You are on page 1of 1

தொழில்நுட்பம்

முன்னொரு காலத்தில் ஒரு விஷயத்தை தெரிவிக்க வேண்டும் என்றால் நாம் புகையை


மூட்டி அனைவரையும் அழைப்போம். ஆனால் இப்பொழுது நாம் அனைவரும் கைப்பேசியைக்
கொண்டு ஒரு விஷயத்தை தெரிவிக்கிறோம். அந்த அளவிற்கு தொழில்நுட்பம்
வளர்ந்துவிட்டது.
பண்டைய காலத்தில் விவசாயங்கள் செய்வதற்கு மாடுகள் வைத்து உழுவர். ஆனால்
இப்பொழுது பல இயந்திரங்கள் வந்துவிட்டன. அதனால் மனிதர்களுக்கு நிறைய வேலைகள்
இல்லை. அதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளைச் செய்வதற்கு ஆட்கள் அழைப்பார்கள் .
இப்பொழுது செல்பேசி மூலம் அழைக்கிறார்கள். இதனால் மனிதர்களின் வேலைப்பழு குறைந்து
விட்டது. இயந்திரங்கள் இயங்கும் இடத்தில் வேலை செய்வதால் அவர்களின் வாழ்க்கைத்தரம்
உயர்ந்து வருகிறது.
சுகாதார மையங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்ப
வளர்ச்சியினால் புதிய மருத்துவ கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக
புற்றுநோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதோடு அறுவை சிகிச்சைகள்
விரைவாகவும் சுயமாகவும் செய்யப்படுகின்றன. இது மனித வாழ்க்கையை
உறுதிப்படுத்துவதோடு மனிதன் சுயமாக வாழ வழிவகுக்கிறது.
ஆகவே தொழில்நுட்பமானது முழுக்க முழுக்க மனிதர்களுக்கு நன்மை அளிக்கின்றது.

Nama : Vaisnavy A/P Saravanan


Tahun 3

You might also like