You are on page 1of 1

அமுதான தமிழே நீ வாழி. வணக்கம். என் பெயர் ஷர்மினி த/பெ சசிகுமார்.

நான் தேசிய வகை


யாம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவி. இன்று நான் பேச எடுத்துக்கொண்ட
தலைப்பு பன்மொழி புலமை.

பாலூட்டும் தாயிடமிருந்து பால்குடிக்கும் பருவம் முதல் பயிலுவதே தாய்மொழி. தாய்


நாட்டை விட்டு பிறநாட்டில் வாழ்ந்தாலும் பெற்ற தாய் குழந்தையைத் தாய்மொழியிலேயே
கொஞ்சுவாள். அந்த கொஞ்சு மொழியே பிஞ்சு நெஞ்சத்தில் விஞ்சி நிற்கும். வேரோடிய அந்த
தாய்மொழியிலேயே துவக்கக் கல்வியை வீட்டிலிருந்தே பயில துவங்கி தாய்மொழியிலே தக்க
பயிற்சி பெறுவதால் பிற மொழிகளைப் பிழையின்றி கற்றுப் புலமை பெற இயலுக்கின்றது
தாய்மொழியை நன்கு அறிந்தவரே பிற மொழிகளையும் நன்றாக கற்கமுடியும்.

பிறந்தது முதல் ஒன்பது திங்கள் வரையில் ஒலியை இனம் கண்டு கொள்ளும் திறன்
குழந்தைகளுக்கு மிக அதிகமாக இருக்கின்றதாம். அப்போது தாய்மொழி அல்லாத பிற
மொழிகளை கேட்கும் வாய்ப்பு பெறும் குழந்தைகள், பள்ளிப்பருவத்திலும், வளர்ந்த பின்பும் பிற
மொழிகளை எளிதாக கற்றுக்கொள்ளும் திறனை அதிகமாக பெற்றிருப்பர் என்று பிரிட்டன்
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பல மொழிகளின் ஒலிகளை கேட்டு பழகிக்கொள்வது
தாய்மொழியிலான வார்த்தைகளின் ஒலியிலிருந்து மற்றவற்றை பிரித்தறிந்து கொள்ள மூளைக்கு
உறுதுணையாய் இருக்கின்றது. பிறந்த முதல் ஒன்பது திங்கள் வரையிலான காலத்தில் எத்தனை
மொழிகளின் ஒலிகளை குழந்தைகள் கேட்டு பழகுகின்றனரோ அத்தனை மொழிகளின்
ஒலிகளையும் பிரித்தறியும் திறனை அவர்கள் அதிகமாக பெறுகின்றனர்.

தொலைத் தொடர்பு தொழில் நுட்ப அதிவேக முன்னேற்றத்தில் உலகம் உள்ளங்கையில்


உருளும் அலைபேசியில் அடங்கிவிட்டது. தடங்கல் இல்லாமல் தரணியில் எவர் எங்கிருந்தாலும்
பொத்தானைத் தொட்டு மொத்த செய்திகளையும் சில நொடிகளில் நேருக்கு நேரில் பார்த்துப் பேச
முடிகின்றது; இந்நிலையில் தாய்மொழியை ஆழமாய் கற்றுப் பிற மொழிகளையும் பிழையற பயின்று
கல்வி, தொழில், வணிகம், அலுவல், ஆராய்ச்சி, கலாச்சார, கலை, இலக்கிய பரிமாற்றங்களைப்
புரிந்து பூரணப் பயனைப் பெறுவோம்; ஊராள்வோம்; உலகாள்வோம்; என்று கூறி
விடைப்பெறுக்கின்றேன். நன்றி.வணக்கம்.

You might also like