You are on page 1of 2

முன்னுரை :

சங்க கால திணை இலக்கியம் அதன் ஆற்றல் மிகு பண்பால் தமிழ்


இலக்கிய வளர்ச்சியின் பல்வேறு காலநிலைகளிலும் துணை நின்று வருகின்றது.
இக்காலத்திலும் அதன் தனித் தன்மைக்கும் அழகியல் மேம்பாட்டிற்கும் புகழ் பெற்ற
அவ்விலக்கியம் பெருமைக்குரிய இடத்தை பெற்றுள்ளது. சங்ககாலத்திற்குப் பின்
தமிழர் வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பல மாற்றங்களும்
திருப்பங்களும் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு காலத்தின் நோக்கத்திற்கும், போக்கிற்கும்
ஏற்ப தமிழ் இலக்கியம் அதன் வடிவத்திலும், பாடு பொருளிலும் யாப்பிலும் பல்வேறு
தாக்கங்களுக்கு உள்ளாயிருக்கிறது. தமிழர் இக்காலங்களில் பல்வேறு மாறுபட்ட
மக்களோடும் சமயங்களோடும் மொழிகளோடும் தொடர்பு கொண்டு இருக்கின்றனர்.
வைதீக சமயம், சமணம், பௌத்தம், இசு லாம், கிறிஸ்தவம் என்ற சமயங்களும்
சமஸ்கிருதம், ஆங்கிலம் என்ற மொழிகளும் தமிழில் தான் பதிவை
உருவாக்கியதோடு தமிழ் இலக்கிய களத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை
செய்துள்ளன, காலந்தோறும் இலக்கியத்தின் குரல், சுவை, பாடுபொருள், யாப்பு
ஆகியன மாறினாலும் சங்க இலக்கியம் அ தன் கட்டற்ற செய்யுள் மரபுகளின்
இருப்பினால் தன் செவ்வாக்கில் குறையவில்லை.
திணை செய்யுளின் பாடு பொருள் மனித மன உணர்ச்சிகள் ஆழ்மனக்
குறிப்புகள் ஆகியவற்றுக்குரிய புற உருவ வெளிப்பாடுகளைத் தன்னகத்தே
கொண்டுள்ளது. காதல், வீரம் கொடை சார்ந்த வாழ்க்கை நாடகத்தின் உணர்ச்சி
ததும்பும் அன்றைய நிகழ்வுகளை காட்சி ஓவியங்களாக படம் பிடித்துக்காட்ட
திணைச் செய்யுட்கள் முயலுகின்றன. அவை உண்மையான நிகழ்ச்சிகளை விடவும்
அவற்றால் ஏற்படும் உணர்ச்சிகளுக்கும், மனக்குறிப்புகளுக்குமே அழுத்தம்
கொடுக்கின்றன. இத்தகைய உணர்ச்சிகளின் அன்றைய சமூக பின்புலம்
இன்றுள்ளதிலிருந்து முழுவதும் வேறுபட்டது. அவை வரலாறு சமூகம்
என்பவற்றுக்கு முதன்மை அளிப்பதை விட, இயற்கை, நிலப்பின்னணி
ஆகியவற்றிற்கே முதன்மை அளிக்கின்றன. திணைப் பாடல்களை படிப்பவர்கள் மிகத்
தொலைவான பழங்காலத்திற்கும் , இக்காலத்திற்கும் இடையேயான மிகப்பெரிய
சமூக வரலாற்று இடைவெளியைப் பெரிதும் உணர்வதில்லை. தமிழின் அறநூல்
படைப்பான திருக்குறள் எல்லா காலங்களுக்கும், சமயங்களுக்கும், நாடுகளுக்கும்
பொதுவானது என்ற உலக பொதுமை பண்புடையதாக புகழ்ந்து பாராட்டப்படுகிறது.
திருக்குறளின் ஒளிவிடும் அடிப்படை பண்பாட்டு மரபு திணை செய்யுளில் இருந்து
பெறப்பட்டதாகும்.
திணை பாடல்கள் கருத்துகளுக்கு முதன்மை அழைப்பனவேயன்றி
அலங்கார அணிகளுக்கன்று. திணைச் செய்யுளின் மையக்கருத்து மனித வாழ்வில்
இருந்து பெறப்படுகிறது. பாட்டின் அடிக் கருத்து உளவியலோடு நெருங்கிய
தொடர்புடையது. பண்டைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் மூன்றாவது
பகுதியான பொருளதிகாரம் திணைச் செய்யுளின் பல கூறுபட்ட செய்யுள் மரபுகளை
தொகுத்து அளிக்கின்றது. தொல்காப்பியருக்கு முன்னரே தமிழ் மொழி அதன்
பல்வேறு நிலைகளில் முழு வளர்ச்சி பெற்றிருந்தது. தொல்காப்பியர் பொருள்
அதிகாரத்தில் கூறியுள்ள இலக்கிய மரபுகள் அவர் காலத்துக்கு முற்பட விளங்கிய
இலக்கியங்களில் இருந்து தொகுக்கப் பெற்றெனவாகும். தமிழ் மொழி, இலக்கியத்தில்
கொண்டிருந்த ஆழ்ந்த அறிவுறுத் திறனும், சமஸ்கிருதத்தில் பெற்றிருந்த விரிவான
அறிவும் தமிழில் தனித்த மரபுக்குரிய இலக்கிய கொள்கைகளை பாதுகாக்க
துணைபுரிந்துள்ளன. ஐந்து திணைகளில் ஒன்றான குறிஞ்சி என்பது களவு அல்லது
பிறரறியா காதலை கூறும் திணை என கூறப்படுகிறது. இதனையொப்ப இப்போது
நெய்தல் திணையும் களவு ஒன்றையே பெரிதும் குறிப்பாக நிறுவப்பட்டுள்ளது மலை
பாங்கான குறிஞ்சியிலும் கடல் சார்ந்த நெய்தலிலும் களவு காதல் இடம்பெற்ற
தென்பதற்கு பல சான்றுகள் தரப்பட்டுள்ளன. இதற்கு காரணம் இந்நிலங்களின்
இயற்கையும் இங்கு வாழும் மக்களின் வாழ்வு சூழல்களுமாகும். முல்லை, மருதம்
ஆகியவை மண வாழ்க்கையோடு தொடர்புடைய கற்புத் திணைகள் என்பது குறிக்க
பெற்றுள்ளது. இவற்றில் முல்லை தலைவியின் கற்பையும், மனித வாழ்வின்
பெருமையும் கூறுகிறது. மருதம் நிலவள செழிப்பால் தலைவன் பரத்தையரோடு
கொள்ளும் தொடர்பையும் கணவனும், மனைவியும் இல்லத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்
தலையும் கூறுகிறது. பாலை , முல்லை, மருதம் என்ற மூன்றும் தலைவன்
தலைவியை பிரிந்திருக்கும் மூன்று வேறுவகைப்பட்ட பிரிவுகளை குறிப்பன. இவை
முறையே தலைவன் பொருளைத் தேட பிரிதல், பகைவரோடு போரிடப் பிரிதல்,
பரத்தையர் பொருட்டு பிரிதல் ஆகியவற்றை குறிக்கின்றன. பொருள் தேட
பிரியும்போது விடைபெறுதல், போருக்காக பிரிந்த தலைவன் வெற்றியோடு வருவதை
தலைவி எதிர்பார்த்தல், பரத்தையர் பொருட்டாக பிரிந்து சென்ற தலைவன் திரும்பிய
போது தலைவி ஊடுதல் ஆகிய மூன்று பகுதிகளும் அவற்றுக்கே உரிய இலக்கிய
சுவையை மிகு விய்பன. எனவே அவற்றின் தலைமை கருத்திக் கேற்ப பிரிதல் ,
இருத்தல் உளடல் என்ற பெயர்களால் குறிக்கப்பெற்றன திணைச் செய்யுளில்
தோழியும் தலைவியும் பிரிக்க முடியாதவர்கள் பல இடங்களில் தோழி என்பவள்
தலைவியின் உரு நிழலாகவே இருக்கின்றாள். தலைவியின் தனித்து
நிற்பவளாயினும், பல வழிகளில் காதலர்க்கு உதவுபவளாய் அமையினும், பல
பாடல்களில் அவள் தலைவியினடத்தில் நின்று பேசக் காணலாம். உள்ளுறை,
இறைச்சி என்னும் கோட்பாடுகள் வேறுபாடு உடையன இறைச்சியின் அமைப்பும்,
வேறுபாடும் சிற்றுயிர்களின் காதலை அடிப்படையாக கொண்டவை. மரபுகளை
வழுவாமல் போற்றிய புலவர்களே தம் தனித்திறனை காட்டவும் ஆர்வம்
உடையவராய் இருந்தன என்பது இங்கு நிறுவப் பெற்றுள்ளது. அவர்கள் இலக்கிய
மரபை போற்றியுள்ள அதே நேரத்தில் இலக்கிய கலை சார்ந்த படைப்புகளையும்
எவ்வித தடையும் இன்றி உரிமையோடு படைத்துள்ளனர்.

You might also like