You are on page 1of 7

first stage

பெளத்தம் நெறி- ஸர்வம் ஸூன்யம்

அந்த நெறி மீ து வாதிக்கபட்டு ப்ரஹ்மம் ஒன்றே ஸத்யம் மற்ற அனைத்தும்


மித்தை என்ற அத்வைத நெறி ஸ்தாபிக்கபட்டது.

2nd stage ......கர்ம மீ மாம்ஸ விசாரங்கள்

ப்ரஹ்மவிசாரத்திற்கு அவஸ்யம் அற்றது என்ற உட்பிரிவு நெறி ஏற்படுத்தபட்டது‌.

*3rd stage*

1 ப்ரஹ்மத்தின் இருமையற்ற நிலை

2.உலகத்தின் உண்மையற்ற நிலை

3.ப்ரஹ்மத்தில் இருந்து ஆன்மா வேறுபடாநிலை

என்ற அடிப்படை கொள்கைள் வகுக்கபட்டது

இதன்மேல் இதர மதங்களால் கேள்விகள் எழுப்பபட்டபோது

உபநிஷத் மற்றும் தர்கங்கள் கொண்டு அத்வைத மதம் படிப்படியாக


வடிவமைக்கபட்டது.

இப்படியில் சிலச்ருதிகள் கைகொள்ளபட்டு அநேக ச்ருதிகள் தர்க்கங்கள் கொண்டு


தள்ளப்பட்டன.

4thstage

இரண்டாம் கொள்கை -மாயா வாதம்

*உலகத்தின் உண்மையற்ற நிலை*

இதில்தான் வாத-ப்ரதிவாதங்கள் அதிகம் .ப்ரஹ்மமே உலகமாய் தோற்றம்


அளிக்கிறது.

ஆகவே தோன்றும் ப்ரபஞ்சத்திற்கு அடிப்படை உண்மை பொருள் ப்ரஹ்மம்.

இந்த உண்மை பொருள் தெரியாமல் மறைக்கபடுவது,மாயையால்.-*கயிறு-


பாம்பாக தெரிதல்*

உலகம் உண்மை இல்லை என்பதற்குஉதாஹரிக்கபட்டது.


*மாயை தன்மை-தோற்றம் என்பது தோன்றிவிடுவதால் ...சிறிதுநேரம் இருப்பது
போல் உள்ளதால்....உள்ளது ஆகும்

உண்மையில் இல்லாததால்..இல்லாதது .இவ்வாறான தன்மை மாயைஎனப்படும்.

மாயை இரண்டாவது பொருளா??

இல்லை ப்ரஹ்மத்துடன் பிரிக்கமுடியாதபடி இருப்பது.

ப்ரஹ்மம்-மாயை சேர்க்கை ப்ரஹ்மத்தை மறைக்குமா?? இல்லை மறைக்காது

*நாகபாம்பு-நச்சு*1.பிரியாதன்மைக்குஉதாஹரணம்

2.மாயை ப்ரஹ்மத்தை பாதிக்கமுடியாது என்பதற்கு

இரண்டிற்கும் உதாஹரணம்.

விவஹார ஸத்தா உலகம். அல்லது அஸத்.

1.திரை மாயை-ஆவரண சக்தி-உள்ளதை மறைத்தல்

உ.ம்.ப்ரஹ்மத்தை மறைத்தல்

2.உரு மாயை-விக்ஷேப சக்தி-இல்லாததை உண்டு செய்தல்

உ.ம் உலகத்தை/ப்ரபஞ்சத்தை

தோன்றசெய்தல்

இது இவ்வாறு நடப்பது நம் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயம்.

stage-5

மூன்றாம் கொள்கை

*ப்ரஹ்மத்தின் பகுதிகளே* *ஆன்மாக்கள் அன்றி* -*உண்மை இல்லை*

அகங்காரத்தோடும், சிற்றறிவோடும் இருப்பது ஜீவன்.

ஸ்தூல உடம்பில் அபிமானம் உடையவனும், ஜீவன் என்று


அழைக்கப்படுபவனுமாக உள்ளவன் பிரம்மத்தின் பிரதிபிம்பம் ஆவான். அந்த
ஜீவன் (அவித்தையினால்) அறியாமையினால் ஈஸ்வரனை, தனக்கு வேறானதாக
அறிகிறான்.

அறியாமை உபாதியோடு கூடிய ஆத்மா ஜீவன் எனப்படுகிறான்.


அதாவது ஒரு ஆன்மா மட்டுமே உண்மை.அதுவே ப்ரஹ்மம்.

இங்கு ப்ரஹ்மம் தவிர தோற்றம் தரும் ஆன்மாக்கள் பின்வரும் இரு


வாதங்களால் விளக்கபடுகின்றன.

*பிரதிபிம்ப வாதம்*

சந்திரன்-நீர் நிலை தோற்றங்கள்

*அவச்சேத வாதம்*

ஒரே ஒளி (சந்திர ஒளி).........அடைப்பு, தடை இவைகளால் வெவ்வேறாக


காணப்படும்

வெள்ளை மலரை சிவப்பு கண்ணாடியில் பார்ப்பது.....ஆன்மாக்கள் தோற்றம்.

மலர் உள்ள பொருள்.

ஆனால் இங்கு குணாதிசயமே மாறுபடுகிறது.

இவ்வாறு உயிர் தோன்றகாரணம் *மாயை*(இது ப்ரஹ்ம ஸம்பந்தம் பெற்றது).

*அவித்தை* ஜீவஸம்பந்தம் பெற்றது.

உண்மை மறைக்கப்பட்டு பொய்மை வெளிப்படுவதை அறியாமல் இருக்கும்


ஆன்மாக்களின் நிலை.

இந்த தோஷம் அநாதி,ஸ்வரூபத்தை மறைப்பது,தவறான கற்பனையை


உண்டாக்குவது.

ஸத் அஸத் என கூறமுடியா அநிர்வசநீ யம்

எல்லையற்ற காலம் தொடரக்கூடியது.

ஆன்மாக்கள் 3 நிலை

1.கனவு நிலை ஆன்மா.....உலகம் உண்மை என நினைவு

2.நினைவு நிலை ஆன்மா.....கனவு நிலை பொய் எனும் நினைவு

3.துரித நிலை ஆன்மா.....நினைவு நிலை பொய் எனும் நினைவு

*ஞானம்*......
உலகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை .

ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறல்ல.

உலகத்தின் பல்வேறு தோற்றங்கள் மாயை .

நான், நீ, இன்னொருவன், ஜீவாத்மா போன்ற பேதங்கள் மாயையினால்


ஏற்படுகின்றன.

உண்மையில் எல்லாமே பிரம்மம் தான்.

நாம் காண்கின்ற எல்லா வேறுபாடுகளும் அறியாமை ஏற்படுத்தும் தோற்றப்


பிழைகள் மட்டுமே.

இவை நீங்கி ப்ரஹ்மம் ஸத்யம் ஜகத் மித்யை என்பதே ஞானம்.

மாயயை அறிந்து-உணர்ந்து-அநுபவித்து-கடந்து செல்வதே உண்மை ஞானம்


அடையும் வழி.

அக்ஞானம்,அவித்தை உலக துன்பகாரணம் ஞானத்தால் அவித்தை விலகும்.

அவித்தை போனால் ப்ரஹ்மம் பேதமற்று இருக்கும். இந்த ஞானமே ஆத்மா வடு



பேறு பெற வழி.

*முக்தி*

உபாதி வேறுபாட்டால் தோன்றிய ஜீவன், ஈஸ்வரன் என்னும் வேறுபாடுகள்


உள்ளவரை பிறப்பு, இறப்பு முதலான வடிவிலான சம்சாரம் அழிவதில்லை.

எனவே ஜீவன் ஈஸ்வரன் என்கிற பேத புத்தியை விட்டுவிடவேண்டும்

ஆன்மா தன்னை தானே உணர்ந்தால் அவித்தை விலகும் இதுவே முக்தி.

*ஜீவன் முக்தி**

“தத்துவமசி” என்கிற போதனை அறிந்தவன் தன்னை ஜீனாக கருதாத நிலையில்,


இவ்வுலகில் இருக்கும் போதே முக்தி அடைகிறான்.

அவனுக்கு ஜீவன் முக்தன் என்று பெயர்.

ஜீவன் முக்தனின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கும்.


நான் மனிதன், நான் இந்த உடல், நான் பிராம்மணன், என்று ஜீவன் எவ்வாறு
நிச்சயமாகக் கருதுகிறானோ, அப்படியே நான் இந்த உடலன்று, நான் பிரம்மணன்
இல்லை, மனிதன் இல்லை, நான் பற்றற்றவன், சுயம்பிரகாசம் உடையவன்,
அனைத்து உயிர்களிடத்தும் உள்ளுறைபவன், உருவமற்றவன் என்று உறுதியாக
ஜீவன் முக்தன் கருதுகிறான்.

ஜீவ ஈஸ்வர ஐக்யம்

உலகப் படைப்புப் பற்றி கூறிய பிறகு ஜீவன், ஈஸ்வரன் ஆகியவற்றின் படைப்பு


பற்றி பேசப்படுகிறது.

ஸ்தூல உடம்பில் அபிமானம் உடையவனும், ஜீவன் என்று


அழைக்கப்படுபவனுமாக உள்ளவன் பிரம்மத்தின் பிரதிபிம்பம் ஆவான். \

அந்த ஜீவன் (அவித்தையினால்) அறியாமையினால் ஈஸ்வரனை, தனக்கு


வேறானதாக அறிகிறான்.

அறியாமை உபாதியோடு கூடிய ஆத்மா ஜீவன் எனப்படுகிறான்.

மாயை உபாதியோடு கூடிய ஆத்மா ஈஸ்வரன் எனப்படுகிறான்.

ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஈஸ்வரன் மாயை


ஆள்கிறான், ஜீவன் மாயைக்கு ஆட்படுகிறான்.

உபாதி வேறுபாட்டால் தோன்றிய ஜீவன், ஈஸ்வரன் என்னும் வேறுபாடுகள்


உள்ளவரை பிறப்பு, இறப்பு முதலான வடிவிலான சம்சாரம் அழிவதில்லை.

எனவே ஜீவன் ஈஸ்வரன் என்கிற பேத புத்தியை விட்டுவிடவேண்டும் என்கிறார்


ஆதிசங்கரர்.

அகங்காரத்தோடும், சிற்றறிவோடும் இருப்பது ஜீவன்,

அகங்காரம் அற்றவனாகவும் பேரறிவு பெற்றவனாகவும் இருப்பது ஈஸ்வரன்.

முரண் இவ்வாறு இருக்க

மகாவாக்கியமான -“நீ அதுவாக இருக்கிறார்” (தத்துவமசி) என்பதை எவ்வாறு


வேறுபாடற்ற ஒன்றாகப் புரிந்து கொள்ள முடிவும் என்ற கேள்வி இயல்பாய்
தோன்றும்.
அதற்கு ஆதிசங்கரர் விளக்கம் அளிக்கிறார், “நீ அதுவாக இருக்கிறார்” என்பதில்
“நீ” என்பது என்பது ஜீவனையும் “

அது” என்பது ஈஸ்வரனையும் குறிக்கும் என்றால்- இரண்டல்ல என்கிற அத்வைத


விளக்கம் வராது.

அதனால் ஆதிசங்கரர் -வாச்யார்த்தம், லட்சியார்த்தம் என்ற அணுகுமுறையின்


மூலம் விளக்கி ஐக்கியத்தை ஏற்படுத்துகிறார்.

வாச்யார்த்தம் என்பது நேரடிப் பொருளைக் குறிக்கும்.

நேரடிப் பொருளில் முரண்பாடு காணப்பட்டால் அதனை நீக்கி பொருள்கொள்வது


லட்சியார்த்தம் எனப்படும்.

அதாவது முரண்படாத வகையில் அர்த்தப்படுத்துவது லட்சியார்த்தம்.

நீ அதுவாக இருக்கிறார்” என்பதில்

“நீ” என்ற சொல்லின் லட்சியார்த்தம் உபாதிகள் அற்ற சுத்த சைதன்யமாகிய


ஆத்மா என்றும்,

“அது” என்ற சொல்லின் லட்சியார்த்தம் உபாதிகள் அற்ற சுத்த சைதன்யமாகிய


பிரம்மம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

இந்த லட்சியார்த்தத்தில் இரண்டிற்கும் வேறுபாடு காணப்படாததால் ஐக்கியம்


சாத்தியமாகிறது.

Stage-6

முதலாம்-தலையாயகொள்கை ப்ரஹ்மம் மட்டுமே உண்மை பொருள்.

அது இரண்டல்ல.ஆனால் இரண்டு 1.நிர்குண ப்ரஹ்மம்

-பூர்ண நிலை ப்ரஹ்மம்-நிர்குண,நிராகார,நிரவயவ

2.ஸகுணப்ரஹ்மம்-

குறைபாடானது(மாயை கூடியது)-ஸத்-சித்-ஆனந்தம்-நிர்குண ப்ரஹ்மம்

இதுவே ஜுவனாக உலகமாக தோற்றம் அளிக்கிறது.(காரணம் நிர்குண


ப்ரம்மத்தை பிடித்த மாயை).ஆனால் மாயை ப்ரஹ்மத்தை பாதிக்காது.
ஆனால் மாயை மறைப்பதால் யாருக்கும் ப்ரஹ்மம் தெரிவதில்லை.ப்ரஹ்மம்
முக்காலத்திலும் இருக்கும்

1 உண்மை இருப்பு 2 ஒளி 3 ஆனந்தம்

3 ம் ப்ரஹ்மத்தை விட்டு பிரிவதில்லை

வேதம் ப்ரமாணம் அது ப்ரஹ்மத்திலிருந்தே வருகிறது.

ஆகம ப்ரமாணத்தால் ப்ரஹ்மம் உண்மை பொருள்.

ப்ரஹ்மநிலை

*1.நிலை*பரமார்த்திக ஸத்

ப்ரஹ்மம் எந்த ஞானத்தாலும் இல்லாமல் போகாது.எந்த ஞானத்தாலும்


அழிக்கமுடியாது.

முக்காலமும் இருப்பது

*2 நிலை* வ்யாவஹாரிக ஸத்

ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தோன்றுவது-மாய சக்தியை உடையது ப்ரஹ்மம்.

மாயையால் உலகத்தை தோன்ற செய்பவன் ப்ரஹ்மம்.

ஆவரண சக்தியால் மறைக்கபடுவது ப்ரஹ்மம்.

ப்ரஹ்மத்தின் உண்மையான ஞானத்தால் நேரடி அனுபவமாக

அபரோக்ஷ அநுபூதியாக உணரப்படும்.

*3 நிலை*ப்ரதிபாதிக ஸத்

ப்ரஹ்மம் தவிர வேறு பொருளில் உண்டாவது

நேரடியாக ப்ரஹ்மத்தில் இது உண்டாவதில்லை ,அறிவில் மயக்கம் எனப்படும்

ப்ரஹ்ம தத்துவ அறிவன்றி வேறு ஞானத்தால் போகாது.

ஆவரண சக்தி விக்ஷேப சக்தி -இரண்டும் ப்ரஹ்மத்திற்கு லீலை.

You might also like