You are on page 1of 1

தொழில் நுட்பத்தால் ஏற்படும் நன்மைகள்.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், எதிரொலி கேட்டான் வானொலி


படைத்தான். இக்கூற்றுக்கு ஏற்பப் பல புதிமைகளைத் தொழில்நுட்பத்தில் காணலாம்.
தொழில்நுட்பமானது மனித இனத்துடன் நெருங்கிய தொடர்பு உடையதாகும்.
தொழில்நுட்பத்தால் பல நன்மைகள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றது.

தொழில்நுட்பத்தால் கல்வியில் பல அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம்


நூல் நிலையம் சென்று புத்தகங்களை இரவல் வாங்குனோம். ஆனால், இப்பொழுது முகநூல்
வழியாகவும் இணையம் வழியாகவும் மாணவர்கள் கல்வி கற்றுக் கொள்கின்றனர். இவைப்
போன்ற பல்வேறு செயல்பாடுகள் தொழில்நுட்பத்தால் வளர்ச்சி அடைந்துள்ளன.

இதை அடுத்து தொழில்நுட்பத்தினால் போக்குவரத்து வசதிகளும் வளர்ந்து


வந்துள்ளன. சில மணி நேரத்திற்குள் நாட்டில் ஏனைய பகுதிகளுக்குச் செல்ல உதவுகிறது.
அதாவது நீர்,தரை,வான் போக்குவரத்துகள் மூலமாக பயணிக்கக் கூடிய சந்தர்ப்பங்களை
அதிகரித்துக் காணப்படுகின்றன. உதாரணமாக விமானங்கள், கப்பல்கள், மின்சார ரயில்
முதலான சாதனங்கள் மனிதர்களுடைய போக்குவரத்துத் தேவைகளைத் துரித நேரத்திற்குள்
மேற்கொள்ள உதவுகிறது.

ஆகவே, தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்கள் வாழ்க்கையில் பல நல்ல


மாற்றங்களையும் வாழ்க்கை தர மேம்பாட்டினையும் உறுதிச் செய்கிறது.

Nama : Vengadash A/L Suresh

Tahun : 3

You might also like