You are on page 1of 3

டிவாகர் த/பெ பரமசிவன்

மகாஜோதி தமிழ்ப்பள்ளி,கெடா

ஆறு ஆண்டுகளாக ஆரம்ப பள்ளியில் பயின்ற நான்


யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் ‘8A’ பெற வேண்டும் என்று
எண்ணம் பூண்டிருந்தேன்.இப்பொழுது என் எண்ணம்
நிறைவேறிய போது ஒரு கணம் என் சாதனை
பயணத்தின் சுவடுகளை திரும்பி பார்த்தேன்.

என் சாதனைக்கு அஸ்திவரமாக இருந்த்து நான்


ஒவ்வொரு முறை சோர்ந்தும் துவண்டும் போகும் போது
எனக்கு கரம் கொடுத்த சிறந்த பள்ளி
ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள். ’கல்வி
இருட்டிற்கு கலங்கரை விளக்கு’ எனும் பாவேந்தர்
பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப என் அறியாமையை
போக்கி , ஆறு ஆண்டுகளாக என்னை கொஞ்சம்
கொஞ்சமாய் செதுக்கி இன்று ஓர் அழகிய சிற்பமாய்
வடிவமைத்தார்கள்.பொதுவாக அனைவரும் அவர்களது
சாதனைக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு
நன்றி கூறுவர்.ஆனால்,நான் இந்த பட்டியலில் கூடுதலாக
என் கூடுதல் வகுப்பு ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி
கூறுகின்றேன்.மேலும்,ஒன்றாம் ஆண்டிலிருந்து
என்னுடைய தமிழாசிரியருமாகவும் வகுப்பாசிரியராகவும்
இருந்து எனக்கு ஊக்கம் கொடுத்த ஆசிரியர் திருமதி சுதா
அவர்களையும் இவ்வேளையில் மறக்க கூடாது அல்லவா.

எனினும்,நாம் வெற்றி பெற வேண்டுமெனில்,நாம்


சுயமாக நேரத்தை ஒதுக்கி படிக்க
வேண்டும்.அதற்கு,எப்போதும் எனக்கு ஊக்கமளிக்கும் என்
தந்தையும் ஆசிரியருமான திரு.கி.பரமசிவன் அவர்களுக்கு
நன்றி மாலைகளை சூட்டுகின்றேன்.

அதுமட்டுமல்லாது, பள்ளியில் ஏற்பாடு செய்யபட்ட


அனைத்து பிரித்தியேக வகுப்புகள்,பட்டறைகள்,இரவு
வகுப்பு போன்றவற்றில் தவறாமல் கலந்து
கொண்டேன்.வகுப்பில் ஆசிரியர் கற்றுக் கொடுக்கும்
போது என்னுடைய முழு கவனத்தையும்
செலுத்தினேன்.மேழும்,மொழி பாடத்தில் என்னை
வளர்த்துக் கொள்ள நான் அதிகமான நூல்கள்,நாவல்கள்
போன்றவற்றை வாசித்தேன்.
வாழ்க்கையில் எத்தனையோ படிகள் உள்ளன.அதில்
முதல் படிதான் இந்த யூ.பி.எஸ்.ஆர். தேர்வு. அதற்கு
அஸ்திவாரமாக அமைந்தது நான் பயின்ற
தமிழ்ப்பள்ளி.தமிழ்ப்பள்ளியில் பயில்வதால் நமக்கு
கிட்டும் பிற அரிய நன்மைகளை வார்த்தைகளால்
சொல்ல முடியாது.ஆனால்,உணர்வுகளால் பொழிய
முடியும்.

யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் எனக்கென ஒரு தனி


முத்திரையை பதித்த நான் இப்பொழுது கெடாவில்
தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றான ‘இப்ராஹிம்
இடைநிலைப்பள்ளியில்’ எனது கல்வியை
தொடர்ந்துள்ளேன்.

எனது இந்த வெற்றிக்கு கலங்கரை விளக்கமாக


திகழ்ந்த என் பெற்றோருக்கும்,பள்ளி தலைமையாசிரியர்
ஐயா.திரு.பத்மனாதன் அவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும்
மீ ண்டும் எனது நன்றியை சமர்பிக்கின்றேன்.நன்றி.

வாழ்க தமிழ்...வளர்க தமிழ்...

You might also like