You are on page 1of 3

யோகதர்ஷன் சிவகுமரன் ஆண்டு 5

என் மொழி, என் அடையாளம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. (1)

இக்குறளுக்கேற்ப ‘அ’ என்ற எழுத்து தமிழ்மொழியின் தொடக்க எழுத்தாக


அமைந்துள்ளது. அப்படி தொன்று தொட்டு பேசப்பட்டு வரும்
தமிழ்மொழியே எனது மொழியாகும். மொழி என்றால் மனிதர்கள்
அனைவரும் சுலபமாகத் தொடர்புக் கொள்ளும் முறை. என் அடையாளம்
எனும் இரண்டு சொற்களுக்கு நான் தான் உதாரணம். என் அடையாளம்
என்றல் அது என்னையே குறிக்கும். உதாரனமாக, என் மதம், என் இனம்,
என் வசிப்பிடம் என நிறைய அடங்கியுள்ளன. இவையனைத்தையும் நான்
இன்று என் மொழி அதாவது தமிழ்மொழி, என் அடையாளம் எனும்
தலைப்பில் விரிவுப்படுதி கூறப்போகிறேன்.

என் அடையாளத்தில் என் பெயரும் ஒன்றுதான். பெயர் என்றால்


மனிதர்கள் அனைவரும் சுலபமான முறையில் தன்னைத் தானே
வகைப்படுத்திக் கொள்ளும் முறை. என் பெயரை வைத்து நான் யார், என்
மொழி என்ன என்பதை பலர் கணித்துவிடுவார்கள். உதாரணமாக,
யோகதர்ஷன் எனும் பெயரை வைத்தே இவர் அல்லது இந்த மாணவன்
ஒரு தமிழன் என்று நான் கணித்துவிடுவேன். இந்த சிறு
உதாரணத்திலிருந்தே என் மொழிதான் என் அடையாளம் என்று நான்
நன்கு புரிந்துக் கொள்கிறேன்.

நான் அணியும் உடை, என் நடை, என் பாவனை, நான் கொண்டாடும்


பண்டிகை போன்றவையே நான் பேசும் மொழியையும் என்
அடையாளத்தையும் குறிக்கும். உதாரணமாக, ஒருவர் வேட்டிச் சட்டை
அணிந்துக் கொண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதை நான்
கண்டால் சுலபமான முறையில் அவர் ஒரு தமிழன் என்று
கண்டுபிடித்துவிடுவேன், காரணம், என் மொழிதான், என் அடையாளம்.
நான் வழிப்படும் முறை மற்றும் வழிப்படும் இடம் கூட என்
அடையாளம்தான். நான் வழிப்படும் முறை மற்றும் வழிப்படும் இடத்தை
வைத்துக் கூட நான் ஒரு தமிழன் என்று அறிந்து கொள்ளலாம்.
யோகதர்ஷன் சிவகுமரன் ஆண்டு 5

தொடர்ந்து, என் உணவுமுறை கூட என் மொழியையும் என்


அடையாளத்தையும் குறிக்கும். நான் உண்ணும் உணவை வைத்து கூட
நான் பேசும் மொழியை சுலபமாக அறிலாம். தமிழர்களின் உணவுமுறை
சம்மனங்கால் மடித்து, விரல்களைப் பயன்படுத்தி உண்ணுதல் ஆகும்.
தமிழர்களின் உணவு இட்லி, தோசைப் போன்றவையாகும். நான்
சம்மனங்கால் மடித்து விரல்களால் இட்லி போன்ற உணவை
உண்ணுவதைக் கண்ட ஒருவர் சுலபமாக நான் ஒரு தமிழன் என்று
அறிந்து கொள்வார். இதிலிருந்தே, என் மொழிதான் என் அடையாளம்
என்று நான் அறிந்துக் கொள்கிறேன்.

மேலும், என் வாழ்வியல் முறையும் என் மொழியையும் என்


அடையாளத்தையும் குறிக்கும். திருக்குறள் போன்றவை தமிழில்
எழுதப்பட்டவனாகும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்ப படும் (131).

எனும் குறளுக்கேற்ப என் அன்றாட வாழ்க்கையில் ஆத்திச்சூடி, திருக்குறள்


போன்றவற்றை நான் பின்பற்றுகிறேன். இவற்றை நான் பின்பற்றும்போது
என் மொழி என் அடையாளமாக அமைகிறது. எனவே, என் மொழிதான்
என் அடையாளம்.

என் பண்பாடு மற்றும் நான் ஒருவர் மீ து செலுத்தும் மரியாதை என்


மொழியையும் என் அடையாளத்தையும் குறிக்கும். தமிழில் மட்டும்தான்
நீங்கள், உங்கள் என்று மரியாதைக்குறிய சொற்கள் உண்டு.
இச்சூழ்நிலையில் நான் மூத்தோர்களை நீங்கள், உங்கள் என்று
அழைக்கும்போது அது நான் மூத்தோர்களின் மீ து செலுத்தும்
மரியாதையாகும். மரியாதை எனும் சொல் என் பழக்கத்தை அதாவது, என்
அடையாளத்தை குறிக்கும். இதிலிருந்து என் மொழிதான், என்
அடையாளம் என்று நான் புரிந்து கொள்கிறேன்.

இறுதியாக, என் மொழியில் பல சிறப்புகளும் உன்னதமான


கூறுகளும் அடங்கியுள்ளன. என் மொழியே என் அடையாளத்தைக்
குறிக்கும். எனவே, நான் தமிழ்மொழியை மூச்சாகவும் அடையாளமாகவும்
கருதி அதனை நேசிப்பேன். ஆகவே, என் மொழிதான், என் அடையாளம்.
யோகதர்ஷன் சிவகுமரன் ஆண்டு 5

You might also like