேள்விகளின்
வெற்றி பெற முயற்சியே
அடித்தளமாகும் என்பதை
வலியுறுத்துவதற்காக ஆகும்.

(மூலம் : கூகல் இணையத்தளம்)

16
பள்ளிப் பாடல்

ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியாம்

கரையில்லா கல்வி கடலாம்

கருத்துடன் உயர்ந்திடவே

கல்வி கற்றிடு செவ்வனவவே

உன்னதத் தமிழைத் தனிமொழியாக

உரைத்திட செய்வது ஜாவா லேன்

மும்மொழி தரத்தை உயர்த்திடும் இடமாய்

மூத்தோர் வழியது வந்தது ஜாவா லேன்

17
வையகம் போற்றிடவே

உயர்கல்வியைப் பெற்றிடனும்

வென்றிடும் கழுகுகளாய்

உண்மை உயர்வினை தேடிடனும்

பண்புடன் பழகி படித்திடு தினமும்

பணிவுடன் நடந்து வாழந்திடுவாய்

வரம்,
ீ கல்வி, செல்வம் மூன்றும்

வளமுடன் தருவது ஜா.. வா.. லேன்..

(ஜாவா லேன் தமிழ்ப்பள்ளியாம்)

மேற்கண்ட பள்ளிப் பாடலை, 2009-இல்


லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின்
தலைமையாசிரியர் திரு ரோஸ்லான் பின்
அப்துல்லாவின் முயற்சியால
உருவாக்கப்பட்டது. பள்ளியின்
அடையாளமாகவும்,18 மாணவர்களுக்கு
ஊந்துதல் அளிக்கும் வகையிலும்
இப்பாடல் இசையமைக்கப்பட்டது. 

19

You might also like