You are on page 1of 9

தகவல் தொடர்பு தொழில்நுட்பம்

இறை வாழ்க இறை தந்த தமிழ் வாழ்க...

அன்புசார் அவையினரே...
இன்று உங்கள் முன் நான் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பதாகும். அறிவுசார்
அவையோர்க்கு வணக்கம். இயற்கை காட்டிய
வழிமுறையைப் பின்பற்றி, மனிதன் தன் ஆறாம் அறிவால்,
அறிவியலின் துணையோடு படைத்ததே இன்று மனிதகுலம்
பல வகைகளில், பல்வேறு வழிகளில் பயன்படுத்துகின்ற
தகவல் தொடர்பு தொழில்நுட்பமாகும். மனிதன் குகைகளை
வடாகப்
ீ பயன்படுத்திய காலம் முதல் விண்ணிலே
வடமைத்து
ீ வாழும் வழிமுறைகளை ஆராய்ந்து
கொண்டிருக்கும் இன்றைய காலம் மட்டுமல்லாது,
பிற்காலத்தில் நிலவில் குடியேறிய பிறகும்கூட மனித
குலத்தின் அடிப்படைத் தேவையாகத் திகழப்போவது தகவல்
தொடர்பு தொழில்நுட்பமேயாகும். இந்த தகவல் தொடர்பு
தொழில்நுட்பத்தின் துவக்கம், வளர்ச்சி, நடைமுறை,
ஆகியனபற்றி விரிவாகக் காணலாம்.

அவையினரே...
தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்றால் என்ன? இதனை
முழுமையாக அறிந்து கொண்டால் மட்டுமே இதுபற்றி நாம்
சரியாகப் புரிந்து கொள்ள முடியும். இதில் “தகவல்”,
“தொடர்பு” மற்றும் தொழில்நுட்பம் என மூன்று சொற்கள்
இணைந்துள்ளன. தகவல் என்பது ஆங்கிலத்தில் Information
என அழைக்கப்படுகின்றது. தகவல் என்பது ’பிறர் அறியும்
வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி’ என்று பொருள்.
தொடர்பு எனும் சொல் ஆங்கிலத்தில் Communication என
அழைக்கப்படுகிறது. தொடர்பு என்றால் ’இரு இடங்களை
இணைப்பது; இணைப்பு’ என்று பொருளாகும். Technology-ஐ
தமிழில் தொழில்நுட்பம் என பொருள் கொள்கின்றனர்.
“தொழில்நுட்பம்’ என்பதோ அறிவியல் முறையையும்,
பொறியியல் கருவிகளையும் பயன்படுத்தி நுணுக்கமான
வேலைகள் மூலம் திட்டங்களையும், வரையீடுகளையும்
செயற்படுத்தும் விஞ்ஞான செயல்பாடாகும். அதாவது
விஞ்ஞான அறிவு முறைகளையும், பொறியியல் ரீதியான
இயந்திரங்களையும் கொண்டு நுணுக்கமாக வேலைகளை
மேற்கொள்ளுவதற்காகப் பயன்படுத்தப்படும்
செயற்பாடுகளை உள்ளடக்கியதே தொழில்நுட்பமாகும்.
தொழில்நுட்பமானது அறிவியல் துறைகளுடனும்,
பொறியியல் துறைகளுடனும் மிக நெருங்கிய
தொடர்பினைக் கொண்டு காணப்படுகின்றது.

அன்பர்களே…
தகவல் தொடர்பு தொழில்நுட்பம்  (Information and communication
technology) அதாவது (ICT) என்பது தகவல் அல்லது
தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் தேக்குதல்,
ஆய்தல், மீ ட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல்
தொழில்நுட்பப் புலமாகும். எனவே தகவல் தொடர்பு
என்பதற்கு ஓர் இடத்திலிருந்து தொலைவில் இருக்கும்
மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ள
அறிவியல் துறையையும், பொறியியல் துறையையும்
பயன்படுத்தும் அமைப்பு என்று பொருள் கொள்ள வேண்டும்.
அதாவது இரண்டு இடங்களை இணைத்து, அங்குள்ளவர்கள்
அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளிப்படுத்தும்
வழிமுறையை அல்லது அதற்கான கருவிகளைத் தகவல்
தொடர்பு தொழில்நுட்பம் என்று சொல்கிறோம்.

அவையினரே...
வாருங்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடங்கிய
வரலாற்றை சற்று பின்னோக்கி பார்த்து விட்டு வருவோம்.
கி.மு 3000 இல் கூம்பு வடிவ எழுத்துமுறையை உருவாக்கிய
மெசபடோமியாவின் சுமேரியர்கள் காலத்தில் இருந்தே
தகவல் தேக்குதலும் மீ ட்டலும் கையாளலும் பரிமாறலும்
தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது என்றாலும், தகவல்
தொழில்நுட்பம் எனும் சொல் 1958 இல் ஆர்வார்டு வணிக
மீ ள்பார்வை எனும் கட்டுரையில் தான் முதலில்
தோன்றியது எனலாம். இந்தக் கட்டுறையின்
ஆசிரியர்களாகிய அரோல்டு ஜே. இலெவிட், தாமசு எல்.
விசிலர் எனும் இருவரும் "இந்தப் புதிய
தொழில்நுட்பத்துக்கு ஒரு பெயர் இன்னும்
உருவாகவில்லை. ஆகவே நாம் இதைத் தகவல்
தொழில்நுட்பம் என அழைப்போம்." என்று
கருத்துரைத்துள்ளனர்.

அறிவுசார் அவையோரே...
ஓவியங்கள் மூலம் தகவல் தொடர்பு குறிப்பிட்ட
காலகட்டத்தில்தான் துவங்கியது என்று உறுதியாகக்
கூறமுடியாதவாறு தகவல் தொடர்பின் துவக்கம்
அமைகிறது. மனிதகுலத்தில் பேச்சும் எழுத்தும்
துவங்குவதற்கு முன்பாகவே தகவல் பரிமாற்றம்
துவங்கிவிட்டது என்றே ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அச்சு
மற்றும் தகவல் தொடர்பின் துவக்கம் என்று கருதப்படுவது,
கற்கால மனிதர்கள் வரைந்து வைத்துள்ள குகைச்
சித்திரங்களாகும். தான் அறிந்த ஒன்றை அல்லது பார்த்த
ஒன்றை, அருகில் அல்லது தொலைவில் அல்லது
இனிமேல் வரப்போகும் நபர்களுக்குத் தெரிவிப்பதற்காக
வரையப்பட்டவையே குகை ஓவியங்கள் ஆகும்.
அதிசயிக்கத்தக்க அளவிற்கு அறிவியல் வளர்ச்சியும்,
கண்டுபிடிப்புகளும் உள்ள இந்த நாட்களிலும்,
ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்துகின்றவைகளாகவும்
இந்தக் குகைச் சித்திரங்கள் உள்ளன. அடுத்ததாக ஒலி
வழித்தகவலும் வாய்வழியே ஒலி எழுப்பவும் பழகிய
மனிதன், ஒவ்வொரு செயலுக்கும் ஆ.. ஊ என்று ஒலி
எழுப்பித் தகவல் பரிமாற்றத்தைத் துவக்கினான்.

அவையோரே...
அடுத்ததாக ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பாகத்தான்
மனிதன் எழுத்துக்களை உருவாக்கியுள்ளான். கிமு 2500 ம்
ஆண்டுகளில் (அதாவது இன்றைக்கு சுமார் 4500
ஆண்டுகளுக்கு முன்பாக) எகிப்திய நாகரீகம்தான் பேச்சு
ஒலியை வரிவடிவத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இன்று
வரலாற்றாய்வாளர்கள் இந்த படவடிவ எழுத்துக்களைப்
படித்தே எகிப்திய வரலாற்றை அறிகின்றனர்.
இதன் பிறகே, நாகரீகங்களும் நாடுகளும்
எழுத்துக்களை உருவாக்கியுள்ளன. சொற்கள் வரிவடிவம்
பெற்று எழுத்துக்கள் உருவாகியதும், தகவல் தொடர்பில்
பெரிய மாற்றம் ஏற்பட்டது. கடிதங்கள் எழுதப்பட்டன.
அன்றைய நாட்களில், அந்தந்தப் பகுதிகளில் கிடைத்த துணி,
ஓலை, தோல், மரத்துண்டு போன்ற தளங்களில் எழுத்துக்கள்
எழுதப்பட்டு மற்றவர்களுக்கு அனுப்பப்பட்டன. கடிதப்
போக்குவரத்தில் முற்கால அரசர்கள் பயன்படுத்திய
சிறப்பான தகவல் தொடர்பு சாதனம் புறாக்கள் ஆகும்.
சரியான வழியை கண்டுபிடித்து புறப்பட்ட இடத்திற்கு
இந்தப் பறவைகள் வந்து சேர்வது இயற்கையின்
விந்தைக்குரிய செயல்பாடுகளில் ஒன்றாகும்.

அவையோரே...
நாட்கள் மாறி, நவன
ீ தொழில்நுட்பங்கள் உருவாக்கிக்
கொடுத்த காகிதம் புழக்கத்திற்கு வந்தது. கடிதங்கள் எழுதும்
பழக்கம் துவங்கியது. எழுதுபவரிடமிருந்து கடிதங்களைப்
பெற்று உரிய நபரிடம் கொண்டு சேர்க்கும் அஞ்சல் சேவை
உருவாக்கப்பட்டது; இதற்கான கட்டணங்களை பெறுவதற்கு
பல்வேறு முறைகள் முயற்சிக்கப்பட்டன. இறுதியாக
இன்றைய நாட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தபால்
தலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஓரிடத்தில்
சேகரிக்கப்படும் கடிதங்களை மற்றொரு இடத்திற்கு,
நாட்டிற்குக் கொண்டு செல்ல, குதிரைகள், உந்து வண்டிகள்,
கப்பல்கள், புகை வண்டிகள் என்று எல்லாவிதமான
போக்குவரத்து முறைகளும் பயன்படுத்தப்பட்டன. நவன

மின்னணுச் சாதனங்கள், தொலை தொடர்பிற்காக
அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் இந்தக் கடிதப் போக்குவரத்து
இன்றும் உலகளவில் நடைமுறையில் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.

அவையோரே...
மனித நாகரிகம் வளர்ந்ததுடன், தகவல் பரிமாற்றத்தின்
துவக்கமான வாய்மொழி என்பது எழுத்தாக மாறி அதிலும்
நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. அடுத்ததாக அச்சுமுறை
அறிமுகம் செய்யப்பட்டது. பொறியியல் துறையில் நவன

இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. எதிரீட்டு அச்சு முறை
அறிமுகமானது. கருத்தும், எண்ணமும், எழுத்தும் நவன

தொழில்நுட்ப வசதிகளால் வளர்ச்சியடைந்தன. உலக
நாடுகளில் பெரும்பாலானவற்றில் உள்ளூர் மக்கள் பேசிய
மொழிகளில் செய்தித்தாள்கள் மட்டுமல்லாது பல்வேறு
இதழ்களும் கொண்டுவரப்பட்டன. தகவல் தொடர்பு முறை
என்பது எளிமையடையத் துவங்கியது இந்தக்
காலகட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவையோரே...
மனிதகுலத்திற்கு அறிவியல் கொடுத்த மிகப்பெரிய பரிசு
மின்சாரம் என்ற சக்தியாகும். அந்த வகையில் இன்றைக்கு
தொலைத் தொடர்பு என்பதில் பயன்படுத்தப்படும் கருவிகள்,
வழிமுறைகள் அனைத்திற்கும் அடிப்படை இந்த மின்சாரம்
என்பதுவே என்றால் அது மிகையில்லை. எளிமையான
முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதும் தகவல்
தொடர்பு தொழில்நுட்பத்தில் புதிய கருவிகள்
கண்டுபிடிப்பதும் விரைவாக நடந்தது எனலாம். அந்த
வகையில் தொலை தூரத்தில் உள்ளவர்களுக்கு விரைவாக
செய்தியை அனுப்பும் சங்கேதக் குறியீடுகளாலான தந்தி
முறை உருவாக்கப்பட்டது.

தந்திச் சேவையை அடுத்து வான் வழியே


அனுப்பப்பட்ட மின்காந்த அலைகளைப் பெற்று ஒலி
அலையாக மாற்றிக் கொடுத்த வானொலிப் பெட்டிகள்
பயன்பாட்டிற்கு வந்தன. 1826 ம் ஆண்டில் அலெக்ஸாண்டர்
கிரஹாம்பெல் உருவாக்கிய இந்த வானொலி
தொழில்நுட்பம், 20 ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில்
பெரிய மாற்றத்தைக் கண்டது. அந்தப் பெரிய மாற்றத்தால்,
1926 ல் இங்கிலாந்து நாட்டின் ஆய்வாளர் ஜான் லோகி
பேர்டு தொலைக் காட்சிப் பெட்டியை உருவாக்கி
செயல்படுத்திக் காட்டினார். இதனால் ஓசையாக மட்டும்
கேட்கப்பட்டவற்றை, காட்சிகளாகவும் வண்ணத்திலும்
பார்க்கவும் முடிந்தது. தொலைக் காட்சித் தொழில்நுட்பம்
வளர்ந்து இன்று மக்கள் ஏறக்குறைய அதற்கு அடிமையாக
இருக்கும் நிலையில் உள்ளது என்பதும்
குறிப்பிடத்தக்கதாகும்.

அவையோரே...
காற்றுவழி அனுப்பப்பட்ட மின்காந்த அலையைப் பெற்று
ஒலியலையாக மாற்றும் செயல்புரிந்த வானொலி
தொலைத் தொடர்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
என்றாலும் இது ஒருவழித் தகவல் தெரிவிக்க மட்டுமே
பயன்பட்டது. மறுமுனையிலிருந்து தகவல் பெறுவது
இயலாததாக இருந்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட
ஆராய்ச்சிகளின் முடிவாக, 1876 ல் அலெக்ஸாண்டர்
கிரஹாம்பெல் என்ற அமெரிக்கர் கம்பிவழியாக இருமுனை
தொடர்பை ஏற்படுத்திய தொலைபேசிக் கருவியை
செயல்முறையாக இயக்கிக் காட்டினார். இது தொலைத்
தொடர்பினை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது.இந்தத்
தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இதன் தொடர்ச்சியாக
தொலை அச்சு, தொலைநகல் போன்ற கருவிகளும்
உருவாக்கப்பட்டன.

தொலைத் தொடர்பு மேலும் வளர்ச்சியடைந்தது. 20 ம்


நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட
ஆராய்ச்சிகளின் விளைவாக, அறிவியல் மனிதகுலத்திற்குக்
கொடுத்த அன்பளிப்பு கணினி தொழில்நுட்பமாகும். மனித
மூளையால் உருவாக்கப்பட்ட, மனித மூளைக்கு வேலையை
குறைத்த கருவி; அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்காக
அறிவியல் உருவாக்கித் தந்த இயந்திரம் இந்த
கணினியாகும். தற்போது உருவாக்கப்படும் கணினிகளில்,
வளர்ந்துள்ள கணினி தொழில்நுட்பத்தால், தொலைபேசி
கம்பி வடத்தையும் இணைத்துக் கொள்ள முடிகிறது.
இதனால் கிடைத்த அரியதொரு பயன்பாடே இணையம்
என்பதாகும். உலகத்தையே சுருக்கி நமது மேசைக்குக்
கொண்டுவந்துவிட்ட அறிவியல் தந்த தொழில்நுட்பமே
இணையம் என்பதாகும். இது 1960 களில் அமெரிக்க ஐக்கிய
நாடுகளின் பாதுகாப்புத் துறைக்காக உருவாக்கப்பட்டதாகும்.
அடுத்த பத்தாண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில்
மட்டுமல்லாது பல்வேறு துறைகளின் அடிப்படையையே
மாற்றியமைத்து விட்டது இந்தத் தொழில்நுட்பம்.

அவையோரே...
மின்னஞ்சல் தொலைத் தொடர்பில் பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது, இணையம் வழியே கிடைப்பதே
மின்னஞ்சல் வசதி என்றால் அது மிகையாகாது. ஒரு
கடிதத்தை பல நாடுகளில் உள்ள பல்வேறு நபர்களுக்கு
அனுப்பவும், பல்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட பல
கடிதங்களை ஒரு நபருக்கு அனுப்பவும் வசதி உள்ளது.
உலகிலேயே மிகவும் குறைவான செலவில், அதிக
தூரத்தில் உள்ளவர்களுக்கும், மிகவும் விரைவாக அதாவது
குறைவான நேரத்தில் சென்றடைவது இந்த மின்னஞ்சலின்
சிறப்பாகும். தமிழ் உள்ளிட்ட உலகளவில் ஏராளமான
மொழிகளில் மின்னஞ்சல் மூலமாக கடிதங்களை அனுப்ப
முடிகிறது.

அவையோரே...
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதால்,
இணையத்தையும் மிஞ்சிய தொழில்நுட்பம் ஒன்று
அதனைவிட பெரிய எண்ணிக்கையில் பயன்பாட்டிற்கு
வந்துள்ளது. ஆம்! வளர்ந்த நாடுகளின் மக்கள்
எண்ணிக்கையில் 100 சதவதத்திற்கும்
ீ அதிகமாகவும்,
வளரும் நாடுகளில் குறைந்தபட்சம் 50 சதவதத்திற்கும்

அதிகமாகவும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாக உள்ளது
“செல்பேசி” எனும் சின்னஞ்சிறு கருவியாகும்.
குறுஞ்செய்திகள் அனுப்ப முடிகிறது; பெற முடிகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது செல்பேசிகள் வழியே
இணைய வசதியும் கிடைக்கின்றது. வலைதளப் பக்கங்களை
பார்வையிட முடிகிறது; மின்னஞ்சல் அனுப்பவும், பெறவும்
முடிகிறது. மூன்றாம் தலைமுறை அலைவரிசையின்
உதவியுடன் நேரடியாக முகத்தைப் பார்த்து
பேசிக்கொள்ளவும் முடிகிறது.

அவையோரே...
தொலை தூரத்தில் இருந்த தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
என்பது இன்று மனிதனின் சட்டைப்பைக்குள்
வைக்கப்பட்டுவிட்டது என்றுதான்
குறிப்பிடவேண்டும்.அறிவியல் தந்த எதுவும் நிச்சயமாக
தொல்லைகளை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை
அல்ல. பயன்படுத்துபவர்களின் செயல்பாடுகளே அந்தக்
கருவியை வெற்றிகரமான ஒன்றாகவோ அல்லது
தொல்லைதருவதாகவோ மாற்றுகிறது.

அவையோரே...
குகைச் சுவற்றில் படமாக வரைந்து தகவல் தெரிவித்த
மனிதன் இன்று செல்லும் இடம் எல்லாம் எளிதாகத்
தொடர்பு கொள்ளும் செல்பேசிக் கருவியை
பயன்படுத்துகின்றான். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின்
பரினாம வளர்சியை என்னவென்று வியப்பது சொல்லுங்கள்.
ஆகவே மனித வாழ்கைக்கு ஊறு விளைவிக்காத
ஆரோக்கியமான தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை
என்றென்றும் நேசிப்போம் என்று கூறி உங்களிடமிருந்து
விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

You might also like