You are on page 1of 15

என்

அப்பா

இவர் என் அப்பா . என் அப்பாவின்

பெயர் _________. அவருக்கு வயது _______. அவர்

____________ பணி செய்கிறார் . ஓய்வு நேரத்தில்

______________. மாலையில் உடற்பயிற்சி செய்வார்.


இரவில் எங்களுக்குப் பாடம் போதிப்பார் . அப்பா

எல்லாரிடமும் இனிமையாகப் பேசுவார் . காலையும் ,


மாலையும் இறைவனை வணங்குவார் .
என் ஆசிரியர்

.
இவர் என் ஆசிரியர் இவரின் பெயர் திருமதி சந்திரா என் .
ஆசிரியர் நல்லவர் . திருமதி சந்திரா தமிழ்மொழிப் பாடம்

போதிக்கிறார் . நான் ஆசிரியரை மதிப்பேன் . என் ஆசிரியர்

அன்பும் கண்டிப்பும் மிக்கவர் . என் ஆசிரியர் நீதிக் கதைகள்

கூறுவார் .

செல்லப்பிராணி
கபிலனின் செல்லப்பிராணி ஒரு
பூனை. அதன் பெயர் மணி. மணியின்
நிறம் வெள்ளை. மணி மீனைத்
தின்னும். அது பாலை விரும்பிக்
குடிக்கும். கபிலன் மணியை மிகவும்
விரும்புவான். கபிலன் மணியுடன்
விளையாடுவான். அவன் மணியை
அன்பாகப் பார்த்துக் கொள்வான்.
கபிலனைப் போன்று நாமும்
பிராணிகளிடத்தில் அன்பு செலுத்த
வேண்டும்.

என்னைப் பற்றி
என் பெயர் நிலா. எனக்கு வயது
ஏழு. நான் குடும்பத்தில் மூத்தவள்.
எனக்கு இரு தங்கைகள் உண்டு.
நான் பள்ளிக்கூடம் செல்கிறேன்.
நான் முதலாம் வகுப்பில்
படிக்கிறேன். என்
பொழுதுபோக்கு புத்தகம்
படிப்பது. நான் பெரியவள்
ஆனதும் மருத்துவர் ஆவேன்.
சேலை

இது சேலை. சேலை பல


வண்ணங்களில் இருக்கும்.
சேலை அணிந்தால் அழகாக
இருக்கும். பட்டுச் சேலை, நூல்
சேலை என்று பல வகை
உண்டு. சேலையைத் தமிழ்ப்
பெண்கள் விரும்பி அணிவர்.
கோயிலுக்குச் சேலை அணிந்து
செல்வது நமது வழக்கம்.
தீபாவளி

அன்று தீபாவளி. நான்


புத்தாடை அணிந்திருந்தேன்.
மாமா குடும்பத்தோடு வீட்டிற்கு
வந்தார். நான் அவர்களுக்குத்
தீபாவளி வாழ்த்து கூறினேன்.
அம்மா அவர்களுக்குப்
பலகாரங்கள் கொடுத்து
உபசரித்தார். சுவரில் மாட்டி
வைத்திருந்த தீபாவளி வாழ்த்து
அட்டைகளை மாமாவின் மகள்
பார்த்தாள். நான் அவர்களோடு
உரையாடினேன்.

தென்னை மரம்

இது தென்னை மரம். தென்னை


மரம் ஓங்கி வளரும். தென்னை
மரத்திற்குக் கிளைகள் இல்லை.
தென்னை மரத்திலிருந்து தேங்காய்
கிடைக்கிறது. தென்னை
ஓலையிலிருந்து துடைப்பம்
செய்யலாம். தென்னை
மரங்களைக்
கடற்கரையோரங்களில்
பார்க்கலாம். தென்னை பயனுள்ள
மரமாகும்.

தேவதையும் விறகுவெட்டியும்

விறகு வெட்டி காட்டிற்குச்


சென்றான். அவன் தன்னுடன்
கோடரியை எடுத்துச் சென்றான்.
விறகுகளை வெட்டிக்
கொண்டிருந்தான். கைத்தவறிக்
கோடரி ஆற்றில் விழுந்துவிட்டது.
விறகுவெட்டி கண் கலங்கினான்.
அவன் முன் தேவதை தோன்றியது.
தங்கம், வெள்ளி, இரு……
…………………………………………………………
…………………………………………………………
…………………………………………………………
…………………………………………………………
…………………………………………………………
…………………………………………………………
…………………………………………………………
……………………………………..

பிறந்த நாள்
இன்று என் பிறந்த நாள். பிறந்த
நாளன்று என் வீட்டிற்குத் தாத்தா,
பாட்டி, அத்தை, மாமா, அண்ணன்,
அண்ணி மற்றும் நண்பர்கள்
வந்தார்கள். என் அப்பா அணிச்சல்
வாங்கி வந்தார். என் அம்மா
நிறைய பலகாரங்கள் செய்தார்.
நான் அணிச்சலை வெட்டினேன்.
எனக்கு நிறைய பரிசுகள்
கிடைத்தன.
மிருகக்காட்சி சாலை

நான் குடும்பத்தோடு
மிருகக்காட்சி சாலைக்குச்
சென்றேன். அங்கு அதிகமானோர்
வந்திருந்தனர். மான், குரங்கு,
ஒட்டகச்சிவிங்கி, புலி, சிங்கம்
ஆகிய மிருகங்களைக் கண்டேன்.
நான் குரங்கிற்கு உணவு
கொடுத்தேன். அங்கு வந்திருந்த
ஒருவர் மிருகங்களைப் படம்
பிடித்தார். அப்பா அங்குள்ள
மிருகங்களைப் பற்றி விளக்கிக்
கூறினார். நான் மிருகக் காட்சி
சாலைக்குச் சென்றதை எண்ணி
மகிழ்ந்தேன்.

முயலும் ஆமையும்

முயல் ஆமையைச் சந்தித்தது.


முயல் ஆமையைப் போட்டிக்கு
அழைத்தது. முயல் வேகமாக
ஓடியது. இடையில் ஆமை
தன்னைக் கடந்து செல்ல முடியாது
என்று எண்ணியது. களைப்பாற
மரத்தடியில் தூங்கியது. முயல்
விழித்தது. ஆமையைக்
காணவில்லை. முயல் வேகமாக
ஓடியது. ஆமை போட்டியில்
வெற்றி பெற்றது. முயல்
தற்பெருமை கொள்வதை விட்டது.

மோட்டார் வண்டி

இது மோட்டார் வண்டி. மோட்டார் வண்டி சாலையில்

செல்லும். மோட்டார் வண்டிக்கு நான்கு சக்கரங்கள் உள்ளன.

என் அப்பாவிடம் மோட்டார் வண்டி உள்ளது. அதன் பெயர்

‘புரோட்டான் பெர்சோனா’………....
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………

………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
………………………………………………………………
…………

வேடனும் புறாவும்
எறும்பு ஆற்றில் விழுந்து
விட்டது. அதைக் கண்ட புறா ஓர்
இலையைப் பறித்துப்
போட்டது. எறும்பு இலை மேல்
ஏறிக் கரை சேர்ந்தது. வேடன்
ஒருவன் புறாவைச் சுடக் குறி
வைப்பதைப் பார்த்தது. எறும்பு
வேடனின் காலைச் ‘சுளீர்’ எனக்
கடித்தது. வேடனின் குறி
தவறியது. புறா தப்பிச் சென்றது.

You might also like