You are on page 1of 15

INSTITUT PENDIDIKAN GURU KAMPUS IPOH

31150 HULU KINTA

PERAK DARUL RIDZUAN

KERJA KURSUS
(PENULISAN AKADEMIK)
செய்பணி

KETERAMPILAN BERBAHASA BAHASA TAMIL


தமிழ்மொழி மொழிவளம்
(BTMB 3023)

NAMA PELAJAR : TINISHAH A/P RAJEENDRAN

பெயர் : தினிஷா த/பெ ராஜேந்திரன்

NO. KAD PENGENALAN : 970424106050

அடையாள அட்டையின் எண் : 970424106050

ANGKA GILIRAN : 2017242340159

KUMPULAN / UNIT : PISMP / S7

பிரிவு : எஸ் 7

NAMA PENSYARAH : DR. MOHAN KUMAR

விரிவுரையாளரின் பெயர் : முனைவர் செ. மோகன் குமார்

TARIKH HANTAR : 25 OGOS 2017

ஒப்படைப்பு நாள் : 25 ஆகஸ்ட் 2017


நன்றியரை

“ எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு”

வணக்கம். நான் தினிஷா த/பெ ராஜேந்திரன், ஈபோ ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் எனக்கு

பயில்பணி ஒன்றினை மேற்கொள்ள விதிக்கப்பட்டது. இந்த நன்றியுரையை என்னுடன்

இணைந்து இந்த பயில்பணியை நம்பிக்கையோடு செய்ய தோள்கொடுத்து உதவிய நல்ல

உள்ளங்களுக்கும் சமர்பிக்கப்படுவதில் அளவற்ற மகிழ்ச்சியினை அடைகின்றேன்.

“எல்லா புகழும் இறைவனுக்கே” என்பதற்கேற்ப இந்த பயில்பணியினைச் செவ்வனே

எந்த தடைகளுமின்றி செய்து முடிக்க எனக்கு அருள் புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு

என்னுடைய முதல் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த ஆய்வு பணியினை மேற்கொள்ள வாய்ப்பளித்த தமிழ்

மொழிப்பிரிவுத் தலைவர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள

கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து, இந்த இடுப்பணியைச் செய்யப்பட்டக் காலத்தில்

தேவையான உதவிகளையும் சரியான வழிக்காட்டலையும் சிரமம் பாராமல் செய்த

விரிவுரையாளர் முனைவர் செ. மோகன் குமார் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவிக்க

கடமைப்பட்டுள்ளேன்.

அடுத்ததாக, மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கேற்ப சரியான தருணங்களில்

தேவைப்படும் உதவிகளை என்றும் வழங்கிய என் பெற்றோருக்கும் என் மனமார்ந்த

நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களைத் தவிர்த்து நட்புக்கு இலக்கணமாய்

விளங்கும் என் உற்ற நண்பர்களுக்கும் இந்த வேளையில் என் அகம் மகிழ்ந்த

நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக, இந்தப் பயில்பணியினைக் குறிப்பிட்டக் காலக்கட்டத்தில் சரியான

தூண்டுதலோடும் ஊக்கத்தினோடும் செய்து முடிக்க உதவிய அனைத்து

நல்லுள்ளங்களுக்கும் எனது இருக்கரம் கூப்பி நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில்

அளவற்ற மகிழ்ச்சி என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று ( குறள் 108 )


1.0 முன்னுரை

மொழி என்பது அது தோன்றி வாழும் நிலத்தோடு தாவரங்ளைப் போனற வேர்

தன்மையுடையது. நாம் அன்றாட வாழ்க்கையில் மிக அத்தியாவசியமானதாகத் மொழி

அமைகிறது என்றால் அது மிகையாகாது. அவ்வகையில் மொழி ஒரு மனிதனுக்குப் பல

வகையில் பயன்படுகிறது. மொழி என்றால் ஒருவர் ஓரிடத்திலிருந்து இன்னொரு

மூலத்திற்குத் தகவலைக் கடத்துவதற்கு உதவும் ஊடகமாகும். ஒருவர் தன் எண்ணம்,

ஏடல், கருத்து, உணர்வுகளை பிறரிடம் பரிமாற்றம் செய்யும் போது மொழி அங்கு ஒரு

முக்கிய பங்கு வகிக்கிறது.

மொழியின் ஆய்வின்படி 6000 உலகமொழிகளுள் 3000 மொழிகளே இலக்கிய,

இலக்கண வளங்கொண்ட மொழிகளாக இன்று திகழ்கின்றது. அதில் உலக இயற்கை

மொழியான நம் தாய்மொழி இன்று அதன் 11 தகுதிபாட்டினால் இன்று செம்மொழியாய்ச்

செம்மாந்து நிற்கிறது. தமிழ்மொழி பொதுப்பண்பைப் போற்றும் மொழியாக விளங்குகிறது.

இனம், மதம், சாதி, நிறம் போன்ற பேதங்களைக் கடந்து மனிதகுலம் முழுமையும்

போற்றும் நிலையில் அதன் இலக்கியங்கள் அமைந்திருக்கின்றன. உலகப் பொதுமறை

திருக்குறள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. அதுமட்டுமல்லாமல் உலகில் எந்த இயற்கை

மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கண கட்டமைப்பைக் கொண்டுள்ள தமிழ்மொழி

பிறமொழிக்கும் உதவும் இலக்கணச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இருப்பினும், இக்காலத்தில் தமிழின் சிறப்புகளை அறிந்தோர் குன்றி கொண்டே

வருகிறது என்றால் அது மிகையாகாது. இம்மாதிரியான செயல்களே மொழிச்சிதைவுகளை

ஏற்படுத்துகிறது. மொழிச்சிதைவென்பது மொழியில் ஏற்படும் கேடு எனவும் மொழியின்

தூய்மையினைச் சிதைக்கும் செயலாகும். மேலும், ஒரு மொழியை அதன் விதிகளுக்கு

முரண்பட்டு பிழைபட கையாளுவதும் மொழிச்சிதைவே. இம்மொழிச்சிதைவானது நம்

வாழ்க்கையில் அன்றாட செயல்களில் ஏற்பட்டுக் கொண்டு தான் உள்ளது. எடுத்துக்காட்டாக,

பொது இடங்களில், சாலைகளில் காணப்படும் அறிவிப்புப் பலகைகள், நாம் உரையயடும் போது,

கட்டுரைகள், கவிதை, சிறுகதை, நாவல் போன்ற எழுத்துறு படைப்புகள், விளம்பரங்கள்,

நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவற்றில் தமிழ்மொழிச் சிதைவினைக் காணலாம்.

அவ்வகையில், இன்று அன்றாட தேவையாக விளங்கி வரும் அச்சு ஊடகங்களான

நாளிதழ், வார மாத இதழ், அறிக்கைகள், சுவரொட்டி மற்றும் எழுத்துறு படைப்புகளில்


தமிழ்மொழிச் சிதைவை கண்கூடாக காண முடிகிறது. இதற்கு முக்கிய கரணியமாக தமிழ்

குமுகாயமே எனலாம். அதோடு அலட்சிய போக்கும் இதற்கு முதன்மை காரணமாக

விளங்குகின்றது. இதுவே மக்களிடம் பல வகையில் தீய விளைவுகளை கொண்டு சேர்க்கிறது.

அச்சு ஊடகங்களில் மொழிச் சிதைவு ஏற்பட காரணமாக இருப்பது எழுத்தாளர்கள் மற்றும் அதை

திருத்துபவரும் ஆவர். ஆக, இச்சிதைவை கலைய ஒவ்வொரு தமிழ் மானிடனும் முயற்சி

செய்ய வேண்டும்.

2.0 இன்றைய அச்சு ஊடகங்களில் நிலவும் தமிழ்மொழி சிதைவுகளையும் அதன்

விளைவுகளையும் அடையாளங்கண்டு விளக்குக.

அச்சு ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

அதாவது, உலக நடப்புகளையும் பொது விடையங்களையும் அறிவதற்கு அச்சு ஊடகங்கள்


உதவி வருகின்றன. மக்கள் அனைவரும் செல்லும் இடங்களிலும் பார்க்கும் இடங்களிலும்

படித்து அறிந்து கொள்ளும் ஒரு எழுத்து வடிவமான தகவல் ஊடுருவியாக அமைகிறது.

அவ்வாறான அச்சு ஊடகங்கள் தமிழ்மொழியில் இருப்பதோடு சில சிக்கல்களையும்

கொண்டு தான் உள்ளது. மற்ற மொழிகளுக்கு இல்லாத சிறப்புகளைக் கொண்டுள்ள

செம்மொழியான நம் தமிழ்மொழி இன்று அச்சு ஊடகங்களில் அச்சிறப்புகள் சிதைவுரும்

அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. காட்டாக, இலக்கண பிழை, வேற்று மொழி பயன்பாடு,

எழுத்து பிழைகள், மரபுப் பிழைகள் மற்றும் பிழையான மொழிப்பெயர்ப்பு போன்ற

தவறுகளை அச்சு ஊடகங்களில் காண்கிறோம்.

நாம் இன்றைய வரை அச்சு ஊடகங்களில் அதாவது தமிழ்மொழியில் உள்ள அச்சு

ஊடகங்களில் பிற மொழி தாக்கங்களைக் கண்கூடாக காண்கிறோம். மலாய்மொழி,

ஆங்கிலமொழி மற்றும் சமஸ்கிருதம் போன்றவை அச்சு ஊடகங்களில் தலைத்தோங்கி

உள்ளது என்பது உண்மை. இது அன்றாட நாளிதழிலிருந்து மாதயிதழ் வரை மொழி கலப்பு

இருக்கவே செய்கின்றது. இக்காலக்கட்டத்தில் மக்கள் வேற்று மொழியை இயல்பாக

பயன்படுத்துகின்றனர். சில வேற்று மொழி சொற்களை வழக்கில் பயன்படுத்தி, இப்போது

அவை தமிழ்மொழி சொல் போல அமைந்துவிட்டது. ஆங்கில மொழி, மலாய் மொழி மற்று

சமஸ்கிர்தமாகும். அவ்வகையில், அச்சு ஊடகங்களில் அதிகமான வேற்று மொழி

பயன்பாடு தமிழ்மொழியைச் சிதைக்கிறது. சான்றாக, விளம்பரங்களிலும் நாளிதழ்களிலும்

திருமண அழைப்பிதழ்களிலும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு, புதன், சனி, பூஜை,

அபிஷேகம், ஸ்தாபனம், தேவஸ்தானம் ஆகியவை சமஸ்கிருத்தத்தில் அச்சிடப்படுகிறது

(இணைப்பு 1). மேலும், போலீஸ், ஏர்லைன்ஸில், ஸ்டார் ஹோட்டல், டிடெர்ஜன், டேவான்

போன்றவை ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் நதியாக ஓடிக் கொண்டுதான்

இருக்கின்றன (இணைப்பு 2). இதற்கு மலேசியாவின் பன்மொழி வழக்குச் சூழலே

கரணியமாக அமைகிறது.

மேலும், அச்சு ஊடகங்களில் நிறைய எழுத்து பிழைகள், சொற்பிழைகள் இருக்கவே

செய்கின்றன. காட்டாக, திருமண அழைப்பிதழ்களில் உபசசரிப்பில் என்று எழுத்துப்பிழை

உள்ளது. உபசரிப்பு என்பது தான் சரியானதாகும் (இணைப்பு 3). இவ்வாறான எழுத்துப்

பிழைகள் நாளிதழ்களிலும் கண்கூடாக காணலாம். உதாரணத்திற்கு, நேரத்தை நேறம் என்று

பிழையாக அச்சு அடிக்கப்படுகிறது. இவை யாவும் திறம்பெற்ற எழுத்தாளர்கள்,

பத்திரிக்கையாளர்கள் இருந்தாலும் அவர்களின் கவனக்குறைவும் அலட்ச்சியப் போக்கும்

இப்பிழைகளை உண்டாக்குகிறது. இன்னும் கூறுகையில், எழுத்து பிழைகளும் மரபு


பிழைகளும் அச்சு ஊடகங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மரபு பிழைகளில்

பார்த்தால், சென்று வந்தான் என்பதைப் போய்விடு வந்தான் என்று அச்சு ஊடகங்களில்

தமிழ்மொழி சிதைவு அலைபாய்ந்து கொண்டுள்ளது.

பிறகு, நம் தாய்மொழிக்கு மூலமாக விளங்குவது அதன் இலக்கணமாகும்.

இலக்கணம் என்றால் மொழிக்குரிய தனி கணக்கு அல்லது கோட்பாடு என்றும் கூறலாம்.

அவ்வகையில், அச்சு ஊடகங்களில் தமிழ்மொழியின் இலக்கணத்தைப் பெருதும்

பொருட்படுத்தவில்லை. காராணம், இன்று நாம் நாளிதழ்களைப் படிக்கும் போது வரிக்கு

வரி, பத்திக்கு பத்தி இலக்கணப் பிழைகளை நம்மால் சுட்டிக்காட்ட முடியும். சான்றாக,

வலிமிகும் வலிமிகா பிழை, றகர ரகர வேறுபாடு, லகர ளகர ழகர பிழைகள் அச்சு

ஊடகங்களில் குவிந்து கிடக்கிறது. காட்டாக, வழக்குகளுக்கு தேவஸ்தானம், நாட்டிற்கு

பெருமை, நிலைமைகளை தக்க, வருமானத்தை பொறும், சந்தர்ப்பத்தை சரியாக,

பொருளாதாரத்தை பல போன்றவை வலிமிகாமல் இருக்கின்றன (இணைப்பு 4). கு மற்றும்

ஐ எனும் வேற்றுமை உருபுக்குப் பின் கட்டாயம் வலிமிக வேண்டும். இதுபோன்று அச்சு

ஊடகங்களில் பல அதுமட்டுமின்றி, ‘தன்’ என்ற சொல் ஒருமைக்கும், ‘தம்’ என்ற சொல்

பன்மைக்கும் பயன்படுத்த வேண்டும். இலக்கணப் பிழைகள் தலைத்தோங்கி கொண்டே தான்

உள்ளது. இவ்வகையிலான சிதைவுகள் தமிழ்மொழிக்குப் பல விளைவுகளையும்

ஏற்படுத்துக்கின்றன.

முதலாவதாக, இவ்வாறு அச்சு ஊடகங்களில் நிலவும் தமிழ்மொழி சிதைவுகள்

மக்களிடையே மொழிப்பற்றின்மை ஏற்பட செய்யும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயம்மில்லை.

உதாரணத்திற்கு, பிழையான வாக்கிய அமைப்புகளுடன் இருக்கும் வாக்கியத்தை மக்கள்

வாசிக்கும் பொழுது அதன் பொருளைத் தவறாக எண்ணி கொள்கின்றனர். அதலால்,

அவர்களுக்குத் தமிழ்மொழியின் மீ து வெறுப்பு உண்டாக்குகிறது. தமிழ் பள்ளிக்குச்

செல்லாதவர்கள் இதுபோன்று அச்சு ஊடகங்களின் மூலம் படித்து தமிழ் கற்று

கொள்கின்றனர். இவ்வகையில் பிழையான தமிழ்மொழி பயண்பாட்டை அவர்கள் கற்று

கொள்கின்றனர்.இதுவே நாளடைவில் தமிழர்களிடையே முறையான தமிழ்மொழி

பயன்பாட்டை காண இயலாம் போய்விடும்.

பிற மொழிகளுக்கு இல்லாத தனித்தன்மை தமிழ்மொழிக்கு மட்டுமே உள்ளது

என்பது வெள்ளிடைமழையாகும். அதோடு உலகில் தனித்தமிழ் செம்மொழி என

தமிழ்மொழிக்குச் தனிச்சிறப்பும் உண்டு. அவ்வகையான அச்சு ஊடகங்கள்


தமிழ்மொழிக்கென உரிய தனித்தன்மையைச் சிதைத்துக் கொண்டு வருகிறது.பிற மொழி

கலப்பு, சமஸ்கிர்த சொல் பயன்பாடு போன்றவை தமிழ்மொழியின் அழகைக் கெடச்

செய்கிறது. இதனால் வாசிக்கும் மக்களிடையே தமிழ்மொழியின் சிறப்புகளின் மேல்

நம்பிக்கையை இலக்கச் செய்கின்றது. இதுவே தமிழ்மொழியின் கலைச்சொற்களை

மறக்கவும் செய்துவிடும் என்பதில் சிறிதலவும் ஐயமில்லை.

அச்சு ஊடகங்கள் தமிழ்மொழி சிதைவை ஏற்படுதுவதோடு தமிழர்களிடையேப் புதிய

கலாச்சாரத்தை உருவாக்கும். தமிழர்களுக்குறிய கலை கலாச்சாரங்கள் பண்பாடு

போன்றவைச் சீர்குளைந்துவிடும். அதோடு தமிழர்களிடையே மேல் நாட்டு கலாச்சாரங்கள்

தலைத்தோங்கிவிடும். இதுவே தமிழர் குமுகாயத்தில் ஒழுக்க சீர்கேடுகளை அதிகரிக்கவும்

செய்யும். கலப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்பாடு அதாவது வடமொழி ஆதிக்கம்

அதிகரிக்கும் பொழுது, அதைப் படித்து பிறகு உரையாடும் போது தன்னை அறியாமல்

ஆங்கில கலப்பு ஏற்படும். அவ்விடத்தில் மேல் நாட்டு மோகத்தை தமிழர்களிடையே அச்சு

ஊடகங்கள் பாதை அமைத்து தருகிறது.

மேலும், அச்சு ஊடகங்களில் தமிழ்மொழி சிதைவானது நம் இனத்தின்

அடயாளத்தையே அழிக்கும். தமிழ்மொழியை பிழையான மரபோடு படிக்கும் போது

மக்களின் மனதில் தகவல் தவறாக பதிவகுகிறது. தமிழ்மொழியின் பயன்பாடும் மேலும்

மேலும் சிதைவடைந்து வருவதோடு நம் இனத்திற்கு அடையாளமாக இருக்கும் மொழி

சீர்குளைந்துவிடும்.

மரத்திற்கு வேர், கட்டிடத்திற்கு அடிப்படை அடித்தலம், ஆற்றிற்குக் கரை, கப்பலுக்கு

நங்கூடம் இவை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மொழிக்கு இலக்கணம்.

மொழியின் இயல்பையும், அமைப்பையும் ஆராய்ந்து விதிகளைக் கூறுவது இலக்கண

நூலாகும். ஆகையால், இலக்கணம் என்னும் சொல்லுக்கு இயல்பு, அழகு என்னும் பொருள்

உண்டு. சுருக்கமாகக் கூறின், ஒரு மொழியைத் திருத்தமாகவும், பிழையின்றியும் பேச,

எழுத உதவுவது இலக்கணம் எனலாம். இலக்கணம் இல்லையெனின் மொழி திரிந்து வேறு

மொழியாக மாறிவிடும். இவ்வாறு சிறப்புகள் அமைந்திருந்தாலும் சிலரின்

அலட்சியப்போக்கினால் ஏற்படும் மொழி சிதைவுகள் மக்களிடையே தவறான இலக்கணப்

பயன்பாட்டை ஏற்படுத்துகிறது. முக்கியமாக பள்ளி மாணவர்கள் இலக்கணப் பிழையோடு

வாசிக்கும் போது அவர்கள் தம் கல்வியிலும் இலக்கண்த்தைப் பிழையோடு பயன்படுத்த

வித்திடும். மேலும் அவர்கள் கட்டுரைகள் வாக்கியங்கள் எழுதும் போது இலக்கணப் பிழை


இயல்பாக ஏற்பட இயலும். இதனால் தமிழ் ஆளுமை மிக்க எழுத்தாளர்களை வளர்க்க ஒரு

முட்டுக்கட்டையாக அமைகிறது.

3.0 இன்றைய அச்சு ஊடகங்களில் நிலவும் தமிழ்மொழியின் சிதைவுகளைக்

கலைக்கும் தீர்வுகளை ஆய்ந்து எழுத வேண்டும்.

மொழி சிதைவு என்பது மொழியில் ஏற்படும் கேடு அல்லது குற்றம் என

குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மொழி சிதைவுகள் தமிழ்மொழியில் குவிந்து கிடக்கிறது.

இது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவ்வாறான மொழி சிதைவுகளைக் குறிப்பாக

தமிழ்மொழியில் அச்சு ஊடகங்களில் ஏற்படும் இந்த அபலநிலையைத் தடுப்பதற்கு நாம்

ஒவ்வொருவரும் நல்ல தமிழில் உரையாற்றுவதை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதோடு தமிழ்மொழியில் ஆளுமை நிறைந்தவர்களை மட்டுமே பணியில் அமர்த்தப்பட

வேண்டும். இவ்வாறு செய்வதினால் தமிழ்மொழியில் தரமான படைப்புகளை அச்சு

ஊடகங்களில் காண இயலும்.

மேலும், தமிழர்களிடையேப் பேசும் பொழுது முழுவதும் தமிழ் சொற்களைப்

பயன்படுத்தல் வேண்டும். ஒரு தமிழரோடு உரையாடும் போது முழுவதும் தமிழில்

உரையாட பழகிக்கொள்ள வேண்டும். ஒரு குழந்தையின் ஆரம்பப் பள்ளிகூடம் அவர்களின்

இல்லம் எனலாம். ஏனெனில், ஆரம்பக்காலத்தில் குழந்தைகள் அதிகமான நேரத்தைத்

தத்தம் பெற்றோர்களுடனே செலவிடுக்கின்றனர். ஆக, பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குச்

சிறுவயது முதலே தமிழ்மொழியைக் பிழையற கற்று கொடுக்க வேண்டும். அதோடு,

பொற்றோர்கள் குழந்தையோடு தூய தமிழில் பேச வேண்டும். பல அறிஞர்களின்

எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி தந்து பிள்ளைகளுக்கு வாசிப்பு உணர்வை ஊட்ட

வேண்டும். இதுவே நாளடைவில் ஒரு சிறந்த எழுத்தாளரை உருவாக்கும். நாம்

ஒவ்வொருவரும் இல்லதில் உறவினர்களிடம் சகோதரர்களிடம் நல்ல தமிழில் பேசுவதை

வழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும்

பிறகு, ஒவ்வொருவரும் தமிழ்மொழியில் அன்றாடம் வாசிப்பு செய்ய வேண்டும்.

முக்கியமாக அச்சு ஊடகங்களில் பணி புரிபவர்கள் நாள்தோறும் குறைந்தது இரண்டு

பக்கங்கள் கொண்ட தமிழ்மொழியை வாசித்தல் அவசியம். இம்முயற்சி அச்சு ஊடகங்களில்

தமிழ்மொழி சிதைவைத் தடுப்பதற்க்கு ஒரு அடித்தலமாக அமையும் என்பதில் தின்னம்.

அன்றாட வாசிப்பின் வழி நம்மால் தமிழ்மொழியில் கலப்பின்றி பேசுவதற்கு வித்திடும்.


அதுமட்டுமின்றி, உச்சரிப்பும் சரளமும் தமிழ்மொழியில் அழகைச் சேர்க்கும். பிறகு, நாம்

பல படைப்புகளை தமிழ்மொழியில் உருவாக்க வேண்டும். இதன்வழி நம்மால் தமிழ்மொழி

சிதைவிலிருந்து தடுக்க இயலும்.

அச்சு ஊடகங்களில் தமிழ்மொழி சிதைவை களைப்பதற்க்கு இலக்கண அறிவு

இருத்தல் மிக அவசியம். தமிழ்மொழிக்கு மிக முக்கியமான தூணாக அமைவது அதன்

இலக்கணமே ஆகும். ஒரு அச்சு ஊடகத்தில் எழுத்தாளராக பணிப்புரிபவர் கட்டடயம்

அடிப்படை இலக்கண அறிவு இருத்தல் அவசியம். அவ்வகையில் அடிப்படையான

வலிமிகும் வலிமிகா, காலம், திணை, பால், எண், இடம் ஆகியவை அறிந்திருக்க வேண்டும்.

மேலும், ஆசிரியர்கள் அதாவது தமிழ் ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்.

எடுத்துக்காட்டாக, பிழைகளைத் திருத்துவதற்க்கு ஒவ்வொரு ஆசிரியர்களும் முன்வர

வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் பள்ளியில் மாணவர்களுள் தமிழ்மொழியின் மேல்

ஆர்வத்தைப் புகுட்ட வேண்டும். அவர்களுக்கு மொழி பற்றையும் விதக்க வேண்டும்.

அதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த பயிற்சிகள் போட்டிகள் போன்றவை

நடத்த வேண்டும். ஆக, தமிழ் சொற்களைப் பொருளும் சிறப்பும் உணர ஆசிரியர்கள்

மாணவர்களுக்குப் போதிப்பதால் அவர்கள் தமிழைப் பிழையின்றி அதாவது கலப்பு

மொழியின்றி சரியாகவும் முறையாகவும் பேச உதவுகிண்ரது. இது ஒரு தமிழ் ஆளுமை

நிறைந்த சந்ததியினரை உருவாக்கும் என்பது உண்மை. இறுதியாக, தமிழ்மொழி

சிதைவினைத் தடுப்பதற்கு நாம் அதாவது முயற்சி திறவினையாக்கும் என்பதற்க்கொப்ப

ஒவ்வொரு தமிழ் மானிடரும் முயற்சி செய்ய வேண்டும்.

4.0 முடிவுரை
தமிழ்மொழிக்கு மூலமாக அமையும் இலக்கணத்தை நாம் அனைவரும் முக்கியமாக அச்சு

ஊடகங்களில் பணிப்புரிபவர்கள் செம்மையாகப் பயில்வதனாலும் பல நன்மைகள் உண்டு.

அனைவரும் இலக்கணத்தைப் படித்து நன்மையடைய வேண்டும். மொழியழிந்தால் அதைச்

சார்ந்துள்ள குமுகாயமும் படிப்படியாக அழிந்திடும். தமிழ்மொழி சிதையாமல் இருக்கவும்

அழியாதிருக்கவும், நம்மை வாழவைக்கும் மொழியை நாம் வாழ வைக்க கண்டிப்பாக

முயற்சிக்க வேண்டும். அச்சு ஊடகங்களில் தமிழ்மொழி சிதைவைக் முற்றிலும் கலைக்க

நல்ல முறையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும். ஆக, தமிழ் மொழிப் பயிரைக்

கெடுக்கும் களைகளை அகற்றி அது மேலும் செழிப்பதற்கு ஆவன செய்யவேண்டும். தமிழ்

மக்களின் முதற்பெருங் கடமை இதுவாகும்.

ஆ) 150 சொற்களுக்குள் அடங்கும் தெரிவுசெய்யப்பட்ட மலாய்மொழி / ஆங்கிலமொழி

பனுவலைத் தமிழ்மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும்.


Petikan bahasa Malaysia

Persatuan Pengguna ditubuhkan untuk melindungi hak pengguna. Oleh itu, Persatuan
Pengguna berperanan untuk menerima, menyiasat dan menyelesaikan aduan daripada
pengguna. Persatuan ini juga berperanan untuk menyarankan akta bagi kebajikan
pengguna serta menjalankan penyelidikan bagi segala barangan yang dipasarkan di
Malaysia. Namun begitu, Persatuan Pengguna di Malaysia tidak dapt memainkan
peranannya dengan efektif.

Usaha dijalankan oleh Persatuan Pengguna tidak mendapat sokongan daripada


masyarakat. Masyarakat memandang sepi akan aktiviti yang dijalankan oleh Persatuan
Pengguna. Keadaan ini berpunca daripada sikap Persatuan Pengguna yang lebih banyak
membongkar penyelewengan dan kesan-kesan negatif tentang penggunaan sesuatu
barangan atau perkhidmatan daripada mendidik masyarakat tentang cara terbaik untuk
mengatasi masalah kepenggunaan.

துணைமேற்கோள்
பின்னினைப்பு
இணைப்பு 1

இணைப்பு 2
இணைப்பு 3
இணைப்பு 4

You might also like