You are on page 1of 3

சங்க இலக்கிய அறிமுகம்

தமிழில் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றைப் பழைய இலக்கியம் என்று கூறுவது


மரபாகும். சங்கம் வைத்துத் தமிழர் தமிழ் வளர்த்தனர் என்கின்ற செய்தியை உறுதிபடக் கூறமுடியா
விட்டாலும், அக்காலத்தே புலவர்கள் இருந்து பல உண்ணதமான இலக்கியங்களைப் படைத்தனர்
என்பதை மறுக்க இயலாது. முதல், இடை, கடை என மூன்று சங்கங்களைப் பாண்டிய மன்னர்கள்
புரவலர்களாக இருந்து வளர்த்தனர் என்ற செய்தி எல்லாம் ஏழாம், எட்டாம் நூற்றாண்டு இறையனார்
அகப்பொருள் விளக்கம் எனும் நூலில்தான் தெளிவாகக் கூறப்படுகின்றது. காலத்தால் பிந்திய
இக்குறிப்புகளை அறிஞர் பலரும் ஏற்றதாகத் தெரியவில்லை. ஆயினும் இன்றும் பேச்சு வழக்கில்
இருக்கும் இந்திய மொழிகளுள் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகளுள் மிகவும்
பழைமையானவை-தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகிய இரண்டு மட்டுமே.

சங்க இலக்கியம் என்பது பொதுவில் எட்டுத்தொகை (நற்றிணை, குறுந்தொகை,


அங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு) பத்துப்பாட்டு
(திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,
முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டிணப்பாலை)
ஆகிய இலக்கியப் படைப்புத் தொகுப்புகளையே குறிக்கும். எட்டுத்தொகை என்பது தனித் தனிப்
பாடல்களின் தொகுப்பாக இருக்க, பத்துப்பாட்டு என்பது நீணட
் பத்து பாடல்களின் தொகுப்பாக
உள்ளது. ஆக சங்க இலக்கியம் என்பது எட்டுத்தொகை, பத்துப் பாட்டு சேர மொத்தம் ஒன்பது
தொகை நூல்களைக் குறிக்கும்.

இச்சங்க இலக்கியக்கியங்கள் யாவும் கி.பி.3,4 ஆம் நூற்றாண்டுகளில்


தொகுக்கப்பட்டவையாகும். இவ்வாறு தொகுக்கப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை 2380. பாடிய
புலவர்கள் 473. இவர்களுள் 30 பெண்பால் புலவர்களும் அடங்குவர். மூன்றடி பாடல்கள்
(ஐங்குறுநூறு) தொடங்கி 782 அடி பாடல் (மதுரைக்காஞ்சி) வரை அடியளவு கொண்ட பாடல்களை
உள்ளடக்கியது சங்க இலக்கியம். இந்தச் சங்கப் பாடல்களுள் (102 பாடல்கள்) பல புலவர்களின்
பெயர் யாதென அறியப்படததால் அவர்களின் பாடல் வரிகளைக் கொண்டே அவர்களுக்குக்
காரணப் பெயர் வழங்கியிருப்பதையும் காணமுடிகின்றது. இப்புலவர் குலாம் அரசர் முதல்
பொதுமக்கள் வரை எல்லா நிலைகளிலும் உள்ள புலவர் பெருமக்களை உள்ளடக்கியதாக
இருந்திருக்கின்றது.

சங்க இலக்கியத்தின் பொருள் பாகுபாடு அகம், புறம் என இரு பெரும் பிரிவாக


பகுக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பானது கூட உலக இலக்கியங்கள் வேறு எதிலும் காணக் கிடைக்காத
ஒர் அரிய செய்தியாகும். பொதுவாகக் காதல் பற்றிய அன்புணர்ச்சியின் உள்ளக் கிடக்கையை
அகம் என்றும் அதற்குப் புறமாக விளங்குகின்ற வீரம், கொடை, புகழ், உள்ளது கூறல், வரலாற்றுச்
செய்திகள் முதலிய பிறவற்றைப் புறம் என்றும் பகுத்தனர்.

அக இலக்கியங்கள் பெருவாரியாக காதலர்களின் உள்ளக் கிடக்கைகளை, உள்ளத்து


உணர்வுகளை சிறந்த உவமைகளின் வழி எடுத்துரைப்பனவாகவே உள்ளன. பெண்களின் உடல்
வருணனை, காமச் சேர்க்கையைப் பற்றிய குறிப்புகள் போன்றவை அக இலக்கியத்துள்
மிகுந்திருப்பதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட குடும்ப வாழ்வைக் குறிப்பிடுவதாகவே அக
இலக்கியம் திகழ்கின்றது.

அக இலக்கியத்தில் பெயர்சுட்டும் வழக்கம் இல்லை. ஆகவே இவ்விலக்கியத்தில்


பெருவாரியாகக் கிழவன், கிழத்தி, செவிலித்தாய், நற்றாய், தோழி, பாங்கன் போன்ற பொதுப்
பெயர்களே இடம் பெறுவது வழக்கம். எனவே காதல் கொண்ட எவரும் அகப்பாடல்களில் தங்களை
இணைத்துக் கொண்டு அவ்வுணர்வின் கற்பனையில் திளைப்பதற்குரிய வாய்ப்புண்டு. இதன்
அடிப்படையில் அக இலக்கியமானது மிகுந்த கற்பனை வளத்திற்கும் இடம் கொடுத்துள்ளது
உணரத்தக்கது.

புற இலக்கியம், பரவலாக வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் உருவாக்கம்


பெற்றிருக்கின்ற இலக்கிய வடிவமாகும். எனவே இவ்விடம் பெயர் சுட்டிச் சொல்லப்படும் வரலாற்றுச்
செய்திகள் மிகுந்திருப்பதைக் காணமுடியும். அவ்வகையில் தமிழ்நாட்டு மன்னர்கள், சிற்றரசர்கள்,
வள்ளல்கள், சான்றோர்கள், சிறந்த குடிமக்கள் முதலானோரின் செயற்கரிய செயல்களைப் பாடும்
தொகுப்பாக புறப்பாடல்கள் அமைகின்றன.

பொது விழுமியங்களை பாடும் பாடல்களும் இவற்றுள் அடங்கும். கண்ணால் கண்டு வாயால்


விளக்கிச் சொல்லக் கூடியவைகளை புறப்பொருள் இலக்கியங்களாகப் பகுத்துள்ளனர்.
புறப்பொருளில் பண்டை தமிழர்தம் அரசாட்சி, நீதிமுறை, போர்ச் செய்திகள், வணிகம், தொழில்கள்,
கலைகள் போன்ற பல செய்திகளையும் காணலாம். இவை முழுமையும் பொது வாழ்வைச்
மையமாகக் வைத்துப் பேசப்படும் பாடல்களாக அமைகின்றன.

இவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனும் ஏழு
புறத்திணைகளில் பாடப்பட்டுள்ளன. வெட்சி முதலாக வாகை ஈறாக போர் அறிவிப்பு, தொடக்கம்
முடிவு வரை உள்ள செய்திகளை பாடுவன. காஞ்சித் தினை உலக நிலையாமையை முன்னிருத்தி
மனிதன் நன்னெறியில் நடக்க வேண்டியதின் அவசியம் குறித்து வலியுறுத்துகிறது. பாடாண்
திணையோ ஒருவருடைய ஒழுக்கம், வீரம், புகழ், கொடை முதலியவற்றை உயர்த்திப் பாடுவனவாக
உள்ளன. தெய்வங்களைத் தொட்டுப் பாடப்பெற்ற பாடல்களும் பாடாண் திணையிலேயே அடங்கும்.

You might also like