You are on page 1of 3

திருக்குறளில் அடங்கியுள்ள சித்தாந்த சைவ உண்மைகள் - பெருவுடையார்

‘திரு’ என்னும் சிறப்பு அடைமொழியைக் கொண்டிருக்கும் திருக்குறள் திருவள்ளுவர் இயற்றிய ஓர் அரிய
நால். 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள், ‘அ’கரத்தில் தொடங்கி ‘ன’கரத்தில் முடியும் மொழித்திறன்,
ஈரடி ஏழு சீர் சொல்லாட்சி என தனித்துவம் பெற்றது திருக்குறள் . திருக்குறளில் சைவம் என்ற சொல்
இல்லாததால் இந்நூல் ஒர் உலகப் பொதுமறை என்று 40 பேர் 80 மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர்.
திருக்குறள் உலக பொதுமறை அன்று ( ஆறுமுகம், நாகப்பன் , சிவனருள்-91) சைவ சித்தாந்தத்தின்
செந்நூல். இவ்வாய்வுக் கட்டுரையின்வழி திருக்குறளில் அடங்கியுள்ள சித்தாந்த சைவ உண்மைகளைக்
காண்போம்.

1.0 கடவுள் உண்மை

சைவ சித்தாந்தம் எந்தப் பொருயைப் பற்றி பேசிலாலும் அது உள்பொருளா என நிறுவிய பின்னரே, அதன்
தன்மையை விவரிக்கிறது. ( ஆறுமுகம் நாகப்பன், 2008 ,119 ) அதுபோல் பதி உண்மையை நிறுவுகையில்
உலகம் ஓரு சடப்பொருள், அறிவற்றது. எனவே, உலகைப் படைக்க ஓர் அறிவார்நத ் ஆற்றல்மிகுந்த பொருள்
இருக்க வேண்டும். பேறாற்றல்மிக்க முற்றறிவான பொருள் கடவுள் என சைவ சித்தாந்தம் எடுத்தியம்புகிறது.
கடவுள் எட்டு குணங்கங்களைக் கொண்டிருத்தல் அவசியம் என்கிறது சைவ ஆகமங்கள். அவை,
தன்வயத்தன், தூய உடம்பினன், இயற்கை அறிவினன், முற்றறிவாளன் , மலங்கள் அற்றவன்,
பெருங்கருணையாளன், பேராற்றல் உடைமை மற்றும் பேரின்ப வடிவினன்.

கடவுளை முன்நிறுத்தி ‘கடவுள் வாழ்த்து’ என்ற அதிகாரம் கொண்டு எழுந்த குறள்கள் , திருவள்ளுவரின்
பக்தித்திறத்தை வெளிப்படுத்துகிறது. அவ்வகையில் திருக்குறளில் வரும் ஒன்பதாவது குறள்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்


தாளை வணங்காத் தலை (குறள் 9)

ஐம்பொறிகள் இருந்தும் எண்குணம் பொருந்திய இறைவனை வணங்காவிடில் பயனில்லை என்று


திருவள்ளுவர் கூறுகிறார். மேற்கண்டவாறு, ‘எண்குணத்தான்’ என்ற சொல்லின் வழி சித்தாந்த சைவத்தின்
பதி உண்மையைத் திருக்குறள் நிறுவுகின்றது.

உயிர்கள் பல

முற்றறிவுடைய கடவுள் யாருக்காக உலகைப் படைக்க வேண்டும் என்ற வினாவில் தொடக்கம் காண்கிறது பசு
உண்மை. பசு என்பது உயிரைக் குறிக்கும் சொல். ( ஆறுமுகம் நாகப்பன், 2008 ,168) உயிர்கள் அறிவிலும்
குணத்திலும் மாறுபட்டிருப்பதைச் சித்தாந்தம் உயிர்கள் எண்ணற்றவை என பகர்கிறது. திருவள்ளுவர்
உயிரை, "மன்னுயிர்'' என்று குறள் 68, 244, 268, 318, 457, 1168 என்னும் ஆறு குறட்பாக்களில் சிறப்பித்துக்
குறிப்பிடுகிறார். "மன்னுயிர்'' என்பது என்றும் நிலைபெற்ற உயிர் என்ற பொருளாகும்.

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா


என்னல்லது இல்லை துணை (குறள் 1168)

மேற்கண்ட குறள்களில் ' மன்னுயிர் எல்லாம்' என்ற சொற்கள் உயிர்கள் எண்ணற்றவை , அவை என்றும்
உள்ளவை என்னும் சைவ சித்தாந்தக் கொள்கையே திருவள்ளுவரின் உயிர் பற்றிய கொள்கையாகவும்
இருக்கிறது என்பது வெள்ளிடைமலை.

ஆணவம் என்னும் இருள்

தனு, கரணம் புவன, போகங்கள் எண்ணற்ற உயிர்களுக்காகக் கடவுள் படைத்தார் என்பது சித்தாந்த
தெளிவு. உயிர்களுக்காக ஏன் கடவுள் இவைகளைப் படைத்தார் என்ற அடுத்தக் கேள்வி நம்மை ஆணவம்
என்ற பொருளுக்கு இட்டுச் செல்கிறது. உலக சமயத் தத்துவதுறையில் ‘ஆணவம்’ என்ற பொருள்தான்
உயிரின் அறியாமைக்குக் காரணம் என பறைச்சாற்றுவது சைவம் மட்டுமே.
மெய்கண்ட சாத்திரங்களில் உள்ளன போலவே திருக்குறளில் இருள் என்ற சொல் ஆணவத்தைக் குறிக்கும்
வகையில் அமைந்துள்ளது. ஆணவம் அறியாமக்கும் , அறியாமை துன்பத்திற்கும் வழிவகுக்கிறது.
இச்சித்தாந்தக் கருத்தையே திருவள்ளுவர்

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி


மாசறு காட்சி யவர்க்கு. (குறள் 352)

ஆணவமலம் நீங்கினால் உயிரின் துன்பம் நீங்கி இன்பநிலை அடைகிறது என்று குறப்பிடுகிறார்.

வினை கொள்கை

அநாதி காலம் தொட்டே உயிரின் அறியாமைக்குக் காரணமாக விளங்கும் ஆணவத்தை ஒடுக்க இறைவன்
கன்மம் என்னும் வினை சேர்க்கிறான் என்கிறது சைவ சித்தாந்தம். இதனையே

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்


பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள் 1168)

என்னும் குறளில் 'இருள்சேர் இருவினையும்' என்ற தொடரால் திருவள்ளுவர் கூறுவது ஆணவமலப் பற்றோடு
கூடிச் செய்யும் நல்வினைகளும் தீவினைகளும் என்பதாகும். உயிர்கள் பல பிறவிகளில் பலவாறான இன்ப
துன்பங்களை நுகர்வதற்கும் வினையே காரணம். ( ஆறுமுகம் நாகப்பன், 2008 , 208)

சைவ சித்தாந்தம் வினையை மூவகையாகப் பகுக்கிறது. அவை பழவினை , ஊழ்வினை, வருவினை.


பழவினை என்பது ஒருவர் முன்னைய பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலன்களாகும்.
பழவினை தீரும்வரை பிறப்பு உண்டு என்கிறது சித்தாந்தம். அவ்வாறே, திருவள்ளுவரும்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்


தவாஅப் பிறப்பீனும் வித்து (குறள் 361)

இதன் பொருள் எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து
என்கிற பழவினை. அடுத்து, உயிர் பிறவி பெறும்போது பழவினையிலிருந்து பக்குவபடுத்தப்பட்டு ஊட்டப்படும்
வினை, ஊழ்வினை எனப்படுகிறது. உயிர்கள் பெறுவதும் இழப்பதும் இன்பமும் துன்பமும் உயிர்கள் செய்த
வினையின் பயன் ஊழ்வினை எனப்படுகிறது. இதனையே திருவள்ளுவர்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று


சூழினும் தான்முந் துறும் (குறள் 380)

ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானது இல்லை. ஊழ்வினையை நுகரும் போது உயிர்கள்


முனைப்போடும் இன்ப துன்ப நுகர்வுகளோடும் செயல்படுகின்றன. இவ்வாறு செயல்படுவதால்
அச்செயல்களின் வருவினையாக மாறுகின்றன. இங்கு சிந்திக்கத்தக்கது சடமாகிய வினை உயிரைத் தானே
வந்து அடையாது. உயிரின் வினையை அடுத்து வரும் பிறவிகளுக்கு வகுத்துத்தர ஓர் அறிவுடைய பொருள்
தேவை. இதனையே திருவள்ளுவர்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி


தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது (குறள் 377)

என்று உயிரின் வினைப்பயனை இறைவனே வகுத்து வருகிறான் என்ற சித்தாந்த சைவ உண்மையைத்
திரம்பட எடுத்துரைக்கிறார்.

பிறவி பிறவாநிலை
உயிருக்கு வினைவழி இன்ப துன்ப நுகர்ச்சி ஏற்படுவதால் வினையின் பயனாக பிறப்பு ஏற்படுகிறது என்கிறது
சித்தாந்தம். பிறவி என்பது பெருந்துன்பம் அதைக் கடக்க இறைவன் திருவடியைச் சார்வதே சாலச் சிறந்தது
என்று திருவள்ளுவர்

பிறவிப் பெருங்கடல் நீநது


் வர் நீநத
் ார்
இறைவன் அடிசேரா தார் (குறள் 10)

என்று தமது குறளில் கூறியுள்ளார். பிறப்பு உண்டேல் பினி, மூப்பு, சாவு உடன் வரும். ( ஆறுமுகம் நாகப்பன்,
2008, 211 ) இதனை அறிந்தே சித்தாந்தம் பிறவாநிலையை எடுத்துரைக்கிறது. வினை வறுத்த வித்தாகி
பிறவி அறுபட முதலும் முடிவமாகிய ஒருவனே செய்ய வல்லவன். அவனே சைவம் போற்றும் சிவபெருமான்.
இதனையே மெய்யுணர்தல் அதிகாரத்தில்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்


செம்பொருள் காண்பது அறிவு (குறள் 358)

பிறப்பு என்னும் பிறவித்துன்பத்திலுருந்து விடுபட சிறந்த செம்பொருளை அறிவதே மெய்யுணர்தல் என்கிறார்.


சைவ சித்தாந்தத்தில் செம்பொருள் என்பது சிவபெருமானையே குறிக்கும். சிவன் என்றால் செம்மை,
முழுமை என்று பொருள்படும். எனவே, திருவள்ளுவர் அறிவு நிலையான சிவத்தையே காண்பது அறிவு என
ஆணித்தரமாக கூறியுள்ளார்.

எந்த ஒரு கருத்தும், ஞானத்தின் வழி நின்று பேசப்படும் பொழுது, எவராலும் மறுக்க முடியாத இடத்தைப்
பெறுகிறது. சைவம் , சைவ சித்தாந்தம் எல்லா உயிருக்குமானது என்பதால் அதன் சித்தாந்தக் கொள்கைகள்
அடங்கியுள்ள திருக்குறள் அனைத்து இனத்தவரும் மதத்தவரும் போற்றி ஏற்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, சித்தாந்த சைவமே திருக்குறளின் உள்ளடக்கம் , இதுவே உண்மை. சிவசிவ!

துணை நூல்கள்

1. ஆறுமுகம் நாகப்பன், சித்தாந்த சைவம் , 2008


2. வைத்தியநாதன், திருக்குறளில் சைவ சித்தாந்தம், 1994
3. திருக்குறளில் உட்கிடை சைவ சித்தாந்தமே, 1953

You might also like