You are on page 1of 147

அலகு - I

சிறப்புப் பாயிரம், பொதுப் பாயிரம்

சிறப்புப் பாயிரம்

மலர் தலை உலகின் மல்கு இருள் அகல

இலகு ஒளி பரப்பி யாவை உம் விளக்கும்

பரிதி இன் ஒரு தான் ஆகி முதல் ஈறு

ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்து

அற்புத மூர்த்தி தன் அலர்தரு தன்மையின்

மன இருள் இரிய மாண் பொருள் முழுவது உம்

முனிவு அற அருளிய மூ அறு மொழி உள் உம்

குண கடல் குமரி குடகம் வேங்கடம்

எனும் நான்கு எல்லையின் இரும் தமிழ் கடல் உள்

அரும் பொருள் ஐந்து ஐ உம் யாவர் உம் உணர

தொகை வகை விரியின் தருக என துன்னார்

இகல் அற நூறி இரு நிலம் முழுவது உம்

தனது என கோலி தன் மத வாரணம்

திசை தொறு உம் நிறுவிய திறல் உறு தொல் சீர்

கரும் கழல் வெண் குடை கார் நிகர் வண் கை

திருந்திய செங்கோல் சீயகங்கன்

அரும் கலை விநோதன் அமரா பரணன்

மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின்

வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன்

பொன் மதில் சனகை சன்மதி முனி அருள்

பன்ன அரும் சிறப்பின் பவணந்தி

என்னும் நாமத்து இரும் தவத்தோனே

Page - 1
நூலினது வரலாறு

பரந்த நில பரப்பைக் கொண்து உலகம். இவ்வுலகில் சூழ்ந்துள்ள இருள்

விலகுமாறு ஒளி பரப்பி எல்லா பொருள்களையும் சூரியன் விளங்கச்

செய்கிறது. அது போன்ற இறைவன் தன் கருணையினால் மன இருளை

அகற்றுகிறான். இறைவன் முதல், முடிவு,ஒப்பு, அளவு, விருப்பு, வெ|றுப்பு,

ஆகியவை நீங்கியவன் ஆவான்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும்

பதினெட்டு மொழிகள் விளக்குகின்றன. அவற்றுள் ஒன்றான தமிழ்

மொழியானது தெற்கே கன்னியாகுமாரியையும் வடக்கே வேங்கட

மலையையும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்களையும் எல்லையாகக் கொண்ட

தமிழ்நாட்டில் பேசப்படுகிறது.

தமிழ் மொழியில் விளங்கும் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

என்னும்ஐந்து இலக்கணத்தையும் யாவரும் புரிந்து கொள்ளுமாறு

எளிமையாகத் தொகுத்தும், வகுத்தும், விரித்தும் தருமாறு

சீயங்கன்என்னும் மன்னன் வேண்டினான்.

பகைவர்களை அழித்து நில உலகைத் தனது ஆக்கியவன் சீயகங்கன். அவன்

தனது மதயானைகளை எட்டுத் திசைகளிலும் நிறுத்தி வெற்றி


பெற்றவன்.

அவன் தொடர்ந்து வரும் புகழையும் வீரக் கழலையும் வெண் கொற்றக்

குடையையும் செங்கோலையும் கொண்டவன். அவன் அரிய நூல்களை

ஆராய்வதைத் தனது பொழுது போக்காக் கொண்டவன்.

இத்தகைய சீயகங்கனின் வேண்டுதலுக்கு இணங்கி பழைய இலக்கண மரபில்

தவறாமல், பவணந்தி முனிவர், சனகாபுரத்தைச் சேர்ந்த சன்மதி

என்னும் முனிவரின் மைந்தன் ஆவார். இவர் பல அரிய

சிறப்புகளையும் தவத்தையும் பெற்றவர்.

Page - 2
பொதுப் பாயிரம்

1. முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை,


புனைந்துரை என்பவை பாயிரத்தின் பெயர்கள் ஆகும்.
முகவுரை, நூன்முகம் : நூலுக்கு முதலில் எழுதப்படுவது. நூலுக்கு

முகம் போன்றது.

பதிகம் : பொதுப்பாயிரத்தில் சொல்லப்பட்ட ஐந்து

பொருள்களையும் சிறப்புப் பாயிரத்தில்

சொல்லப்பட்ட பதினொரு பொருள்களையும்

தொகுத்துச் சொல்வது.

அணிந்துரை : நூலினது பெருமையும் அழகும் வெளிப்படுமாறு

புனைந்துரை சொல்வது.

புறவுரை : நூலில் சொல்லப்படாத பொருள்களைச்

சொல்வது.

தந்துரை : நூலில் சொல்லப்படாத பொருள்களைத் தந்து

சொல்வது.

2. பாயிரம் பொது சிறப்பு என இரு பாற்றே

பாயிரம் என்பது பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என்று

இருவகைப்படும்.

3. நூலே நுவல்வோன் நுவலும் திறனே

கொள்வோன் கோடல் கூற்று ஆம் ஐந்து உம்

எல்லா நூற்கும் இவை பொதுப் பாயிரம்

நூலின் வரலாறு, நூலாசிரியர் வரலாறு, நூலைச் சொல்லும் முறை,

படிக்கும் மாணவனின் திறம், படிக்கும் முறை ஆகிய ஐந்தும் எல்லா

நூல்களுக்கும் பொதுவானவை. இவற்றை உணர்த்துவது பொருப்பாயிரம்

ஆகும்.

Page - 3
4. நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு

பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்று ஆய்

நால் பொருள் பயத்து ஓடு எழு மதம் தழுவி

ஐ இரு குற்றம் உம் அகற்றி அ மாட்சி ஓடு

எண் நான்கு உத்தியின் ஓத்து படலம்

என்னும் உறுப்பின் இல் சூத்திரம் காண்டிகை

விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே

நூல் என்பது இருவகைப் பாயிரங்களை முதலில் கொண்டிருக்கும்: மூவகை

நூல்களுல் ஒன்றாக இருக்கும்: அறம், பொருள், இன்பம், வீடு என்னும்

நான்கு பொருள்களின் பயனை விளக்கும்; ஏழு வகையான மதங்களை

பின்பற்றுவதாய் இருக்கும்; பத்து வகைக் குற்றங்கள் அற்றதாய் இருக்கும்;

பத்து வகையான அழகுடன் முப்பத்து இரண்டு உத்திகளைக் கொண்டதாய்

இருக்கும்; ஒத்து, படலம் முதலியவற்றைக் கொண்டு விளங்கும் சூத்திரம்,

காண்டிகை, விருத்தி முதலிய வேறுபட்ட நடைகளில் அமையும்.

நூல்வகை

5. முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும்

நூல் என்பது முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்னும் மூன்று வகைகளைக்


கொண்டது.

முதல் நூல்

6. அவற்றுள்

வினை இன் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்

செயல்களைக் கடந்து விளங்கும் அறிவினைக் கொண்ட இறைவன்,

உயிர்களுக்காகப் பழங்காலத்தில் உருவாக்கியது முதல்நூல் ஆகும்.

Page - 4
வழிநில

7. முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து

பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி

அழியா மரபினது வழிநூல் ஆகும்

வழிநூல் என்பது பழங்கால நூலின் பொருள் முடிவுக்கு ஏற்ப, உருவாக்கப்பட

வேண்டும். மேலும் வழிநூல் உருவாக்குபவன், தேவை என்று கருதும்

மாறுதல்களைச் செய்து நிலைபெற்று விளங்கும் தன்மை உடையது வழிநூல்

ஆகும்.

சார்புநூல்

8. இருவர் நூற்கும் ஒரு சிறை தொடங்கி

திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும்

முதல்நூல் , வழிநூல் ஆகியவற்றின் பொருள் முடிவை ஏற்றுக் கொண்டு

ஏனையவற்றில் வேறுபட்டு விளங்குவது சார்பு நூல் ஆகும்.

வழி நூல் சார்பு நூல் – சிறப்பு விதி

9. முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழி உம்


பொன்னே போல் போற்றுவம் என்பதற்கும் - முன்னோர் இன்

வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்

கூறு பழம் சூத்திரத்தின் கோள்

முன்னோர் சொல்லிய பொருளை மட்டும் அல்லாமல் அவர் சொல்லையும்

பொன்னைப் போல் போற்றுவோம். முதல் நூலுக்கு வேறு நூலாகிய

வழிநூலும் சார்பு நூலும் உருவாக்கியுள்ளோம். என்றாலும் மேற்கோள்

இல்லை என்னும் குற்றம் நீங்கும் வகையில் முதல்நூல் சூத்திரங்களையும்

எடுத்துச் செல்லுதல் வேண்டும்.

Page - 5
நூல் பயன்

10. அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களை

அடைதலே நூலின் மூலம் அடையும் பயன் ஆகும்.

எழுவகை மதம்

11. எழு வகை மதமே உடன்படல் மறுத்தல்

பிறர் தம் மதம் மேற்கொண்டு களைவே

தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே

இருவர் மாறுகோள் ஒரு தலை துணிவே

பிறர் நூல் குற்றம் காட்டல் ஏனை

பிறிதொடு படாஅன் தன் மதம் கொளலே

பிறர் மதத்திற்குத் தான் உடன்படுதல், பிறர் மதத்தை மறுத்தல், பிறர்

மதத்திற்கு முதலில் உடன்பட்டுப் பின்னர் மறுத்தல், தானே ஒரு மதத்தை

நிறுவுதல் இருவர் நிறுவியுள்ள இருவேரு மதங்களில் ஒன்றை சார்தல், பிற

நூலில் உள்ள குற்றத்தை எடுத்துக்காட்டுதல், பிற மதங்களை

ஏற்றுக்கொள்ளாமல் தன் மதத்தை ஏற்றுக் கொள்ளுதல் என்னும்

சொல்லப்பட்ட ஏழும் எழுவகை மதங்கள் ஆகும்.

பத்துவகை குற்றங்கள்

12. குன்றக் கூறல் மிகைபடக் கூறல்

கூறியது கூறல் மாறுகொளக் கூறல்

வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்

வெற்று எனத் தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்

சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை

என்று இவை ஈர் ஐம் குற்றம் நூற்கே

Page - 6
ஒரு பொருளை விளக்குவதற்கு வேண்டிய சொற்களை குறைவாக் கூறுதல்,

ஒரு பொருளை விளக்குவதற்கு வேண்டிய சொற்களை அதிகமாகக் கூறுதல்,

முதலில் கூறிய பொருளையே மீண்டும் கூறுதல், முதலில் கூறிய

பொருளை விட்டு வேறு பொருளைக் கூறுதல், பிழையான சொற்களைக்

கூறுதல் , பொருள் தெளிவாகப் புரியாமல் மயங்குமாறு கூறுதல், பொருள்

அற்ற சொற்களை கூறுதல், சொல்ல தொடங்கிய பொருளை விட்டு

இடையில் வேறு ஒரு பொருளை விரிவாக் கூறுதல், செல்லச் செல்ல சொல்

நயமும் பொருள் நயமும் குறையும் படியாக் கூறுதல், எப்போதும் பயன்

தராத வகையில் கூறுதல் ஆகிய பத்தும் நூலில் ஏற்படும் குற்றங்கள் ஆகும்.

பத்து வகை அழகு

13. சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்

நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்

ஓசை உடைமை ஆழம் உடைத்து ஆதல்

முறையின் வைப்பே உலகம் மலையாமை

விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது

ஆகுதல் நூலிற்கு அழகு எனும் பத்தே

சுருக்கமாகச் சொல்லுதல், எளிமையாகப் புரிய வைத்தல், கற்போற்கு

இனிமை தருதல் , நல்ல சொற்களைப் பயன்படுத்துதல் , சந்த நயத்துடன்


விளங்குதல், ஆழ்ந்த கருத்துடன் விளங்குதல், படலம் ,இயல்

முதலியவற்றை முறையாகப் பயன்படுத்துதல், உயர்ந்தவர்களின்

வழக்கத்தில் வேறுபடாமல் இருத்தல், சிறந்த பொருளைத் தருதல் , எடுத்துக்

காட்டுடன் விளக்குதல் ஆகிய பத்தும் நூலுக்கு உரிய அழகுகள் ஆகும்.

முப்பத்திரண்டு உத்திகள்

14. நுதலிப் புகுதல் ஓத்து முறை வைப்பே

தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்

முடித்துக் காட்டல் முடிவு இடம் கூறல்

தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல்

Page - 7
சொல் பொருள் விரித்தல் தொடர்ச்சொல் புணர்த்தல்

இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்

ஒப்பின் முடித்தல் மாட்டெறிந்து ஒழுகல்

இறந்தது விலக்கல் எதிரது போற்றல்

முன் மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்

விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்

உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்

ஒரு தலை துணிதல் எடுத்துக்காட்டல்

எடுத்த மொழியின் எய்த வைத்தல்

இன்னது அல்லது இது என மொழிதல்

எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்

பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்

தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல்

சொல்லின் முடிவின் அப் பொருள் முடித்தல்

ஒன்று இனம் முடித்தல் தன் இனம் முடித்தல்

உய்த்துணர வைப்பு என உத்தி எண் நான்கே

சொல்ல போகும் பொருளை முதலில் கூறிப் பின்னர் விளக்குதல், இயல்

முதலியவற்றை முறைப்படி வைத்தல் நூல் பொருளை ஓரிடத்தில் சுருக்கி


கூறுதல் , ஓரிடத்தில் காட்டியவற்றைக் கூறுபடுத்தி காட்டுதல் ,மேலோர்

முடித்ததை போல் முடித்துக் காட்டுதல் , தான் சொல்லும் இலக்கணத்திற்கு

விதி கூறும் இடத்தைக் குறித்தல், முன்னோர் கூறிய நூற்பாவை எடுத்துச்

சொல்லுதல், சொற்பொருள் விளங்குமாறு உருபு முதலியவற்றை விரித்துச்

சொல்லுதல் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய சொற்களை சேர்த்து வைத்தல்

, இரண்டு பொருள் தோன்றும் படியாகச் சொல்லுதல், காரணம் காட்டி

முடித்தல், ஒன்றின் இலக்கணத்தை அதற்கு ஒப்பான வேறு ஒன்றுக்கு முடிவு

செய்தல், ஒரு நூற்பாவுக்கு கூறிய விதியை அதை போன்ற வேறு

நூற்பாவிற்கு இணைத்துக் கொள்தல், பயன்பாட்டில் இல்லாத இலக்கணத்தை

நீக்குதல், பழங்காலத்தில் இல்லை என்றாலும் தற்காலப் பயன்பாட்டில்

இருப்பதை ஏற்றுக் கொள்தல், பின்னால் அடிக்கடி கூற வேண்டியதை

Page - 8
முன்பே எடுத்துக் கூறுதல், முன் வைக்க வேண்டியதைப் பின்னே வைத்தல்,

பொருள் விளங்குவதற்காக வேறு வகைகளில் முடித்தல், வெவ்வேறு

வகைகளில் முடிந்ததை தொகுத்து முடித்தல், ஒரு செய்தியை ஏற்ற

இடத்தில் விளக்குவோம் என்று கூறுதல், முன்பு விளக்கமாக் கூறியது

மேலும் ஓர் இடத்தில் விளக்குவோம் என்று கூறுதல், முன்பு விளக்கமாகக்

கூறியது மேலும் ஓர் இடத்தில் வரும் போது முன்பே கூறியதைச் சுட்டுதல்,

ஒன்றுக்கு ஒன்று வேறுபடும் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றை ஏற்றுக்

கொள்தல், தான் சொல்லும் இலக்கணத்திற்குத் தானே எடுத்துக்காட்டுக்

கூறுதல், தான் சொல்லும் இலக்கணம் தான் எடுத்துக்காட்டிய சொற்களுக்குப்

பொருந்துவதைக் காட்டுதல் , ஐயம் ஏற்படும்போது இது போன்றது இல்லை

இது என்று சொல்லுதல், சொன்னவற்றின் உதவியால் சொல்லாதவற்றையும்

உய்ந்து அறியுமாறு கூறுதல், வேறு நூலின் முடிவைத் தானும் ஏற்றுக்

கொள்தல், தான் புதிதாகக் கூறும் கருத்தைப் பல இடங்களில் எடுத்துச்

சொல்லுதல் , சொல்லின் முடிவில் அதன் பொருளும் முடியுமாறு கூறுதல்,

ஒரு பொருளைக் கூறி முடிக்கும் போது அதற்கு இனமான பொருளையும்

அங்கேயே வேறு ஒரு பொருளைச் சொல்லும்போது அங்கேயே வேறு ஒரு

பொருளும் விளங்கச் செய்தல் ஆகிய முப்பத்து இரண்டும் நூலின் உத்திகள்

ஆகும்.

உத்தி

15. நூல் பொருள் வழக்கு ஒடு வாய்ப்ப காட்டி

ஏற்புழி அறிந்து இதற்கு இவ்வகை ஆம் என

தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி

ஒரு நூலின் பொருளை உலக வழக்கோடும் நூல் வழக்கோடும்

பொருந்துமாறு கூறுதல் வேண்டும். அவ்வாறு கூறுவதை ஏற்கும் இடத்தை

அறிந்து இங்கே இவ்வகையில் ஆகும் என்று தக்கபடி கூறுவது நூலின் உத்தி

ஆகும்.

ஒத்து

Page - 9
16. நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு

ஓர் இன பொருளை ஒரு வழி வைப்பது

ஓத்து என மொழிப உயர் மொழி புலவர்

ஒரே இனத்தைச் சேர்ந்த மணிகளை வரிசையாகப் பதித்து வைப்பது இயல்பு.

அது போல் ஒரே பொருள் தொடர்பாக செய்யுள்களைச் சேர்த்து வைப்பது

ஒத்து என்று புலவர்கள் கூறுவார்கள்.

படலம்

17. ஒரு நெறி இன்றி விரவிய பொருள் ஆல்

பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்

ஓர் இனப் பொருள் மட்டும் அல்லாமல் பல பொருள் கலந்து வந்து பொது

மொழியாகத் தொடர்ந்து வருவது படலம் எனப்படும்.

சூத்திரம்

18. சில் வகை எழுத்தில் பல் வகை பொருளை

செவ்வன் ஆடியில் செறித்து இனிது விளக்கி


திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்

பெரிய உருவத்தையும் சிறியதாகத் தன்னுள்ளே அடக்கிக் காட்டுவது

கண்ணாடியின் இயல்பு ஆகும். அது போல், சில எழுத்துகள் கொண்ட

தொடரின் வாயிலாக விரிந்த பொருளை சிறப்பாக அடக்கி இனிமையும்

ஆழமும் தோன்றுமாறு கூறுவது சூத்திரம் ஆகும்.

சூத்ரநிலை

Page - 10
19. ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளைப்

பாய்த்து பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை

சூத்திரங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடன் நிற்பது சூத்திர நிலை ஆகும்.

அது ஆற்றின் நீரோட்டம் போன்று இடையீடு இல்லாமல் இருக்கலாம்.

சிங்கத்தின் பார்வை போன்று முன்னும் பின்னும் பார்ப்பதாக இருக்கலாம்.

தவளையின் பாய்ச்சல் போன்று தாவுவதாக இருக்கலாம். பருந்து

தொலைவிலிருந்து வீழ்வதைப் போன்றும் இருக்கலாம்.

சூத்திர - வேறுவகைகள்

20. பிண்டம் தொகை வகை குறியே செய்கை

கொண்டு இயல் புறனடை கூற்றன சூத்திரம்

பிண்டச் சூத்திரம், தொகைச் சூத்திரம், வகைச் சூத்திரம், குறிச்சூத்திரம்,

செய்கைச் சூத்திரம், இவற்றிற்குப் புறத்தே அடையாய் வரும் புறனடைச்

சூத்திரம் என்னும் ஆறு பிரிவுகளைக் கொண்டது சூத்திரம் ஆகும்.

உரை – பொது இலக்கணம்

21. பாடம் கருத்தே சொல் வகை சொல் பொருள்


தொகுத்துரை உதாரணம் வினா விடை விசேடம்

விரிவு அதிகாரம் துணிவு பயன் ஓடு

ஆசிரியவசனம் என்ற ஈர் ஏழ் உரையே

ஒரு நூலுக்கு உரை பதினான்கு வகையில் சொல்லலாம்.

மூலப்பாடம், கருத்துரை, சொல்லுரை, பொருளுரை, பொழிப்புரை,

எடுத்துக்காட்டுடன் கூடிய உரை, வினா அமைத்து வழங்கும் உரை,

விடையாக அமைத்து வழங்கும் உரை, சிறப்பாக எடுத்துச் சொல்லும் உரை,

வேற்றுமை உருபு, அதிகாரத்தை அடிப்படையாகக்கொண்டு சூத்திரத்திற்கு

வழங்கும் உரை, ஐயம் ஏற்படும் போது எடுக்கும் முடிவான உரை , பயன்

Page - 11
தெரிவிக்கும் உரை, சான்றோர் நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுதல்

ஆகியவை ஆகும்.

காண்டிகையுரை

22. கருத்து பதப்பொருள் காட்டு மூன்றினும்

அவற்று ஒடு வினா விடை ஆக்கல் ஆன் உம்

சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை

கருத்துரை, சொல்லுரை (பதவுரை) எடுத்துக்காட்டு உரை ஆகிய மூன்று

வகைகளில் சூத்திரத்தின் உட்பொருளை விளக்குவது காண்டிகை உரை

ஆகும். இவற்றுடன் வினா உரை, விடை உரை ஆகியவற்றைச் சேர்த்துச்

சொல்வதும் காண்டிகை உரை ஆகும்.

விருத்தியுரை

23. சூத்திரத்து உள் பொருள் அன்றி உம் ஆண்டைக்கு

இன்றி அமையா யாவையும் விளங்க

தன் உரை ஆனும் பிற நூலானும்

ஐயம் அகல ஐம் காண்டிகை உறுப்பு ஒடு


மெய்யின் ஐ எஞ்சாது இசைப்பது விருத்தி

சூத்திரத்தின் பொருளை மட்டும் அல்லாமல் அந்த இடங்களுக்கு

இன்றியமையாத பொருள் எல்லாம் விளங்கும்படி விரித்து உரைப்பதற்கு

தனது உரையை அல்லது வேறு நூல் விளக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த விருத்தி உரையைச் காண்டிகை உரையின் ஐந்து உறுப்புகளின்

உதவியால் ஐயம் நீங்குமாறு தெளிவாகவும் விரிவாகவும் உரைத்தல்

வேண்டும்.

நூல் பெயர்க்காரணம்

Page - 12
24. பஞ்சி தன் சொலே பனுவல் இழை ஆக
செம் சொல் புலவனே சேயிழை ஆ - எஞ்சாத

கையே வாய் ஆக கதிரே மதி ஆக

மை இலா நூல் முடியும் ஆறு

தன் சொல்லைப் பஞ்சு ஆகவும், செய்யுளை நூல் ஆகவும், சிறந்த

சொல்வன்மை கொண்ட புலவன் நூல் நூற்கும் பெண் ஆகவும், புலவனின்

வாயை நூல் நூற்கும் பெண்ணின் கை ஆகவும் புலவனின் அறிவை நூல்

நிறையும் கதிர் ஆகவும் கொண்டு குற்றம் இல்லாத நூலை உருவாக்கலாம்.

பஞ்சிலிருந்து நூல் நூற்பதைப் போல் சிறந்த நூல் (புத்தகம்) உருவாவதால்

புத்தகத்திற்கு ‘நூல்’ என்ற பெயர் ஏற்பட்டது.

நூலின் பெருமை

25. உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை

புரத்தின் வளம் முருக்கி பொல்லா - மரத்தின்

கன கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தர்

மன கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு

மரத்தில் ஏற்பட்ட வளைவை நேராக்குவதற்கு நூலால் அளந்து அறுத்துத்

தள்ளுவார்கள். அது போல் மனிதனின் மனதில் ஏற்பட்ட தீமையைப் போக்கி

அவனை நல்ல வழியில் செலுத்துவதே ஒரு நூலின் பெருமை ஆகும்.

நல்லாசிரியர் இலக்கண்ம்

26. குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை

Page - 13
கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சி உம்

உலகு இயல் அறிவு ஓடு உயர் குணம் இனைய உம்

அமைபவன் நூல் உரை ஆசிரியனே

நல்ல குலப்பெருமை, கருணை, கடவுள் வழிபாடு இவற்றால் பெற்ற

மேன்மை. பல நூல்களைக் கற்றுத் தேர்ச்சி. நூலின் பொருளை

மாணவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் திறமை. நிலம்,

மலை, நிறைகோல் (நிறுக்கும் தராசு) மலர் போன்றவற்றிற்கு இணையான

பெருமை. இவை அனைத்தையும் கொண்டவனே நூல் கற்பிக்கும் ஆசிரியன்

ஆவான்.

நிலத்தின் பெருமை

27. தெரிவு அரும் பெருமையும் திண்மையும் பொறையும்

பருவ முயற்சி அளவு இல் பயத்தலும்

மருவிய நல் நில மாண்பு ஆகுமே

நிலமானது பிறரால் அறிய இயலாத அளவு பெரியது: உறுதியானது:

தோண்டுதல் முதலியவற்றால் மனிதர்கள் கொடுக்கும் துன்பங்களைப்

பொறுத்துக் கொள்வது. பருவத்தில் பயிர் செய்யும் உழவனின் முயற்சிக்கு


ஏற்ப பலனைத் தருதல் ஆகியவை நிலத்தின் பெருமைகள் ஆகும்.

மலையின் பெருமை

28. அளக்கல் ஆகா அளவுமே பொருளுமே

துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்

வறப்பின் உம் வளம் தரும் வண்மை உம் மலைக்கே

அளந்து அறிய இயலாத அளவு பெரியது அளவற்ற பொருள்களைத்

தன்னுள்ளே கொண்டது. தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கும் காட்சி

Page - 14
அளிப்பது : மலை இல்லா காலங்களிலும் நீர் கொடுக்கும் வளமையும்

கொண்டது மலை. இவை மலையின் பெருமை ஆகும்.

நிறைகோலின் (தராசு) பெருமை

29. ஐயம் தீர பொருள் ஐ உணர்த்தல் உம்

மெய் நடு நிலை உம் மிகும் நிறைகோற்கே

ஐயம் தீரும் அளவிற்கு பொருள்களின் எடையை உணர்த்துவதும், இரண்டு

தட்டுக்கும் நடுவாக நிற்கும் நடுநிலைமையும் நிறை கோலுக்கு (தராசு) உரிய

பெருமை ஆகும்.

பூவின் பெருமை

30. மங்கலம் ஆகி இன்றி அமையாது

யாவர் உம் மகிழ்ந்து மேற்கொள மெல்கி

பொழுதின் முகம் மலர்வு உடையது பூவே

மங்கல நிகழ்ச்சிகளுக்கு உரியது, எல்லா நிகழ்ச்சிக/ளிலும் இருக்கும் இன்றி

அமையாதத் தன்மை கொண்டது. யாவரும் மகிழ்ந்து சூடிக் கொள்ளும்

தன்மை கொண்டது. மென்னையானது, மலர்ச்சியைக் கொண்டது. இவை


பூவின் பெருமைகள் ஆகும்.

ஆசிரியர் ஆகாதார் இலக்கணம்

31. மொழி குணம் இன்மை உம் இழி குண இயல்பு உம்

அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடல் உம்

கழல் குடம் மடல் பனை பருத்தி குண்டிகை

முட தெங்கு ஒப்பு என முரண் கொள் சிந்தை உம்

உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே

பாடம் கற்பிக்கும் திறம் இல்லாமை, இயல்பாகவே இழிந்த குணம்

கொண்டிருந்தால், பொறாமையையும் பேராசையும் ஏமாற்றும் தன்மையும்

Page - 15
உடையனவாய் இருத்த்ல், கற்றோர் அவையில் உரையாட அஞ்சும் தன்மை

கொண்டிருத்தல், கழல்குடம், மடல்பனை, பருத்திக்குண்டிகை, முடித்தெங்கு

போன்றவற்றிற்கு ஒப்பான மாறுபாடு கொண்டிருத்தல். இவை நல்லாசிரியர்

ஆகாதவரின் இலக்கணம் ஆகும்.

கழற்கூடம்

32. பெய்த முறை அன்றி பிறழ உடன் தரும்

செய்தி கழல் பெய் குடத்தின் சீரே

குடத்தின் உள்ளே கழல் காய்களைப் போட்ட முறையில் அவை

இருப்பதில்லை. முதலில் போட்டது , அடுத்து போட்டவை எல்லாம் உடனே

உருண்டு இடம் மாறிவிடும்.

கழல் காய்

உருண்டு செல்லும் ஒரு வகைக்காய்.

கழல் குடம்

போட்ட முறையை உடனே மாற்றும் தன்மை கழல் குடத்தின் இயல்பு.

ஆசிரியன் அல்லாதவன்

முன்பு படித்தவற்றையும் பின்பு படித்தவற்றையும் முறையாக

நினைவில் கொள்ளாமல் குழப்பும் தன்மை உடையவன் ஆசிரியன்


அல்லாதவன்.

மடல்பனை

33. தானே தர கொளின் அன்றி தன் பால்

மேவி கொள கொடா இடத்தது மடல் பனை

மடல் கொண்ட பனைமரம் தனது பழத்தைத் தானே கீழே விழச் செய்தால்

மட்டும் மற்றவர்கள் அந்த பழக்கத்தைப் பெற முடியும். மேல் ஏறிச் சென்று

பறிக்க இயலாத அளவு அரம் போன்ற கருக்கு மட்டைகளைக் கொண்டது

மடல் பனை. அருகில் சென்று ஏறிப் பறிக்க இயலாத உயரத்தையும் கருக்கு

Page - 16
மட்டைகளையும் கொண்டது. ஆசிரியன் அல்லாதவன் மாணவர்கள் அருகில்

சென்று கற்க இயலாத தன்மை கொண்டவன்.

பருத்திக் குண்டிகை

34. அரிதின் பெய கொண்டு அப்பொருள் தான் பிறர்க்கு

எளிது ஈவு இல்லது பருத்தி குண்டிகை

பருத்தி குடுவையில் பஞ்சை அடைப்பது அரிது. அவ்வாறு அடைக்கப்பட்ட

பஞ்சை எளிதில் திரும்ப எடுக்க இயலாது. பருத்தி குண்டிகை குடுவையில்

பஞ்சை அடைப்பது அரிது. அடைத்த பஞ்சை எளிதில் வெளியே எடுக்க

இயலாது. ஆசிரியன் ஆகாதவன் கல்வி அறிவை அரிதாகப் பெற்றவன்.

பெற்ற கல்வியை மாணவர்க்குக் கற்பிக்க இயலாதவன்.

மூடத் தெங்கு

35. பல் வகை உதவி வழிபடு பண்பின்

அல்லோர்க்கு அளிக்கும் அது முடத்தெங்கே

வேலிக்கு மறுபுறம் வளைந்து நிற்கும் தென்னை மரம் நீர்விட்டு வளர்க்கும்

உரிமை உடையவருக்குத் தேங்காயை கொடுக்காமல் அடுத்தவருக்குக்

கொடுக்கும். முடத்தொங்கு வேலிக்கு மறுபுறம் வளைந்து நிற்கும் தென்னை

மரம். ஆசிரியன் ஆகாதவன் பொருள் கொடுத்து வணங்குபவனை விடுத்து

மற்றவருக்குக் கற்பிப்பான்.

பாடஞ்சொல்லலின் வரலாறு

36. ஈதல் இயல்பே இயம்பும் காலை

காலம் உம் இடன் உம் வாலிதின் நோக்கி

சிறந்த உழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி

உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து

Page - 17
விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து

கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொள

கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப

பாடம் கற்பிப்பதற்குத் தகுந்த நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்ய

வேண்டும். தெய்வத்தைப் போற்றிப் பாட்த்தைத் தொடங்க வேண்டும். பாடம்

கற்பிக்கும் பொருளை ஆசிரியன் தன் உள்ளத்துள் தெளிவாக்கிக் கொள்ள

வேண்டும். விரைவு கொள்ளாமலும் கோபம் கொள்ளாமலும் முக

மலர்ச்சியுடனும் பாடம் கற்பிக்க வேண்டும். பாடம் கற்பவனின் அறிவின்

திறத்தையும் உள்ளத்தின் இயல்பையும் அறிந்து கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு கற்பிக்கும் போது மனத்தில் மாறுபாடு இல்லாமல் சம நிலையில்

இருக்க வேண்டும்.

மாணவணது வரலாறு

37. தன் மகன் ஆசான் மகனே மன் மகன்

பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோனே

உரைகோளாற்கு உரைப்பது நூலே

தனது மகனுக்கும் ஆசிரியரின் மகனுக்கும் மன்னனின் மகனுக்கும் பொருள்

கொடுப்பவனுக்கும் வழிபடும் பண்பு உடையவனுக்கும் விரைவில் கற்கும்

இயல்பு உடையவனுக்கும் நூலைக் கற்பிக்க வேண்டும். குறிப்பு: மகன்

என்பது மகளுக்கு இருபால் பொதுப் பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர் இலக்கணம்

38. அன்னம் ஆவே மண் ஒடு கிளியே

இல்லிக் குடம் ஆடு எருமை நெய் அரி

அன்னர் தலை இடை கடை மாணாக்கர்

Page - 18
அன்னப் பறவையையும் பசுவையும் போன்றவர்கள் தலை (முதல் தர)

மாணவர்கள் மன்னையும் கிளியையும் போன்றவர்கள் இடை (நடுத்தர)

மாணவர்கள் ஓட்டைக்குடம், ஆடு, எருமை, பன்னாடை போன்றவர்கள் கடை

(இறுதித்தர) மாணவர்கள்.
முதல் மாணவர்

அன்னம் : அன்னம், பாலையும் நீரையும் பிரித்துப்

பாலை மட்டும் உண்பது போல முதல் தர

மாணவர்கள் நல்லவை, தீயவற்றில்

நல்லவற்றை மட்டுமே கற்பார்கள்.

பசு : பசு, புல் நிறைந்த பகுதியில் வயிறு நிறைய

மேய்ந்து விட்டு, பின்னர் ஓரிடத்தில் படுத்து

அசை போடுவதைப் போல முதல் தர

மாணவர்கள் நல்ல ஆசிரியரை கண்டால்

அவரிடம் எவ்வளவு கல்வி பெற முடியுமோ

அனைத்தையும் கற்ற பின்னர், கற்றவற்றைப்

பற்றிச்சிந்தித்து நினைவில் கொள்வார்கள்.

இடை மாணவர்

மண் : மண், உழவரின் முயற்சிக்கு ஏற்பவே

பலனை கொடுக்கும். அதுபோல ஆசிரியர்

கற்பிக்கும் அளவிற்கு மட்டுமே அறிவு

பெறுகிறவர்கள் நடுத்தர மாணவர்கள்.

கிளி : கிளி, சொன்னதை மட்டுமே சொல்லும் இயல்


உடையது. அது போல ஆசிரியர் கற்பித்த

பாடத்தை மட்டுமே அறிந்தவர்கள் நடுத்தர

மாணவர்கள்

கடை மாணவர்

ஓட்டைக்குடம் : ஓட்டை விழுந்த குடத்தில் ஊற்றப்படும் நீர்

ஒழுகி விடுவதைப் போல கடை மாணவர்கள்

தங்கள் ஆசிரியர் கற்பிப்பதை மறந்து

விடுவார்கள்.

ஆடு : ஒரு செடியில் தழை நிறைந்து இருந்தாலும்

ஆடு வேறு வேறு செடிகளைத் தேடிச்

செல்லும். அது போல நல்ல ஆசிரியரின்

Page - 19
அறிவைப் பயன்படுத்தாமல் வேறு

ஆசிரியர்களைத் தேடிச் செல்வது கடை

மாணவரின் இயல்பு ஆகும்.

எருமை : எருமை, குளத்து நீரைக் கலக்கிக் குடிப்பது

போல, கடை மாணவன் ஆசிரியரை

வருத்தம் அடையச் செய்து கற்பான்.

பன்னாடை : பதநீரை அரிக்கும் அரிப்பில் தும்பும் தூசும்

மட்டுமே தங்கும். ஆசிரியர் கற்பிப்பதில்

உள்ள அரிய பொருள்களை விட்டு விட்டு,

தீயவற்றை மட்டுமே கடை மாணவன்

கற்பான்.

மாணவர் ஆகாதார் இலக்கணம்

39. களி மடி மானி காமி கள்வன்

பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்

துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சி

தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி

படிறன் இன்னோர்க்கு பகரார் நூலே

கள் உண்பவன், சோம்பேறி, ஆணவம் உடையவன், காம எண்ணம்


கொண்டவன், திருடன், நோயாளி, மிகவும் வறியவன், சண்டைபிடிப்பவன்,

கோபப்படுபவன் தூங்குபவன், மந்த குணம் கொண்டவன், பழைய நூலுக்கு

அஞ்சுபவன், உள்ளத்தில் தெளிவு இல்லாதவன், அஞ்ச வேண்டியவற்றிற்கு

அஞ்சாதவன், பாவம் செய்பவன், பொய் சொல்பவன் ஆகியோர் மாணவர்கள்

ஆக மாட்டார்கள்.

பாடம் கற்றலின் வரலாறு

40. கோடல் மரபே கூறும் காலை

பொழுது ஒடு சென்று வழிபடல் முனியான்

குணத்து ஒடு பழகி அவன் குறிப்பின் சார்ந்து

Page - 20
இரு என இருந்து சொல் எனச் சொல்லிப்

பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்

சித்திரப் பாவை இன் அத்தகவு அடங்கிச்

செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக

கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்துப்

போ எனப் போதல் என்மனார் புலவர்

கல்வி கற்க வேண்டிய காலத்தில் சென்று கற்க வேண்டும். ஆசிரியரை

வணங்குவதற்கு வெறுப்பு இல்லாதவனாக இருக்க வேண்டும். ஆசிரியரின்

குணத்தையும், குறிப்பையும் உணர்ந்து கற்க வேண்டும். ஆசிரியர் ‘இரு’ என்று

சொல்லும்போது இருக்க வேண்டும். ‘படி’ என்று சொன்ன பிறகு படிக்க

வேண்டும். பசித்தவனுக்கு உணவில் ஏற்படும் ஆர்வத்தைப் போல் பாடம்

கற்பதில் ஆசை உடையவனாக இருக்க வேண்டும்.

ஓவிய பாவையைப் போல் ஆடாது அசையாது , அடக்கமாகக் கற்க

வேண்டும். காதை வாயாகவும், நெஞ்சைப் படித்ததை வைக்கும் இடமாகவும்

முன்பு கேட்டவற்றை மீண்டும் கேட்டு, அவற்றை மறக்காமல் கற்க

வேண்டும். ஆசிரியர் ‘போ’ என்று சொன்ன பின்பே போக வேண்டும் என்று

பாடம் கற்கும் தன்மையைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூலைக் கற்கும் இயல்பு

41. நூல் பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்


பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்

ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்

அம்மாண்பு உடையோர் தம் ஒடு பயிறல்

வினாதல் வினாயவை விடுத்தல் என்ற இவை

கடன் ஆக்கொளினே மடம் நனி இகக்கும்

நூலை கற்கும்போது உலக வழக்கு, செய்யுள் வழக்கு, ஆகிய இருவகையில்

வழங்கும் முறையை அறிந்து கற்க வேண்டும். மூலபாடங்களை மறக்காமல்

நினைவில் கொள்ள வேண்டும். கற்ற பொருள்களைச் சிந்தித்துப் பார்க்க

வேண்டும். ஆசிரியரின் கருத்துக்கு ஏற்பக் கற்று அவற்றை மனத்தில் பதிக்க

வேண்டும். தம்முடன் கற்பவருடன் நன்கு பழகுதல் வேண்டும். ஐயம்

Page - 21
ஏற்படும் போது உடன் கற்பவர்களிடம் கேட்டு அறிய வேண்டும். அவர்கள்

ஐயம் கேட்கும் போது உடன் கற்பவர்களிடம் கேட்டு அறிய வேண்டும்.

அவர்கள் ஐயம் கேட்கும் போது விடை சொல்ல வேண்டும். இவ்வாறு

கற்றால் மாணவனை விட்டு அறியாமை அகலும்.

42. ஒரு குறி கேட்போன் இரு கால் கேட்பின்

பெருக நூலில் பிழைபாடு இலனே

ஒரு நூலை ஆசிரியரிடம் ஒரு முறைக்கு இரு முறை கேட்டுக் கற்றால்

அந்த நூலைப் பிழை இல்லாமல் கற்பான்.

43. முக்கால் கேட்பின் முறை அறிந்து உரைக்கும்

ஒரு நூலை ஆசிரியரிடம் மூன்று முறை கேட்டுக் கற்றால் அவன், ஆசிரியர்

கற்பிக்கும் முறையை அறிந்து பிறருக்குக் கற்பிக்கும் தகுதியைப் பெறுவான்.

44. ஆசான் உரைத்தது அமைவரக்கொளின் உம்

கால் கூறு அல்லது பற்றலன் ஆகும்

ஆசிரியர் கற்பித்ததைத் தன் அறிவுக்கு ஏற்குமாறு கற்றாலும் கால் பங்கு

கற்றவனாகவே கருதப்படுவான்.

45. அவ்வினையாளர் ஒடு பயில் வகை ஒரு கால்

செவ்விதின் உரைப்ப அவ் இரு கால் உம்

மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும்

தன்னுடன் பயிலும் மாணவர்களிடம் பழகும் வகையில் கால் பங்கு கற்றுக்

கொள்வான். தனது மாணவனுக்கு கற்பிக்கும்போது கால்பங்கும் பிறருக்கு

உரைக்கும் போது கால் பங்கும் ஆக முழுமையாக் கற்றவன் ஆவான்.

46. அழல் இன் நீங்கான் அணுகான் அஞ்சி

நிழல் இன் நீங்கான் நிறைந்த நெஞ்சம் ஓடு

எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம்

Page - 22
அறத்து இன் திரியா படர்ச்சி வழிபாடுடே

நெருப்பில் குளிர் காய்பவன் , நெருப்பை விட்டு நீங்காமலும் நெருப்புக்கு

அருகில் செல்லாமலும் குளிர் காய்வான். அதைப் போல் ஆசிரியருக்கு அஞ்சி

அவரை விட்டு நீங்காமல் விடாது பின் தொடரும் நிழலைப் போல்

தொடர்ந்து சென்று கற்க வேண்டும். எப்படி நடந்து கொண்டால் ஆசிரியர்

மகிழ்ச்சி அடைவாரோ அப்படி நடந்து , அறத்திலிருந்து மாறுபடாமல் நடப்பது

ஆசிரியருக்கு மாணவன் செய்யும் வழிபாடு ஆகும்.

சிறப்புப் பாயிரத்திலக்கணம்

47. ஆக்கியோன் பெயரே வழியே எல்லை

நூல் பெயர் யாப்பே நுதலிய பொருளே

கேட்போர் பயன் ஓடு ஆய் எண் பொருள் உம்

வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே

நூலை ஆக்கியவனின் பெயர் ,நூல் வந்த வழி, நூல் பயன்படுத்தப்படும்

எல்லை. நூலின் பெயர், நூலின் யாப்பு, நூலில் விளக்கப்பட்ட பொருள்,

நூலைக் கற்பதற்குத் தகுதி உடையவர்கள் , நூலின் பயன் ஆகிய எட்டையும்

உணர்த்துவது சிறப்பு பாயிரத்தின் இயல்பு ஆகும்.

48. காலம் களனே காரணம் என்று இம்

மூவகை ஏற்றி மொழிநர் உம் உளர் ஏரே

முன்பு கூறப்பட்ட எட்டுப் பொருள்களுடன் நூல் எழுதப் பட்ட காலம், நூல்

அரங்கேறிய அவை, நூல் எழுதியதன் நோக்கம் ஆகிய மூன்றையும் சேர்த்துப்

பதினொன்றையும் உணர்த்துவது சிறப்புப் பாயிரத்தின் பயன் ஆகும்.

நன்னூல் சிறப்புப் பாயிரத்தில் மேற்கூறிய பதினொன்றும் கூறப்பட்டுள்ளன.

நூல் பெயர் சிறப்பு விதி

Page - 23
49. முதல்நூல் கருத்தன் அளவு மிகுதி

பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தின் உம்

இடுகுறி யானும் நூற்கு எய்தும் பெயரே

முதல்நூல், நூல் எழுதியவன், நூலின் அளவு , மிகுதியாகக் கூறப்படும்

செய்தி, நூலின் பொருள், அந்த நூல் எழுதுவதற்குப் பொருள் கொடுத்து

உதவியவன், நூலின் இயல்பு ஆகியவற்றாலும் இடுகுறியாகவும் ஒரு

நூலுக்கு பெயர் சூட்டப்படும்.

நூல் சிறப்பு விதி

50. தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு

எனத்தகும் நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப

தொகுத்து உரைத்தல், விரித்து உரைத்தல், தொகுத்தும் விரித்தும் உரைத்தல்

மொழிபெயர்ப்பு என்று நூலின் யாப்பு நான்கு வகைப்படும்

சிறப்பு பாயிரம் எழுதுபவர்

51. தன் ஆசிரியன் தன் ஒடு கற்றோன்

தன் மாணாக்கன் தகும் உரைகாரன் என்ற

இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே

தன்னுடைய ஆசிரியர் , தன்னுடன் கற்றவர், தன்னுடைய மாணவர் நூலுக்கு

உரை எழுதியவர் என்னும் நான்கு பேருள் ஒருவர் சிறப்புப் பாயிரம்

எழுதுவதற்குக் கடமை உடையவர் ஆவர்.

சிறப்பு பாயிரம் பிறர் எழுதக் காரணம்

Page - 24
52. தோன்றா தோற்றி துறை பல முடிப்பின் உம்

தான் தற் புகழ்தல் தகுதி அன்றே

வெளிப்பட தோன்றாத நுட்பங்கள் எல்லாம் தோன்றும் படியாக நூல்

எழுதினாலும் தனது புகழைத் தானே எழுத தகுதி உடையது ஆகாது.

தற்புகழ்ச்சி குற்றம் ஆகா இடங்கள்

53. மன் உடை மன்றத்து ஓலைத்தூக்கின் உம்

தன் உடை ஆற்றல் உணரார் இடையின் உம்

மன்னிய அவை இடை வெல்லுறு பொழுதின் உம்

தன் ஐ மறுதலை பழித்த காலை உம்

தன் ஐ புகழ்தல் உம் தகும் புலவோற்கே

அரசனுடைய அவைக்கு எழுதும் ஓலையிலும், தன்னுடைய கல்விச்சிறப்பை

அறியாதவர் இடத்திலும், அவையில் வெற்றி பெற்ற வேளையிலும், தன்னை

பழித்து பேசிய வேளையிலும் தன்னைத் தானே புகழ்வதும் புலவர்களுக்கு

தகுதி உடையது ஆகும்.

பாயிரத்தின் தேவை

54. ஆயிரம் முகத்து ஆன் அகன்றது ஆயின் உம்

பாயிரம் இல்லது பனுவல் அன்றே

ஆயிரம் உறுப்புகளால் பரந்து விரிந்த நூல் என்றாலும் பாயிரம் இல்லை

என்றால் அது நூல் ஆகாது.

55. மாடக்குச் சித்திரம்மும் மா நகர்க்குக் கோபுரம் உம்

ஆடு அமை தோள் நல்லார்க்கு அணி உம் போல் - நாடி முன்

ஐது உரையாநின்ற அணிந்துயை எந்நூற்கும்

Page - 25
பெய்து உரையா வைத்தார் பெரிது.

மாளிகைக்கு அழகு ,ஓவியம் , மாநகரத்திற்கு அழகு கோபுரம், மூங்கில்

போன்ற தோள்களை கொண்ட மங்கையர்க்கு அழகு , அணிகலன்கள்,

இவற்றை போல அழகிய பொருளைச் சொல்லுகின்ற எந்த நூலாக

இருந்தாலும் அதற்கு அழகு சேர்ப்பது பாயிரம் ஆகும்.

Page - 26
அலகு - II
எழுத்தியல்

கடவுள் வணக்கம்

56. பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த

நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே

பூக்கள் நிறைந்த அசோக மரத்தின் நிழலில் அமர்ந்த நான்கு முகம் கொண்ட

அருகனை வணங்கி நான் எழுதிய இலக்கணத்தைச் சொல்ல

தொடங்குகிறேன்.

எழுத்திலக்கணத்தின் பகுதி

57. எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை

முதல் ஈறு இடைநிலை போலி என்றா

பதம் புணர்பு என பன்னிரு பாற்று அதுவே

எழுத்தின் என்னும் பெயரும் முறையும் பிறப்பும் வடிவமும் அளவும் முதல்,

இடை, கடை, நிலைகளுக்கு போலியும் பதமும் புணர்ச்சியும் ஆகிய

பன்னிரண்டு பகுதியும் எழுத்து இலக்கணம் ஆகும்.

எண்

எழுத்தும் வகையும்

58. மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி

எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்தே

மொழிக்கு முதல் காரணமாகிய அணுத்திரளின் ஒலியே எழுத்து ஆகும்.

எழுத்து இரண்டு வகைப்படும்.

1. முதல் எழுத்து

2. சார்பு எழுத்து

Page - 27
முதல் எழுத்து

59. உயிர் உம் உடம்பு உம் ஆம் முப்பது உம் முதலே

உயிர் எழுத்துப் பன்னிரண்டும், மெய் எழுத்துப் பதினெட்டும் ஆகிய முப்பது

எழுத்துக்களும் முதல் எழுத்துகள் ஆகும்.

சார்பு எழுத்து

60. உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு

அஃகிய இ உ ஐ ஔ மஃகான்

தனிநிலை பத்து உம் சார்பெழுத்து ஆகும்

1. உயிர் மெய் 2. ஆய்தம்

3. உயிரளபெடை 4. ஒற்றளபெடை

5. குற்றியலிகரம் 6. குற்றியலுகரம்

7. ஐகாரக்குறுக்கம் 8. ஒளகாரக்குறுக்கம்

9. மகரக் குறுக்கம் 10. ஆய்த குறுக்கம்

ஆகிய பத்தும் சார்பு எழுத்துகள் ஆகும்.

சார்பு எழுத்துக்களின் விரிவு

61. உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு உயர் ஆய்தம்

எட்டு உயிரளபு எழு மூன்று ஒற்றளபெடை

ஆறு ஏழ் அஃகும் இம்முப்பான் ஏழ்

உகரம் ஆறு ஆறு ஐகான் மூன்றே

ஔகான் ஒன்றே மஃகான் மூன்றே

ஆய்தம் இரண்டு ஒடு சார்பெழுத்து உறு விரி

ஒன்று ஒழி முந்நூற்று எழுபான் என்ப

உயிர்மெய் = 216

முற்றாய்தம் = 8

உயிரளபெடை = 21

Page - 28
ஒற்றளபெடை = 42

குற்றியலிகரம் = 37

குற்றியலுகரம் = 36

ஐகாரக் குறுக்கம் = 3

ஒளகாரக் குறுக்கம் = 1

மகரக் குறுக்கம் = 3

ஆய்த குறுக்கம் = 2

______

369

----------

என்று சார்பு எழுத்தின் விரிவு முந்நூற்று அறுபத்து ஒன்பது ஆகும்.

பெயர்

பெயர் - பொது இலக்கணம்

62. இடுகுறி காரணப்பெயர் பொதுச்சிறப்பின

இடுகுறிப் பெயர், காரணப் பெயர் ஆகிய இரண்டும் பொதுப் பெயராகவும்

சிறப்புப் பெயராகவும் வரும். இவ்வாறு பெயர் நான்கு ஆகும்.

1. இடுகுறிப் பொதுப் பெயர் = மரம் , பாம்பு,

2. இடுகுறிச் சிறப்புப் பெயர் = தென்னை, சாரை

3. காரணப் பொதுப் பெயர் = அணி, பறவை


4. காரணச் சிறப்புப் பெயர் = அட்டிகை, புறா.

மேலும் , இந்நூற்பாவின் பொருளை வேறு விதமாக் கொண்டு, பெயர் மூன்று

என்றும் கூறுவர்.

1. இடுகுறிப் பெயர்,

2. காரணப் பெயர்,

3. காரண இடுகுறிப் பெயர்

எழுத்தின் பெயர்

63. அம்முதல் ஈர் ஆறு ஆவி கம்முதல்

மெய்ம்மூ ஆறு என விளம்பினர் புலவர்

Page - 29
‘அ’ முதல் பன்னிரண்டு உயிர் எழுத்து, ‘க’ முதல் பதினெட்டு மெய் எழுத்து

என்று அறிவுடையோர் கூறி உள்ளனர்.

உயிர்க்குறில்

64. அவற்று உள்

அ இ உ எ ஒக்குறில் ஐந்தே

அ,இ,உ,எ,ஒ, என்னும் ஐந்து உயிர் எழுத்துகளும் குறில் எழுத்துகள் ஆகும்.

உயிர் நெடில்

65. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ நெடில்

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் நெடில் எழுத்துகள்

ஆகும்.

சுட்டெழுத்து

66. அ இ உ முதல் தனி வரின் சுட்டே

அ,இ,உ என்னும் மூன்று எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் நின்று சுட்டுப்

பொருளைத் தந்தால் சுட்டு எழுத்துகள் ஆகும்.


அகரம் தொலைவில் இருக்கும் பொருளைச் சுட்டும்.

எ.டு. அது

இகரம் அருகில் இருக்கும் பொருளைச் சுட்டும்.

எ.டு. இது

உகரம், கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் பொருளை சேய்மைக்கும்

அண்மைக்கும் இடையில் இருக்கும் பொருளையும் சுட்டும்.

எ.டு.உது.

சுட்டு இரண்டு வகைப்படும், அவை,

1. அகச்சுட்டு, : அவன் , இவன்

2. புறச்சுட்டு: அவ்வீடு, இவ்வீடு.

Page - 30
வினா எழுத்து

67. எ யா முதல் உம் ஆ ஓ ஈற்று உம்

ஏ இரு வழி உம் வினா ஆகுமே

எ,யா,ஆ,ஒ,ஏ, என்னும் ஐந்து எழுத்துகளும் வினா எழுத்துகள் ஆகும்.

எ,யா என்னும் இரண்டும், சொல்லுக்கு முதலில் நின்று வினாப் பொருளைத்

தரும்

எ.டு. என்ன? யார்?

ஆ,ஒ என்னும் இரண்டும் சொல்லுக்கு இறுதியில் நின்று வினாப் பொருளைத்

தரும்.

எ.டு. அவனா? எவனோ?

வல்லினம்

68. வல்லினம் க ச ட த ப ற என ஆறே

க்,ச்,ட்,த்,ப்,ற் என்னும் ஆறு எழுத்துகளும் வல்லின எழுத்துகள் ஆகும்.

மெல்லினம்

69. மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறே

ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறு எழுத்துகளும் மெல்லின எழுத்துகள்

ஆகும்.

இடையினம்

70. இடையினம் ய ர ல வ ழ ள என ஆறே

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்னும் ஆறு எழுத்துகளும் இடையின எழுத்துகள் ஆகும்.

இன எழுத்து

71. ஐ ஔ இ உ செறிய முதலெழுத்து

இவ் இரண்டு ஓர் இனம் ஆய் வரல் முறையே

Page - 31
‘ஐ’ என்னும் எழுத்துக்கு ‘இ’ என்னும் எழுத்தும் ‘ஒள’ என்னும் எழுத்துக்கு ;உ;

என்னும் எழுத்தும் இனமாக வரும் ஏனைய உயிர்கள் தமது நெடில்

எழுத்துகளுக்கு இனமாய் வரும்.

72. தானம் முயற்சி அளவு பொருள் வடிவு

ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனமே

எழுத்தியல் » முறை

எழுத்து பிறக்கின்ற இடம், தொழில், மாத்திரை, பொருள், வடிவம்,

ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று ஒப்புமையுடன் காணப்பட்டால் அவை இன

எழுத்துகள் ஆகும்.

முறை

73. சிறப்பின் உம் இனத்தின் உம் செறிந்து ஈண்டு அ முதல்

நடத்தல் தானே முறை ஆகும்மே

சிறப்பாலும் இனத்தாலும் பொருந்தி நோக்கினால் இங்கு அகரம் முதலாக

வழங்குவதே முறை ஆகும்.

பிறப்பு

74. நிறை உயிர் முயற்சியின் உள் வளி துரப்ப

எழும் அணுத் திரள் உரம் கண்டம் உச்சி

மூக்கு உற்று இதழ் நா பல் அண தொழிலின்

வெவ்வேறு எழுத்து ஒலி ஆய் வரல் பிறப்பே

உயிரின் முயற்சியால் உள்காற்றின் அணுக் கூட்டமானது மார்பு, கழுத்து,

தலை, மூக்கு ஆகிய இடங்கள் வழியாக எழும்பி உதடு நாக்கு, பல்,

அண்ணம், ஆகியவற்றின் முயற்சியால் வெவ்வேறு எழுத்து ஒலியாய்ப்

பிறக்கும்.

Page - 32
முதல் எழுத்துக்கள் பிறப்பு

75. அவ்வழி

ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்

மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை

உயிர் எழுத்துகளும் இடையின மெய் எழுத்துகளும் பிறக்கும் இடம் கழுத்து

ஆகும். மெல்லின மெய் எழுத்துகள் பிறக்கும் இடம் மூக்கு ஆகும். வல்லின

மெய் எழுத்துகள் பிறக்கும் இடம் மார்பு ஆகும்.

76. அவற்று உள்

முயற்சி உள் அ ஆ அங்காப்பு உடைய

அ,ஆ என்னும் இரண்டு எழுத்துகளும் அண்ணத்தின் தொழில் ஆகிய

வாயைத் திறந்தால் (அங்காத்தல்) என்னும் முயற்சியால் பிறக்கும்.

77. இ ஈ எ ஏ ஐ அங்காப்பு ஓடு

அண் பல் முதல் நா விளிம்பு உற வருமே

இ,ஈ,எ,ஏ,ஐ என்னும் ஐந்து எழுத்துகளும், வாயை திறத்தலுடன் மேல்வாய்

அண்ணத்தின் பின் உள்ள பற்களை நாக்கின் இரு ஓரங்களும் தொடும்படி

ஒலிப்பதால் பிறக்கின்றன.

78. உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவே

உ,ஊ,ஒ,ஓ,ஒள என்னும் ஐந்து எழுத்துகளும் உதடுகளைக் குவித்து

ஒலிப்பதால் பிறக்கின்றன.

79. க ங உம் ச ஞ உம் ட ண உம் முதல் இடை

நுனி நா அண்ணம் உற முறை வருமே

க, ங என்னும் எழுத்துகள் நாவின் அடிப்பகுதி மேல் அண்ணத்தின்

அடிப்பகுதியைத் தொடும்படி ஒலிப்பதால் பிறக்கின்றன.

Page - 33
ச, ஞ என்னும் எழுத்துகள் நாவின் நடுப்பகுதி மேல் அண்ணத்தின்

நடுப்பகுதியைத் தொடும்படி ஒலிப்பதால் பிறக்கின்றன.

ட, ண என்னும் எழுத்துகள் நாவின் நுனிப்பகுதி மேல் அண்ணத்தின்

நுனிப்பகுதியைத் தொடும்படி ஒலிப்பதால் பிறக்கின்றன.

80. அண் பல் அடி நா முடி உற த ந வரும்

மேல் அண்ண முன் பல்லின் அடிப்பகுதியை நாக்கின் நுனி தொடும்படி

ஒலிப்பதால் ‘த’ ‘ந’ ஆகிய எழுத்துகள் பிறக்கின்றன.

81. மீ கீழ் இதழ் உறப்பம்மப்பிறக்கும்

மேல் உதடும் கீழ் உதடும் தொடும்படி ஒலிப்பதால் ‘ப’ ‘ம’ ஆகிய எழுத்துகள்

பிறக்கின்றன.

82. அடி நா அடி அணம் உற யத்தோன்றும்,

நாக்கின் அடிப்பகுதி மேல் அண்ணத்தின் அடிப்பகுதியைத் தொடும்படி

ஒலிப்பதால் ‘ய’ என்னும் எழுத்துப் பிறக்கிறது.

83. அண்ணம் நுனி நா வருட ர ழ வரும்

மேல் அண்ணத்தை நாக்கின் நுனி தடவும் படி ஒலித்தால் ‘ர’ ‘ழ’ ஆகிய

எழுத்துகள் பிறக்கின்றன.

84. அண் பல் முதல் உம் அண்ணம் உம் முறையின்

நா விளிம்பு வீங்கி ஒற்ற உம் வருட உம்

லகாரம் ளகாரம் ஆய் இரண்டு உம் பிறக்கும்

மேல் அண்ணப் பல்லின் அடிப்பகுதியை நாவின் ஓரம் தொடும்படி ஒலித்தால்

‘ல’ என்னும் எழுத்துப் பிறக்கும்.

Page - 34
மேல் அண்ணப் பல்லின் அடிப்பகுதியை நாவின் ஓரம் தடவும்படி ஒலித்தால்

‘ள’ என்னும் எழுத்துப் பிறக்கும்.

85. மேல் பல் இதழ் உற மேவிடும் வவ்வே

மேல் அண்ணப் பல்லை உதடு தொடும்படி ஒலித்தால் ‘வ’ என்னும் எழுத்துப்

பிறக்கும்.

86. அண்ணம் நுனி நா நனி உறின் ற ன வரும்

மேல் அண்ணத்தை நாக்கின் நுனி அழுத்த தொடும்படி ஒலித்தால் ‘ற’ ‘ன’

ஆகிய எழுத்துகள் பிறக்கும்.

சார்பு எழுத்துக்கள் பிறப்பு

87. ஆய்தக்கு இடம் தலை அங்கா முயற்சி

சார்பெழுத்து ஏனவும் தம் முதல் அனைய

ஆய்த எழுத்துப் பிறக்கும் இடம் தலை ஆகும். இது வாயைத் திறப்பதால்

உருவாகும்.

ஏனைய சார்பு எழுத்துகள் அவற்றின் முதல் எழுத்துகளில் பிறக்கும்.

புறனடை

88. எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்

திரிபு உம் தத்தமின் சிறிது உள ஆகும்ல்

பல எழுத்துகள் பிறக்கும் வகை ஒப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. எனினும்

உயர்த்தி ஒலித்தால் , தாழ்த்தி ஒலித்தால் உயர்த்தியும் தாழ்த்தியும்

ஒலித்தால் ஆகிய சிறு வேறுபாடுகள் ஒவ்வோர் எழுத்தின் ஒலிப்பிலும்

ஏற்படும்.

Page - 35
உயிர் மெய் பிறப்பு

89. புள்ளி விட்டு அ ஒடு முன் உரு ஆகி உம்

ஏனை உயிர் ஓடு உருவு திரிந்து உம்

உயிர் அளவு ஆய் அதன் வடிவு ஒழித்து இரு வயின்

பெயர் ஒடு உம் ஒற்று முன் ஆய் வரும் உயிர்மெய்

உயிர் மெய் எழுத்துப் பிறக்கும் போது மெய் எழுத்து தனது புள்ளியை விட்டு

விடும். ‘அ’ என்னும் உயிர் எழுத்து சேரும்போது புள்ளி இல்லா மெய்

வடிவில் உயிர்மெய் வடிவில் உயிர்மெய் எழுத்து விளங்கும். ஏனைய உயிர்

எழுத்துகளுடன் சேரும்போது புள்ளி இல்லா மெய் எழுத்தின் வடிவம்

வேறுபடும்.

உயிர் எழுத்தின் மாத்திரையே உயிர் மெய்க்கும் உரியது ஆகும்.

உயிர் மெய் எழுத்து என்று உயிர் எழுத்துக்கு முதன்மை கொடுத்துச்

சொன்னாலும் மெய் எழுத்தே முதலில் இருக்கும். உயிர் எழுத்துப் பின்னால்

தான் இருக்கும்.

முற்றாய்தம்

90. குறியதன் முன்னர் ஆய்த புள்ளி

உயிர் ஒடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே


ஆய்த எழுத்து மூன்று புள்ளி வடிவினைக் கொண்டது. இது குறில் எழுத்தின்

முன்னும் உயிர் எழுத்துடன் சேர்ந்த வல்லின மெய் எழுத்தின் பின்னும்

வரும்.

எஃகு ,கஃசு,கஃடு,இருபஃது,கஃபு,பஃறு, மேற்கூறிய ஆறு முற்றாய்தங்கள் வரும்.

1. புணர்ச்சி விகாரத்தால் வருவது:

அவ்+கடிய= அஃகடிய

2. செய்யுள் விகாரத்தால் வருவது:

அ+கான் = அஃகான்

இவ்வாறு முற்றாய்தம் எட்டு ஆகும்.

உயிரளபடை

Page - 36
91. இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இனக்குறில் குறியே

செய்யுளில் ஓசை குறையும் பொழுது நெடில் எழுத்து ஏழும்


அளபெடுக்கும். இது சொல்லின் முதல், இடை, கடை, ஆகிய
மூவிடங்களிலும் அளபெடுக்கும். அளபெடுக்கும் நெடில் எழுத்தின்
இனமான குறில் எழுத்து அளபெடையின் அடையாளமாய் வரும்.
முதல் = ஓ ஒதல்
இடை = உறாஅர்
கடை = படாஅ

செய்யுளின் ஓசை குறையாத இடத்திலும் இனிய இசைக்காக


அளபெடுப்பது உண்டு. இது இன்னிசை அளபெடை எனப்படும்.

எ.டு. கெடுப்பதூஉம்,
எடுப்பதூஉம்.

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் பெயர் சொல்லை


வினை எச்சச் சொல்லாக மாற்றுவதற்கு அளபெடுப்பதும் உண்டு. இது
சொல்லிசை அளபெடை எனப்படும்.

எ.டு உரனசைஇ
வரனசைஇ

ஒற்றளபடை

92. ஙஞண நமன வயலள ஆய்தம்

அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை

மிகலே அவற்றின் குறி ஆம் வேறே

செய்யுளில் ஓசை குறையும் போது இரு குறில்களின் அடுத்து அல்லது

ஒரு குறிலின் அடுத்து ங, ஞ, ண, ந, ம, ன, வ, ய, ல, ள என்னும் பத்து

மெய் எழுத்துகளும் ஆய்த எழுத்தும் அளபெடுக்கும். இவ்வாறு

அளபெடுத்தலுக்கு அடையாளமாய் அளபெடுக்கும் எழுத்தே அடுத்தும் வரும்.

Page - 37
ஒற்று அளபடை செய்யுளின் இடையிலும் கடையிலும் மட்டுமே

அளபெடுக்கும்.

இரு குறிலுக்கு அடுத்து ஒற்றளபெடை : இலங்ங்கு

ஒரு குறிலுக்கு அடுத்து ஒற்றளபெடை : எங்ங்கிறைவன்

மேலே கூறிய பதினோர் ஒற்று எழுத்துகளும் நான்கு வகையில்

அளபெடுக்கும்.

இரு குறிலுக்கு அடுத்து இடையில் = 11


இருகுறிலுக்கு அடுத்து இறுதியில் = 11
தனிக்குறிலுக்கு அடுத்து இடையில் = 11
தனிக்குறிலுக்கு அடுத்து இறதியில் = 11
44

ஆய்த எழுத்து, ஒற்றெழுத்தைப் போல் சொல்லின் கடைசியில் வராது.

எனவே அதற்கு இரண்டை நீக்கி விட்டால் மொத்தம் 42 ஒற்றளபெடை.

குற்றியலிகரம்

93. யகரம் வரக்குறள் உத்திரி இகரம் உம்

அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய

நிலைமொழியின் இறுதியில் குற்றியல் உகரம் வந்து வரும்மொழியின்

முதலில் ‘ய’ என்னும் எழுத்து வந்தால் ‘உ’ கரம் ‘இ’ கரமாக மாறும்.

மியா என்னும் அசைச் சொல்லில் உள்ள இகரமும் குற்றியலிகரம்

ஆகும்.

நாகு + யாது = நாகியாது

எஃகு + யாது = எஃகியாது

வரகு + யாது = வரகியாது

கொக்கு + யாது = கொக்கியாது

குரங்கு + யாது = குரங்கியாது

உல்கு + யாது = உல்கியாது

கேண்மியா = இதுவும் குற்றியலிகரம்.

Page - 38
இவ்வாறு குற்றியலுகரத்தை அடுத்து வந்த குற்றியலிகரம் = 36
மியா என்னும் அசைச் சொல் குற்றியலிகரம் = 1
37

குற்றியலுகரம்

94. நெடில் ஓடு ஆய்தம் உயிர் வலி மெலி இடைத்

தொடர் மொழி இறுதி வன்மை ஊர் உகரம்

அஃகும் பிற மேல் தொடர உம் பெறுமே

வல்லின எழுத்தின் மேல் ஏறிய உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையில்

இருந்து குறைந்து ஒலிக்கும். இது குற்றியலுகரம் எனப்படும்.

தனிநெடில் ஏழு, ஆய்தம் ஒன்று, சொல்லுக்கு இடையிலும்

கடையிலும் வராத ‘ஔ’ நீங்கிய உயிர் பதினொன்று வல்லினம் ஆறு,

மெல்லினம் ஆறு, ‘வ’ என்றும் இடையின எழுத்து வல்லின எழுத்தைத்

தொடர்ந்து வராததால் இடையினம் ஐந்து ஆகிய முப்பத்தாறு எழுத்துகளுக்கு

அடுத்து, குற்றியலுகரம் வரும்.

நெடில் தொடர்க்குற்றியலுகரம் - 7 – பாகு, காசு

ஆய்தத் தொடர்க்குற்றியலுகரம் - 1 - எஃகு, கஃசு

உயிர்த் தொடர்க்குற்றியலுகரம் - 11 - படகு, அரசு

வன் தொடர்க்குற்றியலுகரம் - 6 - பாக்கு, கச்சு

மென் தொடர்க்குற்றியலுகரம் - 6 - பஞ்சு, உண்டு


இடைத் தொடர்க்குற்றியலுகரம் - 5 - மார்பு, சால்பு

36

இவ்வாறு குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

முற்றியலுகரம்

மெல்லின மெய்யின் மேலும் இடையின மெய்யின் மேலும் வரும்

உகரமும் தனிக்குறிலை அடுத்து வல்லின மெய்யின்மேல் வரும் உகரமும்

முற்றியலுகரம் ஆகும்.

Page - 39
அம்மு - மெல்லின மெய்மேல் வந்துள்ளது (ம்+உ)

வரவு - இடையின மெய்மேல் வந்துள்ளது (வ்+உ)

பசு - தனிக்குறிலை அடுத்து வல்லின எழுத்தின்

மேல் வந்துள்ளது. (ச்+உ)

ஐகார, ஓளகாரக் குறுக்கங்கள்

95. தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்

நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்.

தன்னைச்சுட்டும் இடங்களில் மட்டும் ‘ஐ’ என்னும் எழுத்தும் ‘ஔ’

என்னும் எழுத்தும் இரண்டு மாத்திரையில் வரும். ஏனைய சொற்களில்

வரும் ‘ஐ’, ‘ஔ’ ஆகியவை குறுகி ஒரு மாத்திரையில் மட்டுமே வரும்.

ஐகாரம் சொல்லுக்கு முதல், இடை, கடை ஆகிய மூன்று

இடங்களிலும் வரும்.

எ.டு. ஐப்பசி, கடையன், குவளை,

ஒளகாரம் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும்.

எ.டு. ஒளவையார்

ஐகாரக்குறுக்கம் – 3,

ஔகாரக்குறுக்கம் -1,

ஐகாரமும் ஔகாரமும் அளபெடையில் குறுகாமல் ஒலிக்கும்.

மகரக் குறுக்கம்

96. ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்

ண, ன என்னும் எழுத்துகளுக்கு முன்னும் ‘வ’ என்றும் உயிர்

மெய்யின் பின்னும் மகரமெய் தனது அரை மாத்திரையில் குறைந்து

ஒலிக்கும். மகரக் குறுக்கம் மூன்று ஆகும்.

Page - 40
எ.டு மருண்ம்

போன்ம்

வரும் வங்கம்

97. லள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்

‘ல’ கார ‘ள’ கார ஈற்றுப் புணர்ச்சியில் உருவாகும் ஆய்தம் தன் அரை
மாத்திரையில் குறுகும். ஆய்தக் குறுக்கம் இரண்டு ஆகும்.

எ.டு. அல் + திணை = அஃறிணை

முள் + தீது = முஃடீது

உருவம்

97. தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்டு

எய்தும் எகர ஓகர மெய்புள்ளி.

எல்லா எழுத்துகளும் பழங்காலம் முதல் பல்வேறு வடிவங்களைக்

கொண்டுள்ளன. அவற்றுள் எ, ஓ ஆகிய எழுத்துகளும் மெய்

எழுத்துகளும் புள்ளி உடையவை ஆகும்.

(தற்காலத்தில் ‘எ’, ‘ஒ’ ஆகியவற்றிற்குப் புள்ளி வைத்து எழுதுவதில்லை.

மாத்திரை

99. மூன்று உயிரளபு, இரண்டாம் நெடில், ஒன்றே

குறிலோடு ஐ, ஔ குறுக்கம் ஒற்றளபு,

அரை ஒற்று இ, உ குறுக்கம் ஆய்தம்,

கால் குறள் மஃகான் ஆய்தம் மாத்திரை.

உயிரளபெடை - மூன்று மாத்திரை

Page - 41
உயிர் நெடில், - இரண்டு மாத்திரை

உயிர்மெய்நெடில்

உயிர்க் குறில்,

உயிர்மெய்க்குறில்,

ஐகாரக் குறுக்கம், - ஒரு மாத்திரை

ஔகாரக் குறுக்கம்,

ஒற்றளபெடை

மெய்எழுத்து,

குற்றியலிகரம், - அரை மாத்திரை

குற்றியலுகரம்,

ஆய்தம்

மகரக் குறுக்கம், - கால் மாத்திரை

ஆய்தக்குறுக்கம்

மாத்திரை – இலக்கணம்

100. இயல்பு எழு மாந்தர் இமைநொடி மாத்திரை.

இயல்பாக மனிதர் கண் இமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும்

நேரம் ஒரு மாத்திரையின் கால அளவு ஆகும்.

மாத்திரை – புறனடை

101. ஆவியும் ஒற்றும் அளவிறந்து இசைத்தலும்

மேவும் இசை, விளி, பண்டமாற்று ஆதியின்.

இசைக்கும் போதும் அழைக்கும் போதும் பண்டம் மாற்றம் போதும்

உயிர் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் முன்பு சொன்ன கால அளவைக்

கடந்து ஒலிக்கும்.

சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துக்கள்

Page - 42
102. பன்னீர் உயிர் உம் கசதந பமவய

ஞங ஈர் ஐந்து உயிர்மெய் உம் மொழி முதல்

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், க ச த ந ப ம வ ய ஞ ங என்னும்

பத்து உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள்

ஆகும்.

அணில், ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊசி, எலி, ஏணி, ஐந்து,

ஒட்டகம், ஓடம், ஔவை.

கண், சங்கு, தண்ணீர், நன்றி, படை, மஞ்சள், வண்டி,

யவனர், ஞமலி, ஙனம்,

வகரம் சொல்லுக்கு முதல்

103. உ ஊ ஒ ஓ அல ஒடு வ முதல்

உ, ஊ, ஒ, ஓ, அல்லாத ஏனைய உயிர் எழுத்துகளோடு ‘வ’ என்னும்

மெய் எழுத்து சொல்லுக்கு முதலில் வரும்.

வளை, வாழை, விடு, வீடு, வெல், வேல், வையம், வௌவால்,

யகரம் சொல்லுக்கு முதல்

104. அ ஆ உ ஊ ஓ ஔ ய முதல்

அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ ஆகிய ஆறு உயிர் எழுத்துகளோடு ‘ய’

என்னும் மெய் எழுத்து, சொல்லுக்கு முதலில் வரும்.

யவனர், யானை, யுகம், யூகம், யோசனை, யௌவனம்.

ஞகரம் சொல்லுக்கு முதல்

105. அ ஆ எ ஒ ஓடு ஆகும் ஞ முதல்

Page - 43
அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு உயிர் எழுத்துகளுடன் ஞகர மெய்

சொல்லுக்கு முதலில் வரும்.

ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று.

ஙகரம் சொல்லுக்கு முதல்

106. சுட்டு யா எகர வினா வழி அ ஐ

ஒட்டி ங உம் முதல் ஆகும்

அ, இ, உ என்னும் சுட்டு எழுத்துகளுக்கு அடுத்தும் யா, எ என்னும்

வினா எழுத்துகளுக்கு அடுத்தும் அகரத்தைச் சேர்ந்து ‘ங’ என்னும் மெய்

எழுத்து, சொல்லுக்கு முதலில் வரும்.

அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம்.

இறுதி நிலை

சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகள்

107. ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய்

சாயும் உகரம் நால் ஆறு உம் ஈரே

உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் தனித்தும் மெய் எழுத்தோடு சேர்ந்தும்

ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள ஆகிய பதினொரு மெய் எழுத்துகளும்

குற்றியலுகரமும் ஆகிய இருபத்து நான்கு எழுத்துகளும் சொல்லுக்கு

இறுதியில் வரும்.

அ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ ஆகிய உயிர் எழுத்துகள் தனித்தும் மெய்

எழுத்துகளுடன் சேர்ந்தும் இறுதியில் வரும்.

எ.டு. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ - தனித்து வந்தன.

கா, தீ, பூ, தே, தை, போ - மெய் எழுத்துடன்

சேர்ந்து வந்தன.

Page - 44
அ, இ, உ, எ, ஒ, ஔ ஆகிய உயிர் எழுத்துகள் மெய் எழுத்துகளுடன்

சேர்ந்து இறுதியில் வரும்.

எ.டு. வருக, கரி, பட்டு, சேஎ, நொ, கௌ.

ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய மெய் எழுத்துகள் இறுதியில்

வரும்.

எ.டு. உரிஞ், மண், பொருந், மரம், பயன், வேய், வேர்,

வேல், தெவ், வீழ், வாள்.

குற்றியலுகரம் சொல்லுக்கு இறுதியில் வரும்.

எ.டு. எஃகு

சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகள் சிறப்பு விதி

108. குற்று உயிர் அளபின் ஈறு ஆம் எகரம்

மெய் ஒடு ஏலாது ஒ ந ஒடு ஆம் ஔ

ககர வகரம் ஓடு ஆகும் என்ப.

குறில் உயிர் எழுத்துகள், (அ, இ, உ, எ, ஒ) அளபெடையின்

அடையாளமாகச் சொல்லின் இறுதியில் தனித்து ஈறு ஆகும்.

‘எ’ கர உயிர் எழுத்து, மெய் எழுத்துடன் சேர்ந்து ஈற்றில் வராது.

‘ஒ’ கார உயிர் எழுத்து நகர மெய் ஒன்றுடன் ஈறு ஆகும்.

‘ஔ’ கார உயிர் எழுத்து, ககரம், வகரம் ஆகிய இரண்டு மெய்களுடன்


சேர்ந்து ஈறு ஆகும்.

அளபெடையில் உயிர்க்குறில் ஈறு – பலாஅ, தீஇ, பூஉ, சேஎ, கைஇ,

கோஒ, கௌஉ.

ஒகர ஈறு - நெ

ஔகார ஈறு - கௌ, வௌ

Page - 45
(நொ – துன்பம், கௌ – பற்று, வௌ – கொள்ளை அடி)

எழுத்து – முதலும் ஈறும்

109. நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே

மெய் எழுத்து முதலிலும் உயிர் எழுத்து இறுதியிலும் வருவது

போன்றே உயிர்மெய் எழுத்துக்கு முதலில் மெய் எழுத்தும், இறுதியில் உயிர்

எழுத்தும் வரும்.

இடைநிலை மயக்கம்

110. க ச த ப ஒழித்த ஈரேழன் கூட்டம்

மெய்ம்மயக்கு உடனிலை ர, ழ ஒழித்து ஈரெட்டு

ஆகும் இவ்இருபால் மயக்கும் மொழிஇடை

மேவும் உயிர்மெய் மயக்கு அளவின்றே.

க, ச, த, ப என்னும் நான்கும் அல்லாத பதினான்கு மெய்

எழுத்துகளும் பிறமெய்களோடு கூடுவது வேற்று நிலை மெய்ம்மயக்கம்

ஆகும்.

ர, ழ என்னும் இரண்டும் அல்லாத பதினாறு மெய் எழுத்துகளும்

தம்முடன் கூடுவது உடனிலை மெய்ம்மயக்கம் ஆகும்.

மேற்கூறிய இரு மெய்ம்மயக்கங்களும் ஒரு சொல்லுக்கும்

சொற்றொடருக்கும் நடுவில் வரும்.

உயிருடன் மெய்யும், மெய்யுடன் உயிரும் மயங்கும் மயக்கத்தை

அளவிட இயலாது.

வேற்றுநிலை மெய்ம்மயக்கம் – சிறப்பு விதி

111. ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே.

Page - 46
ஙகர மெய்யின் முன் ககரம் மயங்கும். வகர மெய்யின் முன் யகரம்

மயங்கும்.

எ.டு தங்கம் - ஙகர மெய்முன் ககரம்

தெவ்யாது - வகர மெய்முன் யகரம்.

112. ஞ ந முன் தம்இனம் யகரமொடு ஆகும்.

ஞகர, நகர மெய் எழுத்துகளின் முன் அவற்றிற்கு இனமான சகர, தகர

மெய் எழுத்துகள் மயங்கும். ஞகர, நகர மெய்கள் யகரத்துடனும் மயங்கும்.

எ.டு. பஞ்சு – ஞகர மெய் உடன் இன எழுத்து ‘ச்’

பந்து – நகர மெய் உடன் இன எழுத்து ‘த்’

உரிஞ்யாது யகரத்துடன் மயங்கியுள்ளது.

பொருந் யாது

113. ட ற முன் க ச ப மெய்யுடன் மயங்கும்.

டகர, றகர மெய்களின் முன் க, ச, ப என்னும் மூன்று மெய்

எழுத்துகளும் மயங்கும்.

எ.டு. உட்கு, கட்சி, திட்பம்.

கற்க, முயற்சி, கற்பு.

114. ண ன முன் இனம் க ச ஞ ப ம ய வ வரும்.

ணகர, னகர மெய் எழுத்துகளின் முன் அவற்றின் இனமான டகரமும்,

றகரமும் க, ச, ஞ, ப, ம, ய, வ ஆகிய ஏழு மெய்களும் மயங்கும்.

எ.டு. வண்டு, எண்கு, வெண்சோறு, வெண்ஞமலி,

அண்பல், வெண்மை, மண்யாது, மண்வலிது,

நன்று, புன்கு, புன்செய், புன்ஞமலி, புன்பயிர்,

புன்மை, பொன்யாது, பொன் வலிது.

115. மம்முன் ப ய வ மயங்கும் என்ப.

Page - 47
மகர மெய்எழுத்தின் முன் ப, ய, வ என்னும் மூன்று மெய்களும்

மயங்கும்.

எ.டு. கம்பன்

கலம் யாது

கலம் வலிது

116. ய ர ழ முன்னர் மொழி முதல் மெய்வரும்.

ய, ர, ழ என்னும் மூன்று மெய் எழுத்துகளின் முன், சொல்லுக்கு

முதலாக வரும் பத்து மெய் எழுத்துகளும் மயங்கும்.

எ.டு. வேய் கடிது, வேய்சிறிது, வேய்தீது, வேய் நீண்டது,

வேய் பெரிது, வேய் மாண்டது, வேய் ஞான்றது,

வேய் யாது, வேய் வலிது, வேய்ங்குழல்,

வேர் கடிது, வேர்சிறிது, வேர்தீது, வேர் நீண்டது,

வேர் பெரிது, வேர் மாண்டது, வேர் ஞான்றது,

வேர் யாது, வேர் வலிது, ஆர்ங்கோடு.

வீழ் கடிது, வீழ் சிறிது, வீழ் தீது, வீழ் நீண்டது,

வீழ் பெரிது, வீழ் மாண்டது, வீழ் ஞான்றது,

வீழ் யாது, வீழ் வலிது, பாழ்ங்கிணறு.

117. ல ள முன் க ச ப வ ய ஒன்றும்மே

லகர ளகர மெய் எழுத்துகளின் முன் க, ச, ப, வ, ய என்னும் ஐந்து

மெய்யும் மயங்கும்.

எ.டு. வேல் கடிது, வேல் சிறிது, வேல் பெரியது,

வேல் வலிது, வேல் யாது.

வாள் கடிது, வாள் சிறிது, வாள் பெரிது,

வாள் வலிது, வாள் யாது.

உடனிலை மெய் மயக்கம் – சிறப்பு விதி

Page - 48
118. ர ழ அல்லன தம்முடன் தாம் உடன் நிலையும்.

ரகரம், ழகரம் அல்லாத பதினாறு மெய் எழுத்துகளும் தமக்கு முன்

தாமே நின்று மயங்கும்.

எ.டு. அக்கம் அண்ணம் அய்யன்

அங்ஙனம் அத்து அல்லி

அச்சம் அந்நீர் அவ்வாள்

அஞ்ஞை அப்பம் அள்ளல்

அட்டு அம்மை அற்றம்

அன்னம்

தனி மெய்யுடன் தனிமெய்யாய் மயங்குவனவும்

மொழிக்கு உறுப்பாக மயங்காதனவும்

119. ய ர ழ ஒற்றின்முன் க ச த ப ங ஞ ந ம

ஈரொற்றாம் ர ழ தனிக்குறில் அணையா.

ய, ர, ழ என்னும் மெய் எழுத்துகளின் முன் க, ச, த, ப, ங, ஞ, ந, ம

என்னும் எட்டு மெய்களும் தனிமெய்யும் உயிர்மெய்யும் ஆகி மயங்கும்.

ர, ழ என்னும் மெய் எழுத்துகள் தனிக்குறிலின் முன் மயங்குவது

இல்லை.

வேய்க்குறை, வேர்க்குறை, வீழ்க்குறை - க்


வேய்ச்சிறை, வேர்ச்சிறை, வீழ்ச்சிறை - ச்

வேய்த்தலை, வேர்த்தலை, வீழ்த்தலை - த்

வேய்ப்புறம், வேர்ப்புறம், வீழ்ப்புறம் - ப்


வேய்ங்கோடு, ஆர்ங்கோடு, பாழ்ங்கிணறு - ங்
தேய்ஞ்சது, கூர்ஞ்சிறை, பாழ்ஞ்சுனை - ஞ்
காய்ந்தனம், நேர்ந்தனம், வாழ்ந்தனம் -ந்
வேய்ம்புறம், ஈர்ம்பணை, பாழ்ம்பதி - ம்

செய்யுளில் ஈரொற்றாய் நிற்கும் எழுத்துகள்

Page - 49
120. ல ள மெய் திரிந்த ன ண முன் மகாரம்

நைந்து ஈரொற்றாம் செய்யுள் உள்ளே.

ல, ள என்னும் மெய் எழுத்துகள் ன, ண என்னும் மெய் எழுத்துகளாக

மாறி அவற்றின் முன்வரும் ‘ம’ என்னும் மெய்எழுத்து, குறுகிச் செய்யுளில்

ஈரொற்று ஆகும்.

எ.டு திசையறி மீகானும் போன்ம்

மயிலியன் மாதர் மருண்ம்

முதல் நிலை, இறுதிநிலை, இடைநிலை – புறனடை

121. தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும்

இம்முறை மாறியும் இயலும் என்ப.

எழுத்துகளின் பெயர்களைச் சொல்லி நிலைமொழி வருமொழிகளாகச்

சேர்க்கும் போது சொல்லின் முதலுக்கும் இடைநிலை மயக்கத்திற்கும் எல்லா

எழுத்தும் முதல் ஆகியும் மயங்கியும் வரும்.

போலி

சொல் இறுதிப் போலி

122. மகரஇறுதி அஃறிணைப் பெயரின்

னகரமோடு உறழா நடப்பன உளவே.

பால் பகுக்க இயலாத அஃறிணைப் பெயர்களில் சொல்லின் இறுதியில்

நிற்கும் மகரம், னகர மெய்யோடு ஒத்து நடப்பது உண்டு. இது சொல்

இறுதிப்போலி ஆகும்.

எ.டு. அகம் - அகன்

நிலம் - நிலன்

நிலம் - நிலன்

Page - 50
சொல் முதல், இடைப்போலிகள்

123. அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன்.

சொல்லுக்கு முதலிலும் இடையிலும் ச, ஞ, ய என்னும் மெய்

எழுத்துகளுக்கு முன் ‘அ’ என்னும் எழுத்துடன் ‘ஐ’ என்னும் எழுத்து

வேறுபாடு இல்லாமல் வரும்.

எ.டு. பசல் - பைசல்

மஞ்சு - மைஞ்சு முதல் போலி

மயல் - மையல்

அமச்சு - அமைச்சு

இலஞ்சி - இலைஞ்சி இடைப் போலி

அரயர் - அரையர்

சொல் இடைப் போலி – சிறப்பு விதி

124. ஐகான் ய வழி ந ஒடு சில் வழி

ஞஃகான் உறழும் என்மர் உம் உளரே

சொல்லுக்கு நடுவே சில இடங்களில் ஐ, ய என்னும் எழுத்துகளுக்கு

அடுத்து இயல்பாய் வரும் ‘ந’ என்னும் மெய் எழுத்துடன் ‘ஞ’ என்னும் மெய்
எழுத்து, போலியாய் நடக்கும்.

எ.டு. ஐஞ்நூறு, சேய்ஞலூர்,

மைஞ்ஞின்ற, செய்ஞ்ஞின்ற.

சந்தியக்கரம் (கூட்டு எழுத்து)

125. அ முன் இகரம் யகரம் என்ற இவை

எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அ ஓடு

உ உம் வ உம் ஔ ஓர் அன்ன.

Page - 51
அ என்னும் எழுத்தின் முன் இகரம், யகரம் என்னும் எழுத்துகளை

ஒன்று, சேர்ந்தால் ‘ஐ’ என்னும் நெடில் எழுத்து ஒலிக்கும்.

அ என்னும் எழுத்தின் முன் உகரம், வகரம், என்னும் எழுத்துகளை

ஒன்று, சேர்ந்தால் ‘ஒள’ என்னும் நெடில் எழுத்து ஒலிக்கும்.

அ + இ = ஐ

அ + ய் = ஐ

அ + உ = ஔ

அ + வ் = ஔ

எழுத்துச் சாரியைகள்

126. மெய்கள் அகரம் உம் எட்டு உயிர் காரம் உம்

ஐ ஔ கான் உம் அருமை குறில் இவ்

இரண்டு ஒடு கரம் உம் ஆம் சாரியை பெறும் பிற

மெய் எழுத்துக்கள் அகரச்சாரியை பெறும். உயிர் நெடில் எழுத்துகள்

காரச் சாரியை பெறும் ஐ, ஔ என்னும் நெடில் எழுத்துகள் காரச்

சாரியையும் பெறும். உயிர்க்குறிலும் உயிர்மெய்க்குறிலும் காரம், கான், கரம்

ஆகிய சாரியைகள் பெறும்.

க் + அகரம் = ககரம்
ஆ + காரம் = ஆகாரம்

ஐ + காரம் = ஐகாரம்

ஐ + கான் = ஐகான்

அ + கரம் = அகரம்

அ + காரம் = அகாரம்

அ + கான் = அஃகான்

க + கரம் = ககரம்

க + காரம் = ககாரம்

க + கான் = கஃகான்

Page - 52
குறில் எழுத்துகளுடன் ‘கான்’ என்னும் சாரியை சேரும் போது ‘ஃ’

தோன்றும்.

எழுத்தியலுக்குப் புறனடை

127. மொழி ஆய் தொடரின் உம் முன் அனைத்து எழுத்தே

எழுத்துகள் சொல்லாகவும் தொடராகவும் வந்தாலும் முன்பு

சொல்லப்பட்ட பத்து இலக்கணத்தையும் உடையவை ஆகும்.

எழுத்து இலக்கணம் பன்னிரண்டு பகுதிகளைக் கொண்டதாக 57 ஆம்

நூற்பாவில் பார்த்தோம். அவற்றில் எண், பெயர், முறை, பிறப்பு, வடிவம்,

அளவு, முதல் நிலை, இடைநிலை, கடைநிலை, போலி ஆகிய பத்தும்

எழுத்தின் அக இலக்கணம் எனப்படும்.

பதம், புணர்ச்சி ஆகிய இரண்டும் எழுத்தின் புற இலக்கணம் எனப்படும்.

இந்த நூற்பாவில் எழுத்தின் அக இலக்கணம் பத்தும் குறிக்கப் பெற்றுள்ளன.

Page - 53
அலகு - III
பதவியல்

பத இலக்கணத்தை விளக்கும் இயல்

பதம்

128. எழுத்தே தனித்து உம் தொடர்ந்து உம் பொருள் தரின்

பதம் ஆம் அது பகாப்பதம் பகுபதம் என

இரு பால் ஆகி இயலும் என்ப

எழுத்துகள் தனித்து வந்தும் தொடர்ந்து வந்தும் பொருள் தந்தால் அது

பதம் எனப்படும். பதம் இருவகைப்படும்.

1) பகாப்பதம்,
2) பகுபதம்,

பதம் என்றால் சொல் என்று பொருள்.

ஓர் எழுத்து ஒரு சொல்

129. உயிர் ம இல் ஆறு உம் த ப ந இல் ஐந்து உம்


க வ ச இல் நால் உம் ய இல் ஒன்று உம்

ஆகும் நெடில் நொது ஆம் குறில் இரண்டு ஓடு

ஓர் எழுத்து இயல் பதம் ஆறு ஏழ் சிறப்பின

உயிர் நெடில் எழுத்துகள் ஆறும், மகர நெடில் எழுத்துகள் ஆறும்,

தகரத்தில் நெடில் எழுத்துகள் ஐந்தும், பகரத்தில் நெடில் எழுத்துகள் ஐந்தும்,

நகரத்தில் நெடில் எழுத்துகள் ஐந்தும், ககரத்தில் நெடில் எழுத்துகள் நான்கும்,

வகரத்தில் நெடில் எழுத்துகள் நான்கும், சகரத்தில் நெடில் எழுத்துகள்

நான்கும், யகரத்தில் யா என்னும் நெடில் எழுத்து ஒன்றும் நொ, து என்னும்

குறில் எழுத்து இரண்டும் ஆகிய நாற்பத்து இரண்டும் ஓர் எழுத்து ஒரு சொல்

ஆகும்.

Page - 54
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ - உயிர் நெடில்

மா, மீ , மூ, மே, மை, மோ - மகர நெடில்

தா, தீ, தூ, தே, தை - தகர நெடில்

பா, பூ, பே, பை, போ - பகர நெடில்

நா, நீ, நே, நை, நோ - நகர நெடில்

கா, கூ, கை, கோ - ககர நெடில்

வா, வீ, வை, வௌ - வகர நெடில்

சா, சீ, சே, சோ - யகர நெடில்

யா - யகர நெடில்

நொ, து - குறில்

ஆ – பசு, ஈ – பூச்சி, ஊ – இறைச்சி, ஏ-அம்பு, ஐ-அழகு, ஓ-மதகு, நீர் தாங்கும்

பலகை, மா-விலங்கு, மீ -மேல், மூ-முதுமை, மே-மேல், மை-முகில், மோ-

முகர், தா-துன்பம், தீ-நெருப்பு, தூ-தூய்மை, தோ-இனிமை, தை-ஒரு மாதம்,

பா-பாட்டு, பூ-மல், பே-அச்சம், பை-கைப்பை, போ-போ என்னும் ஏவல், நா-நடு;

நாக்கு, நீ-முன்னிலை ஒருமைப்பெயர். நே-அன்பு, நை-நைதல், நோ-நோவு,

கா-சோலை. கூ-கூவுதல், கை-மனித உறுப்பு, கோ-அரசன், வா-அழைத்தல், வீ-

மலர், வை-வைத்தல், வௌ-கவர், சா-சாதல், சீ-சீழ், சே-சே என்னும் மரம்,

சோ-மதில், யா-ஒரு மரம், நொ-துன்பம், து-உண்.

தொடர் எழுத்து ஒரு சொல்

130. பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும்

எழுத்து ஈறாகத் தொடரும் என்ப.

பகாப்பதம் இரண்டு எழுத்து முதல் ஏழு எழுத்து ஈறாக வரும்.

பகுபதம் இரண்டு எழுத்து முதல் ஒன்பது எழுத்து ஈறாக வரும்.

அணி, அறம், அகலம், அருப்பம், திருப்பணம், உத்திரட்டாதி-பகாப்பதம்.

கூனி, கூனன், குழையன், பொருப்பான், அம்பலம், அரங்கத்தான்,

உத்திராடத்தான், உத்திரட்டாதியான் – பகுபதம்.

Page - 55
பகாப்பதம்

131. பகுப்பு ஆல் பயன் அற்று இடுகுறி ஆகி

முன்னே ஒன்று ஆய் முடிந்து இயல்கின்ற

பெயர் வினை இடை உரி நான்கு உம் பகாப்பதம்

பகுதி, விகுதி என்று பிரித்தால் பகாப்பதம் பொருள் தராது. இடுகுறிப்

பெயராக வரும். பழங்காலம் முதலே ஒன்றாக நடக்கின்ற பெயர், வினை,

இடை, உரி ஆகிய நான்கு சொற்களும் பகாப்பதங்கள் ஆகும்.

நிலம், நீர் - பெயர்ப் பகாப்பதம்

நட, வா - வினைப் பகாப்பதம்

மன், கொல் - இடைப்பகாப்பதம்

உறு, தவ - உரிப்பகாப்பதம்

பகுபதம்

132. பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின்

வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதமே

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய பெயர்ச்

சொற்களும், தெரிநிலை வினை, குறிப்பு வினை ஆகியவையும் பகுபதங்கள்

ஆகும்.

பெயர்ப்பகுபதம்

பொன்னன் - ‘பொன்’ என்னும் பொருட்பெயர்


அடியாகப் பிறந்தது.

ஊரன் - ‘ஊர்’ என்னும் இடப்பெயர் அடியாகப்


பிறந்தது.

ஆதிரையான் - ‘ஆதிரை’ என்னும் காலப் பெயர்


அடியாகப் பிறந்தது.

கண்ணன் - ‘கண்’ என்னும் சினைப் பெயர்


அடியாகப் பிறந்தது.

கரியன் - ‘கருமை’ என்னும் பண்புப் பெயர்

Page - 56
அடியாகப் பிறந்தது.

நடிகன் - ‘நடித்தல்’ என்னும் தொழிற் பெயர்


அடியாகப் பிறந்தது.

தெரிநிலை வினைப் பகுபதம்

நடந்தான், நடக்கின்றான்,

நடப்பான் - உடன்பாட்டுத் தெரிநிலை

வினைமுற்றுப் பகுபதம்

நடந்திலன், நடக்கின்றிலன்,

நடவான் - எதிர்மறைக் தெரிநிலை

வினைமுற்றுப் பகுபதம்

நடந்த, நடக்கின்ற,

நடக்கும் - உடன்பாட்டுத் தெரிநிலைப்

பெயரெச்சப் பகுபதம்

நடந்து, நடக்க,

நடக்கின் - உடன்பாட்டுத் தெரிநிலை

வினையெச்சப் பகுபதம்.

நடவாத - எதிர்மறைத் தெரிநிலைப்

பெயரெச்சப் பகுபதம்.

நடவா - ஈறுகெட்ட எதிர்மறைப்

பெயரெச்சப் பகுபதம்.

குறிப்பு வினைப் பகுபதம்

பொன்னன், கரியன் - உடன்பாட்டுக் குறிப்பு வினை முற்றுப்

பகுபதம்.

அல்லன், இல்லன் - எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றுப்

பகுபதம்

கரிய, பெரிய - உடன்பாட்டுக் குறிப்புப் பெயரெச்சப்

பகுபதம்

Page - 57
பைய, மெல்ல - உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சப்

பகுபதம்

அல்லாத, இல்லாத - எதிர்மறைக் குறிப்புப் பெயரெச்சப்

பகுபதம்

அன்றி, இன்றி - எதிர்மறைக் குறிப்பு வினையெச்சப்

பகுபதம்.

வினையாலணையும் பெயர்ப் பகுபதம்

நடந்தவன், - தெரிநிலை வினையாலணையும்

பாடியவன் பெயர்ப் பகுபதம்.

நல்லவன், - குறிப்பு வினையாலணையும்

கெட்டவன் பெயர்ப் பகுபதம்

பகுபத உறுப்புகள்

133. பகுதி விகுதி இடைநிலை சாரியை

சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை

முன்னி புணர்ப்ப முடியும் எப்பதங்களும்

பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகிய ஆறும்

பகுபதம் உறுப்புகள் ஆகும். மேற்கூறிய ஆறு உறுப்புகளுக்குள்ளும் எல்லாச்

சொற்களும் முடியும்.

பகுதி

134. தத்தம்

பகாப்பதங்களே பகுதி ஆகும்.

Page - 58
பகுபதத்தில் முதலில் நிற்கும் பகாப்பதமே பகுதி ஆகும்.

பண்புப் பகுதி – சிறப்பு விதி

135. செம்மை சிறுமை சேய்மை தீமை

வெம்மை புதுமை மென்மை மேன்மை

திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர்

இன்னவும் பண்பில் பகாநிலைப் பதமே.

செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை,

மேன்மை, திண்மை உண்மை, நுண்மை முதலிய பதினொன்றும் இவற்றுக்கு

எதிரான கொடுமை, வன்மை, கீழ்மை, எண்மை, இன்மை, பருமை

முதலியனவும் இவை போன்றனவும் பண்புப் பெயரில் பகாப்பதங்கள் ஆகும்.

136. ஈறு போதல் இடை உகரம் இஆதல்

ஆதிநீடல் அடிஅகரம் ஐஆதல்

தன் ஒற்று இரட்டல் முன்நின்ற மெய்திரிதல்

இனமிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே.

இறுதியில் உள்ள ‘மை’ விகுதி கெடுவதும் இடையில் நிற்கும் உகரம்,

இகரமாக மாறுவதும் முதலில் நிற்கும் குறில் நெடில் ஆக மாறுவதும்

முதலில் நிற்கும் அகரம், ஐகாரமாக மாறுவதும் தன் மெய் எழுத்து மீண்டும்

வருவதும் முன்நிற்கும் மெய், வேறு மெய் ஆவதும் வரும் எழுத்திற்கு

இனஎழுத்து மிகுவதும் இவை போன்ற பிறவும் பண்புச் சொற்களுக்கு

இயல்பு ஆகும்.

வல்லன் – வன்மை + அன்

Page - 59
இதில் ஈற்றில் உள்ள ‘மை’ விகுதி கெட்டது, முன்நின்ற மெய் திரிதல்

விதிப்படி னகர ஒற்று லகர ஒற்றாகத் திரிந்தது. தன் ஒற்று இரட்டல்

என்னும் விதிப்படி ‘ல்’ தோன்றியது.

பெரியன் – பெருமை + அன்

இதில் ஈற்றில் உள்ள ‘மை’ விகுதி கெட்டது. இடை உகரம் ‘இ’ ஆதல்

விதிப்படி ‘ரு’ என்னும் எழுத்து ‘ரி’ என்று மாறியது.

பாசி – பசுமை

இதில் ஈற்றில் உள்ள ‘மை’ விகுதி கெட்டது. இடை உகரம் ‘இ’ ஆதல்

விதிப்படி ‘சு’ என்னும் எழுத்து ‘சி’ என்று மாறியது. ஆதி நீடல் என்ற

விதிப்படி ‘ப’ என்னும் எழுத்து, ‘பா’ என்று மாறியது.

பைந்தார் – பசுமை + தார்

இதில் ஈற்றில் உள்ள ‘மை’ விகுதி கெட்டது. அடி அகரம் ஐ ஆதல்

விதிப்படி ‘ப’ என்னும் எழுத்து, ‘பை’ என்று மாறியது.

இன மிகல் என்னும் விதிப்படி வருமொழி முதலுக்கு இனமான ‘ந்’

தோன்றியது.

இனையவும் என்றதன்படி இடையில் நின்ற உயிர்மெய் கெட்டது.

வெற்றிலை – வெறுமை + இலை

இறுதியில் உள்ள ‘மை’ விகுதி கெட்டது. தன் ஒற்று இரட்டல் என்ற

விதிப்படி ‘ற்’ தோன்றியது.

‘வெற்று + இலை’ என்று ஆனது.

Page - 60
‘உயிர்வரின் உக்குறள் மெய் விட்டு ஓடும்’ என்ற விதிப்படி ‘வெற்ற் +

இலை’ என்று ஆனது.

‘உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இய்லபே’ என்ற விதிப்படி

‘வெற்றிலை’ என்று ஆனது.

சேதாம்பல் – செம்மை + ஆம்பல்

இதில் இறுதியில் உள்ள ‘மை’ விகுதி கெட்டது. ‘ஆதி நீடல்’ விதிப்படி

‘செ’ என்னும் எழுத்து ‘சே’ என்று ஆனது.

‘முன்நின்ற மெய்திரிதல்’ என்ற விதிப்படி மகர மெய், தகர மெய்யாக

மாறியது.

கருங்கோழி – கருமை + கோழி

இதில் இறுதியில் உள்ள ‘மை’ விகுதி கெட்டது. வரும் எழுத்தின்

இனமான ‘ங்’ தோன்றியுள்ளது.

தெரிநிலை வினைப்பகுதி – சிறப்புவிதி

137. நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை

நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,

தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று

எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்

செய் என் ஏவல் வினைப் பகாப் பதமே.

Page - 61
நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண்,

பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்னும்

இருபத்து மூன்று ‘செய்’ என்னும் ஏவல் பகாப்பதப் பகுதியும், வினைப்

பகாப்பதப் பகுதியும் ஆகும்.

ஏவல் பகுதி – சிறப்புவிதி

138. செய் என் வினைவழி விப்பி தனிவரின்

செய்விஎன் ஏவல் இணையின் ஈர் ஏவல்.

செய் என்னும் வாய்பாட்டு வினையின் பின் ‘வி’ என்னும் விகுதி

தனியாக வந்தால் அது ‘செய்வி’ என்னும் ஓர் ஏவல் ஆகும். வி, பி என்னும்

விகுதிகள் இணைந்து வந்தால் அது ‘செய்விப்பி’ என்னும் ஈர் ஏவல் ஆகும்.

குற்றியலுகர விகுதி பெற்ற ஏவல்

கு, சு, டு, து, பு, று ஆகிய குற்றியலுகர விகுதி பெற்றும் ஏவல் வரும்.

எ.டு. போ - போக்கு

பாய் - பாய்ச்சு

உருள் - உருட்டு

நட - நடந்து

எழு - எழுப்பு

பயில் - பயிற்று

வினைப் பகுதிக்குப் புறனடை

Page - 62
139. விளம்பிய பகுதி வேறு ஆதலும் விதியே.

சொல்லப்பட்ட வினைப்பகுதிகள் வேறுபடுதலும் இலக்கண

வரையறைக்கு உட்படும்.

விகுதி

140. அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார்


அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அன்,
அம், ஆம், எம், ஏம், ஓமொடு உம்ஊர்
கடதற ஐ ஆய் இம்மின் இர் ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே.

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என்,
ஏன், அல், அன், அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும், ஐ, ஆய், இ,
மின், இர், ஈர், ஈயர், க, ய, உம் என்பவை வினையின் விகுதிகள் ஆகும்.

நடந்தனன் - அன் ஆண்பால் விகுதி


நடந்தான் - ஆன்

நடந்தனள் - அள் பெண்பால் விகுதி


நடந்தாள் - ஆள்

நடந்தனர் - அர்
நடந்தார் - ஆர்
நடப்ப - ப பலர் பால் விகுதி
நடமார் - மார்

நடந்தது - து
கூயிற்று - று ஒன்றன் பால் விகுதி
குண்டுகட்டு - டு

நடந்தன - அ பலவின்பால் விகுதி


நடவா - ஆ

Page - 63
நடக்கு - கு
உண்டு - டு
நடந்து - து
சேறு - று தன்மை ஒருமை விகுதி
நடந்தனென் - என்
நடந்தேன் - ஏன்
நடப்பல் - அல்
நடப்பன் - அன்

நடப்பம் - அம்
நடப்பாம் - ஆம்
நடப்பெம் - எம்
நடப்பேம் - ஏம்
நடப்போம் - ஓம் தன்மைப் பன்மை விகுதி
நடக்கும் - கும்
உண்டும் - டும்
நடந்தும் - தும்
சேறும் - றும்

நடந்தனை - ஐ
நடந்தாய் - ஆய் முன்னிலை ஒருமை விகுதி
நடத்தி - இ

நடமின் - மின்
நடந்தனிர் - இர் முன்னிலைப் பன்மை விகுதி
நடந்தீர் - ஈர்

நிலீயர் - ஈயர்
நடக்க - க வியங்கோள் விகுதி
வாழிய - ய

நடக்கும் - உம் – செய்யும் என்னும் முற்றும் விகுதி.

இடைநிலை
பெயர் இடைநிலை

Page - 64
141. இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்துஇடை நின்றதை
வினைப்பெயர் அல்பெயர்க்கு இடைநிலை எனலே.

இலக்கியத்தைப் பார்த்து அதற்கு இலக்கணம் சொல்லுவதால்,


பகுதியையும் விகுதியையும் பிரித்து இடையில் நின்றதை
வினையாலணையும் பெயர் அல்லாத பெயர்களுக்கு இடைநிலை என்று
சொல்லுவார்கள்.

அறிஞர், கவிஞன் - ‘ஞ்’ இடைநிலை


ஓதுவான், பாடுவான் - ‘வ்’ இடைநிலை
வலைச்சி, இடைச்சி - ‘ச்’ இடைநிலை
விடுநன், பொருநன் - ‘ந்’ இடைநிலை
பார்ப்பாத்தி, பாணத்தி - ‘த்’ இடைநிலை
கட்டுவிட்சி, செட்டிச்சி - ‘இச்’ இடைநிலை

இறந்த கால இடைநிலை

142. தடறஒற்று இன்னே ஐம்பால் மூவிடத்து


இறந்த காலம்தரும் தொழில் இடைநிலை

த், ட், ற், இன் என்னும் நான்கும் ஐந்துபால், மூவிடத்திலும் வரும்


இறந்த கால இடைநிலைகள் ஆகும்.

நடந்தான்
நடந்தாள்
நடந்தார்
நடந்தது ‘த்’ என்னும் இடைநிலை
நடந்தன
நடந்தீர்
நடந்தேன்

உண்டான்
உண்டாள்
உண்டார்
உண்டது ‘ட்’ என்னும் இடைநிலை
உண்டன

Page - 65
உண்பீர்
உண்டேன்

சென்றான்
சென்றாள்
சென்றார்
சென்றது ‘ற்’ என்னும் இடைநிலை
சென்றன
சென்றீர்
சென்றேன்

உறங்கினான்
உறங்கினாள்
உறங்கினார்
உறங்கினது ‘இன்’ என்னும் இடைநிலை
உறங்கின
உறங்கினீர்
உறங்கினேன்

நிகழ்கால இடைநிலை

143. ஆநின்று கின்று கிறு மூவிடத்தின்


ஐம்பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை

ஆநின்று, கின்று, கிறு ஆகிய மூன்றும் ஐம்பால் மூவிடங்களிலும்


நிகழ்காலத்தைக் காட்டும் இடைநிலைகள் ஆகும்.

எ.டு. நடவாநின்றான் - ஆநின்று


நடக்கின்றான் - கின்று
நடக்கிறான் - கிறு

எதிர்கால இடைநிலை

144. ப வ மூவிடத்து ஐம்பால் எதிர்பொழுது


இசை வினை இடைநிலையாம் இவை சில இல.

Page - 66
ப், வ் ஆகிய இரண்டும் ஐந்துபால், மூவிடங்களிலும் எதிர்காலத்தைக்
காட்டும் இடைநிலைகள் ஆகும்.

எ.டு. நடப்பான் - ப்
வருவான் - வ்

காலம் காட்டும் விகுதி

145. றவ்வொடு உகர உம்மை நிகழ்பு அல்லவும்


தவ்வொடு இறப்பும் எதிர்வும் டவ்வொடு
கழிவும் கவ்வோடு எதிர்வும் மின்ஏவல்
வியங்கோள் இம்மார் எதிர்வும் ப அந்தம்
செலவொடு வரவும் செய்யும் நிகழ்பு எதிர்வும்
எதிர்மறை மும்மையும் ஏற்கும் ஈங்கே

இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் உணர்த்தும் று, றும்


என்பனவும், இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் உணர்த்தும் து, தும்
என்பனவும், இறந்தகாலத்தை உணர்த்தும் டு, டும் என்பனவும்,
எதிர்காலத்தை உணர்த்தும் மின், ஈர், உம், ஆய் (ஏவல்) என்பனவும்,
எதிர்காலத்தை உணர்த்தும் க, இய, இயர் (வியங்கோள்) என்பனவும்,
எதிர்காலத்தை உணர்த்தும் இ, மார் என்பனவும் இறந்த காலத்தையும்
எதிர்காலத்தையும் காட்டும் ‘ப’ என்பதும், நிகழ்காலத்தை உணர்த்தும்
செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றும், முக்காலத்தையும் உணர்த்தும் ‘ஆ’
என்னும் எதிர்மறையும் காலம் காட்டும் விகுதிகள் ஆகும்.

சென்று, சென்றும் - று, றும் - இறந்தகாலம்


சேறு, சேறும் - று, றும் - எதிர்காலம்

வந்து, வந்தும் - து, தும் - இறந்தகாலம்


வருது, வருதும் - து, தும் - எதிர்காலம்

உண்டு, உண்டும் - டு, டும் - இறந்தகாலம்


உண்கு, உண்கும் - கு, கும் - எதிர்காலம்

உண்மின், உண்ணீர், உண்னும்


உண்ணாய் – மின், ஈர், உம், அய் - எதிர்காலம்
உண்க, வாழிய, வாழியர் - க, இய, இயர் - எதிர்காலம்
சேறி - இ - எதிர்காலம்

Page - 67
உண்மார் - மார் - எதிர்காலம்
உண்ணா - ஆ - எதிர்மறை,
முக்காலம்.

வடமொழி ஆக்கம்

146. இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும்


அல்லா அச்சு ஐவருக்க முதல்ஈறு
யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐயைம்
பொதுஎழுத்து ஒழிந்த நாலேழும் திரியும்.

வடமொழியில் ‘அச்சு’ என்று சொல்லப்படும் பதினாறு உயிர்


எழுத்துகளில் ஏழு, எட்டு, ஒன்பது பத்து ஆகிய நான்கும் இறுதியில் நின்று
பதினைந்து, பதினாறு ஆகிய இரண்டு ஆகிய ஆறும் சிறப்பு எழுத்துகள்
ஆகும். அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்றும் பத்து உயிர்
எழுத்துகளும் தமிழ் மொழிக்கும் வடமொழிக்கும் பொதுவானவை ஆகும்.

வடமொழியில் ‘அல்’ என்று சொல்லப்படும் முப்பத் தேழு மெய்


எழுத்துகளில் க, ச, ட, த, ப என்னும் ஐந்தும் ங, ஞ, ண, ந, ம என்னும்
ஐந்தும் ய, ர, ல, வ என்னும் நான்கும், ‘ள’ என்னும் எழுத்தும் ஆகிய
பதினைந்து மெய் எழுத்துகளும் தமிழ்மொழிக்கும் வடமொழிக்கும்
பொதுவானவை ஆகும்.

வடமொழியில் க, ச, ட, த, ப என்னும் ஐந்து வருக்க எழுத்துகளில்


முதல் எழுத்தகள் நீங்கலாக ஏனைய பதினைந்தும் முப்பதாம் எழுத்து முதல்
முப்பத்தேழாம் எழுத்து வரை உள்ள மெய் எழுத்துகளில் ‘ள’ கரம் நீங்கலாக
உள்ள ஏழு எழுத்துகளும் ஆகிய 22 மெய் எழுத்துகளும் 6 உயிர்
எழுத்துகளும் ஆகிய 28 எழுத்துகளும் வட மொழிக்குச் சிறப்பு எழுத்துகள்
ஆகும்.

தற்சமம்

வடமொழிக்கும் தமிழுக்கும் உரிய பொது எழுத்தால் விகாரமின்றித்


தமிழில் வந்து பயன்படுத்தப்படும் வட சொற்கள் தற்சமம் எனப்படும்.

எ.டு. கமலம், குங்குமம்.

தற்பவம்

Page - 68
வடமொழிக்கு உரிய சிறப்பு எழுத்துகளால் திரிதல் முதலிய விகாரம்
பெற்றுத் தமிழில் வழங்கும் வடசொற்கள், தற்பவம் எனப்படும்.

எ.டு. சுகி, போகி.

வடமொழி – சிறப்பு விதி

147. அவற்றுள்,
ஏழாம் உயிர் இய்யும் இருவும் ஐவருக்கத்து
இடையின் மூன்றும் அவ்வம் முதலும்
எட்டே யவ்வும் முப்பது சயவும்
மேல் ஒன்று சடவும் இரண்டு சதவும்
மூன்றே அகவும் ஐந்துஇரு கவ்வும்
ஆ ஈறு ஐயும் ஈ ஈறு இகரமும்.

வடமொழியில் உள்ள ஏழாம் உயிர் இகரமாகவும் இருவாகவும் மாறும்.

ஐந்து வருக்கங்களிலும் இடையில் நிற்கும் பதினைந்து எழுத்துகளும் அந்தந்த

வருக்கங்களின் முதல் எழுத்தாக மாறும். எட்டாம் மெய் எழுத்து

சொல்லுக்கு இடையில் யகரமாகவும் மாறும். முப்பதாம் மெய் எழுத்து,

சொல்லுக்கு முதலில் சகரமாகவும் இடையில் யகரமாகவும் மாறும்.

முப்பத்து ஒன்றாம் மெய் எழுத்து, சொல்லுக்கு முதலில் சகரமாகவும்

இடையில் டகரமாகவும் மாறும். முப்பத்து இரண்டாம் மெய் எழுத்து,

சொல்லுக்கு முதலில் சகரமாகவும் இடையில் தகரமாகவும் மாறும்.

முப்பத்து மூன்றாம் மெய் எழுத்து, சொல்லுக்கு முதலில் அகரமாகவும்

இடையில் ககரமாகவும் மாறும். முப்பத்து ஐந்தாம் மெய் எழுத்து, இரண்டு

சகரமாக மாறும். பொது எழுத்துகளில் சொல்லுக்கு இறுதியில் உள்ள

ஆகாரம், ஐகாரமாக மாறும். சொல்லுக்கு இறுதியில் உள்ள ஈகாரம்,

இகரமாக மாறும்.

Page - 69
ரிஷபம் - இடபம் – ஏழாம் உயிர், இகரம்

ரிஷி - இருடி – ஏழாம் உயிர், இரு

நகம் - ‘க’ வருக்கம்

விசயம் - ‘ச’ வருக்கம்

பீடம் - ‘ட’ வருக்கம்

தலம் - ‘த’ வருக்கம்

பலம் - ‘ப’ வருக்கம்

பங்கஜம் - பங்கயம் – எட்டாம்மெய், யகரம்

சாலை - சாலை – முப்பதாம் மெய், சகரம்

தேசம் - தேயம் – முப்பதாம் மெய், யகரம்

ஷண்முகன் - சண்முகன் – முப்பத்து ஒன்றாம் மெய், சகரம்

விஷம் - விடம் – முப்பத்து ஒன்றாம் மெய், டகரம்

சபை - சபை – முப்பத்து இரண்டாம் மெய், சகரம்

வாதனை - வாதனை – முப்பத்து இரண்டாம் மெய், தகரம்

ஹரன் - அரன் – முப்பத்து மூன்றாம் மெய், அகரம்

மோஹம் - மோகம் – முப்பத்து மூன்றாம் மெய், ககரம்.

தக்ஷணம் - தக்கணம் – முப்பத்து ஐந்தாம் மெய், இரண்டு ககரம்

மாலா - மாலை – ஆகார ஈறு, ஐகார ஈறு

புரீ - புரி – ஈகார ஈறு, இகர ஈறு.

148. ரவ்விற்கு அம்முதலாம் முக்குறிலும்


லவ்விற்கு இம்முதல் இரண்டும் யவ்விற்கு
இய்யும் மொழிமுதல் ஆகி முன் வருமே.

‘ர’ என்னும் எழுத்தும் ‘அ, இ, உ’ என்னும் எழுத்துகளில் ஏதேனும்


ஒன்று முதலாவதாக வரும்.

Page - 70
‘ல’ என்னும் எழுத்துக்கு ‘இ, உ’ என்னும் இரண்டில் ஒன்று
முதலாவதாக வரும்.

‘ய’ என்னும் எழுத்துக்கு ‘இ’ என்னும் எழுத்து முதலாவதாக வரும்.

எ.டு. அரங்கம், இராமன், உரோமம்.


இலாபம் உலோகம்.
இயக்கன்

149. இணைந்து இயல்காலை ய ர லக்கு இகரமும்


மவ்வக்கு உகரமும் நகரக்கு அகரமும்
மிசைவரும் ரவ்வுழி உவ்வும் ஆம் பிற.

வடமொழியில் இரண்டு எழுத்து இணைந்து ஓர் எழுத்தைப் போல்


வரும்போது ய, ர, ல ஆகிய எழுத்துகளுக்கு முதலாவதாக இகரம் வரும்.

ம, வ முதலிய எழுத்துகளுக்கு உகரம் வரும்,

‘ந’ என்னும் எழுத்துக்கு அகரம் வரும். ‘ர’ என்னும் எழுத்துக்கு


உகரமும் வரும்.

வாக்யம் - வாக்கியம் (ய)


வக்ரம் - வக்கிரம் (ர) இகரம்
சுக்லம் - சுக்கிலம் (ல)

பத்மம் - பதுமம் (ம) உகரம்


பக்வம் - பக்குவம் (வ )

அர்த்நம் - அரதநம் (ந) அகரம்

அர்த்தம் - அருத்தம் (ர) உகரம்

தமிழ் எழுத்தின் சிறப்பு எழுத்தும் பொது எழுத்தும்

150. ற ன ழ எ ஒவ்வும் உயிர்மெய் உயிரளபு


அல்லாச் சார்பும் தமிழ் பிற பொதுவே.

Page - 71
ற, ன, ழ, எ, ஒ என்னும் ஐந்து எழுத்துகளும், உயிர்மெய்,
உயிரௌபடை இல்லாத எட்டுச் சார்பெழுத்துகளும் தமிழுக்கு உரிய சிறப்பு
எழுத்துகள் ஆகும். ஏனைய இருபத்தேழு எழுத்துகளும் தமிழுக்கும்
வடமொழிக்கும் பொதுவானவை ஆகும்.

Page - 72
அலகு - IV

உயிர் ஈற்றுப் புணரியல்

உயிர் எழுத்தை இறுதியாகச் கொண்ட சொற்களின் புணர்ச்சியை விளக்கும்


இயல்.

புணர்ச்சி

151. மெய்உயிர் முதல்ஈறாம் இருபதங்களும்


தன் ஒடு உம் பிறிது ஒடு உம் அல்வழி வேற்றுமை
பொருளில் பொருந்துழி நிலை வரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே.

பகாப்பதம், பகுபதம் இரண்டும் மெய்மையும் உயிரையும் முதலும்


ஈறுமாகக் கொண்டவை. இவை ஒவ்வொன்றும் தானும், பிறவற்றோடும்
சேர்வது புணர்ச்சி ஆகும். இவ்வாறு சேரும்போது இயல்பாக அல்லது
விகாரமாகச் சேரும். இவை அல்வழிப் பொருளில் அல்லது வேற்றுமைப்
பொருளில் சேரும்.

மரம் - மெய் முதல் மெய் ஈறு.


அணி - உயிர் முதல் உயிர் ஈறு.
மணி - மெய் முதல் உயிர் ஈறு.
அணில் - உயிர் முதல் மெய் ஈறு.

அல்வழி, வேற்றுமை

152. வேற்றுமை ஐ முதல் ஆறாம் அல்வழி


தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளி ஈரெச்சம் முற்று இடை உரி
தழுவு தொடர் அடுக்கு என ஈரேழே.

Page - 73
ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் ஆறு உருபுகளும் மறைந்து
அல்ல வெளிப்படையாய் வருமாறு நிலை மொழியும் வருமொழியும்
புணர்வது வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும்.

வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத்தொகை, உம்மைத்


தொகை, அன்மொழித்தொகை, எழுவாய்த் தொடர், விளித்தொடர்,
பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற்றுத்
தொடர், குறிப்புவினை முற்றுத் தொடர், இடைச்சொல் தொடர், உரிச்சொல்
தொடர், அடுக்குத் தொடர் என்பவை அல்வழிப் புணர்ச்சி எனப்படும்.

வேற்றுமை

வேற்றுமைத்தொகை உருபு வேற்றுமை விரி

வீடு கட்டினான் ஐ வீட்டைக் கட்டினான்


கல் எறிந்தான் ஆல் கல்லால் எறிந்தான்.
பாண்டியன் மகன் கு பாண்டியனுக்கு மகன்
மலை வீழ் அருவி இன் மலையின் வீழ் அருவி
என் சட்டை அது எனது சட்டை
கைவிரல் கண் கையின் கண்விரல்

அல்வழி

தொகை நிலைத் தொடர்

பாய்புலி - வினைத் தொகை


கரும்பலகை - பண்புத்தொகை
மலர்அடி - உவமைத் தொகை
கபிலபரணர் - உம்மைத் தொகை
மலர்விழி வந்தாள் - அன்மொழித் தொகை

தொகா நிலை தொடர்

பாண்டியன் வந்தான் - எழுவாய்த் தொடர்


வளவா வா - விளித் தொடர்
வடித்த பையன் - பெயரெச்சத் தொடர்
வந்து சென்றான் - வினையெச்சத் தொடர்
வந்தேன் பள்ளிக்கு - தெரிநிலை வினைமுற்றுத் தொடர்
நல்லன் கோவன் - குறிப்பு வினை முற்றுத் தொடர்

Page - 74
மற்றொன்று - இடைச்சொல் தொடர்
சாலப்பேசினான் - உரிச்சொல் தொடர்
பாடு பாடு - அடுக்குத் தொடர்

இயல்புப் புணர்ச்சி

153. விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே.

விகாரம் அடையாமல் இயல்பாக நிலைமொழியும் வருமொழியும்


சேர்வது இயல்புப் புணர்ச்சி ஆகும்.

எ.டு. பொன்மலை
மலை நாடு

விகாரப் புணர்ச்சி

154. தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்


மூன்று மொழி மூவிடத்தும் ஆகும்.

நிலை மொழியும் வருமொழியும் சேரும்போது தோன்றல், திரிதல்,


கெடுதல் என்னும் விகாரங்கள் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
இது முதல், இடை, கடை என்னும் மூன்று இடங்களிலும் நிகழும்.

வெற்றிலை + கடை = வெற்றிலைக் கடை


தோன்றல் விகாரம்
(வருமொழி முதலில் மெய் தோன்றியது)

பலா + இலை = பலாவிலை


திரிதல் விகாரம்
(வருமொழி முதலில் திரிதல் ஏற்பட்டது)

மரம் + வேர் = மரவேர்


கெடுதல் விகாரம்
(நிலை மொழி இறுதியில் கெட்டது)

ஆறு + பத்து = அறுபது


கெடுதல் விகாரம்

Page - 75
(நிலை மொழி முதல் திரிந்தது. வரு மொழி
இடையில் ஒற்றுக் கொட்டது)

செய்யுள் விகாரம்

155. வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்


விரித்தல் தொகுத்தலும் வரும் செய்யுள்வேண்டுழி.

மெல்லின எழுத்தை வல்லின எழுத்து ஆக்குவது, வல்லின எழுத்தை

மெல்லியன எழுத்து ஆக்கும்வதும், குறில் எழுத்தை நெடில் எழுத்து

ஆக்குவதும், நெடில் எழுத்தைக் குறில் எழுத்து ஆக்குவதும், இல்லாத

எழுத்தைத் தோன்றச் செய்வதும், இருக்கின்ற எழுத்தை நீக்குவதும்

செய்யுளில் விகாரம் ஆகும்.

குறுத்தாட் பூதம் (குறுந்தாட் பூதம்) - வலித்தல் விகாரம்.


தண்டையின் இனக்கிளி
(தட்டையின் இனக்கிளி) - மெலித்தல் விகாரம்.
இணையடி நீழலே (நிழல்) - நீட்டல் விகாரம்.
நன்றென்றேன் தியேன் (தீயேன்) - குறுக்கல் விகாரம்.
விளையும்மே (வினையுமே) - விரித்தல் விகாரம்.
சிறியிலை (சிறியயிலை) - தொகுத்தல் விகாரம்.

156. ஒருமொழி மூவழிக் குறைதலும் அனைத்தே.

இந்தச் செய்யுள் விகாரங்கள், சொல்லின் முதல், இடை, கடை

என்னும் மூன்று இடங்களில் ஓர் இடத்தில் குறைந்து வரும்.

மரை இதழ் - தாமரை - சொல்லின் முதல் குறை

வேதின வெரிநின் ஓதி - ஓந்தி - சொல்லின் இடைக்குறை

Page - 76
நீல் உண் - நீலம் - சொல்லின் கடைக்குறை

157. ஒருபுணர்க்கு இரண்டு மூன்றம் உறப்பெறும்

ஒரு புணர்ச்சியில் இரண்டு மூன்று விகாரங்களும் வருவது உண்டு.

பனை + காய் = பனங்காய் - தோன்றல், திரிதல் விகாரங்கள்

நிலம் + பனை = நிலப்பனை - தோன்றல், கெடுதல் விகாரங்கள்

பொதுப் புணர்ச்சி

எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்

158. எண் மூ எழுத்து ஈற்று எவ்வகை மொழிக்கும்


முன்வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பும்
குறில்வழி யத்தனி ஐ நொ து முன் மெலி
மிகலுமாம் ண ள ன ல வழி நத்திரியும்

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்,


திசைச்சொல், வடசொல் ஆகிய எவ்வகைச் சொல்லுக்கும் முன்வரும் ஞ, ந,
ம, ய, வ என்னும் எழுத்துகள் வேற்றுமை, அல்வழி ஆகிய இரண்டு வகைப்
புணர்ச்சியிலும் இயல்பு ஆகும்.

குறில் எழுத்தின் பின்வரும் யகர மெய் எழுத்து ஓரேழுத்து ஒரு


சொல்லாகிய ஐ, நொ, து ஆகிய எழுத்துகளுக்கு முன்வரும் ஞ, ந, ம
என்னம் மெய் எழுத்துகள் மிகும்.

ண, ள, ன, ல ஆகியவற்றின் முன்வரும் நகரம் மாறும்.

அல்வழி வேற்றுமை

விள ஞான்று விள ஞாற்சி


விள நீண்டது விள நீட்சி
விள மாண்டது விள மாட்சி
விள யாது விள யாப்பு
விள வலிது விள வன்மை.

Page - 77
இங்கு எல்லாவற்றிலும் ஞ, ந, ம, ய, வ ஆகிய எழுத்துகள் இயல்பாகப்
புணர்ந்தன.

அல்வழி வேற்றுமை

மெய்ஞ் ஞான்றது மெய்ஞ் ஞாற்சி


மெய்ந் நீண்டது மெய்ந் நீட்சி
மெய்ம் மாண்டது மெய்ம் மாட்சி
கைஞ் ஞான்று கைஞ் ஞாற்சி
கைந் நீண்டது கைந் நீட்சி
கைம்மாண்டது கைம்மாட்சி

நொ + ஞெள்ளா = நொஞ்ஞெள்ளா
நொ + நாகா = நொந்தாகா
நொ + மாடா = நொம்மாடா
நொ + யவனா = நொய்யவனா
நொ + வளவா = நொவ்வளவா

து + ஞெள்ளா = துஞ்ஞெள்ளா
து + நாகா = துந்நாகா
து + மாடா = தும்மாடா
து + யவனா = துய்யவனா
து + வளவா = துவ்வளவா

இங்கு எல்லாவற்றிலும் ஞ, ந, ம, ய, வ ஆகிய எழுத்துகளின் மெய்கள்


மிகுந்தன.

Page - 78
பொதுப்பெயர், உயர்திணைப் பெயர் ஈறு

159. பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய்


வலிவரின் இயல்பாம் ஆவி ய ர முன்
வன்மைமிகா சில விகாரமாம் உயர்திணை.

பொதுப்பெயர்களுக்கும் உயர்திணைப் பெயர்களுக்கும் இறுதியில் உள்ள


மெய் எழுத்துகள், வருமொழின் முதலில் வல்லின எழுத்து வந்தால் இயல்பு
ஆகும்.

உயிர் எழுத்துகளையும், யகர, ரகர மெய்களையும் இறுதியில்


கொண்டுள்ள பெயர்களுக்கு முன்வரும் வல்லின எழுத்து மிகாது. உயிரீறும்
மெய்யீறும் ஆகிய உயர்திணைப் பெயர்களுள் சில பெயர்கள் வல்லினம்,
மெல்லினம், இடையினம், உயிரினம் ஆகியவற்றோடு சேரும் போதும்
விகாரம் உடையும்.

சாத்தன் + குறியன் = சாத்தன் குறியன்


சாத்தன் + சிறிது = சாத்தன் சிறிது
சாத்தன் + திருவன் = சாத்தன் திருவன்
சாத்தன் + பெரியன் = சாத்தன் பெரியன்.

பொதுப் பெயர் அல்வழியில் இயல்பாகச் சேர்ந்தது.

சாத்தன் + கை = சாத்தன் கை
சாத்தன் + செவி = சாத்தன் செவி
சாத்தன் + தலை = சாத்தன் தலை
சாத்தன் + புறம் = சாத்தன் புறம்

பொதுப் பெயர் வேற்றுமையில் இயல்பாகச் சேர்ந்தது.

கோவன் + குறியன் = கோவன் குறியன்


கோவன் + சிறியன் = கோவன் சிறியன்
கோவன் + திருவன் = கோவன் திருவன்
கோவன் + பெரியன் = கோவன் பெரியன்.

உயர்திணைப் பெயர் அல்வழியில் இயல்பாகச் சேர்ந்தது.

கோவன் + கை = கோவன் கை
கோவன் + செவி = கோவன் செவி

Page - 79
கோவன் + தலை = கோவன் தலை
கோவன் + புறம் = கோவன் புறம்

உயர்திணைப் பெயர் வேற்றுமையில் இயல்பாகச் சேர்ந்தது.

சாத்தி + குறியது = சாத்தி குறியது


தாய் + குறிது = தாய் குறிது
நீர் + குறியீர் = நீர் குறியீர்

பொதுப்பெயர் உயிர் எழுத்து, யகர மெய், ரகர மெய் ஆகியவற்றின் முன்


அல்வழியில் இயல்பாகச்சேர்ந்தது.

சாத்தி + கை = சாத்தி கை
தாய் + கை = தாய் கை
அவர் + கை = அவர் கை

பொதுப்பெயர், உயிர்எழுத்து ய, ர முன் வேற்றுமையில் இயல்பாகச்


சேர்ந்தது.

கபிலன் + பரணன் = கபில பரணர்


வடுகன் + நாதன் = வடுக நாதன்
அரசன் + வள்ளல் = அரச வள்ளல்

இறுதி எழுத்துக் கெட்டு இயல்பாகச் சேர்ந்தன.

ஆசீவகர் + பள்ளி = ஆசீவகப்பள்ளி


வாணிகம் + தெரு = வாணிகத்தெரு

இறுதி எழுத்துக் கெட்டு வருமொழியின் வல்லின எழுத்து மிகும்படியாகச்


சேர்ந்தன.

குமரன் + கோட்டம் = குமர கோட்டம்,


குமரக் கோட்டம்

வாசுதேவன் + கோட்டம் = வாசுதேவ கோட்டம்,


வாசுதேவக் கோட்டம்

இறுதி எழுத்துக் கெட்டு வருமொழியின் வல்லின எழுத்து இயல்பாகவும்


மிகும் படியாகவும் சேர்ந்தன.

பார்ப்பான் + பெண் = பார்ப்பனப் பெண்

Page - 80
இறுதி எழுத்தின் அருகில் இருக்கும் எழுத்துக் குறுகி, அகரச் சாரியை பெற்று
வருமொழியின் வல்லின எழுத்து மிகும்படியாகச் சேர்ந்தது.

மக்கள் + பண்பு = மக்கட்பண்பு.

ஈற்றில் வந்துள்ள மெய் திரிந்து சேர்ந்தது.

வினாப் பெயர், விளிப்பெயர்முன் வல்லினம்

160. ஈற்று யா வினா விளிப்பெயர் முன்வலி இயல்பே

ஆ, ஏ, ஓ என்னும் இறுதியில் வரும் வினாப் பெயர்களின் முன்னும்


யா என்னும் வினாப் பெயர் முன்னும் விளிப்பெயர் முன்னும் வல்லினம்
இயல்பாகச் சேரும்.

வினாப் பெயர்

வளவனா + கொண்டான் = வளவனா கொண்டன்.


வளவனே + கொண்டான் = வளவனே கொண்டான்.
வளவனோ + கொண்டான் = வளவனோ கொண்டான்.
யா + கொண்டான் = யா கொண்டான்.

விளிப்பெயர்

நம்பி + பார் = நம்பி பார்


நம்பீ + பார் = நம்பீ பார்
கிள்ளாய் + பார் = கிள்ளாய் பார்

முன்னிலைவினை, ஏவல்வினைமுன் வல்லினம்

161. ஆவி ய ர ழ இறுதி முன்னிலைவினை


ஏவல்முன் வல்லினம் இயல்பொடு விகற்பே.

உயிர் எழுத்துகளையும் ய, ர, ழ என்னும் மூன்று மெய்


எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட முன்னிலை வினை, ஏவல்வினை
ஆகியவை முன் வரும் வல்லினம் இயல்பாகவும் விகற்பமாகவும்
(விகாரமாகவும்) சேரும்.

Page - 81
முன்னிலை வினை முன் இயல்பு

உண்டி + கண்ணா = உண்டி கண்ணா


உண்டாய் + கண்ணா = உண்டாய் கண்ணா
உண்பீர் + கண்ணரே = உண்பீர் கண்ணரே

ழகர மெய் முன்னிலை வினைக்கு ஈறாக வராது. எனவே எடுத்துக்காட்டுத்


தரவில்லை.

ஏவல் வினைமுன் இயல்பு

வா + கண்ணா = வா கண்ணா
ஆய் + கண்ணா = ஆய் கண்ணா
சேர் + கண்ணா = சேர் கண்ணா
தாய் + கண்ணா = தாழ் கண்ணா

உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி

உயிர் முன் உயிர் சேர்தல்

162. இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை


உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ்இருமையும்
உயிர்வரின் உடம்படு மெய் என்றாகும்

நிலைமொழியின் இறுதியில் இ, ஈ, ஐ என்னம் மூன்று உயிர்


எழுத்துகளும் இருந்து, வருமொழியின் முதலில் உயிர் எழுத்து வந்தால் ‘ய’
கர மெய் உடம்படுமெய் ஆக வரும்.

நிலை மொழியின் இறுதியில் ஏனைய உயிர் எழுத்துகள் இருந்து,


வருமொழியின் முதலில் உயிர் எழுத்து வந்தால் ‘வ’ கர மெய் உடம்படு
மெய் ஆக வரும்.

நிலை மொழியின் இறுதியில் ஏகாரம் இருந்து, வருமொழியினி


முதலில் உயிர்எழுத்து வந்தால் ‘வ’ கர மெய் அல்லது ‘ய’ கர மெய் உடம்படு
மெய் ஆக வரும்.

மணி + அழகு = மணியழகு = ய்


தீ + அழகு = தீயழகு = ய்

Page - 82
மலை + அழகு = மலையழகு = ய்
அவனே + அழகன் = அவனேயழகன் = ய்
சே + அடி = சேவடி = வ்
வர + இல்லை = வரவில்லை = வ்
ஆ + இன் = ஆவின் = வ்
உரு + ஆயிற்று = உறுவாயிற்று = வ்
பூ + அழகு = பூவழகு = வ்
நொ + அழகு = நொவ்வழகு = வ்
கோ + அளம் = கோவளம் = வ்
கொள + அழகு = கௌவழகு = வ்

எகர உயிர் எழுத்து அளபெடையில் மட்டுமே சொல்லுக்கு இறுதியில் வரும்.

வினா, சுட்டின் முன் சேர்தல்

163. எகர வினா முச் சுட்டின் முன்னர்


உயிரும் யகரமும் எய்தின் வவ்வும்
பிறவரின் அவையும் தூக்கில் சுட்டு
நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே.

எகர வினா எழுத்தின் முன்னும் அ, இ, உ என்னும் சுட்டு


எழுத்துகளின் முன்னும் உயிர்எழுத்தும் யகரமும் வந்தால் வகர
உடம்படுமெய் தோன்றும். யகரம் அல்லாத மெய் எழுத்துகள் வந்தால்
அந்தந்த மெய் எழுத்துகள் தோன்றும். செய்யுளில் சுட்டு எழுத்துகள் நீண்டு
வரும் போதும் யகர உடம்படுமெய் தோன்றும்.

வினா எழுத்து

எ + அணி = எவ்வணி
எ + யானை = எவ்யானை

சுட்டு எழுத்து

அ + அணி = அவ்வணி
அ + யானை = அவ்யானை
இ + அணி = இவ்வணி
இ + யானை = இவ்யானை

Page - 83
உ + அணி = உவ்வணி
உ + யானை = உவ்யானை

சுட்டு நீண்டது

ஆ + இடை = ஆயிடை

குற்றியலுகரம், சில முற்றியலுகரம் முன் உயிரும் யகரமும் சேர்தல்

164. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்


யவ்வரின் இய்யாம் முற்றும் அற்று ஒரோவழி

நிலைமொழியின் இறுதியில் குற்றியலுகரம் நின்று, வருமொழியின்


முதலில் உயிர்எழுத்து வந்தால், குற்றியலுகர்ம் மெய்யை விட்டுக் கெடும்.

நிலை மொழியின் இறுதியில் குற்றியலுகரம் நின்று, வருமொழியின்


முதலில் யகரம் வந்தால் குற்றியலுகரம், குற்றியலிகரமாக மாறும்.
முற்றியலுகரத்திற்கும் சில இடங்கலில் மேற்கூறிய விதி பொருந்தும்.

வரகு + அரிசி = வரகரிசி


கொக்கு + யாது = கொக்கியாது
கதவு + அழகு = கதவழகு
கதவு + யாது = கதவியாது

Page - 84
உயிரீறு முன் வல்லினம்

165. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்


கசதப மிகும் விதவாதன மன்னே

நிலைமொழியின் இறுதியில் உயிர் எழுத்து இயல்பாக அல்லது


விதியின்படி நின்று வருமொழி முதலில், க, ச, த, ப வந்தல் வல்லின
எழுத்துமிகும்.

பின்னர்ச் சிறப்பு விதியில் மிகாது என்று சொல்லப்பட்டால் மிகாது.

ஆடுஉக் குறியன்
ஆடூஉக் கை
செட்டித் தெரு

உயர்திணைப் பெயரின் முன்வேற்றுமை அல்வழி இரண்டிலும் வல்லின


எழுத்து மிகுந்தது.

சாத்திப்பெண்

இருதிணைப் பொதுப்பெயரின் முன் அல்வழியில் வல்லின எழுத்து மிகுந்தது.

இயல்பு ஈறு : ஒரு சொல்லின் இறுதியில் வல்லினம் இயல்பாக நிற்பது.


வாழை + மரம் = வாழைமரம்

விதி ஈறு : ஒரு சொல்லின் இறுதியில் இயல்பாக நின்ற எழுத்து ஒரு


விதியால் கெட்டுப் போக அதில் வேறு ஓர் எழுத்து
இறுதியில் நிற்பது.
மரம் + பெயர் = மரப்பெயர்.

மரப்பெயர் முன் வல்லினம் சேர்தல்

166. மரபெயர் முன்னர் இன மெல்லெழுத்து


வரப்பெறுனவும் உள வேற்றுமை வழியே.

வேற்றுமைப் புணர்ச்சியில், உயிர் எழுத்தை இறுதியில் கொண்ட


மரப்பெயர்களுக்கு முன்னால் வல்லினம் மிகாமல் அவற்றிற்கு இனமான
மெல்லினம் மிகுவதும் உண்டு.

Page - 85
விள + காய் = விளங்காய்
மா + குயில் = மாங்குயில்
காயா + பூ = காயாம்பூ

மரப்பெயர் முன் வல்லினம்

வாழை + பழம் = வாழைப்பழம்


பலா + காய் = பலாக்காய்

‘அ’ என்னும் ஈற்று எழுத்துக்குச் சிறப்பு விதி

167. செய்யிய என்னும் வினையெச்சம் பல்வகைப்


பெயரின் எச்சம், முற்று, ஆறன் உருபே
அஃறிணைப் பன்மை அம்மமுன் இயல்பே.

செய்யிய என்னும் வினையெச்சத்தின் முன்னும் பெயரெச்சங்களின்


முன்னும், வினை முற்றுகளின் முன்னும், ஆறாம் வேற்றுமையின் ‘அ’
உருபின் முன்னும், அஃறிணைப் பன்மைப் பெயரின் முன்னும் ‘அம்ம’
என்னும் அசைச் சொல்லின் முன்னும் வரும் வல்லினம் இயல்பு ஆகும்.

உண்ணிய + சென்றான் = உண்ணிய சென்றான் –


செய்யிய என்னும் வினையெச்சம்

வந்த + பையன் = வந்தபையன்


பெரிய + பையன் = பெரிய பையன் பெயரெச்சம்
வராத + பையன் = வராத பையன்

சென்றன + குதிரைகள் = சென்றன குதிரைகள்


வாழ்க + கண்ணா = வாழ்க கண்ணா வினை முற்று
பெரியன + குதிரைகள் = பெரியன குதிரைகள்

என + கைகள் = என கைகள் ஆறாம் வேற்றுமையின்


என + கால்கள் = என கால்கள் ‘அ’ உருபு

பல + குதிரைகள் = பல குதிரைகள் அஃறிணைப் பன்மை


பல + பறவைகள் = பல பறவைகள்

அம்ம + கொற்றா = அம்ம கொற்றா ‘அம்ம’ அசைச்சொல்

Page - 86
வாழிய என்பதன் முன் வல்லினம்

168. வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்


ஏகலும் உரித்து, அஃது ஏகினும் இயல்பே.

‘வாழிய’ என்னும் வியங்கோள் வினை முற்றின் இறுதியில் உள்ள ‘ய’


என்ற உயிர்மெய் எழுத்து நீங்குவதும் உண்டு. அவ்வாறு நீங்கினாலும்
இயல்பாகவே வருமொழி வந்து சேரும்.

வாழிய + கொற்றா = வாழி கொற்றா


வாழிய + சாத்தா = வாழி சாத்தா
வாழிய + தேவா = வாழி தேவா
வாழிய + பூதா = வாழி பூதா

‘சாவ’ என்னும் சொல்

169. சாவ என்மொழிஈற்று உயிர்மெய் சாதலும் விதி.

‘சாவ’ என்னும் வினையெச்சத்தின் இறுதியில் உள்ள ‘வ’ என்ற உயிர்


மெய் நீங்கிப் போவதும் விதி ஆகும்.

சாவா + குத்தினான் = சாக்குத்தினான்.

பல, சில என்னும் சொற்கள்

170. பலசில எனும் இவை தம்முன் தாம்வரின்


இயல்பும் மிகலும் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும் பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உளபிற.

பல, சில என்னும் சொற்களில் ஒவ்வொன்றும் இணைந்து வரும்போது


இயல்பாகவும் சேரும், வல்லினம் மிகுந்தும் சேரும், இறுதி-யில் உள்ள ‘அ’
கரம் நீங்கி ‘ல்’ என்னும் எழுத்து ‘ற்’ ஆகவும் மாறும்.

Page - 87
பல, சில என்னும் சொற்களை அடுத்து ஏனைய சொற்கள் வரும்
போது, இறுதியில் உள்ள ‘அ’ கரம் நீங்குவதும் உண்டு; நீங்காமல் நிற்பதும்
உண்டு.

பல + பல = பலபல இயல்பு
சில + சில = சிலசில

பல + பல = பலப்பல வல்லினம் மிகுந்தது


சில + சில = சிலச்சில

பல + பல = பற்பல ‘அ’ கரம் நீங்கி ‘ல்’ என்ற


சில + சில = சிற்சில எழுத்து ‘ற்’ ஆக மாறியது.

பல + கலை = பலகலை, பல்கலை


சில + நாள் = சிலநாள், சின்னாள்

பல + ஆயம் = பலவாயம், பல்லாயம்


‘அகரம் விகற்பம் ஆகலும்’ என்றதால் அகரம் வேறு வகையிலும் மாறிச்
சேர்ந்தது.

ஆகார ஈறு – சிறப்பு விதி

171. அல்வழி ஆ மா மியா முற்று முன் மிகா

அல்வழிப் புணர்ச்சியில் ஆ, மா, மி, யா ஆகியவற்றின் முன்னும் ‘ஆ’


என்னும் எழுத்தை இறுதியில் கொண்ட வினை முற்றின் முன்னும்
வல்லினம் மிகாது.

ஆ + குறிது = ஆ குறிது ஆ, மா முன் இயல்பு


மா + பெரிது = மா பெரிது

கேண்மியா + கொற்றா = கேண்மியா கொற்றா – மியா


முன் இயல்பு

உண்ணா + குதிரைகள் = உண்ணா குதிரைகள்


உண்ணா + சென்றான் = உண்ணா சென்றான்

உண்ணா + சென்றன = உண்ணா சென்றன

உண்ணா என்னும் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம்


மிகும். இங்கு உண்ணா என்பது வினை முற்றுப் பொருளிலும் வினையெச்சப்
பொருளிலும் வந்துள்ளன.

Page - 88
அகர ஈறு – சிறப்பு விதி

172. குறியதன் கீழ் ஆக் குறுகலும் அதனோடு


உகரம் ஏற்றலும் இயல்புமாம் தூக்கின.

செய்யுளில் குறில் எழுத்தை அடுத்து இறுதியில் வரும் ஆகாரம் ‘அ’


என்று குறுகி ‘உ’ கரத்தைப் பெறும், இயல்பாகவும் வரும்.

1. நிலவிரிகானல்
நிலா + விரிகானல்

இதில் ‘நிலா’ என்னும் சொல்லின் இறுதியில் உள்ள ‘ஆ’ காரம் ‘அ’ கரமாக
மாறியது.

2. நிலவு தோன்றியது
நிலா + தோன்றியது

இதில் ‘நில’ என்னும் சொல்லின் இறுதியில் உள்ள ‘ஆ’ காரம் ‘அ’ கரமாக
மாறியது. ‘உ’ கரம் தோன்றியது.

3. நிலா உதித்தது – இயல்பு

இரா - இரவு
புறா - புறவு
சுறா - சுறவு
அரா - அரவு

என்பனவும் மேற்கூறியவாறு வரும்.

இகர ஈறு – சிறப்பு விதி

173. அன்றி இன்றி என் வினைஎஞ்சு இகரம்


தொடர்பினுள் உகரமாய் வரின் இயல்பே

அன்றி, இன்றி என்னும் வினையெச்சங்களின் இறுதியில் உள்ள


இகரம், செய்யுளில் உகரமாய் மாறி வந்தால் இயல்பாகச் சேரும். வல்லினம்
மிகாது.

வாள் அன்றி + பிடியா = வாளன்று பிடியா


விண்இன்றி + பொய்ப்பின் = விண்ணின்று பொய்ப்பின்

Page - 89
இவற்றுள் ‘அன்றி’ என்பது ‘அன்று’ ஆகவும் ‘இன்றி’ என்பது ‘இன்று’ ஆகவும்
மாறி இயல்பாகச் சேர்ந்தது.

நாழி, உரி என்பதற்கு சிறப்பு விதி :

174. உரிவரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட


மருவும் டகரம் உரியின் வழியே
யகர உயிர்மெய்யாம் ஏற்பன வரினே.

நாழி என்னும் அளவுப்பெயருக்கு அடுத்து உரி என்னும் அளவுப்


பெயர்வந்தால் ‘நாழி’ என்பதில் உள்ள ‘ழி’ என்னும் எழுத்து நீங்கி ‘ட்’ என்னும்
எழுத்து வரும்.

உரி என்னும் அளவுப் பெயருக்கு அடுத்து ‘ய’ என்னும் உயிர்மெய்


எழுத்து வருமொழிக்கு ஏற்ப வரும்.

நாழி + உரி = நாடுரி (‘ழி’ நீங்கியது ‘ட்’ தோன்றியது)


உரி + உப்பு = உரியஉப்பு (‘ய’ தோன்றியது)
உரி + பயறு = உரிய பயறு (‘ய’ தோன்றியது)

‘புளி’ என்னும் சொல்

175. சுவைப் புளி முன்இன மென்மையும் தோன்றும்.

ஆறுசுவைகளுள் ஒன்றான ‘புளி’ என்னும் பெயரின் முன்சில


இடங்களில் மெல்லினமும் மிகுந்துவரும்.

புளி + கறி = புளிங்கறி


புளி + சோறு = புளிஞ்சோறு

இது ‘புளிக்கறி’ என்று வல்லினம் மிகுந்தே பெரும் பாலும் வரும்.

இகர, ஐகார ஈறுகள் – சிறப்புவிதி

176. அல்வழி இ, ஐ முன்னர் ஆயின்


இயல்பும் மிகலும் விகற்பமும் ஆகும்.

Page - 90
அல்வழிப் புணர்ச்சியில் இகர, ஐகார என்னும் இறுதியைக் கொண்ட
அஃறிணைப் பெயர்களின் முன் வல்லினம் இயல்பாகவும் மிகுந்தும் வரும்;
சில வேளைகளில் மிகுந்தும் மிகாமலும் வரும்.

பருத்தி + குறித்து = பருத்திகுறிது எழுவாய்த் தொடரில்


யானை + பெரிது = யானை பெரிது இயல்பு

ஆவணி + புரட்டாசி = ஆவணிபுரட்டாசி உம்மைத் தொகையில்


யானை + குதிரை = யானை குதிரை இயல்பு

மாசி + திங்கள் = மாசித்திங்கள் இரு பெயரொட்டுப்


சாரை + பாம்பு = சாரைப்பாம்பு பண்புத் தொகையில்
மிகுதல்

காவி + கண் = காவிக்கண் உவமைத் தொகையில்


பனை + கை = பனைக்கை மிகுதல்

கிளி + குறிது = கிளிக்குறிது, எழுவாய்த்


கிளிகுறிது தொடரில்
தினை + குறிது = தினைக்குறிது, மிகுதலும்
தினைகுறிது இயல்பும்

ஈகார ஈறு – சிறப்பு விதி

177. ஆமுன் பகர ஈ அனைத்தும் வரக்குறுகும்


மேலன அல்வழி இயல்பு ஆகுமே.

‘ஆ’ என்னும் பெயருக்கு முன் நின்ற ‘பீ’ என்பது வேற்றுமை


புணர்ச்சியிலும் அல்வழிப் புணர்ச்சியிலும் வல்லினம், மெல்லினம்,
இடையினம், உயிர் ஆகியவை வந்தால் குறுகும்.

அல்வழியில் இயல்பாகவும் வேற்றுமையில் வல்லினம் மிகுந்தும்


சேரும்.

ஆப்பீ + அரிது = ஆப்பி அரிது அல்வழியில் ‘பீ’


ஆப்பீ + குளிரும் = ஆப்பிகுளிரும் குறுகி ‘பி’ ஆகியது.
ஆப்பீ + நன்று = ஆப்பி நன்று இல்பாகச்
ஆப்பீ + வலிது = ஆப்பி வலிது சேர்ந்து.

ஆப்பீ + அருமை = ஆப்பி அருமை வேற்றுமையில் ‘பீ’


ஆப்பீ + குளிர்ச்சி = ஆப்பிக் குளிர்ச்சி குறுகி ‘பி’ ஆகியது.

Page - 91
ஆப்பீ + நன்மை = ஆப்பி நன்மை வல்லினம்
ஆப்பீ + வன்மை = ஆப்பி வன்மை மிகுந்தது.

178. பவ்வீ, நீ, மீ முன்னர் அல்வழி


இயல்பாம், வலிமெலி மிகலுமாம் மீக்கே.

அல்வழிப் புணர்ச்சியில் பீ, நீ, மீ ஆகியவற்றின் முன்வரும் வல்லினம்


இயல்பாகச் சேரும். ‘மீ’ என்னும் சொல்லுக்கு முன் வல்லினம் அல்லது
மெல்லினம் மிகும்.

பீ + குறிது = பீ குறிது
நீ + தீயை = நீ தீயை
மீ + கண் = மீ கண்
மீ + கூற்று = மீக்கூற்று – வல்லினம் மிகுந்தது
மீ + தோல் = மீந்தோல் – மெல்லினம் மிகுந்தது.

முற்றியலுகர ஈறு – சிறப்பு விதி

179. மூன்று, உருபு ஆறு, எண், வினைத் தொகை, சுட்டு, ஈறு


ஆகும் உகரம் முன்னர் இயல்பாம்.

‘ஓடு’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு


‘அது’ என்னும் ஆறாம் வேற்றுமை உருபு
‘ஒரு’ ‘இரு’ ‘ஏழு’ எனவரும் எண்ணுப் பெயர்கள்
‘விடு’ ‘சுடு’ என்பன போன்று வரும் வினைத் தொகைகள்
‘அது’ ‘சுடு’ என்னும் சுட்டுப் பெயர்கள் ஆகிய முற்றியலுகரங்களுக்கு
முன்வரும் வல்லினம் இயல்பாகச் சேரும்.

செழியனொடு + சென்றான் = செழியனொடு சென்றான்


(‘ஓடு’ என்னும் மூன்றாம்
வேற்றுமை உருபு)

மாறனது + கை = மாறனது கை
(‘அது’ என்னும் ஆறாம்
வேற்றுமை உருபு)

ஏழு + கடல் = எழு கடல்


(‘ஏழு’ என்பது இயல்பாக வந்த
எண்ணுப் பெயர்)

Page - 92
ஒரு + கை = ஒரு கை
(‘ஒரு’ என்பது இயல்பாக வந்த
எண்ணுப் பெயர்)

ஒரு + கை = ஒரு கை
(‘ஒரு’ என்பது விகாரமாக வந்த
எண்ணுப் பெயர்)

விடு + கணை = விடுகணை வினைத் தொகைகள்


சுடு + சோறு = சுடு சோறு

அது + படகு = அது படகு சுட்டுப் பெயர்கள்


இது + கப்பல் = இது கப்பல்

உது + காண் = உதுக்காண்

‘உது’ என்னும் சுட்டுப் பெயர் முன் வல்லினம் மிகுந்து வந்துள்ளது.

180. அதுமுன் வரும் அன்று ஆன்றாம் தூக்கின்.

செய்யுளில் ‘அது’ என்னும் சுட்டுப் பெயரின் முன்வரும் ‘அன்று’


என்னும் சொல் ‘ஆன்று’ என நீண்டு வரும்.

அது + அன்று = அதான்று


அதுவன்று என நீளாமல் வருவதும் உண்டு.
அது + அன்று = அதுவன்று.

Page - 93
குற்றியலுகரப் புணர்ச்சி

181. வன்தொடர் அல்லன் முன்மிகா அல்வழி.

அல்வழிப்புணர்சிசியில் நெடில் தொடர், மென்தொடர், இடைத்-தொடர்,


ஆய்தத் தொடர், உயிர்த் தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வல்லினம்
இயல்பாகச் சேரும்.

காடு + பெரிது = காடுபெரிது – நெடில் தொடர்


வண்டு + கரிது = வண்டுகரிது – மென்தொடர்
மார்பு + பெரிது = மார்பு பெரிது – இடைத் தொடர்
வரகு + சிறிது = வரகு சிறிது – உயிர்த் தொடர்
எஃகு + கடிது = எஃகு கடிது – ஆய்தத் தொடர்

வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் மிகும்.

ஏழாம் வேற்றுமை இடப்பொருள் தரும் அங்கு, இங்கு, உங்கு, எங்கு, யாங்கு,


ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் மென் தொடர்க் குற்றியலுகரங்களின் முன்
வல்லினம் மிகும்.

182. இடைத்தொடர், ஆய்தத்தொடர் ஒற்றுஇடையின்


மிகா நெடில், உயிர்த்தொடர் முன் மிகாவேற்றுமை

இடைத்தொடர், ஆய்தத் தொடர், இடையில் ஒற்று மிகாத நெடில்


தொடர், இடையில் ஒற்று மிகாத உயிர்த் தொடர் ஆகியவற்றின் முன்
வேற்றுமையில் வரும் வல்லினம் இயல்பாகச் சேரும்.

தெள்கு + கால் = தெள்குகால் – இடைத்தொடர்


எஃகு + கடுமை = எஃகுகடுமை – ஆய்தத் தொடர்
நாகு + கால் = நாகுகால் – ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர்
வரகு + தாள் = வரகுதாள் – ஒற்று இடையில் மிகாத உயிர்த் தொடர்

மென்தொடர் முன்னும் வன்தொடர் முன்னும் வேற்றுமையில் வல்லினம்


மிகும்.

குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி – மென்தொடர்


கொக்கு + கால் = கொக்குக்கால் – வன்தொடர்

Page - 94
ஒற்று இடையில் மிகும் நெடில்தொடர், உயிர்த்தொடர்.

183. நெடிலோடு உயிர்த் தொடர்க் குற்றுகரங்களுள்


ட, ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே.

நெடில் தொடர், உயிர்த் தொடர்க் குற்றியலுகரங்களுள் குற்றியலுகரம்


வரும் ட், ற் ஆகிய மெய் எழுத்துகள் வேற்றுமைப் புணர்ச்சியில்
பெரும்பாலும் இரட்டும்.

ஆடு + கால் = ஆட்டுக்கால் (ட்) - நெடில் தொடர்


சோறு + வளம் = சோற்றுவளம் (ற்) - நெடில் தொடர்
தவிடு + அரிசி = தவிட்டு அரிசி (ட்) - உயிர்த் தொடர்
வயிறு + வலி = வயிற்றுவலி (ற்) - உயிர்த் தொடர்

சில இடங்களில் மேலே கூறிய குற்றியலுகரங்கள் இரட்டாமலும் வரும்.

நாடு கிழவோனே
காடகம் இறந்தார்க்கே
கறை மிடறு

இவை நாட்டுக் கிழவோனே என்றும் காட்டகம் இறந்தார்க்கே என்றும் கறை


மிடற்று என்றும் இரட்டிக்க வில்லை.

மேலே கூறிய குற்றியலுகரங்கள் சில இடங்களில் அல்வழிப் புணர்ச்சியிலும்


இரட்டும்.

வெருகு + கண் = வெருக்குக் கண் (க்) – வேற்றுமையில்


எருது + மாடு = எருத்து மாடு (த்) – அல்வழியில்

மென்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சி

184. மென்றொடர் மொழியுள் சிலவேற்றுமையில்


தம் இன வன்தொடர் ஆகா மன்னே.

மென்தொடர்க் குற்றியலுகரத்தில் சில சொற்கள் வேற்றுமையில்


தனக்கு இனமான வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும். பெரும்பாலும்
அவ்வாறு ஆவதில்லை.

மருந்து + பை = மருத்துப்பை
கரும்பு + நாண் = கரும்பு நாண்
கன்று + ஆ = கற்றா.

Page - 95
மென்தொடர்க் குற்றியலுகரம் வேற்றுமையில் வன்தொடர் ஆகாமலும் வரும்.

வண்டு + கால் = வண்டுக்கால்


பந்து + நலம் = பந்துநலம்
நண்டு + வளை = நண்டுவளை
எறும்பு + ஒழுங்கு = எறும்பொழுங்கு

மென்தொடர்க் குற்றியலுகரம் அல்வழியில் வன்தொடர் ஆகியும் வரும்.

நஞ்சு + பகை = நச்சுப்பகை


இரும்பு + மனம் = இருப்பு மனம்

மென்தொடர்க் குற்றியலுகரம் வேற்றுமையில் வன்தொடர் ஆகியும்


ஆகாமலும் வரும்.

குரங்கு + குட்டி = குரங்குக் குட்டி


குரக்குக் குட்டி
பாம்பு + தோல் = பாம்புத் தோல்
பாப்புத் தோல்

குற்றியலுகரம் ‘ஐ’ சாரியை பெறுதல்

185. ஐ ஈற்றுஉடைக் குற்றுகரமும் உளவே.

‘ஐ’ என்னும் சாரியை பெற்றுவரும் மென்தொடர்க் குற்றியலுகரங்-


களும் உண்டு.

பண்டு + காலம் = பண்டைக் காலம் அல்வழி


இன்று + நாள் = இற்றைநாள்

அன்று + கூலி = அற்றைக்கூலி வேற்றுமை


இன்று + நலம் = இற்றை நலம்

வன்தொடர்க் குற்றியலுகரமும் ‘ஐ’ என்னும் சாரியை பெற்று வரும்.

நேற்று + பொழுது = நேற்றைப் பொழுது


நேற்று + கூலி = நேற்றைக் கூலி
ஒன்று – ஒற்றை
இரண்டு - இரட்டை

போன்ற சொற்கள் வருமொழி இல்லாமலே ‘ஐ’ சாரியை பெற்றன.

Page - 96
குற்றியலுகரத் திசைப்பெயர்ப் புணர்ச்சி

186. திசையொடு திசையும் பிறவும் சேரின்


நிலைஈற்று உயிர்மெய் ‘க’ ஒற்று நீங்கலும்
றகரம் ‘ன, ல’ வாத் திரிதலுமாம் பிற

திசைப் பெயருடன் திசைப் பெயரும் பிறபெயரும் சேரும் போது.

நிலை மொழியின் ஈற்றில் உள்ள ‘கு’ உயிர்மெய் கெடும். அதன் அருகில்


நின்ற ‘க்’ கெடும்.

‘ற்’ என்னும் மெய் ‘ல்’ என்னும் மெய் ஆக அல்லது ‘ன்’ என்னும் மெய்யாக
மாறும்.

வடக்கு + கிழக்கு = வட கிழக்கு திசைப் பெயருடன்


வடக்கு + மேற்கு = வடமேற்கு திசைப் பெயர்

வடக்கு + திசை = வடதிசை திசைப் பெயருடன்


வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம் பிற பெயர்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ‘கு’ உயிர்மெய்யும் ‘க்’ மெய்யும் கெட்டன.

தெற்கு + கிழக்கு = தென் கிழக்கு திசைப் பெயருடன்


தெற்கு + மேற்கு = தென் மேற்கு திசைப் பெயர்

தெற்கு + கடல் = தென் கடல் திசைப் பெயருடன்


தெற்கு + மலை = தென் மலை பிற பெயர்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ‘கு’ உயிர்மெய் கெட்டது. ‘ற்’ மெய், ‘ன்’


மெய் ஆக மாறியது.

மேற்கு + கிழக்கு = மேல் கிழக்கு திசைப் பெயருடன்


மேற்கு + வடக்கு = மேல் வடக்கு திசைப் பெயர்

மேற்கு + திசை = மேல் திசை திசைப் பெயருடன்


மேற்கு + காற்று = மேல் காற்று பிற பெயர்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ‘கு’ உயிர்மெய் கெட்டது. ‘ற்’ மெய், ‘ல்’


மெய் ஆக மாறியது.

வடக்கு + மேற்கு = வடக்கு மேற்கு


வடக்கு + ஊர் = வடக்கு ஊர்

Page - 97
என்று இயல்பாகச் சேர்வதும் உண்டு.

மேற்கு + காற்று = மேல்காற்று


மேற்காற்று
மேலைக் காற்று

கிழக்கு + திசை = கீழ்த் திசை


கீழைத்திசை

என்று பிறவகைகளில் சேர்வதும் உண்டு.

‘தெங்கு’ என்பதற்குச் சிறப்பு விதி

187. தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய்கெடும் காய்வரின்.

‘தெங்கு’ என்ற சொல்லை அடுத்து, ‘காய்’ என்ற சொல் வந்தால் நிலை


மொழியின் முதல் எழுத்து, ‘தே’ என நீளும். இறுதியில் உள்ள ‘கு’ உயிர்
மெய் கெடும்.

தெங்கு + காய் = தேங்காய்

தெங்கு என்னும் சொல்லுடன் ‘அம்’ விகுதி சேர்ந்து தெங்கங்காய் என்று


வருவதும் உண்டு.

எண்ணுப் பெயர்ப் புணர்ச்சி

188. எண் நிறை அளவும் பிறவும் எய்தின்


ஒன்று முதல் எட்டு ஈறாம் எண்ணுள்
முதல் ஈர் எண்முதல் நீளும்; மூன்று ஆறு
ஏழ் குறுகும்; ஆறு ஏழ் அல்லவற்றின்
ஈற்றுஉயிர் மெய்யும் ஏழன் உயிர் உம்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்.

எண்ணுப்பெயர், நிறைப்பெயர், அளவுப்பெயர் (முகத்தல் அளவை –


நாழி, லிட்டர்; நீட்டல் அளவை – முழம், மீட்டர்) ஆகியவையும் பிற
பெயர்களும், ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்ணுப் பெயர்களை அடுத்து
வரும் போது ஒன்று, இரண்டு ஆகிய எணணுப் பெயர்களின் முதல் நீளும்.

மூன்று, ஆறு, ஏழு ஆகியவற்றின் முதலில் உள்ள நெடில் எழுத்துக்


குறுகும்.

Page - 98
ஆறும் ஏழும் அல்லாத ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, எட்டு
என்ற எண்களின் இறுதியில் உள்ள உயிர்கள் கெடுவதும் உண்டு.

ஏழு என்ற எண்ணின் இறுதியில் உள்ள உயிரும் கெடுவது உண்டு.

ஆறு + பத்து = அறுபது எண்


ஏழு + பத்து = எழுபது

ஆறு + கழஞ்சு = அறுகழஞ்சு நிறை அளவை


ஏழு + கழஞ்சு = எழுகழஞ்சு

ஆறு + நாழி = அறுநாழி முகத்தல் அளவை


ஏழு + நாழி = எழுநாழி

ஆறு + குணம் = அறுகுணம் பிற பெயர்


ஏழு + குணம் = எழுகுணம்

இவற்றில் முதலில் உள்ள நெடில் எழுத்துகள் குறுகி உள்ளன.

ஏழு + கடல் = ஏழ்கடல்

‘ஏழு’ என்னம் சொல்லின் இறுதியில் உள்ள உகரம் கெட்டது.

இரண்டு + கழஞ்சு = இரண்டு கழஞ்சு


மூன்று + படி= மூன்றுபடி
நான்கு + பொருள் = நான்குபொருள்
ஐந்து + படை = ஐந்துபடை
ஆறு + படை = ஆறுபடை
ஏழு + கடல் = ஏழு கடல்
எட்டு + கோடி = எட்டுக்கோடி

மேற்கூறியவாறு இரண்டு முதல் எட்டுவரை உள்ள எண்ணுப் பெயர்கள்


இயல்பாகவும் வரும்.

எட்டு என்னும் சொல் வன்தொடர்க் குற்றியலுகரம் என்பதால் அதை அடுத்து


வல்லினம் மிகுந்துள்ளது.

Page - 99
ஒன்று, இரண்டு – சிறப்பு விதி

189. ஒன்றன் புள்ளி ரகரம் ஆக


இரண்டன் ஒற்று உயிர் ஏக ‘உவ்’ வருமே.

ஒன்று என்னும் சொல்லின் இறுதியில் உள்ள உயிர்மெய் கெடும்.


னகர மெய் எழுத்து, ரகரமெய் எழுத்து ஆகும். இந்த ரகர மெய் எழுத்து
மேல் ‘உ’ வரும்.

ஒன்று, இரண்டு என்னும் சொற்களை அடுத்து வருமொழியின்


முதலில் உயிர்வந்தால் மேற்கூறிய உகரம் தோன்றாது. இரண்டு
சொற்களின் முதலில் உள்ள குறில் எழுத்துகள் நெடிலாக மாறும்.

ஒன்று + கலம் = ஒருகலம்


ஒன்று + நாழி = ஒருநாழி
ஒன்று + யானை = ஒரு யானை
ஒன்று + ஆயிரம் = ஓர்ஆயிரம்.

ஒன்று என்னும் சொல்லின் இறுதியில் உள்ள உயிர்மெய் கெட்டது. னகர


உயிர்மெய் ரகர மெய் ஆனது. ரகர மெய்யில் உகரம் சேர்ந்தது.

வருமொழி முதலில் (ஆயிரம்) உயிர் வரும் போது உகரம் வரவில்லை.


முதல் நீண்டது (ஓ).

இரண்டு + கலம் = இருகலம்


இரண்டு + நாழி = இருநாழி
இரண்டு + யானை = இருயானை
இரண்டு + ஆயிரம் = ஈராயிரம்

இரண்டு என்னும் சொல்லின் இறுதியில் உள்ள உயிர்மெய்யும் ணகர


மெய்யும் கெட்டன. ரகர உயிர் மெய்யில் உள்ள அகரம் கெட்டது. ரகர
மெய்யில் உகரம் சேர்ந்து.

வருமொழி முதலில் உயிர் (ஆயிரம்) வரும் போது உகரம் வரவில்லை.


முதல் நீண்டது (ஈ).

Page - 100
மூன்று – சிறப்பு விதி

190. மூன்றன் உறுப்பு அழிவும் வந்ததும் ஆகும்.

மூன்று என்னும் சொல்லின் இறுதியில் உள்ள உயிர்மெய் கெடும்.


னகர மெய் எழுத்து, சில வேளைகளில் கெடுவதும் உண்டு; சில
வேளைகளில் வருமொழிக்கு ஏற்ற மெய்யாக மாறுவதும் உண்டு.

வருமொழி முதலில் உயிர் வந்தால் மூன்று என்னும் சொல்லின்


முதலில் உள்ள உயிர் குறுகும்.

மூன்று + ஆயிரம் = மூவாயிரம்


மூன்று + உலகு = மூவுலகு.

வருமொழி முதலில் உயிர் வந்தால் ‘மூ’ குறுக வில்லை. இறுதியில் உள்ள


உயிர்மெய்யும் னகர மெய்யும் கெட்டன.

மூன்று + கலம் = முக்கலம்


மூன்று + நூறு = முந்நூறு
மூன்று + வட்டி = முவ்வட்டி

மூன்று என்னும் சொல்லின் முதல் எழுத்துக் குறுகியது. இறுதியில் உள்ள


உயிர்மெய் எழுத்துக் கெட்டது. னகர மெய் எழுத்து வருமொழிக்கு ஏற்ப
மாறியது.

நான்கு – சிறப்பு விதி

191. நான்கன் மெய்யே ல, ற ஆகும்மே.

நான்கு என்னும் சொல்லின் இறுதியில் உள்ள உயிர்மெய் கெடும். ‘ன்’


என்னும் மெய் எழுத்து ல, ற என்னும் மெய்யாக மாறும்.

நான்கு + ஆயிரம் = நாலாயிரம்


நான்கு + வழி = நால்வழி

இவற்றில் னகர மெய் லகர மெய்யாக மாறியது.

நான்கு + கவி = நாற்கவி


நான்கு + பால் = நாற்பால்

இவற்றில் னகர மெய், றகர மெய்யாக மாறியது.

Page - 101
நான்கு + மணி = நான்மணி
நான்கு + நாழி = நானாழி

இவற்றில் னகர மெய் இயல்பாகச் சேர்ந்தது.

ஐந்து – சிறப்பு விதி

192. ஐந்தன் ஒற்று அடைவதும் இனமும் கெடும்.

ஐந்து என்னும் சொல்லின் இறுதியில் உள்ள உயிர்மெய் கெடும். நகர


மெய் எழுத்து, வருமொழி முதலுக்கு ஏற்ப மாறும். நகர மெய் கெடுவதும்
உண்டு.

ஐந்து + மூன்று = ஐம்மூன்று

இதில் இறுதியில் உள்ள உயிர்மெய் கெட்டது. நகர மெய் வருமொழியின்


மெய்யாக மாறியது.

ஐந்து + கழஞ்சு = ஐங்கழஞ்சு

இதில் இறுதியில் உள்ள உயிர்மெய் கெட்டது. நகர மெய் வருமொழியின்


இனமாக மாறியது.

ஐந்து + ஆயிரம் = ஐயாயிரம்


ஐந்து + வழி = ஐவழி

இதில் இறுதியில் உள்ள உயிர்மெய் கெட்டது. நகர மெய்யும் கெட்டது.

எட்டு – சிறப்புவிதி

193. எட்டன் உடம்பு ணவ்வாகும் என்ப.

எட்டு என்னும் சொல்லின் இறுதியில் உள்ள உயிர்மெய் கெடும். டகர


மெய் ணகர மெய்யாக மாறும்.

எட்டு + பத்து = எண்பது


எட்டு + கழஞ்சு = எண்கழஞ்சு
எட்டு + வழி = எண்வழி
எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம்

Page - 102
இதில் இறுதியில் உள்ள உயிர்மெய் கெட்டது. டகர மெய் ணகர மெய்யாக
மாறியது.

ஒன்பது – சிறப்பு விதி

194. ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின்


முன்னதின் ஏனைய முரணி, ஒவ்வொடு
தகரம் நிறீஇப், பஃது அகற்றி, னவ்வை
நிரலே ண, ளவாத் திரிப்பது நெறியே.

ஒன்பது என்ற எண்ணுடன் பத்து, நூறு ஆகியவை சேரும்போது பத்தை


நூறு ஆகவும் நூறை ஆயிரமாகவும் மாற்றுவது உண்டு.

முதலில் உள்ள ஒகர உயிர் எழுத்துடன் தகர மெய் எழுத்தைச்


சேர்ப்பது உண்டு.

ஒன்பது என்ற சொல்லின் இறுதியில் உள்ள பத்து அகலும்.

இடையில் உள்ள னகர மெய் ணகர மெய் எழுத்தாகவும் ளகர மெய்


எழுத்தாகவும் மாறும்.

ஒன்பது + பத்து = தொண்ணூறு


ஒன்பது + நூறு = தொள்ளாயிரம்

இவற்றில் உள்ள பத்து நூறாகவும், நூறு ஆயிரமாகவும் மாறியுள்ளன.

ஒகரத்துடன் தகர மெய் சேர்ந்து ‘தொ’ வந்துள்ளது. ஒன்பதில் உள்ள


பத்து அகன்று விட்டது.

னகர மெய் ணகர மெய்யாகவும் (தொண்ணூறு) ளகர மெய்யாகவும்


(தொள்ளாயிரம்) மாறியுள்ளது.

பத்து என்னும் எண் சேர்தல்

195. முதல்இரு நான்காம் எண் முனர்ப்பத்தின்


இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல்
எனஇரு விதியும் ஏற்கும் என்ப.

ஒன்று முதல் எட்டுவரை உள்ள எண்களுடன் பத்து என்னும் எண்


சேரும்போது பத்துக்கு நடுவில் உள்ள ‘த்’ என்னும் மெய் எழுத்துக் கெடும்.

Page - 103
‘த்’ இருந்த இடத்தில் ஆய்தம் (ஃ) வருவதும் உண்டு.

ஒன்று + பத்து = ஒருபது


ஒருபஃது

இரண்டு பத்து = இருபது


இருபஃது

மூன்று + பத்து = முப்பது


முப்பஃது

நான்கு + பத்து = நாற்பது


நாற்பஃது

ஐந்து + பத்து = ஐம்பது


ஐம்பஃது

ஆறு + பத்து = அறுபது


அறுபஃது

ஏழு + பத்து = எழுபது


எழுபஃது

எட்டு + பத்து = எண்பது


எண்பஃது

பது, பஃது இவற்றுடன் சேர்தல்

196. ஒருபஃது ஆதிமுன் ஒன்றுமுதல் ஒன்பான்


எண்ணும் அவைஊர் பிறவும் எய்தின்
ஆய்தம் அழிய ஆண்டு ஆகும் தவ்வே.

ஒருபஃது முதல் எண்பஃது முடிய உள்ள எட்டு எண்களுடன் ஒன்று


முதல் ஒன்பது வரை உள்ள எண்களும் சேரும்போது நிலை மொழியில்
உள்ள ஆய்தம் கெடும்.

இயல்பாக இருந்த ‘த்’, ஆய்த எழுத்து இருந்த இடத்தில் தோன்றும்.

ஒருபஃது + ஒன்று = ஒருபத்தொன்று


இருபஃது + மூன்று = இருபத்து மூன்று

இவற்றில் ஆய்தம் கெட்டு, ‘த’ தோன்றியுள்ளது.

Page - 104
இருபது என்று ஆய்தம் இல்லாமல் வருவதும் தகர மெய் தோன்றும்.

பத்து, ஒன்பதுடன் பிற எண்கள்

197. ஒன்று முதல் ஈரைந்து ஆயிரம் கோடி


எண், நிறை, அளவும் பிறவரின் பத்தின்
ஈற்று உயிர்மெய் கெடுத்து இன்னும் இற்றும்
ஏற்பது ஏற்கும். ஒன்பதும் இனைத்தே.

பத்து என்னும் சொல்லுடன் ஒன்று முதல் பத்து, ஆயிரம், கோடி


ஆகிய எண்ணுப் பெயர்களும், அளவுப் பெயரும், பிறபெயர்களும் வந்து
சேரும்போது இறுதியில் உள்ள உயிர்மெய் கெடும்.

இன் அல்லது இற்றுச் சாரியை தோன்றும். ஒன்பது என்னும்


சொல்லுடனும் இவ்வாறே சேரும்.

பத்து + ஒன்று = பதினொன்று, பதிற்றொன்று.


பத்து + ஆயிரம் = பதினாயிரம், பதிற்றாயிரம்
பத்து + கோடி = பதின்கோடி, பதிற்றுக்கோடி
பத்து + கலம்= பதின்கலம், பதிற்றுக்கலம்
பத்து + மடங்கு = பதின்மடங்கு, பதிற்று மடங்கு
ஒன்பது + ஆயிரம் = ஒன்பதினாயிரம்,
ஒன்பதிற்றாயிரம்

ஒன்பது + கோடி = ஒன்பதின் கோடி,


ஒன்பதிற்றுக்கோடி

இவற்றில் இறுதியில் உள்ள உயிர்மெய் கெட்டு இன், இற்றுச் சாரியை


தோன்றின.

பத்துடன் இரண்டு

198. இரண்டு முன்வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்


கரந்திட ஒற்று ‘ன’ ஆகும் என்ப.

பத்து என்னும் சொல்லுடன் இரண்டு வந்து சேரும் போது இறுதியில்


உள்ள உயிர்மெய் (து) கெடும். தகர மெய் னகர மெய்யாக மாறும்.

பத்து + இரண்டு = பன்னிரண்டு

Page - 105
இதில் இறுதியில், உள்ள உயிர்மெய் கெட்டு, ‘து’ என்னும் மெய்
எழுத்து ‘ன்’ ஆகி உள்ளது.

எண்கள் இரட்டிச்சேர்தல் – ஒன்பது தவிர

199. ஒன்பது ஒழித்த எண்ஒன்பதும் இரட்டின்


முன்னதின் முன்அல ஓட உயிர்வரின்
வவ்வும் மெய்வரின் வந்ததும் மிகல் நெறி.

ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களில் ஒன்பது தவிர உள்ள


ஏனைய எண்களுடன் அந்தந்த எண்கள் இரட்டும் போது நிலை மொழியின்
முதல் எழுத்துத் தவிர ஏனைய எழுத்துகள் கெடும்.

உயிர் எழுத்தை முதலாகக் கொண்ட எண் வந்தால் வகர மெய்யும்,


மெய் எழுத்து வந்தால் அதே மெய்யும் தோன்றும்.

ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று


இரண்டு + இரண்டு = இவ்விரண்டு உயிர் வந்தால்
ஆறு + ஆறு = அவ்வாறு ‘வ’
ஏழு + எழு = எவ்வேழு தோன்றியது
எட்டு + எட்டு = எவ்வெட்டு

மூன்று + மூன்று = மும்மூன்று மெய்வந்ததால்


நான்கு + நான்கு = நந்தான்கு அந்த மெய்களே
பத்து + பத்து = பப்பத்து தோன்றியுள்ளன.

ஆறு, ஏழு, மூன்று, நான்கு ஆகியவற்றின் முதலில் உள்ள நெடில்கள் குறுகி


உள்ளன.

பூப்பெயர்

200. பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும்.

பூ என்னும் பெயருக்கு முன் வருமொழி முதலுக்கு இனமான


மெல்லினமும் தோன்றும்.

பூ + கொடி = பூங்கொடி
பூ + சோலை = பூஞ்சோலை

Page - 106
மேலே கண்டவற்றுள் ‘க்’ என்னும் மெய்க்கு இனமான ‘ங்’ என்னும் மெய்யும்,
‘ச்’ என்னும் மெய்க்கு இனமான ‘ஞ்’ என்னும் மெய்யும் தோன்றியுள்ளன.

பூப்பெயர்முன் வல்லினம் இயல்பாகவும் தோன்றும்.

ஏ, ஓ – சிறப்பு விதி

201. இடைச்சொல் ஏ, ஓ முன் வரியின் இயல்பே.

ஏ, ஓ என்னும் இடைச்சொற்களின் முன் வல்லினம் வந்து சேர்ந்தால்


இயல்பாகச் சேரும். மெய் எழுத்து எதுவும் மிகாது.

அவனே + கண்டான் = அவனே கண்டான் (ஏ)


அவனோ + கண்டான் = அவனோ கண்டான் (ஓ)

ஐகார ஈறு – சிறப்பு விதி

202. வேற்றுமை ஆயின் ஐகான் இறுமெழி


ஈற்று அழிவோடும் அம் ஏற்பவும் உளவே.

வேற்றுமையில் ஐகாரத்தை இற்றுதியில் கொண்ட சொற்கள்


வருமொழியுடன் சேரும்போது ஐகாரம் கெடும். ‘அம்’ சாரியை தோன்றும்.

வழுதுணை + காய் = வழுதுணங்காய்


தாழை + பூ = தாழம்பூ

இவற்றில் ஐகாரம் கெட்டு, அம் தோன்றியுள்ளது.

Page - 107
பனையுடன் சேர்தல்

203. பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின்


ஐபோய் அம்மும் திரள்வரின் உறழ்வும்
அட்டுஉறின் ஐகெட்டு அந்நீள்வுமாம் வேற்றுமை.

வேற்றுமைப் புணர்ச்சியில் பனை என்னும் சொல்முன்


‘கொடி’ என்பது வருமொழியாய் வந்து வருமொழியின்
முதலில் உள்ள மெய் தோன்றும்.

பனை என்னும் சொல்முன் வல்லினமெய் வந்தால்


ஐகாரம் கெடும். ‘அம்’ சாரியை தோன்றும்.

பனை என்னும் சொல்முன் ‘திரள்’ என்னும் சொல்


வந்தால் வருமொழின் முதலில் உள்ளமெய் தோன்றும்.
(அல்லது) ஐகாரம் கெட்டு ‘அம்’ சாரியை தோன்றும்.

பனை என்னும் சொல்முன் ‘அட்டு’ என்னும் சொல் வந்தால் ஐகாரம் கெடும்.


வருமொழி முதலில் உள்ள ‘அ’ ‘ஆ’ என்று நீளும்.

1. பனை + கொடி = பனைக்கொடி - ‘க்’ தோன்றியது.

2. பனை + காய் = பனங்காய் – ஐகாரம் கெட்டது.


‘அம்’ சாரியை தோன்றியது.

3. பனை + திரள் = பனைத்திரள் - ‘த்’ தோன்றியது.


பனந்திரள் – ஐகாரம் கெட்டது.
‘அம்’ சாரியை தோன்றியது.

4. பனை + அட்டு = பனாட்டு – ஐகாரம் கெட்டது.


அகரம் அகாரமாக நீண்டது.

Page - 108
அலகு - V

மெய் ஈற்று புணரியல்

மெய் எழுத்தை இறுதியாகக் கொண்ட சொற்களின் புணர்ச்சியை


விளக்கும் இயல்.

204. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

நிலைமொழியின் இறுதியில் நின்ற மெய் எழுத்தின் மேல்


வருமொழியின் முதலில் உள்ள உயிர் வந்து சேர்வது இயல்பு ஆகும்.

மலர் + அழகன் = மலரழகன்


வேல் + எறிந்தான் = வேலெறிந்தான்

205. தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்

தனிக்குறில் எழுத்துக்கு அடுத்து ஒற்று நிற்க, வருமொழியின் முதலில்


உள்ள உயிர்வந்து சேரும் போது அந்த ஒற்று இரட்டும்.

மண் + அழகு = மண்ணழகு


பொன் + அணி = பொன்னணி

மெய் இறுதியின் முன்மெய்

206. தன்மொழி மெய்ம்முன் யவ்வரின் இகரம்


துன்னும் என்று துணிநரும் உளரே.

ஞ, ண, ந, ம, ன, ர, ல, வ, ழ, ள என்னும் பத்து மெய்களின் முன்


யகரமெய் வந்து சேர்ந்தால் ‘இ’ என்னும் சாரியை தோன்றும்.

வேள் + யாவன் = வேளியாவன்


மண் + யாப்பு = மண்ணியாப்பு

இடையில் இகரம் தோன்றியுள்ளது.

வேள் + யாவன் = வேள்யாவன்


மண் + யாப்பு = மண்யாப்பு

இவ்வாறும் சேரும்.

Page - 109
உகரச்சாரியை தோன்றுதல்

207. ஞ ண ந ம ல வ ள ன ஒற்றுஇறு தொழிற்பெயர்


ஏவல் வினைநனி யஅல் மெய்வரின்
‘உ’ வ்வுறும் ஏவல் உறாசில சில்வழி

ஞ, ண, ந, ம, ல, வ, ள, ன என்னும் எட்டு மெய்களையும் இறுதியில்


உடைய முதல் நிலைத் தொழில் பெயர்களும் ஏவல் வினைகளும் யகர
மெய்எழுத்துகள் வந்துசேரும் போது உகரச் சாரியை பெறும்.

சில ஏவல் வினைகள் உகரச் சாரியை பெறாமலும் வரும்.

முதல் நிலைத் தொழிற்பெயர்

தொழிற்பெயர்க்குரிய விகுதி குறைந்து முதல்நிலை மட்டும் வந்து


தொழிற் பெயர்ப் பொருளைத் தருவது முதல் நிலைத் தொழிற் பெயர் ஆகும்.

உரிஞ் + கடித = உரிஞுக்கடிது


உண் + சிறிது = உண்ணுச்சிறிது
பொருந் + தீது = பொருநுத்தீது
திரும் + பெரிது = திருமுப்பெரிது
வெல் + ஞான்றது = வெல்லு ஞான்றது
வவ் + நீண்டது = வவ்வு நீண்டது
துள் + மாண்டது = துள்ளு மாண்டது
தின் + வலிது = தின்னு வலிது.

மேற்கண்ட எட்டு மெய் இறுதி முதல் நிலைத்தொழிற் பெயர்களும்


அல்வழியில் உகரச் சாரியை பெற்றன.

உரிஞ் + கடுமை = உரிஞுக்கடுமை


பொருந் + தீமை = பொருநுத் தீமை
திரும் + பெருமை = திருமுப் பெருமை
வெல் + ஞாற்சி = வெல்லு ஞாற்சி
வவ் + நீட்சி = வவ்வு நீட்சி
துள் + மாட்சி = துள்ளு மாட்சி
தின் + வலிமை = தின்னு வலிமை

மேற்கண்ட எட்டு மெய் இறுதி முதல் நிலைத் தொழிற்பெயர்களும்


வேற்றுமையில் உகரச் சாரியை பெற்றன.

Page - 110
உரிஞ் + கொற்றா = உரிஞுகொற்றா
உண் + சாத்தா = உண்ணு சாத்தா

இவ்வாறு ஏவல் வினைகள் எனகரச் சாரியை பெற்று வரும்.

உண் + கொற்றா = உண் கொற்றா


தின் + வளவா = தின் வளவா
வெல் + கண்ணா = வெல் கண்ணா
துள் + செழியா = துள்செழியா

என்று ஏவல் வினைகள் உகரச் சாரியை பெறாமல் வருவதும் உண்டு.

ஞ, ந, ம, வ என்னும் நான்கு மெய்களும் உகரம் பெற்றே வரும்.

ந – ஈற்று முதல் நிலைத் தொழிற்பெயர் – சிறப்பு விதி

208. நவ்இறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை

‘ந்’ என்னும் மெய்யை இறுதியாகக் கொண்ட முதல் நிலைத்


தொழிற்பெயருக்கு உகரச்சாரியை மட்டும் அல்லாமல் அகரச் சாரியையும்
வேற்றுமைப் புணர்ச்சியில் வரும்.

பொருந் + கடுமை = பொருநக் கடுமை


பொருந் + நன்மை = பொருந நன்மை
பொருந் + வன்மை = பொருந வன்மை

பொருநுதல் (அ) பொருநல்

ஒருவர் மற்றொருவர் போல் ஒப்பனை செய்து கொள்ளுதல்.

Page - 111
ண ன ஈறு

204. ண ன வல்லினம் வர டறவும் பிறவரின்


இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு அல்வழிக்கு
அனைத்து மெய்வரினும் இயல்பு ஆகுமே.

நிலை மொழியின் இறுதியில் ண், ன் என்னும் மெய் எழுத்துகள் நின்று


வருமொழி முதலில் வல்லினம் வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில்
அவைட், ற் ஆகும்.

மெல்லினமும் இடையினமும் வருமொழியின் முதலில் வந்தால்


இயல்பு ஆகும்.

அல்வழிப் புணர்ச்சியில் வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய


மூன்றும் வந்தாலும் இயல்பு ஆகும்.

கண் + களிறு = கட்களிறு


பொன் + தூண் = பொற்றூண்

வேற்றுமையில் வல்லினம் வருமொழியாய் வர ட், ற் ஆக மாறின.

மண் + நீட்சி = மண்ணீட்சி


பொன் + நீட்சி = பொன்னீட்சி
மண் + வன்மை = மண்வன்மை
பொன் + வன்மை = பொன்வன்மை

வேற்றுமையில் மெல்லினம், இடையினம் ஆகியவை வருமொழியாக வர


இயல்பாகச் சேர்ந்தன.

மண் + பெரிது = மண்பெரிது


பொன் + பெரிது = பொன்பெரிது
மண் + மாண்டது = மண்மாண்டது
பொன் + மாண்டது = பொன்மாண்டது
மண் + யாது = மண்யாது
பொன் + யாது = பொன்யாது

அல்வழியில் வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவை வர


இயல்பாகச் சேர்ந்தன.

Page - 112
ண, ன ஈறுகள் கெடுதல்

210. குறில் அணைவு இல்லா ண னக்கள் வந்த


நகரம் திரிந்துழி நண்ணும் கேடே.

தனிக்குறில் எழுத்தைச் சேர்ந்து வராமல் தனிச் சொல்லிலும்,


தொடர்சொல்லிலும் ண், ன் ஆகிய மெய்கள் வந்து வருமொழி முதலில்
நகரம் வந்தால் ‘ண்’ ‘ன்’ கெடும். நகரம் ணகரமாகவும் னகரமாகவும் மாறும்.

தூண் + நன்று = தூணன்று


பசுமண் + நன்று = பசுமணன்று
அரசன் + நல்லன் = அரசனல்லன்
செம்பொன் + நன்று = செம்பொனன்று

அல்வழியில் ணகர மெய்யும் னகர மெய்யும் கெட்டன.

தூண் + நன்மை = தூணன்மை


பசுமண் + நன்மை = பசுமணன்மை
அரசன் + நன்மை = அரசனன்மை
செம்பொன் + நன்மை = செம்பொனன்மை

வேற்றுமையில் ணகர மெய்யும் னகர மெய்யும் கெட்டன.

ண் ஈற்றுப் பெயர் – சிறப்பு விதி

211. சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி


இயல்பாம் வேற்றுமைக்கு; உணவு எண், சாண்பிற
டவ்வாகலுமாம் அல்வழி யும்மே.

சாதி பற்றிய பெயர்களுக்கும், குழு பற்றிய பெயர்களுக்கும் பரண்,


கவண் என்னும் பெயர்களுக்கும் இறுதியில் வரும் ணகர மெய் வேற்றுமைப்
புணர்ச்சியிலும் வல்லினம் வரும் போதும் இயல்பாகச் சேரும்.

உணவுப் பொருளான எள்ளின் திரிசொல்லான எண் என்னும்


பெயருக்கும் சாண் என்னும் நீட்டல் அளவைப் பெயருக்கும் அல்வழிப்
புணர்ச்சியில் இறுதியில் உள்ள ணகரம், டகரமாக மாறும்.

பாண் + குடி = பாண்குடி (சாதிப் பெயர்)


அமண் + குடி = அமண்குடி (குழுப்பெயர்

Page - 113
பரண் + கால் = பரண்கால்
கவண் + கால் = கவண்கால்

இவை வேற்றுமையில் இயல்பாகச் சேர்ந்தன.

எண் + பெரிது = எட்பெரிது


சாண் + கோல் = சாட்கோல்

இவை அல்வழியில் டகர மெய்யாக மாறின.

‘ன்’ ஈற்றுக் குடிப்பெயர்

212. னஃகான் கிளைப் பெயர் இயல்பும், அஃகான்


அடைவும் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.

வேற்றுமையில் ‘ன்’ என்னும் மெய் எழுத்தை இறுதியில் கொண்ட


குடிப்பெயர் முன் வல்லினம் வந்தால் இயல்பாகவும் அகரச் சாரியை
பெற்றும் சேரும்.

எயின் + குடி = எயின்குடி - இயல்பு


எயினக்குடி - அகரச்சாரியை தோன்றியது.

மீன் என்ற சொல் – சிறப்பு விதி

213. மீன் றவ்வொடு பொரூஉம் வேற்றுமை வழியே

வேற்றுமையில் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் மீன்


என்னும் சொல்லின் இறுதியில் உள்ள னகர மெய், றகர மெய்யாக மாறும்.

மீன் + கண் = மீன்கண்


மீற்கண்.

Page - 114
தேன் என்னும் சொல் – சிறப்பு விதி

214. தேன் மொழி மெய்வரின் இயல்பும், மென்மை


மேவின் இறுதி அழிவும் வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலும் இருவழி.

அல்வழி, வேற்றுமை ஆகிய இரண்டிலும் தேன் என்ற சொல்லை


அடுத்து வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூன்றும் வந்தால்
இயல்பாகச் சேரும்.

வருமொழி முதலில் மெல்லினம் வந்தால் ‘ன்’ கெடுவதும் உண்டு.

வருமொழி முதலில் வல்லினம் வந்தால் ‘ன்’ கெட்டு வல்லினம்


அல்லது அதற்கு இனமான மெல்லினம் மிகுதலும் உண்டு.

அல்வழி

தேன் + கடிது = தேன்கடிது


தேன் + மாண்டது = தேன் மாண்டது
தேன் + யாது= தேன்யாது

இவற்றில் இயல்பாகச் சேர்ந்தன.

தேன் + மொழி = தேன் மொழி


தே மொழி

மெல்லினம் வருமொழி முதலில் வர இயல்பாகவும் ஈற்றில் உள்ள ‘ன்’


கெட்டும் சேர்ந்தன.

தேன் + குழல் = தேன் குழல்


தேன்குழல்
தேன்குழல்

வல்லினம், வருமொழியின் முதலில் வர இயல்பாகவும் ‘ன்’ கெட்டு


வல்லினமெய் பெற்றும் மெல்லின மெய் பெற்றும் சேர்ந்துள்ளன.

Page - 115
வேற்றுமை

தேன் + கடுமை = தேன் கடுமை


தேன் + மாட்சி = தேன்மாட்சி
தேன் + யாப்பு = தேன் யாப்பு

இவற்றில் இயல்பாகச் சேர்ந்தன

தேன் + மலர்= தேன்மலர்


தேமலர்

வருமொழியின் முதலில் மெல்லினம் வர இயல்பாகவும் ‘ன்’ கெட்டும்


சேர்ந்தன.

தேன் + குடம் = தேன்குடம்


தேக்குடம்
தேங்குடம்

வருமொழியின் முதலில் மெல்லினம் வர இயல்பாகவும் ‘ன்’ கெட்டு வல்லின


மெய் பெற்றும் மெல்லின மெய் பெற்றும் சேர்ந்துள்ளன.

எகின் என்னும் சொல் சேர்தல்

215. மரம்அல் எகின்மொழி இயல்பும் அகரம்


மருவ வலிமெலி மிகலும் ஆகும்.

மரத்தை உணர்த்தாமல் அன்னப்பறவையை உணர்த்தும் எகின் என்ற


சொல், வருமொழி முதலில் வந்தால் வேற்றுமையில் இயல்பாகச் சேரும்.

அல்வழி, வேற்றுமை இருவழியிலும் அகரச் சாரியையுடன் வல்லினம்


அல்லது மெல்லினம் மிகுவதும் உண்டு.

எகின் + கால் = எகின் கால்


எகின் + தலை = எகின் தலை

வேற்றுமையில் இயல்பாகச் சேர்ந்தது.

எகின் + புள் = எகினப்புள், எகினம்புள்


எகின் + கால் = எகினக்கால், எகினங்கால்

அல்வழி, வேற்றுமையில் அகரச் சாரியையும் வல்லினமும் மெல்லினமும்


மிகுந்து வந்துள்ளன.

Page - 116
குயின், ஊன் என்னும் சொற்கள்

216. குயின் ஊன் வேற்றுமைக் கண்ணும் இயல்பே.

குயின் என்னும் பெயரும் ஊன் என்னும் பெயரும் வேற்றுமையிலும்


இயல்பாகச் சேரும்.

(குயின் –மேகம்)
குயின் + கடுமை = குயின்கடுமை
குயின் + சிறுமை = குயின் சிறுமை
ஊன் + கடுமை = ஊன் கடுமை
ஊன் + சிறுமை = ஊன் சிறுமை

வேற்றுமையில் இயல்பாகச் சேர்ந்தன.

மின், மின், பன், கன் என்னும் சொற்கள்

217. மின், பின், பன், கன் தொழிற்பெயர் அனைய


கன்அவ் ஏற்று மென்மையோடு உறழும்

மின், பின், பன், கன் என்னும் நான்கு சொற்களும் முதல் நிலைத்


தொழிற்பெயரைப் போல், யகரமெய் அல்லாத மெய்கள் வரும்போது உகரச்
சாரியை பெறும்.

கன் என்னும் சொல் அகரச்சாரியை பெற்று, வருமொழியின் முதலில்


உள்ள வல்லினமெய் அல்லது அதற்கு இனமான மெல்லின மெய் பெறும்.

அல்வழி

மின் + கடிது = மின்னுக் கடிது


பின் + நன்று = பின்னு நன்று
பன் + வலிது = பன்னு வலிது
கன் + கடிது = கன்னுக் கடிது

Page - 117
வேற்றுமை

மின் + கடுமை = மின்னுக்கடுமை


பின் + நன்மை = பின்னு நன்மை
பன் + வன்மை = பன்னு வன்மை
கன் + வன்மை = கன்னு வன்மை

மேற்கண்டவை உகரச் சாரியை பெற்றுள்ளன.

கன் + தட்டு = கன்னத்தட்டு


கன்னந்தட்டு

அல்வழியில் அகரச்சாரியை பெற்று வல்லினமெய்யும் மெல்லின மெய்யும்


மிகுந்துள்ளன.

கன் + தூக்கு = கன்னத்தூக்கு


கன்னந்தூக்கு

வேற்றுமையில் அகரச் சாரியை பெற்று வல்லின மெய்யும் மெல்லின


மெய்யும் மிகுந்துள்ளன.

(பன் – பருத்தி
கன் – சிறு தராசுத் தட்டு)

தன், என், நின் என்னும் சொற்கள்

218. தன், என் என்பவற்று ஈற்று னவ் வன்மையோடு


உறழும், நின் ஈறு இயல்பாகம் உறவே.

தன், என் என்னும் சொற்களின் இறுதியில் உள்ள னகர மெய்


வல்லினம் வரும் போது றகர மெய் ஆக மாறும்; இயல்புகவும் சேரும்.

தன் + பகை = தன்பகை


தற்பகை

என் + பகை = என்பகை


எற்பகை

வருமொழி முதலில் வல்லினமெய் வர நிலைமொழியின் இறுதியில் உள்ள


நகர மெய் இயல்பாகவும் றகர மெய்யாக மாறியும் சேர்ந்தது.

நின் + பகை = நின்பகை

இயல்பாகச் சேர்ந்தது.

Page - 118
‘ம்’ என்னும் மெய்யுடல் சேர்தல்

219. மவ்வீறு ஒற்று அழிந்து உயிர்ஈறு ஒப்பவும்


வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.

மகர மெய்யை இறுதியில் கொண்ட சொற்கள் வருமொழி முதலில்


வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர் எழுத்துகள் ஆகியவை வரும்
போது மகர மெய் கெடும். உயிரை இறுதியில் கொண்ட சொல்லாக
வருமொழியுடன் சேரும்.

வல்லினமெய் எழுத்து வரும்போது கெடாமல் அதற்கு ஏற்ற


மெல்லினமாகவும் மாறும்.

அல்வழி

வட்டம் + ஆழி = வட்டவாழி


வட்டம் + கல் = வட்டக்கல்
வட்டம் + நேமி = வட்டநேமி
வட்டம் + வாரி = வட்டவாரி

வேற்றுமை

மரம் + அடி = மரவடி


மரம் + கால் = மரக்கால்
மரம் + நார் = மரநார்
மரம் + வேர் = மரவேர்

இறுதியில் உள்ள மகர மெய்கெட்டது. உயிர் இறுதியில் உள்ள சொல் போல்


சேர்ந்தது.

நம் + கை = நங்கை

இறுதியில் நின்ற மகர மெய் வருமொழியின் வல்லினத்திற்கு இனமான


மெல்லினமாக மாறியது.

சிறப்பு விதி

220. வேற்றுமை மப்போய் வலிமெலி உறழ்வும்


அல்வழி உயிர் இடை வரின் இயல்பும் உள.

Page - 119
வேற்றுமைப் புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் உள்ள மகர
மெய் கெட்டு வருமொழியின் முதலான வல்லினம் அல்லது அதற்கு
இனமான மெல்லினம் மிகும்.

அல்வழிப்புணர்ச்சியில் வருமொழி முதலில் உயிரும் இடையின-மும்


வரும்போது இயல்பாகச் சேரும்.

குளம் + கரை = குளக்கரை;


குளங்கரை

மகர மெய் கெட்டது. வல்லினமும், மெல்லினமும் தோன்றின.

மரம் + அடைத்தது = மரமடைத்தது


மரம் + வலிது = மரம் வலிது

அல்வழியில் உயிரும் இடையினமும் வர இயல்பாகச் சேர்ந்தன.

நும், தம், எம், நம் என்னும் சொற்கள்

221. நும் தம் எம் நம் ஈறாம் மவ்வரு ஞநவே.

நும், தம், எம், நம் என்னும் சொற்களின் இறுதியில் நிற்கும் மகர மெய்
வருமொழியின் முதலில் உள்ள ஞகர நகர மெய்களாக மாறும்.

நும் + ஞாண் = நுஞ்ஞாண்


தம் + ஞான் = தஞ்ஞாண்
எம் + நூல் = எந்நூல்
நம் + நூங்ல = நந்நூல்

மேற்கண்டவற்றில் மகர மெய் ‘ஞ’ ஆகவும் ‘ந’ ஆகவும் மாறியது.

அகம் என்னும் சொல்

222. அகம் முனர்ச் செவி, கைவரின் இடையன கெடும்.

அகம் என்னும் இடப் பெயரை அடுத்து, செவி, கை என்னும் பெயர்கள்


வந்தால் மகரமெய் வருமொழி முதலுக்கு இனமாக மாறும்; இடையில்
உள்ள ‘க’ என்னும் உயிர் மெய் கெடும்.

அகம் + செவி = அஞ்செவி


அகம் + கை = அங்கை

Page - 120
மகர மெய்யானது இன மெய்யாக மாறியது ககர உயிர்மெய் கெட்டது.

ஈம், கம், உரும் என்னும் சொற்கள்

223. ஈமும்
கம்மும் உருமும் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறுமே.

ஈம், கம், உரும் என்னும் சொற்கள் அல்வழியிலும் வேற்றுமை-யிலும்


முதல் நிலைத் தொழில் பெயரைப் போல் உகரச் சாரியை பெறும்.

ஈம், கம் என்பவை உகரச் சாரியை அல்லது அகரச் சாரியையும்


பெறும்.

அல்வழி

ஈம் + கடிது = ஈமுக் கடிது


கம் + நீண்டது = கம்மு நீண்டது
உரும் + வலிது = உருமுவலிது

வேற்றுமை

ஈம் + கடுமை = ஈமுக்கடுமை


கம் + நிட்சி = கம்மு நீட்சி
உரம் + வன்மை = உருமு வன்மை

மேலே கண்டவை உகரச் சாரியை பெற்று வந்துள்ளன.

ஈம் + குடம் = ஈமக்குடம்


கம் + குடம் = கம்மக்குடம்

ஈம், கம் என்பவை அகரச் சாரியை பெற்று வந்துள்ளன.

Page - 121
ய, ர, ழ என்னும் மெய் இறுதிச் சொற்கள்

224. யரழ முன்னர்க் க, ச, த, ப அல்வழி,


இயல்பும் மிகலும் ஆகும்; வேற்றுமை
மிகலும் இனத்தோடு உறத்துலும் விதிமேல்.

ய, ர, ழ என்னும் மெய் இறுதியில் கொண்ட சொற்களை அடுத்து க, ச,


த, ப வந்தால் அல்வழியில் இயல்பாகவும் மிகுந்தும் சேரும்.

வேற்றுமையில் வல்லினம் அல்லது மெல்லினம் மிகுந்து சேரும்.

அல்வழி

வேய் + கடிது = வேய் கடிது


வேர் + சிறிது = வேர்சிறிது
வீழ் + தீது = வீழ் தீது

ய, ர, ழ என்னும் மெய்களின் முன் இயல்பாகச் சேர்ந்தன.

மெய் + கீர்த்தி = மெய்க்கீர்த்தி


கார் + பருவம் = கார்ப்பருவம்
யாழ் + கருவி = யாழ்க்கருவி

ய, ர, ழ என்னும் மெய்களின் முன் வல்லினம் மிகுந்தது.

வேற்றுமை

நாய் + கால் = நாய்க்கால்


தேர் + தட்டு = தேர்த்தட்டு
ஊழ் + பய்ன = ஊழ்ப்பயன்

ய, ர, ழ என்னும் மெய்களின் முன் வல்லினம் மிகுந்தன.

வேய் + குழல் = வேய்க்குழல்


வேய்ங்குழல்

ஆர் + கோடு = ஆர்க்கோடு


ஆர்ங்கோடு

குமிழ் + கோடு = குமிழ்க்கோடு


குமிழ்ங் கோடு

Page - 122
ய, ர, ழ என்னும் மெய்களின் முன் வல்லினமும் மெல்லினமும் மிகுந்தன.

வாய் + புகுவது = வாய் புகுவது

வேற்றுமையில் இயல்பாகவும் சேர்ந்துள்ளது.

பாழ் + கிணறு = பாழ்க்கிணறு


பாழ்ங்கிணறு

அல்வழியில் வல்லினம் மெல்லினமாக மிகுந்தும் சேர்ந் துள்ளன.

தமிழ், தாழ் என்னும் சொற்கள்

225. தமிழ்அவ் உறவும்பெறும் வேற்றுமைக்கே


தாழும் கோல்வந்து உறுமேல் அற்றே.

வேற்றுமைப் புணர்ச்சியில் தமிழ் என்ற சொல்லுடன் வல்லினம்,


மெல்லினம், இடையினம், உயிர் எழுத்துகள் வந்து சேரும்போது அகரச்
சாரியை பெறும்.

தாழ் என்ற சொல்லுடன் கோல் என்ற சொல் வந்து சேரும் பொழுது


அகரச் சாரியை பெறும்.

தமிழ் + பாண்டியன் = தமிழ்ப்பாண்டியன்


தமிழ் + நாகன் = தமிழ நாகன்
தமிழ் + வளவன் = தமிழ வளவன்
தமிழ் + அரசன் = தமிழ வரசன்
தாழ் + கோல் = தாழக் கோல்

இவை அகரச் சாரியை பெற்று வந்துள்ளன.

மேலேகண்ட அல்வழியின் எடுத்துக் காட்டுகளே வேற்று மைக்கும் பொருந்தி


வரும்.

தமிழ் + பாண்டியன் = தமிழமை உடைய பாண்டியன்


தாழ் + கோல் = தாழைத் திறக்கும் கோல்

Page - 123
கீழ் என்னும் சொல்

226. கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும்.

கீழ் என்னும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால் இயல்பாகவும்


வல்லினம் மிகுந்தும் சேரும்.

கீழ் + குலம் = கீழ்குலம்


கீழ்க்குலம்

லகர ளகர ஈற்றுச் சொல்

227. லள வேற்றுமையில் றடவும், அல்வழி


அவற்றுறோடு உறழ்வும் வலிவரின் ஆம்; மெலி
மேவின் னணவும் இடைவரின் இயல்பும்
ஆகும் இருவழி யானும் என்ப.

‘ல், ள்’ என்னும் இரண்டு மெய் எழுத்துகளை இறுதியில் கொண்ட


சொற்களை அடுத்து வல்லினம் வந்தால் வேற்றுமை யில் ‘ற், ட்’ என்னும்
மெய் எழுத்துகளாக மாறும்.

‘ல், ள்’ என்னும் எழுத்துகள் அல்வழியில் ‘ற், ட்’ ஆக மாறியும்


இயல்பாகவும் சேரும்.

வேற்றுமை, அல்வழி ஆகிய இருவழிகளிலும் வல்லினம் வந்தால் ‘ல்,


ள’ என்னும் மெய்கள் ‘ன், ண்’ என்னும் மெய்களாக மாறும்.

இடையினம் வந்தால் இயல்பாகச் சேரும்.


கல் + குறை = கற்குறை
முள் + காடு = முட்காடு

வேற்றுமையில் ‘ல், ள்’ ஆகியவை ‘ற், ட்’ ஆக மாறின.

கல் + குறிது = கற்குறிது, கல்குறிது


முள் + குறிது = முட்குறிது, முள்குறிது

அல்வழியில் ‘ல், ள்’ ஆகியவை ‘ற்,ட்’ ஆக மாறியும் இயல்பாகவும் சேர்ந்தன.

கல் + மாண்டது = கன்மாண்டது


முள் + மாண்டது = முண்மாண்டது

Page - 124
கல் + மாட்சி = கன் மாட்சி
முள் + மாட்சி = முண் மாட்சி

அல்வழியிலும் வேற்றுமையிலும் ‘ல்,ள்’ ஆகியவை ‘ன், ண்’ ஆக மாறின.

கல் + யாது = கல்யாது


முள் + யாது = முள்யாது
கல் + யாப்பு = கல்யாப்பு
முள் + யாப்பு = முள்யாப்பு

அல்வழியிலும் வேற்றுமையிலும் இடையினம் வர இயல் பாகச் சேர்ந்தன.

ல், ள் ஆகியவை ஆய்தம் ஆதல்

228. குறில்வழி லள, த அணையின் ஆய்தம்


ஆகவும் பெறூஉம் அல் வழியானே.

அல்வழிப் புணர்ச்சியில் தனிக்குறில் எழுத்தை அடுத்து ‘ல்,ள்’ நின்று


வருமொழி முதலில் தகர மெய் வந்தால் ல், ள் ஆகியவை ஆய்தமாக
மாறும்.

கல் + தீது = கஃறீது


முள் + தீது = முஃடீது

ல், ள் கெடுதல்

229. குறில் செறியா ‘ல, ள’ அல்வழி வந்த


தகரம் திரிந்தபின் கேடும் ஈர் இடத்தும்
வரு ‘ந’ திரிந்தபின் மாய்வும் வலிவரின்
இயல்பும் திரிபும் ஆவன உளபிற

தனிக்குறில் எழுத்தைச் சாராத ‘ல், ள்’ என்னும் மெய் எழுத்துகள்


அல்வழியில் வருமொழிக்கு முதலாய் வந்த ‘த்’ திரிபும் போது கெடும்.

அல்வழியிலும் வேற்றுமையிலும் வருமொழிக்கு முதலாக வந்த ‘ந்’


என்ற மெய்யானது மாறியபிறகு ‘ல், ள்’ ஆகியவை கெடும்.

வருமொழி முதலில் வல்லினம் வந்தால் அல்வழியில் இயல்பாகவும்


மாறுபட்டும் வேற்றுமையில் இயல்பாகவும் சேரும்.

Page - 125
வேல் + தீது = வேறீது
தோன்றல் + தீயன் = தோன்றறீயன்
வாள் + தீது = வாடீது
வேள் + தீயன் = வேடீயன்

அல்வழியில் வந்த தகரம் திரியும் போது ‘ல், ள்’ கெட்டன.

தோன்றல் + நல்லன் = தொன்றனல்லன்


வேள் + நல்லன் = வேணல்லன்

அல்வழியில் ‘ந’ திரியும் போது ‘ல், ள்’ கெட்டன.

தோன்றல் + நன்மை = தோன்றனன்மை


வேள் + நன்மை = வேணன்மை

வேற்றுமையில் ‘ந’ திரியும் போது ‘ல், ள்’ கெட்டன.

கால் + கடிது = கால் கடிது இயல்பு


மரங்கள் + கடிய = மரங்கள் கடிய

வேல் + படை = வேற்படை


வாள் + படை = வாட்படை

அல்வழியில் வல்லினம் வரும் போது ‘ல், ள்’ இயல்பாகச் சேர்ந்தன.

கால் + குதித்து = கால்குதித்து


வாள் + போழ்ந்து = வாள்போழ்ந்து

வேற்றுமையில் வல்லினம் வரும்போது ‘ல்,ள்’ இயல்பாகச் சேர்ந்தன.

ல், ள் தொழிற்பெயர்

230. ல, ள இறு தொழிற்பெயர் ஈர்இடத்தும் உவ்வுறா


வலிவரின் அல்வழி இயல்பும் ஆவன உள.

‘ல்’ என்னும் எழுத்தை இறுதியில் கொண்ட விகுதி பெற்ற தொழிற்


பெயரும் ‘ள்’ என்னும் எழுத்தை இறுதியில் கொண்ட முதனிலை திரிந்த
தொழிற் பெயரும் அல்வழி, வேற்றுமை ஆகிய இருவழியிலும் யகரம்
அல்லாத மெய்கள் வந்தால் உகரம் பெறாது.

வருமொழி முதலில் வல்லினம் வந்தால் அல்வழியில் சில


இயல்பாகவும் சேரும்.

Page - 126
ஆடல் + சிறந்தது = ஆடல் சிறந்தது
ஆடற் சிறந்தது

கோள் + கடிது = கோள் கடிது

அல்வழியில் உகரம் பெறவில்லை

கோள் + நன்மை = கோணன்மை


கோள் + வன்மை = கோள்வன்மை
ஆடல் + சிறப்பு = ஆடற்சிறப்பு
ஆடல் + நன்மை = ஆடனன்மை

வேற்றுமையில் உகரம் பெறவில்லை.

நடத்தல் + கடிது = நடத்தல் கடிது


நடப்பித்தல் + கடிது = நடப்பித்தல் கடிது

அல்வழியில் இயல்பாகச் சேர்ந்தன.

‘வல்’ என்னும் தொழிற்பெயர்

231. வல்லே தொழிற்பெயர் அற்று இருவழியும்


பலகை நாய் வரினும் வேற்றுமைக்கு அவ்வுமாம்.

‘வல்’ என்னும் சூதாடு கருவியின் பெயர் யகரம் அல்லாத மெய்


எழுத்துகள் வந்தால் அல்வழி, வேற்றுமை என்னும் இரு வழிகளிலும்
தொழிற்பெயரைப் போல உகரச் சாரியை பெறும்.

பலகை, நாய் என்னும் இரு பெயர் வரும் போதும் மற்றப் பெயர்


வரும் போதும் வேற்றுமையில் உகரச் சாரியையுடன் அகரச் சாரியையும்
பெறும்.

வல் + கடிது = வல்லுக்கடிது


வல் + நன்று = வல்லுநன்று
வல் + வலிது = வல்லுவலிது

அல்வழியில் உகரச் சாரியை பெற்றது.

வல் + கடுமை = வல்லுக்கடுமை


வல் + நன்மை = வல்லுநன்மை
வல் + வன்மை = வல்லு வன்மை

Page - 127
வேற்றுமையில் உகரச் சாரியை பெற்றது.

வல் + பலகை = வல்லுப் பலகை


வல் + நாய் = வல்லு நாய்

வேற்றுமையில் பலகை, நாய் என்னும் பெயர்கள் உகரச் சாரியை பெற்றன.

வல் + புலி = வல்லுப்புலி


வல் + குதிரை = வல்லுக்குதிரை

வேற்றமையில் பிற பெயர்கள் உகரச் சாரியை பெற்றன.

வல் + பலகை = வல்லப்பலகை


வல் + நாய் = வல்ல நாய்

வேற்றுமையில் வலகை, நாய் என்னும் பெயர்கள் அகரச் சாரியை பெற்றன.

வல் + புலி = வல்லப் புலி


வல் + குதிரை = வல்லக்குதிரை

வேற்றுமையில் பறி பெயர்கள் அகரச் சாரியை பெற்றன.

நெல், செல், கொல், சொல் ஆகிய சொற்கள்

232. நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்


அல்வழி யானும் றகரம் ஆகும்.

நெல், செல், கொல், சொல் என்னும் சொற்களின் இறுதியில் உள்ள


லகர மெய் அல்வழியில் றகர மெய்யாக மாறும்.

நெல் + கடிது= நெற்கடிது


செல் + சிறிது = செற்சிறிது
கொல் + தீது = கொற்றீது
சொல் + பெரிது = சொற்பெரிது

Page - 128
இல் என்னும் சொல்

233. இல்என் இன்மைச் சொற்கு ஐ அடைய


வன்மை விகற்பமும் ஆகாரத்தொடு
வன்மை ஆகலும் இயல்பும் ஆகும்.

இன்மை என்னும் பண்பை உணர்த்தும் ‘இல்’ என்ற சொல்லுடன்


ஐகாரச் சாரியை பொருந்தும் போது வருமொழியின் வல்லினம் மிகுந்தும்
மிகாமலும் சேரும்.

‘ஆ’ என்ற சாரியை சேரும் போது வல்லினம் மிகும்.

மேற்காணும் இருவிதிகளும் வேறுபட்ட இயல்பாகவும் சேரும்.

இல் + பொருள் = இல்லைப் பொருள்


இல்லை பொருள்

‘ஐ’ சாரியை வல்லினம் பெற்றும் பெறாமலும் சேர்ந்தது.

இல் + பொருள் = இல்லாப் பொருள்

‘ஆ’ சாரியை பெற்று வல்லினம் மிகுந்தது.

இல் + பொருள் = இல்பொருள்

இயல்பாகச் சேர்ந்தது.

இவை போன்றே மெல்லின, இடையின, உயிர் எழுத்துகளிலும் சேரும்.

புள், வள் என்னும் சொற்கள்

234. புள்ளும் வள்ளும் தொழிற்பெயரும் மானும்.

புள், வள் என்னும் சொற்கள் யகரம் அல்லாத மெய்கள் வருமொழி


முதலில் வரும் போது உகரச் சாரியை பெறும்.

புள் + கடித = புள்ளுக்கடிது


புள் + நன்று = புள்ளுநன்று
புள் + வலிது = புள்ளுவலிது

‘புள்’ என்னும் சொல் உகரச் சாரியை பெற்றது.

Page - 129
வள் + கடிது = வள்ளுக்கடிது
வள் + நன்று = வள்ளுநன்று
வள் + வலிது = வள்ளுவலிது

‘வள்’ என்னும் சொல் உகரச்சாரியை பெற்றது.

வேற்றுமைப் புணர்ச்சியிலும் கடுமை, நன்மை, வன்மை என்னும்


சொற்களைச் சேர்க்கும் போது உகரச்சாரியை பெறும்.

அவ், இவ், உவ் என்னும் சொற்கள்

235. சுட்டு வகரம் மூவினம்உற முறையே


ஆய்தமும் மென்மையும் இயல்பும் ஆகும்.

அவ், இவ், உவ் என்னும் சுட்டுப் பெயர்களின் இறுதியில் உள்ள வகர


மெய் வல்லினம் வந்தால் ஆய்தம் ஆகும்; மெல்லினம் வந்தால் மெல்லினம்
ஆகும்; இடையினம் வந்தால் இயல்பு ஆகும்.

அவ் + கடிய = அஃகடிய


இவ் + கடிய = இஃகடிய
உவ் + கடிய = உஃகடிய

வல்லினம் வரும்போது வகரமெய் ஆய்தமாக மாறியது

அவ் + ஞானம் = அஞ்ஞானம்


இவ் + ஞானம் = இஞ்ஞானம்
உவ் + ஞானம் = உஞ்ஞானம்

மெல்லினம் வரும்போது வகரமெய் மெல்லினமாக மாறியது.

அவ் + யானை = அவ்யானை


இவ் + யானை = இவ்யானை
உவ் + யானை = உவ்யானை

இடையினம் வரும்போது வகரமெய் இயல்பாகச் சேர்ந்தது.

தெவ் என்னும் சொல்

236. தெவ்என் மொழியே தொழிற்பெயர் அற்றே


மவ் வரின் வஃகான் மவ்வும் ஆகும்.

Page - 130
தெவ் என்னும் சொல் யகரம் அல்லாத மெய் எழுத்துகளுடன் சேரும்
போது தொழிற்பெயர் போல உகரச் சாரியை பெறும்.

மகரமெய் வரும் போது வகரமெய்யானது மகர மெய்யாகவும் மாறும்.

தெவ் + கடிது = தெவ்வுக்கடிது


தெவ் + மாண்டது = தெவ்வுமாண்டது
தெவ் + வலிது = தெவ்வு வலிது
தெவ் + கடுமை = தெவ்வுக்கடுமை
தெவ் + மாட்சி = தெவ்வுமாட்சி
தெவ் + வலிமை = தெவ்வு வலிமை

அல்வழி, வேற்றுமை ஆகியவற்றில் உகரச் சாரியை பெற்றது.

தெவ் + மன்னர் = தெவ்வு மன்னர்


தெம்மன்னர்

தெவ் + முனை = தெவ்வு முனை


தெம்முனை

அல்வழி, வேற்றுமை ஆகியவற்றில் உகரச் சாரையை பெற்றும் மகர


மெய்யாக மாறியும் சேர்ந்தது.

த், ந் பெறும் மாற்றங்கள்

237. ‘னல’ முன் ‘றன’ வும் ‘ணள’ முன் ‘டண’ வும்


ஆகும் ‘தந’ க்கள் ஆயும் காலே.

‘த், ந்’ என்னும் மெய்கள் ‘ன், ல்’ என்னும் மெய்களின் முன்னால், ‘ற்,
ன்’ ஆக மாறும்; ‘ண், ள்’ என்னும் மெய்களின் முன்னால் ‘ட், ண்’ ஆக மாறும்.

பொன் + தீது = பொற்றீது – அல்வழி


பொன் + நன்மை = பொன்னன்மை – வேற்றுமை

‘ன்’ என்னும் மெய்யை அடுத்து வந்த ‘ந்’ என்னும் மெய் ‘ன்’ ஆயிற்று.

கல் + தீது = கற்றீது – அல்வழி


கல் + தீமை = கற்றீமை – வேற்றுமை

‘ல்’ என்னும் மெய்யை அடுத்து வந்த ‘த்’ என்னும் மெய் ‘ற்’ ஆயிற்று.

Page - 131
கல் + நன்று = கன்னன்று – அல்வழி
கல் + நன்மை = கன்னன்மை – வேற்றுமை

‘ல்’ என்னும் மெய்யை அடுத்து வந்த ‘ந்’ என்னும் மெய் ‘ன்’ ஆயிற்று.

மண் + தீது = மண்டீது – அல்வழி


மண் + தீமை = மண்டீமை – வேற்றமை

‘ண்’ என்னும் மெய்யை அடுத்து வந்த ‘த்’ என்னும் மெய் ‘ட்’ ஆயிற்று.

மண் + நன்று = மண்ணன்று – அல்வழி


மண் + நன்மை = மண்ணன்மை – வேற்றுமை

‘ள்’ என்னும் மெய் அடுத்து வந்த ‘த்’ என்னும் மெய் ‘ட்’ ஆயிற்று.

முள் + நன்று = முண்ணன்று – அல்வழி


முள் + நன்மை = முண்ணன்மை – வேற்றுமை

‘ள்’ என்னும் மெய்மை அடுத்து வந்த ‘ந்’ என்னும் மெய் ‘ண்’ ஆயிற்று.

வேற்றுமைப் புணர்ச்சி – சிறப்பு விதி

238. உருபின் முடிபவை ஒன்கும் அப்பொருளினும்.

பின்னால் இடம்பெறும் உருபு புணர்ச்சியில் முடியும் முடிபுகள் அந்த


உருபுகள் மறைந்து நின்று அந்தப் பொருள் தோன்றுமாறு புணரும்
புணர்ச்சியிலும் ஒத்து முடியும்.

உருபு புணர்ச்சி

வேற்றுமை உருபுகள் வெளிப்படும் படியாகப் புணரும் புணர்ச்சி.

உருபு பொருள் புணர்ச்சி

வேற்றுமை உருபு வெளிப்படையாக


இல்லை என்றாலும் அந்த உருபின்
பொருள் தோன்றும் படியாகப் புணரும் புணர்ச்சி.

எல்லாவற்றதும் - உருபு புணர்ச்சி


எல்லாவற்றுக் கோடும் - வேற்றுமைப் பொருள் புணர்ச்சி

Page - 132
உருபு புணர்ச்சியில் அஃறிணையில் ‘அற்று’ என்பதும் உருபுடன் ‘உம்’
என்பதும் வந்துள்ளன. அதைப் போன்றே உருபு மறைந்து வரும் பொருள்
புணர்ச்சியிலும் ‘அற்று’ என்பதும் ‘உம்’ என்பதும் வந்துள்ளன.

உறிக்கட் தயிர் ( உறிக்கண் தயிர்) - உருபு புணர்ச்சி


(கண் என்னும் உருபு)

உறித்தயிர் - வேற்றுமைப் பொருள் புணர்ச்சி


(‘கண்’ என்னும் உருபு
மறைந்துள்ளது)

எல்லா நமதும் - உருபு புணர்ச்சி


(‘அது’ என்னும் உருபு)

எல்லா நங்கையும் - பொருள் புணர்ச்சி


(‘அது’ என்னும் உருபு
மறைந்துள்ளது)

எல்லா தமதும் - உருபு புணர்ச்சி (அது)

எல்லார் தங்கையும் - பொருள் புணர்ச்சி

தனது
தமது உருபு புணர்ச்சி (அது)
நமது

தன்கை
தங்கை பொருள் புணர்ச்சி
நங்கை

எனது
எமது உருபு புணர்ச்சி
நினது
நுமது

என்கை
எங்கை
(எம்கை) பொருள் புணர்ச்சி
நின்கை
நுங்கை
(நும்கை)

Page - 133
ஆனது
(ஆன் + அது)
மானது உருபு புணர்ச்சி
(மான் + அது)
கோனது
கோன் + அது

ஆன்கோடு
மான்கோடு பொருள் புணர்ச்சி
கோன் குணம்

அவற்றிது உருபு புணர்ச்சி


இவற்றது

அவற்றுக்கோடு பொருள் புணர்ச்சி


இவற்றுக்கோடு

அதனது உருபு புணர்ச்சி


இதனது

அதன் கோடு பொருள் புணர்ச்சி


இதன் கோடு

புணரியல்கள் புறனடை

239. இடை உரி வடசொலின் இயம்பிய கொளாதவும்


போலியும் மரூஉவும் பொருந்திய வாற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே.

இடைச்சொல், உரிச்சொல், வடசொல் ஆகியவற்றுள் உயிர் ஈற்றுப்


புணரியல், மெய் ஈற்றுப் புணரியல் ஆகியவற்றில் சொல்லிய தோன்றல்,
திரிதல், கெடுதல், இயல்பு என்னும் இலக்கணங்கள் பொருந்தாமல் வருதலும்
உண்டு.

இலக்கணப் போலி, மரூஉ முதலிய சொற்களை உலக வழக்கு,


செய்யுள் வழக்கு ஆகியவற்றின் நடை முறைக்கு ஏற்பப் புணரச் செய்தல்
வேண்டும்.

ஆன் + கன்று = ஆன்கன்று (ஆன்)


வண்டின் + கால் = வண்டின் கால் (இன்)

Page - 134
வேற்றுமைப் புணர்ச்சியில் ‘ன்’, ‘இன்’ என்னும் சாரியைகள் (இடைச்சொற்கள்)
இயல்பாகச் சேர்ந்தன.

மழ + களிறு = மழகளிறு
தட + தோள் = தடந்தோள்

உரிச்சொல்லை அடுத்து வரும் வல்லினம் இயல்பாகவும் மெல்லின மெய்


மிககுந்தும் சேர்ந்தது.

அளி + குலம் = அளிகுலம்


ஆதி + பகவன் = ஆதிபகவன்

வட சொல்லை அடுத்து வரும் வல்லினம் இயல்பாகச் சேர்ந்தது.

இல் + முன் = முன்றில்


பொது + இல் = பொதியில்

இலக்கணப் போலியில் விகாரம் தோன்றியது.

அருமருந்து + அன்ன = அருமாந்த


சோழ + நாடு = சோணாடு
தஞ்சாவூர் = தஞ்சை
அதன் + தந்தை = ஆந்தை

மரூஉச் சொற்கள் தமக்கு ஏற்றவாறு திரிந்து சேர்ந்தன.

உருபு புணரியல்

வேற்றுமை உருபுகள், நிலைமொழி வருமொழிகளுடன் சேரும்


தன்மையைக் கூறும் இயல்.

எட்டு உருபுகள் சாரும் இடம்

240. ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என


வருபெயர் ஐந்தொடு பெயர்முதல் இருநான்கு
உருபும் உறழ்தர நாற்பதாம் உருபே.

ஆண்பால், பொண்பால், பார்பால், ஒன்றன் பால், பலவின் பால்


என்னும் ஐந்து பால்களுடன் எழுவாய் வேற்றுமை முதல்

Page - 135
விளிவேற்றுமைவரை உள்ள எட்டு வேற்றுமை உருபுகளையும் பெருக்கும்
போது நாற்பது உருபுகள் தோன்றும்.

மணி – ஆண்பால்

மணி - எழுவாய் வேற்றுமை


மணியை - ஐ - இரண்டாம் வேற்றுமை
மணியால் - ஆல் - மூன்றாம் வேற்றுமை
மணிக்கு - கு - நான்காம் வேற்றுமை
மணியின் - இன் - ஐந்தாம் வேற்றுமை
மணியது - அது - ஆறாம் வேற்றுமை
மணிகண் - கண் - ஏழாம் வேற்றுமை
மணீ - விளி வேற்றுமை

வள்ளி – பெண்பால்
மக்கள் – பலர்பால்

மரம் – ஒன்றன் பால்


மரங்கள் – பலவின் பால்

மேலே காணும் ஐம்பால் பெயர்களுடன் எட்டு வேற்றுமைகளும் தனித்தனியே


சேர்ந்தால் நாற்பது உருபுகள் தோன்றும்.

வேற்றுமை உருபு வரும் இடம்

241. பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே.

வேற்றமை உருபுகள் தம்பொருளைத் தருவதற்குப் பெயருக்கு அடுத்து


வரும்.

மரம் + ஐ + வெட்டினான் = மரத்தை வெட்டினான்


வாள் + ஆல் + வெட்டினான் = வாளால் வெட்டினான்

உருபுகள் சேர்தல்

242. ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின்


ஒக்குமன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே.

Page - 136
மெய் எழுத்துகளையும் உயிர் எழுத்துகளையும் முதலாகவும்
ஈறாகவும் கொண்ட ஆறு வேற்றுமை உருபுகளும் முன்பு இடம் பெற்ற, மெய்,
உயிர் ஈற்றுப் பெயர்ப் புணர்ச்சிகளைப் போன்றே பெரும்பாலும் புணரும்.

நம்பி + கண் + வாழ்வு = நம்பிகண்வாழ்வு

‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’

என்ற விதிப்படி வல்லினம் (க்) மிகுந்தது.

‘ண ன வல்லினம் வர டறவும்’

என்ற விதிப்படி ணகர மெய் எழுத்து டகர மெய் எழுத்து ஆக


மாறியது.

சாரியை

243. பதமுன் விகுதியும் பதமும் உருபும்


புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும்.

ஒரு பதத்தின் (சொல்லின்) முன் விகுதி அல்லது பதம் அல்லது உருபு


சேரும்போது ஒரு சாரியையோ பல சாரியையோ வரலாம்; வராமலும்
இருக்கலாம். சில இடங்களில் சாரியை பெற்றும் சில இடங்களில் சாரியை
பெறாமலும் வரலாம்.

விகுதிப் புணர்ச்சி

நடந்தனன் = நட + த்(ந்) + த் + அன் + அன்

நட - பகுதி
த் - சந்தி
த்-ந் ஆனது - விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அன் - சாரியை
அன் - ஆண்பால் விகுதி

இதில் ‘அன்’ என்னும் சாரியை இடம் பெற்றுள்ளது.

நடந்தான் = நட + த் (ந்) + த் + ஆன்

Page - 137
நட - பகுதி
த் - சந்தி
த்-ந் ஆனது - விகாரம்
த் - இறந்தகால இடடைநிலை
ஆன் - ஆண்பால் விகுதி

இதில் சாரியை இடம் பெறவில்லை.

பதப்புணர்ச்சி

புளியங்காய் = புளி + அம் + காய்.

இதில் புளி என்பது ஒரு சொல் காய் என்பது மற்றொரு சொல். இரண்டும்
சேரும் போது இடையில் ‘அம்’ என்னும் சாரியை இடம் பெற்றுள்ளது.

நெல்லின் குப்பை = நெல் + இன் + குப்பை.

இதில் ‘இன்’ என்னும் சாரியை இடம் பெற்றுள்ளது.

நெற்குப்பை = நெல் + குப்பை.

இதில் சாரியை இடம் பெறவில்லை.

உருபு புணர்ச்சி

அவற்றை = அ + வ் + அற்று + ஐ
அ = சுட்டுப் பெயர்
வ் = உடம்படு மெய்
அற்று = சாரியை
ஐ = வேற்றுமை உருப்பு

ஆவினுக்கு = ஆ + வ் + இன் + உ + கு
ஆ = பெயர்
வ் = உடம்படுமெய்
இன் = சாரியை
உ = சாரியை
கு = வேற்றுமை உருபு

என்னை = என் + ஐ

Page - 138
என் = தன்மைப் பெயர்
ஐ = வேற்றுமை உருபு

பொதுச் சாரியைகள்

244. அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம்


தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன்
இன்ன பிறவும் பொதுச் சாரியையே.

அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ,
உ, ஐ, கு, ன் என்னும் இவையும் இவை போன்ற பிறவும் பொதுச்
சாரியைகள் ஆகும்.

ஒன்றன் கூட்டம் = ஒன்று + அன் + கூட்டம்


ஒருபாற்கு = ஒருபது + ஆன் + கு
வண்டின்கால் = வண்டு + இன் + கால்
தொடையல் = தொடை + அல்
பலவற்றை = பல + அற்று + ஐ
பதிற்றுப்பத்து = பத்து + இற்று + பத்து
மரத்திலை = மரம் + அத்து + இலை
மன்றம் = மன்று + அம்
எல்லார் தம்மையும் = எல்லார் + தம் + ஐ + உம்
எல்லார் நம்மையும் = எல்லார் + நம் + ஐ + உம்
எல்லீர் நும்மையும் = எல்லீர் + நும் + ஐ + உம்
ஒன்றேகால் = ஒன்று + ஏ + கால்
நடந்தது = நட + த் (ந்) + த் + அ + து
மன்னனுக்கு =‘ மன்னன் + உ + கு
ஏற்றை = ஏறு (ஏற்று) + ஐ
உய்குவை = உய் + கு + வை
ஆன் = ஆ+ ன் (ஆ-பசு)

பிற சாரியைகள்

கூட்டாஞ்சோறு = கூட்டு + ஆம் + சோறு


மண்டபத்தில் வைத்து நடைபெறும் = மண்டபத்தில் + வைத்து +
நடைபெறும்.

Page - 139
உருபு புணர்ச்சி – சிறப்புவிதி

எல்லாம் என்னும் சொல்

245. எல்லாம் என்பது இழிதிணை ஆயின்


அற்றொடு உருபின் மேல் ‘உம்’ உறுமே
அன்றேல் நம்இடை அடைந்து அற்று ஆகும்

எல்லாம் என்னும் பொதுப் பெயர் அஃறிணையில் ஆறு வேற்றுமை


உருபுகளுடன் சேரும் பாது இடையில் அற்றுச் சாரியை தோன்றும்.
உருபுடன் ‘உம்’ முற்றுப் பொருளில் வரும்.

எல்லாம் என்னும் பொதுப் பெயர் உயர்திணையில் ஆறு வேற்றுமை


உருபுகளுடன் சேரும்போது இடையில் ‘நம்’ சாரியை தோன்றும். உருபுடன்
‘உம்’ முற்றுப் பொருளில் வரும்.

எல்லாவற்றையும் = எல்லாம் + அற்று + ஐ + உம்


எல்லா நம்மையும் = எல்லாம் + நம் + ஐ + உம்

எல்லாரும், எல்லீரும் என்னும் சொற்கள்

246. எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை


தள்ளி நிரலே தம், நும் சாரப்
புல்லும் உருபின் பின்னர் உம்மே.

எல்லோரும், எல்லீரும் என்னும் சொற்களோடு ஆறு வேற்றுமை


உறுபுகளும் சேரும்போது இச்சொற்களில் உள்ள ‘உம்’ நீங்கும்.

முறையே தம், நும் சாரியைகள் தோன்றும் உருபுகளுடன் ‘உம்’


நீங்கும்.

முறையே தம், நும் சாரியைகள் தோன்றும் உருபுகளுடன் ‘உம்’


முற்றுப் பொருளில் தோன்றும்.

எல்லார் தம்மையும் = எல்லாரும் + தம் + ஐ + உம்


எல்லீர் நும்மையும் = எல்லீரும் + நும் + ஐ + உம்

Page - 140
தான் முதலியவற்றுடன் சேர்தல்

247. தான், தாம், நாம் முதல்குறுகும் யான், யாம்


நீ, நீர், என், எம், நின், நும் ஆம் பிற
குவ்வின் அவ்வரும் நான்கு ஆறு இரட்டு அல.

தான், தாம், நாம் என்னும் சொற்களுடன் ஆறு வேற்றுமை உருபுகளும்


சேரும்போது முதல் எழுத்தின் நெடில் குறுகும்.

தான் – தன்
தாம் – தம்
நாம் – நம்

யான், யாம், நீ, நீர் என்பவற்றுடன் ஆறு வேற்றுமை உருபுகளும்


சேரும்போது முதல் எழுத்துத் திரியும்.

யான் – என்
யாம் – எம்
நீ – நின்
நீர் – நும்

இவற்றுடன் நான்காம் வேற்றுமை உருபான ‘கு’வும் ஆறாம் வேற்றுமை


உருபான ‘அது’ வும் சேரும் போது, அகரச் சாரியை தோன்றும். ஒற்று
இரட்டாது.

தான் + ஐ = தன் + ஐ = தன்னை


தாம் + ஐ = தம் + ஐ = தம்மை
நாம் + ஐ = நம் + ஐ = நம்மை

இவற்றில் முதல் நெடில் குறுகியது. ஒற்று இரட்டியது.

யான் + ஐ = என் + ஐ = என்னை


யாம் + ஐ + எம் + ஐ = எம்மை
நீ + ஐ = நின் + ஐ = நின்னை
நீர் + ஐ = நும் + ஐ = நும்மை

இவற்றில் முதல் எழுத்துத் திரிந்தது. ஒற்று இரட்டியது.

தான் + கு = தன் + கு = தனக்கு


தான் + அது = தன் + அது =தனது

இற்றில் ஒற்று இரட்டவில்லை.

Page - 141
நீ என்பது ‘உன்’ என்னும் நீர் என்பது ‘உம்’ என்றும் மாறும். நீர் என்பது ‘நீம்’
என்று மாறியும் கள் விகுதி பெற்று ‘நீங்கள்’ என்று ஆகியும் வரும்.

ஆ, மா, கோ - சிறப்பு விதி

248. ஆ மா கோ, ன அணையவும் பெறுமே

ஆ என்னும் பசுவின் பெயரும் மா என்னும் விலங்கின் பெயரும் கோ


என்னம் அரசனின் பெயரும் ஆறு வேற்றுமை உருபுகளுடன் சேரும்போது ‘ன்’
என்னும் சாரியை தோன்றும். அவ்வாறு தோன்றாமலும் சேரும்.

ஆ+ஐ = ஆ=ன்+ஐ = ஆனை


மா+ஐ = மா+ன்+ஐ = மானை
கோ+ஐ = கோ+ன்+ஐ = கோனை

இவற்றில் ‘ன்’ என்னும் சாரியை வந்துள்ளது.

ஆ+ ஐ = ஆவை
மா + ஐ = மாவை
கோ + ஐ = கோவை

இவற்றில் சாரியை இடம் பெறவில்லை.

ஆ+கு = ஆ + ன் + உ+கு - ஆனுக்கு

இதில் ‘ன்’ என்னும் சாரியையும் ‘உ’ என்னும் சாரியையும் வந்துள்ளன.

ஆ+ கு = ஆ+ இன்+உ - கு = ஆவினுக்கு

இதில் ‘இன்’ என்னும் சாரியையும் ‘உ’ என்னும் சாரியையும் வந்துள்ளன.

பத்து ஈற்று எண்ணுப் பெயர்

249. ஒன்றுமுதல் எட்டு ஈறாம்எண் ஊர்


பத்தின்முன் ஆன்வரின் ப ஒற்று ஒழியமேல்
எல்லாம் ஓடும்; ஒன்பதும் இற்றே.

ஒன்று முதல் எட்டுவரை உள்ள எண்களுடன் இருக்கும் பத்து என்னும்


பெயரை அடுத்து ஆறு வேற்றுமை உருபுகளும் ‘ஆன்’ சாரியையுடன் வரும்
போது பத்தில் உள்ள ‘ப்’ தவிர ஏனையவை கெடும். ஒன்பது என்னும்
எண்ணும் இவ்வாறே சேரும்.

Page - 142
ஒருபது + ஐ = ஒருபது + ஆன் + ஐ = ஒருபானை

இவை ஒருபானை ஒருபானுக்கு என்று ‘இன்’ சாரியையும் ‘உ’ சாரியையும்


பெறும்.

ஒருபது + ஐ = ஒருபதை
ஒருபது + ஐ = ஒருபஃதை

ஆன் சாரியை பெறவில்லை என்றால் வரும் உருபுக்கு ஏற்பச் சேரும்.

‘வ்’ மெய்யீறு – சிறப்பு விதி

250. வவ்இறு சுட்டிற்கு அற்று உறல் வழியே.

அ, இ, உ என்னும் சுட்டுடன் ‘வ்’ என்னும் ஈறு வரும் போது அற்றுச்


சாரியை தோன்றும்.

அ+வ்+ஐ = அ+வ்+அற்று+ஐ = அவற்றை


இ+வ்+ஐ = இ+வ்+அற்று+ஐ = இவற்றை
உ+வ்+ஐ = உ+வ்+அற்று+ஐ = உவற்றை

இவற்றில் ஒற்று இரட்டிக்கவில்லை. அவற்றினை, இவற்றினை, உவற்றினை


என்பனவற்றில் ‘இன்’ சாரியையும் தோன்றியுள்ளன.

அஃது, இஃது, உஃது

251. சுட்டின்முன் ஆய்தம் அன் வரின் கெடுமே

அஃது, இஃது, உஃது, என்னும் சுட்டுப் பெயர்களை அடுத்து ‘அன்’


சாரியை வந்து புணர்ந்தால் ஆய்த எழுத்துக் கெடும்.

அஃது + ஐ = அதனை, அஃதை


இஃது + ஐ = இதனை, இஃதை
உஃது + ஐ = உதனை, உஃதை

அன் ‘சாரியை வரும் போது ஆய்தம் கெட்டது,’ ‘அன்’ வராதபோது ஆய்தம்


கெடவில்லை.

ஆய்தம் இல்லாத சுட்டுப் பெயர்களாய் (அது, இது, உது) வரும் போது ‘அன்’
சாரியை தோன்றும்.

Page - 143
அது + ஐ = அதனை
இது + ஐ = இதனை
உது + ஐ = உதனை

எது என்பதும் இவை போன்றே வரும்.

எது + ஐ = எதனை

‘அத்து’ சாரியையின் அகரம் கெடுதல்

252. அத்தின் அகரம் அகரமுனை இல்லை.

அகர உயிர் எழுத்தை அடுத்து அத்துச் சாரியை வந்தால் சாரியையின்


அகரம் கெடும்.

மரம் + அத்து = மர + அத்து = மர + த்து = மரத்து


மகம் + அத்து = மக + அத்து = மக + த்து = மகத்து

புறனடை

சாரியை அறிதல்

253. இதற்கு இது சாரியை எனின் அளவு இன்மையின்


விகுதியும் பதமும் உருபும் பகுத்து இடை
நின்ற எழுத்தும் பதமும் இயற்கையும்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறியே

விகுதிப் புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபு புணர்ச்சி போன்ற வற்றிற்கு


இவைதாம் சாரியை என்று சொன்னால் அதற்கு எல்லை கிடையாது. எனவே
அவ்வகைப் புணர்ச்சிகளைப் பிரித்து அவற்றின் இடையே தோன்றும் ஏ, அ
முதலிய எழுத்துச் சாரியைகளையும் அன், ஆன் முதலிய பதச்
சாரியைகளையும் அறிந்து கொள்தல் வேண்டும்.

ஆன நெய் = ஆ + ன் + அ + நெய்
இதில் ‘ன்’ என்னும் சாரியையுடன் அகரச் சாரியையும் இடம்
பெற்றுள்ளது.

பாட்டின் பொருள் = பாட்டு + இன் + பொருள்

Page - 144
இவ்வாறு எழுத்துச் சாரியைகளையும் பதச் சாரியைகளையும் பிரித்து
அறியலாம்.

நால்வகைப் புணர்ச்சி

254. விகுதி. பதம், சாரியை, உருபு அனைத்தினும்


உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளலே.

விகுதி, பதம், சாரியை, உருபு ஆகிய புணர்ச்சிகளில் பொதுவாகக்


கூறப்பட்ட விதிகளுள் இந்த விதி இதற்குப் பொருந்தும், இந்த விதி இதற்குப்
பொருந்தாது என்று ஆராய்ந்து கொள்ளல் வேண்டும்.

இரண்டாம் வேற்றுமை – சிறப்பு விதி

255. இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும்


உயர்திணை இடத்து விரிந்தும் தொக்கும்
விரவுப் பெயரின் விரிந்து நின்றும்
அன்ன பிறவும் ஆகும் ஐ உருபே.

இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை உருபிற்கு


விதிக்கப்பட்ட பொது விதியுடன் முடிதலின்றி அப்படி விதித்த இயல்பில்
விகாரம் ஆகியும், விகாரம் ஆக வேண்டிய இடத்தில் இயல்பு ஆகியும்
சேரும்.

உயர்திணைப் பெயரில் வெளிப்பட்டும் மறைந்தும் வரும்.

பொதுப் பெயரில் வெளிப்பட்டும் மறைந்தும் வரும்.

இவை போன்ற மேலும் சில வேறுபாடுகளுடன் வரும்.

நின் + புறம் = நிற்புறம்

‘நின்’ ஈறு இயல்பாக வரவேண்டும். இங்கே விகாரமாகி வந்துள்ளது.

மண்+சுமந்தான் ‘ மண்சுமந்தான்

‘ண்’ ஈறு விகாரமாக வேண்டிய இடத்தில் இயல்பாக வந்துள்ளது.

மன்னனைத் தந்தான்

உயர்திணைப் பெயரில் உருபு வெளிப்படையாக வந்தது.

Page - 145
பெண்ணைப் பெற்றாள்

பொதுப் பெயரில் உருபு வெளிப்படையாக வந்தது.

ஆண் பெற்றாள்

பொதுப் பெயரில் உருபு மறைந்து வந்தது.

மூன்றாம் வேற்றுமை – சிறப்பு விதி

256. புள்ளியும் உயிரும் ஆஇறு சொல்முன்


தம்மின் ஆகிய தொழில்மொழி வரினே
வல்லினம் விகற்பமும் இயல்பும் ஆகும்.

மூன்றாம் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சியில் மெய் ஈற்று,


உயிர்ஈற்றுச் சொற்களை அடுத்து, நிலை மொழியாக இருக்கும் கருத்தாவின்
தொழிலாகிய சொல் வந்தால் அங்கு வரும் வல்லினம் இயல்பாகவும் இயல்பு
அல்லாமலும் வரும்.

பேய் + கோட்பட்டான் = பேய்கோட் பட்டான்


பேய்க் கோள் பட்டான்

வல்லினம் மிகாமலும் மிகுந்தும் வந்துள்ளன.

பேய் + பிடிக்கப்பட்டான் = பேய் பிடிக்கப்பட்டான்.

வல்லினம் மிகாமல் இயல்பாகச் சேர்ந்தது.

எழுத்து அதிகாரம் – புறனடை

257. இதற்கு இதுமுடிபு என்று எஞ்சாது யாவும்


விதிப்பு அளவு இன்மையின் விதித்தவற்று இயலான்
வகுத்து உரையாதவும் வகுத்தனர் கொளலே.

எழுத்து அதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டவை எல்லா வற்றையும்


தனித்தனியே விளக்கினால் அதற்கு அளவு கிடையாது. எனவே,
தெரிவிக்கப்பட்ட இலக்கணங்களை அடிப்படையாகக் கொண்டு
தெரிவிக்கப்படாதவற்றிற்கும் இலக்கணம் உரைத்துக் கொள்ளலாம்.

எழுத்தியல்

Page - 146
“மொழி முதல் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து”

என்று ஒலிவடிவம் மட்டுமே விளக்கப்பட்டுள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு வரி வடிவத்திற்கும் இலக்கணம் வகுத்துக்


கொள்ள வேண்டும்.

பதவியல்

‘அன், ஆன், அள், ஆள்’ என்னும் நூற்பாவில் ‘ஆள்’ பெண்பால் விகுதி


எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருமாள் = பெருமை + ஆள்

இங்கு ‘ஆள்’ விகுதி ஆண்பாலைக் குறிக்கிறது.

உயிர் ஈற்றுப் புணரியல்

‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்ற


விதிக்கும் ஒப்ப.

‘ணன வல்லினம் வர டறவும்’

என்ற விதியில் டகரத்தையும் வல்லினம் மிகுந்ததாகக் கொள்ளலாம்.

மெய் ஈற்றுப் புணரியல்

‘நும், தம், எம், நம் ஈறா மவ்வறு ஞனவே’

என்று கூறியதன்படி ‘அம்’ என்னும் சொல்லையும் அவற்றுடன் இணைத்துக்


கொள்ளலாம்.

அம் + நலம் = அந்நலம் (அழகிய நலம்)

உருபு புணரியல்
‘வவ்இறு சுட்டிற்கு அற்று உறல் வழியே’

இவ்விதியில் சுட்டுப் பெயருடன் ‘எது’ என்னும் வினாப் பெயரையும்


இணைத்துக் கொள்ளலாம்.

எ + வ் + அன்று + ஐ

•• ••• ••

Page - 147

You might also like