You are on page 1of 10

 

"சிவராத்திரி விளக்கம்"

சிவம் என்றால் அருவம், கடவுள்,அது ராத்திரி (இருள்) என்று பொருள்.

DARKNESS IS THE MAGNETIC ENERGY WITH SUPER CONSCIOUSNESS .THAT IS GOD.

எங்கும் நிறைந்த சிவம்தான் விண்ணாகி,காற்றாகி,கனலாகி,நீராகி,நிலமாகி,புல்லாகி,புழுவாகி,பூச்சியாகி,ஊர்வனவாகி,கால்நடைகளாகி,மனிதனாகவும்

ஆகியிருப்பதை உணந்து கொள்ளும்போது மனித மனதில் இயல்பாகவே அன்பு மலர்ந்து விடும்."அறிந்த்து சிவம் மலர்ந்தது அன்பு"

இந்த உண்மையை சைவ சமயத்தில் உணர்த்தும் தினம்தான் "சிவராத்திரி தினம்"

சிவம்தான் அனைத்துமாகவும் ஆகியிருப்பதை உணர்ந்து கொண்ட மனிதன், தன்னையும் பிறரையும் நேசிப்பான்.

உடலின் மதிப்பை அறிந்து 1)உடல்நலம் காப்பான்.2)பிறரை மதித்து ஒத்து உதவி வாழ்வான்.3)உழைத்து பொருள ீட்டி பொருள ீட்ட

இயலாதவர்களுக்கும் ஈந்து பொருள் பற்றற்ற மனிதனாக வாழ்வான்.

சிவம் (ராத்திரி) தான் மனிதனாக (நடராசர்,சிவபெருமான்) ஆகியிருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் நிகழ்ச்சிக்குத்தான் நம் பிரதமர் மோடி

அவர்கள் இன்று கோவை வருகிறார்!

இச் சிவ தத்துவம் தான் sky யோகாவில் செலவில்லாமல் எளிதாக உணர்த்தப்படுகிறது.

வாழ்க வளமுடன்

"அன்பு மலர சிவ வழிபாடு" -சிவராத்திரி சிந்தனை!

"அன்பே சிவம்"."அறிந்தது சிவம்,மலர்வது அன்பு"

இன்னா செய்தாருக்கும் இனிய செய்யும் அன்பே மனித அன்பு.

சிவனை அறிந்தவரிடம் தான் அன்பு மலர்ந்து நிலைத்திருக்கும்.

சிவனை அறிவதற்காக மேற்கொள்ளும் வழிபாடே "சிவ வழிபாடு".

சிவமே சக்தி!

சக்திக்கு மூலம் சிவம்,!

இரண்டும் அருவம்! இரண்டும் ஒன்றே!

அதுவே உயிருடலில் சீவன்!

சிவன் வேறு, சீவன் வேறு அல்ல!

சிவனை சீவனாக அறிந்தவர்களே உடல்நலப் பிரச்சினை,பொருள்வளப் பிரச்சினை,உறவுநலப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வுகண்டு,

கவலையில்லாமல் வாழ்கிறார்கள்.

சிவனை வழிபடுவோரே! சிவனை அறிவதற்காக சிந்தியுங்கள்!

சிவஞானத்தை அறிவாக அறியலாம்!

அறிவை(சிவத்தை) அறிந்த அறிவே ஞானம்!

வாழ்க வளமுடன்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை*

*நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்*


*வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்*

*கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே*

-சிவ வாக்கியர்

*பொருள்*

அறிவு சொரூபமான, அடி முடி காணமுடியாத,எங்கும் நிகழ்ந்த ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். 

அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து அறிவாகவும்,ஆற்றலாகவும் விளங்குவதைக் காணாது,அவனை நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி

தேடியும், அலைந்தும் காண முடியாமல் ஆயுள் நாட்கள் கழிந்து போய்க் கொண்டிருக்கிறது. 

உடலுக்குள் உயிராகவும், உயிருக்குள் அறிவாகவும் அவன் உட்கலந்து நிற்பதை அறிய முடியாமல் மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி. 

இம்மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் அறிவான(ஜோதி) இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? 

தம்முளே உறையும் உயிரை உணர்ந்து, உயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலையை அடைய முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி

வாடி இறந்து போகின்றனரே என்று சிவவாக்கியர் கூறுகிரார்.

வாழ்க வளமுடன்

அருட் தந்தையின் பயிற்சிகளில் நாம் செய்யும் தவப் பயிற்சிகளான ஆக்கினை, சாந்தி, துரியம், ஒன்பது மைய தவங்களில் நாம் சக்கரங்களையும்

இயக்கி விடுகிறோம்.

முதலில் சக்கரங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம். நமது பரு உடலில் சூக்கும உடல் மற்றும் காந்த உடல்கள் ஒன்றோடு ஒன்று

ஒருங்கிணைந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த மூன்று உடல்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதுதான் அருட் தந்தையின் மனவளக் கலை யோகாவாகும்.

இவை மூன்றும் இயற்கையாகவே ஒருங்கிணைந்து செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் இயற்கையாக உள்ள இந்த உடலை சரியாக

பராமரிக்காமல் விட்டு விடுகிறோம்.

மேற்கண்ட மூன்று இயக்கங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது தான் இந்த பயிற்சிகள்.

இனி சக்கரங்களுக்கு வருவோம். நமது சூக்கும உடலில் 108 சக்கரங்கள் உள்ளதாக மகான்கள் கூறுகின்றார்கள். அவைகளில் ஏழு சக்கரங்கள் மிக

முக்கியமானவை.

அவை முறையே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை மற்றும் துரியம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

மேலும் நமது சூக்கும உடல் அல்லது உயிருடலில் 72,000 நாடிகள் உள்ளன. இங்கே ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நாடிகள் வேறு. நரம்புகள்

வேறு. நாடிகள் சூக்கும உடலையும் நரம்புகள் பரு உடலையும் சேர்ந்தவை.

இந்த நாடிகளில் மிக முக்கிய நாடிகள் பத்து. அவைகளிலும் முக்கியமானவை மூன்று. அவைகளைத்தான் நாம் சூசும நாடி, இடகலா மற்றும் பிங்களா

என்று சொல்கிறோம்.

நாடிகள் என்பவை நமது உடலில் உயிர் சக்தி ஓடும் பாதைகள். ஆற்றை நாம் பார்த்திருக்கிறோம். அதில் நீரானது ஒரு பாதையில் (Flow) ஓடுகிறது.

அது போல நமது உடலில் உயிர்சக்தி ஓடும் பாதைகளைத்தான் ( Flow of life enrgy) நாடிகள் என்று சொல்கிறோம்.

இதில் முக்கியமாக இருப்பது சூசும நாடி. ஒரு வாகனத்தை எடுத்துக் கொண்டால் அதில் இருக்கும் சக்கரங்களை இணைப்பது அச்சு (Axis). அதைப்

போலத்தான் நமது உடலில் சூசும நாடி செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.


இந்த சூசும நாடி மூலாதாரத்தில் துவங்கி மேற்கண்ட ஐந்து சக்கரங்களில் இணைந்து துரியம் செல்கிறது. துரியத்திலிருந்து நேரடியாக

பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டுள்ளது என ஞானியர்கள் சொல்கின்றனர்.

இராஜ யோகா என்ற புத்தகத்தில் சுவாமி விவேகனந்தர் அவர்கள் இதையே “our body is connected to the universe through the energy wires” என்று கூறுகின்றார்.

இதே மூலாதாரத்தில் இருந்து இடகளா பிங்கல நாடிகள் புறப்பட்டுச் செல்கின்றன. இந்த மூன்று நாடிகளும் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு

ஆக்கினை வரை செல்கின்றன. பின்னர் ஆக்கினையிலிருந்து சூசும நாடி மட்டும் துரியம் சென்று அங்கிருந்து பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்கிறது.

72,000 நாடிகளும் நமது சூக்கும உடலில் உள்ள 108 சக்கரங்களோடு தொடர்பு கொண்டு உடல் முழுவதும் உயிராற்றலை சுழல வைத்துக்

கொண்டிருக்கிறது.

மேற்கண்ட மூன்று நாடிகளும் சுவாதிஷ்டானம், மணிப் பூரகம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்கினையில் இணைந்து தங்களை பலப்படுத்திக்

கொள்கின்றன.

இவைகளை ஒருங்கிணைக்கும் பயிற்சியை நமது எளிய முறை உடற்பயிற்சி, எளிய முறை குண்டலினி யோகப் பயிற்சி மற்றும் காய கல்ப

பயிற்சிகளில் அருட் தந்தையவர்கள் கொடுத்துள்ளார்கள்.

உடற்பயிற்சியினை முறையாக, சீராக, நிதானமாக மற்றும் மனம் ஒன்றி செய்ய வேண்டும். அருட் தந்தையவர்கள் தவம் போல் செய்ய வேண்டும்

என்று சொல்வார்கள்.

நமது உடலில் சூக்கும உடலும் காந்த உடலுமிணைந்து செயல்படுகின்றன என்ற எண்ணத்தில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது இந்த

சக்கரங்களின் செயல் பாடுகள் ஊக்குவிக்கப் படுகின்றன.

ஆக்கினை, துரியம், ஒன்பது மைய தவம் மற்றும் நித்யானந்த தவப் பயிற்சிகள் செய்யும் பொழுது இந்த சக்கரங்களின் செயல் பாடுகள் ஊக்குவிக்கப்

படுகின்றன. காய கல்ப பயிற்சியின் போது அஸ்வினி முத்திரை மற்றும் ஓஜஸ் மூச்சு போடும் போதும் இந்த சக்கரங்களின் செயல்பாடுகள்

ஊக்குவிக்கப் படுகின்றன.

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் தாயின் கருப்பையிலிருந்தே சுவாசிக்க தொடங்கிவிடும். இயற்கையின் படி ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வில்

இத்தனை சுவாசம் என்ற கணக்கில் இருப்பதாகவும்,

அந்த காலம் முடிந்தவுடன் பிராணன் உடலை விட்டு நீங்கி விடுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த மூச்சை மிகச்சரியான

முறையில் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நீண்டகாலம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள் மூலம் எண்ணிலடங்கா

சித்திகளை கூட பெற முடியும் என்கிறார்கள் ரிஷிகள்.

மனித ஜீவனுக்கு ஆதாரமான உயிர்க்காற்று வாசி எனப்படுகிறது. இந்த வாசியே பாற்கடல் புராணத்தில் வாசுகி என்னும் நாகமாக

சித்தரிக்கப்படுகின்றது. பிராணன் எனப்படுவதும் வாசியையே குறிக்கிறது. இந்த பிராணன் எனப்படும் வாசியை இடம், வலமாக இழுத்து பல தொழில்

செய்து கட்டுப்படுத்தும் முறைக்கு பிராணயாமம் என்று யோக ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது, இந்த வாசியை கட்டுப்படுத்தி உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினி சக்தியை வெளிக்

கொண்டு வரும் முறையே பிராணயாமம். குண்டலினி சக்தியை எட்டும் போது ஒரு மனிதனுக்கு சகல வித சித்திகளும் கிட்டும் என்றும் அவர்கள்

சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் இது மிகப்பெரிய விஞ்ஞானம் என்பது இதனை உணர்ந்தால் புரியும்.

அதாவது ரத்தம் உடலின் நுண்ணிய உறுப்புகளுக்கு உணவை எடுத்து செல்கிறது. காற்றோடு கலக்கப்பட்ட அந்த ரத்தத்தில் மிகமிக நுண்ணிய

சத்துக்கள் அடங்கியுள்ளன. ரத்தத்துடன் கலந்து செல்லும் காற்றானது தூய்மையாகவும், சரியான ஓட்டத்திலும் செல்லும் போது மனித உடலின்

நுண்ணிய உயிர்க்கோளங்கள் அனைத்தும் சரியாகவும், ஆரோக்கியத்துடனும் இயங்குகின்றன.


மூச்சு பயிற்சியின் மூலம் ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்கள் களையப்பட்டு விடுவதால் தூயரத்தம் மிகத்தூய்மையான உயிர்காற்றான

பிராணவாயுவை சுமந்து சென்று உடலின் நுண்ணிய உறுப்புகளுக்கு உணவாக தருகிறது. மனிதனின் மூளை அதன் சக்தியில் வெறும் 4

சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துவதாக அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.

இது போன்ற பயிற்சிகளால் மனிதன் சித்தியை எட்டக்கூடும் என்று ரிஷிகள் சொல்வதை பார்த்தால், மூச்சு பயிற்சியின் மூலம் மூளை

மட்டுமல்லாமல் உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்திறனையும் வியக்கத்தக்க அளவுக்கு உயர்த்த முடியும் என்கிறார்கள் தற்போதைய

வாசியோக அப்பியாசிகள்.

பத்து வாயுக்கள்

மனித தேகத்தை பொருத்தமட்டில் பிராணன், அபானன், வியானன்,உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்று

தசவாயுக்களாகிய பத்துவாயுக்கள் உள்ளன. இவற்றை விளக்கப்படுத்தி பார்த்தால், பிராணன் எனப்படுவது உடலுக்கு ஆதாரமான உயிர்காற்று, இது

ரத்த ஓட்டத்தையும், சுவாசத்தையும் பலப்படுத்துகின்றது. அபானன் எனப்படுவது மலத்தில் தங்கும் மலக்காற்று, இது கீ ழ்நோக்கி பாய்வது. வியானன்

எனப்படுவது மண்ணரலில்
ீ இருந்து நரம்புகளையும், மூளையையும் பலப்படுத்துவது. இதனை தொழிற்காற்று என்றும் கூறுவர். உதானன் எனப்படுவது

குரல், பேச்சை உருவாக்குகிறது. இதனை ஒளிக்காற்று என்பர்.

சமானன் எனப்படுவது உண்ட உணவை ஜீரணமாக்கி உடலை சமானப்படுத்துகின்றது. இதனை நிரவு காற்று என்பர். நாகன் எனப்படுவது தும்மல்

காற்றாக நாசியிலிருந்து வெளிப்படுகின்றது. இதன் வேகம் எல்லா காற்றுகளையும் விட மிகவும் அதிகமானதாகும். கூர்மன் எனப்படுவது விழி

காற்றாகும். விழியின் பார்வைக்கும், கண்ணர்ீ வரவைக்கும் குணமும் இதற்கு உண்டு. கிருகரன் எனப்படுவது கொட்டாவி விடும் காற்றாகும், தூக்கம்

வருவதற்கான அறிகுறியையும், பிராணசக்தி குறைதலையும் சுட்டிக்காட்டும் காற்றாகும்.

தேவதத்தன், இதை இமைக்காற்று என்பர். கண்விழியை பாதுகாக்கும் பொருட்டு இமைத்துக் கொண்டேயிருக்கும். புராணங்களிலில் இதை நிமி என்றும்

கூறுவர். தனஞ்செயன்,உடலை விட்டு ஒன்பது வாயுக்களும் வெளியேறிய பிறகு உடலினுள் நுண்கிருமிகளை தூண்டி உடலை வங்க
ீ வைத்து

கடைசியில் வெளியேறும் காற்றாகும். இதை வங்கல்


ீ காற்று என்பர். இப்படி மனித தேகத்தில் பத்துவிதமான காற்றுகள் உயிர் வாழும் பொருட்டு

தேகத்தை இயக்குகின்றன.

உயிராதார காற்று

பத்துக்காற்றுகளில் முதல் முக்கியமான ஆதாரக்காற்று உயிர்க்காற்றாகும். தாயின் கருவில் ஜீவன் வளரும் போது பிராணன் என்ற உயிர்க்காற்று

தன்னை முதலில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. உடல் வாழ்வதற்கு ஆதாரமானதால் உயிர்க்காற்றிற்கு பிராணன் என்று பெயர். உடலுக்கு ஆதாரமான

அந்தக் காற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தி உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பிராணனைக்

கட்டுப்படுத்தும் பிராணயாமம் கூறுகின்றது.

இந்த பிராணயாமக் கலையே வாசிகலை என்றும், மூச்சுக்கலை என்றும் வாசுகிகலை என்று ரிஷிகள் சொல்கிறார்கள். வாசியாகிய, பிராணனாகிய

உயிர்காற்றை சரியாக பயன்படுத்ததாதல் தான் மனிதனுக்கு மரணம் நிகழ்கின்றது என்றும், சரியாக பயன்படுத்துபவனும், அதைப்பற்றி தெளிவாக

அறிந்து கொண்டு செயல்படுத்துபவனும் என்றும் அழியாத தேகத்துடன் பாபபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டு ஜீவமுக்தனாக வாழ்வான். அப்படிப்பட்ட

ஜீவமுக்தனின் புருவநடுவில் இறைவனாகிய தாண்டவராயன் நடராசர் எப்போதும் ஆனந்த திருநடனம் புரிவார் என்கிறார்கள் ரிஷிகள்.

பிராணயாமம் என்ற உயிர்காற்றை பயிற்சிக்கு உட்படுத்தும் கலைக்கு சித்தர்கள் சரகலை என்று பெயர் சூட்டியுள்ளனர். உலகில் எந்த கலையை

படித்தாலும் உடல்வாழ்வதற்கு அவசியமான உயிர்கலையும், ஜீவகலையுமான பிராணயாமத்தை சரிவர அறிந்து கொள்பவர்கள் மட்டுமே சிறந்த
கலையை கற்றவர்களாக, அவர்கள் எப்போதும் இறைவனை காணும் நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் குருவிற்கும் குருவாக விளங்குபவர்கள்

என்கிறார்கள்.

பிராணயமம் என்ற காற்றடக்கும் கலையானது, ப்ராக்ருதம், வைகிருதம் என்ற இரு வகைப்படும். இந்த இரண்டு மட்டுமல்லாமல் மத்திமமான

கேவலகும்பகம் என்ற ஒரு வகையும் உண்டு. எல்லா உயிர்களும் இயற்கையாகவே மூச்சுவிடுதலுக்கு ப்ராக்ருதம் என்று பெயர். சாஸ்திரங்களில்

கூறியபடி காற்றை கட்டுப்படுத்தி பயனடையும் முயற்சிக்கு வைகிருதம் என்று பெயர். எந்தவித முயற்சியும் இல்லாமல் காற்றடக்கலால் கிடைக்கும்

பலன் ஒரு ஜீவனுக்கு கிடைத்தால் அதற்கு கேவல கும்பகம் என்று பெயர். ஆக மொத்தம் இயற்கை, செயற்கை, கேவலம் என்ற யதார்த்தம் ஆகிய

மூன்று நிலைகளில் காற்றடக்கும் பிராணயாமதத்துவம் அமைகின்றது.

காற்று எண்ணிக்கை

காற்றை உடலுள்ளிழுத்து வெளியே விடுவதை சுவாசம் என்கிறோம். இந்த சுவாசமானது ஒரு நாளைக்கு 21,600 முறை நடக்கின்றது. இச்சுவாசத்தில்

இயல்பாக உடலுக்குள் செயல்பாட்டிற்கு செல்லும் சுவாசம் அதிகபட்சம் 14,400 தான். மீ தமுள்ள சுவாசங்கள் யாவும் வணாகவே
ீ கழிகின்றன.

சுவாசங்கள் வணாவதால்
ீ ஆயுள்நிலையும் வணாக
ீ கழிகின்றது. நோய்களும் உண்டாகிறது.

இயற்கை சுவாசத்தை சாத்திரப்படி மேம்படுத்தினால் சுவாசம் தங்குதடையின்றி எல்லா பகுதிகளுக்கும் சென்று பிராணசக்தியினால் தேகத்தை

வலுப்படுத்துகின்றது. ஆயுளும் நீடிக்கிறது. நோய் அகலுகின்றது. பாபம் விலகுகின்றது. மூச்சை சரியாக இழுத்து விடுதலும் ஒரு வகையான பாப

சம்ஹாரமே, புண்ணியத்தை எய்துகின்ற முயற்சியே என்கிறார்கள் சாதுக்கள்.

சுவாசத்தை இழுத்து விடும் கால அளவை மாத்திரை என்பார்கள். மாத்திரை என்பது விரல் சொடுக்கும் நேரமும், கண்ணை சிமிட்டும் நேரமும்

ஆகும். சுவாசம் இழுக்கப்படும் போது 16 மாத்திரை காலம் இழுக்க வேண்டும். சுவாசம் இழுக்கப்படும் தத்துவத்திற்கு பூரகம் என்று பெயர். சுவாசத்தை

உடல் பூரிப்பதால் அச்செயலுக்கு பூரகம் என்று பெயர் வந்தது. பயிற்சியின் துவக்க காலத்தில் 16 மாத்திரை காலம் சுவாசத்தை இழுப்பது கடினம்.

தகுந்த குருவின் பயிற்சியால் சுவாசத்தை இது போல் இழுக்கலாம்.

காற்றை இழுத்தல், அடக்கல், விடுதல்

தொடக்க காலத்தில் காற்றை இழுத்து அடக்கி செய்யும் பயிற்சிகளை குருவின் துணையில்லாமல் செய்தல் கூடாது. காற்றை உடலுக்குள் அடக்கி

பயில்வது பிரச்சினைகளை உண்டாக்கும். போதிய பயிற்சிக்கு பின் இத்தகைய அடக்கல் பயிற்சியை செய்யலாம். பொதுவாக, இப்படி மூச்சை அடக்கி

பயிலும் போது சேமிக்கப்படும் பிராணனால், உடலின் மூலை முடுக்கெல்லாம் பிராணன் ரத்த ஓட்டங்களில் கலந்து ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை

அகற்றும்.

இயல்பாக சாதாரண மானுட நிலையில் 64 மாத்திரை காலம் பிராணனை உடலில் தக்க வைக்க முடியாது. பயிற்சியால் மட்டுமே முடியும்.

பிராணனை சேமிக்கும் செயலுக்கு கும்பகம் என்று பெயர். கும்பகம் என்பதற்கு அமிர்தத்தால் நிரப்பப்பட்ட கலசம் என்று பொருள். உண்மையில்

பிராணன் அமிர்தமே. அந்த அமிர்தமாகிய பிராணசக்தி இல்லாவிட்டால் உடல் நிலைக்காது.

16 மாத்திரை காலம் பிராணனை இழுத்து 64 மாத்திரை காலம் அதை உடலினுள் வைத்து 32 மாத்திரைகாலம் தக்க வைத்த பிராணனை வெளியிட

வேண்டும் என்பது பொதுவிதி. இதுவும் சற்று கடுமையே. தொடக்கத்தில் பயிற்சியின் போது மூச்சு திணறலும், பயமும் வரலாம். நாளடைவில்

பயிற்சியினால் சரியாகிவிடும். உடலில் பிராணனை தக்க வைத்து பின்பு வெளியிடும் செயலுக்கு இரேசகம் என்று பெயர். இரேசகம் என்றால்

வெற்றிடமாக்குதல் என்று பொருள்.


பிராணன் என்ற அமிர்தம்

அமிர்தமான பிராணன் ரத்த ஓட்டத்தில் கலந்து தன்னுடைய பணிகளை செய்து மாசுக்களோடு வெளியாகிறது. அதாவது நாம் வெளிவிடும் மூச்சில்

கரியமில வாயு இருக்கிறது என்பார்கள். இது தான் அந்த நச்சு. அதாவது உடலில் இருக்கும் கழிவுகள் எல்லாம் இந்த மூச்சுக்காற்றின் வழியாக

கரியமில வாயுவாக வெளியேறுகிறது. மிகச்சரியான பிராணயாம பயிற்சி முறைகளால் உடலில் துளியளவு கூட நச்சுக்கள் இன்றி ஆரோக்கியமான

நிலையில் வைத்துக்கொள்ள முடியும். உடல் முழுவதும் அமிர்தமாகிய தூய காற்றை நிரப்பி உடலை சிறந்த ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள

முடியும்.

சுவாச சுத்தி என்ற நாடிசுத்தி

ஆராய்ச்சி ரீதியாக ஒரு நிமிடத்திற்கு 18 முறையென ஒரு நாளைக்கு 25,920 சுவாசங்களை சுவாசிக்கின்றோம். அது இயற்கையிலான சுவாசம்

என்றாலும், சுவாசத்தை பலப்படுத்த வைகிருதம் என்ற சுவாசப்பயிற்சியை சிறுக,சிறுக மேம்படுத்த வேண்டும். வைகிருதம் என்ற சுவாசப்பயிற்சியை

சுகப்பிராணயாமம், சமவிருத்த பிராணயாமம், விவாகபிராணயாமம், மத்யமபிராணயாமம், ஆத்யபிராணயாமம், மகத்யோக பிராணயாமம் என்று

பலவகையாக பிரிக்கலாம்.

ஆனால் இந்த பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற

நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும். அதன்பின்பு

வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி

செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.

நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை

மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த

பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும்.

இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின்

வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன. இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள்

சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது. மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள்

எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த

தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன என்கிறார்கள்.

சுவாச முறைகளில் பலவிதங்கள் உண்டு. எளிய சுவாச முறைகளும், அவற்றால் விளையும் பலன்களை பற்றியும் அடுத்து வரும் தொடர்களில்

காண்போம்.

சக்கரம் என்றாலே வட்டமானது, சுழல்வது என்பது நினைவுக்கு வரும். வண்டிச் சக்கரம், காலச் சக்கரம், விதியின் சக்கரம் என சுழலும் விஷயங்களை

சக்கரம் என்று அறிவோம். எனவே இது காரணப் பெயர். ஆனால் நம் உடலுக்குள் எப்படி இந்த சக்கரங்கள்? கேள்வி எழுகிறதல்லவா?

நம் உடலிலுள்ள சக்தி மையங்கள் அனைத்துமே சுழன்று கொண்டேதான் இருக்கும். எனவேதான் அவற்றை சக்கரங்கள் என்று சொல்கிறோம். இந்த

சக்கரங்கள் பிராணன் என்னும் உயிர் சக்தியைத் தேவைக்கு ஏற்ப நாடிகளுக்குள் செலுத்தும் சக்தி மையங்களாக செயல்படுகின்றன. சக்தியை

உருவாக்கும் வல்லமையும் அவைகளுக்குண்டு.


நம் பருஉடல் மட்டுமன்றி நமக்குள் ஐந்து சக்தி உடல்கள் இருப்பதாக இந்திய நாட்டில் வேதங்களும், வேதகால மருத்துவ நூல்களும் கூறுகின்றன.

அவற்றை கோசங்கள் என்றழைப்பார்கள்.

1 அன்னமய கோசம்(Meterial Body)

2 வாயுமய கோசம்(Ethereal Body)

3 மனோமய கோசம்(Astral(Emotional)Body)

4 விஞ்ஞானமய கோசம்(Mental Body)

5 ஆனந்தமய கோசம்(Spiritual Body)

மேற்கு திசை நாடுகளில் இவை ஏழு என்று சொல்லப் பட்டிருக்கிறது.

1 எதிரிக் உடல் – Meterial Body

2 உணர்வு உடல் – Emotional Body

3 எண்ண உடல் – Mental Body

4 ஆஸ்ட்ரல் உடல் – Astral Body

5 எதிரிக் டெம்பிளேட் உடல் – Etheric Template Body

6 செலஸ்டிகல் உடல் – Celestical Body

7 காசல் உடல் – Causal Body

நமது பரு உடலைச் சுற்றி இந்த எதிரிக் உடல் (Meterial body) ஒரு மெல்லிய பனிப்படலம் போல உள்ளது. பரு உடலின் அதே வடிவத்துடன்

பாகங்களும் உறுப்புகளும் அப்படியே இருக்கும்.

ஒரு சிலந்திவலையிலுள்ள நரம்புகள் போல மெல்லிய சக்தி நரம்புகள் இந்த உடல் முழுவதும் பின்னிப் பிணைந்துள்ளன. சராசரி மனிதர்களுக்கு

இந்த முதல் சக்தி உடல் பரு உடலில் இருந்து ஒன்றிலிருந்து ஐந்து செ.மீ ட்டர் வரை பரவியிருக்கும். நம் சக்சரங்கள் அனைத்துமே இந்த எதிரிக்

உடலில் இருந்தே சழல்கின்றன.இவை அனைத்துமே நம் பரு உடலோடு இணைக்கப் பட்டுள்ளன.

நம் வேத கால ஆயுர்வேத நூல்களும், உபநிஷத்துகளும் சக்கரங்கள் குறித்து விரிவான விளக்கங்களை தந்துள்ளன. இந்த குறிப்புகளின்படி பார்த்தால்

நம் உடல் முழுவதும் சிறியதும் பெரியதுமாக 28,000 சக்கரங்கள் சழன்று கொண்டிருக்கின்றன.


வர்மக்கலை புள்ளிகள், அக்குபஞ்சர் புள்ளிகள் அனைத்தும் ஒவ்வொரு சிறு சக்கரங்களே. நம் சக்கரங்கள் மட்டுமன்றி நாடிகளும் இந்த முதலாவத்

சக்தி உடலில்தான் இருக்கின்றன. இந்த 28,000 சக்கரங்களில் 28 சக்கரங்கள் முக்கியமானவை என்று கருதப்படுகின்றன. இவற்றில் ஏழு சக்கரங்கள்

முதன்மை சக்கரங்கள் எனவும், 21 சக்கரங்கள் துணைச் சக்கரங்கள் எனவும் வகைப் படுத்தியுள்ளனர்.

நமது முதுகெலும்பின் உள்ளேதான் தண்டுவடம் செல்கிறது. தண்டுவடத்தை வடமொழியில் ‘மேருதண்டம்’ என்பார்கள். இந்த மேருதண்டத்தின்

நடுவில் (எதிரிக் உடலில்) கீ ழிருந்து மேலாக மூளையில் சென்று சேரும் முதன்மை நாடிதான் ‘சுழுமுனை’. ஏழு முதன்மை சக்கரங்களும் இந்த

சுழுமுனை நாடியின் மேல் அமைந்துள்ளன.சுழுமுனையோடு இணைக்கப் பட்டுள்ளன.

இவற்றுள் மூலாதாரச் சக்கரம் முதுகுத் தண்டின் கீ ழ்பகுதியிலும், சகஸ்ராரம் தலையின் மேற்பகுதியிலும் அமைந்துள்ளது.

ஏழு முதன்மைச்சக்கரங்களின் பெயர்கள்,

1 மூலாதாரம்

2 ஸ்வாதிஸ்டானம்

3 மணிபூரகம்

4 அனஹதம்

5 விஷுதி

6 ஆக்ஞை

7 சகஸ்ராரம்.

மற்ற துணைச்சக்கரங்கள் அமைந்துள்ள இடங்களைப் பார்ப்போமா ?

1 வலது காதின் முன்புறம்

2 இடது காதின் முன்புறம்

3 வலது மார்பின் மேல்புறம்

4 இடது மார்பின் மேல்புறம்

5 தொண்டைக் குழிக்கு சற்று கீ ழே

6 வலது உள்ளங்கை
7 இடது உள்ளங்கை

8 வலது உள்ளங்கால்

9 இடது உள்ளங்கால்

10 வலது கண்ணுக்கு பின்னால்

11 இடது கண்ணுக்கு பின்னால்

12 வலது விரைக்கு பின்னால்

13 இடது விரைக்கு பின்னால்

14 கல்லீரலுக்கு மேல்

15 மண்ண ீரலின் மேல்

16 வயிற்றோடு இணைந்து

17 வலது கால் முட்டிக்குப் பின்புறமாக

18 இடது கால் முட்டிக்கு பின்புறமாக

19 தைமஸ் சுரப்பிக்கு மேல்

20 சோலார் பிளெக்சஸ்சுக்கு மேல்

21 பெண்களுக்கு வலது சினைப் பைக்குப் பின்னால்.

இந்த துணைச் சக்கரங்கள் முக்கியமான வர்மப் புள்ளிகளாகும். இந்த 28 போக மீ த முள்ள சக்கரங்கள் அளவில் மிகச் சிறியனவாக உள்ளதால்,

அவற்றைச் ‘சிறு சக்கரங்கள்’ என வகைப் படுத்தியுள்ளனர். நமது உடல் முழுவதும் நாடிகள் ஒரு வலை பின்னல்போல் பரவி நிற்கின்றன. இந்த

நாடிகள் அனைத்தும் சக்கரங்கள் எனும் சக்தி மையங்களோடு இணைக்கப் பட்டுள்ளன. இவை உடலில் உருவாகுக் சக்தியை சக்கரங்களுக்கு சுமந்து

வருகின்றன. சக்கரங்கள் இந்த சக்தியை உருமாற்றம் செய்து, பிராண சக்தியாக மாற்றி, மீ ண்டும் நாடிகளின் வழியாக உடலுக்கு அனுப்புகின்றன.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு சக்கரமும், ஒவ்வொரு விதமான பிரபஞ்ச சக்தியை ஈர்த்து, உருமாற்றம் செய்து, பிராண சக்தியுடன் இணைத்து

நாடிகளின் வழியாக உடலின் தேவையான பாகங்களுக்கு அனுப்பி வைக்கின்றன.

ஒரு சக்கரத்தில் எத்தனை நாடிகள் இணைகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டே முதன்மையா, துணையா அல்லது சிறுசக்கரமா என்பது

தீர்மானிக்கப் படுகிறது.
முதன்மை சக்கரத்தில் 21 நாடிகள் வந்து சேர்கின்றன.

துணைச் சக்கரத்தில் 14 நாடிகள் வந்து சேர்கின்றன.

சிறு சக்கரங்களில் 7 நாடிகள் வந்து சேர்கின்றன. வந்து இணையும் நாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க சக்கரங்களின் அளவும்

பெரியதாகின்றது. அதில் வந்து சேரும் அல்லது அதிலிருந்து வெளியேறும் சக்தியின் அளவும் அதிகரிக்கின்றது.

முதன்மை சக்கரங்களின் விட்டம் 4 லிருந்து 6 இஞ்சுகள்

துணைச் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 3 இஞ்சுகள் விட்டமுள்ளவை

சிறு சக்கரங்கள் ஒரு செ. மீ ட்டருக்கும் குறைவான விட்டமுடையவை.

புலன்கள் கூர்மை பெறும் போது சக்கரங்களில் இருந்து வெளிவரும் ஒலி அலைகளைக்கூட கேட்க முடியும். ஒவ்வொரு முதன்மை

சக்கரத்திலிருந்தும் ஒவ்வொரு வகையான ஒலி அலைகள் வெளிவருகின்றன.

தொடர்ந்து சுழலும் சக்கரம்………..

நூல் ஆதாரம் – சக்தியைப் பெருக்கும் சக்கரங்கள்.

You might also like