You are on page 1of 8

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி

நிறுவனம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை

ஆசிரியர் பணித்திறன் பயிற்சி - 2

6 to 8 வகுப்பு ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (Facilitator)


விரிவான வழிகாட்டி

மாநில அளவிலான பயிற்சி - 18.07.2023 / 19.07.2023

மாவட்ட அளவிலான பயிற்சி - 20.07.2023 / 21.07.2023

கால அட்டவணை

கால அளவு நிகழ்ச்சி நிரல் லிங்க்

Attendance Form
Facilitator & Participants

வருகைப் பதிவு
09.30 மு.ப -
(வரவேற்பு மற்றும்
09.45 மு.ப அறிமுகம்)

09.45 மு.ப -
சூழல் அமைப்பு Session Guidelines
10.00 மு.ப

10.00 மு.ப - பாடம் குறித்த கற்றல்


11.00 மு.ப விளைவுகள் : அமர்வு 1

11.00 மு.ப -
தேநீர் இடைவேளை
11.15 மு.ப
கால அட்டவணை

Learning Outcomes - Tamil


Learning Outcomes -
English
பாடம் குறித்த கற்றல் Learning Outcomes -
11.15 மு.ப
விளைவுகள் : அமர்வு 2 Maths
-12.35 பி.ப Learning Outcomes -
Science
Learning Outcomes -
Social Science

12.35 பி.ப-
பிற்பகல் உணவு இடைவேளை
01.20 பி.ப
Assessments - Tamil
Assessments - English
Assessments - Maths
01.20 பி.ப-
மதிப்பீடு : அமர்வு 1 Assessments - Science
03.40 பி.ப Assessments - Social
Science

03.40 பி.ப-
தேநீர் இடைவேளை
03.55 பி.ப
Quiz Form

03.55 பி.ப- தொகுப்பு, பின்னூட்டம் &


04.30 பி.ப வினாடி வினா நேரம் Feedback Form

ஏதுவாளர் கையேடு & PPT


மாவட்ட மற்றும் குறுவள மைய அளவிலான பயிற்சிகளுக்குக்
கொடுக்கப்பட்டுள்ள மாதிரி காணொளியைக் காணவும்.
https://drive.google.com/drive/u/0/folders/1hNBKWxw8TdaXWIdqhMPOcflM_rtCpsPj

மேலும், இந்த மாதிரிக் காணொளியில் காட்டப்பட்டுள்ளவாறு,


பயிற்சி அமர்வுகளின் நிகழ்ச்சி நிரல் மற்றும் வழிகாட்டுதல்கள்
குறித்த குறிப்புகளை TNSED செயலியின் சம்பந்தப்பட்ட
கோப்புறையில் இருந்து PDF வடிவில் பெற்றுக் கொள்ளவும்.

கால அளவு : 9:30 மு.ப to 9:45 மு.ப

நிகழ்ச்சி நிரல் : வருகைப் பதிவு (வரவேற்பு மற்றும்


அறிமுகம்)

இலக்குகள்

● ஆசிரியர் பணித்திறன் பயிற்சிக்கான சரியான சூழலை


அமைத்தல்.
● மாணவர்களின் தனித்திறன் , கற்றல் விளைவுகள் மற்றும்
மதிப்பீடு ஆகியவற்றைக் குறித்து அறிதல்.

குறிப்பு

● அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் தனி அறைகள்


ஒதுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
● ஒவ்வொரு அறையின் ஆசிரியர்கள் எண்ணிக்கை 30-ஐ
தாண்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
● ஒவ்வொரு அறையிலும் உள்ள ஏதுவாளர் மின்சாரம்,
மடிக்கணினி, ஸ்பீக்கர், ப்ரொஜெக்டர் போன்றவை வேலை
செய்வதை உறுதி செய்யவும்.

● ஆசிரியர் செயலியில் வருகையைப் பதிவு செய்யவும்


○ குறியீட்டு இலக்கத்தைப் பெறுவதற்கு
https://drive.google.com/file/d/19Ty87UfuN3GO65oHZRfuVp4Hq5Ki2h
bV/view?usp=sharing இந்தக் காணொளியைப் பார்க்கவும்.
○ குறியீட்டு இலக்கத்தை ஆசிரியர்களிடம் பகிரவும்.
○ அறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் ஏதுவாளரும்
வருகையைப் பதிவு செய்தார்களா என்பதை உறுதி
செய்யவும்
● மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சிக்கு: இந்த
நேரத்தில், மாவட்ட அளவிலான ஏதுவாளர், குறு வள மைய
அளவிலான ஏதுவாளர்களை , பின் வரும் இணைப்பைப்
பயன்படுத்தித் தங்கள் வருகையைப் பதிவு செய்யும்படிக் கூற
வேண்டும்- (https://forms.gle/zqoJm9ejHXbcg9heA) or scan the QR code

● குறு வளமைய அளவிலான பயிற்சி : பின்வரும் மாதிரி


காணொளியைக் குறுவள மைய ஏதுவாளர் கட்டாயம் காண
வேண்டும்
● (https://drive.google.com/file/d/19Ty87UfuN3GO65oHZRfuVp4Hq5Ki2hbV/vie
w?usp=sharing)
● மேலும் அறையில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரும், மாதிரி
காணொளியில் காட்டப்பட்டுள்ளவாறு , TNSED செயலியில்
தங்கள் பின்னூட்டத்தைப் பதிவு செய்ய வழிகாட்ட வேண்டும்

நேர ஒதுக்கீ டு - 9:45 முற்பகல் to 10:00 முற்பகல்

நிகழ்ச்சி நிரல் குறிப்பு: சூழல் அமைத்தல் (Context Setting)

இலக்குகள்
● மாணவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ளும் திறன் குறித்து
அறிதல்.
● கற்றல் நோக்கம், கற்றல் விளைவுகள் மற்றும் மதிப்பீடுகள்
சார்ந்த அந்நாளுக்கான ஆசிரியர் பணித்திறன் பயிற்சிக்கான
நோக்கத்தை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளுதல்.

குறிப்பு

● அறிமுகச் செயல் (energiser):


மாணவர்களின் தனித்திறன்கள், புரிந்துகொள்ளும்
திறன்கள், கற்றல் விளைவுகள், மதிப்பீடுகள்
போன்றவற்றைப் பற்றி இந்தச் செயல்பாட்டின் வழி
அறிதல்.

➔ பயிற்சியைத் தொடங்குபவர், வருகை புரிந்துள்ள


ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் வெள்ளைத் தாள்
ஒன்றைக் கொடுக்க வேண்டும்.
➔ பின்பு அவர் அனைத்து ஆசிரியர்களின் கண்களையும்
மூடும்படிக் கூற வேண்டும்.
➔ தொடர்ந்து அவர், நான் இப்போது சொல்வதை மட்டும்
கண்களை மூடியபடியே செய்ய வேண்டும் என்று கூற
வேண்டும்.
➔ உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள தாள்களைச் சரிபாதியாக
மடிக்க வேண்டும் என்றும், அதே தாளை மீ ண்டும்
ஒருமுறை மடியுங்கள் என்று கூற வேண்டும்.
➔ பின்பு அத்தாளின் நடுவில் துளை ஒன்றை இடும்படிக்
கூற வேண்டும். மேலும் அத்தாளின் இரு பக்கங்களிலும்
துளைகளை இடும்படிக் கூற வேண்டும்.
➔ அதன் பின்பு ஆசிரியர்களின் கண்களைத் திறக்கச்
சொல்லி, அவர்கள் கைகளில் உள்ள தாளின் துளைகளை
உயர்த்திக் காட்டச் சொல்ல வேண்டும்.
➔ இப்போது ஒவ்வொருவர் கைகளில் உள்ள தாள்களில்
போடப்பட்டிருக்கும் துளைகள் வெவ்வேறான அமைப்பு
முறைகளில் இருக்கும்.
➔ இந்தச் செயல்பாட்டிலிருந்து, கற்பித்தல் என்பது ஒரே
மாதிரியானதாக இருந்தாலும் மாணவர்களின் கற்றல்
திறன் என்பது வெவ்வேறாக இருக்கும் என்றும்,
அவர்களின் புரிந்துகொள்ளும் திறன் என்பது
வேறுபாடானதாக இருக்கும் என்பதையும் அறிந்து
கொள்ளலாம். மேலும்,
➔ கற்றலில் வேறுபாடு இருந்தாலும் கற்றல் விளைவுகள்
ஒன்றாக இருத்தல் வேண்டும், மாணவர்களுக்குக்
கற்பித்தல் என்பதோடு அவர்களை எவ்வாறு மதிப்பீடு
செய்தல் வேண்டும் என்பதும் அறியப்படுகிறது.

● அந்த நாளுக்கான கால அட்டவணையைப் பகிர்ந்துகொண்டு,


கூட்டத்தின் பின்வரும் நோக்கங்களையும் பகிர்ந்து
கொள்ளுங்கள்.

நேரம் - முற்பகல் 10:00 முதல் 11:00 வரை

நிகழ்ச்சி நிரல்: பாடம் குறித்த கற்றல் விளைவுகள் – அமர்வு


1

● ஏதுவாளர்கள் தேவைக்கேற்ப குழுச் செயல்பாட்டிற்கான அச்சுப்


பிரதிகளை எடுப்பார்.
● ஏதுவாளர்கள் கீ ழே கொடுக்கப்பட்டுள்ள PPT இணைப்பைத்
திறக்க வேண்டும் .
● ஏதுவாளர் சூழலை அமைத்தல் செயல்பாட்டினை நடத்த
வேண்டும்.
● ஏதுவாளர், NAS இல் தமிழ்நாட்டின் செயல்பாடுகளைப் பற்றிக்
கலந்துரையாடுவார்.
● ஏதுவாளர், உள்ளடக்க கருத்துருவாக்கத்தின் அடிப்படையில்
கற்றல் விளைவுகளின் முக்கியத்துவத்தை விளக்குவர் .
● கற்றல் விளைவுகளை மதிப்பீடு மற்றும் பயன்படுத்துதல்
அடிப்படையில் எவ்வாறு இணைப்பது என்பதை ஏதுவாளர்
கலந்துரையாடுவார்.

நேரம் – முற்பகல் 11:00 முதல் 11:15 வரை : தேநீர்


இடைவேளை

நேரம் - முற்பகல் 11:15 முதல் பிற்பகல் 12:35 வரை

நிகழ்ச்சி நிரல்: பாடம் குறித்த கற்றல் விளைவுகள் – அமர்வு 2

பாடம் PPT இணைப்பு அச்சுப் பிரதி

தமிழ் Learning Outcomes - Tamil Tamil

ஆங்கிலம் Learning Outcomes - English English

கணிதம்
Learning Outcomes - Maths Not Applicable

அறிவியல்
Learning Outcomes - Science Science

சமூக அறிவியல் Learning Outcomes - Social Social Science 1


Science Social Science 2

நேரம் – பிற்பகல் 12:35 முதல் 1:20 வரை : உணவு


இடைவேளை

நேரம் - பிற்பகல் 1:20 முதல் to 3:40 வரை


நிகழ்ச்சி நிரல்: மதிப்பீடு – அமர்வு 1

நிகழ்ச்சி நிரல்: 10 மணித்துளிகள்


● ஏதுவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் அச்சுப்
பிரதிகளை எடுக்க வேண்டும்.
● ஏதுவாளர்கள் கீ ழே கொடுக்கப்பட்டுள்ள PPTஐ திறக்க வேண்டும்
● ஏதுவாளர் சூழலை அமைத்தல் செயல்பாட்டினை நடத்த
வேண்டும்.
● ஏதுவாளர், NAS இல் தமிழ்நாட்டின் செயல்திறன் மற்றும்
பாடநூலுக்கும் NAS க்கும் இடையே உள்ள வினாக்களில் என்ன
வேறுபாடுகள் என்பதைப் பற்றிக் கலந்துரையாடுவார்.
● திறன் அடிப்படையிலான வினாக்களின் முக்கியத்துவத்தை
ஏதுவாளர் வலியுறுத்துவார்.
● திறன் அடிப்படையிலான மதிப்பீடுகள் பற்றிய
கலந்துரையாடலை ஏதுவாளர்கள் தொடருவார்கள்.
● ஏதுவாளர்கள் அறிதல், புரிதல் மற்றும் பயன்படுத்துதல் சார்ந்த
திறன் அடிப்படையிலான வினாக்களை எவ்வாறு உருவாக்குதல்
என்பதைக் குறித்து விளக்கங்களை வழங்குவார்.
● ஏதுவாளர்கள் ஆசிரியர்களுக்கு மாதிரி வினாக்களை வழங்குவார்.
ஏதுவாளர்கள் ஆசிரியர்களைக் குழுக்களாக அமரச்செய்து,
அவர்கள் கற்றுக் கொள்ளும் கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு
திறன்களுக்கும் ஒரு வினாவை உருவாக்கச் செய்தல் வேண்டும்

பாடம் PPT இணைப்பு அச்சுப் பிரதி

தமிழ் Assessments - Tamil Tamil

ஆங்கிலம் Assessments - English English

கணிதம் Assessments - Maths Maths

அறிவியல் Assessments - Science Science

சமூக அறிவியல் Assessments - Social Science Social Science

நேரம் – பிற்பகல் 3:40 முதல் 3:55 வரை : தேநீர் இடைவேளை

நேரம் – பிற்பகல் 3:55 முதல் 4:30 வரை

நிகழ்ச்சி நிரல் கருத்து : வினாடி வினா மற்றும்


பின்னூட்டத்திற்கான நேரம்

வினாடி வினா

● மாநில, மாவட்ட மற்றும் மைய அளவிலான பயிற்சிக்கு


மாவட்ட அளவிலான ஏதுவாளர்கள் குறுவளமைய அளவிலான
ஏதுவாளர்களைப் பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி
வினாடி வினாவை நிறைவு செய்யும்படி இந்த நேரத்தில் கூற
வேண்டும். (https://forms.gle/nzgN1WiCtSmaqEkq6)அல்லது இந்த QR
குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்
பயிற்சி குறித்த பின்னூட்டம்

மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சிக்கு: இந்த நேரத்தில்,


மாநில அளவிலான ஏதுவாளர், மாவட்ட அளவிலான
ஏதுவாளர்களைப் பின் வரும் இணைப்பைப் பயன்படுத்தித் தங்கள்
பின்னூட்டத்தைப் பதிவு செய்யும்படிக் கூற வேண்டும்
(https://forms.gle/iCauxdt3EcpoaCRW9) அல்லது இந்த QR குறியீட்டை
ஸ்கேன் செய்ய வேண்டும்.

குறு வள மைய அளவிலான ஏதுவாளர்களுக்கான குறிப்பு : மாவட்ட


மற்றும் குறுவள மைய சரியான ஏதுவாளர்கள் இந்த மாதிரிக்
காணொளியைக் கட்டாயம் காண வேண்டும்
(https://drive.google.com/file/d/1ATbhzIzuhRmXj8Tgy2jzJ0nmK6jFsjsk/view?usp=sh
are_link )
மேலும், இந்த மாதிரிக் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளவாறு,
TNSED செயலியில் கொடுக்கப்பட்டுள்ள பின்னூட்டத்தை நிறைவு
செய்ய அறையில் இருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழிகாட்ட
வேண்டும்

தொகுப்புரை

● அனைத்துப் பங்கேற்பாளர்களும் பின்னூட்டம் மற்றும் வினாடி


வினாவுக்கான வினாக்களுக்கு விடை அளித்து விட்டனரா
என்பதை உறுதி செய்யவு ம்.
● இன்றைய நாளிலிருந்து 2 or 3 கற்றல் மற்றும் செயல்
புள்ளிகளை (action points) ஆவணப்படுத்த சில நிமிடங்கள்
ஒதுக்குமாறு ஆசிரியர்களை ஊக்குவிக்கவும்.
● TNSED Schools செயலியில் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை
(Feedback and Quiz) நிரப்புவதற்குப் பொருத்தமான
வழிமுறைகளைப் பகிரவும்.
● சரியான நேரத்தில் மற்றும் ஊக்கமளிக்கும் விதத்தில்
இந்நாளை நிறைவு செய்யவும்.

You might also like