You are on page 1of 15

BACHELOR OF TEACHING ( PRIMARY EDUCATION ) WITH HONOURS

JANUARY 2021 SEMESTER


PEPERIKSAAN AKHIR

HBTL 1103

PENGENALAN BAHASA TAMIL

NAMA : TAMIL SELVI A/P GANASAN


NO. MATRIKULASI : 880620055116001
NO. KAD PENGENALAN : 880620-05-5116
NO. TELEFON : 0146210849
E-MEL : selvitamil762@gmail.com
PUSAT PEMBELAJARAN : 0UM SEREMBAN

BAHAGIAN A
SOALAN 1
அ) நினைவாற்றல் என்பது மூளையில் சேகரித்து வைக்கப்படும்
அனுபவம்,விஷயங்கள்,குறிப்புகள் ஆகியவற்றை மீண்டும் நினைவுபடுத்துவது ஆகும்.

அறிவின்
செயல்முறை

தொடர்ந்து விஷயங்களைச்
கல்வியைக் சேகரித்து
கற்றுத்தேறுதல் வைத்தல்

நினைவாற்றல்
என்றால்

தேவைப்படும் அனுபவங்களை
போது நிலை
எடுத்தாளுதல் நிறுத்துதல்

நினைவாற்றலைக் குறுகிய கால நினைவாற்றல் மற்றும் நீண்டகால நினைவாற்றல் என


இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.நினைவாற்றலில் 3 நிலைகளைக் காணலாம்.முதல்
நிலையானது குறியீடு பதிவு ஆகும்.அடுத்ததாக மூளையில் நினைவில் சேகரித்து
வைத்தல்.இறுதியாக நடைபெறுவது நினைவுக்கூர்தல் ஆகும்.நினைவாற்றல்
பிரச்சனைகளைக் களையும்போது பழையதை நினைவிற்குக் கொண்டு வந்து அதன்வழி
புதிய பிரச்சனைகளைக் களைவதற்கு உதவும்.
நினைவாற்றல் மாணவர்களுக்கு மிக அவசியம்.முன் அனுபவமும் நிறனும் கொண்ட
மாணவர்கள் பாட போதனையில் நிலைபெற அவர்களின் நினைவாற்றல் தெளிவாக இருக்க
வேண்டும்.நினைவாற்றல் கீழ்க்கண்டவாறு செயல்படும்.

படி 1 ஒன்றைப் பெறுதல்.

படி 2 வரிசைப்படுத்துதல்

படி 3 சேர்த்து வைத்தல்

படி 4 தேவை ஏற்படும்போது எடுத்தாளுதல்


முதல் படியாக, நினைவாற்றல் ஒன்றைப் பெறுகிறது.அதாவது கற்றல் கற்பித்தலை விளங்கி
கொண்டு கிரகிக்கச் செய்வதாகும்.தெளிவாக கிரகித்து கற்றவை நீண்ட காலம் நினைவில்
நிற்கும்.நமது மூளையில் உட்புகும் விஷயங்களும்,ஐம்பொறிகளின்வழி பெறும் கல்வி,அறிவு
மற்றும் வாழ்க்கைக் கல்வி போன்றவை முறையாக சேகரித்து
வைக்கப்படுகிறது.எடுத்துக்காட்டாக,பள்ளியில் மாணவர்களுக்கு பல பாடங்கள்
போதிக்கப்படுகின்றன.அப்பாடங்களை மாணவர்கள் நினைவில் கொள்ள குறியீடுகள்
பெரிதும் உதவுகிறது.உதாரணமாக மாணவர்கள் அறிவியல் பாடத்தில் கோள்களின்
பெயர்களை வரிசைக்கிரமாக நினைவில் கொள்ள வேண்டும்.இவ்வாறு கோள்களின்
பெயர்களை நினைவுக்கொள்ள , கோள்களின் முதல் சொற்களை வரிசைக்கிரமாக
சுலபமான வாக்கியமாக ஆசிரியர் மாணவர்களுக்கு உதவுகிறார்.இது மாணவர்களின்
மூளையில் தகவலாக பதிகிறது.ஆக, மாணவர்களின் மூளையில் பாடங்கள் நினைவில்
பதிகிறது.மூளை அதனைக் கிரகித்து தகவலாக நினைவாற்றல் பெறுகிறது.

இரண்டாவது படியாக, தகவல் அனைத்தும் வரிசைப்படுத்தப்படுகிறது. நம் மூளையானது


பெற்ற தகவலைத் தேவைக்கேற்ப வரிசைப்படுத்தபடுகிறது.குறுகிய கால தகவல்கள்
மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன.தேவை முடிந்த்ததும் அத்தகவல் மூளையில்
சேமித்து வைக்கப்படுகின்றன.நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை , நம்முடைய
மனத்தை மிகவும் கவர்ந்தவை , பாதித்தவை அல்லது மீண்டும் மீண்டும் சொல்லிப்
பார்த்தவை ஆகிய தகவல்கள் அனைத்தும் தேவைக்கேற்ப
வரிசைப்படுத்தபடுகிறது.எடுத்துக்காட்டாக,மாணவர்கள் அரையாண்டுத் தேர்வுக்கு
மீள்பார்வை செய்யும்போது தாம் படித்த பாடங்களை நினைவில் கொள்வர்.சோதனை
முடிந்தபிறகு தாம் மீள்பார்வைச் செய்த் தகவலை மாணவர்கள் மறந்து விடுவர்.மேலும்
மாணவர்கள் அன்றாடம் பார்க்கும் சொற்கள்,வாசிக்கும் வாசகங்கள் அன்றாடம் பேசும்
வார்த்தைகள், இவையனைத்தும் தன் ஆழ்மனதில் பதிகிறது.இதுவே குறுகிய கால
நினவாற்றல் மற்றும் நீண்டகால நினைவாற்றல் என வரிசைப்படுத்தப்படுகிறது.

மூன்றவதாக,நினைவாற்றல் சேர்த்து வைத்தல் ஆகும். மூளை பல செய்திகளை ஒன்றுடன்


ஒன்று தொடர்புபடுத்தி பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன் , புதிய தகவல்களையும் சேர்த்து
வைத்து பாதுகாக்கபடுகிறது.எடுத்துக்காட்டாக, மானிடர்களாகிய நாம் சந்திக்கும் சிறு வயது
தோழரிடம் உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது ; வரமாட்டேன் என்கிறது என்று
சொல்கிறோம்.இந்நிலை அத்தகவல் நீண்ட நாள் வெளிக்கொணரபடாமல் இருந்தால் நம்
மூளையானது அத்தகவலை சேகரித்து சேர்த்து வைக்கிறது.ஆக, நம் மூளையானது
தகவலை சேகரித்து தேவைக்கேற்ப சேர்த்துவைக்கிறது.
நான்காவதாக,தேவை ஏற்படும்போது எடுத்தாளுதல் ஆகும்.நமது மூளை அன்றாடம்
ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது.அத்தனை தகவல்களையும் மூளையிலேயே
சேமித்து வைக்கிறது.அத்தகவல் தேவைப்படும் போது நமது மூளை தகவலைக்
வெளிக்கொண்டு வருகிறது.நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை
மீட்டெடுப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.

இறுதியாக , மனித உடலில் மூளை மிக முக்கியமான உறுப்பு ஆகும்.அறிவு என்பது


மூளையில் ஏற்படும் தரமான சிந்தனையாகும்.

BAHAGIAN A
SOALAN 1
ஆ) கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் முக்கியமானதொரு பிரச்சனையாக விளங்குவது
கற்பிக்கபடுவதை விளங்கிக் கொள்ளச் செய்வதும் கிரகிக்கச் செய்வதுமாகும்.மனப்பாடம்
செய்த தகவல்கள் மறந்து விடுகின்றன.ஆனால் தெளிவான கிரகிப்புடன் கற்றவை நீண்ட
காலம் நினைவில் நிற்கும்.இந்த வகையில் கிரகித்தலுடன் விளங்கிக் கொள்வதும் அதனை
நினைவார்த்தலுடன் மீட்பதும் கற்றல் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது.இதற்காகக்
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள நான்கு
முக்கியமான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.கவனமான பார்வை , ஆர்வம்
,அக்கறை மற்றும் புதிதாகச் சிந்தித்தல் ஆகும்.
முதல் உத்தியானது, அடிப்படை உத்தியாகும்.ஒன்றிலிருந்து நூறு வரை
எண்னுங்கள்.பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள்.பிறகு 100 லிருந்து
தலைகீழாக 100,98,96 என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ண வேண்டும்.பிறகு
நான்கு நான்காகக் குறைக்க வேண்டும்.இப்படி எண்களைக் குறைத்து எண்ணக் கற்றுக்
கொண்டால்,நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது எனப் பொருள்படும்.
தொடர்ந்து,ஓர் ஆங்கிலப் பத்திரிக்கையை எடுத்து,அதன் ஒரு பத்தியில் இடம்
பெற்றுள்ள ”எஸ்” எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ள வேண்டும் அடுத்து
இரண்டு மூன்று பத்திகளில் உள்ள “ஏ” எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ள்
வேண்டும்.இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தால்,எத்தனை “எஸ்” அல்லது
“ஏ” எண்ணாமல் விடுபட்டிருக்கும் என்று தெரியவரும்.இதை வைத்து நினைவுத் திறனின்
அளவைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத்திறனை வெகுவாக வளர்த்துக்
கொள்ளலாம்.தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி
பண்ணலாம்.வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால்,இதை விட நன்றாக
இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும்
ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றல் பெருகும்.
உடலின் ஒவ்வோர் உறுப்பும் ஓர் இயந்திரம்.அதிலும் இதயமும், மூளையும்,ஓய்வில்லாத
இயந்திரங்கள், இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும்.மூளைக்கு
ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை
முன்னேற்றம் நின்று போய்விடும்.ஆகையால், எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை
கொடுத்துக்கொண்டே இருந்தால் நினைவாற்றலை மேம்படுத்தலாம்.உடற்பயிற்சி செய்வதன்
மூலம் நினைவாற்றலை கைவரப் பெற முடியும்.உடற்பயிற்சி மூளையைச் சுறுசுறுப்பாக
இயக்குகிறது.எனவே 15 முதல் 20 நிமிடங்களையாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும்.
தொடர்ந்து, மேலூட்டமாய்த் தகவலைக் கேட்டுக் கொள்வது,போகின்ற போக்கில் பார்த்து
வைப்பது என இல்லாமல் அளவுகளை சரியாகக் குறித்து தகவல்களைப் பதிவு செய்து
கொள்வது நினைவாற்றலை வலுபடுத்தும்.கண்டிப்பாக நினைவில் வைக்கவேண்டிய
விஷயங்களை வாய்விட்டுச் சொல்லிப்பார்த்தல் நல்லது.படித்தறியும்போதுகூட
பர்வையிலேயே படிப்பதைக் காட்டிலும் வாய்விட்டு சத்தமாக படித்தலும், முறையாக
வரிசைப்படுத்தி கொள்ளுதலும் சிறந்தது.கேட்பதன் மூலமாக அறிந்து கொள்ளும்போது
தொடர்புடைய நிறம் , சொற்கள், வாசம் , தன்மையோடு பதிவுசெய்து கொள்வதும்
நினைவாற்றலை வளர்கிறது.
அடுத்ததாக, நினைவாற்றலை கைவரப் பெற புதிய தகவல்கள் முன்பே அறிந்தவற்றோடு
தொடர்புடையது எனும்போது அவற்றை நினைவுபடுத்திப் பார்த்து இணைத்துப் பதிவு
செய்து மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
எழுதிவைக்கும் தகவல்களோடு அதற்குரிய படங்களையும் சின்ன சின்னதாய்ப்
பக்கத்திலேயே வரைந்து வைத்து எழுதிக்கொண்டால் நினைவுபடுத்திப் பார்க்கும் போது
தன் கருத்துகளைத் தன் நினைவுக்கும், பிறருக்குத் தகவலாகவும் பதிவு செய்வது
நினைவாற்றலை கைவரப் பெற சிறந்த முயற்சியாகும்.

BAHAGIAN A
SOALAN 3

அ) பயிற்றுத் துணைப்பொருள் என்பது கற்றல் கற்பித்தலின்போது ஆசிரியர்களால்


பயன்படுத்தக்கூடிய உபகரணப் பொருள்களாகும். பயிற்றுத் துணைப்பொருள்கள் கற்றல்
கற்பித்தலின்போது மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதுடன் மட்டுமல்லாமல் அவர்களுக்குத்
தெளிவான விளக்கத்தையும் ஆழமான புரிந்துணர்வையும் ஏற்படுத்தும். மேலும்,
பயிற்றுத்துணைப்பொருள் மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துவதற்கும், கருத்தை
விளக்குவதற்கும், வலுப்படுத்துவதற்கும், கவலை, அச்சம் மற்றும் சலிப்புத் தன்மையை
நீக்குவதற்கும் பெரிய அளவில் உதவும் கருவிகளாகத் திகழ்கின்றன. பயிற்றுத்
துணைப்பொருள்களில் பலவகை உண்டு. அவற்றில் முதன்மையானது உண்மைப்
பொருள்கள் ஆகும்.
உண்மைப் பொருள்கள் என்பவை கற்பனையற்ற மாணவர்கள் நேரடியாகப் பார்க்கக்
கூடிய பொருள்களாகும். இந்த உண்மைப் பொருள்களை மாணவர்களால் தன்
ஐம்புலன்களைக் கொண்டு அனுபவிக்க முடியும். உண்மைப் பொருள்கள் என்று
பார்க்கும்பொழுது அவை உயிரினங்கள், இயற்கைக் காட்சிகள் மற்றும் இடங்கள் என
வகைப்படுத்தலாம். உண்மைப் பொருள்களில் உயிரினங்கள் என்று பார்த்தோமானால்
பறவைகள், பிராணிகள், இயற்கை பொருள்களான மரம், செடி, கொடி போன்றவையும்
அடங்கும். இத்தகைய உண்மைப் பொருள்களான உயிரினங்களைப் பயிற்றுத்
துணைப்பொருளாக மாணவர்களின் கண் முன் கொண்டு வரும்போது மாணவர்கள்
உற்சாகமாக கற்றல் கற்பித்தலில் ஈடுபடுகிறார்கள். அறிவியல் பாடத்தில் உண்மைப்
பொருள்களைப் பயன்படுத்திப் பரிசோதனை செய்யும் திறன் கொடுக்கப்பட்டிருக்கும். இதை
முழுமையாக மாணவர்களுக்கு விளக்க ஆசிரியர் சிறு பிராணிகளான வண்ணத்துப்பூச்சி,
தவளை, தட்டான் போன்ற உயிரினங்களைப் பயன்படுத்தித் தனது கற்றல் கற்பித்தலைக்
கொண்டு செல்வார்கள்.
உண்மைப் பொருள்களில் இயற்கைக் காட்சிகள் என்பனவற்றுள் வானவில், மலை, ஆறு,
கடல், மழை, கோள்கள், நீர்வீழ்ச்சி போன்றவையும் அடங்கும். இவ்வாறான இயற்கைக்
காட்சிகளைப் பாடவேளையின்போது காட்டப்பட முடியாமல் போகலாம். ஆனால்,
பாடவேளைக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் மாணவர்களுக்கு நேரடியாகக் காட்டி
விளக்கம் கொடுக்கலாம். இதனை அனுபவக் கற்றல் என்றும் கூறலாம். சில இயற்கைக்
காட்சிகளை ஆசிரியரால் உடனுக்குடன் காட்டி போதிக்க முடியும். முடியாத சூழ்நிலையில்
மாணவர்களின் சுய அனுபவத்தைக் கேட்டறிந்து போதிக்கலாம்; பள்ளியளவில் சுற்றுலாவை
மேற்கொண்டு தங்கள் கற்றல் கற்பித்தலையும் மேற்கொள்ளலாம் காரணம் கற்றலுக்குக் கால
வரையறை இல்லை.
அடுத்ததாக உண்மைப் பொருள்களில் இடங்கள் என்று குறிப்பிடுகையில் கோயில்கள்,
பட்டணங்கள், விமானத்திடல், சாலை, மருத்துவமனை, வியாபார மையங்கள், தோட்டங்கள்,
தொழிற்சாலைகள், உலக அதிசயங்கள் மற்றும் பல. இந்த இடங்களை ஆசிரியர்கள்
எவ்வாறு தங்களின் கற்றல் கற்பித்தலில் பயிற்றுத் துணைப்பொருள்களைப் பயன்படுத்த
முடியும். மேற்குறிப்பிடப்பட்ட இடங்களில் சில இடங்களுக்கு மாணவர்கள் அடிக்கடி
சென்றிருக்கும் அனுபவம் இருக்கும். அவற்றையொட்டி மாணவர்களையே வகுப்பில் பேசச்
செய்து பாடத்தைக் கொண்டு செல்லலாம். மாணவர்களின் அனுபவமே பயிற்றுத்
துணைப்பொருளாகச் செயல்படுகிறது. மாணவர்களுக்கு அனுபவம் இல்லாத அவர்கள்
சென்றிறாத இடங்களைப் பற்றி கற்றுக் கொடுக்க ஆசிரியர்களே அவர்களை
அவ்விடங்களுக்கு அழைத்துச் சென்று தங்களின் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளலாம்.
நாடகமும் பயிற்றுத் துணைப்பொருள்களில் உண்மைப் பொருள் வகையில் சேர்ந்தது.
கற்றக் கற்பித்தலை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கொண்டுச் செல்ல நாடகமும்
துணைப்புரிகின்றது. இது அதிகமாக பாட அறிமுகத்தின் போது பயன்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டாக மொழி பாடங்களில் கேட்டல், பேச்சு, மற்றும் வாசிப்புத் திறன்கள்
போதிக்கப்படும்போது இம்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

BAHAGIAN A
SOALAN 3

ஆ)
பயிற்றுத் துணைப்பொருள்களில் செய்பொருள்கள் என்பது ஆசிரியரின் திறமைக்கேற்ப
தயாரிக்கப்படும் பொருள்களாகும். செய்பொருள்களைப் பயன்படுத்தும்போது ஆசிரியரின்
திறமை வெளிப்பட வேண்டும். இவ்வகைப் பொருள்கள் மாணவர்களின் உதவியோடும்
தயாரிக்கப்படலாம். செய்பொருள்களை ஆசிரியர்கள் மற்ற மூலங்களிலிருந்தும் பெற்றுக்
கொள்ளலாம். செய்பொருள்களைப் பலவிதமாக வகைப்படுத்தலாம். அவை:-

பொம்மைகள்

கோள்கள்
உருவங்கள் செய்ப்பொருள்கள் கிரகங்கள்
விண்வெளி

படங்கள்

பொம்மைகள் செய்பொருள் என்று கூறும்பொழுது அவை சிற்பங்கள், மாதிரிப்


பொருள்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் ஆகியவை இதில் அடங்கும். இவற்றை
உருவங்களாவும் செய்யலாம்; படங்களாகவும் வரைந்து பயன்படுத்தலாம். இருப்பினும்
பொம்மைகளை உருவங்களாகச் செய்து காட்டினால் அவை மாணவர்களைக் கவரும்
வகையில் இருக்கும். இப்படி உருவமைக்கப்படும் பொம்மைகள் மாணவர்களைக்
கவனத்துடனும் ஆர்வத்துடனும் கற்றல் கற்பித்தலில் ஈடுபடச் செய்ய முடியும்.
எடுத்துக்காட்டாக , பாட போதனையில் கதைக் கூறும் நடவடிக்கைகளுக்குப்
பொம்மைகளைப் பயன்படுத்திக் கதையைக் கூறும்போது அந்நடவடிக்கை சவரிசியமாகவும்,
பலரை ஈர்க்கும் வண்ணமும் அமையும்.மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பேசவும்
இப்பொருள் உதவுகிறது. பாட இறுதியில் ஆசிரியர் கற்றக் கற்பித்தலின் நோக்கத்தையும்
சுலபமாக அடைய முடியும்.
அடுத்ததாக கோள்கள், கிரகங்கள், விண்வெளி ஆகிய மூன்றையின் மாணவர்கள்
நேரடியாகக் காண இயலாது. இருப்பினும் இவற்றை ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில்
எவ்வாறு கொண்டு செல்வது? இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள மாணவர்களுக்கு வரைந்து
காட்டலாம், உருவங்கள் செய்து காட்டலாம். இதனை மாணவர்கள் அதிகமாக அறிவியல்
பாடங்களில் கற்றுக் கொள்ளலாம். அறிவியலில் இதைச் சார்ந்த தலைப்புகள் இருப்பதால்,
ஆசிரியர் அவற்றின் உருவங்களை உருவமைத்துக் கற்பிக்கும்போது மாணவர்களுக்குக்
கற்றலில் அதீத ஆர்வம் உண்டாகும். நீண்ட காலங்களுக்குக் கற்ற தகவல்களை
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் முடியும்.
தொடர்ந்து, படங்களைப் பயன்படுத்திக் கற்பித்தலை ஆசிரியர்கள் அதிகமாகப்
பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம் அவை சுலபமாகக் காட்டக்கூடிய பொருளாகும்.
மேலும், மாணவர்களின் கற்கும் ஆர்வத்தைத் தூண்டுவனவாகவும் அமைகின்றன. படங்கள்
என்று பார்த்தால் அவை;

நிழற்படங்கள் ஓவியங்கள் அச்சிட்ட படங்கள் ஒளிப்படங்கள்

வரைப்படங்கள் கேலிச்சித்திரங்கள் பூலொகப்படங்கள்

இவ்வாறான பயிற்றுத் துணைப்பொருள்களைப் பயன்படுத்தும்போது மாணவர்களின்


கவனம் ஈர்க்கப்பட்டு அவர்களை ஆர்வத்துடன் கற்கத் முடிகிறது. இவற்றைக் கொண்டு
கற்பிக்க வேண்டிய விவரங்களை எளிமையாகவும் மிக விரைவாகவும் ஆசிரியரால் கற்பிக்க
இயலும். படங்களை அழகாகத் தயாரிப்பதன் மூலம் கற்றல் கற்பித்தலை மிகவும் கவரும்
வகையில் அமைத்திட முடியும்.
அதோடுமட்டுமல்லாது செய்பொருள் உருவாக்கத்தில் உருவங்களை வடிவமைத்தலும்
இன்றியமையாததாகத் திகழ்கின்றது.உருவங்களை வடிவமைத்தலில் பொம்மைகளோடு
மட்டும் நின்றுவிடுவதில்லை. உருவங்களைக் களிமண், நெகிழி, மற்றும் அட்டை
ஆகியவற்றைக் கொண்டும் தயாரிக்கலாம். இம்மாதிரி பொருள்களைப் பயன்படுத்தி
உருவாக்கப்படும் பொம்மைகள் மாணவர்களின் மனத்திற்கு மேலும் மகிழ்ச்சியைக்
கொடுக்கின்றது. அத்துடன் மாணவர்களின் ஆக்க சிந்தனைக்கும் வழிவகுக்கும். மேலும்,
மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனில் ஏற்படும் தடுமாற்றத்தைக் குறைத்திட
இம்மாதிரி பொம்மைகள் உதவுகின்றன எனலாம்.
BAHAGIAN B
SOALAN 1

கல்வி இலக்குகளை அடைவதற்கான பள்ளிச் சூழ்நிலையை ஆசிரியரே உருவாக்க


வேண்டும்.மாணவர்களைக் கல்வியின் இலக்குகள், நோக்கங்கள், குறிக்கோள்கள்,மதிப்புகள்
நோக்கி வழடத்துவதோடு அம்மாணவர் திறம்பட செயலாற்ற ஊக்குவித்தும் பண்பட்ட
மனித பண்புகளைச் சமயம் வழி உருவாக்கவும் செய்கின்றார் ஆசிரியர்.
ஒரு ஆசிரியரது பணி எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என பாட போதனையில்
அறிய முடியும்.இதற்கு அடிப்படையாக ஆசிரியரது மிதிப்பீடு செயல் அமைகிறது.கற்றல்
இலக்குகளை எய்துவதில் மாணவர்கள் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்பதைத்
தொடர்ந்து மதிப்பீடு செயல் அமைகிறது.
மதிப்பீட்டில் உள்ள நற்பண்புகளின் முக்கியத்துவத்தை முறைமைத் தகுதி மூலம் உறுதி
செய்ய இயலும்.அளந்தறிய முற்படும் திறனையோ பண்பினையோ வேறு கூறுகளையோ
சிறந்த முறையில் துல்லியமாக மதிப்பிட ஒரு தேர்வு வழிவகுக்குமாயின் அது சிறந்து
விளங்குகிறது என்று பொருள்.முறைமைத் தகுதியில் மாணவர்கள் பள்ளியில் கற்ற
அளவின் எல்லையை அளந்தறிய மட்டும் தேர்வைப் பயன்படுத்துவது மட்டுமின்றி
அவர்களிடம் காணப்பெறும் பழக்கவழககங்கள்,தனித்திறமைகள்,உளப்பாங்குகள் , நாகரீகப்
பண்புகள் ஆகிய அனைத்து செயல்களையும் அளந்தறிதல்ம் ஆகும்.இவற்றுள் எந்த
நுணுக்கத் திறனின் பண்பினை மதிப்பிட வேண்டுமோ அதனை மட்டும் அளந்தறிந்தால்
அம்மதீப்பீடு ஏற்புடயனாதாக இருக்கும்.
தொடர்ந்து, மதிப்பீட்டில் உள்ள நற்பண்புகளின் முக்கியத்துவத்தை தர அளவு மூலம்
உறுதி செய்ய இயலும் வினாக்களை யார் தயாரித்தாலும் எவர் பதிப்பிட்டாலும் எச்சூழலில்
மதிப்பீடு செய்யினும் ஒரே சீரான முடிவைத் தரக்கூடிய சோதனையே நிலையாக்கம்
பெற்றதாகும்.அப்பொழுதுதான் எல்லாப் பள்ளிகளின் அளவுவையும் அளந்தறிய
முடியும்.அதற்குப் பல இடங்களிலும் பல சூழ்நிலைகளிலும் பல மாணவர்களிடமும்
பயன்படுத்தியப் பின்னர் உருவாக்கப்பட்ட, நிலையான வினாக்களின் வகைகளையே
பயன்படுத்துதல் வேண்டும்.
தொடர்ந்து, மதிப்பீட்டில் உள்ள நற்பண்புகளின் முக்கியத்துவத்தை சமன் நிலை மூலம்
உறுதி செய்ய இயலும்.வகுப்பிலுள்ள கெட்டிக்கார மாணவர்களும் மெல்ல பயிலும்
மாணவர்களும் இடைப்பட்ட நிலையிலுள்ள மாணவர்களும் விடையளிக்ககூடிய
வாய்ப்புகளை நல்கக்கூடிய வகையில் ஒரு நல்ல மதிப்பீடு அமைந்திருக்க
வேண்டும்.கேள்விக்கு ஏதோ ஒரு விடையை அளிக்கலாம் என்னும் நிலையில் மதிப்பீடுகள்
வழங்குதல் கூடாது.எனவே,மதிப்பீட்டுத் தேர்வு அனைத்துப் பிரிவினருக்கும் சம வாய்ப்பு
அளிக்கும் வகையில் நிகழ்தல் வேண்டும்.
அடுத்ததாக, மதிப்பீட்டில் உள்ள நற்பண்புகளின் முக்கியத்துவத்தை நம்பகத்தன்மை
மூலம் உறுதி செய்ய இயலும்.ஒரு நல்ல மதிப்பீட்டின் முடிவு அனைவரும்
நம்பக்கூடியதாகவும்,பலரும் ஒத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்க
வேண்டும்.சோதனைகளின் நம்பகத் தன்மையை மதிப்பிட பல்வேறு முறைகள்
இன்றுள்ளன.ஒரு தன்மையில் அமைந்த இருவேறு சோதனைகளை ஒருவருக்கு வெவ்வேறு
சமயங்களில் அளித்து அவரிடமிருந்து பெறப் பெற்ற முடிவுகளூக்கிடையே காணக்கூடிய
ஒற்றுமையினை ஆய்தல் ஒரு முறையாகும்.ஒரே சோதனையை இரு பிரிவுகளாக பிரித்து
அவற்றிற்கான மதிப்பெண்களுக்கிடையே காணப்படும் இணைப்பினை ஆய்தல் வேறொரு
முறையாகும்.எனவே,வினாக்களின் பட்டியலை மாணவர்களிடம் நீட்டிப் பல தடவை
சோதித்தாலும் ஒரே விடை வந்தால் அது நல்ல மதிப்பிட்டிற்கு அடையாளமாகும்.
தொடர்ந்து, மதிப்பீட்டில் உள்ள நற்பண்புகளின் முக்கியத்துவத்தை ஓருருப்பாடு மூலம்
உறுதி செய்ய இயலும்.நல்ல மதிப்பீட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வினாக்கள்
கேட்கப் பெறாமல் பாடப்பகுதி முழுமையிலும் பரவலாக ஓருருப்பாட்டில் வினாக்கள்
அமைந்திருக்க வேண்டும்.சில தேர்வாளர்கள் ஒரு பகுதியில் அதிகமாகவும்,சில பகுதிகளில்
குறைவாகவும்,சில பகுதியில் வினாக்களைக் கேட்காமலும் விட்டுவிடுவதுண்டு.எல்லாப்
பகுதிகளுக்கும் சம வாய்ப்புகள் அளிக்கும் வகையில் ஓருருப்பாடு முறையில் வினாக்கள்
அமைவது மிகவும் சிறப்பாகும்.
இறுதியாக, மதிப்பீட்டில் உள்ள நற்பண்புகளின் முக்கியத்துவத்தை எளிமைப்பாடு மூலம்
உறுதி செய்ய இயலும்.தேர்வினை நடத்தும் முறை,மதிப்பீடு செய்யும் பாங்கு ஆகியவை
சிறந்து விளங்க வேண்டும்.நடத்தும் முறை என்பது தேர்வு வினாக்களை எவ்வித
இடையூறுகளோ இன்னல்களோ இன்றிச் சுலபமாகவும்,எளிதாகவும் அமைத்தலாகும்.ஒரு
தேர்விற்கு,பணசெலவு,நேரவிரயம்,முறையறிவு ஆகியவை அதிக அளவில்
தேவைப்படின்,ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில் அது பயனற்ற ஒன்றாகிவிடும்.எனவே,ஒரு
நல்ல மதிப்பீடு கையாள்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும்.திருத்துவதில்
ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களுக்கிடையே மதிப்பீடு செய்து கொள்ளும் அளவிலும்
ஆசிரியர்கள் மதிப்பெண்கள் கொடுக்கும் வகையிலும் நல்ல மதிப்பீடு எளிமையாக
வேண்டும்.

BAHAGIAN B
SOALAN 2
குறிப்பேடு எனப்படுவது கற்றல் கற்பித்தலில் ஏற்படுகின்ற சிக்கல்களை
அடையாளம்கண்டு நினைவு கூறும் ஒரு கேடயமாகும்.பயிற்றுப்பணியின்போது கற்றல்
கற்பித்தலில் ஏற்படுகின்ற சிக்கல்களை அடையாளங்கண்டு குறித்து வைப்பதுதான்
குறிப்பேடு எனப்படுகிறது.அது மட்டுமில்லாமல் குறிப்பேட்டின் மூலம் நம்
எண்ணங்களையும்
மன உணர்வுகளையும் மனத்தை உளுக்கிய சம்பவத்தையும் குறித்து வைத்து, பிறகு
அதனைப் பற்றிச் சிந்தனை மீட்சி செய்ய முடியும்.சிந்தனை மீட்சியின் குறிப்புகள் தொடர்
நடவடிக்கைகள் மேற்கொள்ளத் துணைபுரியும்.
ஆசிரியர் குறிபேட்டில் மன உணர்வு,சுய மதிப்பீடு, சூழல், சூழலை
மாற்றயமைக்கும் வழிமுறை,புதுநோக்கு,அடுத்த கட்ட நடவடிக்கை போன்றவற்றை
எழுதலாம்.குறிப்பேடு எழுதுவதால் சிறந்த ஆசிரியரை உருவாக்க முடியும்.முதலாவதாக
ஆசிரியர் தமது போதனையில் எதிர்நோக்கும் குறைநிறைகளைக் கண்டறிய குறிப்பேடு
எழுதுகின்றனர்.ஆசிரியர் ஒரு திறனை நன்கு ஆராய்ந்து தன் வகுப்பு மாணவர்களின்
திறன் அறிந்து ஒரு பாடபோதனையைத் தாயாரிக்கின்றனர்.வகுபிற்கு சென்று போதனை
நடத்திய பிறகு ஆசிரியர் போதனையில் உள்ள குறைநிறைகளை எழுதுவது
கடமையாகும்.நிறைகள் ஆசிரியரை உட்சாகப்படுத்தும்.மனநிறைவைத்
தரும்.மாணவர்களுக்கு தரமான போதனை அவர்களின் தரத்திற்கும் ஏற்ப மெருகேட்டபட்டு
சிறந்த நடவடிக்கையாக அமையும்.அந்நிறைகளை மற்ற மாணவர்களுக்கும் தாராளமாக
பயன்படுத்தலாம்.
குறைகள் இருப்பின் ஆசிரியர் பாடத் தயாரிப்பில் குறையா அல்லது மாணவர்களுக்கு
பொருந்தாத நடவடிக்கைகளா? திறனுக்கு பொருத்தமில்லாத நடவடிக்கைகளா? என
ஆசிரியர் ஆராய்ந்து செயல்பட குறிப்பேடு உதவுகிறது.குறிப்பேட்டில் எழுதப்படும்
குறைகள் யாவும் பல கோணங்களில் ஆசிரியரால் ஆராயப்பட்டு,ஆசிரியர் தன் தவற்றை
உணர முடியும்.எனது அனுபவத்தில் தமிழ் மொழி பாடத்தில் மாணவர்களுக்கு சந்தச்
சொற்கள் போதிக்க போதனையை தயாரித்திருந்தேன்.பாடநூலில் உள்ள தமிழுக்கு
அமுதென்று பேர் எனும் கவிதையைத் தேர்ந்தெடுத்து அதன் வழி போதிக்க
விளைந்தேன்.குறிப்பேடு எழுதும்போதுதான் அச்சொற்கள் அனைத்தும் ஒரே
ஓசையுடையவை என்பதை உணர்ந்தேன்.ஆசிரியராக எனக்கு அப்போதுதான் தவறுகளை
உணர்ந்து,மறுநாள் நடவடிக்களை மாற்றம் செய்து முறையான விளக்கம் அளித்தேன்.
தொடர்ந்து,குறிப்பேடு எழுதுவதால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை
மாற்றியமைக்கும் திறனையும் வளர்க்க முடிகிறது.ஆசிரியர் போதனையின் போது
மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு அவர்களின்
சிந்தனைத் திறனைத் தூண்டுவதாகவும் அமைதல் வேண்டும்.குறிப்பேடு எழுதும் போது
ஆசிரியர் குறிப்பிட்ட நடவடிக்கையை மேம்படுத்தி மாற்றிக்கொள்ள உதவும்.எனது
அனுபவத்தில் சந்தச்சொற்கள் போதிக்கும் அனுபவத்தில் நடவடிக்கை வரிசைகிரமாக
அமையவில்லை.சந்த சொற்களையொட்டி விளக்கம் அளித்த பிறகு,மாணவர்களுக்கு முதல்
நடவடிக்கையாக பாடலில் விடுபட்ட சந்தச்சொற்களை எழுதப் பணித்தேன்.மாணவர்கள்
மிகவும் சிரமப்பட்டனர். அப்போது என் போதனை நடவடிக்கைகள் வரிசகிரமாக இல்லை
என்பதை உணர்ந்த்தேன்.உடனே,நடவடிக்கைகளை மாற்றி வரிசைப்படுத்தினேன்.பிறகு
சுலபமான நடவடிக்கையிலிருந்து கடினமான நடவடிக்கையை மாணவர்கள்
மேற்கொண்டனர்.சந்தச் சொற்களை முழுமையாக அறிந்த பிறகே மாணவர்கள் பாடலில்
உள்ள சந்தச் சொறகளை அடையாளங்கண்டு அதற்கேற்ப விடையினை எழுதினர்.
அடுத்ததாக,குறிப்பேடு எழுதுவதால் ஆசிரியர்கள் தங்களுடைய சிந்தனையை
மேம்படுத்துவத்ற்குக் கற்ற்ல் கற்பித்தல் தொடர்பான தனது மன அழுத்தங்களையும்
தாக்கங்களையும் தயக்கமின்றி எழுத முடிகிறது. பாட போதனையில் நடவடிக்கைகள்
புதுப்பிக்க உதவுகிறது.எடுத்துக்காட்டாக,ஆசிரியர் ஒரே மாதிரியான போதனையை
மாணவர்களிடத்தில் நடத்த இயலாது.மாணவர்களும் அப்போதனையை விரும்பி கற்றுக்
கொள்ள மாட்டார்கள்.திறனுக்கு ஏற்றவாறு,மாணவர்கள் தன் அன்றாட வாழ்க்கை சூழலில்
பயன்படுத்தக் கூடிய நடவடிக்கையாக இருப்பதை ஆசிரியர் உறுதிப்படுத்த
வேண்டும்.எனது அனுபவத்தில் சந்த சொற்கள் திறனை மாணவர்களுக்கு போதித்த பிறகு,
அவர்களின் ஆளமையை அறிய சுயமாக சந்தச்சொற்களி அடங்கிய பாடலொன்றினை
எழுதிவர பணித்தேன்.மாணவர்கள் அனைரும் சுயமாக சிந்தித்து பாடலை
எழுதினர்.இந்நிலை மாணவர்களின் ஆக்கசிந்தனையை வலுவடய செய்கிறது.
இறுதியாக,ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களை பிறரோடு பகிர்ந்துக் கொள்ளவும்
குறிப்பேடு உதவுகிறது.ஆசிரியர்கள பலர் போதனா முறையில் கைத்தேர்ந்தவர்களாக
இருக்கின்றனர்.அவர்களின் அனுபவங்கள்.அவர்களின் சிறப்பான போதனை முறைகள்
மானவர்களுக்கு போதிக்கும் இளம் ஆசிரியர்களுக்கு முன்னுதரனமாக இருத்தல்
மயவேண்டும்.னது அனுப்பவத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் பாடத்திற்கு தகுந்தவாறு
நனிச்சிறந்த ஆசிரியர்கள் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் உள்ளனர்.அவர்களின்
துல்லிய போதனையை மாணவர்கக்கு கற்றுக்கொடுக்கக் வேண்டும்.எனது அனுபவத்தில்
மாணவர்களுக்கு வழங்கப்படும் பனுவலை முதலில் ஆராய வேண்டும் என்பதைத்
தெரிந்துக் கொண்டேன்.மேலும், வாசிப்பு பனுவல்கள் எளிமையான சிறிய வாக்கியங்களால்
அமைந்திருத்தல் அவசியம் என கற்றுக்கொண்டேன்.

You might also like