You are on page 1of 4

ஹெகலும் மார்க்சும் நூல் மீதான விவாதம்

அண்ணா.நாகரத்தினம்

தோழரின் விமரிசனத்திற்கு எனது விளக்கம்:-

நூலைப் படித்து, கூர்மையான விமரிசனத்தை முன்வைத்து, விவாதத்தை


முன்னெடுத்தது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது.

பொருள்தான் அடிப்படையானது, பொருளிலிருந்துதான் கருத்து சார்நத ்


அனைத்து விசயங்களும் உருவாகின்றன என்பதை பொருள்முதல்வாதம்
வலியுறுத்துகிறது. பொதுவாக, மார்க்சியத்தைப் பயிலும்போது – மார்க்சிய
சிந்தனைக்கு அறிமுகமாகும்போது, ஒருவர் இத்தகைய மேலோட்டமான எளிய
பொருள்முதல்வாதத்தை கற்றுக் கொள்ளவும், கற்பிக்கவும் முடிகிறது. இதற்கு
வெளிப்படையான காரணம், மார்க்சியத்தால் ஈர்க்கப்படுபவர்கள் பொதுவாக
உழைக்கும் மக்களாகவோ அல்லது உழைக்கும் மக்களைச் சார்நத ் வர்களாகவோ
இருப்பதுதான். ஆனால் பல பத்தாண்டுகளாக மார்க்சியராய் வாழ்ந்துவரும்
நமக்கு, இயங்கியல் அணுகுமுறை இன்னமும் பெரும்பாலும் கைவர பெறாமல்,
இயக்கமறுப்பியல் சிந்தனையில் ஆட்பட்டிருக்கின்றோமே! அதற்கு என்ன
காரணம்?

ஒட்டுமொத்த மார்க்சிய இயக்கத்தின் தலைமை பீடங்களில் இத்தகைய


இயக்கமறுப்பியல் போக்குதான் உறைந்திருக்கின்றது என்பது எனது கருத்து.

பொதுவாக, இன்றைய மார்க்சியவாதிகளிடம் மேலோங்கி இருக்கும்


எதிர்மறையான போக்கு கருத்துமுதல்வாத தத்துவமா? அல்லது
இயக்கமறுபியல் அணுகுமுறையா? என்னைப் பொருத்தவரை, எல்லோரும்
ஏதாவது ஒருவகையில் நடைமுறையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
எனவே, பொருள்முதல்வாதிகள் என்று நம்மை ஒருவகையில்
கூறிக்கொள்ளமுடியும். ஆனால் இயங்கியல்வாதிகள் என்று கூறமுடியுமா?
முடியாது என்பது எனது கருத்து. பெரும்பான்மையோர் இயக்கமாறுப்பியல்
வாதிகளாக இருக்கின்றோம் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா?

இன்று நிலவும் மார்க்சிய இயக்கங்கள் சமூகத்தை முற்றொருமையாக அணுகும்


போக்கு தீவிரமாக இருக்கின்றது. இதற்கு ஏராளமான உதாரணங்களைக்
காட்டலாம். இந்தப் போக்குதான் சிந்தனை அளவில், பொருள்முதல்வாத்தை
முற்றொருமையாக்கி விடுகிறது. இதுதான், இவ்வியக்கம் மாபெரும்
பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருப்பதற்கான முதன்மையான அகநிலைக்
காரணமாகும் என்று நான் கருதுகிறேன்.
பொதுவாக இயக்கமறுப்பியல் போக்கு ஆதிக்கம் செலுத்திவரும் இந்த சூழலில்
முழுமையான இயங்கியலை வளர்ததெ ் டுப்பது என்பது முக்கியத்துவம்
வாய்நத
் து. இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்நூல் எழுதப்பட்டது என்பதை
முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அடுத்து தங்களின் விமரிசனங்களுக்கு வருவோம்.

1.“பொருள் முதலா, கருத்து முதலா என்பதைப் போலவே ஒரு


எதிர்மையை, பொருள்முதல்வாதத்துக்கும், இயக்கவியலுக்கும் இடையே
இங்கு ஆசிரியர் உருவாக்குகிறார்.”

தாங்கள் இவ்வாறு கூறுவது வியப்பாக இருக்கிறது! வரலாற்றில்


பொருள்முதல்வாதமும், இயங்கியலும் எப்போது இணைந்திருந்தன? வர்க்க
சமூகத்தின் துவக்கக் காலத்தில் இருந்தே மனிதச் சிந்தனையின் பிரிந்தே
பயணித்து வந்தப் பொருள்முதல்வாதமும், இயக்கவியலும் மீண்டும்
இணைவதற்கு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை கடக்க வேண்டியிருந்தது
என்பது தங்களுக்கு தெரியாதா?. மார்க்சியம் தானே இவ்விரண்டையும்
ஒருங்கிணைத்தது. ஆனால் தற்போதைய நிலைமைகளில், மார்க்சியர்களின்
சிந்தனையில், பொருள்முதல்வாதமும் இயங்கியலும் ஒருங்கிணைந்த
நிலையில்தான் இருக்கின்றன என்பதை தங்களால் கூறமுடியுமா? பொருளும்
இயக்கமும் ஒன்றுதான் என்பது கருத்தளவில் சரி. ஆனால் நமது சிந்தனையில்
அவை எவ்வாறு பிரதிபலிக்கின்றன? நமது சிந்தனை அவற்றை எவ்வாறு
உள்வாங்கிக் கொள்கின்றது? பொருளையும் இயக்கத்தையும் எதிர்மறையாக
நான் ஒருபோதும் நிறுத்தவில்லை. நமது சிந்தனையில் அவை இரண்டும்
ஒன்றிணைந்த வகையில் இருக்கவில்லை என்பதை உணர வேண்டும் என்பதை
வலியுறுத்துகிறேன்.

2.“பொருள்முதல்வாதியாக கருதப்படும் நபர் இயக்காவியல்


கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தால் அவர் கருத்துமுதல்வாதியாக
மாறுவது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் புறநிலைக்
கருத்துமுதல்வாதி என அறியப்பட்ட ஒருவர் இயங்கவியல்
கண்ணோட்டத்தை முரணற்ற வகையில் கடைப்பிடிப்பாரானால் அவர்
பொருள்முதல்வாதியாக மாறுவதற்காக வாய்ப்பு அதிகரித்த ஒன்றாகும்”
என்கிற தர்க்கத்தை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை.

இந்த போக்குகள் வரலாற்றில் இருந்தையே எனது கருத்தாக


முன்வைத்துள்ளேன். அவ்வளவுதான். பாயர்பாக்கின் பொருள்முதல்வாதக்
கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட எங்கல்ஸ் ‘நாங்கள் அனைவரும் உடனே ஃபாயர்பாக்வாதிகள்
ஆகிவிட்டோம்’ என்று கூறினார். வியசம், அத்தோடு முடிந்துவிடவில்லை. இது ஒரு துவக்கமாகவே இருந்தது.
மார்க்சுக்கும் சரி, எங்கல்சுக்கும் சரி, பொருள்முதல்வாதத்தை நிறுவ எவ்வளவு முயற்சிகளை எடுத்துக்
கொண்டனர். அவர்களின் முயற்சிகளுக்கு இயங்கியல் அணுகுமுறைகள் உறுதுணையாகவும்,
இன்றியமையாததாகவும் இருந்தன என்பதை உணரவேண்டும்.

சமூக இயக்கம், இயங்கியல் தன்மைக் கொண்டது. சமூக இயக்கத்தில் பங்கெடுக்கும் மக்கள்


கருத்துமுதல்வாத சிந்தனைக்கு ஆட்பட்டிருந்தாலும், நடைமுறையில் இயங்கியல் வழி பட்டவர்களாக
இயங்குகின்றனர். ஆனால் மார்க்சியர்கள் வறட்டுத்தனமான பொருள்முதல்வாத சிந்தனையை அடிப்படையாகக்
கொண்டவர்களாக இருக்கின்றார்கள். எனவேதான், சமூக இயக்கத்தை முழுமையாக புரிந்து கொள்ள இயலாத
வகையில் இயக்க மறுப்பியல்வாதிகளாக இருக்கின்றனர்.

எனது கருத்துக்கு வலு சேர்க்க நூலிலிருந்து ஒரு பகுதியை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

‘குருட்டுத்தனமான பொருள்முதல்வாதத்தைவிட இயங்கியல்


கருத்துமுதல்வாதம் மேலானது. இயங்காவியல் பொருள்முதல்வாதம்
வறட்டுத்தனமானது. இது பொருளை முற்றொருமையாக்கி விடுகிறது. இது,
பொருளின் ஒரு பண்பையோ அல்லது கூறையோ மட்டும் உயர்தத் ிப் பிடிப்பதோடு
மட்டுமின்றி அதை முற்றொருமையாக்கவும் செய்கிறது.

மேலும் இது சமூகத்தில் உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி ஆகியவற்றை இயங்கியல்


வளர்ச்சிப் போக்கில் வைத்துப் பார்ப்பதில்லை. இந்த விசயத்தில் சிந்தனையை
நிபந்தனைக்கு உட்பட்டதாகப் பார்க்கிறது. அது ஓர் உயிரோட்டம் உடையதாகவும்,
செயலூக்கம் உடையதாகவும் பார்க்கப் படுவதில்லை. இத்தகைய இயங்காவியல்
பொருள்முதல்வாதத்தை முட்டாள்தனமான பொருள்முதல்வாதம் என்று
கூறுவதில் தவறில்லை. இது மார்க்சியத்திற்கு எத்தகைய பங்களிப்பையும்
செய்யப் போவதில்லை.

"அறிவார்ந்த கருத்துமுதல்வாதம், முட்டாள்தனமான பொருள்முதல்வாதத்தை


விட அறிவார்ந்த பொருள்முதல்வாதத்திற்கு நெருக்கமானது" என்று லெனின்,
தனது ‘ தத்துவ வரலாறு குறித்த ஹெகலின் விரிவுரைகளுக்கு’ எழுதிய
குறிப்புகளில் எழுதியுள்ளதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.’

3. “பொருள்முதல்வாதம் வரையறைக்கு உட்பட்டது. ஆனால் இயங்கியல்


எண்ணற்ற பரிணாமங்களைக் கொண்டது” என்கிற வாதம் குழப்பம்
ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

பொருள்தான் அடிப்படை என்றால் அதை எவ்வாறு எதைக் கொண்டு நிறுவுவது,தத்துவ தளத்தில்


பொருள்முதல்வாதத்தை நிறுவ என்னென்ன வழிமுறைகள் உள்ளன? அதேபோல
இயங்கியலை நிறுவ என்னென்ன வழிமுறைகள் உள்ளன, இயங்கியல் அணுகுமுறையை
மேம்படுத்த என்ன முறைகள் உள்ளன? பொதுவாக பொருள்முதல்வாதம் இருப்பு, இருத்தல்
சம்பந்தபட்ட தத்துவமாகும். ஆனால் இயங்கியல் வழிமுறை சம்பந்தப்பட்ட
அணுகுமுறையாகும். இயங்கியலானது தர்க்கவியல், அறிவுத் தோற்றவியல் இன்னபிற
அறிவுத்துறைகளைச் சார்ந்திருக்க வேண்டும். இது போன்ற இயங்கியல் அணுகுமுறைச் சார்நத
் துறைகளைக்
கொண்டுதான் பொருள்முதல்வாதத்தை ஆணித்தரமாக நிறுவமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொருளின் இருப்பையும் இருத்தலையும் நிறுவ வேண்டுமானால் அதற்கு


இயங்கியல் சார்ந்த அணுகுமுறைக் கருவிகள் இன்றியமையாதவை.
பொருள்மதுீ எழும் ஐயப்பாடுகளை இயங்கியல் வழிமுறைகள்தாம்
தீர்த்துவைக்கின்றன; பொருள்முதல்வாத புரிதலை முழுமைப்படுத்துகின்றன
என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். இதை வலியுறுத்தவே இந்தக் கூற்றை
முன்வைக்கின்றேன்.

4. “இயக்கவியல் வழியாக இங்கிருந்து அங்கு போகலாம், ஆனால்


பொருள்முதல்வாத வழியாக அங்கிருந்து இங்கு வர முடியாது என்பதான
எந்த உத்திரவாதமான வழித்தடங்களும் தென்படவில்லை.”

‘இயக்கவியல் வழியாக இங்கிருந்து அங்கு போகலாம், ஆனால்


பொருள்முதல்வாத வழியாக அங்கிருந்து இங்கு வர முடியாது’ என்பது போன்ற
எந்த நிபந்தனையையும் நான் விதிக்க வில்லை. எங்கிருந்து துவங்குவது என்பது
இன்றைய பருண்மையான அறிவுச் சூழல் தீர்மானிக்கும் என நினைக்கிறேன்.
மார்க்சிய வட்டாரத்தின் தத்துவார்த்த பலவீனம் நிலவுவதை நாமனைவரும்
அறிவோம். பொத்தாம் பொதுவாக தத்துவ பலவீனம் என்று சொல்ல முடியாது.
இன்றைய சூழலில் நான் எந்த போக்குக்கு எதிராகப் போராடவேண்டும் என்று
நினைக்கிறீர்கள்? என்னைப் பொருத்தவரை, இன்றைய சூழலில் இயக்க
மறுப்பியல் சிந்தனைகளை எதிர்த்தே போராடவேண்டி யிருக்கிறது. மார்க்சிய
அறிவுப் புலத்தில் கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும்
இடையிலான முரண்பாட்டை விடவும் இயக்கமறுப்பியலுக்கும், இயங்கியல்
சிந்தனை முறைக்கும் இடையிலான முரண்பாடே முதன்மையானது என
கருதுகிறேன்.

இறுதியாக, சொற்களை கையாள்வதில், வெளிப்படுத்துவதில் பிறழ்ச்சி


இருக்கலாம். எனது கருத்தில் பிறழ்ச்சி இல்லை என்று நம்புகிறேன்.
தொடர்வோம். நன்றி.

You might also like