You are on page 1of 4

அறிய இயலாதவரை அறிந்து கொள்ளுதல்

நாம் அனைவரும் கடவுள் தான் என்னும் கருத்திற்கு ஏதேனும் ஆதாரம்


இருக்கிறதா?

அகில உலகக் கிருஷ்ண பக்திக் கழகத்தின் நிறுவனர்,


பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட்
மாதத்தில் லண்டனில் ஆற்றிய உரை.

அவினாசி து தத் வித்தி


யேந ஸர்வம் இதம் ததம்
விநாசம் அவ்யயஸ்யாஸ்ய
ந கச்சித் கர்தும் அர்ஹதி

“முழு உடலிலும் பரவியிருக்கும் ஆன்மாவானது, அழிவற்றது என்பதை நீ


அறிந்துகொள்ள வேண்டும். அத்தகைய அழிவற்ற ஆன்மாவை யாராலும் அழிக்க
இயலாது.” (பகவத் கீதை 2.17)

ஆன்மாவின் தன்மை மிகத் தெளிவாக இங்கே விளக்கப்பட்டுள்ளது.


இப்பாடலிலிருந்து, உடலுக்குள் அழிவற்ற ஆன்மா ஒன்று இருக்கிறது என்பதை
யாதொரு உணர்வுடைய மனிதாலும் புரிந்துகொள்ள இயலும். அவினாசி து தத்
வித்தி யேந ஸர்வம் இதம் ததம்: “உடல் முழுதும் பரவியிருக்கும் அது
அழிவற்றது” என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். உடல் முழுவதும்
பரவியிருப்பது எது? ஆன்ம உணர்வு. ஒவ்வொருவரும் இதனைப் புரிந்துகொள்ள
இயலும். உங்கள் உடலின் ஒரு பாகத்தை நான் கிள்ளினால், உங்களுக்கு வலிக்கிறது.
ஏன்? ஏனென்றால், அங்கே உணர்வு இருக்கிறது. உடலில் உணர்வு இருக்கும்
வரையில், வலிகளும் சுகங்களும் உணரப்படுகின்றன. சில நேரங்களில் மருந்துகள்,
குளோரோஃபார்ம் அல்லது ஏனைய யாதொரு உணர்வு இழப்பை உண்டு பண்ணும்
பொருளையும் பயன்படுத்துவதன் வாயிலாக நாம் உணர்வற்றுப் போகையில்,
நம்மால் எதனையும் உணர இயலாது.

உணர்வில் மூன்று நிலைகள் இருக்கின்றன: ஜாக்ரதி, ஸ்வப்னம் மற்றும் சுசுப்தி. முதல்


நிலையானது விழித்திருத்தல், இரண்டாம் நிலை, உறக்கம் மற்றும் மூன்றாம்
நிலையானது ஆழ் உறக்கம் அல்லது உணர்வின்மை. நீங்கள் விழித்திருக்கும் போது,
உங்களது உணர்வு நிலை மிகச் சரியானதாகவும், வலிமையானதாகவும் இருக்கிறது.
உறக்க நிலையில், உணர்வு இருக்கிறது, ஆனால் மந்தமாக இருக்கிறது. மேலும்
ஆழ்ந்த உறக்க நிலையில், உணர்வானது அமிழ்ந்துள்ளதாகவும், செயல்பாட்டில்
இல்லாததாகவும் இருக்கிறது.

மரணம் என்பது, ஒருவர் நீண்ட காலத்திற்கு உணர்வில்லாமல் இருப்பது. ஆன்மா


நித்தியமானதாக இருப்பதால், அதற்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்று கிருஷ்ணர்
இங்கே கூறுகிறார். உடல் அழியும் போது, ஆன்மா சில காலம் உணர்வற்று
இருக்கிறது – மனிதர்கள் என்னும் நேர்வில் ஆறரை மாதங்கள். அதாவது, ஆன்மா
ஆறரை மாதங்கள் தாயின் கருவரைக்குள் உணர்வற்று இருக்கிறது, அதன் பின்னர்
அதன் ஆன்ம உணர்வு புதுப்பிக்கப்படுகிறது.
மயக்க மருந்து கொடுக்கும் போது உணர்வற்ற நிலைக்கு சென்ற அனுபவம்
உங்களில் சிலருக்கு இருக்கலாம். அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் நீங்கள் யாதொரு வலியையும் உணராமல் பல மணி நேரங்கள்
உணர்வற்ற நிலையில் இருக்கிறீர்கள். பின்னர், மெதுவாக கனவு காணத்
தொடங்குகிறீர்கள்: உணர்வற்ற நிலையிலிருந்து நீங்கள் கனவு காணும் நிலைக்குப்
போகிறீர்கள். கனவு நிலைக்குப் பிறகு, நீங்கள் விழிக்கிறீர்கள். விழிப்பு
நிலையிலிருந்து கனவு நிலைக்கும், கனவு நிலையிலிருந்து உணர்வற்ற நிலைக்கும்
நீங்கள் செல்லுவதைப் போல, உணர்வற்ற நிலையிலிருந்து கனவு நிலைக்கும்,
பின்னர் கனவு நிலையிலிருந்து விழிப்புற்ற, முழு உணர்வு பெற்ற நிலைக்கும் நீங்கள்
திரும்புகிறீர்கள்.

எனவே மரணம் நிகழும் போது, நம் பூதவுடல் அழிந்து, ஆன்மாவனது, அறிவு, மனம்
மற்றும் நான் என்னும் உணர்வு ஆகியவை கலந்த சூட்சும உடலில்
தங்கியிருக்கிறது. இந்த சூட்சும உடல், ஆன்மாவை மற்றொரு உடலிற்குக் கொண்டு
செல்கிறது. சூட்சும உடலானது, மனம், அறிவு மற்றும் நான் என்னும் பொய்யுணர்வு
கலந்ததாக இருக்கிறது என்று பகவத் கீதையில் [7.4] தெளிவாகக்
கூறப்பட்டிருப்பினும், சூட்சும உடல் என்னவென்று அறிவற்றவர்கள்
புரிந்துகொள்ளுவதில்லை. மனத்தையும் அறிவையும் நம்மால் பார்க்க முடிவதில்லை
என்னும் காரணத்தால், ஒரு மனிதன் இறந்தவுடன் அனைத்தும் முடிந்துவிட்டது
என்று முட்டாள் முரடர்கள் நினைக்கின்றனர்.
அறிவும் மனமும் இருக்கிறதென்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கின்றனர்.
உங்களுக்கு மனம் இருக்கிறது; எனக்கு மனம் இருக்கிறது; உங்களுக்கு அறிவு
இருக்கிறது; எனக்கும் அறிவு இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
ஆனால் உங்கள் மனத்தை அல்லது அறிவை என்னால் பார்க்க முடிவதில்லை.
அவை மிகவும் நுட்பமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, இப்போது என் கண்ணிற்கு
முன் காற்று இருக்கிறது, ஆனால் என்னால் அதனைப் பார்க்க முடிவதில்லை.
இவ்வாறு, நுட்பமான உலக விசயங்களைக் கூட நம் புலன்களால் பார்க்க இயலாத
போது, ஆன்மீகப் பொருளான ஆன்மாவைப் பற்றிக் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

ஆன்மாவானது, நம் புலன்களால் உணர்ந்து கொள்ள இயலாத அளவிற்கு


நுட்பமுடையதாக இருக்கிறது. ஆனால், மூடர்களோ, “இல்லை, என்னால் என்
ஆன்மாவைப் பார்க்க முடியவில்லை என்றும் மரணத்தின் போது அனைத்தும்
முடிந்துவிடுகின்றன என்றும் கூறி முற்றுப்புள்ளி வைக்கின்றனர். மிகுந்த
ஆற்றலுடைய நுண்ணோக்கியால் (microscope) கூட நம்மால் பார்க்க இயலாத
அளவிற்கு அது மிகவும் சிறியதாகவும் நுண்ணிய அளவிலும் இருக்கிறது.

இவ்வாறு, ஆன்மாவின் அறிகுறியான உணர்வானது, அவினாசி, அதாவது,


அழிவற்றது என்று கிருஷ்ணர் தெளிவாக இங்கே கூறுகிறார். முன்னர்
அர்ஜுனனிடம், “நீ, நான் மற்றும் இவ்வனைவரும், முற்காலத்தில் இருந்தோம்,
இப்போதும் இருக்கிறோம், வருங்காலங்களிலும் இருப்போம்” என்று அவர்
கூறினார். நாம் அனைவரும் நித்தியமானவர்கள் என்பது அதன் அர்த்தம். கடந்த
காலங்களில் நாம் தனியர்களாக இருந்தோம், இப்போதும் தனியர்களாக
வாழ்கிறோம், வருங்காலத்திலும் தனியராக இருப்போம். முக்தியடைந்த பின்னர் நாம்
அனைவரும் ஒன்றுகலந்து ஒரேபோலான ஒரு திரளாக மாறுவோம் என்னும் மூட
மாயாவாதித் தத்துவவாதிகளின் கருத்தில் யாதொரு உண்மையுமில்லை. நாம்
முக்தியடைந்த பின்னரும், உணர்வுகளின் தனித்தனித் துகள்களாகவே இருக்கிறோம்.
கிருஷ்ணர் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் கூறுகிறவாறு,
ஆன்மாவைத் துண்டுகளாக வெட்ட முடியாது. நாம் அனைவரும் நித்தியமாக
இருக்கும் தனித்தனி ஆன்மாக்கள் என்பது அதன் அர்த்தம். முன்னர் ஒரே திரளாக
இருந்து, அதன் பின்னர் துண்டுகளாக வெட்டுப்பட்டு, அதனால் இப்போது தனித்தனி
நபர்களாக நாம் மாறியிருக்கவில்லை. இத்தகைய மாயாவாதத் தத்துவம்
உண்மையல்ல. நித்தியமாகவே, நாம் அனைவரும் தனி நபர்கள் தான். மமைவாம்சோ
ஜீவ-லோகே ஜீவ-பூத ஸநாதன: “பொருள்சார்ந்த இவ்வுலகில் வாழும் உயிர்கள்
அனைத்தும் என்னுடைய நித்திய துண்டுப் பகுதிகளே” என்று கிருஷ்ணர் பகவத்
கீதையில் [15.7] பின்னர் இதனை விளக்குகிறார். உபநிடதங்களிலும் நித்யோ
நித்யானாம் சேதனஸ் சேதனானாம்: “நித்தியமான, உணர்வுள்ள அனைத்து
உயிர்களுக்கும் உயர்ந்தவர் ஒருவர் இருக்கிறார்” என்று இது
உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

நேற்று, கடவுள் என்ற சொல்லில் அர்த்தம் குறித்து அகராதியை நாம் நாடிய போது,
அவற்றில் ஒன்றில், “பரம்பொருள்” என்ற விளக்கம் ஒன்று இருந்தது. எனவே, நாம்
அனைவரும் உயிர்கள், ஆனால் பரம்பொருள் அல்ல. நாம் அதற்குக் கீழே
இருக்கிறோம். கடவுளும் ஓர் உயிர் தான். ஆனால், அவர் பரம்பொருள். அதுதான்
வேறுபாடு. இது மிகவும் எளிதானது. “நான் தான் பரம்பொருள்” என்று உங்களால்
கூற இயலாது. இருப்பினும் மூடர்கள், “நான் கடவுள்” என்று சொல்லுகின்றனர்.
நீங்கள் எவ்வாறு கடவுளாக முடியும்? நீங்கள் பரம்பொருளா? “நீங்கள்
பரம்பொருளா?” என்னும் கேள்வியைக் கேட்டவுடன் “இல்லை” என்றே பதிலளிக்க
இயலும். பின்னர் எவ்வாறு நீங்கள் கடவுள் ஆனீர்கள்?

“பரம்பொருள்” என்றால் “உயரிய அதிகாரம் படைத்தவர்” என்றும் அகராதியில்


பார்த்தோம். நம்மில் யாரும் இவ்வுலகிலேயே உயரிய அதிகாரம் படைத்தவனாக
இருக்கிறோமா? இல்லை. ஒவ்வொருவரும் இயற்கையின் பிடியில் சிக்கியவர்களாக
இருக்கும் போது, நாம் எப்படி உயரிய அதிகாரம் படைத்தவராக இருக்க இயலும்?
ஆனால் மூடர்களோ, “ஆம், நான் தான் உயர்ந்த அதிகாரம் படைத்தவன். நான்
தான் சூரியனையும் கிரகங்களையும் இயக்குறேன்” என்று கற்பனை செய்கின்றனர்.
இது வெறும் மூடத்தனம். இது தான் அவர்களின் தியானம் – “நானே பரம்பொருள்.
நான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறேன். சூரியன் எனது ஆணையின் பேரிலேயே
சுற்றுகிறது. கடல்கள் என் ஆணையைப் பின்பற்றுகிறேன்” என்று பொய்யாக
எண்ணிக்கொள்ளுதல் இதுவே.

You might also like