You are on page 1of 1

மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ்

வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான்


ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே 3-1-

பதவுரை

மெய்யில் வாழ்க்கையை–ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே


மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.
மெய் என கொள்ளும்= பாரமார்த்திகமாகக் கருதுகின்ற
இவவையம் தன்னோடும்=இவ்வுலகத்தாரோடு
யான் கூடுவது இல்லை=(இனி) நான் சேர்வதில்லை
ஐயனே=‘ஸ்வாமீ’
அரங்க=‘ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்=என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்;
என் தன் மாலுக்கே=என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே
மையல் கொண்டொழிந்தேன்= வ்யாமோஹடைந்திட்டேன்.
மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.

Link=
http://www.tamilvedham.org/index.php?r=site/pasuram1&username=&song_no=668&thirumoli_id=3
&prabhandam_id=6&alwar_id=14
https://www.youtube.com/watch?v=4lU9D7dvp5g

You might also like