You are on page 1of 2

அன்னை தமிழுக்கும் தாங்கும் தரணிக்கும் இலக்கியமாய்

வீற்றிருக்கும் மாணவர்களுக்கும் இலக்கணமாய் திகழும் எமது


ஆசிரியர்களுக்கும் என் முதற்கண் வணக்கம் நான் பிரவீனா தமிழ்
மன்ற செயலாளர்.

நமது கல்லூரியின் 27-வது கலை விழாவிற்கு தலைமை


ஏற்றிருக்கும் தலைமை விருந்தினர் முனைவர் பூமா அவர்களையும்
மற்றும் விருந்தினர் முனைவர் சி முருகன் அவர்களையும் வருக
வருக என்று வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நம்மிடையே வீற்றிருக்கும் நமது சிறப்பு விருந்தினர் முனைவர்


சி.முருகன் அவர்கள் நந்தன அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக
பணியாற்றியுள்ளார், இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து
விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்

சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் 25 க்கும் மேற்பட்ட ஆய்வுக்


கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் மற்றும் உயிரியல் அறிவியல்
ஆராய்ச்சி அறக்கட்டளையில் விஞ்ஞானியாகவும் பணியாற்றி
உள்ளார்.

இவர் கஞ்சனூரான் தகவல் என்னும் youtube சேனலை நடத்தி அதில்


அம்மா என்னும் மந்திரச் சொல் முதல் மரப்பாச்சி பொம்மைகளின்
மகிமைகள் என்னும் சமூக வாழ்வுக்கு தேவையான பல
செய்திகளை வெளியிட்டுள்ளார்.

இவர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழில் ஊக்கமளிக்கும்


பேச்சுக்கும். பல விவாதங்களில் பேச்சாளராகவும், நடுவராகவும்
பங்கேற்று இருக்கிறார். நகைச்சுவை சங்கம் மற்றும் லயன்ஸ்
சங்கதிலும் பேச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார்.
வாழ்வின் உத்தமம்மாம் கல்வி அப்பேற்பட்ட கல்வியை வழங்கிக்
கொண்டிருக்கும் தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
துணை முதல்வர் நமது சிறப்பு விருந்தினர் முனைவர் பூமா.

இவர் 5 க்கு மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளும், 14 க்கும் மேற்பட்ட


பத்திரிகைகளிள் வந்த கட்டுரைகளை இயற்றி உள்ளார்.

இவர் பல்வேறுபட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர்; ஆம் சிறந்த


ஆசிரியர் விருது முதல் சொற்பொழிவு செம்மல் விருது வரை
சாதித்தவர்.

இவர் கடந்த ஆண்டு மட்டுமே திறனாய்வு சுடர் விருது, வாழ்நாள்


சாதனையாளர் விருது, பல்துறை வித்தகர் விருது என 3
விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் சப்த மாதர்கள் மற்றும் மகாபாரதத்தில் அறம் சார்ந்த


சிக்கல்கள் என்னும் இரு புத்தகங்களையும் மற்றும் மொழிபெயர்ப்பு
நூலான அருணோதயத்தயும் இயற்றியுள்ளார்.

இவர் behind tamil என்னும் youtube சேனலை நடத்தி அதில் தமிழின்


பெருமையை பறைசாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரையும் மனதார வரவேற்று இவர்களை


அறிமுகப்படுத்தும் பேர் பாக்கியத்தை தந்ததற்கு நன்றி கூறி
விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

You might also like