You are on page 1of 26

BACHELOR OF TEACHING ii

(PRIMARY EDUCATION) WITH HONOURS

SEMESTER SEPTEMBER 2021

HBTL 3303
TATABAHASA BAHASA TAMIL III

NO. MATRIKULASI ii : ii 770310145776001


NO. KAD PENGENALAN : ii 770310145776
NO. TELEFON : ii 0172529220
E-MEL : ii rajootenmoli@gmail.com
PUSAT PEMBELAJARAN : ii OUM KUALA SELANGOR

கேள்வி 1 அ
 இன்று நமக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய தமிழ்
இலக்கண நூலாகிய தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில்
அகத்திணை, புறத்திணை பற்றி விரிவாக விளக்குகின்றது.

தொல்காப்பியம் அகத்திணையை ஏழு பிரிவுகளாக வகுத்துள்ளது.


இவை,

1. கைக்கிளை
2. குறிஞ்சித் திணை
3. பாலைத் திணை
4. முல்லைத் திணை
5. மருதத் திணை
6. நெய்தல் திணை
7. பெருந்திணை

அகத்திணையில் அன்பில் ஐந்தினை


ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்வது
குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. காதலன்
பொருள ீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ,
தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி
காத்திருப்பது முல்லைத் திணை என்னும் பெயர் பெறுகிறது.
தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால்
பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக்
குறிக்கும் திணை மருதத் திணை எனப்படும். கடலில் மீ ன் பிடிக்கச்
சென்றோ , பிற காரணங்களாலோ தலைவன் பிரிந்து சென்று, திரும்பி
வர இயலாத சூழலில் தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி
நிற்றலை நெய்தல் திணை என்பர்.
தன் ஊரிலே வறட்சியின் காரணமாக வெளியூர் சென்று பொருள ீட்டி
வரலாம் என்று தலைவன் பிரிந்து செல்லும் நேரத்தில் இல்லத்தில்
இருக்கும் தலைவியின் நிலை குறித்து அவன் கவலைப்படுதலும்,
செல்லும் வழியில் தலைவனுக்கு என்ன நேருமோ என்று தலைவி
இல்லத்தில் இருந்து கவலைப்படுதலும் பாலைத் திணை எனப்படும்.
இவையே அன்பின் ஐந்திணை என்றும் அழைக்கப்படும்.
அகத்திணை அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை எனப்படும்.
அன்பின் ஐந்திணைகளாகிய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்,
பாலை ஆகியவற்றின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்
ஆகும்.

முல்லைத் திணை

முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து


வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த
இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை
நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை
மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை
உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.

பொழுது - அ) பெரும்பொழுது : கார்காலம், ஆ) சிறுபொழுது: மாலை

கருப்பொருள்கள்
1. தெய்வம் - மாயோன்
2. உணவு - வரகு, சாமை
3. விலங்கு - மான், முயல்ம்
4. மரம் - தோன்றி, காயா, பிடவம், குருந்தம்
5. பறவை - காட்டுக்கோழி, சேவல்
6. பறை - ஏறுகோட் பறை
7. தொழில் - ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்
8. யாழ் - முல்லை யாழ்
9. பண் - குறிஞ்சிப் பண்
10. ஊர் - பாடி, சேரி
11. நீர் - குறுஞ்சுனை, கான்யாறு
12. மலர் - முல்லை , குல்லை , தோன்றி, பிடவம்
உரிப்பொருள்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
குறிஞ்சி திணை

மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என


அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு சேயோன் தெய்வமாக
பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள்
சிறுகுடி என்று அழைக்கப்பட்டன. "சேயோன் மேய மைவரை
உலகமும்" எனத் தொல்காப்பியம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.

பொழுது - அ) பெரும்பொழுது – கூதிர்காலமும், முன்பனிக்காலமும்,


ஆ) சிறு பொழுது - யாமம்
கருப்பொருள்கள்
1. தெய்வம் - சேயோன்
2. உணவு - ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி, கிழங்கு
3. விலங்கு - புலி, யானை, கரடி, பன்றி
4. மரம் - அகில், ஆரம், தேக்கு, வேங்கை
5. பறவை - கிளி, மயில்
6. பறை - முருகியம், தொண்டகப் பறை
7. தொழில் - தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை விதைத்தல்,
வேட்டையாடுதல்
8. யாழ் - குறிஞ்சி யாழ்
9. பண் - குறிஞ்சிப் பண்
10. ஊர் - சிறுகுடி, குறிச்சி
11. நீர் - அருவி நீர், சுனை நீர்
12. மலர் - காந்தள், வேங்கை , குறிஞ்சி
உரிப்பொருள்
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)

மருதம் திணை

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது.


இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர்.
மருத நிலத்தலைவர்கள் வேந்தன் மள்ளர் மகிழ்னன் ஊரன் கிழவன்
என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும்
அழைக்கப்பட்டனர்.
மருத நிலத்தின் கடவுள் இந்திரன்.

பொழுது - அ) பெரும் பொழுது - ஆண்டு முழுதும், ஆ) சிறுபொழுது -


வைகறை, விடியல்
கருப்பொருள்கள்
1. தெய்வம் - இந்திரன் (வேந்தன்)
2. உணவு - செந்நெல், கரும்பு
3. விலங்கு - எருமை, நீர்நாய்
4. மரம் - வஞ்சி, காஞ்சி, மருதம்
5. பறவை - தாரா, நீர்க்கோழி
6. பறை - மணமுழவு, நெல்லரி கிணை
7. தொழில் - விதைத்தல், விளைத்தல்
8. யாழ் - மருத யாழ்
9. பண் - மருதப் பண்
10. ஊர் - ஊர்கள்
11. நீர் - ஆற்றுநீர், பொய்கை நீர்
12. மலர் - தாமரை, கழுநீர்
உரிப்பொருள்
ஊடலும் ஊடல் நிமித்தமும்.

நெய்தல் திணை

கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன.


"வருணன் மேய பெருமணல் உலகமும்"
எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது.

நெய்தல் மலரில் உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில்


பூக்கும் நன்ன ீர் மலர் என இருவகை உண்டு.

பொழுது - அ) பெரும் பொழுது - ஆண்டு முழுதும், ஆ) சிறுபொழுது –


எற்பாடு
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும்
பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும்
நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
கருப்பொருள்கள்
1. தெய்வம் - வருணன்
2. உணவு - மீ ன், உப்பு
3. விலங்கு - உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும் எருது),
சுறா
4. மரம் - புன்னை , ஞாழல், கண்டல்
5. பறவை - அன்றில், அன்னம்
6. பறை - மீ ன்கோட் பறை
7. தொழில் - மீ ன் பிடித்தல், மீ ன் உலர்த்தல், உப்பு விளைவித்தல்,
நாவாய் ஓட்டல்
8. யாழ் - நெய்தல் யாழ்
9. பண் - நெய்தல் பண்
10. ஊர் - பட்டினம், பாக்கம்
11. நீர் - உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு
12. மலர் - நெய்தல், கைதை (தாழை)
உரிப்பொருள்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலைத் திணை
 குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ்
நிலப்பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல்,
மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப
மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும்.
பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர்.
பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர் எனப்பட்டனர்.
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து
நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"
- சிலப்பதிகாரம்
பொழுது - அ) பெரும்பொழுது - வேனிற் காலம், பின்பனிக் காலம்,
ஆ) சிறுபொழுது - நண்பகல்
கருப்பொருள்கள்
1. தெய்வம் – கொற்றவை
2. உணவு - வழிப்போக்கரிடம் திருடிய உணவு
3. விலங்கு - யானை, புலி, செந்நாய்
4. மரம் - இருப்பை, உழிஞை
5. பறவை - கழுகு, பருந்து, புறா
6. பறை - சூறை கோட் பறை
7. தொழில் - வழிப்பறி, சூறையாடல்
8. யாழ் - பாலை யாழ்
9. பண் - பாலைப் பண
10. ஊர் - பறந்தலை
11. நீர் - கூவல் (கிணறு, குழி)
12. மலர் - மரா, குரா
உரிப்பொருள்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

ஐந்திணை இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக இல்லாது,


மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன.
கேள்வி 1 ஆ

களவு, கற்பு என்ற இரு நிலைகளிலும் தலைவன், தலைவி ஆகிய


இருவருக்கும் உற்ற துணையாய் இருந்து உதவுபவள் தோழியே
ஆவாள். தலைவியின் உயிர்க்குயிராய் இருக்கும் தோழி காதலுக்கு
உதவுவதிலும்,
இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்வதிலும், தலைவனைத்
திருமணத்திற்கு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று
கூறுவதிலும் களவியல் நிலையில் உதவியாக இருப்பாள்.
கிடைத்தற்கு அரியவளாகக் களவுக் காலத்தில் இருந்த தலைவி,
திருமணத்திற்குப் பின் எளியவளாய் ஆனபின் அவளிடம் அன்பு
காட்டுவதைக் குறைத்து விட்டாய் என்று தோழி கடிந்து கொள்ளுதலும்
உண்டு. திருமணத்திற்குப் பிறகு தலைவியின் அழகை முழுமையாகத்
துய்த்த தலைவன் இன்னொரு பெண்ணைத் தேடிப் பிரிதலும் உண்டு.
இது பரத்தையிற் பிரிவு என்று அழைக்கப் பெறும். இத்தகு நேரங்களில்
தலைவனுக்கு அறிவுரை கூறி அவனை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும்
தோழிக்கு உண்டு.

களவு-வாழ்க்கை என்பது திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கை.


இதில் தோழியின் பங்கை 7 வகை எனவும், 32 வகை எனவும்
தொல்காப்பியம் தொகுத்துக் காட்டுகிறது.

களவு வாழ்க்கையின் ஒரு பகுதி கொண்டுதலைக் கழிதல். தலைவன்


தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்காகத் தன் ஊருக்கு
அழைத்துச் செல்வான்.

இது தலைவியின் பெற்றோர் தலைவியைத் தலைவனுக்கு மணம்


முடித்துத் தர இசையாதபோது நிகழும். இதில் தோழியின் பங்கு என்ன
என்பதையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

இச் செயலால் நிகழவிருக்கும் துன்பங்களை எடுத்துரைத்தல்,


கொண்டுசெல் என ஒப்புதல் வழங்குதல், தலைவியை
அனுப்பிவைத்தல், அனுப்பிய பின் வருந்துதல், தாயின் வருத்தம்
கண்டு தலைவியை மீ ட்டுக்கொள்ளுதல், தாயைத் தேற்றுதல், - எனத்
தோழியின் பங்கு அமையும்.

கற்பு-வாழ்க்கை என்பது திருமணத்துக்குப் பின்னர் வாழும் கணவன்


மனைவியரின் உறவு வாழ்க்கை. இதில் தோழியின் பங்கு இன்னது
எனத் தொல்காப்பியத்தில் சொல்லப்படுபவை இவை.

பொருள ீட்டி வந்த தலைவனைச் சிறப்பித்தல், முன்பு தலைவியைப்


பிரிந்தபோது அவனைக் குறை கூறியதைச் சொல்லி வருந்துதல்,
தலைவனை மீ ட்டுக் கொடுத்த தெய்வத்துக்குக் கடன் செலுத்துதல்,
பொருளுடன் மீ ண்டதால் அவன் குற்றங்களை மறத்தல், அகத்துக்குள்
அடங்காத அவன் ஒழுக்கத்தைப் பாராட்டல், தலைவியை அவனிடம்
ஒப்படைத்தல், தலைவனிடம் வணக்கமாகப் பேசல், தலைவியை
அழைத்துக்கொண்டு வெளியிடம் சென்று விளையாடுமாறு கூறுதல்,
புதல்வனைப் பிரிந்து தலைவனை நல்வழிப் படுத்தல்.

அவன் பிரிவால் இழந்த தலைவியின் அழகினை மீ ட்டுத் தா எனல்,


தலைவியைப் பிரிந்ததற்கு அவன் நாணும்போது பக்குவமாகப் பேசல்,
அவன் தலைவியைக் கைவிடேன் எனச் சூளுற்றதை (சத்தியம்
செய்ததை) நினைவூட்டல், பெரியோர் (தலைவன்) ஒழுக்கம் பெரிது
எனத் தலைவியைத் தேற்றல், தலைவியின் புலவியைத் தணித்தல்,
புலவி பெரிதாகி ஊடலாக மாறியபோது (உணர்ப்புவயின் வாரா ஊடல்)
தலைவன் பக்கமாகப் பேசல்.

களவு ஒழுக்கத்தின்போது தலைவி நடந்துகொண்டதை அவளுக்கு


நினைவூட்டல், பாணர், கூத்தர், விறலியர் முதலான வாயில்கள்
தலைவன் பக்கம் பேசும்போது தலைவி பக்கமாகப் பேசல்,
தலைவியை விட்டு விலகிச் சென்ற தலைவனைக்
கண்ணோட்டமின்றித் திட்டுதல், தலைவன் நெடுந்தொலைவு பிரியும்
காலத்து மரபு இஃது என விளக்குதல் முதலானவை தோழியின் பங்கு.

* மதியுடம் படுதல்

* குறை நயத்தல்
* ஆற்றுவித்தல்

* அறத்தொடு நிற்றல்

* தோழி - தலைவி தொடர்பு நெருக்கம்

* எம் எனத் தலைவியையும் உடம்படுத்திக் கூறுதல்

* தலைவியின் செயலைத் தன் செயலாகக் கூறுதல்

மதியுடம் படுதல்

களவியலின் முதற்கட்டத்திலேயே தோழியின் நுண்ணறிவு


செயல்படுவதை இப்பகுதி காட்டுகிறது. தோழியின் செயல் இன்னும்
தொடங்கவில்லை. இருவரின் உள்ளமும் பொருந்தியுள்ளதா?
இருவரும் பொருத்தமானவரா? தலைவனின் அன்பு நிலையாக
இருக்குமா? என்றெல்லாம் தோழி ஆராய்வதையே இத்தொடக்கம்
காட்டுகிறது.

இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைக் கூடி இன்புற்ற தலைவன்


தோழியின் துணை இல்லாமல் அவளை நெருங்குதல் அரிது என்பதை
உணர்கிறான். எனவே, தோழியிடம் சென்று நயவுரைகள் கூறி அவளது
உள்ளத்தை நிறையச் செய்து தனக்குத் தலைவியை உடன்படுத்தித்
தருமாறுவேண்டுகிறான்.

தலைவி அவனோடு களவுப் புணர்ச்சியில் ஈடுபட்டு விட்டாள்


என்பதைத் தோழி,நன்றாக,உணர்கிறாள்.
தலைவியின் உள்ளத்தை அவள் அறிந்து கொண்ட நிலையைக்
குறிப்பால்அகஇலக்கியம்உணர்த்துகிறது.

குறை நயத்தல்
தலைவனது தகுதியைத் தோழி ஆராய்ந்து அறிகின்றாள். அவன்
தலைவிக்கு ஏற்றவன் என்பதை அறிந்து அவன் தலைவியை நெருங்க
அனுமதிக்கிறாள். தலைவியைக் கூடுவதற்குத் தோழியின் உதவியை
வேண்டுகிறான். தலைவனுக்காகத் தோழி சென்று தலைவியை
வேண்டுகிறாள். தலைவி, எளிதில் இடங்கொடுக்காமல் மறுக்கிறாள்.

கெஞ்ச வேண்டிய தலைவி மிஞ்சுவதும், மிஞ்ச வேண்டிய தோழி


கெஞ்சுவதுமாகஇக்கட்டம்அமைகிறது.

தலைவன் தலைவி களவு வாழ்வில் தோழியின் செயல்திறன்


இத்துறையில் தான் தொடங்குகிறது. தலைவி தன் களவை நேராகக்
கூறித் தோழியின் உதவியை வேண்டவில்லை. மாறாக மறைக்கிறான்.
தலைவியின் காதலை வெளிப்படையாகவே தலைவியிடம்
எடுத்துரைக்கிறாள். தலைவன் தந்த தழையாடையை ஏற்க
வேண்டுகிறாள். அவனுடைய பண்புடைமை, அன்புடைமை
ஆகியவற்றைக் கூறித் தலைவியை இணங்கச் செய்கிறாள்.

ஆற்றுவித்தல்

தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து


செல்வான். அவனைக் காணாமையால் தலைவி பெரிதும் பிரிவுத்
துயரால்வருந்துவாள்.

‘மனத்தில் உயர்ந்த குறிக்கோளும், செயலூக்கமும், தலைமைப்


பண்புகளும் ஆளுமையும் வளர்ச்சியடையும் காலகட்டத்தில்
இருவருக்கும் பிரிவு என்பது இன்னாதாகி விடுகின்றது’ 

என்று தெ. கலியாண சுந்தரம் கூறியுள்ளார். அப்போதெல்லாம் தோழி


தான் தலைவிக்கு மனம் பொருந்தும் படியான சொற்களைக் கூறி
ஆறுதல்அடையச்செய்வாள்.
தலைவியின் துன்பக் கண்ண ீரைத் துடைக்கும் கரம்
தோழியுடையதாகத் தான்இருக்கும்.
இதனை,

களவை விட கற்பில் தோழி ஆற்றுவிக்கும் பாடல்களே சங்க


இலக்கியங்களில் மிகுதியாக உள்ளன. தலைவி கூற்றாக வரும் 559
பாடல்களில் ஏறத்தாழ 380 பாடல்கள் தலைவி தோழியிடம் தன்
ஆற்றாமையைக் கூறி வருந்தும் பாடல்களாக உள்ளன. இதனால்
தோழிக்கும் தலைவிக்கும் உள்ள உறவு நெருக்கம் புலப்படும்..

கற்பில் தலைவி தலைவனின் செலவுக் குறிப்பறிந்து ஆற்றாவிடத்தும்,


பொருள்வயிற் பிரிந்த விடத்தும், சுரத்தின் வெம்மையைக் கருதி
இடைநின்று மீ ள்வாரே எனத் தலைவி கவன்றவிடத்தும் தோழி
ஆற்றுவிக்கின்றாள். பரத்தையிடமிருந்து தலைவன் திரும்பி வந்து
வாயில் வேண்டிய சமையத்திலும் அவன் பரத்தமை
ஒழுக்கமுடையவன் அல்லன் என்று கூறித் தலைவியைத்
தெளிவிப்பவளும்தோழிதான்.

அறத்தொடு நிற்றல்

அகப்பொருள் இலக்கியத்துறையில் ஒரு திருப்புமுனையாக அமைவது


அறத்தொடு நிற்றல் என்னும் துறை. சங்க இலக்கியத்தில் இத்துறை
களவைக் கற்பாக மாற்றும் முதன்மை வாய்ந்தது.

அறம் என்பது கற்பு. அறத்தொடு நிற்றல் என்பது ‘கற்பைத்


தன்னிலையினின்றும் தவறாமல் நிலைநிறுத்துதல்’ என்று
பொருள்படும். ‘அறம் எனப்படுவது பல பண்புகளையும் தழுவிய
பொதுச்செயல் என்றாலும் ஈண்டு பெண்ணுக்குரிய முதல் பண்பான
கற்பையே குறிக்கும். கற்பென்னும் கடைப்பிடியில் நின்று
களவொழுக்கத்தைப் பெற்றோர்க்கு வெளிப்படுத்துதல் என்பது
இத்துறையின் பொருளாகும். பெற்றோர்க்கு அறிவித்தல் என்பது
இத்துறையின் பொருளாகும். பெற்றோர்க்கு அறிவித்தல் என்பது
தோழியின் நோக்கம் அன்று. தலைவி ஏற்கனவே கற்பு நெறிப்பட்டு
விட்டாள் என்பதை முதன்மையாக வெளிப்படுத்துவதே அவள்
நோக்கம்’

என்பர் வ. சுப. மாணிக்கனார்.

தோழி - தலைவி தொடர்பு நெருக்கம்

இளம்பருவந்தொட்டே தலைவியும் தோழியும் ஈருடல் - ஓருயிர்


எனப் பழகி வந்தனர். அதனால் தான் தனிநிலைக் காதலிலும்
பொதுநிலையாகப் பேசிக் கொள்கின்றனர். அவர்கள் தலைவனுடன்
கொண்டிருக்கும் உறவைப் பிறர் ஐயுறும் அளவுக்கு அவர்களின்
தொடர்பு நெருக்கம் அமைந்துள்ளது.

தலைவியும் பேசும் போது சில இடங்களில் தோழியை


உளப்படுத்தியே தன் நெருக்கத்தை வெளியிடுகிறாள். தனக்கே உரிய
காதலனைத் தோழிக்கும் உரிமைப்படுத்தி,

‘இனிய செய்த நங்காதலர்


இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே’ (9)

என்று பேசுகிறாள். தொழில், பண்பு போன்றவற்றிலும் இந்நெருக்கம்


காண முடிகிறது.

தோழி தன்னைத் தலைவியாகக் கூறல்

தோழி, தன்னைத் தலைவியாகப் பாவித்து மற்றவர்களிடம்


பேசுமிடமும் உண்டு. இந்நிலையில் மூன்று கூறுகள்
காணப்படுகின்றன.

தலைவியின் உறுப்பு நலனைத் தன்னுடையதாக்கிக் கூறுதல்


தலைவியின் வருத்தம், மேனி நலன் வாடுதல், காம மிகுதி, பசலை
படர்தல் ஆகியவற்றைத் தனதாக்கிக் கூறுகிறாள் தோழி.
இவ்வமைப்பு குறிஞ்சித் திணையில் தலைவனிடம்
இற்செறிப்புணர்த்தி வரைவு கடாவும் நிலையில் மிகுதியாகக்
காணப்படுகிறது.

தலைவன் தலைவியிடம் நிகழ்த்திய நிகழ்ச்சிகளைத் தோழி


தன்னிடத்து நிகழ்த்தியதாகப் படைத்துக் கூறுதல் இப்பகுதியில்
அமையும்.

இவ்வாறு பண்பில்லாத செய்தி கூறலைத் தோழி அறமெனக்


கருதுகிறாள். பெரும்பாலும் குறைநயத்தலில் தோழி தலைவியிடம்
கூறும் கூற்றில்தான் இப்பண்பில் செய்தி இடம் பெறுகிறது. பண்பே
கொள்கலமான தோழி பண்பற்ற இச்செயலைத் தன்னுரிமையாக்கிக்
கூறுவது ஏதோ ஒரு காரணம் பற்றியாதல் வேண்டும் எனக்
கருதலாம்.

தலைவியின் உள்ளத்தை அறிய தோழி கையாளும் உத்தி இது


என்பர்.

கேள்வி 2 அ, ஆ
செம்மை,சிறுமை,சேய்மை,தீமை,வெம்மை,புதுமை,மென்மை,மேன்மை,திண்மை,உ
ண்மை,நுண்மை,வெண்மை,கருமை,பொன்மை,பசுமை,பெருமை,அணிமை,நன்மை,
தண்மை,பழமை,வன்மை,கீ ழ்மை,நொய்மை,இன்மை,பருமை இவை போன்ற
சொற்களில் உள்ள ஈற்றெழுத்து கெடுதலும்,சிறு,பெரு போன்ற சொற்களில்
இடையில் அமைந்த இடை உகரம் ஆனது இ என மாறுவதும்,நிலைமொழியில்
முதலெழுத்துக் குறில் நெடிலாவதும்,முதலெழுத்தில் அமைந்த அ என்ற எழுத்து
ஐ என மாறுவதும், தன் ஒற்றெழுத்தே தோன்றுவதும்,வருமொழிக்கு முன் நின்ற
மெல்லினமே வேறு ஒரு மெல்லினமாக மாறுவதும்,வல்லினத்துக்கு இனமான
ங்,ஞ்,ந்,ண்,ம்,ன் ஆகிய எழுத்துக்கள் தோன்றுவதும்,சில வகை யில் ஓர் எழுத்து
கெடுதலும் பண்பு பெயர்ப் புணர்ச்சிக்கு இயல்பாகும்.
பொருளின் தன்மை எத்தகையது என்று கூறும் பெயர்கள்
பண்புப்பெயர்கள் ஆகும். பண்பானது நிறம், சுவை, அளவு, வடிவம்,
குணம் அல்லது பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிறக்கும்.

சான்று:
வெண்சங்கு - வெண்மை + சங்கு -நிறப்பண்பைக் குறித்த பண்புப்பெயர்.
புளிக்குழம்பு - புளிப்பு + குழம்பு - சுவைப்பண்பைக் குறித்த
பண்புப்பெயர்.
சதுரக்காகிதம் - சதுரம் + காகிதம் -வடிவப் பண்பைக் குறித்த
பண்புப்பெயர்.
நீள்வானம் - நீளம் + வானம் - அளவுப் பண்பைக் குறித்த பண்புப்பெயர்.
இன்சொல் - இனிமை + சொல் - குணப் பண்பைக் குறித்த
பண்புப்பெயர்.

எடுத்துக்காட்டுகள்

சிறுமை+அர் = சிறியர்

பெருமை+அர் = பெரியர்

பசுமை+கிளி = பைங்கிளி

வெறுமை+இலை=வெற்றிலை

செம்மை+கடல் = செங்கடல்

மையீற்றுப் பண்புப் பெயர்கள் நிலைமொழியாக நின்று,


வருமொழியோடு புணரும் போது அடையும் மாற்றங்களைக்
கீ ழ்வருமாறு அறிந்து கொள்க

நல்லன் = நன்மை + அன்

வெண்பட்டு = வெண்மை + பட்டு

வெண்குடை = வெண்மை + குடை


செம்மலர் = செம்மை + மலர்

இவை மை விகுதி மட்டும் கெட்டுப் புணர்ந்தன

பெரியன் = பெருமை + அன்

சிறியன் = சிறுமை + அன்

பண்புப் பகுதிகளின் மை விகுதி கெடுவதோடு, இடையில் உள்ள


உகரம் (ரு, று) இகரமாகத் (ரி, றி) திரிந்துள்ளன

மூதூர் = முதுமை + ஊர்

பாசி = பசுமை + இ

முதுமை என்பதன் ஈறு (மை) போய், ஆதி (முதல்) நீண்டு மூதூர்


என்று ஆயிற்று.

பசுமை என்பதில் ஈறு போய் ஆதி நீண்டு பாசி என ஆயிற்று

பைங்கொடி = பசுமை + கொடி

பைந்தார் = பசுமை + தார்

இவற்றுள் பசுமை என்பதன் ஈறு போய் முதல் நின்ற அகரம் (ப)


ஐகாரமாய்த் திரிந்து (பை) வருமொழியின் முதல் எழுத்து
இனவெழுத்தாய் (ங், ந்) மெய் மிகுந்து புணர்ந்துள்ளன

சிற்றூர் = சிறுமை + ஊர்


வெற்றிலை = வெறுமை + இலை

இவற்றின் ஈறு போய் (மை) நடுவில் உள்ள ஒற்று இரட்டித்துப்


புணர்ந்துள்ளன

வெவ்வேல் = வெம்மை + வேல்

வெந்நீர் = வெம்மை + நீர்

இவற்றில், வெம்மை என்பதன் ஈறு (மை) போய், முன் ஒற்றாகிய மகர


வொற்று வகர ஒற்றாகவும், ‘ந’கர ஒற்றாகவும் (வ், ந்) திரிந்து
முடிந்தன

செங்கோல் = செம்மை + கோல்

செந்தமிழ் = செம்மை + தமிழ்

இவற்றில், செம்மை என்பதன் ஈறு (மை) போய், வருமொழி முதல்


எழுத்துக்கு இனவெழுத்துகளான (ங், ந்) என்பன மிக்குப் புணர்ந்துள்ளன

மேற்காட்டிய, மையீற்றுப் பண்புப் பெயர்கள் புணர்ச்சியில் அடையும்


மாற்றங்களைக் கீ ழ்க்காணும் நூற்பா விளக்குகின்றது.

"ஈறுபோதல் ; இடை உகரம் இய்யாதல் ;

ஆதி நீடல் ; அடியகரம் ஐஆதல் ;

தன்னொற்று இரட்டல் ; முன்னின்ற மெய் திரிதல் ;

இனம்மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே" -(நன்னூல் நூற்பா - 136)


மேற்காட்டிய நூற்பாவின் அடிப்படையில் கீ ழ்க்காணும் முறையில்,
மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சியை மீ ண்டும் நினைவு கூர்க.

விதி எடுத்துக்காட்டு

1. ஈறு போதல் - வெண்மை + குடை = வெண்குடை

2. இடை உகரம் இய்யாதல் - பெருமை + அன் = பெரியன்

3. ஆதி நீடல் - பெருமை + ஊர் = பேரூர்

4. அடியகரம் ஐ ஆதல் - பசுமை + பொழில்= பைம்பொழில்

5. தன்னொற்று இரட்டல் - சிறுமை + ஊர் = சிற்றூர்

உடலும் உயிரும்:

தமிழ் + ஆசிரியர் = தமிழாசிரியர்

கடவுள் + அருள் = கடவுளருள்

பொருள் + அனைத்தும் = பொருளனைத்தும்

நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாக இருந்து,


வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவை
தாமே ஒன்று சேர்ந்து விடும்.

இதற்குரிய விதி,

"உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே" -(நன்னூல் நூற்பா - 204)

1. “ஈறுபோதல்” - விளக்கம்:
செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை,
மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை, வெண்மை,
கருமை, பொன்மை, பசுமை, பெருமை, அணிமை, நன்மை,
தண்மை, பழமை, வன்மை, கீ ழ்மை, நொய்மை, இன்மை, பருமை
இவை போன்ற சொற்களில் உள்ள ஈற்றெழுத்து (மை)கெடுதலை
(மறைதலை) ஈறுபோதல் என்ற அடி விளக்குகின்றது.

எடுத்துக்காட்டுகள்
செம்மை + மலர் = செம்மலர்
வெண்மை + பட்டு = வெண்பட்டு
வெண்மை + குடை = வெண்குடை

2. “இடை உகர இய்யாதல்”


பெரியன் என்ற சொல்லை பிரித்தால், பெருமை + அன் என்று
பிரியும். இதில் பெரு என்பதில் உள்ள ருவைப் பிரித்தால் (ர் + உ
= ரு எனப் பிரியும்;) பண்புப் பெயர் புணர்ச்சியில், அந்த உகரம் (உ
என்ற எழுத்து) மாற்றம் அடைந்து இகரமாகத் (ர் + இ = ரி என்ற
எழுத்தாக) திரியும். (பெரு - பெரி) எனத் திரியும். இவ்வாறு
மாற்றம் அடைவதைத் தான் இடை உகரம் இய்யாதல் என்ற வரி
உணர்த்துகின்றது.
பெரியன் = பெருமை + அன்
“ஈறுபோதல்” பெருமை + அன்பெரு + அன்
-பெரு (ர் +உ = ரு)
-“இடை உகரம் இய்யாதல்” (ர் + இ = ரி)
-பெரி + அன்
-“இ, ஈ, ஐ வழி யவ்வும்” பெரி + ய் + அன்
-“உடல் மேல் உயிர் வந்து ஒன்று வந்து இயல்பே” ய் + அ = ய
-பெரியன் என்றானது.
பெரியன் = பெருமை + அன்
சிறியன் = சிறுமை + அன்
கரியன் = கருமை + அன்
3. “ஆதி நீடல்”

‘ஆதி’ என்றால், ‘முதல்’ என்று பொருள். அதாவது நிலைமொழி


ஈற்றில் உள்ள முதல் எழுத்தான குறில் எழுத்து நீண்டு நெடில்
எழுத்தாக மாற்றம் அடைவதையே “ஆதி நீடல்” என்ற தொடர்
விளக்குகின்றது.
எடுத்துக்காட்டு:
மூதூர் = முதுமை + ஊர்
இனி இது புணரும் முறையைக் காண்போம்.
முதலில் “ஈறுபோதல்” என்ற விதிப்படி நிலைமொழி முதுமை
என்ற சொல்லில் உள்ள மை என்ற ஈற்றெழுத்தை நீக்கவேண்டும்.
முதுமை ஊர்
நீக்கிய நிலையில்
முது + ஊர் என்று இருக்கும்.
அடுத்து “ஆதி நீடல்” என்ற விதிப்படி நிலைமொழி முதல்
எழுத்தான மு என்ற குறில் எழுத்தை மூ என்று நெடிலாக்குதல்
வேண்டும். அவ்வாறு மாற்றிய நிலையில் மூது + ஊர் என்று
இருக்கும்.
பின்னர் “உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற
விதி;ப்படி நிலைமொழி ஈற்றில் உள்ள
முது ஊர்
(த் + உ) என்பதில் உள்ள உகரம் நீங்கும். அவ்வாறு நீங்கிய
நிலையில்,
மூத் + ஊர் என்று இருக்கும். இறுதியாக “உடல் மேல் உயிர்
வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதியைப் பயன்படுத்தி (த் +
ஊ = தூ) என்று மாற்றவேண்டும். இதுவே மூதூர் என்றாயிற்று.
இதுவே மூதூர் என்றாயிற்று.
எடுத்துகாட்டுகள்
1. பாசி = பசுமை + இ
2. பேரூர் = பெருமை + ஊர்
3. காரிருள் = கருமை + இருள்
“அடி அகரம் ஐ ஆதல்”
விளக்கம்:
பசுமை + தமிழ் = பைந்தமிழ்
இதில் நிலைமொழியின் முதல் எழுத்தான ப என்ற எழுத்து பை என்ற
எழுத்தாக மாறி உள்ளமையை நோக்குக.

அடி அகரம் என்றால் ப் + அ = ப அதாவது ‘ப’ என்பதில் உள்ள ‘அ’


என்ற எழுத்து ப் + ஐ = பை என ஐ என்ற எழுத்தாக திரிதலைத் தான்
அடி அகரம் ஐ ஆதல் என்ற தொடர் விளக்குகின்றது.

எழுதும் முறை:
பைந்தமிழ் = பசுமை + தமிழ்
முதலில் “ஈறு போதல்” என்ற விதிப்படி மையை நீக்கியவுடன்
பசு + தமிழ் என்று இருக்கும்.

அதன் பின் “அடி அகரம் ஐ ஆதல்” என்ற விதிப்படி ப என்ற எழுத்தில்


உள்ள அ என்ற எழுத்தை ஐ என்ற எழுத்தாக மாற்றியதன் பிறகு
பைசு + தமிழ் என்று இருக்கும்.
இங்கு ஒன்றை நோக்குங்கள் நிலைமொழி ஈற்றெழுத்து “சு”
என்பதாகும். ஆனால் வருமொழி முதல் எழுத்து “த” என்ற எழுத்தாகும்.
நம்முடைய இலக்கண விதிப்படி இங்குள்ள சுவைப் பிரித்தால் (ச் + உ
= சு) என மாறும் ஆனால் வருமொழி முதலிலும் மெய்யெழுத்தாகிய த
அதாவது (த் + அ த) என்ற எழுத்து இருப்பதால், இவை இரண்டும்
இணைவதற்கான வாய்ப்பில்லை என்பதனை அறிந்த இலக்கண நூலார்
இங்கு “இனையவும்” என்ற விதியைப் பயன்படுத்துகின்றார்.

“இனையவும்” என்றால், தேவையற்ற எழுத்துக்களை நீக்கிவிடுதல்


ஆகும். அந்த விதிப்படி நிலைமொழி சு என்ற எழுத்தை முற்றிலுமாக
நாம் நீக்கிவிடலாம். அவ்வாறு நீக்கிய நிலையில்
பை + தமிழ் என்று இருக்கும்.

இறுதியாக வருமொழி த என்ற எழுத்துக்கு இன எழுத்தான ந் என்ற


மெய் எழுத்தைச் சேர்த்து
பைந்தமிழ் என்று உருவாக்கியுள்ளனர்.
பார்தத்தீர்களா! நம் தமிழ் அன்னை மொழியில் பயின்றுள்ள
ரகசியங்களை!
இந்த பைந்தமிழ் என்ற ஒரே சொல்லில் நாம் “ஈறுபோதல்”, “அடி
அகரம் ஐ ஆதல்”, “இனமிகல்”, “இனையவும்” என்ற பண்புப் பெயர்
புணர்ச்சியின் நான்கு விதிகள்.

எழுதும் முறை:
பைந்தமிழ் = பசுமை + தமிழ்
“ஈறுபோதல்”
பசு + தமிழ்
“அடி அகரம் ஐ ஆதல்”
பைசு + தமிழ்
“இனையவும்”
பைசு + தமிழ்
பை தமிழ்
“இனம் மிகல்”
பைந் தமிழ்
பைந்தமிழ் என்று ஆனது. சுலபமாக உள்ளதா?
5. இனி “இன எழுத்துகள்” எவை என்பதனைக் காணலாம்.

உயிர் எழுத்துகளுள் குறில் எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் அதன்


நெடில் எழுத்துக்களே இன எழுத்துகள் ஆகும்.

அதாவது அ,ஆ இ,ஈ உ,ஊ எ,ஏ ஒ,ஓ என்று அமையும்.


ஐ என்ற எழுத்திற்கு இ என்ற எழுத்தும் ஒள என்ற எழுத்திற்கு உ
என்ற எழுத்தும் இனஎழுத்துகளாகும். ஐ,இ ஒள,உ

இனி மெய் எழுத்துகளுள் வல்லின மெய்களுக்கு மெல்லின மெய்


எழுத்துகள் இன எழுத்துகளாகும்.
க,ங ச,ஞ ட,ண த,ந ப,ம ற,ன என்பவை இன எழுத்தகளாக அமையும்.
இந்த விளக்கத்தினை நாம் எதனால் இங்கு பார்த்தோம் என்றால்
“இனம் மிகல்” என்ற ஒரு செய்தி இங்கு சுட்டப்பட்டுள்ளதை
விளக்குவதற்காக.

சில எடுத்துக்காட்டுகள்:
1. பைங்கொடி
2. பைந்தார்
அடுத்ததாக நாம் காண இருப்பது
“தன் ஒற்று இரட்டல்” என்பது.
• இந்த விதியை நாம் ஏற்கனவே “தனிக்குறில் முன் ஒற்று உயிர் வர
இரட்டும்” என்ற நூற்பாவில் விளக்கமாகக் கண்டுள்ளோம்.
• பண்புத் தொகையில் அவை எவ்வாறு அமைகின்றது என்பதை இனி
விளக்கமாகக் காணலாம்.
எடுத்துக்காட்டு:
சிற்றூர் = சிறுமை + ஊர்

முதல் விதி “ஈறு போதல்” என்பதை நீங்கள் உடனடியாகக் கூறுவதை


என்னால் கேட்க முடிகின்றது. ஆம் அதே தான். “ஈறுபோதல்” விதிப்படி
சிறுமை + ஊர்
சிறு + ஊர்
அடுத்து
“முற்றும் அற்று ஓரோ வழி” என்ற விதிப்படி, (ஏனெனில் தனிக்குறிலை
அடுத்து வரும் று என்ற எழுத்து முற்றியலுகரமாகும் என்பதனை
முன்னரே கண்டோம்.)
சிறு ஊர்
(ற்+உ)
சிற் + ஊர்

இனி அடுத்து “தன்ஒன்று இரட்டல்” அதாவது தனிக்குறிலை அடுத்து


ஒரு மெய் எழுத்தும் அதனை அடுத்து ஒரு உயிர் எழுத்தும் வந்தால்
வந்த மெய் எழுத்து இரண்டு முறை எழுதப்படும்
என்பதற்கிணங்க,
சிற் + ற் + ஊர் என்றாயிற்று.

பின்னர் “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற


விதிப்படி இரண்டாவதாக உள்ள ற் என்ற மெய்யுடன் வருமொழி
முதல் எழுத்தாகிய ஊ சேர்ந்து றூ என்றானது.
சிற் + ற் + ஊர் (ற்+ஊ= றூ)
அதுவே இறுதியாக சிற்றூர் என்று புணர்ந்தது(சேர்ந்தது).
தேர்வில் எழுதும் முறை:
சிற்றூர் = சிறுமை +ஊர்
“ஈறு போதல்”
சிறுமை + ஊர்
சிறு ஊர்
“முற்றும் அற்று ஓரோ வழி”
சிறு ஊர்
(ற்+உ)
சிற் + ஊர்

“தன்னொற்றிரட்டல்”
சிற் + ற்+ ஊர் (ற்+ஊ= றூ)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” சிற்றூர். என மாற்றம்
அடைந்தது.
சில எடுத்துக்காட்டுகள்:
1. வெற்றிலை
2. வெந்நீர்
3. வெவ்வேல்

6. “முன்னின்ற மெய் திரிதல்”

விளக்கம்

நிலைமொழியின் ஈற்றில் உள்ள மெய் எழுத்து வருமொழி முதல்


மெய் எழுத்துக்குக்கு இனமான எழுத்தாக மாற்றம் அடைதல்
என்பதாகும்.

எடுத்துக்காட்டு:
செங்கோல் = செம்மை + கோல்
• முதல் விதி “ஈறுபோதல்” என்ற அடிப்படையில் மையை நீக்குதல்
செம்மை + கோல்
செம் + கோல் என்று இருக்கும்
• அடுத்து “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி,
செம் + கோல் என்பதில் உள்ள ம் என்ற மெய் எழுத்து வருமொழி (க் +
ஓ கோ) அதாவது க் என்ற மெய் எழுத்திற்கு இனமான ங் என்ற மெய்
எழுத்தாகத் திரிந்தது(மாறியது)
தேர்வில் எழுதும் முறை:
செங்கோல் = செம்மை + கோல்
“ஈறுபோதல்”
செம்மை + கோல்
செம் + கோல்
“முன்னின்ற மெய் திரிதல்”
செம் கோல்
செங் கோல்
செங்கோல் என்று மாறியது.
மேற்கோள் நூல்கள்
1. HBTL3303 TATABAHASA TAMIL III _vApr20
2. https://ta.wikipedia.org/wiki/
3. http://www.tamilvu.org/courses/degree/d011/d0112/html/d01123l1.htm
4. http://www.shanlaxjournals.in/pdf/TS/V1N1/TS_V1_N1_010.pdf

You might also like