You are on page 1of 4

கற்றல் கற்பித்தல் நெறிகள்

முழுமையிலிருந்து பகுதிக்குச்
செல்லுதல்
 குழந்தைகள் அறிந்துள்ள முழுப் பொருளைப் பிரித்துப் பகுதிகளைக் கற்பிக்க
வேண்டும் என்பது இதன் பொருள்.

 (Gestalt) கெஸ்டால்ட் என்ற உளவியல் அறிஞர் “நால் முதலில் ஒரு பொருளை


முழுவதுமாக உணர்ந்துக் கொள்கிறோம். பிறகுதான் அதன் பாகங்களை உணர்ந்துக்
கொள்கிறோம்” என்பதனை நிரூபித்துள்ளார்.

 கற்கக் கூடிய பொருள் அர்த்தமுள்ளதாக இருந்தால்தான், கற்றல் என்பது


எளிமையானதாகவும், சக்திவாய்ந்ததாகவும், நீண்டநாள் நிலைத்திருக்கக்
கூடியதாகவும் அமையும்

 ஒரு குழந்தைக்கு தனிப்பகுதியை விட முழுப்பகுதியானது அர்த்தமுள்ளதாகத்


தோன்றும்.

 முழுப்பகுதியானது பொருளை மட்டுமல்லாமல் அமைப்பையும், உருவையும்


பெற்றிருக்கிறது.
 மாணவன் பாடலின் சில வரிகளை மனப்பாடம் செய்வதை விட
முழுப்பாடலையும் மனப்பாடம் செய்வதால், அது அவனுக்கு பாடலின்
பொருளை உணர்ந்துக்கொள்ள உதவும்.

 மொழியைக் கற்பிக்கும்போது வார்த்தைகளை கற்பிப்பதற்கு முன்னதாக


முதலில் வாக்கியங்களை கற்பிக்க வேண்டும்.

 முழுப்பகுதி என்ன என்பது முன்பே தீர்மானிக்கப்பட வேண்டும்

 வாசிப்பைக் கற்பிப்பதில் கையாளும் சொற்றொடர் முறை இதை


அடிப்படையாகக் கொண்டது.

 நாம் சொற்றொடர்களாகப் பேசுகின்றோம், மாணவர்களும்


சொற்றொடர்களாகவே தங்கள் கருத்தை வெளியிடுகின்றனர்.

 சொற்ரொடரே எண்ணத்தை தெரிவிக்கும் மொழியின் முக்கிய உறுப்பாகும்.


 எ.கா: மாணவர்கள் பந்து விளையாடுகிறார்கள்.

 இந்த சொற்றொடர் குழந்தைகள் பட்டறிவில் உள்ள ஒரு நிகழ்ச்சி.

 இதனைக் கரும்பலகையில் பெரிய எழுத்துகளால் எழுதி அதை முழு வாக்கியமாக படிக்கச் செய்ய
வேண்டும்

 பிறகு அதிலுள்ள சொற்களை அறியவும், சொற்களிலுள்ள எழுத்துகளை உச்சரிக்கவும், எழுதவும்


கற்பிக்க வேண்டும்.

 உதாரணமாக: மாணவர்கள்- பலர்பால்


: விளையாடுகிறார்கள் – நிகழ்காலம்.

You might also like