You are on page 1of 2

கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான் எனும் பழமொழி ஒன்றே போதும் வாசிப்பின்

அவசியத்தை நமக்கு எடுத்துக்காட்டுவதற்கு. பார்க்கும் நூல்களையெல்லாம் குறிப்புகளை


எல்லாம் வாசிக்கத் தொடங்கும் பொழுது ஒரு மனிதன் அறிவில் சிறந்தவனாகத்
திகழ்கிறான். கல்வி என்பது பள்ளிக்கூடத்தோடு நின்றுவிடுவது அல்ல. அதையும் தாண்டி
பல விஷயங்களையும் வாசித்து அதன்மூலம் அறிவைப் பெற்றுக் கொள்வதும் ஒரு வகை
கல்வியே.வாசிப்பதன்வழி ஒருவனுடைய அறிவு வளர்பபது மட்டுமின்றி அவனுடைய மன
மகிழ்விற்கும் பக்குவம் நிறைந்த சிந்தனையைக் கொடுப்பதற்கும் இது உதவுகின்றது.

தொடக்ககாலத்தில் வரிவடிவத்தை ஒலி வடிவமாக மாற்றுவதுதான் வாசிப்பு என்று


குறிப்பிடப்பட்டது. காலப்போக்கில், பொருளறிந்து கருத்துணர்தல்தான் வாசிப்பு எனக்
கருதப்பட்டது. அச்சிலோ கையெழுத்திலோ உள்ள செய்திகளைக் கண்ணால் பார்த்து
வாயால் உச்சரித்து மனதால் பொருள் உணர்ந்து கொள்வதே வாசிப்பாகும்.

வாசிப்பின் நோக்கம் வாசிக்க கற்றல், கற்க வாசித்தல் என இரண்டு இருக்கின்றது.


முதலில் வாசிக்க கற்றல் என்று பார்த்தோமானால், சரியாக வாசிக்கக் கற்றுக்கொள்ள
வேண்டும். அதாவது எழுத்து தொடங்கி, சொல் சொற்றொடர், பின்பு வாக்கியம் எனப்
படிப்படியாக வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வாக்கியத்தை வாசிக்க பழகிய
பின்பு, ஒரு கட்டுரையை வாசிக்க வேண்டும். தொடர்ந்து, அதில் உள்ள குறியீடுகளைக்
கற்றறிந்து பின்பு, அதற்கான அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
முழுமையான ஒரு வாசிப்பை அறிந்து பயன்படுத்துவதே கொள்வதே வாசிக்க கற்றல்
நோக்கமாகும்.

அதையடுத்து கற்க வாசித்தல், மொழியில் உள்ள பல சொற்களைத் தெரிந்துகொள்ள


வாசிப்பு மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு பல சொற்களைத் தெரிந்து கொள்வதன்வழி
சொற்களஞ்சியம் பெருக்கும். அதோடு, ஒரு மொழியில் புலமை பெற வழிவகுக்கும். மேலும்,
பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, தற்போதைய
தகவல்களைத் தெரிந்துகொள்ள வாசிப்பு ஒரு வகையில் உதவிப் புரிகின்றது. சொற்களைப்
புரிந்து கொள்வதோடு, வார்த்தைத் தேர்வில், வாக்கியங்களின் இடையில் இடம்பெறும் கலை,
கலாசார சாரங்கள், சமுதாயத்தின் சிந்தனைகள் உள்வாங்கும் அனுபவமும் வாசிப்பின்வழி
கிடைக்கப் பெறும்.

வாசிப்பில் உரக்க வாசிப்பு மௌன வாசிப்பு என இருவகை முறைகள் உள்ளன.


உரக்க வாசித்தல் என்றால் எழுத்துக்களை கண்களால் பார்த்து பொருளை உணர்ந்து
அதற்கேற்ப அதனை ஒலி வடிவத்தில் உரக்க வாசித்தல் ஆகும். உரக்க வாசித்தலின்வழி
படிக்கும் விஷயங்கள் மனதில் ஆழமாக பதியும். வரையறை என்று பார்த்தோமானால்,
சரியான வேகத்தோடு வாசித்தல் ஆகும். வாசிக்கும் பொழுது நிருத்தி நிதானமாக வாசித்தல்
அவசியம். அதிவேகமாக வாசித்தால், வாசிக்கும் விஷயம் மனதிற்குள் பதியாது.
அதுமட்டுமின்றி, சரியான தொனியும் வாசிப்புக்கு மிக முக்கியம். சரியான தொனியில்
வாசிக்கா விட்டால் அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள சிரமம் ஏற்படும்.
சரியான ஏற்ற இறக்கத்தோடு உரக்க வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். அதுவே ஒரு
கதையாக இருப்பின், சரியான தொனியில் வாசித்தால் மட்டுமே அக்கதையின் சூழலை
உணர்ந்து கற்பனை செய்து கதையைப் புரிந்து கொள்ள முடியும். தொடர்ந்து, உச்சரிப்பு
என்று பார்த்தோமானால் சரியான உச்சரிப்பு வாசிப்பில் வேண்டும். தெளிவான உச்சரிப்பு
சிறந்த உரக்க வாசிப்பிற்கு வித்திடும். சரியான உச்சரிப்பில் வாசிக்க விட்டால் அதன்
புரிந்துணர்வில் சிக்கல் ஏற்படும். நாம் மற்றவர்கள் முன் உரக்க வாசிக்கும் பொழுது
தெளிவான உச்சரிப்பு இல்லையென்றால் வாசித்த தகவல் அவர்களைப் போய் சேராது.
அடுத்ததாக, வாசிப்பில் சரளம் அவசியம். உரக்கவாசிப்பை மேற்கொள்ளும் பொழுது
சரளமாக வாசித்தால் அந்த வாசிப்பின் மீது உள்ள நாட்டத்தை அதிகரிக்கும். தடுமாறி
வாசிக்கும் பொழுது கருத்துகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். கதைகளாக
இருப்பின் வாசிக்கும் பொழுது சரளமாக வாசிக்க விட்டால் கதையோட்டம் விளங்காது.

தொடர்ந்து, மௌன வாசிப்பு என்று பார்த்தோமானால் மனதில் வாசித்து வெளியில்


சத்தமில்லாமல் கருத்தினை உள்வாங்கி கொள்வதாகும். மௌன வாசிப்பு தனிமையில் கல்வி
பயிலும் போதும் பயன்படுத்தப்படுகின்றது. கண்ணும் மனமும் மட்டும் வேலை செய்ததால்
படிக்கும்போது அதிக கவனத்தோடு கருத்துணர்ந்து வாசிக்க இயலும். மௌன வாசிப்பில்
மேலோட்ட வாசிப்பு என்றால் வாசிப்பு பகுதியைவிரைந்து வாசித்து தகவல்களையும்
விளக்கங்களையும் பெறுதலாகும். குறுகிய நேரத்தில் அதிகமாக வாசித்து பல விவரங்களை
அறிந்துகொள்ள இயலும். இதன்வழி, முக்கிய கருத்துகளை தெரிவு செய்யும் ஆற்றல்
பெருவதோடு, கண் நகர்ச்சி பயிற்சியிம் பெறலாம். தொடர்ந்து, கூர்ந்த வாசிப்பு என்றால்
கருத்துகளை விரைவாக கண்டறிதலாகும். தேவையான விடைகளை மட்டும் கூர்ந்து
கவனித்து பெறுதலே ஆகும். ஒவ்வொரு சொற்களாய் நிறுத்தி வாசிப்பதைத் தவிர்த்து
வாசிப்பர். பொதுவாக, இது தேர்வில் பதிலளிக்கப் பயன்படுத்தப்படும் முறையாகும்.

கற்பனைத் திறனும் ஆக்கத்திறனும் இன்றைய மாணவர்களிடையே குறைந்து காணப்


படுவதற்கு வாசிப்பு பழக்கம் இல்லாதது ஒரு முக்கிய காரணமாக. பல நன்மைகளை
தரக்கூடிய இவ்வாசிப்பு பழக்கத்தை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். முறையான
வாசிப்பு பழக்கத்தை அறிந்து, புரிந்து கொண்டு வாசிப்புப் பழக்கத்தை அனைவரும் கையாள
வேண்டும். வாசிப்பது நாம் சுவாசிப்பதற்கு சமம். நாம் எப்படி ஒரு நாளில் சுவாசிக்காமல்
இருக்க முடியாதோ, அதேபோல் ஒரு நாளில் ஒரு சிறு பகுதியையாவது நாம் வாசிப்பதை
வழக்கமாக கொண்டு வாசிப்பைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும்.

You might also like