You are on page 1of 7

#கொற்றவை...தமிழரின் மரபுத் தெய்வம்.

சங்க இலக்கியங்கள் தமிழர் வரலாறு

பழந்தமிழர் கொற்றவை வழிபாடு:

பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாட்டில் மிக இன்றியமையாத இடம்,


கொற்றவை வழிபாட்டிற்கு உண்டு. பழந்தமிழர் வழிபட்ட பல்வேறு
பெண்தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் சங்க அகப்புற இலக்கியங்களில்
ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அத்தகு குறிப்புகளைத் திரட்டி ஒருங்கு
வைத்து ஆய்கையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும்
பெண்தெய்வங்கள் கன்னித் தெய்வங்கள், தாய்த் தெய்வங்கள் என
இருவேறு நிலைகளில் குறிப்பிடப்பட்டாலும் அவை தாய்த் தெய்வங்களே.
பி.எல்.சாமி அவர்களின் கூற்று இக்கருத்துக்கு துணை நிற்பதாகும். “தாய்த்
தெய்வத்தைத் தாயாகவும் கன்னியாகவும் உருவகப்படுத்திக் கூறுவது மிகப்
பழங் காலத்திலிருந்தே மரபாக உள்ளது. அவளை எல்லோரையும் பெற்ற
தாயாகக் கருதுவதும் அழியாக் கன்னியாகக் கருதுவதும் சுமேரியா,
எகிப்து, அசீரியா, இந்தியா ஆகிய நாடுகளின் பழைய நாகரிகங்களில்
காணப்படுகின்றது.” (பி.எல்.சாமி, தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ
வழிபாடு, ப.34) ஆக சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கெழு
செல்வியும் (அகம். 370) கானமர் செல்வியும் (அகம். 345) தாய்த்
தெய்வங்களே.

kottravai சங்க இலக்கியங்களில் இடம்பெறும் தாய்த் தெய்வங்கள் பற்றிய


குறிப்புகள், அத்தெய்வம் காட்டை இருப்பிடமாகக் கொண்டவள் என்ற
பொருளிலேயே கையாளப் பட்டுள்ளன. பதிற்றுப்பத்தில் இடம்பெறும்
அயிரை என்ற தெய்வம் மலையை இருப்பிடமாகக் கொண்டது. கடல்கெழு
செல்வியைத் தவிர பிற இடங்களிலெல்லாம் காடு, மலை, மலைச்சாரல்,
மலைச்சுனை சார்ந்தே தாய்த் தெய்வங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில்
பதிவாகியுள்ளன.

அயிரையும் கொற்றவையும்:
சங்க இலக்கியங்களில் சேரர் இலக்கியம் என்ற பெருமைபெற்ற
பதிற்றுப்பத்தில் மூன்று பாடல்கள் அயிரை என்ற தெய்வம் பற்றிப்
பேசுகின்றன (பதிற்றுப்பத்து: 79, 88, 90) இரண்டு பாடல்கள் அயிரை
மலையைக் குறிப்பிடுகின்றன. (பதிற்றுப்பத்து: 21, 70) சேரர்களின் அயிரை
மலையில் உறையும் தெய்வம் அயிரை என்றழைக்கப்பட்டது.

பதிற்றுப்பத்தின் இம்மூன்று பாடல்களிலும் இடம்பெறும் அயிரை


வழிபாட்டைக் கொற்றவை வழிபாடு என்றே பழைய உரைக்குறிப்பை
ஒட்டி உரையாசிரியர் ஒளவை துரைசாமிப் பிள்ளை எழுதுகின்றார்.

தும்பை சூடிப் பொருதலில் அமைந்த மெய்யிடத்தே யுண்டாகிய அசைவு


பற்றிப் பிறந்த ஓய்ச்சலுடன்; மார்பிற்பட்ட புண்ணிடத்தொழுகும்
குருதியாற் புறத்தே தெளிக்கப்பட்டாலன்றிக் கொடுக்கப்படும் படைச்சலை
(பலியை) யேற்றுக் கொள்ளாத அச்சம் பொருந்திய முறைமை
யினையுடைய கொற்றவை வற்றிருக்கின்ற
ீ அயிரை மலைபோல நின்
புகழ்களும் நிலைபெற்றுக் கெடாது விளங்குவனவாக (ஒளவை சு.
துரைசாமிப்பிள்ளை, பதிற்றுப்பத்து உரை)

பழைய உரைக் குறிப்பைக் கொண்டு அயிரையைக் கொற்றவை என்று


ஒளவை அவர்கள் எழுதும் உரையின் பொருத்தம் ஆய்வுக்குரியது.
அயிரையைப் பெண் தெய்வமாக/ தாய்த் தெய்வமாகக் கொள்வது ஓரளவு
பொருந்தக்கூடியதே. ஆனால் கொற்றவை என்று வலிந்து
பொருள்கொள்வதால் தாய்வழிச் சமூகத்தின் வழிபடு தெய்வமான
கொற்றவை, நிலவுடைமைச் சமூகமாகவும் பேரரசுச் சமூகமாகவும்
மாறிவிட்ட சேர மன்னர்கள் காலத்திலும் அதே நிலையில் வழிபடப்பட்டது
என்று பொருள் கொள்ளப்படும். கொற்றவையோடு தொடர்பு படுத்தக்
கூடிய எந்தவிதக் குறிப்புமற்று கடவுள் அயிரை என்றும் உருகெழு மரபின்
அயிரை என்றும் சொல்லப்பட்டதன் பின்னணி கவனிக்கத்தக்கது. ஆகவே,
அயிரையைத் தனித் தெய்வமாகக் கொள்ளாமல் அயிரை என்ற
நெடுவரையே சேரர்களின் வழிபடு தெய்வமாய் தொழப்பட்டிருக்கலாமோ
என எண்ணத் தோன்றுகிறது.

தொல்காப்பியரும் கொற்றவையும்:

தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம்,


நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களுக்குமான தலைமைத்
தெய்வங்களைக் குறிப்பிடும் இடத்தில்

மாயோன் மேய காடுஉறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும் - (தொல். அகத். நூ. 5)

என மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என நான்கு நிலத்திற்கும்


ஆண் தெய்வங்களையே தலைமைத் தெய்வங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாய்த்தலைமைச் சமூகம் மாற்றம் பெற்றுத் தந்தைத் தலைமைச் சமூகம்
நிலைபெற்றுவிட்ட நிலவுடைமைச் சமூகத்தின் கருத்தாக்கமே
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வெளிப்படையாய்ப் பதிவு
பெற்றுள்ளது. முல்லைக்கும் குறிஞ்சிக்கும் சொல்லப்பட்ட மாயோன்,
சேயோன் ஆகிய திருமாலும் முருகனும் தமிழ் மரபு சார்ந்த தெய்வங்கள்.
ஆனால் மருதத்திற்கும் நெய்தலுக்கும் சொல்லப்பட்ட வேந்தன் எனப்பட்ட
இந்திரனும், வருணனும் தமிழ் மரபிற்கு அயலான தெய்வங்கள், வைதீக
மரபுத் தெய்வங்கள். சங்க இலக்கியங்களில் ஓரிடத்தும் திணை சார்ந்தோ
வேறெந்தத் தமிழ் வழிபாட்டு மரபு சார்ந்தோ குறிப்பிடப்படாத இந்திரனும்
வருணனும் தமிழர்களின் நானிலத் தலைமைத் தெய்வங்களாயினமை
மிகுந்த சிக்கலுக்குரியது. பழந்தமிழகத்தில் மக்கள் மத்தியில்
பெருவழக்காயிருந்த கொற்றவை அல்லது வேறு பெயரிலான தாய்த்
தெய்வங்கள் எதனையும் தொல்காப்பியர் திணைத் தலைமைத்
தெய்வங்களாகக் குறிப்பிடாதது வியப்பிலும் வியப்பே. வைதீகச் சமயக்
கருத்துக்கள் சங்க காலத்திலேயே தமிழகத்தில் செல்வாக்கு பெறத்
தொடங்கி விட்டன என்ற அடிப்படையில் தொல்காப்பியரின் நானிலத்
தலைமைத் தெய்வக் கோட்பாட்டை வைதீகப் பண்பாட்டுத் தாக்கத்தின்
விளைவு என விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

கொற்றவை வழிபாடு குறித்துச் சங்க இலக்கியங்கள் உரிய குறிப்புகள்


ஏதும் இடம்பெறவில்லை. கொற்றவை என்ற பெயரும் பெருங்காட்டுக்
கொற்றி என்ற பெயரும் சங்க இலக்கியங்களில் பிற்பட்டனவாகக்
கருதப்படும் பரிபாடல், கலித்தொகைகளில் தாம் இடம்பெற்றுள்ளன.

சிலம்பு நா. செல்வராசு தம் ஆய்வொன்றில் சங்க காலத்துக் கொற்றவை


குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

கொற்றவை பற்றிச் சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு.


கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை.
பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு (கலி.89) எனவும் நெற்றி
விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர்
பெண் (பரி.11) எனவும் வருவன சங்கப் பிற்காலச் சான்றுகளாகும்.
அவ்வாறே, கொற்றவைச் சிறுவன் (திரு.முருகு. .250) என முருகன்
சுட்டப்பெறும் ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப் பட்டுள்ளது.
விறல் கெழு சூலி (குறு. 218) எனவும் உருகெழு மரபின் அயிரை (பதி.
79,90) எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவையைக்
குறிப்பிடுவதாகக் கூறுவர். .. .. அச்சம் தரத்தக்க இத்தெய்வம்
வெற்றிக்குரியவள் என்பதும் அவள் முருகனது தாய் என்பதும் அவள்
மலைஃகாடு வாழ் தெய்வம் என்பதும் மேல் குறிப்புகள் தரும் தகவல்கள்
ஆகும். இவைதவிரக் கொற்றவை வழிபாடு பற்றிய வேறு செய்திகளைச்
சங்க இலக்கியங்கள் வழி அறிய இயலவில்லை. (சிலம்பு நா.செல்வராசு,
சங்க இலக்கிய மறுவாசிப்பு, ப. 12)
கொற்றவை குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் குறைவாக உள்ளமைக்குக்
பல்வேறு சமூக மானிடவியல் காரணங்களை நாம் சொல்லமுடியும்.
குறிப்பாக, குறிஞ்சி, முல்லை வாழ்க்கையும் இனக்குழுச் சமூக அமைப்பும்
மாற்றம் பெற்று மென்புலப் பயிர்த்தொழிலும் வணிகமும்
நிலைபெற்றுவிட்ட நிலவுடைமைச் சமூக அமைப்பில்தான் சங்க
இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. தொகுப்புக் காலத்தின் சமூக, சமய,
அரசியலுக்கு ஏற்பவே சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டிருக்கும்
என்பதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. ஆனாலும் சங்க
இலக்கியப் பாடல்களில் பல்வேறு புதை அடுக்குகளாகத் தமிழர்களின்
முந்தைய தொல்குடிச் சமூகம் தொடங்கி அனைத்துச் சமூகப் பண்பாட்டு
எச்சங்களும் இடம்பெற்றுள்ளமை இவ்விலக்கியங் களின் தனிச்சிறப்பு.
திருமால், முருகன் குறித்த பாடல்களைக் கொண்ட பரிபாடலில்
காடுகிழாளாகிய கொற்றவைக்கும் ஒருபாடல் இருந்ததாக ஒரு பழைய
குறிப்பு உண்டு.

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்

தொருபாட்டுக் காடுகாட்கு ஒன்று – மருவினிய

வையைஇரு பத்தாறு மாமதுரை நான்கென்ப

செய்ய பரிபாடல் திறம்

பரிபாடல் பாடல் எண்ணிக்கை மற்றும் பகுப்புகளைக் குறிப்பிடும்


மேற்சொன்ன பழம்பாடலில் இடம்பெறும் காடுகாட்கு ஒன்று என்ற செய்தி
காடுகாள் -காடுகிழாள் ஆகிய கொற்றவை குறித்த பரிபாடல் பதிவுக்குத்
தக்க சான்றாகும்.

சிலப்பதிகார மதுரையில் மீ னாட்சி கோவில் இல்லை கொற்றவை


கோட்டம்

உண்டு.
மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும்
கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:

“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,

மையறு சிறப்பின் வான நாடி

ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு - என்”

(காடுகாண் காதை, சிலம்பு)

#சிலம்பு கூறும் கொற்றவை

வெண்ணிறப் பாம்புக்குட்டி போன்ற பொன் இழையால் கட்டப்பட்ட நீண்ட


சடைமுடி. பிறைச் சந்திரன் போலத் தோற்றமளிக்கும்படி அச்
சடைமுடியிலே சாத்திய காட்டுப் பன்றியின் வளைவான கொம்பு.
கழுத்தில், அஞ்சாத வலிமை கொண்ட புலியின் வாயைப் பிளந்து பெற்ற
அதன் பற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புலிப்பல் தாலி. இடையில்
வரிகளும் புள்ளியும் பொருந்திய புலித்தோல் ஆடை. கையிலே வில்
ஆகியவற்றுடன் கூடி நீளமான முறுக்கிய கொம்புகளையுடைய கலைமான்
மேல் ஏறி இருக்கும் தோற்றமே கொற்றவையின் தோற்றமாகக்
காட்டப்படுகின்றது

புறப்பொருள் வெண்பாமாலை. துறை-கொற்றவை நிலை.

இன்னும் மேலே....

திரௌபதி கோயில் என இன்று அழைக்கப்படும் மாமல்லபுரத்தில் உள்ள


பல்லவர்காலக் கொற்றவை கோயில்

You might also like