You are on page 1of 5

11/5/21, 1:03 PM தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ் கெளதமன் ) -சக்திவேல் கோபி | எழுத்தாளர் ஜெயமோகன்

முகப்பு அறிமுகம் கதைகள் வெண் முரசு நூல் கள்

நேர்காணல் மற்றும் பேட்டிகள் தொடர்புக்கு தேடு

தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ்


கெளதமன் ) -சக்திவேல் கோபி
November 5, 2021

அன் பு ஜெயமோகன் ,

நீ ண் ட வருடங் களுக்குப் பிறகு ராஜ் கெளதமனின்   தமிழ் ச்சமூகத்தில் அறமும்


ஆற்றலும்   ஆய் வுநூலை மறுவாசிப்பு செய் தேன் . தமிழில் வெளியாகி இருக்கும்
தலைசிறந்த அபுனைவு நூலாகவே இன் றைக்கும் தோன் றுகிறது. அந்நூலை அழகுறப்
பதிப்பித்த  விடியல் சிவாவுக்கு நன் றி சொல் லாமல் இருப்பது பண் பாகாது. அறம்
தொடர்பான சமூகக்கருத்தோட்டங் களை தமிழிலக்கியங் கள் வழி அணுக விரும் பும்
வாசகர்கள் நிச்சயம் அந்நூலை வாசிக்க வேண் டும் எனக்கேட்டுக் கொள் கிறேன் .

திருக்குறளை ஒரு அறநூலாக மட்டுமே வாசித்திருந்த எனக்கு ராஜ் கெளதமன் உச்சபட்ச


அதிர்ச்சியை அளித்தார். அதிகாரத்தின் மாயக்கரமாக அறம்
செயல் படுத்தப்பட்டிருப்பதைத் குறட்பாச் சான் றுகளோடு அவர் முன் வைத்திருந்த
விதம்   ’அரசியல் இலாப’  நோக்கமற்றது.  எனினும் , அதை வாசிப்பவர்கள் திருக்குறள்
அதிகாரத்தைக் காக்கும் பொருட்டுத்தான் எழுதப்பட்டதோ எனும்   ’அரசியல்
நிலைபாடுக்குள் ’  சிக்கி அவதியுறவும் செய் துவிடும் . அதனால் , வாசகர்கள் கவனமாக
இருக்க வேண் டுகிறேன் . தவறாமல் , அந்நூலின்   முடிவுரையைப் படிக்க வேண் டும் .
அப்போதுதான் ராஜ் கெளதமன் அவர்களின் நோக்கம் விரிவாய் த் துலக்கமாகும் .

வன் முறையே கூடாது என் பதில் உறுதியாக இருக்கும் வள்ளுவர் ஒரு அரசன் தன் னைக்
காத்துக் கொள்வதற்காகப் போரிடலாம் என் பன போன் ற கருத்துக்களைச் சொல் வதைக்
குறிப்பிட்டு திருக்குறள் பற்றி நாம் கொண் டிருக்கும் ‘ஒற்றை வாசிப்பு’  முறையைப் பலத்த
அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார் ரா.கெள.  ’ஒற்றை வாசிப்பு’  முறையால் உருவாக்கி
அளிக்கப்பட்டிருக்கும் ‘பொது வரலாற்றுச் சித்திரத்தையும் ’  மறுபார்வைக்குள்ளாக்குகிறார்.
அச்சு முதலாளியத்தின் வழி நமக்களிக்கப்படிருக்கும் வரலாற்றுத் தகவல் களை இலக்கியச்
சான் றுகள் துணைகொண் டு மறுவிசாரணைக்கு ஆயத்தப்படுத்துகிறார்.

பொதுவாகவே, அறநூல் களின் தோற்றம் பற்றி விரிவான சான் றுகளோடு பேசும் ராஜ்
கெளதமன்   அறத்தை அதிகாரத்தின் உறுப்பாகவே  நமக்குக் காட்டுகிறார். இது
ஒருவகையான ஆய் வுக்கோணம் . இதுவே  ’முடிந்த முடிபு’  என் பதான அழுத்தம் இல் லை.
ஆக வாசகர்கள் வெகுகவனமாக இருக்க வேண் டும் . மார்க்சியம் , பெரியாரியம் ,
அம் பேத்கரியம் போன் ற கோட்பாடுகளை மட்டும் வைத்துக் கொண் டு ஜல் லி அடிக்காமல்

https://www.jeyamohan.in/158882/ 1/5
11/5/21, 1:03 PM தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ் கெளதமன் ) -சக்திவேல் கோபி | எழுத்தாளர் ஜெயமோகன்
சிக்மண் ட் ஃப்ராய் டு, ஃபூகோ, நீ ட்ஷே, கிராம் சி போன் ற நவீனச் சிந்தனையாளர்களின்
பங் களிப்புகள் வழியாகவும் தனது ’சிந்தனைப்புலத்தை’ வலுப்படுத்தி உள்ளார்.

வள்ளுவரின் காமத்துப்பால் எவ் வாறு ஆண் மையச் சமூகத்தின் ‘காப்பாக’  இருக்கிறது


என் பது பற்றிய அவரின் விரிவான விளக்கங் கள் ‘பாலியல் அறங் கள் ’  பற்றிய
மீள்விசாரணையை முடுக்கி விடுகின் றன. பக்தி  x  சித்தி என் பதான சமயத்தளத்தின்
கருத்தாடலை பெண் ணின்  அலங் கார ரூபம்  x ஆபாச ரூபம்  என் பதான கோணத்தில் அவர்
வியாக்கியானம் செய் த அத்தியாயங் களில் நிமிர்ந்து உட்கார்ந்தேன் . நூலின் மிக
முக்கியமான பகுதிகள் அவை. நூலை மூடிவைத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்
கொண் ட பிறகே தொடர முடிந்தது.

பக்தியின் பெண் மை பெண் ணின் அலங் கார ரூபத்தை வியந்தோதி இருக்க, சித்தியின்
நாயகர்கள் (சித்தர்கள் ) பெண் களின் ஆபாச ரூபத்தைப் பகிரங் கப்படுத்தி இருப்பார்கள் .
சான் றுகளுக்கு, சைவ வைணவ பக்திப்பாடல் களையும் சித்தர்பாடல் களையும்
ராஜ்கெளதமன் நூலில் அளித்திருக்கிறார். சித்தர் பாடலுக்குச் சான் றாக  எத்தனை பேர்
தொட்ட முலை / எத்தனை பேர் நட்ட குழி எனும் பட்டினத்தாரின் வரியைச் சொல் கிறேன் .

நவீனக் கோட்பாட்டாளர்கள் பொருளியல் , பிராமணிய, சாதிய அதிகாரக்


கருத்தியல் களாலே சமூகம் சீரழிந்து விட்டதாகக் கூப்பாடு போட்டு
‘போராடிக்’  கொண் டிருக்கும் இக்காலத்தில் ,  ஆண் மையம்   எனும் யோசனையை நோக்கி
முன் நகரும் ராஜ் கெளதமன் நம் மை ’சிந்தனை முறைமையை’ உலுக்கி விடுகிறார்.

இன் னும் சொல் லப்போனால் , சமூகம் என் பதை ஆணின் கோணத்தில் இருந்தே அணுகும்
இலட்சியவாதங் களின் அபத்தப்போக்கைத் தோலுரித்திருக்கிறார். பொருளியல் மையம்
பேசிய மார்க்சியமோ, பிராமணிய மையம் பேசிய பெரியாரியமோ, தாழ்த்தப்பட்டோர்
மையம் பேசிய அம் பேத்கரியமோ, கிராம மையம் பேசிய காந்தியமோ
ஆண் மையத்திலிருந்து அவற்றை யோசித்ததா எனும் திறப்பை ராஜ்கெளதமன் வைத்துச்
செல் கிறார். மூலக்கோட்பாடுகளில் அவை பேசப்பட்டிருந்தாலும் , அவ் வமைப்புகளின்
நடைமுறை வடிவமான  ’அரசியல் செயல் பாடுகளில் ’  அவை எதிரொலித்திருக்கின் றனவா
எனும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறார். எவ் விதக் கோட்பாடுகளையும் அவர் வீண்
என் று உதறிச் செல் லவில் லை. அவற்றின் ‘அரசியல் வடிவங் களை’  மறுபரிசீலனைக்கு
உட்படுத்தவே மன் றாடுகிறார். ஒரு தேர்ந்த சிந்தனையாளரால் அப்படியான மன் றாட்டை
நிகழ்த்த இயலும் .

சமூகம் ஒருபோதும் ‘நிலையான’  வடிவத்தில் இருப்பதில் லை; இருக்கப்போவதுமில் லை.


இயங் கியல் புரிந்தவர்களுக்கு இது தெளிவாகவே புரியும் . இன் றைய வரலாற்றுப்பரப்பில்
இருக்கும் நவீனச் சமூக வடிவை முந்தைய வரலாற்றுகாலச் சமூக வடிவங் களோடு
ஒப்பிட வேண் டியதன் தேவையை இப்போது வரை சமகால  ’அரசியல்
அறிவுஜீவிகள் ’  ஒப்புக்கொள் வதில் லை. அவர்களைப் பொறுத்தவரை, வரலாறு என் பது
கிழித்த நேர்கோடு போன் றது. அதனால் தான் கோட்பாட்டாளர்கள்   ’அரசியல்
வடிவங் களின் ’  வழி  ’சமூக மாற்றத்தை’  உருவாக்கி விடலாம் எனத் உறுதியாக
நம் புகின் றனர். அரசியல் வடிவம் அவசியம் தான் . அது எப்படிப்பட்டதாக இருக்க வேண் டும்
என் பது பற்றிய தெளிவு முக்கியம் .

அரசியல் அறிவுஜீவிகளைப் பொறுத்தவரை சமூகம் எப்போதும் இரு தரப்புகளை மட்டுமே


உள்ளடக்கியது. ஒன் று ஒடுக்குகிற தரப்பு; மற்றது ஒடுக்கப்படுகின் ற தரப்பு.
ஒடுக்கப்படுகின் ற தரப்பை எழுச்சி பெறச் செய் து ஒடுக்குகிற தரப்பைக் காலி செய் து விட
வேண் டும் என் பதே அவர்களின் அரசியல் வடிவம் . அதன் பொருட்டே கட்சிகள் ,
தொண் டர்கள் , ஆர்ப்பாட்டங் கள் , முழக்கங் கள் , போராட்டங் கள் . உண் மையில் ,
இவ் வகையான செயல் பாடுகள் பகுத்தறிவுக்கே முரணானவை.

சமூகத்தை ஒரு புறவய இயந்திரத்தைப் போன் று பார்ப்பதே, கோட்பாட்டாளர்கள் மற்றும்


அறிவுஜீவிகளின் பலவீனம் . சமூகத்தை நவீன மனிதர்களின் கோணத்தில் இருந்து மட்டுமே
அணுகுவது, மற்றுமொரு பிழை. சமூகத்தைப் பிரபஞ்சத்தின் (இயற்கை) எல் லைக்குள்
இருக்கும் மனிதக்குழுவாழ்வு(செயற்கை) என் பதாக என் றைக்காவது நாம் பேசி
இருக்கிறோமா? மார்க்சியம் ஓரளவு அதைக் கண் டுணர்ந்திருக்கிறது. அதனால் தான் சமூக
வடிவங் களை வேட்டை, மேய் ச்சல் , வேளாண் , உற்பத்தி மற்றும் நவீனம் என அடையாளம்
காட்டி இருக்கிறது. அதுபற்றிய புரிதல் கொண் ட மார்க்சியர்கள் இன் று வெகுசிலரே
இருக்கின் றனர். பெரும் பாலான கட்சி மார்க்சியர்களுக்கோ மார்க்சிய அடிப்படையே
தெரியாது; அதன் இயங் கியலும் விளங் காது. அப்படித்தான் சமகாலத்தலைமுறை
பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் , வலைதள வம் புகள் வேறு.

வேட்டை > மேய் ச்சல் > வேளாண் > உற்பத்தி > நவீனம் என் பது கூட புரிந்து
கொள்வதற்கான சங் கிலியே தவிர, உறுதியாக இப்படித்தான் சமூக வடிவங் கள்
பரிணமித்திருக்கின் றன எனும்   ’அறிவியல் நிரூபணம் ’  கிடையாது. அது அவசியமும்
இல் லை. இங் கு வேட்டைச்சமூகத்தில் மனிதன் இயற்கையை அதிகம் நம் ப வேண் டி
இருந்தது. மேய் ச்சல் மற்றும் வேளாண் சமூகங் களில் இயற்கையுடனான தொடர்பிலிருந்து
விலகத் துவங் கினான் . உற்பத்தி மற்றும் நவீனச் சமூகங் களில் முழுக்கவே இயற்கைக்கு
அந்நியமாகிப் போனான் அல் லது இயற்கையை அறியாது ‘தானே’  பிரபஞ்ச மையம்
என் பதான எக்களிப்பில் மிதக்கிறான் . அம் மிதப்பே சமூகம் என் பதை
மாந்தசமூகம் (மனிதச்சமூகம் ) என் பதாக மட்டுமே புரிந்து கொள்ள வைக்கிறது.
அங் கிருந்தே சமூக மேம் பாட்டைக் குறித்து ‘சிந்திக்க’வும்  வைக்கிறது. அவன் சிந்தனையில்
எப்போதும் இருப்பது ‘மனிதர்களே’.  இன் னும் சொல் வதானால் , அவன் சார்ந்திருக்கும்
கோட்பாடு முன் வைக்கும் ‘ஒடுக்கப்பட்டவர்களே’.

https://www.jeyamohan.in/158882/ 2/5
11/5/21, 1:03 PM தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ் கெளதமன் ) -சக்திவேல் கோபி | எழுத்தாளர் ஜெயமோகன்
இயற்கைக்கு நெருக்கமாக இருந்தவன் வேட்டை மனிதன் ; இயற்கையையே (அதிகம் )
அறியாதவன் நவீன மனிதன் . இக்கருத்தைக் கொண் டு நவீன மனிதன் மோசமானவன்
என் றும் , வேட்டை மனிதன் புனிதமானவன் என் பதான கற்பிதங் களை உருவாக்கி
மடத்தனம் புரிபவர்களும் இருக்கிறார்கள் . அப்படியும் ஆகிவிடக்கூடாது. வேட்டை
மனிதனுக்கு நவீன மனிதன் புரியாமல் போகலாம் . ஆனால் , நவீன மனிதனால்
அவனுக்குள்ளிருக்கும் வேட்டை மனிதனைக் கண் டுகொள்ள முடியும் தானே?

தான் யார் எனச் சிந்திப்பதன் வழியாக வேட்டை மனிதனைக்கண் டு கொள்ளும் நவீன


மனிதன் , இன் னும் பயணித்தால் தன் னை இயற்கையின் சிறுதுளியாக உணரும்
வாய் ப்பைப் பெறலாம் . அவ் வாறு உணரும் நவீன மனிதன் என் ன செய் வான் என நாம்
பொதுவாகச் சொல் லி விட இயலாது. ஒன் று மட்டும் உறுதி. சமகால நடைமுறைக்
கோளாறுகளுக்குக் காரணம்   ’நவீனச் சமூகத்தின் அறிவுக்குறுக்கமே’  எனும் புள்ளியை
நிச்சயம் வந்தடைவான் . இப்போதைக்கு அது முக்கியம் என் பது என் தரப்பு.

சமயத்தின் வழி சமூகவாழ்வை விளங் கிக் கொள்வது எளிதாக இருக்கும் . வேட்டை


மனிதனின்   வாழ் வியல் நிகழ் வுகள்   மேய் ச்சல் மனிதனின் காலத்தில்   பண் பாட்டுச்
சடங் குகளாகின் றன. அவை வேளாண் மற்றும் உற்பத்தி மனிதன் காலத்தில்   ஆன் மீகச்
சமயமாகிறது. அதுவே நவீன மனிதனின் காலத்தில்   தத்துவ நிறுவன மதமாகிறது.
நிறுவன மதத்தின் உள்ளடக்கமாக ஆன் மீகம் , சடங் குகள் போன் றவை இன் றைக்கும்
இருக்கின் றன. ஆனால் , அவை நிறுவன மதத்தின் அதிகாரச் சார்பால்
திரிபுப்படுத்தப்பட்டிருக்கின் றன. அத்திரிபுகளும் நவீன காலத்தில் மட்டுமே
உருகொள்ளவில் லை. அதன் வேர்கள் , மேய் ச்சல் சமூகச் சடங் குகளுக்கு முன் பு இருந்தே
கூட ஆரம் பித்து இருக்கலாம் . கனகச்சிதமாக சமூக வரலாற்றை நாம் எழுதிவிட முடியாது.

இங் குதான் மார்க்சியம் நமக்கு கைகொடுக்கிறது. இயற்கையை பொதுவுடைமையாகக்


கொண் டிருந்த வேட்டை காலச்சமூகத்தில் அதிகாரம் எனும் வார்த்தைக்குப் பொருளில் லை.
தனியுடைமை உருவான மேய் ச்சல் சமூகக் காலகட்டத்தில் அதிகாரம் துலங் கத் துவங் கி
இருக்கலாம் . மெல் ல மெல் ல நவீனச் சமூகத்தில் அது எதேச்சதிகாரமாக வளர்ந்து
நிற் கிறது. இவ் வாறாக அதிகாரத்தை விளங் கிக் கொள்வது முக்கியம் . மேலும் ,  அதிகாரம்
எனும் கருத்தாக்கம் குறிப்பிட்ட மனிதக்குழுவுக்குச் சொந்தமானதும்
அல் ல.  மனிதக்குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த முரணியக்கங் களைப் புரிந்துகொள்ள
உருவாக்கிக் கொண் ட சொல் லே அதிகாரம் .

வேட்டைச் சமூக மக்கள் முற்றிலும் அழிந்து, மேய் ச்சல் சமூக மக்கள் உருவாகவில் லை.
உணவுக்குத் தானியத்தைப் பயன் படுத்தத் துவங் கும் பலர் விலங் குகளை
வேட்டையாடுவதைக் குறைத்துக் கொள் கிறான் (சிலர் தொடர்ந்து வேட்டையாடுகின் றனர்).
கூட, வேட்டையைக் குறைத்துக் கொள் பவர்கள் மேய் ச்சல் நாடோடிகளாக வாழ்வை
மேற்கொள் கின் றனர். மேய் ச்சல் வாழ்விலிருந்து முரணியக்கம் கொள்ளும் குழுவினரால்
வேளாண் சமூக வடிவம் உருவாகிறது. தொடர்ந்து, ஓரிடத்தில் நிலைத்த குடிகளாக வாழும்
வேளாண் மற்றும் உற்பத்திச் சமூகக் கால கட்டத்தில் வேளாண் மையும் வேளாண் சார்ந்த
உற்பத்தி நடவடிக்கைகளும் ‘தொழிலாக’  மாறுகிறது. நவீனச் சமூகத்தில் அதன் நீ ட்சியாக
உற்பத்தி பொருட்கள் ‘வணிகமாகி’ இலாபத்தை முதன் மையாகக் கொள் கிறது.

நாம் இன் றைக்கு நவீனச் சமூகத்தில் வசிக்கிறோம் . என் றாலும் , நவீனச்சமூகத்தில்


வேளாண் , உற்பத்தி, மேய் ச்சல் மற்றும் வேட்டைச்சமூக மக்கள் உள்ளடங் கி இருப்பதைக்
கவனிக்க வேண் டும் . இன் றைக்கும் எங் கள் பகுதியில் வேட்டையை மட்டுமே நம் பி
இனக்குழுவாக வாழும் நரிக்குறவர்களும் , மேய் ச்சலை மட்டுமே நம் பி வாழ்வோரும் ,
விவசாயத்தை மட்டுமே நம் பி இருப்போரும் , இயந்திரத்தொழிற்சாலை அமைத்து தொழில்
செய் வோரும் , தரகு வணிகம் மேற்கொள்ளும் நவீனவணிகர்களும் இணைந்தே
இருக்கின் றனர்.

கெடா வெட்டுதல் , கூறுபோடுதல் , அலகு குத்துதல் (வேட்டை மற்றும் மேய் ச்சல் சமூகப்
பண் புகள் ), முளைப்பாலிகை எடுத்தல் , தீர்த்தக்குடம் , வேண் டுதல் , தேர் இழுத்தல் ,
டிராக்டரில் சாமி நகர்வலம் வருதல் (வேளாண் மற்றும் உற்பத்திச் சமூகப்பண் புகள் ),
கோவில் கடைகள் , அறங் காவலர் அல் லது அரசு நிர்வாகம் (நவீனச் சமூகப்பண் புகள் ) எனச்
சமூகப்பரிமாணத்தின் உள்ளுறையைக் கோவில் நிகழ்வுகளில் நேரடியாகக் காணலாம் .

நவீனப்பண் பாடு என் பது வேட்டைக்கு முன் துவங் கி நவீனத்தில் முழுமை பெறுவது.
வெறுமனே நவீனம் மட்டும் அன் று. அப்புரிதலே இதுகாறும் நமக்கு வாய் க்கவில் லை
அல் லது வாய் ப்பதற்கு அரசியல் குழுக்கள் விட்டதில் லை. அரசியல் குழுக்களின் நோக்கம்
அதிகாரத்தைக் கைப்பற்றல் என் றாகும் போது அவர்களால் திரிபுகளையே சிந்தனைகளாகச்
சமூகத்துக்கு அளிக்க முடியும் . அதுவே கடந்த ஐம் பது ஆண் டுகளில் தமிழ்கத்தைக் கடும்
சீரழிவுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கொஞ்சம் எளிமையாக்க முயற்சிக்கிறேன் . இன் றைக்கு இருக்கும் வாழ்வை நவீனம்


என் றும் , அதற்கு முந்தைய சமூகப் பண் பாடுகளை மரபு என் றும் கொள் வோம் .
மரபுக்குள்ளான முரணியக்கமே நவீனமாகி இருக்கிறது.  மரபு அழிந்து நவீனம்
உருவாகவில் லை. இதுவே புரிந்து கொள் ள வேண் டியது.  விதை அழிந்து வேர்
உருவாகவில் லை. வேரில் விதை சூட்சுமமாய் இருக்கிறது. கனியிலும் அது இருந்தே தீரும் .
நமக்கோ மரபு அறிவீனம் என் றும் , நவீனமே அறிவு என் பதாகவும் கோட்பாடுகள் வழி
பயிற்றுவிக்கப்படுகிறது. அதனாலேயே  நவீனம் எதிர் மரபு  என் பதான இருமையை
உருவாக்கி அதில் நவீனம் பக்கம் நம் மை இருத்திக்கொண் டு மரபுக்கு எதிராக அல் லது
அதை முற்றொழிப்பதையே முற்போக்கு என முடிவு செய் கிறோம் . எப்பேர்ப்பட்ட அபத்தம்
இது?

https://www.jeyamohan.in/158882/ 3/5
11/5/21, 1:03 PM தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ் கெளதமன் ) -சக்திவேல் கோபி | எழுத்தாளர் ஜெயமோகன்
பன் மைகளை இருமையாக்கி அதன் வழி உலகை ஒற்றை அதிகாரத்தின் வழி கொண் டுவிட
வேண் டும் எனும் படியான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண் டிருக்கின் றன. அது
உலகம் தழுவித் தீவிரமாக நடைபெறுகிறது; நாடு, மாநிலம் , நகரம் , கிராமம் எனும் சிறிய
அலகுகளிலும் அதன் தாக்கம் ஊடுருவி இருக்கிறது.

மரபுச்சமூகங் களில் முரணியக்கம் நிகழ்ந்தது போன் று நவீனச்சமூகங் களிலும்


முரணியக்கம் நிகழும் . முரணியக்கங் களை விளங் கிக் கொள்வதே
மெய் யறிதல் (திரும் பவும் சொல் கிறேன் . முரணியக்கங் களை எதிரிடைகளாகப் புரிந்து
கொண் டு விடாதீர்கள் ). அந்நிகழ்வின் வழியாக நாம் விரும் பும் கனவுச்சமூகத்தை
உருவாக்க இயலுமா எனத்தெரியவில் லை. ஆனால் , கனவுச்சமூகம் பற்றிய கற்பனை
அவசியம் . கற்பனைகளே மனிதனின் தனித்துவம் . அவையே அவனைச் சமகாலத்தில்
உற்சாகம் குன் றாமல் செயல் படத் வைக்கின் றன.

நவீனச்சமூகம் அடுத்து என் னவாக இருக்கும் என் பதை இப்போது ஊகமாகக் கூடச்
சொல் லிவிட முடியாது. அறிவியல் பூர்வமாகச் சொல் லிவிட முடியும் என மார்தட்டுபவர்கள்
அறிவியல் அறியாதவர்களாகத்தான் இருக்க முடியும் . இன் றைக்கு நம் முடைய தேவை,
சமூக வடிவங் களின் பன் மைகளைக் குறித்து மேலதிகத் துலக்கத்திற்குத் தயாராக
இருப்பதே.

ஐரோப்பிய அறிவொளி கால அறிவு நமக்கு அளித்திருக்கும்   ’சிந்தனை


முறைமை’    முழுக்கத் தவறானதன் று. ஆனால் , அதையே  ’முழுமுதல் உண் மை’  என் பதாக
ஒப்புக்கொள்ளும் போக்கே ‘அறிவீனம் ’  ஆகும் . அதனாலேயே, பெரியாரால்   சமூக
உளவியலில்   சிறிதளவு மாற்றத்தைக் கூடச் செய் ய முடியாமல் ஆனது. சமூக வடிவில்
சீர்திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் . அது சமூக உளவியலில்
எதிரொலித்திருக்கிறதா? நவீனச் சமூகத்தின் வடிவம் தான் நவீனமே தவிர அதன்
உள்ளடக்கம் மரபைச் சூட்சும் மாகக் கொண் டிருக்கிறது. சமூகத்தைப் புறமாக மட்டுமே
பெரியார் போன் றோர் கருதினர். அதனாலேயே புறமாற்றங் களே சமூக மாற்றங் கள் என
நம் பவும் தலைப்பட்டனர். உண் மையில் சமூக மாற்றங் கள் அதன் உள்ளடக்கத்தையும் ,
சமகால வடிவையும் கருத்தில் கொண் டோரால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.

நவீனமே மேம் பாடு, மரபு குப்பை என் பதைப் போன் ற பெரியாரின் பார்வையே
மிகக்குறுகலானது என் பது மட்டுமன் றி.. அது பகுத்தறிவும் ஆகாது. அவர் நவீன அறிவைப்
பகுத்தறிவு எனச் சொன் னார். உண் மையில் , பகுத்தறிவு என் பது நவீனத்தைப் பகுத்து அதில்
மரபின் தேவை என் ன என் பதை விளங் கிக் கொள்வதும் அதை நவீனத்தின் வழி
மேற்கொண் டு செல் வதும் தான் . அங் கு பெரியார் பெரும் பிழை செய் துவிட்டதாகவே
கருதுகிறேன் .

பெரியாரின் பார்வையில் சமூகப்பன் மைகள் ,  பிராமணர் எதிர் பிராமணர்


அல் லாதோர்  என இருமைகளாகக் குறுக்கப்படுகிறது. மேலும் , பிராமணர் அல் லாதோர்
பக்கம் நின் று அவர்களுக்கு எதிரிகளாக பிராமணர்களைக் கட்டமைக்கும் வேலையைச்
செய் வதைத் திராவிடர் கழகத்தின் அரசியல் வடிவமாக்குகிறார். அவ் வடிவத்துக்குச்
செல் லும் ஒருவர் சமூகத்தைப் பிராமணியம் கடந்து யோசித்து விடவே முடியாது.
அப்படியானால் , ஆதிக்க பிராமணியம் சரியானதா? அப்படி இல் லை. ஆதிக்க
பிராமணியமும் ஒரு காரணம் . அதுமட்டுமே காரணம் என் பதான முழுமுதல் தத்துவம் தான்
பேராபத்து.

இந்துமத அரசியலுக்கு வருகிறேன் . இந்துத்துவர்கள்   இந்துக்கள் எதிர் இந்துக்கள்


அல் லாதோர்  எனும் இருமைகளைக் கட்டி அதில் இந்துக்களுக்கு எதிரிகளாக இந்துக்கள்
அல் லாதவர்களை நிறுத்துகின் றனர். குறிப்பாக, இஸ் லாமியச் சகோதரர்களை கொடும்
எதிரிகளாகச் சித்தரிக்கின் றனர் (இஸ் லாமிய அடிப்படைவாதிகள் இந்துக்களை
எதிரிகளாக முன் வைப்பது போல). இந்துக்கள் மட்டுமே இந்து ராஷ் டிரத்தில் இருக்க
வேண் டும் என முழக்கமும் எழுப்புகின் றனர்.

பெரியாருடைய சிந்தனை முறைமையைக் கொஞ்சம் சீர்படுத்தினால் , அது சமூகத்துக்குப்


பயனுள்ளதாகும் . அவ் வகையில் அவரின் நோக்கம் மானுடத்துக்கானது. அதனால் தான்
கடவுளை மற மனிதனை நினை என உறுதிபடச் சொன் னார். ஆனால் , இந்து
அடிப்படைவாதிகளின் சிந்தனை முறைமையோ முழுக்கத் திரிபானது. அதனால்
இந்தியாவுக்குக் கேடு விளையுமே தவிர நன் மை ஒருபோதும் சாத்தியமில் லை.

இன் றைய சூழலில் ,  சமூகத்தின் பன் மைத்தளங் களை விளங் கிக் கொள் வதற் கான
மேலதிகத் திறப்புகளை நிகழ் த்தும் கோட்பாடுகளும் , ஆய் வுகளும்
அவசியமாகின் றன.  வலைதளச் சூழலில் வம் பரசியல் பேசும் சமகாலத்
தலைமுறையினரை வலுக்கட்டாயமாக வாசிப்புக்குக் கொண் டு வர இயலாது. அது
தேவையுமில் லை. கோட்பாடுகள் , கலை இலக்கியங் கள் குறித்த உளப்பூர்வத் தேடலில்
இருக்கும் ஒருவர் முதலில் திரிபுகளைக் கண் டறிய வேண் டும் . ஏனென் றால் , நவீனச்சூழலில்
பண் பாட்டுத்திரிபுகளே கோட்பாடுகளாகவும் , அரசியல் வடிவங் களாகவும் இருக்கின் றன.

நவீனச்சமூகத்தின் கோட்பாட்டுத்திரிபுகளை ஓரளவு கண் டுகொள்வதற்கு ராஜ் கெளதமன்


போன் ற ஆய் வாளர்களே நமக்கு உதவக்கூடும் . ராஜ் கெளதமன் வரிசையில்
சோதிப்பிரகாசம் (மார்க்சிய அறிஞர்), கோ.கேசவன் (மண் ணும் மனித உறவுகளும்
உள்ளிட்ட நூல் களின் ஆசிரியர்), பொ.வேல் சாமி, அ.மார்க்ஸ் , தோழர் தியாகு(கம் பிக்குள்
வெளிச்சங் கள் நூலின் ஆசிரியர்), ந.முத்துமோகன் (மார்க்சியம் பயில் வோம் உள்ளிட்ட
நூல் களின் ஆசிரியர்), ஸ் டாலின் ராஜாங் கம் , டி.தருமராஜ்(நான் ஏன் தலித்தும் அல் ல
உள்ளிட்ட நூல் களின் ஆசிரியர்), கோவை ஞானி, இராமானுஜம் (சந்நியாசமும்

https://www.jeyamohan.in/158882/ 4/5
11/5/21, 1:03 PM தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் (ராஜ் கெளதமன் ) -சக்திவேல் கோபி | எழுத்தாளர் ஜெயமோகன்
தீண் டாமையும் உள்ளிட்ட நூல் களின் ஆசிரியர்), தமிழவன் (திராவிடம் தமிழ்த்தேசம்
கதையாடல் உள்ளிட்ட நூல் களின் ஆசிரியர்) போன் றோரையும் வைக்கிறேன் . அப்படியான
ஆய் வாளர்களைக் கண் டு கொள்வதும் , வாசித்துத் தெளிவதுமே இப்போது அதிமுக்கியம் .

சத்திவேல் ,

கோபிசெட்டிபாளையம் .

https://www.jeyamohan.in/158882/ 5/5

You might also like