You are on page 1of 3

கீ ழ்நிலை படிவம் “ பேச்சுப்போட்டி

தலைப்பு 1 : நாட்டுப்பற்று

நிறையுடை மொழியே மூப்பில்லாத் தமிழே நீ வாழியவே! அனைவருக்கும்


என் அன்பு கலந்த வணக்கம்.

நாட்டுப்பற்று! இந்த ஒற்றைச்சொல்லின் மகத்துவம் அளப்பரியது.


நாட்டுப்பற்றைவிட அதிக நெருக்கமான அன்பு வேறில்லை என்கிறார்
பேரறிஞர் பிளேட்டோ தாய்நாட்டை நேசிக்காதவன்; எதையும் நேசிக்க
முடியாது என்ற பைரனின் கூற்றில்தான் எத்துணை பெரிய உண்மை
அடங்கியிருக்கின்றது? தனது தாய்நாட்டின் மீ து அளவில்லா ஈடுபாடும் அன்பும்
கொண்டு அதன் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவனே ஒரு நல்ல
குடிமகனாக இருக்க முடியும் என்ற கூற்றை மையப்படுத்தி, இவ்வினிய
பொழுதில், நாட்டுப்பற்றும் நன்குடிமக்கள் கடமையும் என்ற கருப்பொருளில்
என் பேச்சைத் துவக்குகின்றேன்.

அறிவிற்சிறந்த ஆன்றோர் பெருமக்களே,

நாடு என்பதே அங்கு வாழும் மக்களும் அதை வழிநடத்தும் அரசுமாகும்..


நல்லதொரு அரசினை ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கும் உரிமையை
தலையாயக் கடமையாக ஒரு குடிமகன் ஆற்ற வேண்டும் என்பதை என்
முதல் கருத்தாக முன்வைக்கிறேன். நாட்டுப்பற்றை வெளிப்படுத்த இந்த ஒரு
கடமையை மேற்கொண்டாலே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்
செல்லும் பணியில் நாமும் ஒரு பங்கைச் செய்ததற்கு ஒப்பாகும். காரணம்,
நாட்டின் மீ து பற்றுள்ளவன், ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால்
என்ன? என்று அலட்சியமாக இருக்க மாட்டான். தன் தாய்நாட்டை உலக
அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க செய்வதற்கு; மக்களுக்காகத் திட்டங்களைச்
வகுத்துச் செயலாற்றுவதற்கு; எத்தன்மை பொருந்திய தலைவனும் அரசும்
வேண்டும் என்பதில் ஒரு முனைப்பும் ஆர்வமும் இருக்கும். அதுவே ஒரு
நல்ல குடிமகனின் நாட்டுப்பற்றைக் காட்டுகின்ற முதல் கடமையும் ஆகும்.

அவையோர்களே,

நாட்டிற்குப் பெருமையும் புகழையும் தேடித்தரும் வலிமையுடைய


குடிமகனே ஒரு வளமான நாட்டிற்கு முதுகெலும்பு என்பதை என்னுடைய
இரண்டாவது கருத்தாக மொழிகின்றேன். ஏவா மக்கள் மூவா மருந்தென்பது
கீ ழ்நிலை படிவம் “ பேச்சுப்போட்டி

வட்டுக்கு
ீ மட்டுமல்ல நாட்டுக்கும் இத்தகைய நன்மக்கள் அருமருந்தாக
விளங்க வேண்டும். சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் மனிதநேயம்
உட்பட அனைத்துத் துறைகளிலும் சாதிக்கும் நாட்டுமக்கள் மூலமே ஒரு நாடு
உலக அரங்கில் புகழ் அடைகிறது என்பதே பேருண்மை.. நாடென்ன செய்தது
நமக்கென்று கேட்பதை விடுத்து, அனைத்தும் தந்த இந்த நாட்டுக்கு என்ன
செய்தோம் நாம்? என்ற பற்றோடு யோசித்துச் செயலில் இறங்கிய
செயல்வரர்களே,
ீ சாதனைப் புரிந்து நாட்டிற்கு நற்பெயரை தந்து
கொண்டிருக்கின்றனர். அவ்வகையில், நாட்டின் பெருமையே தன் பெருமை என
மார்த்தட்டும் மாண்புடைய நாட்டுமக்கள் நிறைந்த நாடே வளமான நாடாகும்.

எனதருமை அவையினரே,

தாய்நாட்டின் பூர்வகத்தையும்,
ீ வரலாற்றையும் அதன் சிறப்பையும்
முழுமையாக அறிந்த ஒருவனே சிறந்த தேசப்பற்றாளனாக இருக்க முடியும்
என்பதே என் அடுத்த கருத்தாகும். தற்கால சூழலில், புலம் பெயர்ந்து
பல்லாயிரக்கணக்கான மக்கள் பிற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். வாழும்
நிலமும் வகையும் வேண்டுமானால் மாறிப் போயிருக்கலாம் ஆனால், பிறந்து
வளர்ந்த தாயகமும் அது ஊட்டி வளர்த்த பண்பாட்டுக்கூறுகள் யாவும் மறந்து
போக வாழக்கூடாது. அதுவே நல்ல குடிமகனின் தேசப்பற்றைப் பறைசாற்றும்.

அன்புசால் தமிழ் உறவுகளே,

நாடு வேறு மக்கள் வேறல்ல.. அவ்வகையில், பலதரப்பட்ட மக்களின்


சமூக வளர்ச்சிக்காக சமூக உணர்வோடு பணியாற்றும் கடமையை
உடையவனே சிறந்த குடிமகனாக இருக்க தகுதியுடைவன். நாட்டில்
நல்லவர்களும் செல்வர்களும் வல்லவர்களும் உருவாக ஒருவருக்கொருவர்
உதவிப்புரிந்து கொள்வதே சமூக அக்கறையாகும். மக்களின் ஒட்டுமொத்த
முன்னேற்றமே நாட்டின் முழு முன்னேற்றம் என்பதை அறிந்து
செயல்படும்போதுதான் ஒரு நாடு சிறக்கிறது. அதில், வறியவர் தாழ்ந்தவர்
என்ற பேச்சுக்கே இடமில்லாமல் சமூக உணர்வு மட்டுமே கொண்டு ஆற்றும்
கடமையை ஒவ்வொரு நன்குடிமக்களும் கருத்திற் கொள்ள வேண்டும்;
அவரவர் கடமையை ஆற்ற வேண்டும்.

அவையினரே,
கீ ழ்நிலை படிவம் “ பேச்சுப்போட்டி

தங்கள் தாய்நிலத்தின் மானம் காக்கவும், சுதந்திரத்திற்காகவும் போராடி


போராடி மாண்டுபோன தேசப்பற்றாளர்களின் தியாகங்கள்தான் இன்றைய
உலகப்பந்தில் நாடுகளாக இடம்பெற்றிருக்கின்றன. நாட்டிற்காக உயிர்த்தியாகம்
புரிந்தவர்கள் தன்னலம் கருதாப் பெருமக்கள். இவர்களின் தியாகங்களுக்கு
மதிப்பளிக்கும வகையில், நாட்டிற்கு நம்மால் இயன்ற கடமைகளை
முழுமையாக ஆற்ற வேண்டும்.. விசுவாசம் குன்றாமல் வலிய வண்பகை

சூழும்போது உயிர்த்தியாகமும் செய்ய ஒவ்வொரு குடிமகனும் தயாராக
இருப்பதே நாட்டுப்பற்று என்பதை என் நிறைவு கருத்தாக வழங்கி, என்
உரைக்கு ஒரு நிறைவை கொணர்கிறேன். வாழ்க தமிழ், வளர்க தமிழினம்.

நன்றி.

You might also like