You are on page 1of 7

அறிவுசார் நிலை வாசிப்பிற்கும், பேரறிவுசார் நிலை வாசிப்பிற்கும் இடையே உள்ள ஒற்றுமை

வேற்று

வாசிப்பு

கையெழுத்தில் அல்லது அச்செழுத்தில் உள்ளதைக் கண்களால் கண்டு வாயால்


உச்சரித்துக் சொல்லின் பொருள் உணர்வதே வாசிப்பு அல்லது படிப்பு என்பது டாக்டர்
ந.சுப்புரெட்டியார் என்பவரின் கருத்தாகும். வாசிப்பின் செயல்பாட்டினைக் காணும் போது
கண்ணிற்கும் வாயிற்கும் ஓர் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. அதாவது, வரிவடிவத்திலுள்ளச்
சொற்களை ஒலி வடிவமாக மாற்றி உச்சரிக்கும் உறுப்புகளும், சொற்களை நோக்கும்
கண்களும் ஒத்துழைத்தால்தான் வாசிப்பு சரிவர நடைபெறும். ஆகவே, வாசிப்பானது காணல்,
உச்சரித்தல், பொருளுணர்தல் என்ற மூவகை கூறுகள் அடங்கியுள்ளது.மேலும், நல்ல
வாசிப்பிற்கு எழுத்துகளின் ஆளுமை முதற்கூறாக அமைந்தால் கருத்துணர்வு, எவ்விதப்
பிரச்சனையுமின்றி சரளமாக அமையும் எனவும் ந.சுப்புரெட்டியார் கருதுகிறார்.

காணல்

வாசிப்பு

பொருளுணர்தல் உச்சரித்தல்

கல்வியாளர் கிப்சன் (1957) வாசிப்பு என்பது படித்தவர் , படிக்காதவற்றிலிருந்து


அவற்றின் பொருள்களை உணருவதே வாசிப்பு ஆகும் எனக் கூறியுள்ளார். ‘உட்மேன்’
என்பவர் வாசிப்பு எழுத்துக்கும் படிப்பவர்க்கும் ஏற்படும் ஊடலாகும் என மொழிகின்றார்.
மேலும் , கல்வியாளர் அண்டர்சன் எழுத்துப் படிவங்களிலிருந்து கருத்துகளைத் தொகுக்கும்
ஒரு செயற்பாங்கே வாசிப்பு என்றும் நுட்பமான திறனாகும் என்கிரார்.
ஆகவே , வாசிப்பில் இரண்டு முக்கியக் கூறுகள் காணப்படுகின்றன.ஒன்று
வரிவடிவத்தில் காணப்படுகின்ற எழுத்துகளைப் புரிந்து கொள்ளும் திறன் , மற்றொன்று அவை
உணர்த்தும் பொருளை உணர்ந்து கொள்ளும் திறன். எனவே , வாசிப்பவர் முதலில் சிந்திக்க
வேண்டும் , பிறகு உணர வேண்டும் இறுதியில் வாசித்ததை உருவகப்படுத்தி பார்க்க
வேண்டும்.

வாசிப்பு செயற்பாட்ட்டின் இறுதி நோக்கம் வாசித்த பகுதியைக் கருத்துணர்தலே


ஆகும். வாசித்தப் பகுதியினைக் கருத்துணர , வாசிப்பவருக்கு போதுமான பின்புல அறிவு
தேவைப்படுகிறது என்கிறார் ‘வூல்பொல்க்’(2004). அதாவது தன் பின்புல அறிவைப் பயன்
படுத்தி கிடைக்கப்பெற்ற புதிய தகவலோடு தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும் என்கின்றார்.

ஆகவே , வாசிப்பு செயற்பாடு என்பது , வரிவடிவத்தை அறிந்து , ஒலித்து


பொருளுணர்தலே ஆகும்.இவ்வாறு அறிந்து ஒலித்து பொருளுணரும் போது வாசிப்பவர்
தனக்குள் சிந்திக்கிறார். அறிவுசார் நிலையிலிருந்தும் பேறரிவுசார் நிலையிலிருந்தும்
சிந்திக்கிறார். அச்சிந்தனையின் மூலமாகத்தான் ஒரு முடிவுக்கு வருகின்றார். தான் படித்த பகுதி
உணர்த்தும் கருத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்கிறார்.

வாசிப்பில் அறிவு சார் நிலை(cognitive)

வாசிக்கும்போது மனிதன் இயல்பாக சிந்திக்கிறான் . இவ்வகை சிந்தித்தலை நாம்


அறிவுசார் செயற்பாடு என்கிறோம்.

வாசிப்பில் பேரறிவு சார் நிலை(metacognitive)

வாசிக்கும்போது மனிதனுக்கு இயல்பாக ஏற்படும் சிந்தனைக்கு அப்பால் ‘எவ்வாறு


சிந்தித்தோம்’ எனச் சிலர் எண்ணிப் பார்க்கின்றனர். சிந்தித்த முறையினைப்பற்றி மீளச்சிந்தித்து
பார்தலை சிந்தனை மீட்சி என்கிறோம். இதுவே வாசிப்பில் ‘பேரறிவு சார் நிலை’ எனக்
கருதப்படுகிறது.

அறிவு சார் நிலைக்கும் (cognitive) மற்ரும் பேரறிவு சார் நிலைக்கும்


(metacognitive) உள்ள ஒற்றுமைகள்.
1970 – இல் மேயரோ என்பவர் சிக்கல்களைக் களைய மாந்தன் மேற்கொள்ளும்
அறிவுசார் செயல்முறையே சிந்தனை என்கிறார். ஆனால் , பேரறிவுசார் செயல்பாடாக
விளங்கும் சிந்தனை மீட்சி என்பது ஒருவர் தாம் சிந்தித்த செயல்பாட்டினை அல்லது சிந்தித்த
வகையினைப் பற்றித் தாம் கொண்டுள்ள அறிவே சிந்தனை மீட்சியாகும் என்கிறார் . ஒருவர்
என்ன யோசிக்கிறார் ? எப்படி யோசிக்கிறார் எவற்றையெல்லாம் பயன்படுத்தி யோசிக்கிறார் ?
திட்டமிடாமல் சிந்திக்கின்றாரா ? என்பன போன்றவற்றை எண்ணிப் பார்க்கச் செய்வது
எதுவோ , அதுவே சிந்தனை மீட்சி என்கிறார்.

இந்த இருநிலைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையே நாம் இங்குக்


காணவிருக்கிறோம். முதலில் அறிவு சார் நிலைக்கும் பேரறிவு சார் நிலைக்கும் உள்ள
ஒற்றுமைகளைக் காண்போம்:-

வாசிக்கும்பொழுது சிந்தித்தல் என்பது அறிவுசார் நிலை , பேரறிவுசார் நிலை


இரண்டுக்கும் உள்ள இயல்பான ஒற்றுமையாகும்.

தொடர்ந்து சிந்தனையைப் பற்றி விளக்கும்போது அறிவு சார் நிலையில் ஒன்றின்


பொருளுணர்ந்து அதனைத் தெளிவுபெற புரிந்துகொள்வது ; மாறுபட்ட புதுமையான
கோணங்களில் ஒன்றைக்காண்பது ; ஏரணமாகவும் காரண காரிய அடிப்படையிலும் ஒன்றான
மதிப்பீட்டு முடிவுக்கு வரும் முயற்சியே சிந்தித்தல் என்கிறார்.

இதைத்தான் பேரறிவுசார் நிலையிலும் நாம் காண்கிறோம்.பெலவல் (1976) சிந்தனை


மீட்சி என்பது ஒருவர் தம் சிந்தனை செயல்பாட்டினை அல்லது சிந்தித்த வகையினைப்பற்றி
நாம் கொண்டுள்ள அறிவே சிந்தனை மீட்சி என்கிறார்.

குட்மேன் (1967) என்பவர் , வாச்சிப்பு என்பது கருத்துணர்தல் பொருட்டே


நடபெறவேண்டும் என்கிறார். இது அறிவுசார் நிலையில் மட்டுமின்றி பேரறிவு சார் நிலைக்கும்
பொருந்தும் என்கிறார். தொடர்ந்து வாசிப்புச் செயற்பாடு நடக்கும்போது வாசிக்கப்பட்ட பகுதி
கூறும் கருத்துகளை உனர்தலே இவ்விரண்டு நிலைக்கும் இறுதி நோக்கமாக அமைய
வேண்டும் என்கிறார். வாசிப்புப் பகுதி கூறும் கருத்தினை உள்வாங்கி தொகுத்து கூறும்
திறனையும் பெற்றிருப்பது அவசியம் என்கிறார்.
ஆகவே , வாசிப்பின் போது சிந்தனை செயல்முறையும் , சிந்தனை மீட்சியும்
நடைபெறுகின்றது.சிந்தன மூலமே படித்தப் பகுதியின் கருத்தை உணர்ந்து கொள்ள
முடிகின்றது. அறிவுசார் மற்றும் பேறரிவுசார் நிலகளில் காணும் ஒற்றுமைகள் இவை.

அறிவு சார் நிலைக்கும் (cognitive) மற்ரும் பேரறிவு சார் நிலைக்கும்


(metacognitive) உள்ள வேற்றுமைகள்.

தொடர்ந்து அறிவு சார் நிலை , பேரறிவுசார் நிலை இவ்விரண்டிற்குமுள்ள


வேற்றுமைகளைக் காண்போம். அறிவு சார் நிலையில் படித்தப் பகுதியின் கருத்தை
உணர்ந்துகொள்ள சிந்தனைப் படிநிலைகளப் பகுத்துக்கூறியுள்ளனர்.இச்சிந்தனை
படிநிலைகளைப் பயன்படுத்தி அறிவுசார் நிலையில் வாசித்தலின் இறுதி நோக்கத்தை
உறுதியாக அடைய முடியும் என்பது அறிஞர்களின் கருத்து.

கண்காணித்து
விளக்கம் பெருதல்
கட்புலம் உருவாக்குதல்

சுருக்கி தொகுத்தல்
கேள்விகேட்டல்

முக்கிய கருத்தை
முன்னுரைத்தல் அடையாளம் காணல்

தொடர்பு படுத்துதல் வாசிப்பு எழுத்தாளரின் நடையை


பகுத்தாய்தல்
பேறரிவுசார் நிலையில் வாசிக்கும் போது நாம் சிந்திக்கின்றோம் என்று கூறுகின்றனர்
அறிஞர்கள். சிந்தனையின் விளைவாக புதிய அறிவினைப் பெறுகின்றோம்.ஆனால் , சிந்தனை
மட்டும் போதாது , நாம் சிந்தித்த விதம் சரிதானா ? என்று மீள எண்ணிப்பார்க்கவும்
வேண்டும்.இவ்வாறு எண்ணிப்பார்த்தலின் , சுய சிந்தனைப்
வழிநிலை
அறிவு சார் சிந்தனையின் குறை நிறைகளையும் பலம்
பலவீனங்களையும் உணர்ந்து கொள்ள இயலும் : செம்மை படுத்தி கொள்ள முடியும்.
படிநிலைகள்

வாசிப்பில் கருவளம் என்பது அறிவுசார் நிலையின் ஒரு கூறாகும்.படித்ததைத் தன்


முன்னறிவோடு தொடர்புபடுத்தி தெளிவு பெருவதையே கருவளம் என்கின்றனர்.இவ்வாறு
சிந்தித்து செயல்படும் நிகழ்வினைத்தான் கருவளத்தொகுப்பு அல்லது செயல்களின் தொகுப்பு
என்பார் அண்டர்சன் (1977). கற்றல் என்பது பெறப்படும் புதிய அறிவினைத் தன்னுடைய
முந்திய அறிவோடு தொடர்புபடுத்தி அதனைத் தொகுத்து முறைமைபடுத்தும்
செயலாகும்.கருவளத்தைத் தொகுக்குகும் போது இருவகையான செயல்பாடுகள்
நடைபெறுகின்றான.ஒன்று உள்ளடக்க கருவளம் மற்றொன்று மொழியியல் கருவளமாகும்.
உள்ளடக்க கருவளம் எண்பது தாம் முன்பே அறிந்த ஒன்றை அதாவது சுயமாக படித்தொ
அல்லது , ஆசிரியரின் போதனை மூலமாகவோ பெற்றுக்கொண்ட ஓர்
அறிவைப்பற்றியதாகும்.மொழியியல் கருவளம் என்பதோ படிப்பவரின் சொல்வளத்தையும்
அவர் அம்மொழியில் பெற்றுள்ள ஆற்றலையும் தொடர்புபடுத்தும் செயலாகும்.எனவே
மொழிபதிவும் மொழியறிவும் கருத்துணர்தலைப் பெரிதும் பாதிக்கிறது என்கின்றானர்.

கவளத்தின் இரு வகை செயற்பாடுகள்


வாசிப்பில் பேறரிவு சார் நிலையில் சிந்தனை மீட்சி முக்கிய இடம்
வகிக்கிறது.சிந்தனைமீட்சி எனும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் பெலவல் (1976) என்பவர்
ஆவார்.
உள்ளடக்க கருவளம்
அவர்

வாசிப்பில் கருவளம்

மொழியியல் கருவளம்
சிந்தனை மீட்சி என்பது “ஒருவர் தம் சிந்தனை செயல்பாட்டினை அல்லது சிந்தித்த
வகையினை பற்றி தாம் கொண்டுள்ள அறிவே சிந்தனை மீட்சியாகும் ” என்கிறார்.ஒருவர்
என்ன யோசிக்கின்றார் ? எப்படி யோசிக்கின்றார் ? எவற்றையெல்லாம் பயன் படுத்தி
யோசிக்கின்றார் ? திட்டமிட்டு சிந்திக்கின்றாரா அல்லது திட்டமிடாமல் சிந்திக்கின்றாரா ?
என்பன போன்றாவற்றை எண்ணிப்பார்க்கச் செய்வது எதுவோ அதுவே சிந்தனை மீட்சி
என்பார் ஆர்த்தர் கோஸ்தா.(1984).

சிந்தனை மீட்சியை மேற்கொள்ளவோ அதில் ஈடுபடவோ துணை நிற்கும் கூறுகள் சில


உள்ளன. சிந்தனை மீட்சியின் போது இக்கூறுகளைக் கவனத்தில் கொள்வதோடு அவற்றைப்
பயன்படுத்தவும் வேண்டும். திட்டமிடல், தொடர் கண்காணிப்பு , மடிப்பிடல் ஆகியன சிந்தனை
மீட்சியின் கூறுகளாகும்.

திட்டமிடல்

சிந்தனை மீட்சியின்
கூறுகள்

தொடர் கண்காணிப்பு
மதிப்பிடல்

சிந்தனை மீட்சியின் கூறுகள்

அறிவுசார் நிலையைவிட பேரறிவுசார் நிலையில் திட்டமிடல் என்பது முக்கியமாக்


கருதப்படுகிறது. எதனைப்பற்றி சிந்திப்பது? எவ்வாறு சிந்திப்பது? எந்தச் சிந்தனைத்திறனைப்
பயன்படுத்துவது ? எத்தகைய சிந்தனைச் செயல்முறைகளை கையாள்வது ? போன்றவை
திட்டமிடலில் அடங்கும். சிந்தனையின் நோக்கத்தையும் சிந்திக்கும் முறைமையையும்
எண்ணிப்பார்ப்பதும் திட்டமிடுதலைச் சார்ந்ததேயாகும். திட்டமிடல்தான் சிந்தனை மீட்சியின்
முக்கிய நிலை என்கிறார் பேரி.

வாசித்தலின்போது திட்டமிடுதல் மிக அவசியம். வாசிப்பவர் , வாசித்தலின் நோக்கத்தை


முதலில் உறுதி செய்ய வேண்டும். தம் முன்னறிவு, ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில்
படிக்கத் தொடங்க வேண்டும். படிக்கும்போது , நோக்கம் தெளிவாக இருப்பின் இலக்கை
எளிதில் அடைய முடியும்.

தொடர்ந்து கண்காணிப்பதும் கண்டு தெளிதலும் பேரறிவுசார் நிலையில் உள்ள ஒரு


முக்கியமான கூறாகும். அப்பொழுதுதான் எழும் குறைகளை அறிந்து மாற்றங்களைச் செய்ய
முடியும் பேரறிவு சார் நிலை வாசிப்பின்

அடுத்ததாக மதிப்பீடு , பேரறிவுசார் நிலையில் தொடர் கண்காணிப்பின் போது நம்


சிந்தனையைப் பற்றிய மதிப்பீடு நிகழ்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம் நாம் வாசித்தப்
பகுதியில் தேவையான விவரங்களைச் சேகரித்து விட்டோமா என்பதை நம்மால் மதிப்பீடு
செய்ய முடியும்.

இறுதியாக இந்த இரு நிலைகளின் வழியாக முறையான வாசிப்பை மேற்கொண்டு


தெளிவான சிந்தனையைப் பெற நம்மால் முடிகிறது.

You might also like